அத்தியாயம் 1

நகரத்தின் மையப் பகுதி.நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.நகரம் முழுவதும் நிசப்தமாக இருக்க அந்த இடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அது ஒரு உயர் தரமான கேளிக்கை விடுதி.வாயிலின் முகப்பில் பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

உள்ளே வண்ணமயமாக காட்சியளித்தது.ஆண்களும்,பெண்களும் இளமை பொங்க இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர்.

சற்று தள்ளி நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் கையில் மது பானம் இருந்தது.

அவன் மதுவை வேகமாக குடித்துக் கொண்டிருந்தான்.

டேய் என்னடா ஆச்சு அவனுக்கு?.ஏன் இப்டி குடிக்கிறான்?”

நானும் வந்ததுல இருந்தது கேக்கறேன்.எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறடா மச்சி

பாஸு அவன பத்தி தெரியாதா?.அவன் சொல்லணும்னு நினச்ச தான சொல்வான்?” என்றவன் “மச்சான் என்னடா?” என்று ஆதியைப் பார்த்து கேட்டான்.

அவர்களை முறைத்தவன் கண்களில் ஒரு உருவம் வந்தது.அதை நினைத்தவன் கண்களில் ரௌத்ரம் தோன்றியது.

அவனது விழியைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.மேற்கொண்டு கேட்க முடியாமல் திணறினார்கள்.

இந்நிலையில் அங்கு திடீரென்று நிசப்தம் குடி கொண்டது.ஒரு பெண் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததவன் விறு விறுவென்று அங்கே போனான்.அவன் நண்பர்கள் அவனை பார்த்து திகைத்தார்கள்.

முதலில் சுதாரித்த விஷ்ணு அவன் பின்னே ஓடினான்.

அங்கே போன ஆதி நேராக சென்று அவள் கையை முறுக்கினான்.அதில் ஒரு நிமிடம் திகைத்தவள் திரும்பி அவனை பார்வையால் எரித்தாள்.

டேய் கைய விடுடாஎன்று அவனிடம் கத்தினாள்.

எதுக்குடி அவன அடிச்ச?”

ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்

ஏய் பதில சொல்லுடிஎன்று அவன் கத்தினான். இவர்கள் சண்டையை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆதியுடைய நண்பர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சித்த போது அவர்களை பார்வையாலே எட்ட நிறுத்தினான்.

அந்த நிமிடத்தில் அவள் நச்சென்று அவன் கால்களை மிதித்தாள்.அதில் துள்ளிக் கொண்டு அவள் கைகளை விட்டான்.

ஏய்என்று கத்தியவன் அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் திகைத்து நின்றான்.

மேனேஜர் அவள் அடித்ததை பார்த்து சமாதானம் செய்ய வந்தவன் ஆதியுடன் நடந்த சண்டையைப் பார்த்து வாயடைத்து நின்றான்.

என்ன?” என்பது போல ஆதியைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினாள்.

ஹு ஆர் யூ மேன்?.இங்க என்ன நடந்ததுனு தெரியுமா?”

இதுக்கு ஆராய்ச்சி வேற பண்ணணுமா?.நீ இப்டி அரை குறையா ஆடிட்டு இருந்தா எவனா இருந்தாலும் இப்டி தான் பிஹேவ் பண்ணுவான்?” என்று ஆதி கூறினான்.

ஃபர்ஸ்ட் நீங்க ஒழுங்கா இருங்கடி.அப்றம் மத்தவங்கள அடிக்கலாம்என்று ஆத்திரத்துடன் கூறினான்.

இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று அவன் நண்பர்கள் திகைத்தார்கள்.

அதைக் கேட்டு அவள் ஆத்திரத்துடன் அவனை அறைய வந்தாள்.அவளுடைய தோழிகள் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.

போடிஎன்று ஆத்திரத்துடன் அவன் டேபிளை உதைத்தான்.அவனது நண்பர்கள் அவனை டேபிளுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

அமர்ந்தவன் அங்கிருந்த முழு பாட்டிலை எடுத்து கவிழ்த்தான்.

டேய் ஓவராயிடுச்சு.கிளம்பலாம் வாடாஎன்று அவனை கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.

                             *******

ஏய் எதுக்குடி என்ன கூட்டிட்டு வந்தீங்க?.அவன் என்ன பேச்சு பேசறான்?.அவன சும்மா விட சொல்றியா?” என்று அவள் தோழிகளிடம் சண்டையிட்டாள்.

அம்மா பரதேவதையே,இதுக்கே ஆன்டி என்ன சொல்வாங்களோனு பயந்திட்டு இருக்கேன்.உனக்கு அவன் கூட சண்ட போடலனு தான் கவலையா இருக்குஎன்று மித்ரா சொன்னாள்.

ஏய் அவன் எவ்ளோ ஹேன்ட்சமா இருந்தான் இல்லடிஎன்று பார்கவி சொன்னாள்.

அடிங்..ஏன்டி இங்க என்ன பிரச்சனை போய்ட்டிருக்கு?.அவன நீ சைட் அடிச்சிட்டு இருந்தியா?” என்று அவளை மொத்தினாள்.அவளது செயலில் பார்கவி அமைதியானாள்.

அவளை முறைத்தவள் “அதெல்லாம் மாலுவ எப்டி கரெக்ட் பண்றதுனு தெரியும்.நீ வாஎன்று தோழிகளுடன் சென்றாள்.

தனது பைக்கில் சென்றவள் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் பைக்கை ஆஃப் செய்து தள்ளிக் கொண்டு வந்தாள்.

வீட்டினுள் வண்டியை நிறுத்தியவள் சத்தமில்லாமல் பூட்டை திறந்தாள். மெதுவாக நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று லைட் எரிந்தது.

ஏய் இதுதான் வீட்டுக்கு வர டைமாடி?” என்று மாலதி சத்தம் போட்டார்.

ஒரு நொடி திடுக்கிட்டவள் “ம்மா நான் லேட் ஆகும்னு சொன்னேன் இல்லமா?” என்று கேட்டாள்.

இப்போ டைம் என்னடி?.ஏதோ வேலைக்கு ஜாயின் பண்ணப் போறேன்.டிரீட் குடுக்கறேனு சொன்ன?.இவ்ளோ நேரமா?” என்று அவளை திட்டினார்.

ஏய் ஏன்டி இப்போ அவள திட்டற?” என்று குணசேகரன் மாலதியை சத்தம் போட்டார்.

டேடி பாருங்க டேடி கொஞ்சம் லேட் ஆச்சு.அதுக்கு இப்டி சத்தம் போடறாங்கஎன்று அவளது தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள்.

நீ போ யாழி பேபி.நான் பாத்துக்கறேன்என்று அவளை அனுப்பினார்.

அவள் “தேங்க்யூப்பாஎன்று அவரது கன்னத்தைக் கிள்ளி விட்டு சென்றாள்.

நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறீங்கஎன்று அவரை கடிந்து கொண்டார்.

விடுமா.இன்னும் கொஞ்ச நாள் தான.அவ இஷ்டப்படி ஃப்ரீயா இருக்கட்டுமேஎன்று அவர் மாலதியை தேற்றினார்.

என்னமோ போங்க.இவளுக்கு கல்யாணம் ஆகற வரையும் எனக்கு நிம்மதி இல்லஎன்று பெருமூச்சுடன் கூறிவிட்டு மாலதி சென்றார்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page