அத்தியாயம் 2

அதிதேவ் அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.அவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது.

டேய் எந்திரிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணு உள்ளே வந்தான்.

அவன் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து “ஏன்டா தலை வலிக்குதா?” என்று கேட்டான்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்

டேய் மச்சி நீ ரெஸ்ட் எடு. நான் ஆஃபிஸ பாத்துக்கறேன்

இல்லடா.நிறைய ஒர்க் இருக்குஎன்றவன் எழுந்து கிளம்பத் தயாரானான்.

அதான,சார் நாம சொல்றது கேட்டுட்டாலும்என்று பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான்.

அதிதேவ்ஆறடி உயரம்,கூர்மையான கண்கள்,வலிமையான தோள்கள்,அலை அலையான கேசம்,அதிகமாக பேசாத அவனது குணம் அனைவரையும் எட்ட நிற்க வைக்கும்.

விஷ்ணுவும்,அதிதேவும் நண்பர்கள்.ஒரு முறை ஆதி பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆதியுடைய அப்பாவின் எதிரிகள் அவனை கடத்த முயற்சி செய்தார்கள்.ஆதி அவர்களிடம் போராடும் போது அவனை விஷ்ணு அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.அப்போதிருந்து இருவரும் உயிருக்குயிரான நண்பர்களானார்கள்.

விஷ்ணு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.ஆதி அவனைப் பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டவன் தன் அப்பாவிடம் சொல்லி அவனை தன்னுடனே தங்க வைத்தான்.முதலில் தயங்கிய விஷ்ணு பின் ஆதியின் பிடிவாதத்தில் அவனுடனே இருந்தான்.

ஆதியுடைய அப்பா ஜெயதேவ் எப்போதும் பிஸினஸ் என்று உலகைச் சுற்றி கொண்டிருப்பவர்.அவருக்கு மகனின் மேல் பாசம் அதிகம்.எப்போது ஊரிலிருந்து வந்தாலும் அவனுடன் நேரத்தைச் செலவழிப்பார்.ஆனால் ஆதியுடைய அம்மாவுக்கு பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

இதனால் தனிமையில் இருந்தவன் விஷ்ணுவைப் பார்த்ததும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொண்டான்.

ஆதி வெளியே வந்ததும் விஷ்ணுவும்,ஆதியும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினார்கள்.

கார் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் நின்றது. வாட்ச்மேன் பணிவுடன் வந்து  கார்க் கதவை திறந்தான். விஷ்ணுவுடன் பேசிக் கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

தேவ் இண்டஸ்ட்ரீஸ். அவனது பிஸினஸ் சாம்ராஜ்யம். கட்டிடக் கலையில் தொடங்கி சாப்ட்வேர் வரை பல தொழில்கள் அவன் மேற்பார்வையில் உள்ளன.

ஆதி,இன்னைக்கு நியூ கேண்டிடேட்ஸ் ஜாயின்ட் பண்ண வராங்கடா

ஓகேடா. அவங்க வந்தா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும். தென் வீ வில் கால்.ஓகே?”

ஓகேடாஎன்று கூறி விட்டு விஷ்ணு தன் கேபினிற்கு சென்றான்.

இங்கு யாழினியும், மித்ராவும் மித்துவின் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள். பிரமாண்டமான தேவ் இன்டஸ்ட்ரீஸ் கட்டடத்தைப் பார்த்து வாயை பிளந்தபடி நின்றாள்.

ஏய் லூசு ஏன்டி இப்டி பாத்து தொலைக்கற?” என்று மித்ராவை யாழினி திட்டினாள்.

இல்லடி. பில்டிங் பாத்தாவே மலப்பா இருக்குஎன்று கூறினாள்.

கம்முனு வாஎன்று அவளுடன் சென்றாள்.

அவர்கள் உள்ளே வந்த போது ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு உள்ளே சென்றார்கள்.

என்னடி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் கூப்டல?”

பாக்கலாம். இருஎன்று யாழினி கூறினாள்.

இந்நிலையில் விஷ்ணு அவன் ரூமிலிருந்து வெளியே வந்தான்.

ஏய் இந்த பக்கி எங்க இங்க வந்தான்?” என்று மித்ரா விஷ்ணுவைப் பார்த்து கூறினாள்.

யார்டி?”

அதான்டி அந்த வொயிட் சர்ட்.. மாடல் மாதிரி இருக்கானே?”

ஏன்டி எங்க போனாலும் சைட் அடிக்கறத மட்டும் விடாதிங்கடீ

இல்லடி.அவன நேத்து பார்ட்டியிலே பார்த்தோம்டி

அப்படியா என்பது போல மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள்.

ஆமா. நீ ஒருத்தன் கூட சண்ட போட்டுட்டு இருந்தியே. அவன் கூட இவன் இருந்தான்என்று விவரம் சொன்னாள்.

மித்ரா அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது யாழினி அவனைக் கூப்பிட்டாள்.

எதுக்கு அவன கூப்பிடற?” என்று மித்ரா கேட்டாள்.

எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. டைம் பாஸ் ஆக வேண்டாமா?” என்று யாழினி சொன்னாள்.

ஏய்.. அடங்கவே மாட்டாயாடிஎன்று மித்ரா அடிக்குரலில் கேட்டாள்.

ஹேய் மிஸ்டர் இங்க வா

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று.

உன்னத் தான் மேன்என்று யாழினி திரும்பவும் கூப்பிட்டாள்.

இவர்களைப் பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்தான்.

இதுங்க எங்க இங்க வந்ததுங்க?.நேத்து ஃபைட் பண்ணவங்க தானே. இப்போ தான் அவன் மலை இறங்கி இருக்கான். கடவுளே காப்பாத்துஎன்று வேண்டிக் கொண்டே அவர்களிடம் வந்தான்.

வாட் மேடம்?. சொல்லுங்கஎன்று கூறினான்.

நீங்க இங்க தான் வொர்க் பண்றீங்களா?”

அது…” என்று ஆரம்பித்தவன் “எஸ் மேம். ஹௌ கேன்  ஹெல்ப் யூ?” என்று கேட்டான்.

தொர இங்கிலீஷ்ல பேசுதேஎன்று கமெண்ட் அடித்துக் கொண்டு மித்ரா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

யார் உங்க ஹையர்?. எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” என்று யாழினி அவனிடம் பொறிந்து தள்ளினாள்.

அவர்களை ஒரு நிமிடம் பார்த்தவன் “நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என கேட்டான்.

நாங்க இன்னைக்கு ஜாயின் பண்ண வந்தோம். பட் நோபடி ரெஸ்பான்ட்என்று அவனை திட்ட ஆரம்பித்தாள்.

ஏய்.. எதுக்குடி கத்துற?.சைலண்ட்டா இருடிஎன்று மித்ரா அவளை அதட்டினாள். அதைக் கவனித்தவன் மித்ராவைப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் அவள் தலை குனிந்து கொண்டாள்.

கூல் மேடம். சார் மீட்டிங்ல இருக்காரு. ஹு வில் கால் யூ

இவர்களிடம் விஷ்ணு பேசிக் கொண்டிருப்பதை அதிதேவ் கணிணித் திரையில் பார்த்தான்.

அவன் கண்கள் யாழினியை சுற்றி வந்தன. யாழினி ஐந்தரை அடி உயரம், பால் போன்ற வெண்மை நிறம், சப்பியான கன்னங்கள், கவர்ந்திழுக்கும் கண்கள். நீல நிற உடையில் கடல் தேவதை போல் தெரிந்தாள். தன்னை மறந்து அவன் யாழினியை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் யாழினி சண்டையிடுவதைப் பார்த்தவன் விஷ்ணுவிற்கு அழைத்தான்.

ஹலோ

டேய்அவங்கள உள்ள அனுப்பு

ஓகேஎன்றவன் “சார் கூப்டறாரு.நீங்க போங்கஎன்று அவர்களிடம் எப்படி போக வேண்டுமென்று கூறினான்.

தேங்க்ஸ்என்று மித்ரா அவனிடம் கூறியவள் யாழினியை இழுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

அவர்கள் அந்த அறையினுள் நுழைந்த போது ஆதி கணிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களைக் கவனிக்காதது போல அவன் தனது வேலையில் மூழ்கினான்.

அதைக் கவனித்த யாழினி “சார்என்றாள்.

ஹூ ஆர் யூ?. உங்கள உள்ள வர சொன்னதா எனக்கு நியாபகம் இல்லயே?. டோன்ட் யூ ஹேவ் பேசிக் மேனர்ஸ்?” என்று ஆதி அவர்களைத் திட்டினான்.

முதலில் அவனை அங்கு எதிர்பார்க்காத தோழிகள் இருவரும் அதிர்ந்தார்கள்.

இவனா?’ என்று யாழினி திகைத்து நின்றாள். ஆனால் அவன் யாரென்றே தெரியாதது போல பேசினான். அவனுடைய ஆளுமையான பேச்சில் அவர்கள் வாயடைத்து நின்றார்கள்.

ஹலோகேக்கறேன்ல.. வாட் யூ வாண்ட்?” என்று அவன் கர்ஜித்தான்.

சார் நாங்க இன்னைக்கு வேலைக்கு ஜாயின்ட் பண்ண வந்தோம்என்று மித்ரா பதிலளித்தாள்.

ரிஷப்சன்ல என்ன பண்ணீங்க?.இதென்ன ஆஃபிஸா இல்ல ஃபிஷ் மார்க்கெட்டா?.பேசிக் மானர்ஸ் கூட இல்லையா உங்களுக்கு?” என்று யாழினியைப் பார்த்துக் கேட்டான்.

அவனது கேள்வியில் சுதாரித்தவள் “சார் நாங்க ஒன் அவரா வெயிட் பண்ணிட்டிருக்கோம். யாரும் ரெஸ்பான்ட் பண்ணல.அதனால அவர் கிட்ட கேட்டுட்டு இருந்தோம்என்று மிடுக்குடன் பதிலளித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது விஷ்ணு ஆதியின் அருகில் வந்து உட்கார்ந்தான்.அதனைப் பார்த்த மித்ரா திகைத்தாள்.

இவன் எங்க இங்க?’ என்று யாழினி யோசித்தாள். விஷ்ணு அவர்களை முறைத்தான்.

ஆதி அவங்க ஏன்டா நின்னுட்டு இருக்காங்க?.உட்காரச் சொல்லுடாஎன்றவன் “சாரி கைய்ஸ்.வீ ஆர் லிட்டில் பிட் பிஸி.சோ லேட்.ப்ளீஸ் சிட் டவுன்என்று அவர்களை உட்கார சொன்னான்.

விஷ்ணு அவர்களை உட்கார சொன்னவுடன் ஆதி அவனை முறைத்தான். அவன் நான் பாத்துக்கறேன் என்று கண் சிமிட்டினான்.

யாழினி ஆதியை முறைத்துக் கொண்டே இருக்கையில் உட்கார்ந்தாள்.

அவன் யாழினியைப் பார்த்துக் கொண்டே கையை நீட்டினான்.

சார் வாய திறந்தா முத்து உதிர்ந்திடுமோஎன்று திட்டிக் கொண்டே ஃபைலை அவன் கையில் கொடுத்தாள்.

விஷ்ணு மித்ராவிடம் “பைல் கொடுங்கஎன்று வாங்கினான். மித்ரா அவனிடம் பைலைக் கொடுத்தாள்.

இருவரும் அவர்களுடைய பைலை பார்த்ததும் விஷ்ணு மேனேஜரை வர சொன்னான்.

வெல்.. உங்களுக்கு அக்கவுன்ட் டிபார்ட்மென்ட்ஸ்ல வொர்க்.இப்போ மேனேஜர் வருவாரு.அவரு சொல்றத ஃபாலோ பண்ணுங்கஎன்று விஷ்ணு கூறினான்.

வொர்க் மட்டும் தான் பாக்கணும்.எனக்கு ரிப்போர்ட்ஸ் கரெக்டா வரணும்.அன்டர்ஸ்டான்ட்?” என்று யாழினியைப் பார்த்து ஆதி அழுத்திக் கூறினான். அவனை சளைக்காமல் யாழினி பதில் பார்வை பார்த்தாள்.

ஹப்பா.. என்ன கண்ணுடா…’ என்று அவன் அவள் கண்களில் மூழ்கினான்.

விஷ்ணுவிற்கு யாழினியைப் பார்க்க ஆயாசமாக இருந்தது.

என்ன பொண்ணுடா இது?.எதுக்கும் அசர மாட்டேங்குது.கடவுளே இவங்க ரெண்டு பேர்ட்ட இருந்து என்ன காப்பாத்துஎன்று வேண்டிக் கொண்டான்.

அறையை விட்டு வெளியே போகும்போது மித்ரா அவனை ஓரப் பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் அவன் சுவாரஸ்யமாக அவளைப் பார்த்தான்.

அவர்கள் போன பின்பு யாழினியின் பைலை பார்த்தவன் ‘உன்ன பழிக்குப் பழி வாங்காம விட மாட்டேன்டி. உனக்கு நான் யார்னு காட்றேன். என்னையா நீ அவமானப்படுத்தற. நான் யார்னு காமிக்கறேன்என்று ஆதி மனதுக்குள் கறுவினான். விதி அவனை பார்த்து சிரித்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page