அந்த காபி ஷாப்பில் ஜோஸ்விதாவுடன் அபிஷேக் அமர்ந்திருந்தான்.
“என்ன சாப்பிடறீங்க ஜோ?”
“நான் ஆர்டர் பண்றதெல்லாம் சாப்பிட்டா உன் பர்ஸ்ல காசு இருக்காதே. என்ன பண்ணலாம்?” என அவள் தீவிரமாக சிந்திப்பது போல சொல்ல அவன் புன்னகைத்தான்.
“ஹலோ என்ன ஸ்மைல்?. நான் அகோர பசியில இருக்கேன். கம்முனு காலேஜ் விட்டவுடனே நான் வீட்டுக்காவது போயிருப்பேன். இப்படி கூட்டிட்டு வந்துட்டு உனக்கு சிரிப்பு வேறயா?” என அவள் கடுப்பாகினாள்.
“உங்கள பாத்தப்பவே பசினு புரிஞ்சுதுங்க ஜோ. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன் சொல்ல திகைத்து போய் பார்த்தாள்.
“என்ன என்ன பாக்குறீங்க?. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுங்க”
“நீயா வந்து தலைய குடுக்கற?. நான் வேணானா சொல்லுவேன்” என்றவள் ஆர்டர் செய்ய அபி அசந்து போய் அவளை பார்த்தான்.
“என்ன இப்படி ஆர்டர் செய்யறேனு பாக்கறியா?. மதியம் எங்க தல வந்து சாப்பிடவே விடல. அதும் நான் ரெப் வேறயா?. அங்க, இங்கனு சுத்திட்டு இருந்தேன்” என்றவள் உணவு வந்ததும் சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருக்க இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை கவனித்தவளோ
“என்ன அபி கண்ணு வைக்கறியா?” என்று கேட்க இல்லை என்று தலையாட்டினான்.
அவள் சாப்பிட்ட வேகத்தில் அவளுக்கு புரையேற தலையை கட்டியவன் தண்ணீரை அவளுக்கு எடுத்து கொடுத்தான்.
“ரிலாக்ஸ் ஜோ. பொறுமையா சாப்பிடுங்க” என்றவன் கனிவுடன் சொல்ல
“ஏன் பக்கி நான் சாப்பிடறத உத்து உத்து பாத்துட்டு இப்போ அட்வைஸ் வேறயா?” என அவள் மாடுலேசனில் அபி திரும்பவும் சிரித்தான்.
“எதுக்கெடுத்தாலும் சிரிச்சே கவுத்துடு. என்ன?” என்று அவன் அதற்கும் புன்னைத்தான்.
‘அடப்பாவி… இவ்ளோ சாப்பிடறாளே… பேருக்காவது ஒரு வார்த்த சாப்பிடுனு சொன்னாளா? நீ ரொம்ப பாவம் அபி’ என்று அவன் மனதிற்குள் யோசித்து கொண்டிருக்க
“ஹலோ மிஸ்டர். புன்னகை மன்னா… இந்தா இத சாப்பிடு”
“வேண்டாங்க ஜோ. நீங்க சாப்பிடுங்க”
“எதுக்கு? எனக்கு வயிறு வலிக்கறதுக்கா? நீ இப்போ சாப்பிடல, நான் டெய்லி உன்ன இங்க கூட்டிட்டு வந்துடுவேன். அப்பறம் நீ தான் பில் கட்டணும்” என அவள் மிரட்டினாள்.
“சோ வாட் ஜோ? உங்களுக்கு எப்போ எங்கே போகணும்னாலும் என்ன கூப்பிடுங்க. நான் ரெடியா இருக்கேன்” என்று சொல்ல அவள் ஆச்சரியமாய் பார்த்தாள்.
“என்ன ஜோ அப்படி பாக்கறீங்க? நிஜமா தான் சொல்றேன்” என்றவன் சொல்ல உடனே
“அப்படியா… அப்டினா உன் போன் நம்பர் கொடுடா. நான் சேவ் பண்ணிக்கறேன்” என்றவள் சொல்ல இருவரும் செல் நம்பர் பரிமாறிக் கொண்டார்கள்.
இவர்கள் கிளம்ப ஆயத்தமாகும் போது அபியை நோக்கி கை ஆட்டியபடி ஒருவன் வந்தான். அவனை பார்த்த அபியும் புன்னகைத்தான்.
“ஹேய் அபி எப்போடா ஃபிரான்ஸ்ல இருந்து வந்த?”
“நான் வந்து 4,5 டேஸ் இருக்கும்டா. இவங்க யாரு?”
“இவங்க நம்ம ஆதுவோட ரிலேஷன்டா” என்றவனை வியப்பாக பார்த்தான் கண்ணன்.
அவனது பார்வையை கவனித்த அபி
“டேய் அப்பறம் சொல்றேன்டா” என்று கண்களில் கெஞ்சுதலுடன் சொல்ல சரி என்று தலையசைத்தவன்
“வாடா. என் ஆஃபிஸ் ரூம் போலாம்” என்று அபியை அழைத்தான்.
“கண்ணா இது உன் ரெஸ்ட்டாரன்ட்டா? வாட் எ சப்ரைஸ்” என்றவன் ஜோஸ்வினியை மனதில் கொண்டு
“நான் இன்னொரு நாளைக்கு வரேன்” என்று சொல்ல அதை கவனித்த ஜோஸ்வினி
“ஏய்… அறிவுஜுவி உன் பிரண்ட் தானே அவங்க?. ரொம்ப நாள் கழிச்சு பாத்ததுல எவ்ளோ ஆசையா பேச கூப்பிடறாங்க. இப்போ என்ன உனக்கு யோசன?”
“அதில்லங்க ஜோ. இப்போ வொர்க் இருக்கு. அதான் இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு சொன்னேன்” என்றவன் சமாளிக்க
“ஒர்க் இருக்குன்னா என்ன ஏன் கூட்டிட்டு வந்த?” என்றவள் கேள்வியில் அபி திருதிருவென விழிக்க கண்ணன் இப்போது சிரித்தான்.
‘ஐயோ… போச்சு. நல்லா மாட்டிகிட்டேன். என்ன வெச்சு செய்வானே’ என்று அவன் மனதில் கவுண்டர் ஓட அதை சரியாக கணித்த கண்ணன்
“மச்சி நீ இப்போ போயிட்டு வாடா. அப்பறம் பேசிக்கலாம்” என்றவன் ஜோஸ்வினியை பார்த்து
“சிஸ்டர் இது என் ரெஸ்ட்டாரென்ட் தான். எப்போ வேணா நீங்க இங்க வரலாம். யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்”
“ப்ரோ நீங்களும் அபியோட எங்க வீட்டுக்கு வாங்க. ஜமாய்ச்சுடலாம்” என்று சொன்னவளை அபிஷேக் யோசனையுடன் பார்த்தான்.
“சரிடா. நாங்க கிளம்பறோம். நீ என் ரெஸ்ட்டாரன்ட்டுக்கு வாடா” என்றவன் தனது கார்டை கொடுக்க இப்போது ஜோஸ்வினி அவனை யோசனையாக பார்த்தாள்.
‘அடப்பாவி. இவன் ரெஸ்ட்டாரென்ட் வெச்சிருக்கானா?. இத அவன் சொல்லவே இல்லயே?’
‘அடியேய் அதுக்கு நீ அவன பேச விட்ருக்கணும்டி. வாய தொறந்தா பிரேக்கே விட மாட்டேங்கிற?’ என அவள் மனசாட்சி குத்த அதை ஒரு தட்டு தட்டி அடக்கியவள்
‘அதுக்காக அவன் சொல்லாம இருப்பானா?. இருடா உனக்கு இன்னைக்கு இருக்கு’ என்று கவுண்டர் கொடுத்தவள் அவனை பாசமாய் பார்க்க அவனோ அந்த பார்வையில் விழி பிதுங்கி நின்றான்.
“சரிடா. நான் போய்ட்டு வரேன்” என்று கிளம்பி செல்ல அவனோடு வந்தவள் அவளை முறைத்துக் கொண்டு வந்தாள்.
அதை கவனித்தபடி வந்தவன் காரை ஸ்டார்ட் செய்தபடி
“ஜோ எதுக்கு என்ன நீங்க முறைக்கறீங்க?”
“அபி நீ எங்கிட்ட ஒரு வார்த்த சொன்னியா ரெஸ்ட்டாரன்ட் வெச்சிருக்கேனு” என அவள் கோபமான குரலில் கேட்டாள்.
“உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லங்க ஜோ. நம்ம மேரேஜ்ல பாத்ததுக்கப்புறம் உங்கள இப்போ தானே பாக்கறேன். அதான் ஜோ” என்றவன்
“எனக்கு இங்கயும், பாண்டிச்சேரிலயும் ஒரு ரெஸ்ட்டாரன்ட் இருக்கு. தென் பிரான்ஸ்ல 3 ரெஸ்ட்டாரென்ட் இருக்கு” என்றவன் சாதாரணமாக சொல்ல அவள் வியப்பாய் அவனை பார்த்தாள்.
“என்னது?” என்று விழி விரித்தவள்
“என்ன நீ இவ்ளோ ரெஸ்ட்டாரென்ட் வெச்சிகிட்டு கொஞ்சம் கூட பந்தா காட்டாம இருக்கற?” என்று ஆச்சரியம் பொங்க கேட்க அதில் புன்னகைத்தவன்
“நான் என் வொர்க் செய்யறத சொல்றதில என்ன பந்தா இருக்குங்க ஜோ?” என்றவனை விசித்திரமாக பார்த்தவள் அவனை பற்றி விசாரித்தாள்.
“என்ன முடிச்சிருக்க?”
“நான் செஃப் ஜோ அன்ட் எம்பிஏ ஆல்ஸோ கம்ப்ளீட்டேட்” என்று சொல்ல அவள் யோசனையாய் அபியை பார்த்தாள்.
“என்ன ஜோ யோசிக்கறீங்க?”
“இல்ல. நீ எவ்ளோ பெரிய ஆளு. உன்னய ரொம்ப சாதாரணமா ட்ரீட் பண்றேனோ?”
“அன்னைக்கு மேரேஜ்ல கூட உங்கள வேலைக்காரன் மாதிரி தானே பிஹேவ் பண்ணேன். உங்கள ரொம்ப ஹர்ட் பண்ணிட்டானோ?. ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்றவள் உணர்ந்து மன்னிப்பு கேட்க அதில் பதறியவன்
“ஹே… ஜோ என்ன நீங்க இப்படி பேசறீங்க?. எனக்கு உங்க மிஸ்டர். ஸ்மைல், குருவே, பக்கி, பன்னாடை, எரும, மாடு… நீங்க இப்டி பேசறது தான் எனக்கு பிடிக்கும்”
“என்ன நீங்க சாரி கேக்கறீங்க?. நான் உங்க பிரண்டு இல்லையா?” என அவன் வருத்தமாக கேட்க
“அச்சோ… அப்படி இல்லங்க”
“ஜோ உங்களுக்கு இந்த மரியாத கொடுக்கறதெல்லாம் செட்டாகுது. நார்மலா பேசுங்க” என்று சொல்ல அவள் யோசனையாய் அபியை பார்த்தாள்.
‘இவன் நல்லவிதமா சொல்றானா?. இல்ல நம்மள கலாய்க்கிறானா’
ஜோஸ்வினி அவனையே பார்த்தபடி இருக்க அதில் புன்னகைத்தவன்
“ஜோ உங்க ஃபார்முக்கு வாங்க. உங்களுக்கு இந்த ஃபேஸ் செட்டாகவே இல்ல” என்று கலாய்க்க
“பார்டா அம்மாஞ்சி கூட கலாய்க்குது” என்றவள் சொல்ல அபிஷேக் அந்த வார்த்தை புரியாமல்
“என்ன ஜோ சொல்றீங்க?” என கேட்க
“நீங்க வெரி குட் பாய்னு சொன்னேன்” என்றவள் சிரிக்க அவனும் சந்தோஷமாக புன்னகைக்க இவளுக்கோ உள்ளுக்குள் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர அடக்கியபடி அமைதியாக வந்தாள்.
அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும் போது விவேக்கை பார்த்தவள்
“கார நிறுத்து அபி. என் பிரண்ட் நிக்கிறான். என்னனு பாக்கறேன்” என சொன்னவள் விவேக்கை நோக்கி சென்றாள்.
“டேய் இங்க என்னடா பண்ணிட்டிருக்க?”
“அம்மா ஒரு ஃபங்ஷன் போகணும். சீக்கிரம் வான்னு கூப்பிட்டாங்க. நான் காலேஜ்ல இருந்து கிளம்பி வந்தா வரப்பவே வண்டி பஞ்சர். என்ன பண்றதுனு தெரியாம யோசிட்டு இருந்தேன்”
“ஏன்டா உன் கேங்க கூப்பிட வேண்டியது தானே?”
“அவனுங்க வீட்டுக்கு ரீச் ஆகிட்டானுங்க. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன்”
“ஓகே. வண்டிய லாக் பண்ணிட்டு வா. ஃபிரண்ட் இருக்கான். கார்ல போலாம் வா” என்றவள் கூப்பிட விவேக் அவளோடு வந்தான்.
காரினுள் வந்த விவேக் அபிஷேக் புதிதாக இருப்பதால் யாரென்பது போல் ஜோஸ்வினியை பார்த்தான்.
“நம்ம ஆது இருக்கான்ல. அவனோட ஃபிரண்ட்” என்றவன் சொல்ல
“ஹாய்” என்று விவேக் சொல்ல அபிஷேக்கும் புன்னகை செய்தான்.
“அபி இவன் என்னோட ஃபிரண்ட் விவேக். நம்ம வீட்டு பக்கத்துல இருக்கான். என்னோட தளபதி. நண்பேன்டா” என்றவள் சொல்ல
“ப்ரோ அப்படி எல்லாம் இல்ல. நான் பாத்துக்குவேனு கொஞ்சம் இவ வீட்ல தைரியமா இருப்பாங்க. அவ்ளோ தான்” என்றவன்
“ஆனா ஷியாமுக்கு மட்டும் தெரிஞ்சது?”
“ஏன் ஷியாமுக்கு தெரிஞ்சா என்ன?” என்று அபிஷேக் கேட்க
“அவன் எங்க ரெண்டு பேரையும் சேத்து வெச்சு ஓட்டறான் ப்ரோ” என்றவன்
“லவ் பண்ற பொண்ண பத்தி கொஞ்சம் கூட புரியாம அவன் என்ன லவ் பண்றானு தெரில?” என்று விவேக் சொல்ல அபிஷேக் ஜோஸ்வினியை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“என்ன ஜோ இப்படி சொல்றாங்க?. நீங்க இது பத்தி ஒன்னும் அவங்க கிட்ட சண்ட போட்டதல்லயா?” என விசாரித்தான்.
“அவன் என் மேல இருக்கற லவ்னால தானே அப்படி பண்றான். அதனால என்ன?”
“ஜோ உனக்கு புரியலயா லூசு?. அவன் உன்ன சந்தேகப்படற மாதிரி கேக்கறானு” என்று கேட்க ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தவள் பின் சுதாரித்து
“ச்சே… அவன் அந்த மாதிரி கிடையாது” என அவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.
“அப்டியா… இப்போ நீ எங்க கூட வந்தத நாளைக்கு அவன்கிட்ட சொல்லு. அவன் உன்ன எப்படி திட்டறானு பாக்கலாம்” என்றவன் சொல்ல இவர்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் விஷயத்தின் விபரீதத்தை கேட்ட அபிஷேக் அடுத்து என்ன செய்வதென்று யோசனையில் ஆழ்ந்தான்.
