ஒளி 11

 

தனது கடையில் அமர்ந்திருந்தவன்‌ அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தான்.

ஏறக்குறைய பல நாட்கள் ஓய்வுக்கு பின் ஓவியன் தனது கடைக்கு வந்தான்.

 என்னதான் கண்ணன், மகேந்திரன் மூலமாக தனது தொழிலை நடத்தினாலும் வீட்டில் இருந்து எப்போது வெளியே செல்லலாம் என்றிருந்தது.

 இன்றைக்கு தான் சுதந்திர காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தான்.

அவனுக்கு ஒரு இடத்தில் இருந்து வர வேண்டிய பணம் இருந்தது. ஆனால் அவர்கள் இப்போது வரை பணம் கொடுக்கவில்லை. 

மகேந்திரனை அனுப்பியும் சரியான பதில் இல்லாததால் தானே அங்கு பார்க்க போக வேண்டும் என்று யோசித்திருந்தான்.

மற்றொரு ஆர்டருக்கு வேறு இடத்தில் இருந்து சொல்லி இருந்தார்கள்.

 எப்படி இதனை சரி செய்வது என யோசித்தவன் மகேந்திரனை விசாரித்தான்.

அவனோ எப்போது கூப்பிட்டாலும் ஏதோ ஒரு காரணம் சொல்கிறார்கள் என்றான் அவனது பி.ஏ மகேந்திரன்.

“இவ்ளோ நாள்ல நீ திரும்பி எனக்கு ரிமைண்ட் பண்ணனுமா? இல்லையா? இப்படி இருந்தா எப்படி பிஸினஸ் பண்றது?” என்று இறுகிய குரலில் கேட்டவனிடம் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றான்.

அதை பார்த்து அவனுக்கு இன்னும் கடுப்பாக “இன்னும் யார் யார் இது மாதிரி பெட்டிகள் லிஸ்ட்ல இருக்காங்கன்னு எனக்கு எல்லா பிரான்ச்சோட டீடெயில்ஸும் ஒன் ஹவர்ல இங்க இருக்கணும்” என்று சொன்னதும் சரியென தலையாட்டியான்.

அவன் சென்றதும் அவர்களுக்கு கூப்பிட்டவன் “உங்களுக்கு எத்தனை தடவைங்க கால் பண்ணி கேட்குறது? நீங்க பணம் கொடுத்துட்டு ஆர்டர் எடுத்துட்டு போங்க. இல்லேனா ஒரு பொருள் கூட இங்க இருந்து எடுக்க முடியாது. ஏதோ ரெஃபர் பண்ணாங்கனு கொடுத்தா நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல மிஸ்டர்” என்று கர்ஜித்தான்.

“நான் கண்டிப்பா நாளைக்கு அமௌண்ட் கொடுத்துடறேன் சார்” என்று பதறி போய் கூறினான் அவன்.

“இல்லேனா திரும்ப ஆர்டர் கொடுத்திருக்கீங்க தானே? உங்க ஆர்டர் வராது” என்று மிரட்டியவன் போனை கட் செய்தான்.

ஏன் இந்த குளறுபடி என்று யோசிக்க சினேகன் இதனை செய்தானோ என அவன் மேல் சந்தேகம் உண்டானது.

உடனே அவனுக்கு அழைத்தான் ஓவியன். 

“சினேகன் நீ என்னடா நினைச்சிட்டு இருக்க? நான் அவ்ளோ வார்னிங் பண்ணியும் திரும்ப பிரச்சனை பண்ற?” என‌ கேட்டான்.

“ஹேய் இல்லடா. உனக்கு உடம்பு சரியில்லாதது கேள்விப்பட்டு உன்னை பார்க்கணும்னு கூட நினைச்சேன். பட் நீ நான் வந்தா லைக் பண்ணுவியானு தெரியாததால தான் வரல” என்று கூறினான்.

“அதுக்கென்ன நீ வாடா நம்ம கடைக்கு” என்றவன் யார் செய்திருப்பார்கள் என்ற யோசனையில் ஆழ்ந்தான்.

ஓவியன் தொழில் சம்பந்தமாக அடுத்தடுத்து நிறைய மாற்றங்களை யோசித்து வைத்திருந்தான்.

அடுத்ததாக மிகப் பெரிய ஷோரூம் ஆரம்பிக்க தனது கைகாசை எல்லாம் போட்டு நிலம் வாங்கியிருந்தான்.

 அதில் அவன் சேமிப்பு முழுவதும் முடங்கியிருந்தது.

ஒரு இடத்தில் இருந்து வர வேண்டிய பணமும் வராததில் அவன் திணறி போய் இருந்தான்.

இப்போது அடுத்து மேற்கொண்டு வந்த ஆர்டர்களுக்கு அவர்கள் கேட்ட டைல்ஸ் கொடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம் பணமும் போட வேண்டி இருந்தது.

 ஆனால் பணம் பெரிய தொகையாக இருக்கவும் அவன் இரண்டு மூன்று இடங்களில் கேட்டிருந்தான். ஆனால் அவர்கள் இப்போது கையை விரிக்கவும் அவன் குழம்பி நின்றான்.

அதனை பற்றிய யோசனையில் எங்கேயோ வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியாது. திடீரென்று அவனது தேவதை அவன் கண்களில் பட்டாள்.

தர்மராஜின் பிடிவாதம் வென்றதில் அப்போது அவனுக்கு நிச்சய புடவை எடுக்க போன போது நடந்தது நினைவு வந்தது.

அவன் இருந்த மனநிலையில் அவனுக்கு அங்கு வர பிடிக்கவில்லை. தேவையில்லாமல் அங்கு போக வேண்டுமா? என யோசித்தான். பின்னர் தாத்தாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் வந்தான்.

அவனையும், நித்திலாவையும் பார்த்தவர்கள் “சார் உங்க ரீல்ஸ் சூப்பர் சார். உங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷனும் அவ்ளோ அழகா இருந்தது” என்று கூற அவன் ஒன்றும் புரியாமல் திணறினான்.

“என்ன சார் தெரியலையா? இங்க பாருங்க” என்று ஒரு‌ ரீல்ஸை காட்டினாள்.

அங்கே ஓவியனும், நித்திலாவும் “பூட்டி வச்ச குதிரை ஒன்னு…” என்று ஆரம்பிக்கும் பாட்டுக்கு உருகி உருகி காதலித்துக் கொண்டிருந்தார்கள்‌.

 அதனை பார்த்தவன் விழிகள் விரிந்தது.

நித்திலாவின் கண்களில் தனக்கான காதலை பார்த்தவன் அதில் இருந்து விழி எடுக்க முடியாமல் திணறினான்.

“ஓவியா அங்க என்னடா பார்த்திட்டு இருக்க?” என்றவன் கேட்க இங்க வா என்று கண்களால் சைகை செய்தவன் வீடியோவை காட்டினான்.

“டேய் என்னடா? என்ன பண்ணி வெச்சிருக்க?” என்று ரீல்ஸை பார்த்து அதிர்ந்தவன் கத்த ஆரம்பித்தான்.

அவர்களின் சத்தத்தில் நித்திலாவும் அந்த வீடியோவை பார்த்தாள். 

இவர்களை பார்த்ததும் பூரணி முகம் சுழிக்க “ண்ணா என்ன நடக்குது?” என்று தர்மராஜிடம் விசாரித்தார். 

“எங்களுக்கு டிரெஸ் காமிக்காம அங்க என்ன வீடியோ பார்க்கறீங்க?” என கேட்டார்.

“மேம் இப்போ இந்த வீடியோ தான் செம டிரெண்டிங்” என்றவள் அந்த வீடியோவை காண்பிக்க அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.

சீதா அவளை அடிக்க வர ஓவியன் இடையில் புகுந்து தடுத்தான்.

“ஆன்ட்டி அது நான் தான் அந்த வீடியோ பண்ணேன். நீங்க அவங்கள எதுவும் திட்டாதீங்க” என்று சொல்ல அனைவரும் திகைத்து நின்றார்கள்.

அனைவரையும் உற்று கவனித்தவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

சீதா சீற்றத்துடன் நித்திலாவை அடிக்க வர அண்ணாமலை அவரை தடுத்தார்.

“வீட்ல போய் பேசிக்கலாம் சீதா” என்றவர் “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்று கேட்க “அது வந்து தாத்தா…” என்று தயங்கியபடி வந்தவன் “எனக்கு உங்க பையன் மேலயும், ரத்னம் ஃபேமிலி மேலயும் டவுட்டா இருக்கு” என்று கூறினான்.

“ஓவியன் ஏன் அபாண்டமா பழி போடற? அவன் பொண்ணு மேலயே எப்படி?” என்று கேட்க “தாத்தா நீங்க ரெண்டு பேரையும் வாட்ச் பண்ணுங்க. அதுவும் குறிப்பா பூரணி மேடம்” என்று சொன்னான்‌.

அந்த பதிலில் அவருக்கு ஏதோ புரிவதை போலிருக்க சரி என்று தலையாட்டியவர் அவர்களை கண்காணிக்க ஆரம்பித்தார்.

ஏற்கனவே ஓவியனுக்கு அவன் கொடுத்த முத்தம் அடிக்கடி ஞாபகம் வந்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தது.

 இப்போது இந்த வீடியோவை பார்த்ததும் அவளை அள்ளி தனது கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது. அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் அவன் திணறினான்.

அண்ணாமலை ஓவியனிடம் பேசியவர் கண்ணனை பார்த்து தலையசைக்க கண்ணன் அவனை தன்னுடன் கூட்டிச் சென்றான்.

 

“விஷாலுக்கு செலக்ட் பண்ணியாச்சா கண்ணா? இப்போ நீ எங்க போற?” என்று கேட்டவரை முறைத்தவன் “ஓவியனுக்கு டிரஸ் செலக்ட் பண்ணிட்டு இருக்கோம் ஆன்ட்டி” என்று கூறினான்.

“அதுக்குள்ள இந்த மூதேவிக்கு டிரஸ் எடுக்கணுமா?” என்றவரை கோபமாக பார்த்தான்.

“ஆன்ட்டி வார்த்தைய பார்த்து பேசுங்க. அவன் என்னோட கெஸ்ட்” அவனது அழுத்தமான குரலில் திகைத்து போய் ரத்னத்தை பார்க்க அவர் ஓவியனை முறைத்தார்.

விஷாலுக்கு நடப்பதை பார்க்க பார்க்க அவ்வளவு எரிச்சல் வந்தது.

“கண்ணா நீ பண்றது சரியில்ல” என்று கோபமான குரலில் கூறினான்.

“நான் என்ன பண்ணேன்?”

“இவனை எதுக்கு இன்வைட் பண்ணீங்க? அன்னைக்கு அவன் என்னை அடிச்சான்னு தெரிஞ்சும் இன்னைக்கு அவனை கூப்பிட்டு இருக்கீங்களா? நம்ம குடும்பமா வந்திருக்கறப்ப இவன் எதுக்கு இங்க வரான்? இவன் ரீல்ஸ் போட்டு அசிங்கப்படுத்துவான். அப்பவும் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்களா?” என்றவன் கோபமாய்  பேச ஓவியன் உணர்ச்சியற்ற பார்வையில் அவர்களை பார்த்தான்.

‘சூப்பர் பர்ஃபார்மென்ஸ்டா விஷால்’ என்று மனதிற்குள் பாராட்டியவர் வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டார்.

“நீ சொன்னது கரெக்ட் தான்டா. அன்னைக்கு அவன் முந்திக்கிட்டான். அதான் நான் கொடுக்க வேண்டியது மிஸ்ஸாகிடுச்சு. ஏன்டா என் தங்கச்சிய உன்னை நம்பி அனுப்பினா நீ எவனோ தேர்ட் ரேட் பொறுக்கி கிட்ட விட்டுட்டு போவ. நாங்க அமைதியா போகணுமா டா?” என்றவன் இறுகிய குரலில் கேட்டான்.

“அவன் என் ஃபேமிலி டா. என் ஃபேமிலில ஒருத்தனா தான் அவனை நான் இன்வைட் பண்ணியிருக்கேன். மைன்ட் இட்” என்ற‌ அவனது மிரட்டலில் ரத்னத்தின் குடும்பம் அதிர்ந்து நின்றது.

“சின்னப் பையன் தெரியாம பேசிட்டான் தம்பி. விடுங்க” என்று அன்னபூரணி தான் கடைசியில் சமாதானப்படுத்தினார்.

அவரை முறைத்தபடி கண்ணன் ஓவியனை அழைத்துச் சென்றான்.

“குட்டிமா டிரஸ் எடுத்தாச்சாடா?”

இல்லை என்று தலையாட்டியவள் ஓவியனை இமைக்காமல் பார்த்தாள்.

“குட்டிமா என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்ற கண்ணனின் குரலில் இருவரும் தன்னிலை அடைந்தார்கள்.

பிறகு அவள் ஒரு சேலையை எடுத்து காட்டி “இதுல எது நல்லாருக்குனு சொல்லுங்க ஓவியன்?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு எல்லா கலருமே அழகா இருக்கும் நிலாமா” என்றவன் கற்பனையில் முழு அலங்காரத்துடன் அவள் வர‌ பக்கத்தில் மணமகனாக அவன் நின்றான்.

‘டேய் என்னடா நடக்குது? அந்த ரீல்ஸ் பார்த்ததுல இருந்து நீ சரியே இல்ல’ என்ற மனசாட்சியை அதட்டியவன் சட்டென்று தலையை உலுக்கியபடி கண்களில் காதல் வழிய அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் வயிறு எரிந்தது.

 அன்னபூரணியும், தர்மராஜும் வீடியோவை வெளியிட்டு அவர்களை பிரிக்க திட்டம் போட அங்கே அவர்களது காதல் ஜெக ஜோதியாய் வளர்ந்துக் கொண்டிருந்தது.

 இருவரும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார்கள்‌.

ஆனாலும் அவளது முகம் மணப்பெண்ணாக அழுத்தமாக அவன் மனதில் பதிய அந்த நொடியில் அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றான்.

 ஏற்கனவே அவ்வப்போது கனவுக்கும், நினைவுக்கும் இடையில் அவன் தடுமாறிக் கொண்டிருக்க இப்போது அவனது மனம் சொன்ன செய்தியில் திணறி போனான்.

சீதா இவர்களை ஏதும் திட்ட முடியாமல் பல்லை கடித்தபடி அமைதியாக இருந்தார்.

அவளது நினைவில் இருந்தவன் எங்கே கண் சிமிட்டினால் கரைந்து விடுவாளோ என்று அவளை பார்த்தபடி இருந்தான்.

“ஓவியன்‌” என அவன் முன் அவள் கை அசைக்க அப்போது தான் நிஜத்தை உணர்ந்தான்.

உடனே அவனுக்கு தென்றல் காற்று அவனை தழுவ, நான்கைந்து தேவதைகள் அவனை சுற்றி வயலின் வாசிக்க என்று அவன் மனம் போன கற்பனையில் ‘டேய் அடங்குடா. இருபத்தெட்டு வயசாகுது. ஏதோ டீனேஜ் பையன் மாதிரி இமேஜின் பண்ணிட்டு இருக்க?’ என்று அதட்டி அடக்கினான்.

“வா நித்திலா” என்று கனிவான குரலில் அவளை வரவேற்றான்.

“வரப்ப பயங்கர யோசனையில இருந்தீங்க போல. என்ன யோசனை அப்படி உங்களுக்கு?”

“நத்திங் நித்திலா. சும்மா ஷாப் பத்தி தான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்”

“சரி. கண்ணன் கிட்ட ஏன் எல்லாம் க்ளோஸ் பண்ணிக்கலாம்னு சொன்னீங்க?”

“வேண்டாம் நித்திலா. ஏற்கனவே அவரு என் மேல இருக்கற கோபத்தை எப்படி எப்படியோ காட்ட டிரை பண்றாரு. இதுல இதுவும் எதுக்கு?” என்று கேட்டான்.

“அதுக்காக எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு போலாம்னு சொல்லுவீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லடா. அப்படி இல்ல. கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணா அவருக்கு என் மேல இருக்கற கோபம் குறையலாம் இல்லையா?” என்று கேட்டான்.

“ஓவியன்” என்று கேள்வியாய் புருவத்தை உயர்த்தினாள்.

“அது அன்னைக்கு ஆன்ட்டி முகமே சரியில்ல. நான் உங்க வீட்ல கொஞ்ச நாள்‌ ஸ்டே பண்ணியிருக்கேன் நித்திலா. அதை நான் எந்த காலத்திலயும் மறக்க மாட்டேன். அதே மாதிரி உங்கப்பா என்கிட்ட நடந்துக்கிட்டதையும் மறக்க மாட்டேன். நான் கொஞ்சம் தள்ளி இருந்தா உங்க ப்ராப்ளமும் சரியாகும் தானே? அன்னைக்கு அம்மா அவ்ளோ கோபமா இருந்தாங்க” என்று இறுகிய குரலில் கூறினான்‌.

“அதெல்லாம் அம்மாக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணியாச்சு. இல்லேனா அம்மா என்னை விடுவாங்களா? ஃபர்ஸ்ட் எதையும் பார்க்காம கடைய சுத்தி காட்டுங்க ஓவியன்”‌ என்றவள் அவனது கையை அழுத்தி கொடுத்தாள்.

“சரி” என்றவன் “நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா?” என தயங்கினான்.

“சொல்லுங்க”

“உனக்கு விஷாலை பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவனது கேள்வியில் அப்போது தான் நித்திலா தனது நிலையை உணர்ந்தாள். தான் இப்போது அவனிடம் பேசிக் கொண்டிருப்பதும், அன்று நடந்ததும் ஞாபகம் வர தன்னை கேவலமாக நினைக்கிறானோ என நினைத்தாள்.

அவளது கண்களில் தெரிந்த பதட்டத்தில் அவன்‌ அவளது கையை அழுத்தி கொடுத்தாலும் அதை மீறி அவனுக்கு சமாதானம் செய்ய தோன்றவில்லை.

 அவனுக்கு அவள் பதில் தேவையாய் இருக்க அமைதியாய் இருந்தான்.

“நான் அவனை சின்ன வயசுல இருந்து பார்க்கறேன். அவனை அப்படி பார்த்தது இல்ல தான். பட் அப்பா என் நல்லதுக்கு தானே சொல்வாங்கனு அப்படினு நினைக்கிறேன்” என்று எங்கோ பார்த்தபடி சொன்னாள்.

‘ஏன் என்னைய பார்க்க உனக்கு தோணவேயில்லையா?’ என்று அவளை பார்த்தபடி சிந்தித்தான்.

பின் ஒரு சில நிமிடங்கள் சிலையாக அமர்ந்திருந்தவன் தன்னை உலுக்கி சமாதானம் செய்துக் கொண்டான்.

‘ஆனாலும்…’ அவனது மனம் முரண்டியது.

 வெளி வரத் துடித்த வார்த்தைகளை அதட்டி அடக்கி வைத்தான்.

ஒரு புன்னகையை உதட்டில் ஒட்ட வைத்தவன் தனது கடையை அவளுக்கு சுற்றி காட்டினான்.

கடையின் ஒவ்வொரு பாகமும் அவன் உழைப்பை காட்டியது. நிச்சயமாக இவன் மிகப் பெரிய தொழிலதிபனாய் வருவான் என்று அவளது உள்மனம் சொல்லியது.

ஆனாலும் அவன் முகத்தில் இருந்தது என்ன? வரும்போது ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தவன் அவளை பார்த்ததும் அப்படியே மாற்றி விட்டான்.

எது அவன் மூளையை குடைகிறது என்று அவளுக்கு தெரியவில்லை. மனதினில் குறித்து வைத்துக் கொண்டாள்.

அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பியிருக்க அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் ஓவியன்.

#####

அன்று நித்திலாவின் நிச்சயதார்த்தம். இருவரும் பெரும் தொழில் அதிபர்கள் என்பதால் நிச்சயத்தை அவ்வளவு விமரிசையாக அரேன்ஜ் செய்திருந்தார்கள்.

மண்டபத்தில் உள்ள ஒவ்வொன்றும் அவர்களின் பணத்தின் அளவை காட்டியது.

 

நிச்சயத்திற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருக்க அவர்களுடன் ஓவியனும் உதவி செய்துக் கொண்டிருந்தான்.

ஓவியனை பார்த்ததும் உறவினர்கள் தங்களுக்குள் பேசியதை கவனித்தாலும் எதுவும் காதில் வாங்காமல் இருந்தான்.

தன் உயிர் காதலியின் நிச்சயத்தை பார்க்கும் கொடுமை அவனை வதைத்தது. சிரிப்பெனும் முகமூடி அணிந்து அதை சமாளித்தான்.

ரத்னம் அவனை இறுகிய முகத்துடன் பார்க்க அவன் அவரை கண்டு கொள்ளவில்லை.

 

உறவினர்கள் வந்துக் கொண்டிருக்க அவர்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று அவன் உபசரித்துக் கொண்டிருந்தான்.

அன்னபூரணி அவனை எப்படி அங்கிருந்து அகற்றுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.

 அவனைப் பார்க்க பார்க்க அவருக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

நித்திலாவை அவர்களது உறவினர்கள் அலங்காரம் செய்து கூட்டிக் கொண்டு வந்தனர். விஷால் ஓவியனை இறுமாப்புடன் பார்த்தான்.

ரத்னம் ஓவியனை தனியாக கூப்பிட்டார்.

“உனக்கு இங்க என்னடா வேலை?”

“உனக்கு என்ன வேலையோ அதே தான் எனக்கும். நீயும், உன் பொண்டாட்டியும் உங்களுக்கு என்ன‌ வேலையோ அதை மட்டும் பாருங்க. வீணா என் விஷயத்துல தலையிடாதீங்க” என்று கூறினான்.

“டேய் மரியாதையா பேசு”

“உனக்கு எதுக்கு மரியாதை?”

“டேய் இப்ப இடத்தை காலி பண்ண போறியா இல்லையா?”

“நான் இங்கதான் இருப்பேன்”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு வயதான தம்பதியர் வர அவர்களை வரவேற்று உபசரித்தான்.

ரத்னத்திற்கு அதை பார்க்க பார்க்க அவ்வளவு கோபம் வந்தது. ஆனால் சபையில் எங்கேயும் காட்ட முடியாத நிலையில் அமைதியாக நின்றிருந்தார்.

“நீ இங்க என்னடா இவன்கிட்ட பேசிட்டு இருக்குற” என்று அலட்சியமாக கேட்டபடி தர்மராஜ் வந்தார்.

“வாங்க எமதர்மராஜா. இங்க ஒரு உயிர் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கு”

“ஓவியன்”

“அடேங்கப்பா… பொண்ணு நிச்சயத்துக்கு ரொம்ப செலவு பண்ணி இருக்க போலவே”

“என் பொண்ணுக்கு நான் செலவு பண்ணுவேன்டா. உன்னை மாதிரி என் பொண்ணு அட்ரஸ் இல்லாதவனு நினைச்சியா?”

“உன் பொண்ணு மகாராணி தான். அதுல எந்த வித்தியாசமும் இல்லை. ஆனா அவ்வளவு நல்ல பொண்ணு உனக்கு எப்படி பொறந்தது?” என்று நக்கல் அடித்தான். 

“அதெல்லாம் உன்னை போல அனாதை நாய்க்கு சொல்லத் தேவையில்லை”

“ஏய்…” அவனின் கர்ஜனையில் ஒரு நொடி அவரையும் அறியாமல் பின்வாங்கினார்.

“இதுக்கு மேல இந்த வார்த்தை வந்தது…”

“என்னடா பண்ணுவ.‌ சொல்லுடா அநாதை நாயே… ஒன்னும் இல்லாத வெறும் பய உனக்கே இவ்ளோ திமிரா?” என்று அலட்சியத்தோடு கேட்டார்.

“நான் நினைச்சா உன் பொண்ணை தூக்கிருவேன்”

“ஏய்…”

“சைலண்ட் மிஸ்டர்.தர்மராஜ் எதுக்கு இப்போ காது செவிடாகிற மாதிரி கத்துறீங்க? உங்க பொண்ணு எனக்குத்தான். தட்டி தூக்குறதா… இல்ல… நீயாவே பொண்ண கொடுப்பியானு பார்க்கலாம். நீ யார் கூட வேணா நிச்சயதார்த்தத்தை வச்சுக்கோ. ஆனா அவ தான் என் பொண்டாட்டி” என்று அவன் சவாலில் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!