காதல் 9

நடாஷா அவ்வளவு சமாதானம் கூறிய பின்பும் ஜியாவின் கோபம் மட்டும் சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது. விமானம் தரையிறங்குவதற்காகத் தயாராக இருக்க, ஆதர்ஷ் ஜெய்ப்பூர் ஏர் ட்ராபிக் கண்ட்ரோலர்க்கு (ATC) தொடர்புகொண்டு, 

“ATC ஜெய்ப்பூர் திஸ் ஐஸ் CJ 345 டெல்லி டு ஜெய்ப்பூர் ரெடி ஃபார் லேண்டிங், ஓவர் அண்ட் ஓவுட்.” என்று அனுமதி கேட்க, அங்கே பதிலுக்கு அவர்கள், “எஸ் CJ 345 ட்ராபிக் வாஸ் கிளீயர்ட், லேண்டிங் இஸ் க்ராண்ட்டட்.” என்று அவர்கள் அனுமதி கொடுக்க, 

பயணிகளுக்கும் கேபின் க்ரூவ் மெம்பெர்ஸ்க்கு அறிவிப்பை பின்வருமாறு தன் பாணியில், 

“லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் இஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ், நவ் வீ ஆர் ரெடி ஃபார் லேண்டிங் இன் ஜெய்ப்பூர் கேபின் க்ரூவ் ப்ளீஸ் பிரிப்பர் ஃபார் லேண்டிங்.” என்று கூறினான். அவனது அறிவிப்பிற்குப் பிறகு அவர்கள் மீண்டும் பயணிகளைத் தங்களின் இருக்கைகளில் அமர சொல்லி, சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளுமாறு அறிவுப்பு கொடுத்தனர். 

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மிகவும் பத்திரமாக விமானம் தரையிறங்க, நடாஷாவிடம் தவறாகப் பேசிய அந்த நபர், நடாஷாவையும் ஜியாவையும் ஏளனமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல முனையும் நேரம் பார்த்து, ஏர்போர்ட் போலீஸ் செக்யூரிட்டி அவனைக் கைது செய்ய,

அவன் அவர்களிடம், “என்ன சார், என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க?” என்று போலீஸிடம் கேட்க,

அவர்கள், “ஏர்ஹோஸ்டஸ்கிட்ட தகாத முறையில பேசினதுக்காக உங்க மேல மிஸ் நடாஷா கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க, ஸோ நீங்க கோஆப்ரேட் பண்ணிதான் ஆகணும்.” என்று கூறி, அவனை விசாரணை அறைக்கு இழுத்து செல்ல நடாஷா, ஜியா, ஆஷிக், ஆதர்ஷ் மற்றும் அவர்களுடன் இருந்த சக பணியாளர்களும் உடன் சென்றார்கள். 

விசாரணை அறையில் கைது செய்யப்பட்ட அந்த நபர், “சார் என் பேரு திலீப், டெல்லியில சாப்ட்வெர் என்ஜினீயர். லீவ்ல அம்மா, அப்பாவை பார்க்க வந்திருக்கேன். நான் ரொம்ப நல்லவன், நீங்க நினைக்கிற மாதிரியான ஆளு நான் இல்லை. இவங்க பொய் சொல்றாங்க, நியாயப்படி கம்ப்ளெயின்ட் நான்தான் குடுக்கணும். 

இவங்கதான் என் கன்னத்துல அறைஞ்சாங்க.” என்று ஜியாவைக் கை காட்ட, போலீஸ் ஆதிகாரிகள் அவனிடம், “அவங்க அடிக்கிற அளவுக்கு நீ என்ன பண்ணினனு சொல்லு.”

“நான் ஒன்னும் பண்ணலை, குடிக்கத் தண்ணி கிடைக்குமானுதான் கேட்டேன்.” என்று அவன் கூற,

ஜியா ஆவேசத்துடன், “டேய் பொய் சொன்ன அவ்வளவுதான்…!” என்று மிரட்ட, 

நடாஷா, “அவன் பொய் சொல்றான். சாப்பாடு குடுக்கும் போது வேணும்னே என் கையைப் பிடிச்சான். அப்புறம் சீட் பெல்ட் போடும் போது ஷார்ட் ட்ரெஸ்ல அழகா இருக்க, இன்னைக்கு நைட் நான் ப்ரீதான் கம்பெனி குடுக்குறியா? எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்னு சொன்னான். அதனாலதான் ஜியா மேடம் இவனை அறைஞ்சாங்க.”

“ஆமா சார், நடாஷா சரியாதான் சொல்றாங்க. அவன் அப்படித்தான் கேட்டான், அதை என் கண்ணால நான் பார்த்தேன்.” என்று ஜியா கூற,

நடாஷா, திலீப்பிடம், “நான் ஏர் ஹோஸ்டஸ்தான், என்னோட வேலை கஸ்டமர்ஸ்குச் செர்வ் பண்றதுதான். ஆனா அதுக்காக என்னுடைய நிலைமைய யூஸ் பண்ணிக்க நினைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன். டூ யு கெட் தட்!” என்று கண்களில் கோபம் தெறிக்க கூறியவளைக் கண்டு சில நொடிகள் ஆதர்ஷ் பிரமித்துப் போனான். பிரச்சனை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கண்ணீர் வடிக்கும் பெண்களின் மத்தியில் நடாஷாவின் செயல் ஆதர்ஷை கட்டி போட்டது என்றுதான் கூறவேண்டும். 

டொமஸ்டிக் ஏர் போலீஸ் ஸ்டேக்ஷனில் உள்ள போலீஸ் அதிகாரி, திலிப் மீது IPC செக்ஷன் 509 (பெண்ணைத் தகாத வார்த்தையாலும் தவறான செய்கையாலும் இழிவுப்படுத்துதல்) மற்றும் IPC 345A (பாலியல் துன்புறுத்தல்) பிரிவின் கீழ் FIR பதிவு செய்து, அவனை கைது செய்தனர். 

சக ஊழியர்கள் அனைவரும் நடாஷாவின் துணிச்சலையும் அறிவுபூர்வமான செயலையும் கண்டு வியந்து பாராட்டினர். 

அப்பொழுது நேஹா நடாஷாவிடம், “இந்த மாதிரி எங்களுக்கு நடந்த அப்போ எல்லாம் நாங்க கோபப்படுவோம், அழுவோம். அப்புறம் மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவோம். ஆனா நீ பண்ணின மாதிரி இவ்வளவு பொறுமையா நாங்க ஹேண்டில் பண்ணினதே இல்லை. உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம் இவனை மாதிரி ஆளுங்கள்லாம் ஏன் சகிச்சுக்கணும்னு தோனுது. எங்க எல்லாருக்கும் இது ஒரு நல்ல இன்ஸ்பிரெஷன்.” என்று கட்டி தழுவிக்கொள்ள,

நடாஷா, ஜியாவிடம், “பல நேரங்கள்ல பிரச்சனைகளை எமோஷனலா திங்க் பண்ணாம இன்டெலிஜென்ட்டா சால்வ் பண்ண வேண்டிருக்க, நீங்க எமோஷன்ல அவனை அடிச்சுட்டீங்க. பதிலுக்கு அவன் உங்களை ஏதாவது பண்ணிருந்தா என்னால யோசிக்கக் கூட முடியலை மேம். நான் ரொம்பப் பயந்துட்டேன். ஆனா எனக்கு நீங்க ரொம்ப சப்போர்ட் பண்ணுனீங்க, அதுக்கு எப்பவும் நான் கடன்பட்டிருக்கேன்.” என்று நடாஷா கூற, 

ஆஷிக் அவளிடம், “இதையெல்லாம் நீ ஒரு இன்டெலிஜென்ட்டான ஆளுகிட்ட சொல்லணும் நடாஷா.” என்று ஜியாவை ஓரக்கண்ணால் பார்க்க, 

ஜியா, ஆஷிக்கை பார்த்தவாறே, “எல்லாருக்கும் இன்டெலிஜென்ட்டா ஹேண்டில் பண்ண கூடிய ப்ராப்ளம் மட்டுமே வர்றது இல்லை நடாஷா.” என்று அவளது தோளில் மெல்ல தட்டி, மெலிதாய் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள். 

அவள் சென்றதும் நடாஷா, ஆஷிக்கைப் பார்த்து, “என்ன சார் நீங்க, பாருங்க மேம் கோபமா போறாங்க.”

“உங்க மேம்கு கோபப்பட சொல்லித்தரணுமா என்ன? என் பேரை சொன்னாலே அவளுக்கு ஆட்டோமெட்டிக்கா கோபம் வரும், அவளை விடு.” என்றவன், “கங்கிராட்ஸ் நடாஷா! ஐயம் ஸோ ப்ரவுட் ஆப் யு.” என்று தன் பங்கிற்கு நடாஷாவைப் பாராட்டிவிட்டு, ஆதர்ஷிடம் வாஷ் ரூமிற்க்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

தன்னைப் பார்வையாலையே ஆதர்ஷ் விழுங்கி கொண்டிருப்பதைக் கண்ட நடாஷாவிற்கு உள்ளுக்குள் எதோ செய்ய, ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவள் பதிலுக்குத் தானும் பார்க்க, அந்தப் பூவையின் காந்த பார்வையின் வீச்சைத் தாங்க முடியாதவன், உதட்டில் புன்னகையைத் தழுவ விட்டவாறே அவளின் அருகில் வந்து, 

“அழகா இருக்கனு சொன்னா ஒரு குற்றமா? அதுக்குப் போய் அந்தப் பையனை ஜெயிலுக்கு அனுப்பிட்டியேமா?” என்று கூற, பதிலுக்கு அவள் செல்லமாய் முறைப்பது தெரிய, 

“ஏய் சாரி, சும்மா கிண்டல் பண்ணினேன். எல்லாரும் உன்னைப் பாராட்டினாங்க, நானும் அதையே சொன்னா உனக்குப் போரடிச்சுரும் அதான் சும்மா…” என்ற ஆதர்ஷை பார்த்து புன்னகைக்க, 

ஆதர்ஷ் அவளிடம், “ஒன்னு சொல்லட்டா?”

“ம்ம்…”

“நீ சிரிக்கும் பொழுது அழகா இருக்க. ஆனா என்னை ஜெயிலுக்கெல்லாம் அனுப்பிறாத.” என்று சிரித்தவனைப் பார்த்து சிரிக்க,

ஆதர்ஷ் அவளிடம், “என்கூட ஒரு கப் காஃபி சாப்பிடுறியா?” என்று சிறு தயக்கத்துடன் கேட்க,

“ஆனா ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடுச்சே?” என்றவளைப் பார்த்து ஆதர்ஷ், 

“அதுக்கு இன்னும் டைம் இருக்கு, ஒரு கப் காஃபி தானே?” என்றவனைப் பார்த்து புன்னகைக்க, இருவரும் சென்று ஒரு டேபிளில் அமர்ந்துகொண்டு காஃபிக்காகக் காத்துக்கொண்டிருக்க அப்பொழுது ஆதர்ஷ் அவளிடம், 

“இருந்தாலும் நீ பண்ணினது ரொம்ப பெரிய விஷயம்னுதான் சொல்லணும். இப்படி ஒரு சூழ்நிலையை இவ்வளவு பொறுமையாவும் பக்குவமாவும் தைரியமாவும் நீ ஹேண்டில் பண்ணுவனு நான் எதிர்பார்க்கவே இல்லை. 

எல்லாப் பொண்ணுங்களும் தங்களோட பிரச்சனைய ஹேண்டில் பண்றதுக்கான மனவலிமையைக் கண்டிப்பா வளர்த்துக்கணும். அது பொண்ணுங்களுக்கும் ரொம்பவே அவசியம்.” என்றவனை, நொடிப்பொழுது கூடக் கண்ணிமைக்காமல் நடாஷா பார்த்துக்கொண்டிருக்க,

ஆதர்ஷ் அவளிடம், “ஏய் என்னாச்சு? அப்படிப் பார்க்குற? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?”

“என்னால நம்ப முடியலை.”

“எதை நம்ப முடியலை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தவனைப் பார்த்து,

“இதை, இந்த நிமிஷத்தை, நீங்க என்கூட உட்கார்ந்து காஃபி சாப்பிடுறத, நீங்க இதுவரை தனியா ஒரு பொண்ணுகூட இப்படி காஃபி சாப்பிட்டு நான் பார்த்தது இல்லை.” என்று ஆச்சரியமாய் விழி விரித்தவளிடம் மிகவும் இயல்பாக,

“மனசுக்கு தோனணும்ல…” என்று ஆதர்ஷ் கூறியதில் மெலிதாய் புன்னகைக்க,

ஆதர்ஷ் காஃபியை அருந்தியவாறே, “ஆமா நடாஷா, உனக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியுமா என்ன?” என்று கேட்க, அதற்கு நடாஷா என்ன பதில் கூறவேண்டும் என்று புரியாமல் பார்க்க, ஆதர்ஷ் தன் புருவத்தை உயர்த்தி, ‘நான் கேட்டதற்குப் பதில் எங்கே’ என்பது போல் தன் கண்களாலே பார்க்க, 

“டைம் ஆகிடுச்சு.” என்று எழுந்தவளைப் பார்த்து ஆதர்ஷ்,

“ம்ம் நில்லு, நானும் உன்கூடத் தானே வரப்போறேன் சேர்ந்தே போகலாம்.” என்று அவளுடன் செல்ல, இருவருக்கும் இடையே இருக்கரங்கள் உரசுகின்ற அளவிற்கு மட்டுமே இடைவெளி இருந்தாலும், அங்கே மௌனம் மட்டுமே வார்த்தையாகி கண்களாலே பேசிக்கொண்டனர். இருவருக்குமே இது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. 

அவர்களிடம் வாஷ்ரூமிற்கு சென்று வருவதாகக் கூறியவன், ஜியாவைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தான். எங்கே தேடியும் கிடைக்காத ஜியா லேடிஸ் வாஷ்ரூமில் இருந்து விமான ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குச் செல்வதைக் கண்ட ஆஷிக் புன்னகைத்தவாறே, அவள் பின்னாலே சென்று அவளது காதில் சட்டென்று, “ஹாய்!” என்று கூற,

அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் செல்ல, மீண்டும் சென்று அவளது முன்னாள் நின்றவன், “நான் ஒன்னும் பண்ணமாட்டேன்.” என்று கண்ணடிக்க,

“என்ன வேணும் உனக்கு?”

“அது நிறையா வேணும், இப்போதைக்கு ஒன்னே ஒன்னு…”

“என்னைத் தொல்லை பண்ணாம நேரடியா விஷயத்துக்கு வா.”

“சரி கூல் கூல்… அந்தப் பையனை ஒரு வழி பண்ணிட்ட போல?”

“இதைக் கேட்கதான் வந்தியா?” என்றவள் அங்கிருந்து செல்ல போக,

“இல்லை இல்லை… வேற ஒன்னும் கேட்கணும். அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன், நீ லண்டன் ரிடர்ன்ஸ்னு எல்லாரும் சொன்னாங்க. என்ன ஏதும் வெள்ளைக்காரனையோ கருப்பனையோ உஷார் பண்ணிட்டியா?” என்று அவளைக் கிண்டல் செய்வது போல் நினைத்துக் கொண்டு தன் மனதில் உள்ளதைக் கேட்க,

அவன் ஏன் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள், “ஆமா, ஆனா அவரு வெள்ளைக்காரனும் இல்லை கருப்பனும் இல்லை. அவருக்கு நம்ம ஊர், என்கூட ஒன்னா ஒர்க் பண்ணினவரு. அவரு இப்போ ஆஸ்திரேலியால இருக்காரு, குழந்தைங்க படிப்புக்காக நான் இந்தியால. அவரு நெக்ஸ்ட் இயர்ல இருந்து இந்தியாவே வந்திருவேன்னு சொல்லிருக்காரு.” என்றவள், அவன் ஏதும் பதில் கூறுவதற்குள் மேலும் தொடர்ந்து,

“பையன் ஃபர்ஸ்ட் படிக்கிறான், பொண்ணு LKG. ரெண்டு பேரையும் விக்காசுலதான் சேர்த்திருக்கேன்.” என்றவள் தன் கை கடிகாரத்தைப் பார்த்து, 

“ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு ஆஷிக், நான் போகணும்.” என்று இதை அனைத்தையும் கொஞ்சம் கூடச் சிறு உளறல் இல்லாமல் அவனது கண்களையேப் பார்த்து ஜியா கூற, ஆஷிக்கின் முகத்தில் சோகம் குடிகொண்டது. 

அவளோ அதை ரசித்தவாறு அங்கிருந்து செல்ல, சில நொடிகளில் அவன் பக்கம் திரும்பி, “பாரு நீயும் நானும் ஒரே ஃப்ளைட்டுக்குதான் போகணும், ஆனா நான் மட்டும் எதோ தனியா போற மாதிரி சொல்றேன். உனக்கும் டைம் ஆச்சுல, வா சேர்ந்தே போகலாம்.” என்று வேண்டும் என்றே கேட்க, கவலையாய் இருந்த ஆஷிக் அவளிடம்

“இல்லை ஜியா நீ போ, நான் ஆதர்ஷ் கூட வந்துருவேன்.” என்று கூற,

“ஓகே, பாய் ஆஷிக்!” என்று தன் புன்னகையை அடக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றவள், கொஞ்சம் யோசித்துவிட்டு அவன் பக்கம் திரும்பி, “ஆஷிக் என் ஹப்பி பேரு கார்த்திக், ஸோ இனிமே என்னைக் கூப்பிடும் போது ஜியா கார்த்திக்குனே கூப்பிடு, ஐ லைக் தட்.” என்று அவள் கூறியதைக் கேட்ட ஆஷிக் நொறுங்கி போனான். பதில் ஏதும் கூற முடியாமல் விக்கி விதைத்து, வாய் வார்த்தை ஏதும் இன்றி மௌனமாய் நின்றான்.

***

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!