ஒளி  1

 

 “வெளிய போடா” என்றவரை திகைப்பாய் பார்த்தான்.

“யார்டா‌ உன்னை உள்ள‌ விட்டது? தொழில்னா‌ நாணயம் இருக்கணும். டைல்ஸ் பிரேக்கேஜ்‌ டைல்ஸா கொடுத்துட்டு எவ்வளவு தெனாவட்டா நீ இங்க உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கத்தியவரை கேள்வியாய் பார்த்தான் ஓவியன்.

“என்னடா நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே இருக்க? எழுந்திரிடா” என்றவரை இப்போது கூர்மையாக பார்த்தான்.

“சார் ஐயாவை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அவரை பார்த்துட்டு நான் கிளம்பறேன் சார்” என்று அசராமல் சொன்னவனை கண்களில் முறைப்போடு பார்த்தார் தர்மராஜ்.

“ஏதோ தொழில் நல்லா பண்றியே. பிழைச்சு போகட்டும்னு பார்த்தா நீ எவ்வளவு ஃபிராடுத்தனம் பண்ற. ஐயாவை இப்ப பார்க்க முடியாது. கிளம்பு” என்று சொல்ல இப்போது சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தவன் அவரை‌‌ அழுத்தமாக பார்த்தான்.

“டேய் என்ன திண்ணக்கம் உனக்கு?”

“சார் நான் ஐயாகிட்ட விளக்கம் சொல்லிக்கிறேன். உங்ககிட்ட நான் எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்லை”

 

“அடிங்… ராஸ்கல்… நான் சொல்லாம உனக்கு எப்படிடா ஆர்டர் வரும்?” என்றவரை இறுக்கமாக பார்த்தான்.

“சார் மரியாதையா பேசுங்க”

“உனக்கு எதுக்குடா மரியாதை அநாதை நாயே…”

அவரின் வார்த்தையில் கண்கள் ரௌத்திரம் பொங்க தர்மராஜை பார்த்தான். அவனது பார்வையில் அவருக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.

“ஏய்” என்றவன் கர்ஜித்ததில் ஒரு நொடி நடுங்கினார்.

“தேவையில்லாம வார்த்தையை விடாதீங்க” என்றவனுக்கு அதற்கு மேலும் அங்கே காத்திருக்க பிடிக்கவில்லை.

ஆனாலும் பெரியவருக்காக அமைதியாக இருக்க முயற்சித்தான்.

மெதுவாக அங்கிருந்த பொருட்களின் மேல் பார்வையை செலுத்தியவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அவனுக்கு தான் வந்த வேலை முக்கியம். பெரியவருக்கு எப்போதும் அவன் மீது பாசம் உண்டு.

எப்போதும் அழைக்காதவர் இவனை அழைத்தது என்னவெல்லாமோ அவனை யோசிக்க வைத்தது.

ஏதேதோ யோசனையில் தனக்குள் மூழ்கியவனை கண்களில் குரோதம் பொங்க பார்த்தார் தர்மராஜ்.

“நாங்க பார்த்து உனக்கு சான்ஸ் கொடுத்ததால தான் நீ இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க. நாங்க இல்லாம நீ முன்னேறிடுவியா? கொஞ்சமாவது நன்றி வேண்டாம். யாருமே இல்லாதப்போவே உனக்கு என் முன்னாடி பேச எவ்ளோ தைரியம்டா?” என்றவரை அடிப்பட்ட பார்வை பார்த்தான். அந்த பார்வை அவனை ஏதோ செய்தது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் தன்னுடைய பேச்சிலேயே குறியாய் இருந்தார் அவர்.

“நான் எல்லா வொர்க்கும் கரெக்ட்டா செக் பண்ணி தான் அனுப்பறேன் அங்கிள்” என்று அவன் ஏதோ யோசனையில் கூறினான்.

“டேய் யாருக்கு யாருடா அங்கிள்? என்னை பொறுத்த வரையும் நீ அநாதை. தேவையில்லாம சொந்தம் கொண்டாடிட்டு வராத” என்றவரை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன் “அட ஆமால்ல… நான் மறந்தே‌ போயிட்டேன். உன்னய தான் ஒரு பேய் பிடிச்சு ஆட்டிட்டு இருக்கே. அது யார் என்ன பேசினாலும் கட்டுப்பட மாட்டேங்குதே. கவலைப்படாத. நான் அந்த பேயை அடக்க நல்ல மந்திரவாதியா கூப்பிட்டுட்டு வரேன்” என்று நக்கலான குரலில் சொன்னான்.

“ஏய்”

“சும்மா சவுண்ட் விடாத. நான் சாரை பாத்துட்டு தான் போவேன்” என்று காதை குடைந்தான்.

“நீ இன்னைக்கு அப்பாவை பார்க்க முடியாது. கிளம்பு”

“என்னை அவரு தான் வர சொன்னாரு சார். அவரை பார்த்துட்டு தான் கிளம்புவேன்” என்று அழுத்தமான குரலில் கூறினான்.

தான் சொன்னதை துளி கூட மதிக்காத அவனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.

ஒரு காலத்தில் எப்படி பெட்டி பாம்பாக இருந்தவன் இன்று அவனது வளர்ச்சியும், தெனாவட்டும் அவரை அவ்வளவு கோபம் கொள்ள வைத்தது.

“நீ இப்போ போகலேனா நான் டோட்டலா உன்னோட டிரான்ஸேக்ஷன்ஸ் குளோஸ் பண்ண வேண்டியிருக்கும் மிஸ்டர். ஓவியன்”

“சார் அண்ணாமலை சார் என்னை தேவையில்லாம கூப்பிட மாட்டாரு. நான் அவரை பார்த்துட்டு போய்டறேன். நீங்க அப்புறம் என்ன வேணா பண்ணிக்கோங்க” என்று அவன் நிதானமான குரலில் கூறினான்.

“ஓ… நாங்க சான்ஸ் கொடுத்ததால தான்டா எங்க ஷாப்லயே வந்து கத்துக்கிட்டு இந்த அளவுக்கு முன்னேறி இருக்க? இப்போ ஏறி வந்த ஏணியே எட்டி உதைக்கறியே? நன்றி கெட்ட நாயே” என்று ஆத்திரமாக சத்தம் போட்டார்.

“சார் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன ஆனாலும் நான் இன்னிக்கு சாரை பார்த்துட்டு தான் போவேன். சோ நொய்னு நொய்னு பேசாம அமைதியா இருங்க” என்றவன் தனது செல்போனை நோண்ட ஆரம்பித்தான்.

“அடிங்… எந்திரிடானா உனக்கு அவ்ளோ திமிரா? இங்க நான் பாஸா? நீ பாஸா? வளர்க்கறவங்க வளர்த்திருந்தா ஒழுங்கா இருந்திருப்ப? இங்க தான் அப்படி இல்லையே” என்றவர் குத்தி காட்டினார்.

“சார் தேவையில்லாம பேசாதீங்க” என்றவன் இறுகிய குரலில் கூறினான்.

“ஓஹோ… நீங்க அவ்ளோ பெரிய ஆளா? ஏன்டா கூலிக்கு வேலை பண்ண உனக்கே இவ்ளோ திமிருனு நான் எத்தனை பேரை ஹேண்டில் பண்றேன். ஃபர்ஸ்ட் உன்னோட இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ”

“நான் எப்படி நடந்துக்கணும்னு நான் மேனேஜ் பண்ணிக்கறேன் சார். நீங்க உங்க பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க” என்றவன் மீண்டும் தனது போனை செக் செய்ய ஆரம்பித்தான்.

“குடும்பத்தோட வளர்ந்திருந்தா சூடு, சொரணை இருந்திருக்கும். இங்க தான் கேட்க ஆளு இல்லல்ல. அதான் இந்த ஆட்டம் ஆடற?”

“சார் தேவையில்லாம வார்த்தைய விடாதீங்கனு நான் முன்னமே சொல்லிட்டேன்” என்றவன் கர்ஜித்தான்.

“என்னடா சவுண்ட் விடற? என் இடத்ததுலயே வந்துட்டு நீ எனக்கே அட்வைஸ் பண்றியா? நீ கிளம்பு. உன்னோட டிரான்ஸேக்ஷன்ஸ் குளோஸ் பண்ணதுக்கான லெட்டர் வரும். அப்புறம் என்ன பண்ணனுமோ பண்ணிக்கலாம்” என்று அப்போதும் அவர் தன் குறியிலேயே இருந்தார்.

அதற்கு மேல் அவனுக்கு பொறுமையாய் இருக்க முடியவில்லை. அங்கிருந்து வேகத்துடன் எழுந்து அவருக்கு பக்கத்தில் வந்து நின்றவன் உச்சபட்ச கோபத்தில் அவரது சட்டையை பிடித்தான்.

“டேய்” என்றவர் அதிர்ச்சியில் உறைய “இதுக்கு மேல எதுவும் தேவையில்லாம வார்த்தை வந்தது பேசின நாக்கை கட் பண்ணிடுவேன். மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று அடிக்குரலில் சீறினான்.

“உனக்கு என்னயா பிரச்சனை? நான் உழைச்சி தானே வந்தேன். என் வாழ்க்கைய பத்தி விமர்சனம் பண்ண உனக்கு ரைட்ஸ் கிடையாது. மைன்ட் இட்” என்றவனின் உறுமலில் அவர் உறைந்து போய் நின்றார்.

அவனது செய்கையில் திகைத்தவர் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார்.

அப்போது அங்கு நித்திலா வந்தாள்.

“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க? எவ்ளோ திமிர் இருந்தா எங்கப்பா சட்டைய பிடிப்ப?” என்று கத்திக் கொண்டு வந்தவள்

“ப்பா… நீங்க ஓகே தானேப்பா?” என்றவரை அமர‌ வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.

“நான் ஓகேடா. ஒண்ணும் இல்ல குட்டிமா” என்றவர் அவனை முறைத்தார்.

“மிஸ்டர். ஓவியன் என்ன‌ நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல? அவர் உங்க வயச விட எத்தனை வருஷம் பெரியவங்க? உங்கள‌ வளர்த்து விட்டவரு சட்டைய பிடிப்பாங்க? கொஞ்சம் கூட மரியாதை தெரியல உங்களுக்கு” என்று இறுகிய குரலில் சொன்னாள்.

“இல்ல மேடம்.  நான் அமைதியா தான் இருந்தேன்.‌ பட் சார் தேவையில்லாம பேசறாரு”

“ஓ… அதுக்குனே சட்டைய பிடிப்பீங்களா? எங்களுக்கு டிசிப்ளின்‌ ரொம்ப முக்கியம். நீங்க கிளம்புங்க”

“மேடம் நான் அண்ணாமலை சாரை பார்க்க வந்தேன்”

“நீங்க யாரையோ‌ பார்த்துக்கோங்க. இப்ப கிளம்புங்க” என்றவள் சொல்ல

“ஏய்… நான் பொறுமையா போலாம்னு இருக்கேன். தேவையில்லாம பேசாதடி” என்று அடிக்குரலில் சீறியவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக வெளியில் வந்தான்.

 அப்போது தர்மராஜின் பால்ய நண்பரான ரத்னம் உள்ளே வந்தார்.

அவரைக் கண்டதும் ஒரு நிமிடம் நின்றவன் பின் விறுவிறுவென வெளியே வந்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவர் “டேய் தர்மா என்ன ஆச்சு? என்னடா இப்படி நின்னுட்டு இருக்குற?” என பதறி போய் கேட்டார்.

‘என் மேலயடா கைய வைக்கிற? உன்னை என்ன பண்றேன்னு பாருடா’ என்று மனதுக்குள் சூளுரைத்தவர் “ஒன்னும் இல்லடா. அட்ரஸ் தெரியாதவனுக்கு எல்லாம் தொழில அசைன் பண்ணா நம்ம தான்டா அனுபவிக்க வேண்டி வரும்” என்றவர் நண்பனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அவரோ நித்திலாவிடம் என்ன நடந்ததென கேட்டார்.

“என்னம்மா ஆச்சு? ஏன் அவன் அவ்வளவு கோபமா போறான்?”

“தெரியல அங்கிள். பட் அவன் நடந்துக்கறது கொஞ்சம் கூட சரியில்ல. ப்பா… ஃபர்ஸ்ட் அவன் சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணுங்க” என்று தர்மராஜிடம் கூறினாள்.

“ஏன்டா அப்படி எல்லாத்தையும் முடிக்கிற அளவுக்கு என்ன ஆச்சு?” என்று ரத்னம் தர்மராஜிடம் கேட்டார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அண்ணாமலை உள்ளே வந்தார்.

“வாங்க ரத்னம்” என்று வரவேற்றவர் “ஓவியன் வெயிட் பண்றேன்னு சொன்னான்? எங்கப்பா இன்னும் வரலையா?”‌ என கேட்டவரிடம் இருந்த கோபத்தில் அனைத்தையும் ஒப்பித்தார் தர்மராஜ்.

அதனை கேட்டதும் அண்ணாமலைக்கு அவ்வளவு கோபம் வந்தது.

“நீ என்னடா இத்தனை வருஷம் பிஸினஸ் பண்ண? ஒரு சின்னப் பையன் கிட்ட எப்படி பேசணும்னு கூட உனக்கு தெரியாதா?” என்று தர்மராஜை கடிந்தார்.

“அப்பா அவன் எவ்வளவு திமிரா இருந்தான் தெரியுமா?”

“உனக்கு இந்த வயசு வந்தும் திமிரு குறையலையேடா” என சத்தம் போட்டார்.

“தாத்தா” என்றவளின் குரலில் தன்னை நிதானித்தவர் “அவன் பிஹேவியர் சரியில்ல தாத்தா. அவன் அப்பா மேலயே கை வைக்கிறான்” என்று கூறினாள்.

“என்னம்மா சொல்ற?” என்று ரத்னம் கேட்டார்.

“ஆமா அங்கிள். அவன் அப்பா மேலயே கை வைக்கிறான்” என்று நித்திலா கூறினாள்.

“தர்மா என்னடா  நித்திலா சொன்னது உண்மையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

“ஆமாடா. குடும்பமா வளர்ந்திருந்தா தெரியும், யார்ட்ட எப்படி பேசணும்னு. ஆனா இவனுங்க எல்லாம். விடுடா” என்றவர் சொல்ல ரத்னத்தின் முகம் அதிர்ச்சியை காட்டியது.

அதைப் பார்த்த தர்மராஜ் “நீ ஏன் டா இப்படி இருக்குற? வா… நாம நம்ம வேலையை பார்க்கலாம்” என்று சொன்னார்.

“என்ன இங்க பார்வை ரத்னம்? வந்த வேலைய பாருங்க. அவன் நம்ம பையன் தான். நான் அவனை கவனிச்சிக்கிறேன்” என்று கூறினார்.

“அப்பா அவனுக்கு சப்போர்ட் பண்றதை நிறுத்துங்க. சட்டைய புடிக்கிறான் அவன்” என்று கோபத்தில் கத்தினார்.

“என்ன தாத்தா நான் இவ்ளோ சொல்லியும் அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க” என்று நித்திலாவும் கோபத்தோடு கத்தினாள்.

“நித்திலா” என்ற அண்ணாமலையின் அதட்டலான குரலில் அமைதியானவள் “அதுக்கு நீங்க இப்படியே விட சொல்றீங்களா தாத்தா?” என்று கேட்டாள்.

“நான் அவனை கவனிச்சிக்கிறேன் குட்டிமா. உன் அப்பா மட்டும் நல்லாவா இருக்கான். அவன் மாறல. பொறுடா” என்றதும் அமைதியானவள் அடுத்து கம்பெனி விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

தனது காரை எடுத்து அலுவலகத்திற்கு வந்தவன் தனது கோபத்தையெல்லாம் அலுவலக ஊழியர்களிடம் காட்டினான்.

 

எங்கே எப்போது இது மாதிரி தப்பு நடந்தது? தான்‌ ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்கையில்‌ தர்மராஜின்‌ பேச்சில் அவ்வளவு காயப்பட்டு போனான்.

அந்த தொழில் ஆரம்பிப்பதற்கு அவன் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

பேங்க் லோனுக்கு ஒவ்வொரு இடமாய் அலைந்து தனது இடத்தை பார்த்து பார்த்து தேர்வு செய்து கடையின் வடிவமைப்பை பல இடங்களில் அலசி ஆராய்ந்து அவன் ஒவ்வொன்றையும் செதுக்கினான்.

கடை நிறுவிய‌ போதும் கூட அவனுக்கு எளிதில் வாடிக்கையாளர்கள் அமைந்து விடவில்லை.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்து யூடியூப் வீடியோவை போட்டு அவன் போட்ட உழைப்பு ஒவ்வொன்றும் அவ்வளவு அதிகம்.

ஆனால் அதனை தர்மராஜ் போன்றவர்கள் ரொம்பவும் எளிதாக அதுவும் குடும்பத்தை குறிப்பிட்டு பேசி அவனை வதைப்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

உள்ளூர ஏதேதோ யோசனைகள் ஓட திடீரென ஏதோ தோன்ற திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

“அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் நான் பண்ணிட்டு இருக்கேன். கண்டிப்பா அவனுக்கு நஷ்டமாயிடும்ணா. இப்போ கூட அண்ணாமலை ஐயா ஆஃபிஸ்க்கு தான் போய்ட்டு வந்தாங்க. வந்ததுல இருந்து ஒரே கோபமா தாங்கண்ணா இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க. இந்த கம்பெனிய… ஆஆஆஆஆஆ…”

“டேய் யார்கிட்ட பேசிட்டு இருக்கே? யார் இடத்துல வந்து பிரச்சனை பண்ற? சம்பளம் என்கிட்ட வாங்கிட்டு விசுவாசத்தை அங்க காட்டுறியாடா? ராஸ்கல்” என்றவன் அவனை அடித்து துவைத்தான்.

 

அவனுடைய ஆவேசத்தை பார்த்து நடுங்கியவர்கள் எப்படி தடுப்பது என்று புரியாமல் திணறினார்கள்.

ஒரு கட்டத்தில் அடிப்பதை நிறுத்தியவன் போலீஸுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டான் தனது பொருட்கள் காணாமல் போனதாக.

அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்.

“இது சேம்பிள் தான். இதுக்கு மேல ஏதாவது இங்க இருந்து நியூஸ் வெளில போச்சு… கொலை பண்ண கூட தயங்க மாட்டேன். மைன்ட் இட்” என்றவனின் கர்ஜனையில் ஊழியர்கள் சிலையாய் நின்றார்கள்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page