அந்த தீம் பார்க்கில் ஒரே கூட்டமாக இருந்தது. அபிஷேக், ஆதவன், ஜோஸ்வினி, தேஜஸ்வினி நால்வரும் அந்த தீம் பார்க்கில் அப்போது உள்ளே நுழைந்தனர்.
ஜோஸ்வினி ஃப்ரெஞ்ச் கிளாஸ் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு வெளியே செல்ல நேரம் கிடைக்காததால் அபியை நச்சரித்து தேஜீவையும், ஆதவனையும் அழைத்து வந்து விட்டாள்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்க செல்ல பெண்களோ அங்கிருந்தவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்கி கொண்டு வர ஜோஸ்வினி அவனை ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தாள்.
“அபி டிக்கெட் வாங்கியாச்சா?”
“வாங்கியாச்சுங்க”
“சரி. வா. ஐஸ்கிரீம் வாங்கி குடு”
“ஜோ இப்போ தான் டிக்கெட் வாங்கினோம். உனக்கு அதுக்குள்ள ஐஸ்கிரீமா?” என ஆதவன் திட்டினான்.
“நான் ஐஸ்கிரீம் சாப்பிடணும்”
“அண்ணா ஃபர்ஸ்ட் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு தெம்பா ஆரம்பிக்கலாம்ணா” என்று தேஜஸ்வினி சொல்ல ஆதவன் வியப்பாய் அவளை பார்த்தான்.
“என்னது அண்ணாவா?”
“ஏன்டா மச்சி உனக்கு இவ்ளோ ஆச்சரியம்?”
“பின்ன நாயே, பேயே பேசிட்டு திடீர்னு அண்ணானு சொன்னா எனக்கு ஹார்ட் அட்டாக் வராது?”
“டேய் ஓவர் எக்ஸ்பிரசன் காட்டாத. அவ்ளோ தான் மரியாத. இல்லேனா நான் அபிண்ணா கிட்ட கேட்டுப்பேன்” என்று தேஜஸ்வினி மிரட்டியவுடன் அவன் ஆவென்று வாயை பிளந்தான்.
“அடிப்பாவி… அந்நியன் மாதிரி இப்டி சடனா மாறறியே?”
“டேய் இப்போ வரப்போறீங்களா?. இல்லையா?” என ஜோஸ்வினி அதட்டினாள்.
“நீங்க வாங்க ஜோ. டேய் நீ இங்கயே நின்னு யோசி. நாங்க மூணு பேரும் சாப்ட்டு வந்துடறோம்”
“மச்சான் நீயுமா?” என்றவனை ஜோஸ்வினி முறைத்தாள்.
“ஓகே… ஓகே… மச்சான் வாலட் பத்திரம்” என்க
“என்னைய அபி பாத்துப்பான். நீ ஒண்ணும் பீல் பண்ணாத. வா அபி” என்றபடி அவன் கையினுள்ளே தனது கைகளை ஜோஸ்வினி கோர்த்து சென்றவளுடன் புன்னகையோடு அபி செல்வதை ஆதவன் விசித்திரமாக பார்த்தான்.
“டேய் நில்லுடா” என்றவன் அவர்கள் பின்னே சென்றான்.
“இதுக்கு தான் அந்த பிகு பண்ணியா?” என்று ஜோஸ்வினி முகத்தை சுளித்ததை பார்த்தவன் அவள் தலையில் தட்டினான்.
“டேய் பக்கி என்னடா பண்ற?” என்றவள் திருப்பி அடிக்க போனாள்.
அவள் செய்வதை அபிஷேக் புன்னகையுடன் பார்த்தான்.
“டேய் நீ எல்லாம் ஒரு ஃபிரண்டாடா?. அடிக்க வரா. ஈன்னு இளிக்கற”
“இல்லடா. அவங்க அமைதியா தானே வந்தாங்க. நீ தானே வம்பிழுத்த” என்று ஜோஸ்வினிக்கு சப்போர்ட் செய்தவன் அவளிடம்
“விடுங்க ஜோ. பொழச்சு போறான்” என்றவன் சொல்ல ஆதவன் அவனை முறைத்து பார்த்தான்.
அவனின் பார்வையை கண்டு கொள்ளாதவன் சகோதரிகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தான்.
“டேய் இதெல்லாம் அநியாயம்டா. என்ன கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்கற. அவ என்ன குழந்தையா?”
“நீ சொன்னாலும் சொல்லலேனாலும் அவங்க எனக்கு குழந்தை தான்டா” என்றவன் சொன்னவுடன் அவனை கேள்வியாய் பார்த்தான்.
‘அச்சோ உளறிட்டேயே அபி’ என்று நினைத்தவாறு திருதிருவென விழித்தவன் பின் சமாளித்து
“அவங்க எப்படி பேபி மாதிரி என்ஜாய் பண்ணி சாப்பிடறாங்க. அத சொன்னேன்டா” என்றவனை விசித்திரமாக பார்த்தான்.
ஐஸ்கிரீமை சுவைத்து கொண்டிருந்த ஜோஸ்வினியோ ஆதவன் பார்க்கையில் அவனை கையை ஆட்டி பழிப்பு காட்ட அவன் தலையிலடித்து கொண்டான்.
இவர்கள் ஒரு வழியாக ஐஸ்கிரீமை முடித்தவுடன் ஒவ்வொரு கேமாக விளையாட சென்றார்கள்.
சகோதரிகள் இருவரும் ஆர்வமுடன் விளையாடினார்கள். அபிஷேக் ஜோஸ்வினியை புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்ததை ஆதவன் ஒரு கூர்மையுடன் கவனித்து கொண்டிருந்தான்.
ஜோஸ்வினியும், தேஜஸ்வினியும் பேசி கொண்டு முன்னே செல்ல நண்பர்கள் அவர்கள் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.
ஜோஸ்வினி பேச்சு சுவாரசியத்தில் கவனிக்காமல் நடந்து சென்றாள்.
அப்போது அவள் எதிரில் வந்தவன் அவளை இடிப்பது போல் வர அதை கவனித்த அபிஷேக் ஜோஸ்வினியை வேகமாக தன்னை நோக்கி இழுத்தவன் எதிரில் இருந்தவனை அறைந்தான்.
அபிஷேக்கிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்காதவர்கள் அதிர்ந்து போய் நின்றார்கள்.
ஆனால் எதிரில் வந்தவனோ அவனிடம் சண்டையிட ஆரம்பித்தான்.
“ஹலோ என்ன நினச்சிட்டு இருக்க?. என் மேல கை வைப்பியா நீ?”
“ஆமா. கை வைப்பேன்” என்று அபிஷேக் இறுகிய குரலில் சொல்லவும் ஆதவன் சுதாரித்தான்.
“மச்சி கூல். ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகற?”
“நீ கம்முனு இருடா. அவன் ஜோஸ்வினிய இடிக்க வந்தான். அதான் அறைஞ்சேன்”
“ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ். கரெக்டா பேசுடா”
“என்னடா மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நானும் உன்ன பாத்துட்டு தான் இருந்தேன்டா. இதே வேலயா பண்ணிட்டு ரொம்ப டீசன்ட் மாதிரி சீன் போடறியா?” என்றவன் அவனை நையப்புடைத்தான்.
ஆதவனும் அவனை அடித்தவன் இதற்கு மேல் விட்டால் பிரச்சினை பெரிதாகுமென்று யோசித்து அபிஷேக்கை சமாதானம் செய்து கூட்டி வந்தான்.
“டேய் அபி உனக்கு இவ்ளோ கோபம் வருமா?” என ஜோஸ்வினி ஆச்சரியமாக கேட்டாள்.
“ஜஸ்ட் ஷட் அப் ஜோ. ஒருத்தன் உங்கள இடிக்க வரான். நீங்க அத கூட கவனிக்காம உங்களுக்கு என்ன பேச்சு?”
“கவனிக்கல அபி”
“என்ன கவனிக்கல?. அவுட்டிங் வர தானே. மத்தவங்கள கவனிக்க மாட்டியா நீ?” என்று அவன் இன்னும் எகிறினான்.
“நான் இப்டி நடக்கும்னு எதிர்பார்க்கல அபி”
“உனக்கு தான் பேசினா உலகமே தெரியாதே?”
“நீ பாத்துக்குவனு தான் நான் ஒண்ணும் கண்டுக்கலடா” என்றவள் சொல்ல அதில் கொஞ்சம் அமைதியானவன்
“அதுக்காக எப்பயும் இப்படியே இருக்காத” என்று அப்போதும் கண்டிப்புடன் கூறினான்.
“டென்ஷன் ஆகாதடா. லீவ் இட்” என்று ஆதவன் சமாதானம் செய்ய அவன் நினைவுகள் எங்கேயோ சென்றது.
அன்று ஜோஸ்வினியுடன் ஷியாமை சந்திக்க சென்ற போது நடந்ததை நினைத்து பார்த்தான்.
ஷியாமின் தொடர் போன் கால்களை பற்றி ஜோஸ்வினி அபியிடம் சொன்னாள்.
“அபி”
“சொல்லுங்க ஜோ”
“ஷியாம் போன் பண்ணிட்டே இருக்கான்”
“எதுக்குங்க ஜோ?”
“அவன் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணுமாம்”
“நான் அதெல்லாம் பெரிசா எடுத்துக்கலங்க ஜோ. நீங்க ஏன் அதே நினச்சிட்டு இருக்கீங்க?”
“டேய் ஓரளவு நல்லவனா இரு. ரொம்ப நல்லவனா இருக்காத” என்று ஜோஸ்வினி மிரட்ட அவனுக்கு சிரிப்பு வந்தது.
“நீங்க என்ன நல்லவனு எப்டி நம்பினீங்க ஜோ?”
“அதான் அன்னைக்கு இன்னொரு கன்னத்தையும் காட்றேனு நின்னியே?”
“ஜோ அது உங்கள நம்ப வைக்க நான் நடிக்கற நாடகமா கூட இருக்கலாம்”
“எனக்கு என் அபிய பத்தி தெரியும். போதும். நீ ரொம்ப சீன் போடாத” என்று அதட்டினாள்.
ஜோஸ்வினியின் இந்த வார்த்தைகளில் அபி பறப்பதை போல் உணர்ந்தான்.
ஆனால் உணர்ந்து கொள்ள வேண்டியவளோ அதை பற்றிய சிந்தையே இல்லாமல் இருந்தாள்.
“ஓகேங்க ஜோ. நான் வரேன்” என்று சம்மதம் சொன்னவன் அவளுடன் ஷியாமை சந்திக்க சென்றான்.
ஷியாம் சொன்னபடி காபி ஷாப்பில் இருந்தான். ஜோஸ்வினி ஷியாமுக்கு எதிராக அமர அபிஷேக் அவன் பக்கத்தில் அமர்ந்தான்.
இருவரையும் பார்த்தவன் “ஹாய்” என்று கூற அவர்கள் அமைதியாய் உட்கார்ந்தார்கள்.
“என்ன ஜோ எங்கிட்ட பேச மாட்டியா?”
“நீ பேசற மாதிரியா நடந்துக்கற?”
“அன்னைக்கு ஏதோ டென்ஷன். அதான் கோபம்” என்றவன்
“சார் உங்களுக்கும் என் மேல கோபம் போலயா?” என பாவம் போல கேட்டான்.
“உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்ல”
“ஆனா எனக்கு உன் மேல கோபம் இருக்கு. என்ன திமிர் இருந்தா என் லவ்வர் கூட ஊர் சுத்துவ?” என்று அடிக்குரலில் சிரித்து கொண்டே திட்டியவனை அபிஷேக் அதிர்ந்து போய் பார்த்தான்.
“ஷியாம்”
“உன்ன நான் மன்னிப்பு கேட்க வர்ற சொன்னேனு நினச்சியா?. அவள நான் பழி வாங்க போறேன். அத சொல்ல தான் உன்ன வர சொன்னேன்”
“டேய்ய்ய்ய்…”
“எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகற அபி?. உன்னால முடிஞ்சா ஜோஸ்வினிய காப்பாத்திக்கோ”
“என்ன மீறி அவள ஒண்ணும் செய்ய முடியாது”
“அப்டியா. பாத்துட்டே இரு. நீ கதறிட்டு எங்கிட்ட வருவ”
இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தவள்
“டேய் எனக்கு தெரியாம என்னடா பேசறீங்க?”
“சும்மா தான் ஜோ. அபியோட பிஸினஸ் பத்தி விசாரிச்சேன்” என்றவனை அபி கோபமாக பார்த்தான்.
“நீ என்ன பண்ணாலும் என்கிட்ட உன் வேல நடக்காது. போடா” என்றவன் ஜோஸ்வினியை பார்த்து
“ஜோ ஃபேர்வேல் பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்கோம். வந்துடு” என்றவன் அபியை பார்த்து கண் சிமிட்டினான்.
“பாக்கலாம்” என்றவள் சொன்னதும் ஷியாம் இருவரிடம் இருந்து விடைபெற்றான்.
ஆனால் அபிஷேக்கோ சிலையாய் அமர்ந்திருந்தான்.
அவனை பார்த்து அதிர்ந்தவள்
“அபி என்னாச்சுடா?” என்று விசாரித்தாள்.
“நத்திங். ஏதாவது சாப்டறீங்களா?”
“உனக்காவது கேக்கணும்னு தோணுச்சே” என்றவள் ஆர்டர் செய்தாள்.
பின் இருவரும் சாப்பிட்டவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.
அபி அன்று முழுவதும் யோசனையிலேயே இருந்தான். ஜோஸ்வினி கவனித்து கேட்ட போதும் சரியாக பதில் சொல்லவில்லை.
இது அவன் மனதில் ஒரு மூலையில் உறுத்தி கொண்டிருந்த போது சரியாக இந்த சம்பவமும் நடக்கையில் அபிஷேக்குக்கு ஜோஸ்வினி மேல் கோபம் வந்தது.
அந்த சம்பவத்திற்கு பின் அபி இறுக்கத்துடன் இருந்தான்.
“டேய் என்ன நீ உர்னு இருக்க?. நீ இப்படி இருந்தா நான் ஒண்ணும் விளையாடல”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜோ. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்று புன்னகைத்தப்படியே சமாதானம் செய்ய அவள் அமைதியானாள்.
இவர்கள் பேசுவதை கவனித்த ஆதவன்
“மச்சி ஏதும் ப்ராப்ளமா?” என விசாரித்தான்.
“நான் உன்கிட்ட அப்றம் சொல்றேன் மச்சி” என்றவனை திடுக்கிட்டு போய் பார்த்தான்.
“டேய் என்னனு சொல்லுடா”
“திஸ் இஸ் நாட் ரைட் பிளேஸ் டூ டெல்டா. நான் உன்கிட்ட அப்றம் பேசறேன்” என்றவன் பெண்கள் இருவருக்கும் பாதுகாப்பாக நின்று கொண்டான்.
அன்று முழுவதும் ஆட்டம் போட்டவர்கள் திரும்பும் போது ரெஸ்ட்டாரென்ட்டில் சாப்பிட்டு விட்டு வீட்டை அடைந்தார்கள்.
ஜோஸ்வினி வீட்டுக்கு சென்றவுடன் ரேஷ்மி அவளுக்கு போன் செய்தாள்.
“ஏய்… உனக்கு எத்தன டைம் கூப்பிடுறதுடி. போன் எடுக்க மாட்டியா?”
“நாங்க தீம் பார்க் போயிருந்தோம். அங்க என்ஜாய் பண்ணதுல போனையே மறந்துட்டேன். எதுக்குடி கூப்ட்ட?”
“நாளைக்கு ஃபேர்வெல் பார்ட்டி. அதுக்கு தான் கூப்ட்டேன்”
“ச்சே… நான் வரல. போடி”
“ஜோ”
“வந்தா அந்த ஷியாம பாக்கணும். எனக்கு கடுப்பாகுது”
“உனக்கு ஷியாம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவானா?. நாங்க உன் பிரண்ட்ஸ் தானே?” என்றவள் கத்த ஆரம்பித்தாள்.
“இப்போ எதுக்கு இப்டி கத்தறே?. உனக்கு நாளைக்கு வரணும் தானே. வரேன்” என்றவள் சொன்னதும் ரேஷ்மி அமைதியானாள்.
தோழிகள் இருவரும் நாளை நடக்க போகும் விபரீதத்தை அறியாமல் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர்.
