அத்தியாயம் 13

 

ரேஷ்மியுடன் போன் பேசி முடித்தவுடன் ஜோஸ்வினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. அதனால் அவள் அபிஷேக்குக்கு போன் செய்தாள்.

“சொல்லுங்க ஜோ”

“ரேஷ்மி போன் பண்ணா”

“என்ன சொன்னாங்க?”

“நாளைக்கு ஃபேர்ஃவெல் பார்ட்டினு கூப்பிடறா” என்று சொன்னவுடன் அபிஷேக் திடுக்கிட்டான். அவனுக்கு ஷியாம் சொன்னது ஞாபகம் வந்தது.

அபிஷேக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அவர்கள் நாடகம் போடுவதே அவளோடு அவன் சேரத்தான். அதனால் இப்போது ஷியாமின் மன நிலையை ஜோஸ்வினியிடம் சொல்ல தயங்கினான்.

அதே சமயம் அவளை போக வேண்டாம் என்றும் சொல்லவும் மனம் வரவில்லை. ஃபேர்வெல் பார்ட்டி ஆதலால் அவளுக்கும் நண்பர்களை சந்திக்க வேண்டும் போல் தோன்றும். அதனால் அவளை தடுக்கவும் அவனுக்கு தோன்றவில்லை.

அதே சமயம் தானும் அவளோடு செல்ல முடியாது என்று உணர்ந்தவன்  இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான்.

இவன் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்திருக்க அங்கோ ஜோஸ்வினி பதட்டமானாள்.

“அபி… என்னடா? சத்தத்தையே காணோம்? லைன்ல இருக்கியா?”

“ஏன் ஜோ இப்படி கத்தறீங்க? லைன்ல தான் இருக்கேன்”

“ஏன்டா இவ்ளோ அமைதியா இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?” என்றவள் கேட்க தான் சொல்ல முடியாத சூழ்நிலையை எண்ணி அறவே வெறுத்தவன் வழிய தனது குரலில் புன்னகையை வரவழைத்து

“நோ ப்ராப்ளம் ஜோ. நீங்க போயிட்டு வாங்க. என்ஜாய் பண்ணுங்க. தென் கவனமாக இருங்க ஜோ” என ஆயிரத்தெட்டு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க ஜோ கடுப்பானாள்.

“டேய்… யப்பா… சாமி நிறுத்தறியா?. நான் ஃபங்கஷனே போகல” என கத்தவும் தான் அவன் அமைதியானான்.

அவளிடம் போன் பேசி முடித்ததும் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு விவேக்கின் ஞாபகம் வந்தது.

உடனே அவன் விவேக்கிற்கு போன் செய்தான்.

“சொல்லுங்கண்ணா”

“நாளைக்கு ஃபேர்வெல் பார்ட்டியா விவேக்?”

“ஆமாண்ணா”

“விவேக் அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க. எனக்கு ஜோஸ்வினிய நினச்சா கவலையா இருக்கு” என்று தவிப்புடன் கூறினான்.

“என்னாச்சுண்ணா?”

“ஷியாம நாங்க மீட் பண்ணோம்” என்றவன் நடந்ததை சொல்லவும் விவேக் அதிர்ச்சியில் உறைந்தான்.

“ண்ணா என்ன சொல்றீங்க?. அந்த பொறுக்கி என்ன இப்படி பேசியிருக்கான்?”

“ஆமா விவேக். அதான் எனக்கு என்ன நடக்குமோனு டென்ஷனா இருக்கு”

“நான் பாத்துக்கிறேன் ணா. நீங்க ஒண்ணும் டென்ஷன் ஆகாதீங்க” என்று விவேக் சொல்லவும் சிறிது யோசித்தவன்

“விவேக் ஜோஸ்வினியோட பெஸ்ட் பிரண்ட் யாரு?. யாரோ ரேல ஏதோ ஸ்டார்ட் ஆச்சு நேம்”

“ரேஷ்மியாண்ணா”

“ஆமா விவேக். அவங்க நம்பர் குடுங்க”

“சரிண்ணா. நான் சென்ட் பண்றேன். டோன்ட் வொர்ரி அண்ணா” என்றவன் ரேஷ்மியின் நம்பரை அனுப்பினான்.

அவன் அனுப்பியவுடன் உடனே ரேஷ்மிக்கு அழைத்தான்.

“ஹலோ நான் அபிஷேக் பேசறேன்”

“அபிஷேக்கா… யார்ங்க நீங்க?”

“நான் ஜோஸ்வினியோட ஃப்ரெண்ட்ங்க”

“ஜோஸ்வினியோட ஃபிரண்டா? அவ எங்கிட்ட உங்கள பத்தி சொன்னதில்ல?”

“இல்லைங்க. ஃப்யூ டேஸா தான் வீ ஆர் ஃபிரண்ட்ஸ். நான் ஜோஸ்வினியோட கஸின் ஆதவனோட ஃபிரண்ட்”

“ஓகே. எனக்கெதுக்கு போன் பண்ணீங்க?”

“இல்லைங்க. ஷியாம் பத்தி உங்ககிட்ட பேசணும்”

“ஷியாமா?”

“ஆமாங்க. அவன் சரியில்ல. அவன் ஜோஸ்வினிகிட்ட மிஸ் பிஹேவ் பண்ண டிரை பண்றான்”

“வாட்?. ஹவ் டேர் யூ?. நான் அவங்க ரெண்டு பேரும் சேரணும்னு நினச்சா நீ பிரிச்சி விட பாக்கறியா?”

“நோ. நான் அப்டி எதும் நினைக்கலங்க” என்றவன் சொன்னதும் ரேஷ்மி திடீரென ஞாபகம் வந்தவள் போல்

“ஹேய்… நீ அபிஷேக்னா… ஷியாம பத்தி ஜோஸ்வினி கிட்ட தப்பா சொல்லி பிரிக்கற டிரை பண்றவன் தானே. ச்சே… அன்னைக்கு ஷியாம் அவகிட்ட எவ்ளோ பேச டிரை பண்ணான். நீ விடவே இல்லனு சொன்னான்”

“ஏன்டா செய்யறதும் செஞ்சிட்டு இப்போ என்ன நல்லவன் மாதிரி நடிக்கறயா?”

ரேஷ்மியின் குற்றச்சாட்டில் திகைத்து போய் நின்றவன் பின் சுதாரித்து

“இல்ல சிஸ்டர். நான் சொல்றத கேளுங்க. நீங்க நினக்கற மாதிரி இல்ல”

“டேய் என்னடா உடனே சிஸ்டர்னு சொல்ற.  ஆக்ட் பண்ற வேல எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத”

“ப்ளீஸ்… டிரை டு அன்டர்ஸ்டான்ட் சிஸ்டர். ஜோஸ்வினிக்கு அவன் ஏதாவது ப்ராப்ளம் கொடுக்க போறான். நீங்க அவங்க கூடவே இருங்க” என்று தவிப்பான குரலில் கூறினான்.

“ஹலோ… என் பிரண்ட பாத்துக்க எனக்கு தெரியும். நீ அட்வைஸ் பண்ணாத”

“சிஸ்டர் அவங்கள தனியா விடாதீங்க”

“எப்படி நீ அவ கூட ஊர் சுத்துவ?. ஆனா அவள தனியா விடக்கூடாதா?”

“டேய் ஃபோன வைடா. இதுக்கு மேல பேசினா நான் என்ன பேசுவேனு தெரியாது”

“சிஸ்டர்… சிஸ்டர்…” என்றவன் கத்த அவளோ போனை கட் செய்தாள்.

அபிஷேக் அவள் போனை வைத்தவுடன் அதையே வெறித்தபடி சில நிமிடங்கள் நின்றவன் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தளர்ந்து போய் அமர்ந்தான்.

ரேஷ்மியிடம் இருந்து அவன் இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

எப்போதும் ஜோஸ்வினியை காலேஜில் டிராப் செய்பவன் தேவைக்கு அதிகமாக அங்கே இருந்ததில்லை. அதுவே இப்போது அவனுக்கு பெரும் பிரச்சினையாகி போனது.

ஷியாம் அபிஷேக்கை பற்றி ரேஷ்மியிடம் தப்பு தப்பாக சொல்லி வைத்திருந்தான்.

ஷியாம் ஜோஸ்வினியிடம் அவன் மன்னிப்பு கேட்க முயற்சி செய்த போது அபிஷேக் இடையில் புகுந்து அவனை பேச விடாமல் தடுத்ததாகவும், மேற்கொண்டு அவன் பேசினால் ஷியாம் மீது ஈவ்டீங் கேஸ் என்று கம்பளைண்ட் குடுப்பதாகவும் அபிஷேக் மிரட்டியதாக ஷியாம் அவனை பற்றி பொய்யாக சொல்லி ரேஷ்மியிடம் நீலிக் கண்ணீர் வடித்தான்.

அதனால் அவளை எப்பாடு பட்டாவது ஃபேர்வெல் பார்ட்டிக்கு கூப்பிட்டு வந்தால் அவளை எப்படியாவது சமாதானப்படுத்துவதாகவும், ரேஷ்மியின் உதவியால் அவர்களது காதல் வெற்றி பெறும் என்று கண்ணீருடன் கூற அவளும் அவன் சொல்வதற்கு இயைந்தாள்.

ஷியாம் அவளை இவ்வாறு ப்ரைன் வாஷ் செய்ததை அறியாமல் அபிஷேக் அவளிடம் உதவி கேட்க போன் செய்தான். ஆனால் அதுவோ அவனுக்கு எதிராக அமைந்தது.

அடுத்து என்ன நடக்குமோ என்று ஒரு வித பதட்டத்துடன் அபிஷேக் எதுவும் செய்ய முடியா இயலாமையில் உடைந்து போய் அமர்ந்தான்.

          *****

அடுத்த நாள் இரவு ரேஷ்மியும், ஜோஸ்வினியும் ஃபேர்வெல் பார்ட்டிக்கு சென்றார்கள்.

நண்பர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்ததும் ஜோஸ்வினிக்கு உற்சாகம் பீறிட்டது.

ஜோஸ்வினி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஷியாம் அவளை நோக்கி வந்தான்.

“வெல்கம் ஜோ. எங்க நீ என் மேல இருக்கற கோபத்துல வர மாட்டியோனு நினச்சேன்”

“நான் எதுக்குடா உன் மேல இருக்கற கோபத்துல என் ஃபிரண்ட்ஸ மிஸ் பண்ணனும்?”

“ஜோ ஏன்டி இவ்ளோ கோபப்படுற?”

“நீ சும்மா இரு ரேஷ்மி. இவனுக்கு புதுசா பாக்கறவங்க கிட்ட எப்டி பழகணும்னு கூட தெரியாது”

“அதான் மன்னிப்பு கேட்டேன்ல ஜோ”

“ஏய் நீ என்னடி…” என்று ரேஷ்மி பேச ஆரம்பித்ததை பார்த்தவன் கண் ஜாடையில் தான் பார்த்து கொள்வதாக சொன்னதும் அவள் அமைதியானாள்.

“சாரி ஜோஸ்வினி. அன்னைக்கு ஏதோ மைன்ட் செட்ல பிரேக் அப்னு சொல்லிட்டேன்”

“ஏன் உனக்கு வேணும்னா நான் பேசணும். இல்லேனா பேச கூடாதா?. பொண்ணுங்கனா உனக்கு கிள்ளு கீரையா?”

‘எவ்ளோ கத்த முடியுமோ கத்துடி. உன் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான்’ என்று நினைத்தவன் வெளியே பாவமாக முகத்தை வைத்து கொண்டான்.

“அது இல்ல பேபி.தப்பு தான் பேபி”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களை நோக்கி ருத்ரன் வந்தான்.

“ஹாய்” என்றவன் கூற ஜோஸ்வினி அங்கிருந்து நகர்ந்தாள்.

‘போடி போ. உனக்கு வெக்கறேன் ஆப்பு’ என்று ருத்ரன் உள்ளுக்குள் கருவிக் கொண்டான்.

“ருத்ரன் நம்ம கிட்ட பேச வந்தான் தானே?. அவன்கிட்ட பேசாம இப்டி தான் வருவியா?”

“லுக்… நான் அவன் இருக்கற பக்கம் கூட தல வெச்சு படுக்க மாட்டேன். உனக்கு வேணும்னா நீ பேசு. அவன் இன்னும் எப்டி நம்ம லவ்வ பிரிக்கலாம்னு ஐடியா குடுப்பான்”

“அப்போ நீ என்ன இன்னும் லவ் பண்றியா ஜோ?” என்று ஷியாம் மென்மையாக கேட்டான்.

அந்த குரலில் அவள் மேற்கொண்டு என்ன சொல்வதென்று அறியாமல் திணறினாள்.

சமீபமாக அவள் எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாமல் கவனமாக இருக்கிறாள்.

ஏனோ அவன் பிரேக் அப் என்று சொன்னதை அவன் முன்பு அசால்ட்டாக இருப்பது போல காட்டி கொண்டாலும் அவளுள் அந்த ரணம் இன்னும் மறையவில்லை.

“நான் காதல்ங்கற வார்த்தையே வெறுக்கிறேன். அப்படி உனக்கு லவ் இருந்து அத இன்னும் ஃபைவ் இயர்ஸ் கழிச்சு நீ அப்போவும் உணர்ந்தேனா… நீ வா. ஆம் வெயிட்டிங்”

“எவனோ ஒருத்தன் சொல்லி நீ அத பிரேக்கப் பண்ற லவ்லாம் எனக்கு வேணாம்” என்று அங்கிருந்து அகன்றவளை சிலை போல பார்த்தபடி நின்றான்.

அதை பார்த்த ருத்ரன்

“என்னாச்சு மச்சி?” என்றபடி வந்தான்.

“நத்திங்டா” என்றவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். அவனை ருத்ரன் அவ்வப்போது நோட்டமிட்டப்படியே வலம் வந்தான்.

விவேக் ஜோஸ்வினி அங்கு வந்ததும் அவளுடன் கூடவே இருந்தான்.

ரேஷ்மியுடன் பேசியவுடன் மனம் இறுகிய அபிஷேக் திரும்பவும் விவேக்குடன் பேசவில்லை. அதனால் அவனுக்கு ரேஷ்மியின் மனநிலையை பற்றி தெரியவில்லை.

இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் இருந்த போது விழா ஆரம்பமானது.

மாணவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அவர்களின் கல்லூரி படிப்பின் அனுபவத்தையும், தங்களது நட்பு, எதிர்பாராத காதல், எதிர்கால வாழ்க்கை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஷியாம் பேச வந்த போது ஜோஸ்வினி அவனை பார்த்தாலும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்

“ஹேய் கய்ஸ்… இவ்ளோ நாள் நம்ம ஜாலியா ஆட்டம் போட்டோம். நம்மள இது வரையும் யாரும் கேள்வி கேக்கல”

“நம்ம ஃபைனல் இயர்ல இருக்கறோம். நான் ஃபர்ஸ்ட் காலேஜ் வந்ததே ஹாபி மாதிரி தான் வந்தேன்”

“எனக்கும் ஒரு தேவதை லட்சியம்னு ஒண்ணு இருக்குடா மரமண்டனு புரிய வெச்சா”

“நான் அவள நிறைய டைம் ஹர்ட் பண்ணாலும் அவ எனக்கு நல்லது தான் பண்ணா. ஈவன் நான் பிரேக் அப்னு சொன்னதுக்கப்புறமும் அதையும் தாங்கிட்டு எனக்காக ஃபைவ் இயர்ஸ் ஆனாலும் வெயிட் பண்றேனு சொல்றா”

இவன் பேசி கொண்டிருந்ததை கேட்ட ருத்ரன் துணுக்குற்று போய் அவனை பார்த்தான்.

‘இவன் பேசற பேச்சே சரியில்லயே. இப்டி உருகறான்’ என்று நினைத்தவன் ஜோஸ்வினியை பார்க்க அவள் கல் போன்று அமர்ந்திருந்தாள்.

“நான் உனக்காக ஃபிப்டி இயர்ஸ் ஆனாலும் காத்திட்டிருப்பேன் பேபி. ஐ லவ் யூ ஜோஸ்வினி. என்ன மன்னிச்சிடுடா ப்ளீஸ்… உனக்கு என்ன பிராப்ளம் வந்தாலும் உன் கூட இருப்பேன்டா” என்று கண்ணீருடன் சொன்னவனை ருத்ரன் அதிர்ச்சியில் உச்சத்தில் உறைந்து போய் பார்த்தான்.

ஜோஸ்வினி தனது கண்ணீரை மறைக்க படாத பாடு பட்டுக் கொண்டிருக்க ஷியாம், ஜோஸ்வினியின் நண்பர்கள் சந்தோஷமாய் உணர்ந்தார்கள்.

அருகில் அமர்ந்த ரேஷ்மி ஜோஸ்வினியின் கைகளை ஆறுதலாக அழுத்த ஜோஸ்வினி மெலிதாக புன்னகைத்தாள்.

அனைவரும் பேசி முடித்ததும் எல்லாரும் போட்டோ எடுத்தவுடன் அங்கிருந்து விடை பெற்றனர்.

ஜோஸ்வினி யாரிடமும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்புவதை பார்த்ததும் விவேக் அவளுடனே கிளம்பினான்.

இருவரும் வீட்டுக்கு வந்ததும் விவேக் நடந்ததை அபிஷேக்கிடம் சொல்ல அவன் அப்போது இரும்பாய் இறுகியவன் தான். அதன் பின் விவேக்கிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அழைப்பை துண்டித்தான்.

ஜோஸ்வினியாலும் அவனுடன் பேச முடியவில்லை. அவனது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தான்.

ஏறக்குறைய ஒரு வாரம் யார் தொடர்பும் இல்லாமல் இருந்தவனை மொபைலில் வந்த ஒரு மெஸேஜ் அவனது வாழ்வையே புரட்டி போட்டது.

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page