அபிஷேக் கார் ஓட்டிக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்து ஆதவன் பேசிக் கொண்டு வந்தான்.
“மச்சி நாளைக்கு நிகில் வீட்டுக்கு போகலாமா?”
“இல்லைடா. நான் வரல”
“வேற எங்கேயாவது அவுட்டிங் போலாமா?”
“இல்லைடா. நம்ம ரெஸ்ட்டாரன்ட்டலயே நிறைய ஒர்க் இருக்கு. நான் வரல”
“என்னடா ஒர்க் உனக்கு?. காரைக்குடி வந்தாலும் வந்த. அங்க இருக்கற டிஷ் எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு ஒவ்வொண்ணும் ரெஸ்ட்டாரனட்ல எக்ஸ்டென்ட் பண்ணிட்டு தானே இருக்க?. எப்போ பாத்தாலும் இதே மைன்ட்டோட தான் இருப்பியா?” என ஆதவன் கோபமாக கத்தினான்.
“டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. வீணா டென்ஷன் ஆகாத”
“பின்ன என்னடா?. நான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கற?. ஏதோ யோசிச்சிட்டே இருக்க இந்த டூ டேஸா?” என கேட்க அபிஷேக் திடுக்கிட்டான்.
‘ஐய்யய்யோ… இவன் கண்டுபிடிச்சிட்டான் போலயே… ஏன்டா டேய் நான் என் செர்ரிய தேடறேன்னா சொல்ல முடியும்?’ என உள்ளுக்குள் புலம்பியவன் வெளியே சிரித்து வைத்தான்.
“மச்சி நத்திங்டா. நீ டென்சன் ஆகாத” என்று சொன்னவன் தன்னை அறியாமல் வண்டியை நிறுத்தினான்.
“மச்சி ஏன்டா வண்டிய நிறுத்தின?” என ஆதவன் கேட்க அங்கே அபிஷேக் தான் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.
‘இவன் அந்த பீச்ல பாத்த பையன் தானே?. இங்கயும் இருக்கான். யார் இவன்?’ என்றவன் சிந்திக்க தொடங்கினான்.
அங்கே ஷியாமும், ஜோஸ்வினியும் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஜோ இங்க என்ன நின்னிட்டிருக்க?”
“புரோஜக்ட் பத்தி ஐடியா கேக்கலாம்னு வந்தோம். நீ எங்க இங்க?”
“நம்ம மிதுன் கூட வந்தேன் ஜோ. அவனும் இங்க தான் பண்றதா ஐடியால இருக்கான்”
“ஓ… அப்படினா ஓகே” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆதவன் அவள் அருகே வந்தான்.
“ஜோ இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்று ஆதவன் கேட்க அவனை பார்த்ததும் அவளது முகம் மலர்ந்தது.
“ஹே… ஆது… நீ எங்கடா இங்க?. ப்ராஜக்ட்டுக்காக வந்தேன். பஸ்க்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்றவள் சொல்ல ஷியாமை யோசனையாக பார்த்தவன்
“யார் இது ஜோ?”
“லவ்வர்” என சொல்ல அவளது திடீர் பதிலில் இரண்டு பேரும் அதிர்ந்து போய் நின்றார்கள்.
ஷ்யாம் அப்படி அவள் சொல்வாள் என எதிர்பார்க்கவில்லை. ஷியாமைப் பார்த்த ஆதவனுக்கோ ஏதோ சரியாக இல்லாதது போல் தோன்றியது.
அவனிடம் ஏதும் பேசாதவன்
“வா ஜோ. நான் ட்ராப் பண்றேன்” என்றவன் கூட்டி செல்ல ஷ்யாமின் முகம் அப்படியே மாறி போனது.
அதை கவனித்தபடியே அவளை கூட்டி சென்றவன் காரினுள் சென்று அமர உள்ளே அபிஷேக்கை பார்த்த ஜோஸ்வினி சந்தோஷத்தில் கத்தினாள்.
“ஹேய்… மிஸ்டர்.ஸ்மைல் நீ எங்க இங்க?” என்று அவள் முகம் மலர்ந்ததில் இவனது அகமும் மலர்ந்தது
“வாங்க ஜோஸ்வினி. எப்டி இருக்கீங்க?” என அவனும் புன்னகையுடன் வினவினான்.
“ஜோஸ்வினி யார் அவன்?” என்று ஆதவன் விசாரித்தான்.
“யார கேக்கற எரும?”
“இப்போ பேசிட்டு இருந்தியே?. அவன் யாரு?”
“டேய் உனக்கென்ன செவுட்டு மெஷின் வாங்கணுமா தடிமாடு?. லவ்வர்னு தெளிவா தானே சொன்னேன்” என்றவள் சொன்னாள். அந்த பதில் அபிஷேக்கை உலுக்க அவன் கைகளில் கார் தடுமாறி நின்றது.
“அபி என்னடா?. என்னாச்சு?”
“அபிஷேக்” என்று இருவரும் மாறி மாறி கேட்க அபிஷேக் தான் கேட்ட விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்தான்.
‘அவன் லவ்வரா?. அப்டினா நான் யாரு?’ என்றொரு கேள்வி மனதில் எழ அபிஷேக் சிலை போல் அமர்ந்தான்.
‘நான் இவங்கள லவ் பண்ணறேனா?’
அவன் மனம் உணர்ந்த விஷயத்தை அவனுக்கு எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
இவனை பார்த்த இருவரும் பயந்து போனார்கள்.
“அபி… டேய் என்னாச்சு?” என்று ஆதவன் உலுக்க அதில் தன்னை மீட்டுக் கொண்டவன்
“ஒண்ணும் இல்லடா”
“அபி ஆர் யூ ஓகே?” என்று வினவ
“ஒண்ணுமில்லங்க ஜோஸ்வினி. சாரி. ஏதோ திங்கிங்” என்று சமாளிக்க ஆதவன் யோசனையாய் பார்த்தான்.
“டேய் என்னாச்சுடா?” என்று ஆதவன் திரும்ப கேட்க
“ஒண்ணும் இல்ல மச்சான். டோன்ட் வொர்ரி” என்று வலுக்கட்டாயமாக தனது முகத்தில் புன்னகையை வரவழைத்து பேசினான்.
அதில் சமாதானம் அடைந்தவன் மீண்டும் ஜோஸ்வினியிடம் பேச ஆரம்பித்தான்.
“ஜோ… எனக்கென்னவோ அவன பாத்த நல்ல விதமாக தெரில” என்று ஆதவன் தெரிவிக்க அபிஷேக்கும் அதே போல ஏற்கனவே தோன்றியது. இருந்தும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
“ஏய் மாடு அண்ணனா ஹெல்ப் பண்ணுவேனு பாத்தா என்னடா நீ அப்பாக்கு மேல இருப்ப போல?”
“இல்லடா. அவன் உன்ன கூட்டிட்டு வரப்ப கூட முறைச்சுப் பார்த்தான்”
“டேய் எரும அவன் பாக்கறதே அப்படி தான். நீ தப்பா சொல்லாத” என்றவள் சொல்ல ஏதோ யோசித்தவன்
“ஓகே. லீவ் இட். இத பத்தி இன்னொரு நாள் பேசலாம். நீ இங்க எங்க?”
“இன்னும் ஒன் மந்த்ல நெக்ஸ்ட் செமஸ்டர் ஸ்டார்ட் ஆக போகுது. அதான் புரோஜக்ட்டுக்காக வந்தேன்”
“ஓகே. என்ன சொன்னாங்க?”
“வீக்லி டூ டேஸ் வர சொன்னாங்க. நம்ம எப்படியும் கட் அடிக்கறதுல பாதி கிளாஸ் போய்டும்” என்று சிரிக்க
“ஏய் வாலு… உனக்கு ஓவர் கொழுப்பு”
“போவியா?. இப்போ என்ஜாய் பண்ணாம எப்போ என்ஜாய் பண்றதாம்?” என்று அவர்கள் பேசி கொண்டு வர வழக்கம் போல அபிஷேக் அவனை மீறி புன்னகைத்தான்.
“ஜோ நீ ஹையர் ஸ்டடீஸ் பண்றதா இருந்தா அபி ஐடியா கொடுப்பான். அவனுக்கு என்ன விட டீடெய்லஸ் தெரியும்” என்றவன் சொன்னான்.
“சரிடா” என்று சொன்னவள்
“மிஸ்டர். ஸ்மைல் என்ன மேன் அமைதியா வர?. நாங்க இவ்வளோ பேசறோம். என்ன என்னனு கேக்கல பாருடா. இவனும் என்கிட்ட மட்டுமே பேசறான்” என்றவள் சொன்னதில் அபிஷேக் வியப்புடன் அவளை பார்த்தான்.
‘ஓ… காட்… எப்டி இப்படி எல்லாத்தையும் நோட் பண்றாங்க?’ என்றவன் யோசித்தான்.
“குருவே என்ன நீங்க இப்படி கண்ண விரிக்கறீங்க?”
“ஒண்ணுமில்லங்க” என்றவன் சொல்ல இப்போது ஜோஸ்வினி கடுப்பானாள்.
“டேய் உன் ஃபிரண்ட ‘ங்க’ போடறத நிறுத்த சொல்லு. எனக்கென்னமோ அவங்க பேசினாலே வயசானா ஃபீல் வருது” என அவள் திட்ட ஆதவனோ சிரித்தான்.
“டேய் பக்கி கம்முனு இருடா” என்றபடி ஆதவனை அடிக்க அபிஷேக் புன்னகையுடன் அவளை பார்த்தவன்
“அப்படி இல்லங்க ஜோ. நான் கொஞ்சம் அமைதி. அதுமில்லாம நான் இப்டியே பேசி பழகிட்டேன்” என்றவன் சொல்ல அவள் தலையிலடித்து கொண்டாள்.
“ஜோஸ்வினி உங்க வீடு எங்க இருக்கு?” என கேட்க ஆதவன் வழி சொன்னான்.
அதன்படி ஜோஸ்வினியை அவள் வீட்டில் விட்டவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.
போகும் போது அபிஷேக் ஆதவனை ஓட்ட சொன்னவன் மனமோ ஒரு நிலையில்லாமல் தவித்தது.
அதை கவனித்த ஆதவன்
“என்னாச்சுடா?. திடீர்னு சைலண்ட் ஆயிட்ட?”
“இல்லடா. சும்மா ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்” என்று சமாளித்தான்.
அந்த திருமணத்தில் ஜோஸ்வினியை பார்த்தவனுக்கு அவளுடைய ஒவ்வொரு செய்கையையும் சிரிப்பை வரவழைத்தது. அதே சமயம் அபிஷேக் ஜோஸ்வினியை ஆழ்ந்து ரசித்தான்.
கல்யாணம் முடிந்தும் அவனுக்கு அவ்வப்போது அவள் ஞாபகம் வரும். உண்மையில் அவன் அவளை நினைவுகளில் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டான். அவளோடு பேசவோ, பழகவோ முனையவில்லை.
இடையில் தனது வேலை காரணமாக ஒரு மாதம் ஃபிரான்ஸ் சென்று வந்தான்.
இந்தியாவில் இருந்த வரை அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் ஃப்ரான்ஸ் சென்ற பின் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. ஏதோ தனது வாழ்க்கையில் குறைவது போல தோன்றிய உணர்வில் என்னவென்று அறியாமல் திணறியவனின் மனமோ சீக்கிரம் இந்தியா போ என கட்டளையிட அவன் தனது வேலைகளை அங்கே முடித்தவுடன் சிறிதும் தாமதிக்காது இந்தியா கிளம்பி விட்டான்.
இந்தியா வந்தவுடன் ஆதவனிடம் மெல்ல பேச்சு கொடுத்தவன் ஜோஸ்வினியை பற்றிய தகவல்களை சேகரித்தான்.
அதன்படி மாலை நேரத்தில் அவள் கல்லூரிக்கு செல்பவன் கல்லூரியில் அவள் தோழிகளுடன் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருந்து அவளை பார்வையால் வருடிக் கொண்டிருப்பான். அதுவே அவனுக்கு புதிய புத்துணர்ச்சியைத் கொடுக்க அதற்கு மேல் எதுவும் அவன் யோசிக்கவில்லை.
இது ஏறக்குறைய ஒரு மாதம் தொடர்ந்தது. இதற்கிடையில் 2,3 நாட்கள் ஜோஸ்வினி அவன் கண்களில் படாததில் அவளுக்கு ஏதேனும் உடம்பு சரியில்லையோ என்று அவன் யோசனையில் இருந்ததில் ஆதவன் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாமல் இருந்தான்.
அந்த சமயத்தில் தான் அவன் ஜோஸ்வினியைப் பார்த்தது.
எதிர்பாராமல் அவளை பார்த்ததில் அபிஷேக்கின் மனம் இறக்கைக் கட்டி பறந்தது.
ஆனால் அதே சமயம் ஆதவனின் பேச்சில் அபிஷேக்கின் மனம் சுக்கு நூறாக உடைந்தது.
தான் உணர்ந்த விஷயத்தை நினைத்து அவன் சந்தோஷப்படுவதா அல்லது தான் கேள்விப்பட்ட விஷயத்தை ஜீரணிப்பதா என இரண்டுக்கும் இடையில் அவன் அல்லாடினான்.
அபிஷேக்கை கவனித்த ஆதவன் தனது வீட்டில் வண்டியை நிறுத்தினான். அப்போதும் அவன் ஏதோ யோசனையில் இருக்க “அபி” என்றவன் தோள் மேல் கை வைக்க
“என்னடா?” என்று கேட்டான்.
“ஏதாவது உடம்பு சரியில்லயாடா?” என்றவன் விசாரிக்க அபிஷேக் என்னவென்று புரியாமல் அவனை பார்த்தான்.
“என்னடா ரொம்ப டல்லாயிட்டே?” என்றவன் கேக்க அவனையே கண் கொட்டாமல் பார்த்தவன் மனமோ அவனிடம் கதற துடித்தது.
ஆனால் அறிவோ அதை செய்யாதே என வலியுறுத்த அதில் சுதாரித்தவன் தனது அழகான புன்னகையால் நண்பனை தேற்றினான்.
“நத்திங்டா. ஹெட் ஏக் தான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்” என்று சொன்னவன் மேற்கொண்டு அவனிடம் போசாமல் தனிமையை நாடி சென்றான்.
தனது அறைக்கு வந்தவன் தனது சக்தி எல்லாம் தளர்ந்தது போல உட்கார்ந்தான்.
இந்த ஓரிரு மணி நேரங்களில் தான் அவளை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறோம் என்று அவன் உணர்ந்திருந்தான்.
‘ஏன்டா உனக்கு அறிவில்ல?. அவங்க ஞாபகம் வந்தா நீ போய் பாப்பியா?’
‘ஆமா பாப்பேன்’
‘ஏன் ஃபிரான்ஸ் போனப்ப அவங்கள அவ்ளோ தேடின?’
‘இதென்ன கேள்வி?. என் உயிர நான் தேடத் தானே செய்வேன்’ என்ற பதிலில் திகைத்தான்.
‘என்னது உயிரா?. இப்போ நீ அவள லவ் பண்ணக் கூட முடியாத ஸ்டேஜ்ல இருக்க?’
‘அதனால் என்ன?. நான் லவ் பண்ணக் கூடாதுனு நீ எப்படி சொல்லலாம்?. அவ என் ஜோஸ்வினி. என்னோட செர்ரி’
‘டேய் மனசாட்சியோட பேசுடா. இனி இத மைன்ட்ல வைச்சிட்டு அவ கூட எப்படி பழகுவ?’
‘அவ கூட லைஃப் லாங் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். முடில. சோ இங்க இருக்கற வரையும் அவளோட டைம் ஸ்பென்ட் பண்ணி என்னோட நினைவுகள்ல அவள பூட்டி வைக்கறேன்’
‘இத பார்டா… லவ் வந்தவுடனே சார்க்கு கவிதைலா வருது’
இப்படியாக அவன் மனசாட்சி மாறி மாறி கேள்வி கேட்க பெரும் போராட்டத்திற்கு பிறகு அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
‘எனக்கு அவளோட சந்தோஷம் தான் முக்கியம். அவளோட சந்தோஷத்துக்காக நான் என்ன வேணா பண்ணுவேன். சோ அவ யார் கூட இருந்தா ஹேப்பியா இருப்பாளோ அதுக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன்’
‘அந்த பையனை பத்தி விசாரிச்சு அவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணனும்’ என அவன் தெளிவாக தப்பான முடிவை எடுக்க விதியோ அவனை பார்த்து சிரித்தது.
