அத்தியாயம் 11

 

ஜோஸ்வினி இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஷியாமிடம் இருந்து போன் வந்தது.

அவன் எண்ணை பார்த்ததும் எரிச்சலானவள் போனை கட் செய்தாள்.

திரும்பவும் அவன் ஓரிரு முறை கூப்பிட தொல்லை தாங்காமல் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ”

“ஜோஸ்வினி”

“உனக்கு மேனர்ஸ் இல்ல? பேச பிடிக்காம தானே கட் பண்றேன்? திரும்ப திரும்ப கூப்டற?” 

“காலையில நடந்ததுக்கு சாரி கேக்க தான் ஜோஸ்வினி பண்ணேன்”

“உன் சாரி யாருக்கும் வேண்டாம். போடா” 

“ஜோஸ்வினி ப்ளீஸ்…”

“என்னடா ப்ளீஸ்? அவரு என்னோட கெஸ்ட்டா. நீ அவர அடிக்க போவியா?”

‘நீ இருந்ததால தான் நான் அடிக்க மட்டும் செஞ்சேன். நீ இல்லேனா எனக்கு வர ஆத்திரத்துக்கு…’ என்று மனதிற்குள் திட்டியவன் வெளியே

“என்ன ஜோ இப்டி பேசற? அவன் தான் நம்மள பிரிச்சான். அவனுக்கு போய் இப்படி சப்போர்ட் பண்ற?”

“டேய் நீ சந்தேகப்பட்டு பிரேக்கப் பண்ணதும் இல்லாம அவன் மேல பழி போடறியா?”

“சாரி ஜோ. தப்பு தான். மன்னிச்சிடு ஜோ. நீ என்ன சொன்னாலும் செய்யறேன்”

“அப்படியா?” என்று நக்கலாக கேட்டவள்

“நீ அபிக்கிட்ட மன்னிப்பு கேளு” என்று சொன்னாள்.

“நான் அவன்ட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது”

“அப்போ போன வைடா” என்றவள் கத்திக் கொண்டே போனை கட் செய்ய போக அவனோ “ஜோஸ்வினி” என்று அவன் பேசுவதற்குள் போனை கட் செய்திருந்தாள்.

அவனுடைய தெனாவெட்டான பேச்சு அவளுக்குள் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

‘டேய் நீ ரொம்ப ஓவரா போற? இதுக்கு ஒரு முடிவு கட்றேன்டா’ என அவள் உள்ளுக்குள் கருவிக் கொண்டிருந்த போது திரும்பவும் போன் அடித்தது.

செல்போனின் திரையை பார்த்தவள் எடுக்காமல் இருக்க அதுவோ அடித்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமை போய் போனை எடுத்தவள் கத்த ஆரம்பித்தாள்.

“என்னடா வேணும் உனக்கு? சும்மா சும்மா எதுக்குடா என்ன டிஸ்டர்ப் பண்ற?”

“சாரி ஜோ… சாரி… சாரி” என்று ஷியாம் இடைவிடாது மன்னிப்பு வேண்டினான்.

“நான் அவன்கிட்ட சாரி கேளுனு சொல்றேன். கேக்க மாட்டேனு திமிரா சொல்லிட்டு எதுக்கு இப்டி இத்தன சாரி கேக்கறேனு சீன் போடற?”

“கோபப்படாத ஜோ. நான் அவன்ட்ட கண்டிப்பா சாரி கேக்கறேன்”

“என்னது அவனா?” என்றவள் பல்லை கடித்தாள்.

“சாரி… சாரி… அவங்க கிட்ட சாரி கேக்கறேன்” என்றவன் சொல்ல அவள் போனை கட் செய்தாள்.

ஷியாம் ஆத்திரத்துடன் அவளுடன் பேசியதை பற்றி சிந்தித்தவன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

                       ***********

ஏறக்குறைய இரண்டு நாட்கள் சென்ற நிலையில் ஆதவன் அபிஷேக்கை பார்க்க அவன் ஹோட்டலுக்கு வந்தான்.

“ஹே… வா ஆது”

“வீட்ட விட்டுட்டு வந்தா ஒரு போன் கூட பண்ண மாட்டியா?”

“அப்டி இல்லடா”

“போன் கூட பண்ணாம உனக்கு அப்டி என்ன ஒர்க்டா?”

“இங்க இருக்கற வொர்க் தான்டா. அதான் உனக்கு போன் பண்ண முடில” என்று அபிஷேக் சங்கடமான குரலில் அவனை பார்க்காமல் எங்கோ பார்த்து கூறினான்.

“அபி பொய் சொல்றியா? என்ன பார்த்து பேசு”

“இல்ல மச்சி. அப்டிலா ஒண்ணும் இல்ல”

“இங்கயே ஓவர் ஒர்க்னா உனக்கு வெளியே போகவே டைம் இருக்காதே? அப்போ நேத்து நான் பாத்தது நீ இல்லையோ?” என்று அவன் யோசிப்பது போல் கேட்டான்.

“ஆ… ஆமாடா” என்றவன் அவ்வப்போது வாட்சை பார்த்தான்.

“என்னாச்சு மச்சி? ஏன் வாட்ச அடிக்கடி பாக்கற?”

‘ஐயோ… இவன் வேற இப்டி நோண்டறானே… நான் உன் ரிலேஷன் பொண்ணோட ஊர் சுத்த போறேன்னா சொல்ல முடியும்?’ என்று மனதிற்குள் புலம்பியவன் வெளியே சிரித்து வைத்தான்.

“என்னடா கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்ல மாட்டேங்கற?”

“நத்திங்டா” என்றவன் எப்படி அவனை ஏமாற்றி விட்டு ஜோஸ்வினியை பார்க்க செல்வது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது ஜோஸ்வினி உள்ளே வந்தாள்.

அவளை அங்கே திடீரென்று எதிர்பார்க்காதவன் ஜோஸ்வினியை திடுக்கிட்டு போய் பார்த்ததை ஆதவன் கண்டு கொண்டான்.

அவனை கூர்மையாக பார்த்தவன்

“மச்சி எதுவும் என்கிட்ட மறைக்கறியா?” என்ற கேள்வி அபிஷேக்கை திணற வைத்தது.

அவர்கள் இருவரையும் கவனித்து கொண்டிருந்த ஜோஸ்வினி அபியை பார்த்து

“அபி நீ ரொம்ப தயங்கற. அவன் எல்லா டீடெய்ல்ஸூம் தெரிஞ்சு தான் கேக்கறான்” என கூலாக அணுகுண்டை போட அவனோ அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

அவனுக்கு ஆதவனின் முகத்தை பார்க்க கூட சங்கடமாக இருந்தது.

“மச்சி அ… அது” என்று தொடங்கியவன் மேலே என்ன சொல்வதென்று தெரியாமல் நிறுத்தினான்.

“மச்சி ரிலாக்ஸ்டா. ஏன் இவ்ளோ டென்ஷன்” என்று வேறு வழியில்லாமல் ஆதவன் தான் அவனை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

“அபி உட்காரு. ஆது நேத்து நம்மள பாத்துட்டு எனக்கு போன் பண்ணான். நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்”

“என்ன?”

“ஆமா அபி”

“மச்சி அந்த ஷியாம் இவங்கள பிரேக்கப் பண்ணிட்டான்டா. அதனால நாங்க க்ளோஸா இருக்கற மாதிரி டிராமா போட்டு வெறுப்பேத்திறோம்” 

“டேய் ஏன்டா முறக்கற?”

“அவனுக்கு ஒண்ணும் அவ்ளோ சீன் இல்ல. டிராமா போடற அளவுக்கு அவன் வொர்த் கிடையாது”

“ஆனா ஆது ரெண்டு நாளா எனக்கு ஒரு விஷயம் உறுத்தலா இருக்கு”

“என்ன?”

“அவன் என்ட்ட போன் பண்ணி மன்னிப்பு கேட்டான்”

“சோ…” என ஆதவன் அவளை முறைத்தான்.

“நீங்க என்கிட்ட ஒண்ணுமே சொல்லலைங்க ஜோ”

“நானே இத டேக்கிள் பண்ணலாம்னு நினச்சேன். அதான்”

“ஜோ நீங்களா எடுத்தோம், கவுத்தோம்னு முடிவு பண்ணாதீங்க” என்றவன்

“அவன் வேற என்ன சொன்னான்?” என்று விசாரித்தான்.

“அவன உன்கிட்ட மன்னிப்பு கேக்க சொல்லிருக்கேன். அவன் கேட்பான்” என்று சொன்னாள்.

ஆதவனுக்கு இவர்களது உரையாடலை கேட்க கடுப்பாக இருந்தது.

“ஹேய்… ஸ்டாப் இட். கொஞ்சம் நிறுத்தறீங்களா?” என்று கத்தியவன்

“அபிகிட்ட மன்னிப்பு கேக்கற அளவுக்கு என்ன நடந்தது?” என விசாரித்தான்.

ஜோஸ்வினி நடந்ததை சொல்ல சொல்ல ஆதவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“அடிங்… அவன் அபி மேல கை வைக்க வருவானா? இத என்கிட்ட சொல்ல உனக்கு எவ்ளோ தைரியம் ஜோஸ்வினி?” என்று இறுகிய குரலில் கூறியவன்

“நீ ஏன்டா அமைதியா இருந்த? அவன அங்கயே அடிச்சு போட்டு வர வேண்டியது தானே?”

“ஆமா. இவரு அடிச்சிட்டாலும்…” என்று ஜோஸ்வினி தலையிலடித்து கொண்டாள்.

“என்னடி இப்படி பேசற?”

“ஆமா. அவன் சட்டைய பிடிக்கறான். இவன் அமைதியா இருக்கறான்”

“அப்போ இவன் எதுமே பண்ணலயா?”

“நான் தான் டென்ஷன் ஆகி அவன அடிச்சேன்” என்று ஜோஸ்வினி விளக்க ஆதவனுக்கு கோபம் வந்தது.

“ஆது கூல்டா. அல்ரெடி இவங்க பிரேக்கப் பண்ணிட்டாங்க. இன்னும் சண்ட போட்டு பிராப்ளம் பெருசாகணுமா? அதான்” என்று சொன்னவனை ஆதவன் யோசனையுடன் பார்த்தான்.

“நீ திடீர்னு ஏன்டா நம்ம வீட்ல ஸ்டே பண்ண மாட்டேனு சொன்ன?”

“இல்லடா. உங்க வீட்லயே இருந்துட்டு ஜோஸ்வினி கூட டைம் ஸ்பென்ட் பண்றது தப்புனு தோணுச்சு. அவங்க மைன்ட் சேஞ்ச் பண்ணனும். அவங்க சந்தோஷமா இருக்கணும். அதனால தான் நான் நம்ம வீட்ட விட்டு வந்துட்டேன். சாரிடா”

“நான் பண்ணது தப்பு தான். இப்போ பண்ண போறதும் தப்பு தான். பட் எனக்கு இத விட்டா வேற வழி தெரில. அதான். மன்னிச்சிடுடா” என்றவன் சொல்ல ஜோஸ்வினிக்கு குற்ற உணர்வாக இருந்தது.

“சாரி அபி. என்னால உனக்கு எவ்ளோ ப்ராப்ளம்ஸ்? ஆது கூட உன்ன தப்பா நினச்சிட்டான்ல” என்று ஜோஸ்வினி உடைந்த குரலில் கூறினாள்.

அதை கேட்ட இருவரும் பதறினார்கள்.

அபிஷேக் அவள் கையை ஆறுதலாக அழுத்தியவன்

“ஜோ நான் பாத்துக்கிறேன்ங்க. நீங்க எத நினச்சும் வொர்ரி பண்ணிக்காதீங்க. உங்க ஸ்டடிஸ்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணுங்க” என்றவன்

“நான் சொன்ன பிரெஞ்ச் கோர்ஸ் ஜாயின்ட் பண்ணீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல அபி. அப்பாட்ட சொன்னேன். என்குயர் பண்றேனு சொன்னாரு” 

“நான் 2,3 இன்ஸ்டிடியூஸன்ஸ் நெட்ல பாத்தேன். அங்கிள் கிட்ட சொல்லலாம். நீயும் வாடா” என்றவன் ஜோஸ்வினியை ஆதவனுடன் அவள் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

அங்கே அபிஷேக்கை கண்டதும் அனைவரும் ஆச்சரியமானார்கள்.

“வாங்க தம்பி. நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கேன் ஆன்ட்டி”

“வாடா ஆது. இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?”

“ஏன் அன்னைக்கு கூட வந்தேனே சித்தி. இப்டி கேக்கறீங்க?”

“ஹே… தேஜஸ்வினி எப்டி இருக்கீங்க?. உங்க ஸ்டடிஸ்லா எப்டி போகுது?” என அபியும் விசாரித்தான்.

தேஜஸ்வினி இப்போது +2 படித்து கொண்டிருந்தாள். அவளுக்கும் அவளது படிப்பு சம்பந்தமான ஐடியா கொடுத்தான்.

அதுவும் போக அவள் ஜோஸ்வினியின் தங்கை என்பதால் அவன் பாசத்துடன் பேசினான்.

இவர்கள் கல்யாணத்தில் அடித்த லூட்டியை நினைத்தவளுக்கு அபிஷேக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.

“வாவ்… அண்ணா… வாட் எ சர்ப்ரைஸ்” என்று ஆர்ப்பாட்டமாக அவனை வரவேற்றாள்.

தன்னுடைய பொறுமையான நடவடிக்கையால் அபிஷேக் ஜோஸ்வினியின் வீட்டில் அனைவரையும் கவர்ந்திருந்தான்.

கல்யாணத்தில் இழுத்து போட்டு வேலை செய்தது, எல்லாரிடமும் கனிவாக பேசுவது, தான் வெளிநாட்டில் இருந்து வந்தவன் என்ற பந்தா காட்ட இல்லாமல் இருந்தது இப்டி தன்னுடைய இயல்பான நடவடிக்கையால் எல்லாரையும் கவர்ந்து விட்டான்.

அதுவும் போக அவ்வப்போது அவன் சமையல் சம்பந்தமாக சந்தேகம் கேட்டதும் அவருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.

இங்கே ஜோஸ்வினி சமையல் என்றாலே காத தூரம் ஓடுவாள். அப்படி இருக்கும் போது இவனது சமையல் பற்றிய அறிவில் அவரை கவர்ந்து விட்டான்.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது ரங்கராஜன் வந்தார்.

இவர்களை வரவேற்றவர்

“என்ன தம்பி இப்போவும் என் பொண்ணு கலாட்டா பண்றாளா?” என கேட்டார். 

“உங்க பொண்ணு கலாட்டா பண்ணா தான் அங்கிள் நல்லாருக்கும்” என்று புன்னகையுடனே கூறியவன் தான் வந்த காரணத்தை பற்றி கூறினான்.

“அங்கிள் ஜோஸ்வினியோட பிரெஞ்ச் கோர்ஸ்க்கு நெட்ல ப்ளேஸஸ் பாத்தேன் அங்கிள். அதில ஒரு இடம் எனக்குத் தெரிஞ்சவங்க தான் அங்கிள். நாளைக்கு நீங்க வந்தீங்கனா  ஜோஸ்வினிய ஜாயின்ட் பண்ண வெச்சிடலாம். நானும் கூட வரேன். இதுக்கு மேல லேட் பண்ண வேண்டாம் அங்கிள். அவங்க ஃபாரின்ல போய் மாஸ்டர்ஸ் படிக்கணும்னு ஆசைப்படுறாங்க. அடிசனலா பிரெஞ்ச் தெரிஞ்சிருக்கிறது அவளுக்கு பிரான்ஸ், கனடான்னு போனா நல்ல உதவியாக இருக்கும் அங்கிள். அவங்க வேற பிரான்ஸ் பிடிக்கும்னு சொன்னா.. அதுதான் அங்கிள்.. நாளைக்கே போய்டலாமா?” என்று கேட்டான்.

“சரி தம்பி.. நான் படிப்புக்கு குறுக்க நிக்கிறவன் இல்லை.. புது மொழி படிக்கிறது நல்லது தானே. ஆமா.. எவ்வளவு காலம் படிக்கணும்னு ஏதாவது தெரியுமா உங்களுக்கு?” 

என்று சம்மதமாக பிரெஞ்ச் வகுப்பைப் பற்றி விசாரித்தார் ஜோஸ்வினியின் தந்தை.

“A1, A2, B1, B2, C1, C2 என்று ஒவ்வொரு லெவலாக பிரிச்சு நடத்துவாங்க அங்கிள். ஜோ ஏவன்ல இருந்து ஆரம்பிக்கணும். சாதாரணமாக இவங்க தினமும் மாலையில காலேஜ் முடிய வன் அவர் போனா முதல் லெவலுக்கு ஒண்டரை ரெண்டு மாசம் போதும். அது முடிய DELF என்று ஒரு எக்ஸாம் எழுதினால் ஜோ பிரான்ஸ்க்கு போனால் கூட இவ பிரெஞ்ச் லெவலை அக்சப்ட் பண்ணுவாங்க..”

“ஓகே. நல்லது தம்பி. நாளைக்கு போய்ட்டு வந்திடலாம்” என்றவர் அவனுடைய பிஸினஸை பற்றி விசாரித்தார்.

“குட் அங்கிள். ஒண்ணும் பிரச்சனை இல்ல” 

“ஆது நீ ஏன்டா வீட்டுக்கு வரதில்ல?”

“ஹப்பா… நான் இருக்கறது உங்க கண்ணுக்கு தெரிஞ்சிருச்சா?”

“ஆதவன்”

“பின்ன என்ன அவன்கிட்டயே பேசிட்டு இருக்கீங்க?”

“டேய் அவங்க உன்னோட ப்ரண்டுடா”

“அப்டியா. ரொம்ப சந்தோஷம். அந்த ஞாபகமாவது இருக்கு” என்றவன் கோபித்து கொண்டான்.

“டேய் என்னடா அப்பாட்ட கலாட்டா பண்றே?. இத்தன நாள்ல நான் கேட்டப்ப பிகு பண்ணிட்டு இப்போ உனக்கு கோபம் வருதா பக்கி?” என ஜோஸ்வினி எகிற இப்போது ஆதவன் அமைதியானான்.

அதை பார்த்த அபிஷேக்குக்கு சிரிப்பு வந்தது.

தான் சிரித்தால் ஆதவன் கோபமாவான் என்று சிரிக்க துடிக்க உதடுகளை அபிஷேக் அடக்க அதை கண்டு கொண்ட ஆதவன் அவனை முறைத்தான்.

இதை கவனித்த ஜோஸ்வினி 

“டேய் அங்க என்ன பார்வ?. அவன ஏன்டா முறைக்கற?” என அவனை மிரட்டினாள்.

இப்போது அபிஷேக் வெளிப்படையாகவே சிரித்தான்.

“எல்லாம் என் நேரம்டா” என்றவன்

“சரி. இட்ஸ் அல்ரெடி லேட். நாங்க கிளம்பறோம்”

“எவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கீங்க?. சாப்பிட்டு தான் போகணும்” என்று தாமரை கட்டளையிட்டார்.

அவரது பேச்சை தட்ட முடியாமல் இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஆதவன் தீவிர சிந்தனையில் இருந்தான்.

“என்ன மச்சி இப்டி யோசிக்கற?”

“ஜோஸ்வினிய உனக்கே மேரேஜ் பண்ணி வெச்சிடலாமானு பாக்கறேன்.. நீ பிரெஞ்ச் கிளாஸ்க்கு எல்லாம் அனுப்பிறதைப் பார்த்தால் உன் ஐடியாவும் அது போலவே..” என்றவனிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் பார்த்தான்.

“என்ன மச்சி பேசற?. அவங்க ஷியாம லவ் பண்றாங்க”

“அப்போ அதான் உனக்கு பிரச்சினையா?”

“ஆது… ப்ளீஸ்… மேரேஜ்னா விளையாட்டு இல்ல. அதுவும் ஜோஸ்வினி மாதிரி ஒரு பொண்ண கம்பல் பண்ணி மேரேஜ் பண்ண முடியாது. புரிஞ்சுக்கோ” என்று இறுகிய குரலில் கூறினான்.

ஆதவன் மேற்கொண்டு இவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்து விட விதியோ அவர்களை பார்த்து சிரித்தது.

அடுத்த நாள் ஜோஸ்வினியின் வகுப்பை பற்றி விசாரித்தவர்கள் அவளை உடனடியாக வகுப்பில் சேர்த்தார்கள்.

அவ்வப்போது ஷியாமின் காலும் ஜோஸ்வினிக்கு வந்தது.

அதன்படி ஒரு காபி ஷாப்பில் ஒரு நாள் ஷியாமை அபிஷேக்குடன் ஜோஸ்வினியை சந்தித்தாள்.

அப்போது ஜோஸ்வினியை பார்த்தபடி ஷியாம் அபிஷேக்கிடம் சிரித்து கொண்டே பேச அபிஷேக் திடுக்கிட்டு போய் அவனை பார்த்தான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page