ஜோஸ்வினியின் கண்கள் எதிரே தெரிந்த காட்சியை பார்த்ததும் விழிகள் வெளியே வந்து விடுவது போல பார்த்தாள்.
காரை நிறுத்திய அபிஷேக் அவளுடைய பாவனையில் துணுக்குற்றான்.
‘என்ன இவங்க இப்டி பாக்குறாங்க?’ என்று யோசனையுடன் பார்வை போன திசையை பார்த்தவன் அப்படியே கடுப்பாகி நின்றான்.
ஏனெனில் அங்கே ஒரு ஜோடி உதடோடு உதடு முத்தமிட்டபடி தங்களை மறந்த நிலையில் சஞ்சரித்திருந்தார்கள்.
‘அடப்பாவிகளா… கைய கூட பிடிக்க முடியாத சிட்சுவேஷன்ல இருக்கேன். ஏன்டா இப்டி கடுப்பேத்தறீங்க?’ என்று மனசாட்சியை துணைக்கு அழைத்தான்.
‘டேய் நீ பொறந்து வளந்த பாரீஸ் பத்தி உனக்கு தெரியாதா? இன்னைக்கு தான் நீ இந்த சீன்லா பாக்கறீயா? கடுப்படிக்காம அமைதியா போ’ என்று மனசாட்சி அவனை காறி துப்பியது.
‘இத்தன நாளா இருக்கறதும், இன்னைக்கு இருக்கறதும் ஒன்னா? கம்முனு நீ ஓடிப் போயிடு’ என்று திட்டியவன் ஜோஸ்வினியின் ஞாபகம் வந்தவனாக அவளை பார்க்க அவளோ இவனை பார்த்தபடி நின்றாள்.
அவளது பார்வையை சந்தித்தவன் அவளையே ஊடுருவுவது போல பார்த்தான். அந்த பார்வையில் தன்னையறியாமல் அவளது உடல் சிலிர்த்தது.
அதே சமயம் அவனை பார்க்க முடியாமல் அங்கிருந்து உள்ளே ஓடினாள். இதை கவனித்த அபிஷேக்கின் மனமோ ‘யாஹூஹூஹூஹூஹூ’ என்று குத்தாட்டம் போட்டது.
உள்ளே சென்றவளோ கடையை பார்த்ததும் திகைத்து போய் நின்றாள்.
ஏனெனில் அது ஒரு ஐஸ்கிரீம் பார்லர். வெளிநாட்டுக்கே உரிய பணக்காரத்தனத்துடன் இருந்தது.
ஒரு கண்ணாடி டேபிளின் கீழ் விதவிதமாக ஐஸ்கிரீம் ப்ளேவர்கள் இருந்தது.
ஐஸ்கிரீம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன் மனம் அறிந்து கூட்டி வந்தவனை பார்த்து இத்தனை நாளில் ஜோஸ்வினி சந்தோஷத்துடன் அவளையறியாமல் புன்னகை செய்தாள்.
அவளது புன்னகையை பார்த்தவனுக்கோ எதையோ சாதித்தது போல் உள்ளம் கூத்தாடியது.
அவளை பார்த்தபடி புன்னகைத்தவன் ஒரு டேபிளில் உட்கார அவளும் அவனோடு உட்கார்ந்தாள்.
“செர்ரி இந்த கேட்டலாக் பாருங்க. உங்களுக்கு என்ன பிடிக்குமோ சொல்லு” என சொல்ல அதை பார்த்தவள் திணறி போனாள்.
அதில் விதவிதமாக இருக்க அவள் எதை தேர்ந்தெடுக்க என திணறி கொண்டிருந்தாள்.
ஒவ்வொன்றும் சாப்பிட தூண்டும் வகையில் இருந்தது.
“டேய் இதுல என்ன சூஸ் பண்றதுனு தெரியல”
“ஓகே. அப்போ நான் ஒண்ணு ஆர்டர் சொல்றேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடிச்ச ஃப்ளேவர்ஸ் சொல்லுங்க. நம்ம கஸ்டமைஸ் பண்ணலாம்” என்றவனை வியப்பாய் பார்த்தாள்.
“என்னது கஸ்டமைஸ் பண்றதா? டேய் சூப்பர்டா” என்றவள்
“ஹேய்... என்ன டேஸ்ட்னு தெரியாம எப்டி டேஸ்ட் பண்றது?” என்றவள் ஏதோ யோசித்து
“டேய் என்ன மாட்டி விடறாயா?” என்றாள்.
“உங்கள மாட்டி விட்டு நான் என்ன பண்ண போறேன். நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க” என்று கூட்டி சென்றவன் அங்கிருந்த ப்ளேவர்களை டேஸ்ட் செய்ய வைத்தான்.
“வாவ்… எவ்ளோ ஃபிளேவர்ஸ்” என்று பார்த்தவள் விழி விரித்தாள்.
அங்கே ஒரு பெரிய கண்ணாடி பெட்டியில் நிறைய ஃப்ளேவர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்தவள் அதனை பற்றிய விசாரணையை அவனிடம் நடத்தினாள்.
“ஹேய்… அதென்ன பிங்க் கலர்ல இருக்கு?”
“அது ஸ்ட்ராபெரி சீஸ் கேக்”
“அத எடுத்துக் குடுங்க” என்றவன் அதை அவளுக்கு வாங்கி குடுங்க அவளோ
“வாவ்… டேய் செம டேஸ்ட்… இந்த மாதிரி சாப்பிட்டதில்ல” என்றவள் அடுத்த ஃபிளேவரை தேடினாள்.
“டேய் ப்ளூபெர்ரி இருக்கும் போல” என அவள் கேட்கவும் அதை எடுத்து கொடுக்க சொன்னான்.
அதே போல பெல்ஜியம் சாக்லேட் மற்றும் இன்னும் ஓரிரு பிளேவர்களை டேஸ்ட் செய்தவுடன் அபிஷேக் ஆர்டர் கொடுத்தான்.
இவர்கள் அங்கிருந்த சேரில் வந்து உட்கார்ந்தவுடன் ஒருவன் ஒரு பெரிய கண்ணாடி கிளாஸில் ஒரு திரவியத்தை கொண்டு வந்து வைத்தான்.
“டேய் என்னடா இது? கீழ காஃபி மாதிரி இருக்கு. மேல கீரிமா இருக்கு”
“டேஸ்ட் பண்ணுங்க ஜோ”
அந்த கீரிமையும், அந்த காஃபியையும் கலந்து சாப்பிட்டவள்
“அபி செம காம்பினேஷன்டா” என்று குதூகலத்துடன் சுவைத்தாள்.
“இது பெல்ஜியம் ஹாட் சாக்லேட். ஹாட் சாக்லேட்டோட ஐஸ்கிரீம் டேஸ்ட் மிக்ஸ் ஆகிறது செமயா இருக்கும்” என்றவன் விளக்கம் சொன்னான்.
“வாவ்… உண்மையிலேயே ஒன் ஆன் ஆஃப் தி பெஸ்ட் பிளேவர் இது” என்றவள் சாப்பிட ஆரம்பிக்க இவனோ அமைதியாக அவளை சைட் அடிக்கும் வேலையை பார்த்தான்.
இவளது ரசித்து உண்ணும் பாவனையில் இவன் கண்ணிமைக்காமல் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
சாப்பிட்டு கொண்டிருந்தவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உந்த அவனை பார்த்தவள் அதிர்ந்து போய் பார்த்தாள்.
ஏனெனில் அவன் சிலை போல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
“அபி அபி” என்று கூப்பிட்டும் அவன் பதில் சொல்லாததால் அவனை உலுக்கினாள்.
“ஹான்… என்ன?”
“என்னடா ட்ரீம்ல இருக்கற?”
‘உன் கூட கனவுல தான் டூயட் பாட முடியும். ஓப்பனா சொல்லவா முடியும்?” என்று சலித்தவன் அப்படியே பேச்சை மாற்றினான்.
“உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? ஒருத்தன் இவ்ளோ கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தானேனு ஒரு வார்த்தை சாப்பிடுனு சொன்னீங்களா?” என்று கோபமாக கேட்டான்.
“அச்சோ… அதான் சார் ப்ரீஸ் ஆகி நின்னுட்டீங்களா? ஆ… காட்டு” என்றவள் அவனுக்கு ஊட்டினாள்.
இதை சற்றும் எதிர்பாராதவன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.
இருவரும் நண்பர்களாக இருக்கும் போது அடிக்கடி ஊட்டி கொள்வார்கள். எங்கேனும் ஏதேனும் சாப்பிட செல்லும் போது.
இவன் அமைதியாக இருந்தாலும் ஜோஸ்வினி அவனை விட்டு எதுவும் சாப்பிட்டதில்லை. கிட்டத்தட்ட அவளது சிரிப்பு, நட்பு, அன்பு என்று இத்தனை நாளும் மொத்தமாக அவனை விட்டு சென்றது மீண்டும் அவனிடம் வந்து சேர்ந்தது போல அவன் தன்னையறியாமல் அவளை நெருங்கி அமர்ந்தான்.
அதில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் தன்னையறியாமல் பின்னால் சென்றாள்.
அதை கவனித்தவன் மனமோ வலித்தது.
அவன் மேற்கொண்டு பேச வரும் முன் சர்வர் ஒரு சாக்லேட் பால் போல ஒன்று கொண்டு வந்தார்.
அவள் அதை என்னவென்று கேக்க ஆரம்பிக்க அவனோ சர்வ் செய்தவரை கவனிக்கும்படி சைகையில் சொன்னான்.
அந்த பாலின் மேல் அவன் சாக்லேட் போன்ற திரவியத்தை ஊற்ற அதுவோ உடைந்து அதனுள்ளில் இருந்த ஐஸ்கீரிமுடன் கலந்து இருந்தது.
இதை சிறிதும் எதிர்பாராதவள் வியப்புடன் அவனை நோக்கினாள்.
“டேய் செம… என்னதுடா இது?”
“இது டார்க் சாக்லேட் பாம் செர்ரி. இதுல நம்ம டேஸ்ட் பண்ண ஃப்ளேவர்ஸோட எல்லாம் மிக்ஸ் ஆகி வரும் போது அந்த டேஸ்ட் செமயா இருக்கும். டேஸ்ட் பண்ணி பாருங்க” என்றதும் அவள் அதை சாப்பிட்டாள்.
அவளுக்கு அது மிகவும் பிடித்தது.
“செம ஐஸ்கிரீம் டா. நெக்ஸ்ட் டைம் நம்ம இங்க வரணும்” என்று ஆசையோடு சொன்னாள்.
“கண்டிப்பா செர்ரி” என்றவன் அடுத்து அங்கிருந்து ஒரு பொட்டிக்கிற்கு அழைத்து சென்றான்.
அவன் அங்கே நிறுத்தவும் அவள் காரணம் புரியாமல் திகைத்தாள்.
“என்ன அபி இங்க ஸ்டாப் பண்ணிருக்க? நாம வீட்டுக்கு போகலயா?”
“போலாம்ங்க ஜோ. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேல”
“என்ன?”
“நம்ம மேரேஜ் ரிசப்ஷனுக்கு உங்களுக்கு டிரஸ் எடுக்கணும்”
“வாட்?”
“ஏன் ஜோ இப்படி ஷாக் ஆகறீங்க? அங்க நடந்தது இங்க என் ஃபிரண்ட்ஸூக்கெல்லாம் அனௌன்ஸ் பண்ண வேண்டாமா?”
“நான் மேரேஜ் நடந்ததே பிடிக்கலனு சொல்றேன். இதுல ரிஷப்சன் வேறயா? நான் வரமாட்டேன்” என அவள் இறுகிய குரலில் சொன்னாள்.
“உங்கள நான் வர சொல்லி கேக்கலங்க ஜோ. வந்தாகணும்னு இன்ஃபர்மேஷன் தான் குடுக்கறேன். சோ லெட்ஸ் கோ”
“நான் வர முடியாது. நான் வராம நீ எப்டி ரிஷப்சன் நடத்துவ?” என்றவள் கதவை திறந்து ஓட ஆரம்பித்தாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அபிஷேக் திகைத்தான்.
“ஜோ நில்லுங்க” என்றவன் பின்னாலே ஓட ஆரம்பிக்க அவள் சாலையை கவனிக்காமல் கடக்கையில் ஒரு வாகனம் மோதுவது போல வந்தது.
அதில் அவள் பயந்து போய் அப்படியே நிற்க அபிஷேக் மிக வேகமாக அருகில் வந்தவன் அவளை இழுத்து ஓங்கி அறைந்தான்.
அவளோ அவன் அறைவான் என எதிர்பாராதவள் நிலைகுலைந்து கீழே விழ போனாள். அவளை கீழே விழாமல் தடுத்தவன் அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
அப்போது தான் அவள் உடல் நடுங்கி கொண்டிருப்பதையே உணர்ந்தான்.
அவளை மெல்ல நடத்தி காருக்கு கூட்டி வந்தவன் ஜோஸ்வினியை தோள் வளைவில் அணைத்து முதுகை வருடிக் கொடுத்தான். அவனது கை அணைப்பில் இருந்தவள் மெல்ல மெல்ல தெளிந்ததும் தான் இருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்தவள் சரேலென்று அவனிடம் இருந்து விடுபட்டாள்.
“ரிலாக்ஸ் ஜோ. டோன்ட் பானிக்” என்றதும் அவனை பார்த்தவள்
“எனக்கு உன்ன பாத்தா தான் பயமா இருக்கு” என்று பயந்த குரலில் கூறினாள்.
அவளுடைய பயத்தை மனதில் வலியுடன் பார்த்தவன் அவள் சொன்ன சொல்லில் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
“ஜோஸ்வினினினி…” என்று தாடைகள் இறுக அவன் கத்தினான்.
“ஆமா. நீ ஒரு சாடிஸ்ட், அர்ரகன்ட், ரௌடி, பொறுக்கி” என்றவள் சொல்லி கொண்டே போக
“ரௌடி என்ன பண்ணுவானு காட்டட்டுமாடி? பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?” என்றவன் மிக அருகில் நெருங்கி வர அவளது பயமோ உச்ச கட்டத்திற்கு சென்றது.
அதை கவனித்தவன் “ச்சே…” என்று கார் ஸ்டீயரிங்கில் கைகளை ஓங்கி அடித்தவன் சில பல பெருமூச்சுகளை எடுத்து சமன் செய்த பின் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.
அவனது இந்த செய்கையை எதிர்பாராதவளுக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
உள்ளே கூட்டி வந்தவன் அவளுடைய அபிப்ராயத்தையும் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. அவனே அவளுக்கு வேண்டிய உடையை தேர்வு செய்ய இவள் பொம்மை போல் நின்றாள்.
அவளை சிறிதும் கண்டு கொள்ளாதவன் வீட்டிற்கு வரும் வரையும் கூட ஒன்றும் பேசவில்லை.
ஏஞ்சலின் தான் இவர்களின் செய்கையில் குழம்பி நின்றார்.
போகும் போது சந்தோஷமாக சென்றவர்கள் இப்போது இப்படி வரவும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
ஜோஸ்வினி அவர்களது அறையை நோக்கி சென்று விட அபிஷேக் தளர்ந்து போய் சோஃபாவில் அமர்ந்தான்.
“அபி என்னாச்சு?”
“நத்திங் மம்மா. ஜஸ்ட் ஸ்மால் இஸ்யூ தான். நான் ரெஃபிரஷாகிட்டு வரேன்” என்றவன் ரெடியாகி வந்தான்.
அப்போதும் ஜோஸ்வினி வரவில்லை.
“ஜோஸ்வினி எங்க மம்மா?”
“கூப்டேன்பா. பசியில்லயாம்”
‘இடியட்’ என்று திட்டியவன்
“ஜஸ்ட் வெயிட் மம்மா. நான் கூட்டிட்டு வரேன்” என்றவன் அவர்களது அறையை நோக்கி சென்றான்.
இவன் இன்னொரு அறையில் சென்று ரீஃபிரஷானவன் அவள் வந்து விடுவாள் என்று நினைக்க அவளோ எங்கோ வெறித்தபடி கண்களில் இருந்து கண்ணீர் விழ அமர்ந்திருந்தாள்.
அவளது கண்ணீரை பார்த்ததும் அவனது கோபம் பறந்தோடியது.
“செர்ரி” என்று கனிவாக அவளை அழைக்க அவளோ அவனை முறைத்தாள்.
“டிசொல்லே(சாரி) செர்ரி. ப்ளீஸ். சாப்பிட வாங்க”
“நான் எதுக்கு சாப்பிட வரணும்? மாட்டேன்”
“இன்னொரு டைம் என்ன கத்த வைக்காதீங்க. நானும் மனுசன் தான். இப்போ வர்றீங்களா? இல்லையா?” என்று அழுத்தமான குரலில் நிதானமாக அவன் குரல் உயர்த்தாமல் கூறினான்.
அந்த குரலில் பயந்தவள் தன்னையறியாமல் அவனோடு சென்றாள்.
‘உன்கிட்ட சைலண்ட்டா நடந்துக்க கூடாதுன்னு ப்ரூஃப் பண்ற செர்ரி’ என நினைத்தபடியே உட்கார வைத்தவன் அவளுக்கு ஒரு தட்டில் ஏதேதோ எடுத்து போட அவள் புரியாமல் பார்த்தாள்.
“அபிஷேக் என்ன இது?”
“சாலட்”
“டேய் நான் லன்ச் சாப்பிட வந்தேன் டா. நீ என்ன இலை, தலைய குடுக்கற?” என்று முகத்தை சுளித்தாள்.
“இங்க இதான் லஞ்ச்”
“இதுக்கு தான் இவ்வளோ வருத்தி கூப்டியா? போடா” என்றவள் “சாரி ஆன்ட்டி. பசியில்ல” என்று கூறி எழுந்தவளை உட்கார வைத்தவன் கிச்சனை நோக்கி சென்றான்.
அவளும் ஏன்ஜலின் இருப்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்தாள்.
அபிஷேக் உள்ளே சென்றவன் ஒரு பாத்திரத்தில் பேபி கார்னை சிறியதாக கட் பண்ணி தண்ணீரில் போட்டவன் தண்ணீர் கொதி வந்தவுடன் உப்பு போட்டு வேக வைத்தான்.
அதை வடிகட்டி எடுத்து வைத்தவன் அதே போல நூடுல்ஸையும் தண்ணீரில் வேக வைத்தான்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் எண்ணெய், சின்ன பீஸ் பட்டை, கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை கொஞ்சம் அரிசியுடன் வேக வைத்தான். அரிசி எண்பது சதவீத அளவு வெந்தவுடன் அதையும் எடுத்து வைத்தான்.
அரிசியை எடுத்தவுடன் ஃபிளேவருக்காக போட்ட மசாலா ஐட்டங்களை தனியாக எடுத்து வைத்தான்.
நூடுல்ஸூம் இருந்ததால் அரிசியின் அளவு அதை விட கம்மியாகவே எடுத்திருந்தான்.
இதை அனைத்தும் முடித்தவுடன் ஒரு மிக்ஸிங் பௌலில் வேக வைத்த பேபி கார்னுடன் உப்பு போட்டு அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் பெப்பர் பவுடர், மூன்று ஸ்பூன் மைதா, மூன்று ஸ்பூன் கார்ன் ஃபிளவர் மாவு இதையெல்லாம் கலந்து வைத்தவன் பேபி கார்னை மீடியம் ப்ளேவரில் வைத்து கிரிஸ்பியாக வரும் வரை ஃப்ரை செய்தான்.
இப்போது ஒரு பெரிய கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ரெண்டு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு, இரண்டு பச்சை மிளகாயை கீறி போட்டவன் அதனோடே பெரிய வெங்காயை நீள வாக்கில் கட் செய்து வதக்கினான்.
பின் இதனுடன் நீளமாக நறுக்கிய குடை மிளகாயையும், கத்திரிக்காயையும் போட்டவன் லைட்டாக மொறுமொறுப்பாக ( Crenchy) ஆக வரும் வரை வேகமாக வதக்கினான்.
அதனோடே தேவையான அளவு உப்பு, அரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் கிரீன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ் எல்லாவற்றையும் லைட் ஆன ப்ளேமில் வைத்து மிக்ஸ் செய்தான்.
இதனுடன் கார்ன் ஃபிளவர் மாவை ஒரு ஸ்பூனில் எடுத்து அதை தண்ணீரில் கலந்து மிக்ஸ் செய்தவன் அந்த தண்ணீரை இதனுடன் சேர்த்தான்.
பின் இதனுடன் பொறித்து வைத்த பேபி கார்னை கலந்தவன் அதனோடே வேக வைத்த நூடுல்ஸ், சாப்பாட்டுடன் இதனை மிக்ஸ் செய்தான்.
எல்லா வேலையும் முடித்தவுடன் வெங்காய தாளை பொடி பொடியாக கட் செய்தவன் அதனோடு பெப்பர் பவுடரையும் தூவி அதனை கலர்புல்லாக அலங்கரித்தான்.
அனைத்து வேலைகளையும் படபடவென்று செய்து முடித்தவன் அவள் முன் ரெசிபியை வைத்தான்.
அவன் தான் சொன்னவுடனே செய்து தருவான் என எதிர்பாக்காதவள் ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள்.
“என்ன பாக்குறீங்க? சைனீஸ் பிரியாணி. சாப்டுங்க” என அபிஷேக் சொன்னதும் அவள் முகம் பிரகாசமாகியது.
‘பிரியாணியா? என்ன இவன புரிஞ்சுக்கவே முடில. கொஞ்ச நேரம் முன்னாடி அந்நியன் மாதிரி இருந்தான். இப்போ அம்பி மாதிரி செஞ்சி குடுக்கறானே. டேய் உன்ன புரிஞ்சுக்கவே முடிலடா’ என்றவள் அவனையே பார்த்தாள்.
“என்ன ஏன் பாக்குறீங்க. சாப்பிடுங்க”
“தேங்க்ஸ் அபி. இங்க வந்ததுல இருந்து நல்லா சாப்பிடவே முடில” என்றவள் அதனை சுவைத்தவுடன்
“வாவ்… செம டேஸ்ட்” என்று சிலாகித்தாள்.
“அப்படினா அபி எனக்கு டெய்லியும் பிரியாணி செஞ்சு குடுப்பியா?” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
“எதுக்கு டெய்லி பிரியாணி? ஏன் உடம்புல சீக்கிரம் டிசீஸ் வரதுக்கா?”
“அபி”
“நல்லா கேட்டுக்கோங்க ஜோ. வீக்லி ஒன்ஸ் தான் சாப்பிடணும்”
“என்னடா?”
“அது ஓவர் ஸ்பைசஸ் இருக்கு. ப்ளஸ் மீட் போடறதுல இன்னும் உங்களுக்கு ஸ்பைசஸ் ஜாஸ்தி ஆகும். சோ உங்க உடம்புக்கு தான் பிராப்ளம்”
“ஆமா. எதுமே ஓரளவுக்கு தான் சாப்பிடணும். இனி நீங்க என்ன சாப்பிடணும்னு நான் தான் டிசைன் பண்ணுவேன்” என்றவன் சொல்லி கொண்டிருந்த போது அபிஷேக் செல்லுக்கு போன் வந்தது.
போனை எடுத்து கொண்டு வெளியே சென்றவன் சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தான்.
அவன் உள்ளே வந்த போது ஏஞ்சலின் அங்கே இல்லை.
ஜோஸ்வினி ஏதேதோ யோசித்தவள் அவன் உள்ளே வந்ததும்
“நான் ரிஷப்சனுக்கு வரணும்னா ஒரு டீல்”
“என்ன?”
“எனக்கு ஷியாம் எங்க இருக்கானு தெரிஞ்சாகணும்” என்றாள்.
