ஒளி 10

ஒளி 10

சிறிது நேரம் படுத்திருந்தவன் நித்திலாவை காணச் சென்றான். அங்கே அவளோ வாடிய மலரென படுத்து கிடந்தாள்.

காலையில் எவ்வளவு உற்சாகமாக இருந்த பெண்… இப்போது உடைந்து போய் படுத்திருந்ததை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வந்தது.

“நித்திலா” என்று மென்மையான குரலில் கூப்பிட்டான்.

“ஓவியன்” என்று பதறி போய் அவள் எழுந்திருந்தாள்.

“ரிலாக்ஸ் நிலா” என்று அவளது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தியவன் அவளது நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான். நித்திலா அவனை கண் சிமிட்டாது பார்த்தாள்.

“சாரி நித்திலா. இன்னைக்கு நடந்தது நான் என் கன்ட்ரோல் இல்லாம பண்ணிட்டேன். அந்த ஆள் நான் பண்ணாததை பண்ணேன்னு சொன்னப்ப அவ்ளோ கோபம் வந்தது” என்று நித்திலாவை அவனது கை வளைவில் வைத்துக் கொண்டு கூறினான்.

அவனது செயலில் அவள் தான் விசித்திரமாக பார்த்தாள்.

‘ஏன்டா டேய் கிஸ் கொடுத்ததுக்கு இப்படி கூட சாரி கேட்கலாமா?’ என்று அவனை பார்த்து வைத்தாள்.

“நீ எதுவும் கவலைப்படாத. என்ன பிராப்ளம்னாலும் நம்ம ஃபேஸ் பண்ணிக்கலாம்” என்று அவளை அணைத்தவாறே கேட்டான்‌. நித்திலா அமைதியாக அவனை பார்த்தாள்.

“நிலாமா… ஏன் சைலண்ட்டா இருக்க? நீ எதுவும் ஏன் பேச மாட்டேங்கிற?” என்று கேட்டான்.

“கேட்க கூடாதது கேட்டுட்டேன்‌ ஓவியன். எனக்கு யார் கிட்டயும் பேச தோணல” என்றவள் கூற அதிர்ச்சியாய் பார்த்தான்.

“டோன்ட் வொர்ரி ஓவியன். நான் இப்படியே இருக்க மாட்டேன்” என்றவள் அவன் மடியினில் படுக்க அங்கு வந்த சீதா அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

 அவளது வார்த்தையில் அடுத்து என்ன செய்வதென புரியாமல் திகைத்து நின்றான்.

வீட்டுக்கு வந்த தர்மராஜ் ஓவியனை வீட்டை விட்டு கிளம்ப சொன்னார்.

“நான் ஏன் போகணும் தர்மராஜ்? நீங்க என்ன பண்ணீங்கனு நான் உங்க ஃபேமிலி கிட்ட சொல்லட்டுமா?” என்று கேட்டான்.

“ஏய்… என்னையே மிரட்டற அளவுக்கு வந்துட்டியா?” என்று கேட்டார்.

“தேவைனு வந்தா எல்லாமே பண்ணுவேன் அங்கிள்” என்று நக்கலான குரலில் சொன்னான்.

“டேய்”

“சும்மா சும்மா கத்தி பிபி ஏத்திக்காதீங்க. அப்புறம் யாரை திட்டணும்னே மறந்துரும்” என்று சிரிப்புடன் கூறினான்.

“ஓவியன் எங்கிட்ட வீணா பிரச்சனை பண்ணாத. இதுக்கான விலைய நீ கொடுக்க வேண்டி வரும்” என்று ஆத்திரத்துடன் கூறினார்.

“நான் தங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா” என்று செந்தமிழில் சொல்ல தர்மராஜ் முழித்தார்.

“என்ன முழிக்கிற? எல்லாம் எங்க தானை தலைவன், தளபதி டைலாக் தான். அப்புறம் நம்மள தற்குறினு சொல்ல கூடாதுனு. ஆனா பார்த்து மாமோய்… நீ தற்குறியா மாறிடாத” என்றவன் சொல்லவும்

 “ஃபர்ஸ்ட் வெளிய போடா” என்று கத்தினார்.

“ஐ வான்ட் மோர் எமோஷன் மாமோய். லவ் யூ” என்று சொல்ல அவர் தான் கடைசியில் ‘என்னடா நடக்குது இங்க’ என்று வடிவேலுவின் மாடுலேஷனில் முழித்தார்.

அங்கிருந்து விசிலடித்தபடியே அந்த அறையை விட்டு வெளியேறியவன் தனது அறைக்கு வந்தான்.

 உண்மையில் அவன் பெரிய சண்டை வீட்டினரின் முன்னே போடுவார் என்று நினைத்திருக்க அவரோ தனியே முடித்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது.

அலுவல் வேலை முடிந்து வந்த கண்ணன் இவனை தேடி வந்தான்.

“ஓவியா நீ ஓகே தானே. உனக்கு எதுவும் வலியில்லையே?” என்று கேட்டான்.

“எனக்கு வலியில்ல. நித்திலாவை நான் அப்ப போய் பார்த்தது தான். அதுக்கப்புறம் அவங்கள நான் பார்க்கல. வாடா எப்படி இருக்காங்கன்னு தெரியல” என்று சொன்னான்.

“என்னாச்சுடா? ஏன்டா அவ நல்லாத்தானே இருந்தா மார்னிங்?”

“எரும மாடே… அவங்க அப்பவே டிஸ்டர்ப்டா தானே இருந்தாங்க” என்று ஓவியன் கூறினான்.

“நான் ஈவ்னிங் கால் பண்ணேன்டா. நல்லா தான் பேசினா” என்று சொன்னான்.

அவர்கள் போன போது நித்திலா சுருண்டு போய் படுத்திருந்தாள். 

“கண்ணா என்ன இப்படி படுத்திருக்காங்க?” என்று பதட்டமாய் கேட்டவன் “நித்திலா எழுந்திரிங்க” என்று எழுப்பினான்.

நித்திலாவை தொட்ட போது அவள் உடல் நெருப்பாய் கொதித்தது.

“டேய் ஃபீவரிஷா இருக்குடா” என்று சொன்னவன் “கண்ணா டாக்டரை கூப்பிடுடா” என்று பதட்டமாய் கத்தினான்.

“என்னடா ஈவ்னிங் கூட நல்லா தானே பேசினா?” என்று தவிப்புடன் கூறியவன் “குட்டிமா” என்று அவளை தட்டி கூப்பிட்டான். அப்போதும் அவள் பதிலளிக்கவில்லை. 

அவளது வாய் ஏதோ முணுமுணுத்தபடி இருப்பதை கண்ட ஓவியன் அவளது பக்கத்தில் அமர்ந்து என்னவென கேட்க அவள் கூறியதை கேட்டவன் தளர்ந்து போய் உட்கார்ந்தான்.

“ஓவியா என்னடா ஏன்டா இப்படி உட்கார்ந்திட்டு இருக்க?”

“உங்கப்பா என்னை தான் நிம்மதியா வாழ விடலேனா அவரு பொண்ண கூட நிம்மதியா வாழ விடமாட்டாரா?” என்று கத்தியவன் “இதுல நான் வேற” என்றவன் தன்னை கடிந்துக் கொண்டான்.

“டேய் எப்படிடா இவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது? எழுந்திரிப்பாங்ளா?” என்று கேட்டான்‌‌.

“ஓவியா கொஞ்ச நேரம் சைலண்ட்டா இரு. நான் டாக்டருக்கு கூப்பிட போறேன். அவங்க வருவாங்க” என்றவன் மருத்துவருக்கு கூப்பிட்டான்.

சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு மருந்துகள் கொடுத்து விட்டுச் சென்றனர்.

கண்ணன் நித்திலாவுக்கு உடம்பு சரியில்லாததை பற்றி குடும்பத்தினரிடம் சொல்லவும் அவர்கள் அனைவரும் நித்திலாவின் அறைக்கு வந்தார்கள். அவர்கள் அனைவரும் வரவும் ஓவியன் தனது அறைக்குச் சென்றான்.

 நித்திலாவை பற்றிய சிந்தையில் தனக்குள் மூழ்கி போனான்.

அடுத்த நாள் காலையில் அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பினான். தான் அங்கே இருப்பது நித்திலாவுக்கு ஏதேனும் பிரச்சனை ஆகுமோ என்று பயத்தை தரவும் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

“என்னடா திடீர்னு கிளம்பறேனு சொல்ற,‌ அதுவும் குட்டிமாக்கு ஃபீவரா இருக்கறப்ப…” என்று கேட்டான்.

ஒரு‌ பெருமூச்சுடன் “நான் இன்னும் இருந்தா உன் தங்கச்சிய உங்கப்பா என்ன பண்ணுவாருனே தெரியலடா. அவளை பத்திரமா பார்த்துக்கோ” என்றவன் கிளம்ப “வா. நான் வீட்ல ட்ராப் பண்றேன்” என்று கண்ணன் சொன்னான்.

“இல்லடா. நானே போய்க்கிறேன். மகே வருவான்” என்றவன் “கண்ணா அவங்க கூடவே இரு. வேலைனு அவங்கள தனியா விட்டுட்டு எங்கயும் போய்டாத” என்று கேட்டான்.

“என் தங்கச்சிய எனக்கு பார்த்துக்க தெரியாதா. பெருசா பேச வந்துட்டான். போடா” என்று கூறினான்.

“இங்க பாரு அந்த ஆள் அவங்கள எதுவும் ஹர்ட் பண்ணிடக் கூடாது. அவங்க ஏதாவது அழற மாதிரி வந்தது நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று எச்சரிக்கையாய் கூறினான்.

“நேரம்டா” என்றவன் “எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டயே பார்த்துக்கோனு சொல்வ. என் முன்னாடியே அவளுக்கு கிஸ் கொடுக்கற? என்ன தான்டா நினைச்சிட்டு இருக்குற?” என்று ஆத்திரமாய் கேட்டான்.

“தெரியலடா. நேத்துல இருந்து எனக்குள்ள வந்து அவங்க என்னமோ பண்றாங்க. பட் நமக்குனு ஒருத்தர் வந்தா எவ்ளோ நல்லா இருக்கும்ல” என்றவன் “நேத்து நடந்ததுக்கு சாரிடா. பட் அவங்கள மட்டும் ஏதாவது யாராவது ஹர்ட் பண்ணீங்கனு தெரிஞ்சது அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என்றவனை விசித்திரமாக பார்த்தான்.

நேற்று மருத்துவர் வந்துச் சென்ற பின்பு நித்திலாவுக்கு ஓரளவு உடல்நிலை சரியானது என்றாலும் முழுதாக சரியாகவில்லை. அவள் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை‌. தனது அறையிலே படுத்துக் கொண்டாள்.

ஓவியன் அவளது அறைக்குச் செல்லும் போது எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நிலாமா” என்றவனின் கனிவான குரலில் அவள் திரும்பினாள்.

“நான் என் வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்று சொல்ல அவள் திடுக்கிட்டு பார்த்தாள்.

“என்ன‌ சொல்றீங்க? இன்னும் உங்களுக்கு முழுசா சரியாகல. நீங்க எப்படி மேனேஜ் பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.

“நான் யாரையாவது கூப்பிட்டு மேனேஜ் பண்ணிக்கிறேன்டா. நீ உன் உடம்பை பார்த்துக்கோ. தேவையில்லாம எதுவும் உன் மனசை போட்டு குழப்பிக்காத” என்றவன் அவளின் முன் இருந்த முடி கற்றையை காது மடலில் சொருக அவனது தீண்டலில் மெய் சிலிர்த்து நின்றாள்.

“எதுனாலும் ஒரு போன் பண்ணு. நான் உன் பக்கத்தில நிப்பேன்” என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவளை ஒரு கணம் இறுக அணைத்தவன் நித்திலாவை தவிப்புடன் பார்த்தான். அந்த பார்வை அவளை ஏதோ செய்ய அவள் ஓவியனின் நெற்றியில் முத்தமிட்டாள். அவளது எதிர்பாராத முத்தம் அவனுக்குள் ஏதேதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

 வார்த்தையால் வர்ணிக்க இயலாத உணர்வுகளில் அவன் தேங்கி நின்றான்.

பின் தன்னை சுதாரித்தவன் “எதுவும் யோசிக்காம உடம்பை கவனிங்க நிலாமா. இப்போ நீங்க ஸ்ட்ராங்கா இருக்கிறது தான் முக்கியம்” என்றவனின் கூற்றில் சரி என்று தலையாட்டியவளை கண்களால் பருகிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

ஓவியன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான். தாத்தா அவனை யோசனையாக பார்த்தார்.

“தாத்தா நான் சமாளிச்சுக்குவேன்” என்றவன் “ரொம்ப தாங்க்ஸ் தாத்தா. நான் உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றவனை ஆதுரமாக பார்த்தார்.

“இது நம்ம வீடு ஓவியா. நீ எப்போ வேணும்னாலும் இங்க வரலாம்” என்றவரிடம் “தாத்தா நித்திலாவை பத்திரமா பார்த்துக்கோங்க” என்றவன் நேற்று நடந்ததை சொல்ல அப்போது அங்கு வந்த அகிலவேணியும் அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

“என்ன ஓவியா சொல்ற? இவனுக்கு ஏன் புத்தி இப்படி போகுது? அதான் என் பேத்திக்கு காய்ச்சல் வந்ததா? கடவுளே” என்றவர் “நாங்க அவளை பார்த்துக்கறோம்‌ ஓவியா. ஏங்க என்ன மசமசனு நிக்கறீங்க. அவன் ஏதாவது தேவையில்லாம நித்தாலாவை பேசட்டும். அவனுக்கு இருக்கு” என்று படபடப்புடன் கூறினார்.

“பாட்டி டென்ஷன் ஆகாதீங்க. கண்ணன் எல்லாம் பார்த்துப்பான். தாத்தா இருக்க கவலையேன்?” என்று கண்ணடித்தவனை இறுக அணைத்துக் கொண்டார். அவரது அந்த அணைப்பு அவனுக்குமே தேவையாய் இருந்தது.

தாத்தா இல்லாமல் அவனால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது. அவனது எல்லா நேரங்களிலும் தாத்தா அவனுக்கு துணை இருக்கிறார். 

“தாங்க்ஸ் தாத்தா” என்றவன் “மிஸ் யூ தாத்தா. பாட்டி உங்களையும் தான். நீங்க என் வீட்டுக்கு ஒரு நாள் வரணும்” என்று தயக்கமாய் அழைப்பை விடுத்தான்.

“என்ன ஓவியா இவ்ளோ யோசிச்சு கூப்பிடறே? எங்களை உரிமையா கூப்பிட மாட்டியா?” என்று கேட்டார்.

“தேங்க்ஸ் பாட்டி” என்றவன் பாட்டி அவனது உடல்நிலையை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவர் சமையல் குறிப்புகளையும் கூறினார்.

அவர் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டவன் அவர்களிடம் இருந்து விடை பெற்றான்.

அதே போல விமல்ராஜின் குடும்பத்திடமும் விடை பெற்றவன் சீதாவிடம் வந்தான். அவன் கிளம்புகிறேன் என்று சொன்னதும் அவரது முகத்தில் நிம்மதி அதிகமாக பரவியதோ…

 யோசனையுடன் அவன் வெளியே வந்த போது தர்மராஜ் அவனை நக்கலுடன் பார்த்தார்.

“என்ன கிளம்பிட்ட போலயே. அந்த பயம் இருக்கணும்” என்று நக்கலாக சொன்னவரை பார்த்தவன் “நீ நினைக்குறது எதுவும் நடக்காது மாமோய். வரட்டா. உம்மா…” என்றவன் சொல்ல இப்போது அவனின் செய்கையில் அவர் தான் திகைத்து நின்றார்.

கண்ணன் வீட்டிற்கு வந்து அவனை விட்டவன் பல பத்திரங்களை சொல்லி விட்டு அவன் கிளம்பினான்.

“மச்சான் ரொம்ப தாங்க்ஸ்டா” என்று கண் கலங்கியபடி சொன்னவனை கோபமாய் பார்த்தான் கண்ணன்.

“நாங்க எப்பவுமே உன் கூட இருப்போம்டா எல்லா விஷயத்திலயும். நீ தனி இல்ல. புரியுதா?” என்றவன் சொல்ல அவனை இறுக அணைத்து கொண்டான் ஓவியன்.

“ரிலாக்ஸ்டா” என்று அவனின் முதுகை வருடியவன் “டேக் கேர்” அவன் கையை அழுத்தி கொடுத்தான். அவனது செய்கையில் அவனுக்கு யானை பலம் தோன்றியது ஓவியனுக்கு.

ஓவியன் இங்கு வர வேண்டும் என்று  சொன்னவுடன் அவனது வீட்டு வேலையாள் மூலம் வீட்டை சுத்தம் செய்ய சொன்னவன் அவனுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்த பிறகே அவனை கூட்டி வந்தான். 

உண்மையில் வீட்டை பார்த்ததும் அவன் திகைத்தான் என்றால் அவனுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்க அதை பார்த்தவனுக்கு கண்ணனின் செய்கையில் இதம் பரவியது. 

‘கண்ணா சூப்பர்டா’ என்று முணுமுணுத்தவன் சிறிது நேரம் ரிலாக்ஸாக அமர்ந்தான்.

அவன் அந்த பக்கம் சென்றதும் இங்கே தர்மராஜ் தனது வேலையை காட்ட ஆரம்பித்தார்.

வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டவர் “நித்திலாவுக்கு நெக்ஸ்ட் வீக் நிச்சயம் பண்ணிடலாம்னு இருக்கேன். உங்களுக்கு ஓகே தானே?” என்றவரை விசித்திரமாக பார்த்தனர்.

“இப்போ என்ன தர்மா நித்திலா நிச்சயத்துக்கு அவசரம்? அந்த பையன் பண்ண வேலைக்கு நான் நம்ம பொண்ண அங்க கொடுக்கணுமானு யோசிக்கிறேன். நீ இப்படி பேசற? எங்க யார்கிட்டேயும் கேட்காம நீயா எப்படி முடிவு எடுப்ப?” என்று அண்ணாமலை கோபமாய் கேட்டார்.

“அப்பா அது தான் அவங்க தெரியாம நடந்த தப்புனு சொல்றாங்களே. அப்புறம் என்னப்பா?” என்று தர்மராஜ் கேட்டார்.

“சரிடா. இன்னொரு டைம் விசாரிச்சிட்டு ஃபைனல் பண்ணிக்கலாம்” என்று அண்ணாமலை கூறினார்.

“இல்லப்பா. அடுத்த வாரம் நடந்தாகணும். இவ கண்டவன் கூட எல்லாம் ஊரை சுத்திட்டு இருக்கா. இதை ஸ்டாப் பண்ணனும்னா கண்டிப்பா நிச்சயம் பண்ணனும்” என்றவர் பிடிவாதமாக நின்றார்.

யார் சொல்வதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தான் நினைத்த ஒன்றே சரி என்று அவர் குறியாய் இருக்க வீட்டில் உள்ளவர்கள் அவரை கோபமாய் பார்த்தனர்.

அவரது சமீப காலத்திய பல நடவடிக்கைகள் முகம் சுளிக்க கூடியதாக இருந்தது. ஓவியனில் ஆரம்பித்தது இப்போது நித்திலாவும் இதில் ஏதேனும் காயப்படுவாளோ என்று பயந்தனர். யாருக்கும் இந்த விஷயம் ஏற்புடையதாக இல்லை.

ஒரு சிலரை தவிர அனைவருக்கும் நேற்று நடந்தது தெரியாததால் இவரின் போக்கு புரியாமல் பார்த்தனர்.

“அண்ணா அப்பா சொல்ற மாதிரி கொஞ்ச நாள் கழிச்சு பண்ணலாமே. ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க?” என்ற விமல்ராஜின் கேள்விக்கு “என் பொண்ணுக்கு எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும்” என்று கத்தரித்தார் போல சொல்லியவரை வேதனையுடன் பார்த்தார் விமல்ராஜ்.

அவரோ யாரையும் கண்டு கொள்ளாமல் அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க ஆரம்பித்தார்.

தர்மராஜ் தனது பெண்ணை ஓவியன் காதலிக்கிறான் என்று தெரிந்துக் கொண்ட நொடி கொஞ்சம் சந்தோஷப்பட்டாலும் அவருக்குள் இருந்த கொஞ்சம் நல்லவன் ‘ஒரு வேளை நாம அவனை அடிச்சிருக்க கூடாதோ’ என்று தோண அதை ரத்னம் குடும்பத்தினரிடம் புலம்பினார் தர்மராஜ்.

அவர் புலம்பியதை கேட்ட அன்னபூரணி அதிர்ச்சி அடைந்தவர் ‘இது நல்லதுக்கு இல்லையே’ என்று யோசித்தவர் ஓவியனுக்கு எதிராக பேச ஆரம்பித்தார்.

அதற்கேற்றாற் போல ஓவியனை கண்ணனும், நித்திலாவும் தர்மராஜின் வீட்டிற்கே கூட்டிக் கொண்டு வர மெல்ல நித்திலாவின் மேல் சந்தேகத்தை தூவினார் அன்னபூரணி.

அதை கேட்ட தர்மராஜ் அன்று இரவு மகளிடம் உங்களுக்குள் ஏதேனும் தவறாக நடந்ததா? என்பது போல கேட்க அவரின் கேள்வியில் ஆயிரம் கத்திகள் சொருகியதை போல வலியை உணர்ந்தவளுக்கு வார்த்தைகளுக்கு பதில் கண்ணீர் தான் வந்தது.

தான் மிகவும் அன்பு வைத்த அப்பாவே அப்படி கேட்டதில் நித்திலா உயிரோடு மரித்து போனாள். அந்த அதிர்ச்சியில் அவள் அழுதுக் கொண்டிருந்த போது தான் ஓவியன் அவளை பார்த்தது.

அப்போது அங்கு வந்த ஓவியன் அவளை சமாதானம் செய்தான்.

 மகளின் கண்ணீர் அவரை ஏதோ செய்ய சமாதானம் செய்யலாம் என்று திரும்ப வந்தவர் இருவரும் நெருக்கமாக இருப்பது போல பார்க்க அவருக்குள் இருந்த பிசாசு விழித்துக் கொண்டது.

அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை பார்த்தவர் அன்னபூரணியிடம் இதை பற்றி புலம்ப அவரோ அடுத்த சாயத்தை நித்திலாவின் மீது பூசினார்.

ஆரம்பத்தில் பூரணி சொன்னது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரின் ஓவியனை பற்றிய பேச்சில் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் வெகு சாதாரணமாக நித்திலாவிடம் பேசி திசை திருப்பியவர் தனக்கு உடம்பு சரியில்லை என திசை திருப்பியவர் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இவர் இங்கே கிளம்பும் போது அங்கே அன்னபூரணியும் கிளம்பி விட்டார். டாக்டரிடம் இவளுக்கு வயிற்று வலி என்று அப்பாய்ன்ட்மென்ட் வாங்கினார். ரகசியமாக அவர்கள் நித்திலாவை சோதிக்க முயற்சி பண்ண இடையில் ஓவியன் வந்து விட்டான்.

இதில் ஓவியன் மருத்துவமனை வந்தது அவர்கள் எதிர்பாராதது‌. அதுவும் கண்ணனும் சேர்ந்து வர அவனின் பார்வையில் தெரிந்த ரௌத்திரத்தில் அவர் திகைத்து விட்டார்.

ஏற்கனவே மகள் கையை விட்டுச் செல்வது போல இருக்க இப்போது மகனையும் தன்னிடம் இருந்து பிரிக்கிறானே என்ற கோபத்தில் அவர் பேச அவனின் செய்கையின் முடிவில் அவர் தான் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

தான் சந்தேகமாக கேட்டது தன் கண் முன்னாடியே நடக்க அப்போதே இருவரும் ஆலோசித்தவர்கள் அடுத்து நிச்சயத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதில் கண்ணன் எந்த விஷயத்தையும் கண்டு கொள்ளவில்லை‌. ‘நீ நடத்து, நான் எப்படி நடக்குதுனு பார்க்கறேன்’ என்றளவில் நடந்துக் கொண்டான்.

தர்மராஜ் அவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் மண்டை காய்ந்தார்.

அறைக்கு வந்த நித்திலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கல்யாணம் என்றதும் ஓவியனின் முகமே அவளது மனத்தில் தோன்றியது. தன் மனம் சொன்ன பதிலில் அவள் திகைத்து விழித்தாள்.

ஓவியன் அவளுக்கு முத்தம் தந்ததை நினைத்து அவளுக்கு இன்றளவும் அதிர்ச்சி தான். ஆனாலும் கூட அந்த முத்தமும் அப்போது அவளுக்கு தேவையாக இருந்தது. தன்னுடைய அப்பாவின் சுய ரூபம் தெரிய தெரிய அவள் மனதினில் மிகவும் உடைந்து விட்டாள்.

அதற்கு பிறகு எங்கெங்கும் அவனே நிறைந்து விட்டான்.

 அவளை ஆறுதல்படுத்தியது முதல் அவளுக்கு என்றென்றும் துணை நிற்பது என்று சொன்னது வரை அவளையறியாமல் நித்திலாவின் மனதிற்குள் வந்து விட்டான்.

இப்போது கூட தனக்கு ஏதேனும் பிரச்சனை வருமோ என்ற அழுத்தத்தில் தான் அவன் சென்றிருக்கிறான் என அவளின் உள்ளுணர்வு சொல்லியது.

அப்படி இருக்கும் போது தனக்கு நிச்சயம் என்பது அவளுக்கு ஏற்க முடியாததாக இருந்தது.

இதனை எப்படி தடுத்து நிறுத்துவது என புரியாமல் திணறினாள்.

இங்கே தர்மராஜ் சொன்னதற்கு எதற்கும் உணர்வை காட்டாதவன் ஓவியனுக்கு போன் செய்தான்.

“ஓவியா இந்தாளு பேச்சே சரியில்ல” என்று கடுப்பாக கூறினான்.

“அந்த ஆளு என்னைக்கு சரியா பேசி இருக்காரு. நீ என்ன விஷயம்னு சொல்லு” என்று கேட்டான்.

“நித்திலாவுக்கு அடுத்த வாரம் எங்கேஜ்மென்ட் வைக்கணுமாம்” என்றவன் சொல்ல ஓவியன் அதிர்ச்சியில் உறைந்தான். 

“கண்ணா” என்றவனுக்கு ஏனோ அடுத்த வார்த்தை வர மறுத்தது.

அவளைப் பற்றி ஞாபகங்கள் அலை அலையாய் வர பேச முடியாமல் திணறினான்.

“ஓவியா லைன்ல இருக்கியா?” என்றவன் கேட்க அந்தக் குரலில் தன்னை சுதாரித்தவன் “சொல்லுடா” என்றான்.

“நீ தான்டா சொல்லணும். என் தங்கச்சிய என்ன‌ பண்ணலாம்னு ஐடியால இருக்க?”

“கண்ணன்”

“அங்க ஹாஸ்பிடல்ல அத்தனை பேர் முன்னாடி கிஸ் பண்ணியேடா” என்று தர்மராஜ் மேல் இருந்த கடுப்பில் ஓவியனை வறுத்தெடுத்தான்.

“கண்ணா நீ என்னை நம்பலையா?”

“எப்படிடா நம்பறது? கேட்டா லவ் இல்லனு சொல்ற. லிப் டூ லிப் கிஸ் பண்ற?  என்ன தான்டா நினைச்சிட்டு இருக்க?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

“கண்ணா இப்ப கூட நீ சொல்றதை கேட்கறப்ப உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுதுடா. ஆனா லவ் பண்றேனானு தெரியல” என்று பரிதாபமாய் கூறினான்.

கடைசியில் அவனது கூற்றில் இவன் தான் கடுப்பாகி “வைடா போனை” என வைத்து விட்டான்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!