இதயம் 25

 

நேத்ராவும், கதிரும் நீதிமன்றத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர்.

நேத்ரா பதட்டத்துடன் அவன் கைகளைப் பிடித்தபடியே இருந்தாள்.

நீதிமன்றம் அருகில் வர இன்னமும் அவனை நெருங்கி அமர்ந்தவளை கவனித்தவன் காரை நிறுத்திவிட்டு அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் அவளை ஊடுருவுவது போல் பார்த்து

“பேபி நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாம ஃபேஸ் பண்ணனும். ஓகேவா?” என்று ஆழ்ந்த குரலில் கூறியவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட அவளுக்கு யானை பலம் வந்தது போல இருந்தது.

“கண்டிப்பாடா. நான் ஃபேஸ் பண்ணுவேன்” எனத் தெளிவான குரலில் சொல்ல அவன் டன் என்பது போலக் கட்டை விரலை காட்டினான்.

அவர்கள் காரை நிறுத்திவிட்டு இறங்க அங்கே சந்திரனின் குடும்பம் நின்றிருந்தது.

மைதிலி, சரவணன், சசிகலா மற்றும் சந்திரன் ஆகியோர் நின்றிருக்க அவர்களைப் பார்த்ததும் அவளுக்கு உதறல் எடுக்க அவளை உணர்ந்தவன் போல் கதிர் கெட்டியாக அவள் கையைப் பிடித்துக் கொள்ள அதைச் சந்திரனின் குடும்பம் அருவருப்பாகப் பார்த்தது.

அவர்கள் பார்வையை எண்ணி கூசியவள் அங்கிருந்து நகர எத்தனிக்க “பேபி எங்க போற?”

“அந்தப் பக்கம் போலாம் கதிர்”

“பேபி இங்கயே நில்லு”

“இல்ல கதிர். நீ வா”

“நேத்ரா நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்” என இறுகிய குரலில் கூற அவன் சொல்லை தட்ட முடியாமல் அங்கேயே நின்றாள்.

சிறிது நேரத்தில் நேத்ராவையும், சந்திரனையும் கூப்பிட கதிர் நேத்ராவின் கையை ஆறுதலாக அழுத்தி தைரியம் சொல்லி அனுப்ப நேத்ரா நிம்மதியாக உணர்ந்தாள்.

அவளை விசாரிக்க வந்த வக்கீல்,

“உங்க பேர் என்ன?”

“நேத்ரா”

சந்திரனை காட்டி “இவங்க உங்க மேல சொன்ன குற்றச்சாட்டு உண்மையா?”

“இல்லை” என்று நேத்ரா சொல்ல

“அவ பொய் சொல்றா சார்” என்று சந்திரன் சொல்ல நேத்ரா அதிர்ந்தாள்.

“அவ அடிக்கடி அவங்க அம்மா வீட்டுக்குப் போய்டுவா சார். போனா அவ்ளோ சீக்கிரம் வரமாட்டா”

“எந்த வேலை சொல்லி கொடுத்தாலும் கரெக்டா செய்ய மாட்டா. அவ்ளோ ஏன் ஒரு டீ கூட ஒழுங்கா போட தெரியாது” என அவன் குற்றச்சாட்டை அடுக்கு நேத்ரா அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“அவளுக்கு உடம்பு ஃபுல்லா விஷம் சார். இல்லேனா பாட்டிமாக்கு சாமி கும்பிடறேனு போய்ட்டு அங்கயே இருப்பாளா?”

“சந்திரன் நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. என்னமா இவரு சொல்ற குற்றச்சாட்டெல்லாம் உண்மையா? பயப்படாம பதில் சொல்லுமா” எனச் சொல்ல அதில் கொஞ்சம் தைரியம் அடைந்தவள்…

“சார் நான் அம்மா வீட்டுக்கு அடிக்கடி எல்லாம் போக மாட்டேன். அப்படியே போனாலும் 2, 3 டேய்ஸ்ல வந்திடுவேன்”

“நான் அப்படி ஒண்ணும் வேலை செய்யாம இல்ல. எல்லா வேலையும் செய்வேன். இவங்க தான் என்ன ரத்தம் வர அளவு அடிச்சாங்க” என்க சந்திரன் அவசரமாக

“சார் அவ எங்கேயோ போய்ச் சுவத்துல முட்டினதுக்கு நாங்க ரத்தம் வர அளவுக்கு அடிச்சோமா? இது அநியாயம் சார்”

“சார் என்ன அவங்க அம்மா தோசை கரண்டிலயே அடிச்சு என்னோட டிரஸ் பூரா பிளட் ஆயிடுச்சு” எனச் சொல்ல இப்போது சந்திரனோ,

“இவ வந்ததுல இருந்து எங்க ஃபேமிலியோட நிம்மதியே போய்டுச்சு” என அவன் கண் கலங்க சொல்ல நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.

‘டேய் இத்தன நாள்ல இன்னைக்குத் தான்டா உன்னோட நடிப்ப முழுசா பார்க்கறேன்’ என்று மனது அவளது மனம் கவுண்டர் கொடுக்க…

‘அடியேய்… ஏதாவது பதில் சொல்லு’ என்று அவளது இன்னொரு மனம் எடுத்துரைக்க

“சார் இவங்க சொல்றதெல்லாம் பொய்” என்று ஆரம்பிக்க இருவரையும் அமைதிப்படுத்தியவர் அடுத்த வாய்தாவுக்கு வர சொல்ல சந்திரன் நேத்ராவை முறைத்தபடி வெளியே வந்தான்.

நேத்ரா வெளியே வர கதிர் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

“பேபி என்னாச்சு?” எனக் கேட்க

“நெக்ஸ்ட் மன்த் வர சொல்லிருக்காங்க” என அவர்கள் பேசி கொண்டிருக்க அவர்களை நோக்கி சந்திரன் குடும்பத்தினர் வந்தனர்.

நேத்ரா திடுக்கிட்டு கதிரின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சந்திரன் அவளைக் கண்களால் கோபத்துடன் பார்த்தான்.

“ஏய் என்னடி நினைச்சிட்டிருக்க? ரொம்ப ஓவரா போற?” எனத் திட்ட

“மிஸ்டர் சந்திரன் என்ன தேவையில்லாம பேசிட்டிருக்கீங்க?” என்று கதிர் கேட்க

“டேய் உன்னை…” என்று ஆத்திரத்துடன் அவன் மேல் சந்திரன் பாய்ந்தான்.

“ஏன்டா என் பெரியப்பா வீட்டுக்கு வந்து அடிச்ச அன்னைக்கே உன்னை ஒரு வழி பண்ணிருக்கணும். அப்படியே எஸ்கேப் ஆகிட்டான்” என்று அடிக்க வர நேத்ரா பதறி போய் அவனைத் தடுத்தாள்.

“நிறுத்துங்க சந்திரன். அடிக்காதீங்க”

“ஏய் பேசாதடி. நீ ரொம்ப ஒழுங்கா? உடனே இன்னொரு ஆள பிடிச்சிட்ட” என அசிங்கமாகப் பேச

“டேய்…” என்று இப்போது கதிர் ஆத்திரத்துடன் அடிக்க ஆரம்பித்தான்.

“கதிர் நிறுத்துங்க”

“நீ சும்மாரு பேபி. இவனை எல்லாம் அடிச்சா தான் அடங்குவான்” என அவனை அடிக்க

“ஏய் என்ன திமிருடி உனக்கு?” என மைதிலி அவள் தலைமுடியை பிடித்து இழுக்க

“கதிர்ர்ர்ர்” என நேத்ரா கதற அவளது கத்தலில் பதறி வந்தவன் மைதிலியை அடிக்க அவள் பொறி கலங்கி நின்றாள்.

“டேய்… என்னடா என் ஒய்ஃப் மேலேயே கை வைக்கிறியா?” எனச் சரவணன் அடிக்க வர கதிர் அவன் முகத்தில் ஓங்கி குத்த அவன் தடுமாறி போய் விழுந்தான்.

“டாடி” என்று சசி ஓடி வந்தவள்

“டேய் என்ன திமிரு இருந்தா அப்பாவ அடிப்ப?” எனக் கத்தியவள் அவன் முகத்தில் தெரிந்த ரௌத்ரத்தில் பின்னோக்கி நகர்ந்தாள்.

“ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. யாராவது இவ மேல கை வெச்சா கொலை பண்ண கூடத் தயங்க மாட்டேன்” எனக் கர்ஜித்தவன் அவளிடம் திரும்பி,

“வா பேபி. போலாம்” என மென்மையாக அழைக்க அவளோ சிலை போல் அவனைப் பார்த்தாள்.

“என்னடா பார்க்குற? வாடா” எனக் கூப்பிட அதில் சுதாரித்தவள் சந்திரன் குடும்பத்தினரிடம் செல்ல…

“பேபி எங்க போறடா?” எனக் கதிர் பதறி போய்ப் பின்னே வர

“டேய் நீ என்ன சொன்ன? நீ என் ஹஸ்பெண்ட்டா? நல்லா கேட்டுக்கோ. இவர் தான் என் ஹஸ்பெண்ட். இவர தான் லவ் பண்றேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா” என அழுத்தமாகக் கூற அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் சிலை போல நின்றனர் கதிர் உட்பட…

“வாங்க கதிர். போலாம்” என நேத்ரா அவன் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல கதிர் அவள் கைகளில் பொம்மை போல வந்தான்.

காரினுள் வந்தும் அவன் ஸ்டார்ட் செய்யாமல் இருக்க

“கதிர் என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல” என்று சொல்ல அப்போது தான் நேத்ரா அவனை முழுவதுமாகப் பார்த்தாள்.

“ஐயோ கதிர் ரத்தம் வருது” என அவன் நெற்றியை பார்த்து பதறி போய்த் துடிக்க…

“ஒண்ணும் இல்லடா. சரியா போய்டும்”

“ச்சே நான் மட்டும் வந்திருக்கணும். சாரி கதிர்”

“பேபி ஒண்ணும் இல்லடா. மருந்து போட்டா சரியா போய்டும்” என்றவன்

“எப்படி பேபி இவன் கூட வாழ்ந்த? இவ்ளோ கேவலமானவானா இருக்கான்” என்று கதிர் கேட்க அவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் வேகமாக இறங்கியது.

அதைக் கவனித்த கதிர் பதறினான்.

“பேபி ப்ளீஸ் அழாத” எனச் சொல்ல அவளோ அவன் மடியில் படுத்து கதற ஆரம்பித்தாள்.

“ஒண்ணும் இல்லடா” என்று அவன் தலையை வருடி கொடுத்தபடியே

“பேபி இப்போ எதுக்குடா தேவையில்லாம அழற? நான் இருக்கேன்ல. பார்த்துக்கறேன்” எனச் சொல்ல அவள் பதறி போய் எழுந்தாள்.

“இல்ல. வேண்டாம். அவன் உன்னை ஏதாவது பண்ணிடுவான்”

“அவன் என்ன ஏதாவது பண்ணினா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியும்” என இறுக்கமான குரலில் கூற

“கதிர் என்னால உனக்குத் தேவையில்லாம பிரச்சனை? என் ஃபிரண்ட்ஷிப்பே வேண்டாம்” எனச் சொல்லியவளை அவன் விசித்திரமாகப் பார்த்தான்.

‘இப்போ தான் நான் அவளோட ஹஸ்பெண்ட்னு சொல்லிட்டு வந்தா. இப்போ என்னனா ஃபிரண்ட்ஷிப்பே வேண்டாங்கறா’ என அவன் யோசிக்க

“கதிர் என்ன யோசிக்கற?” என நேத்ரா கேட்க அவனோ சீரியஸாக

“இன்னும் இந்த அழுகாச்சி காவியத்த எவ்ளோ நேரம் பார்க்கணும்னு யோசிக்கறேன்” எனக் கூற ஒன்றும் புரியாமல் விழித்தவள் பின்பு…

“டேய் உன்ன…” என்று அடிக்க ஆரம்பிக்க

“ஆ… ராட்சசி வலிக்குதுடி” என அவன் முகம் சுளிக்க அவளோ,

“ஐயோ… சாரி கதிர்… எங்க கதிர்?” எனப் பதற அவனோ சிரிப்பை அடக்கியபடி அவளைப் பார்க்க அதைக் கவனித்தவள்…

“பிராடு, பக்கி, எரும மாடு” என அடிக்க அவன் சிரித்தபடி அவளிடம் அடி வாங்கியவன்

“இப்படியே சிரிச்சிட்டே இருடா. அது தான் இந்தக் கண்ணழகிக்கு அழகு” என அவன் வாஞ்சையுடன் கூற

“அது யார் உன் கண்ணழகி?” என வியப்பாகக் கேட்க

“என் கண்ணம்மா தான்” எனப் புன்னகை சிந்தியபடியே சொல்ல

“டேய் என்னடா சொல்ற? யாருடா உன் கண்ணம்மா? ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல ஒரு குரூப் கலாய்ச்சிட்டே இருக்கு. இவன் வேற” எனச் சொல்ல அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

“டேய் எதுனாலும் சொல்லிட்டு சிரி” என அவள் கத்த அதற்கும் அவன் சிரிக்க “ஃபிராடு” என முணுமுணுத்தவள் வேடிக்கை பார்த்தபடி அந்தப் பக்கம் திரும்பி கொள்ள இவனோ…

“கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கறேன்

பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கெஞ்சி

பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா கண்ணே” 

என்று பாட அவள் மெல்ல திரும்பி கதிரை பார்த்தாள்.

“என்ன பேபி பார்க்கற?”

“யார்டா அந்தக் கண்ணம்மானா பதில் சொல்லாம பாட்டு பாடுறியா எரும?”

“சரியான டியூப்லைட் பேபி நீ. நீ தான்டி என் கண்ணம்மா” எனச் சொல்ல அவள் என்ன உணர்கிறாள் என அவளுக்கே தெரியவில்லை.

நேத்ரா அமைதியாக இருக்க

“பேபி என்னாச்சுடா?”

“இல்ல. நீ கண்ணம்மான்னவுடனே வேற யாரோனு நினைச்சேன். இனி நீ எங்கிட்ட பேச மாட்டியோனு பயமா இருந்தது” எனச் சொல்ல அதிர்ச்சியில் அவன் வண்டியை சடன் பிரேக் போட்டான்.

“கதிர் என்னாச்சு?” என அவள் பதற அவனோ

“பேபி இங்க வா” என்றபடி தனது இரு கைகளையும் நீட்ட அவள் வேகமாக அவன் கைகளில் சரணடைந்தாள்.

அவளைத் தனது கையணைப்பில் கொண்டு வந்தவன் அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவள் முடியை கோதி கொண்டே சொன்னான்.

“பேபி எனக்கு என்னைக்குமே நீ தான். ஓகேவா?” எனச் சொல்ல அவளோ அவன் கண்களில் கட்டுண்டு போய் அவனைப் பார்த்தாள்.

அவளைத் தனது தோள்களில் சாய்த்துக் கொண்டே காரை ஓட்டியபடி நேத்ராவின் வீட்டை அடைந்தார்கள்.

அர்ஜூனின் உதவியால் வழக்கை அவளது சொந்த ஊருக்கு மாற்றினார்கள்.

வீணாக அமுதாவை அலைய வேண்டாம் எனச் சொல்லியவன் தானே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல அமுதாவும் சரி என்று சொல்ல நேத்ரா தான் பிரமிப்பாக அவனைப் பார்த்தாள்.

‘என்ன பண்ணினான்னே தெரியலையே’ என யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக வீடு வந்து சேர அமுதாவிடம் நடந்ததை அனைத்தும் சொல்ல அவள் பதறினாள்.

“தம்பி என்ன சொல்றீங்க?”

“அவங்க பிரச்சனை பண்ணுனாங்க ஆன்ட்டி. ஆனா பயப்படாதீங்க. இவனுங்கள எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்று இறுகிய குரலில் சொல்லியவன்,

“கொஞ்சம் கவனமா இருங்க ஆன்ட்டி. போதும். நேத்ரா நீயும் தான்” எனச் சொல்லியவன் அவர்களிடம் விடை பெற்றுச் சென்றான்.

நேத்ரா அவனுடன் இருந்ததில் தன்னை மறந்து இருந்தவள் இப்பொழுது தான் தன்னைப் பற்றி யோசித்தாள்.

‘ஐயோ நான் என்ன அவன்கிட்ட சொல்லி வச்சேன். நான் ஆல்ரெடி மேரீட். கதிர்க்கு இன்னும் மேரேஜே ஆகல’

‘அவன் எவ்ளோ நல்ல பையன். அவனுக்கு நானா? அவனை பத்தி யோசிச்சு யோசிச்சு என்னையறியாமலேயே உளறிட்டேனா? கடவுளே’ என விடிய விடிய தூங்காமல் யோசித்தவள் பின் ஒரு முடிவுக்கு வந்தவுடன் தான் படுத்தாள்.

அதன்படியே அதைச் செயல்படுத்த நினைக்கக் கதிர் அவளைக் கவனித்து அவளைத் தேடியபடி வந்தான்.

“கண்ணம்மா” என அவன் கனிவாகக் கூப்பிட அதில் மயங்கிய மனதை மறைத்தவள்,

“சொல்லு கதிர்”

“என்னாச்சுடா? ஏன் டல்லா இருக்க மாதிரி இருக்க?”

“ஒண்ணும் இல்ல கதிர். நல்லா தான் இருக்கேன்”

“இல்லயே. இந்தக் கண்ணு அங்கேயும், இங்கேயும் அலைபாயுதே கண்ணம்மா. என்னடா?”

“கதிர் ப்ளீஸ்… இப்படி கூப்பிடாதீங்க. அதே மாதிரி நேத்து பேசினது எதுவும் உண்மை இல்ல. நான் அவனுங்களுக்காகத் தான் அப்படி சொன்னேன்” என்று நேத்ரா இறுகிய குரலில் சொல்ல

“பேபி நீ பொய் சொல்றியா உண்மைய சொல்றியானு எனக்குத் தெரியும். உன் கண்ல பொய் தான் தெரியுது. சோ நீ இன்னும் யோசிச்சு பேசுடா” எனச் சிரித்துக் கொண்டே செல்ல..

“கதிர் திஸ் இஸ் தி லிமிட். நான் உங்களை லவ் பண்ணவும் இல்ல. கல்யாணமும் பண்ணிக்கப் போறதில்ல. காட் இட்” எனத் திமிராகச் சொல்ல கதிருக்கு அவள் பேசியது கத்தி பாய்ந்தது போல வலித்தது.

அந்த வலியே சில நிமிடத்தில் கோபமாக மாறத் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன்

“நான் சொல்றதையும் கேட்டுக்கோ. ஐ லவ் யூ. இந்த உலகத்தில நீ மட்டும் தான் என்னோட ஒய்ஃப். ஆனா நீ என் பேபி இல்ல. அவ இப்படி பேச மாட்டா. என் மூஞ்சிலயே முழிக்காத. குட் பாய்” என்று உறுமியவன் அங்கிருந்து செல்ல நேத்ரா அவனது கோபத்தில் விக்கித்துப் போய் நின்றாள்.

கதிர் எந்த நேரத்தில் அந்த வார்த்தையைச் சொன்னானோ நேத்ரா அவன் கண் முன்னால் காணாமல் போனாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page