அடுத்த நாள் ஜெகநாதனும், வசந்தாவும் நித்திலாவின் வீட்டிற்குச் சென்றனர். அவரை அனைவரும் வரவேற்றனர்.
வந்தவர் நேராக விஷயத்திற்கு வந்தார்.
“நான் ஜேகே இண்டஸ்ட்ரீஸ் ஜெகநாதன். இவ என் வைஃப் வசந்தா. என் பேரனுக்கு உங்க பொண்ண கொடுப்பீங்களா தர்மராஜ்?” என்று கம்பீரமான குரலில் கேட்டார்.
“என் பேரன் அட்ரஸ் இல்லாதவன் இல்ல தர்மராஜ். அவன் எங்க அட்ரஸை விரும்பாதவன்” என்றவர் அவனது சிறு வயதில் நடந்த அனைத்தையும் சொன்னார்.
அதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஒவ்வொரு முறையும் தான் அவனை காயப்படுத்தும் போது அவனுக்கு எப்படி வலித்திருக்கும் என்று அவருக்கு புரிந்தது.
தான் எவ்வாறு அதனை சரிபடுத்துவது என்று இன்று வரையும் அவருக்கு புரியவில்லை. அவர் செய்தது கொஞ்ச நஞ்சமா என்ன? அவரை எப்படி அவன் அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக் கொள்வான்?
அதுவும் கடைசியாக அவனை கொலை செய்ய முயற்சி செய்தது. கடவுளே… என்ன காரியம் செய்ய நினைச்சேன்… என்று அவரது மனம் அரற்றியது.
தனது சிந்தனையில் மூழ்கி இருந்தவரை ஜெகநாதரின் குரல் கலைத்தது. “தர்மராஜ் என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க? உங்களுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?” என்று கேட்டார்.
“எப்ப கல்யாணம் வைக்கலாம்னு சொல்லுங்க சார்?” என்று தர்மராஜ் புன்னகையுடன் கேட்டார். அதற்கு பிறகு தான் அனைவருக்கும் நிம்மதியானது.
பின் பேச வேண்டியது அனைத்தையும் பேசி முடித்தவர் அங்கிருந்து கிளம்பினர்.
“ஓவியன் உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு”
“தாத்தா என்ன சொல்றீங்க?”
“ஆமாண்டா. நித்திலாவை பேசிட்டு வந்துட்டோம்”
“தாத்தா” என்றவனுக்கு வார்த்தைகள் திணறியது.
“இப்ப சந்தோஷமா மை பேராண்டி?” என்று புருவம் உயர்த்தினார்.
“தாத்தா இங்க வாங்களேன். ச்சே… இப்பன்னு பார்த்து இந்த கை வேற” என்று முகம் சுளித்தவன் அவர் அருகில் வந்ததும் அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.
“பேத்திக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுக்குறடா” என்று கேட்டார்.
“தாத்தா” என்று அவரை முறைத்தான்.
“தாத்தா அம்மா ஒன்னும் சொல்லலையா? அம்மா ஏற்கனவே என் மேல ரொம்ப கோவத்துல இருந்தாங்க” என்று கேட்டான்.
அப்போது அங்கு வந்த மீனா “எனக்கு இப்பவும் அந்த ரத்னம் மேல கோவமா இருக்குது தான். ஆனா இதுக்கு மேல நான் உன்னை இழக்க விரும்பல” என்று கனிவோடு கூறினார்.
“அம்மா”
“சாரிப்பா. இத்தனை நாளா அம்மாவும் அந்த ஆள் மேல இருந்த வெறுப்புல உன்கிட்டயும் நான் சரியா நடந்துக்காம விட்டுட்டேன். அம்மாவை மன்னிச்சிடுடா. உன்னை ஹாஸ்பிட்டல்ல கட்டோட பார்த்ததுல இருந்து என் உயிர் என் கிட்ட இல்ல. அப்போதான் நான் உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன்னு புரிஞ்சுது. எனக்கு நித்திலாவை ரொம்ப பிடிச்சிருக்கு. உண்மைய சொன்னா அவ தான் எனக்கு எல்லாம் புரிய வச்சா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பீங்க” என்றவர் கூற ஓவியன் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“அம்மா” என்று கலங்கிய குரலில் கூறியவன் அவரது மடியில் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரம் கண் மூடி படுத்திருந்தவனுக்கு தர்மராஜ் ஞாபகம் வந்தது.
“தாத்தா தர்மராஜ் இதுக்கு ஒத்துக்கிட்டாரா?” என்று கேட்டான்.
“ஆமாடா”
“ஆனா தாத்தா எனக்கு ஒரு சில கண்டிஷன்ஸ் இருக்குது”
“என்ன ஓவியன் சொல்ற?”
“ஆமா தாத்தா” என்றவன் தனது கண்டிஷனை சொல்ல “சரி தம்பி. நம்ம பேசிக்கலாம் அவர்கிட்ட” என்று அந்த பேச்சை முடித்தார்.
அன்று இரவு கண்ணன் ஓவியனை பார்க்க வந்தான்.
“டேய் மச்சான் சூப்பர் டா மச்சான்” என்று குதூகலக் குரலில் கூறியவன் அவனை கட்டிக் கொண்டு குதித்தான்.
“டேய்… டேய்… என் கைடா… விடுடா… விடுடா…” என்று கத்தினான் ஓவியன்.
“சாரி… சாரி…” என்றவனுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது.
“டேய் ஓவரா குதிக்காத. நான் சொல்றதை கேட்டா தான் கல்யாணம் நடக்கும்” என்று அதிர்ச்சி அளித்தான் ஓவியன்.
“என்னடா சொல்ற?” என்றவன் அதிர்ந்து போய் கேட்க கண்ணன் அவன் சொன்னதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
“சரிடா. நான் வீட்ல சொல்றேன். நீ ஒன்னும் யோசிக்காத” என்றான்.
“இனி நான் எதையும் யோசிக்கிற மாதிரி இல்ல. நீங்க உங்க பொண்ண கொடுக்கலனாலும் எங்க கல்யாணம் நடக்கும். நான் தட்டி தூக்கிருவேன்” என்று தீவிரமான குரலில் கூறினான்.
“டேய் நான் அவளோட அண்ணன்டா”
“இருந்துட்டு போ. யார் வேணாம்னா” என்றவன் “மகனே எங்கேயாவது சொதப்பிச்சு. நான் நித்திலாவுக்காக எது பண்ணவும் தயங்க மாட்டேன்” என்று மிரட்டலான குரலில் கூறினான்.
அவன் பேசியதை கேட்டு வாயில் கை வைத்தவன்
“பொழைச்சிக்குவடா” என்றவன் “எனக்கு இந்த ஓவியனை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவன் அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.
“டேய் பக்கி என்னடா பண்ற?”
“உன்னை நான் என்னென்னவோ பண்ணுவேன் டா” என்றவன் அருகில் வர “ஐயோ தாத்தா காப்பாத்துங்க” என்ற அவனின் ஓட்டத்தில் அந்த இடம் கலகலப்பாகியது.
அடுத்த நாள் அவனைப் பார்க்க தர்மராஜ் வந்தார்.
“உங்களுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா?” என்று கேட்டான்.
“உன் உடம்பு பரவாயில்லையா?” என்று விசாரித்தார்.
“அதை நீ லாரிகாரனுக்கு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சி இருந்திருக்கணும்” என்றவனின் குத்தலில் ஏதும் பேச முடியாமல் அமைதியானார்.
“ஓகே. உங்கள நான் நம்பலாமா?” என்று கேட்டான்.
“ஓவியன் நான் நீ நினைக்கிற தர்மராஜ் கிடையாது. நான் மாறிட்டேன்” என்று ஆதங்கமான குரலில் கூறினார்.
“நான் தான் ஜெகநாதனுடைய பேரனாச்சே. நீங்க மாறி இருக்குறதுக்கு ஆச்சரியப்படணுமா என்ன?” என்று நக்கலான குரலில் கேட்டான்.
அவர் அவனது கேள்வியில் தலைகுனிந்து அமர்ந்தார்.
“ஓகே” என்றவன்
“அந்தாளோட நீங்க எந்த பிசினஸ் டீலிங்கும் வச்சுக்க கூடாது, அதே மாதிரி அவனோட நீங்க எந்த உறவும் வச்சுக்க கூடாது, கல்யாணத்துக்கு நீங்க அந்தாளை கூப்பிடக் கூடாது, முக்கியமா அந்தாள் எனக்கு அப்பன்னு கல்யாணத்துல எங்கயும் வரக்கூடாது” என்று நிறுத்தினான்.
“இப்போ பிசினஸ் டீலிங் இருக்குதேனு கேட்டா அதெல்லாம் க்ளோஸ் பண்ணிட்டேன்னு சொல்லுங்க. கல்யாணத்தை அப்புறம் வைச்சுக்கலாம். அது எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்ல” என்றவன் சொல்ல அவர் அதிர்ந்து போய் அவனை பார்த்தார்.
“என்ன பார்வை? எப்படிடா அவ்வளவு கோடிய விடுறதுனு யோசிக்கிறீங்களோ?” என்று கேட்டான்.
“இல்ல ஓவியன். திடீர்னு எப்படி அவனை அவாய்ட் பண்றதுன்னு யோசிச்சேன்” என்ற கேள்விக்கு அவன் கசப்பாய் புன்னகைத்தான்.
“என்னை அவாய்ட் பண்றதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்கல போலவே?” என்றவன் கூறினான்.
அவர் ஏதும் சொல்ல முடியாமல் அமர்ந்தார்.
“இந்த கண்டிஷன் ஓகேனா கல்யாணம் நடக்கும். இல்லனாலும் உங்க பொண்ண நான் தூக்கிட்டு போய் கல்யாணம் கூட பண்ணுவேன்.ஆனா அவளுக்காக அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன். அப்படி என்னை நீங்க பண்ண வைச்சீங்கன்னா நீங்க உங்க பொண்ண அந்த நிமிஷமே மறந்துருங்க” என்று கூறினான்.
“இல்ல ஓவியன். நீ சொன்னதுக்கு எல்லாம் நான் ஒத்துக்குறேன். நான் இந்த ஒர்க் எல்லாம் முடிச்சுட்டு சொல்றேன். நம்ம மேரேஜ் வேலைய ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.
அடுத்து அவன் டிவியை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவனது செல்போன் அடித்தது.
“சொல்லுங்க மேடம்”
“எதுக்கு கண்டிஷன் போட்டீங்க?”
“காரணமா தான்டா”
“அது எனக்கு புரியுது. அதுக்காக எவ்வளவு நாள் மேரேஜ் போஸ்ட்போன் பண்றது? இங்கே வேற மேரேஜ் ஆகுற வரையும் உங்கள பார்க்க கூடாதாம்” என்று கடுப்புடன் கூறினாள்.
“மேரேஜ் ஆக எவ்வளவு நாள் ஆனா என்ன டார்லிங்? அத்தான் நான் உன்னை பார்க்க வந்திர மாட்டேனா?” என்று ஆசையுடன் கூறினான்.
“எதையாவது சொல்லி சமாளிங்க”
“உண்மை தான்டா. எப்படி அவருக்கு அப்படி தோணுச்சுனு எனக்கு இன்ன வரையும் புரியல. விஷால்னா அவங்க எப்படி இருக்காங்க? நான் ரொம்ப ஆசைப்படுறேனா பேபி?” என்று வருத்தமான குரலில் கேட்டான்.
“ஐயோ ஓவியன்… அதெல்லாம் ஒன்னும் யோசிக்காதீங்க… எவ்வளவு லேட் ஆனாலும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று அவனை தேற்றினாள்.
“உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் தான் உன்னை பார்க்காம எப்படி இருக்க போறேன்னு தெரியல. ஆனா நிலாமா ஒரு 2 இயர்ஸ் கழிச்சு மேரேஜ் வெச்சுக்கலாமா?”
“ஓவியன்”
“இல்லடா. அங்க போகவே வேண்டாம்னு நினைச்சேன். பட் தாத்தா, பாட்டிமா ஃபீல் பண்றதை பார்த்தா எனக்கு கில்டியா இருக்கு நிலாமா. அவங்க இல்லேனா நான் இவ்ளோ தூரம் வந்திருக்க முடியாது. அம்மா டிஸ்டர்ப்ட்டா இருந்த காலத்துல கூட அவங்க இல்லேனா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியல. இப்போவும் தாத்தா நான் கேட்காமையே அவ்ளோ ஹெல்ப் பண்ணாங்க. நான் தப்பு பண்ணிட்டேனா நித்திலா?” என்று தழுதழுப்பான குரலில் கேட்டான்.
“நீங்க ஃபீல் பண்ணாதீங்க ஓவியன். பட் அவங்க ஏற்கனவே ரத்னம் அங்கிளால நொந்து போய் இருப்பாங்க. நீங்க கூட இருந்துருக்கணும்னு தான் நான் சொல்வேன்.அவங்க நீங்க கஷ்டப்படறதையும் பார்த்து, அவ்வளவு நல்லா வளர்த்த பையனும் பாதை மாறி போறப்ப அவங்க ரெண்டு பேரும் இருக்கற ஏஜ்க்கு எவ்ளோ தாங்குவாங்க ஓவியன்? நான் சொல்றது புரியுதா உங்களுக்கு?” என்றவள் கேட்க அவன் அமைதியானான்.
“ஓவியன் ஏன் சைலண்ட்டா இருக்கீங்க? கோபமா இருக்கீங்களா?”
“இல்லடா. இத்தனை நாளாக இதை புரிஞ்சுக்காம இருந்துட்டேன்டா. அவங்க அப்போ அப்போ என் ஃபிளாட்டுக்கு வரப்போ எல்லாம் என்னை வான்னு நிறைய டைம் கூப்பிட்டுருக்காங்க. ஆனா நான் தான் போகல. நீ இப்போ சொல்றப்போ தான் எனக்கு எல்லாம் புரியுது. தேங்க்ஸ் நித்திமா” என்று கனிந்த குரலில் கூறியவன் போனை கட் செய்து விட்டு அவர்களை தேடிச் சென்றான்.
“என்னடா கண்ணா என்ன வேணும்?” என்று வசந்தா எழுந்து வர “உட்காருங்க பாட்டி” என்றவன் அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.
“என்ன ஓவியன்? ஏதும் பிரச்சனையா?” என்று தாத்தா கேட்டார்.
தேடி வந்ததை வைத்தே தன்னை புரிந்துக் கொண்டவரை வியப்பாக பார்த்த ஓவியன் “என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. நான் இவ்வளவு நாளா சுயநலமா இருந்துட்டேன். உங்களோட நான் இருந்திருக்கணும். என்னை மன்னிச்சிடுங்க தாத்தா” என்று கேட்டான்.
“நீ எங்க கூட இருக்குறேன்னு சொன்னதே போதும்டா. மன்னிப்பெல்லாம் எதுக்கு கேட்குற?” என்று கனிவான குரலில் கூறியவர் அவனை அரவணைத்துக் கொண்டார்.
