பாரீஸ்
ஜோஸ்வினி பிரான்ஸ் வந்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆகியிருந்தது.
அவளுக்கு அவன் வீட்டை அடையும் வரையும் கூட ஒன்றும் தெரியவில்லை அபிஷேக்கை பற்றி.
அபிஷேக் எப்போதுமே சாதாரணமாக இருப்பதால் அவனை அவ்வளவு பெரிய பணக்காரனாக அவனை எதிர்பார்க்கவில்லை.
அவன் ரெஸ்ட்டாரென்ட் பற்றி சொன்ன போது கூட அதனை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளாதவள் அவனது வீட்டை பார்த்து மலைத்தாள்.
ஏறக்குறைய ஒரு அரண்மனையை ஒத்திருந்தது அவனது வீடு. வீட்டில் இரண்டு கார்கள் நின்றிருந்தது.
அவன் சென்னையில் சாதாரணமாக ஆதவன் வீட்டில் தங்கியதற்கும், அவனுடைய பிரெஞ்ச் வீட்டிற்கும் ஒப்பிட்டவள் அவனுடைய குணத்தை எண்ணி வியந்தாள்.
‘இப்படியும் ஒருவனா என்று’
அவனது அமைதி அவனை வேறொருவனாக காட்டி இருக்க அவனது பிரம்மாண்டமான வீட்டைக் கண்டு அவள் திகைத்தாள்.
அவள் திகைத்து நின்றதை பார்த்தவன்
“வாங்க ஜோஸ்வினி” என்று சொன்னான்.
அவர்கள் உள்ளே செல்லும் முன்னர் பாலகிருஷ்ணன் சொன்னபடி ஏன்ஜலின் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
முன்புறத்தில் தோட்டம் அழகுற அமைந்திருக்க வீட்டின் உள்ளே சென்றவள் அங்கிருந்த அலங்காரங்களை வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்.
சாதாரணமாக ஒற்றை கதவாக உள்ள வீடு உள்ளே செல்ல செல்ல அவளை தன்னுள் இழுத்து கொண்டது.
வரவேற்பறையின் பிரமாண்டமும், சாண்ட்லியர் விளக்கும், சுவர்களின் வேலைப்பாடும் என்று ஒவ்வொன்றாய் ரசித்தாள்.
அவளை உட்கார வைத்த ஏஞ்சலின் அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க அதை குடித்தவள் அருகில் அமர்ந்திருந்த அபிஷேக்கை பார்த்த போது அவளையறியாமல் அவளுக்கு பயம் வந்தது.
அன்று அவள் மயங்கி விழுந்த போது அவன் அழுததை அவளால் மறக்க முடியவில்லை.
அவள் தன்னையே கவனிப்பதை பார்த்தவன் சிறிது சுதாரித்து தனது கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டான்.
“வெயிட் ஜோஸ்வினி” என்று சொல்லியவன் நேராக சமையலறைக்கு சென்றான்.
அங்கே சமையலறையை ஆராய்ந்தவன் அங்கிருந்த தோசையை எடுத்து கொண்டு வந்தான்.
அவள் ஏதேதோ யோசனையில் இருக்க அவன் வந்த அரவம் கேட்டதும் அவனை பார்த்தவள் திகைத்து விழித்தாள்.
“என்ன பாக்கறீங்க ஜோஸ்வினி? இப்டி தான் மயங்கி விழுவீங்களா? ஒரு நிமிஷம் குலையெல்லாம் நடுங்கிடுச்சு செர்ரி” என்று அப்போதும் அதை அனுபவிப்பது போல நடுங்கிய குரலில் சொன்னவன்
“ஃபர்ஸ்ட் இத சாப்பிடுங்க” என்று அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஊட்ட வந்தான்.
அவளோ அவனை நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.
இத்தனை நாட்கள் அவன் தன்னை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தான்.
இப்போது தனக்காக உயிரையே கொடுப்பேன் என்பது போல ஊட்ட வருபவனை பொசுக்கி விடுபவள் போல பார்த்தாள்.
“நீ யாரு எனக்கு ஊட்ட? என்ன பாத்துக்க எனக்கு தெரியும். ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடாத”
“ஓகே… நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன். ஆனா நீங்க எப்படிங்க ஜோ அழுமூஞ்சா மாறினீங்க?”
“இன்னைக்கு சட்டைய பிடிச்சு உலுக்கினீங்கள்ள? அதே மாதிரியே இத்தன நாளும் செய்ய வேண்டியது தானே?”
“ஒன்னு ரிமைன்ட் பண்றேன். ஃபர்ஸ்ட் நீங்க என்னோட ஃபிரண்ட். அதுக்கப்புறம் தான் மத்தது எல்லாம். நான் அந்த பழைய ஜோஸ்வினிய பாக்கணும்”
“அந்த படபட பட்டாச நான் ரொம்ப மிஸ் பண்றேன். எந்நேரமும் சிரிச்சிட்டு இருக்கற ஜோஸ்வினிய நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என உணர்வு பூர்வமாக அவன் சொல்லிக் கொண்டே போக ஜோஸ்வினியோ “ஸ்டாப் இட்” என்று கத்தினாள்.
“மொத்தமா சிரிப்பை கொன்னுட்டு என்னடா நல்லவன் மாதிரி பேசற? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னியா?” என்று கேட்டவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன்
“உங்க கேள்விக்கான விடைய நான் தேடிட்டு இருக்கேன்ங்க ஜோ. அதுக்கான பதில் தெரிஞ்சவுடனே நான் கண்டிப்பா சொல்லிடுவேன்” என்று இறுகிய குரலில் கூறினான்.
அவனை கவனித்து கொண்டிருந்த ஜோஸ்வினிக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.
‘இவனா இவ்வளவு நேரம் அன்பாக பேசியவன் என்று’
“சோ ஜோஸ்வினி நீங்க என் கூட ஃபைட் பண்றதுக்காவது சாப்பிடணும் தானே. சாப்பிடுங்க” என்றவன் தட்டை நீட்டினான்.
அவனையே வெறித்து பார்த்தவள் அமைதியாக அவனிடம் இருந்த தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிட ஆரம்பித்ததும் வெளியே சென்றவன் இருளையே வெறித்தபடி வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
பின் ஜோஸ்வினியின் ஞாபகம் வந்தவனாக அவளை அறையினுள் சென்று பார்க்க படுக்கையில் படுத்தவள் சரியாக தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்றவன் இதமாய் அவளது தலையை வருடிக் கொடுக்க கொஞ்சம் கொஞ்சமாக தூங்க ஆரம்பித்தாள்.
அவன் வருடி விட்டதும் தன்னுடைய அலைப்புறுதலை மறந்து தூங்கியவளை விசித்திரமாக பார்த்தவன் அவள் அருகில் இருப்பதையே பெரும் பேறாக எண்ணியவன் நிம்மதியாக படுத்து உறங்கினான்.
அடுத்த நாளில் இருந்து இருவரும் பெரிதாக பேசி கொள்ளவில்லை. ஆனால் அவளுக்கு தேவையானதை ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தான்.
இப்படி அவன் ஒரு பரிமாணத்தில் அவனுக்கு அறிமுகமாகி இருக்க இங்கோ அவனது இன்னொரு பரிமாணத்தில் மிரண்ட பார்வையுடன் அவனை பார்த்தாள்.
அவளது பார்வையை கவனித்தவன் கண் மூடி ஆறுதலாக புன்னகைக்க இன்னும் அவனை திகைப்பாக பார்த்தாள்.
“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. அபி போய் ரூம காட்டு” என ஏஞ்சலின் சொல்ல அபியும் ஜோஸ்வினிக்கு அறையை காட்டினான்.
அவளோ எதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
“என்ன ஜோஸ்வினி ஏதும் பேச மாட்டேங்கறீங்க?” என்று புருவம் உயர்த்தினான்.
“நீ என்ன இவ்ளோ சிம்பிளா இருக்கற. உன் வீட்ட பாத்தாலே எனக்கு பயமா இருக்கு” என்று தயங்கிய குரலில் சொன்னாள்.
“என்னது ஜோஸ்வினிக்கு பயமா?” என்று வியப்பாய் சொன்னவன்
“ஃபீல் ப்ரீங்க ஜோ. இது உங்க வீடு. உங்க இஷ்டம் போல இருங்க” என்று சொன்னான்.
“எல்லாம் என் இஷ்டப்படி தான் நடந்ததா?” என்று கோபமாக ஆரம்பித்தவளை பார்த்து புன்னகைத்தவன்
“ஜோ நாம இப்ப தான் வந்தோம். நம்ம சண்ட போட நமக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு. இப்போ டயர்ட்ல இருப்பீங்க. ரெஸ்ட் எடுங்க” என்றவன் அங்கிருந்து செல்ல அவள் ‘அப்பாடா’ என படுக்கையில் சாய்ந்த நேரம் கதவு வரை சென்றவன் அவள் அருகில் வந்து “கெட் ரெடி பேபி” என்று கண்ணடித்தான்.
இதனை சற்றும் எதிர்பாராதவள் விக்கித்து போய் அவனை பார்த்தாள்.
“என்னடா? அங்க அவ்ளோ நல்லவன் மாதிரி நடந்துட்டு இப்போ இப்படி சொல்றானு பாக்கறியா? நீயா என்ன தேடி வருவ செர்ரி. சோ கெட் ரெடி” என்றவன் அவளது கன்னத்தை தட்டி விட்டு செல்ல அவள் சிலையாய் அமர்ந்திருந்தாள்.
*****
பிரான்ஸ் வந்த அபிஷேக் வெகு நாட்களாக தனது ரெஸ்ட்டாரென்ட்டிற்கு சரியாக செல்லாததால் அந்த வேலைகள் அவனை உள்ளிழுத்து கொண்டது. அதனால் பெரும்பாலான நேரங்கள் அவனுக்கு ரெஸ்ட்டாரன்ட்டிலேயே கழிய ஜோஸ்வினியோ பைத்தியம் பிடிக்காத குறையாய் வீட்டில் இருந்தாள்.
பாலகிருஷ்ணன் என்ன தான் அவளை வழி நடத்தினாலும் ஏஞ்சலினுடைய பிரஞ்சு கலந்த இங்கிலீஷ் அவளுக்கு குழப்பத்தை வரவழைத்தது.
ஏன்ஜலின் இவள் அமைதியாக ஏதோ சிந்தனை வயப்பட்டவளாகவே சுற்றுவதைப் பார்த்து விட்டு அவளோடு பேச முனைவார்.
“ஸ வா ம செர்ரி..?” (ஓகேவா மை டியர்)
அவர் பிரெஞ்சில் கேட்டால் இவளோ தான் இந்தியாவில் அரைகுறையாக படித்திருந்த பிரெஞ்சை வைத்துப் பதில் செல்வதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடுவாள்.
“ஸ வா.. ஸ வா..(ஓகே.. ஓகே..)” என்று விட்டுத் தன்னறைக்குள் அடைக்கலம் புகுந்து விடுவாள்.
கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போல் நிலையில் இருந்தவளை கவனித்த ஏஞ்சலின் அபிஷேக்கை திட்டினார்.
அன்று வேலை முடிந்து வந்து சோர்வாக அமர்ந்திருந்தவனை பார்த்தவர் அவனிடம் விசாரணையை ஆரம்பித்தார்.
“அபி”
“மம்மா”
“உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. ஞாபகம் இருக்குல்ல”
“எஸ் மா”
“அவள எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போடா. ஷீ ஈஸ் சோ டிஸ்டர்ப்ட்”
“மம்மா” என்று அதிர்ச்சி ஆனான்.
“ஏன் அபி இவ்ளோ ஷாக்? அவள அப்பப்போ வெளிய கூட்டிட்டு போ. அவகிட்ட இருந்து ரொம்ப ஒதுங்காத”
“இது நியூ ப்ளேஸ் வேற? சீ ஃபீல்ஸ் லோன்லி. அதுக்கும் சான்ஸ் இருக்கு” என்று கூறினார்.
அதை கேட்டவன்
“ஓகே மம்மா. நான் நாளைக்கு கூட்டிட்டு போறேன்” என்றவன் அடுத்த நாள் அதன்படி அவளிடம் வெளியே போக கிளம்ப சொன்னான்.
ஆனால் அவளோ வித்தியாசமாக பார்த்தாள்.
“ஏன் ஜோ இப்படி பாக்குறீங்க?”
“ஃபர்ஸ்ட் நீ என் ஃபிரண்ட் தானு சொன்ன. ஆனா இங்க வந்ததுல இருந்து என்னாச்சு, என்ன பண்றேனு ஏதாவது கேட்டியா? இன்னைக்கு மட்டும் திடீர் ஞானோதயம்?”
“சாரிங்க ஜோ. ரெஸ்ட்டாரென்ட் வொர்க்ல மறந்துட்டேன்” என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.
“ஏன் அபி சென்னைல நம்ம எந்த இடம் சுத்தாம இருந்தோம்? உனக்கு அங்க வொர்க் இருந்ததுல்லயா? ரியலி நான் அந்த அபிய நான் எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா? அந்த அபி என்ன எப்டி பாத்துகிட்டான்?”
“ஆனா இங்க வந்ததுல இருந்து நான் எவ்ளோ லோன்லியா ஃபீல் பண்றேன் தெரியுமா? யார்ட்டயும் ஓப்பனா கூட பேச முடியல. எங்கேயும் நான் வந்ததுல இருந்து வெளிய போகல. ஒரு நல்ல ஃபிரண்ட்னா நீ என்ன அவாய்ட் பண்ணுவியா?” என்று கேட்டவளை பார்த்து அவனுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல தோன்றியது.
அவள் அன்று மயங்கி விழுந்ததில் பதறியவன் அதற்கு பிறகு அவளை தொல்லை செய்ய வேண்டாமென ஒதுங்கியே இருந்தான்.தேவைக்கு மட்டுமே பேசினான்.
அதே போல இங்கே காலையில் ரெஸ்ட்டாரன்ட்டிற்கு கிளம்பினால் இரவு தான் வீட்டிற்கு வருவான். அவள் வரும் நேரத்தில் பெரும்பாலும் அவள் உறங்கி கொண்டிருப்பாள். அதனால் அவளை தொல்லை செய்ய வேண்டாம் என நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது இவள் லோன்லீயாக ஃபீல் செய்வதாக கூறியதும் உனக்கு நான் இருக்கிறேன் என்று கட்டி அணைத்து ஆறுதல் அளிக்க மனம் துடித்தது.
இருந்தும் ஏதும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தவன் தனது மனத்தை மறைத்தபடி புன்னகையுடன் அவளை பார்த்தான்.
“நான் உன் ஃபிரண்ட்னா எங்கடா என்ன மட்டும் விட்டுட்டு ஊர் சுத்தறனு நீங்க என்ன கேட்ருக்கணும் இல்லங்க ஜோ?”
“அப்போ நீங்க என்ன அவாய்ட் பண்றீங்கனு நான் எடுத்துக்கலாமா?” என்று கேட்டவனை வாயடைத்து போய் பார்த்தாள்.
“என்ன ஃப்ரீஸாகி நிக்கறீங்க? குவிக்கா கிளம்புங்க. ஓகேவா?” என அவன் சொன்னதும் அவள் அவசரமாக கிளம்ப ஆரம்பித்தாள்.
வந்ததில் இருந்து எங்கேயும் போகாததால் அவசரமாக கிளம்பியவள் ப்ளாக் கலர் ஜீன்ஸூம், வொய்ட் கலர் சர்ட்டும், அதற்கு மேல் சின்னதாக ஒரு ப்ளாக் கலர் கோட்டும், ஃப்ரீ ஹேர் ஸ்டைலுமாக அவள் கிளம்பி வரவும் இப்போது இவன் தான் ஃப்ரீஸாகி நின்றான்.
அவன் தன்னையே பார்ப்பதை கவனித்தவள்
“அபி கிளம்பலாமா?” என்று கேட்க அப்போதும் அவளையே பார்த்து கொண்டு நின்றான்.
“அபிஷேக்” என்று அவன் நிலையை பார்த்து இவன் அழுத்தி கூற கனவில் இருந்து விழிப்பவன் போல அவளை பார்த்தான்.
“கிளம்பலாமா?” என கேட்கவும் தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவன் “கிளம்பலாம்ங்க ஜோ” என்றவன் காரை நோக்கி சென்றான்.
காரில் ஏறியதில் இருந்து அவன் அவ்வப்போது ஜோஸ்வினியையே பார்த்து கொண்டிருந்தான்.
‘ஒண்ணும் மேக்கப் பண்ணாமையே இப்படி இருக்காளே? அய்யோ நான் எப்டி கன்ட்ரோல்டா இருக்க போறேன்?’
‘ஏன்டா டேய் உனக்கு ப்ராமிஸ்லா ஒரு கேடு’ என்று அவனது மனசாட்சி அவனை கேள்வி எழுப்பியது.
‘டேய் நான் அவள லவ் பண்ண வைக்காம ஓய மாட்டேன்டா’ என அவனது மனசாட்சிக்கு அவன் சவால் விட அதுவோ காறி துப்பியது.
‘நீயா… அவ அழுதாலே நீ அவகிட்ட சரணடைஞ்சிடற. இதுல நீ அவள லவ் பண்ண வைக்க போறியா?’ என்று கரித்து கொட்டியது.
இவன் இவ்வாறான சிந்தனையில் இருக்க ஜோஸ்வினியோ இத்தனை நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்ததில் வெளியே வந்ததும் சுதந்திரமான காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அதை கண் மூடி அனுபவித்தவள் அப்படியே வெளியே வேடிக்கை பார்க்க அவளை ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்தியது.
பழமை மாறாத கட்டிடங்கள், நவீன சாலைகள், எங்கும் பசுமை நிறைந்த மரங்கள், ஆங்காங்கே உள்ள பழமையான சிலைகள் என பிரான்ஸ் அவளை ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்க ஒவ்வொன்றையும் வியப்பாய் ரசித்து கொண்டு வந்தவளை சாலையில் கவனம் வைத்தபடி அவளை ரசித்து கொண்டே வந்தான்.
ஒரு இடத்தில் காரை நிறுத்தியதும் அவர்கள் இருவரும் இறங்கிய போது அவளுக்கு எதிரே உள்ள சாலையில் ஏதேச்சையாக பார்த்தவளின் கண்கள் வெளியே தெறித்து விழும்படி ஆனது.
அதை பார்த்ததும் அவளது கண்கள் தன்னிச்சையாக அபியை பார்க்க அவனோ இவளது கண்களை ஊடுருவியபடி நின்றான்.
