சென்னையில் இருந்து ஸ்டடி ஹாலிடேஸிற்காக வந்தவளை அவளது பெற்றோர் கண்டு கொண்டதும் கௌதம் நினைவில் அவள் கண்கள் கலங்கியது.
“என்னடா? என்னாச்சு?” என்று பெற்றோர் இருவரும் பதறி போய் கேட்டனர்.
அவர்களது பதற்றத்தில் சுதாரித்தவள் “ஐயோ அப்பா… உங்கள பாத்த ஆனந்தத்ததுல கண் கலங்கிடுச்சு. டயானா உங்க சேவகர்கள் கிட்ட சொல்லி எனக்கு காபி கொண்டு வர சொல்லுங்க” என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள்.
“என் மகளுக்கு மத்தவங்க எதுக்கு அம்மா நான் இருக்கறப்ப?” என்று கேள்வி கேட்டவரை “சோ… சுவீட் மா” என்று கொஞ்சினாள்.
“சரிடா. போய் பிரஷ் பண்ணு. காபி போடறேன்.கொஞ்ச நேரம் தூங்கிட்டு வா” என்று சொன்னவரிடம் சரி என்று தலையாட்டியவள் தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தாள்.
அவள் வந்ததும் டயானா காபியை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை ரசித்து சுவைத்தவள் “அம்மா இத்தன நாளா இந்த காஃபிய எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?” என்றவள் அவரது கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டாள்.
பதிலுக்கு தானும் அவளது கன்னத்தில் டயானா முத்தம் வைக்க “பேபி அப்பாக்கு” என்று டேவிட் வந்து நின்றார்.
அவருக்கும் அவள் முத்தம் குடுக்க அந்த அழகான தருணத்தை அவள் மனம் தத்தெடுத்து கொண்டது.
காஃபியை குடித்து விட்டு தனது அறைக்கு வந்து படுத்தவள் இரவு முழுவதும் விழித்து எழுந்த அசதியில் நன்றாக உறங்கினாள்.
அவள் எழும் போது மதியம் ஆகி இருந்தது.
எழுந்ததும் மணியை பார்த்தவள் ‘அடடா… கிளி ரெசிபிய மிஸ் பண்ணிட்டோமே’ என தலையில் அடித்து கொண்டாள்.
ஜென்னி ஹாலுக்குள் வர அங்கு டயானா மதிய உணவை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
“வோவ்… அம்மா… வாட் எ அரோமா” என்று வாசம் பிடித்தாள்.
அதில் புன்னகைத்தவர் “உன் பெரியம்மா கொடுத்து விட்டாங்கடா” என்றார்.
“சோ சுவீட் பெரிம்மா” என்று சிலாகித்தவள் உணவை ரசித்து சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டு கொண்டிருககும் போது செலீனிடம் இருந்து போன் வந்தது.
“சொல்லு செல்”
“நாங்க ஃபைவ் ஓ கிளாக் வரோம். ரெடியா இரு. நம்ம ரவுண்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றாள்.
“ஓகே. டன்” என்றவள் சிறிது நேரம் அம்மாவிடம் அளவளாவி விட்டு இருவருடனும் கிளம்பி விட்டாள்.
அவள் கிளம்பும் போது சாமிடம் இருந்து போன் வந்தது.
“சாம்”
“ஏன்டி ஊருக்கு போனா உலகத்தையே மறந்துடுவியா? உனக்கு எத்தன டைம் கால் பண்றது?” என கேட்டான்.
“டேய் கால் பண்ணியா? சாரி சாம். கிளி சமையல்ல உலகத்தையே மறந்திட்டன்” என்று சொன்னவளை தலையில் அடித்து கொண்டான்.
“அடி திண்ணி பண்டாரம்… உனக்கென்ன இங்க ஒண்ணுமே வாங்கி கொடுக்காம இருக்கேன்? என்னடி இப்படி பேசிட்டு இருக்க?” என்று கடிந்தான்.
“எப்டி நாங்க? ஏன்டா நாம நம்ம ஊருக்கு வரதே ஃபுட்ட டேஸ்ட் பண்ண தான். அப்றம் என்ன?” என்றவள் “சரி. நீ சாப்டியா?” என விசாரித்தாள்.
“ம்ம்… ஆச்சு ஆச்சு” என்று சலிப்பான குரலில் சொன்னான்.
“ஏன்டா இவ்ளோ சலிச்சிக்கிற?” என்றவளிடம் “அத விடு” என்றவன் “எங்க ரெடியாகிட்ட?” என விசாரித்தான்.
“நாங்க எங்க போவோம்னு தெரியாதா?” என்றவள் கேட்க அவன் ஏதோ சொல்ல வரவும் அந்த பக்கம் யாரோ அவனை கூப்பிடும் குரல் கேட்டது.
“சரிடி. என்ஜாய்” என்றவன் உடனே அழைப்பை துண்டித்தான்.
அப்போது ஜெசிகாவும், செலீனும் அவள் வீட்டிற்கு வந்தனர்.
“என்ன ஜெனி ரெடி ஆகிட்டாயா?” என்று கேட்டபடி வந்தனர்.
“ஹேய் வாங்கடா… எப்டி இருக்கீங்க?” என்று விசாரித்தார்.
“நல்லா இருக்கோம் சித்தி. சித்தப்பா நல்லாருக்காரா?” என்று இருவரும் விசாரித்தனர்.
“ஏய்… போதும்டி. டெய்லி வீடியோ கால் பாத்திட்டு புதுசா விசாரிக்கறாளுங்க? பாய்மா” என்றவள் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றாள்.
“எதுக்குடி இழுத்துட்டு வர? சித்திக்கு ஒரு ஹக் கூட குடுக்கல?” என்று ஜெசிகா கோபமானாள்.
“ரொம்ப பாச மழ பொழியாதிங்க. எனக்கு தெரியாதா? நீங்க போட்டு குடுக்க தானே வந்திருக்கீங்க?” என்று கோபமாய் கேட்டாள்.
“ஏன் அப்படி நாங்க போட்டு குடுப்போம்?” என யேசனையாக கேட்டாள்.
அதை கேட்டதும் கௌதமின் நினைவில் அவள் முகம் சுருங்கியது.
“ஏன் உனக்கு உன் லவ் பத்தி போட்டு குடுப்போம்னு பயமா? நாங்க இத்தன நாளா அவன்கிட்ட நீ ஏன் பேசறே? டைம் ஸ்பெண்ட் பண்றனு ஏதாவது கேட்டோமா?” என்று ஜெசிகா கேட்டாள்.
இல்ல என்று ஜெனிஃபர் தலையாட்டினாள்.
“நீ இத்தன நாள்ல எங்களுக்கு புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா?” என்று கோபத்துடன் கேட்டவள் சாமுக்கு போன் செய்தாள்.
“என்னடி? ஏன் போன் பண்ணிட்டு இருக்க? பேசன்ட பாத்திட்டு இருக்கேன்ல” என்று கடித்தபடி போனை அட்டென்ட் செய்தான் சாம்.
“அது ஒண்ணும் இல்லடா. மேடமுக்கு அவ லவ் மேட்டர நாம் வீட்ல சொல்லிடுவோம்னு பயம் வந்துடுச்சு” என்று சொன்னாள்.
“அப்டியே சொன்னா தான் என்ன? நம்மள நம்பி தான அவள அனுப்பி இருக்காங்க? என்ன ஜென்னி நான் சொல்லிரட்டுமா? அவன் ஒரு ரவுடி, பொறுக்கி, ஜெயிலுக்கு போயிட்டு வந்தானு” என்று ஜெனிஃபரிடம் கேட்டான்.
ஜென்னி அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
“எங்களுக்கு எப்போ, எப்டி, அந்த சிட்சுவேஷன்ல சொல்லணும்னு தெரியும். இது நீ படிக்கிற வயசு. அந்த ஸ்டடீஸிக்கு உன் லவ்னால ப்ராப்ளம் வந்தா நாங்க வீட்ல சொல்லவும் தயங்க மாட்டோம். மைன்ட் இட்” என்று இறுகிய குரலில் சொன்னவன் போனை வைத்து விட்டான்.
இவளோ பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள்.
“என்னடி மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்க? வா. வந்து தொல” என்று திட்டியவள் முன்னே கிளம்ப இவளோ அமைதியாக நின்றாள்.
“என்னடி இன்னும் நின்னுட்டு இருக்க?” என்று செலினா கேட்டாள்.
“நீங்க… நீங்க போங்க” என்று தடுமாறியபடி கண் கலங்க சொல்லியவள் வீட்டினுள் செல்ல போக அவளை செலினா தடுத்தாள்.
“ஏய் எதுக்கு இப்போ கண் கலங்குது? நாங்க உண்மைய தானே சொன்னோம்?” என்று செலினா வலியுறுத்தினாள்.
“இல்ல. நீங்க போட்டு வாங்க” என்று அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.
“ஜெசி இவ ஏன் இப்படி பண்றா?”
“விடுடி. அவளுக்கு என்ன பிரச்சினையோ? இந்த 2,3 மந்தாவே அவ சரியாகவே இல்ல. விடு. பாத்துக்கலாம்” என்றவள் ஜென்னியை தேடி சென்றாள்.
அவள் ஏற்கனவே கௌதமின் செய்கையில் கலங்கி கொண்டிருந்தவள் இப்போது இவர்கள் பேசியதும் சேர்த்து அவளுக்கு அழுகை கட்டுக்கடங்காமல் வந்தது.
அறையினுள் வந்தவள் தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.
அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் பதறி போய் வந்தவர்கள் “ஏய் இப்ப ஏன்டி அழுற? உன்ன நாங்க அப்படி விட்ருவோமா?” என ஆதங்கத்துடன் கேட்டாள்.
இல்ல என்று தலையாட்டியவளிடம் “அப்றம் எப்படி நீ சித்திட்ட நாங்க சொல்லுவோம்னு நினைக்கலாம்?” என்று ஜெசிகா கோபமாக கேட்டாள்.
அதற்கு ஜென்னிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
சமீப நாளைய கௌதம் குறித்தான ஞாபகம் வந்தாலே அவளுக்கு பதற்றம் மட்டுமே மிஞ்சும். அப்படி பதற்றத்தில் தான் தன்னையும் மீறி அவர்களை காயப்படுத்தி விட்டோம் என்று புரிந்தது.
ஆனால் அவளது பிரச்சனையை முழுதாக அவர்களிடம் பகிரவும் முடியவில்லை.
அதனால் என்ன சொல்வதென புரியாமல் திணறினாள்.
அவளது பரிதவிப்பான முகத்தை பார்த்ததும் அவர்கள் இருவரும் அவளை அணைத்து கொள்ள அவர்கள் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
அவளை சமாதானம் செய்து ஒரு வழியாக அவர்கள் புறப்பட்ட போது இருட்டியிருந்தது.
அவர்களுடைய ஃபேவரிட் புட் ஸ்ட்ரீட்டுக்கு சென்று முட்டை காளானில் ஆரம்பித்து அத்தோ, பேஜோ வரை என்னென்ன அங்கு சுவைக்க முடியுமோ அனைத்தையும் சுவைத்தார்கள்.
ஜென்னியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை சமாதானப்படுத்தி அவளுக்கு என்ன பிடிக்குமோ அதனை சாப்பிட செய்து வரும் போதும் அவளுக்கு பிடித்த ரெஸ்ட்ராடன்டில் பன் பரோட்டா வாங்கி என்று அவளை பிரச்சனையை மறக்க செய்திருந்தார்கள்.
ஆனாலும் அவர்களுக்குள் என்னவோ நெருடலாக இருந்தது.
அவளை ஒரு வழியாக வீட்டில் விட்டவர்கள் அவளோடு கூடவே இருந்து அவள் தூங்கியதும் தான் வீட்டுக்கே சென்றார்கள்.
போனவுடன் சாமுக்கு உடனடியாக உடனடியாக போன் செய்தார்கள்.
“டேய் அவ சரியே இல்லடா. இன்னைக்கு நம்ம சொன்னதுக்கு அவ்ளோ அழுகைடா ஜென்னி. இவ்ளோ நாள்ல அவ இப்படி அழுது பாத்ததில்லடா” என்று புலம்பினாள் ஜெசிகா.
“ஏய்… என்ன சொல்ற? அழுதாளா?” என்று பதறிபோய் கேட்டான்.
“ஆமாடா. அவள சமாதானம் பண்ணி ஃபுட் ஸ்ட்ரீக்கு கூட்டிட்டு போய் அங்கேயும் கூட ஏனோ தானோனு தான் இருந்தா. எப்படியோ லாஸ்ட்டா வர்றப்ப ஃபுல்லா ஓகே ஆகிட்டா. அவ ஓகே தான? நம்ம கிட்ட ஏதும் மறைக்கிறாளா?” என்று கேட்டாள்.
“ஏன்டி சமாதானம் பண்ணது நீங்க. என்கிட்ட ஓகே தான் எனக்கு என்னடி தெரியும்?” என்று சாம் கேட்டான்.
“டேய் நாளைக்கு நீ அவ கிட்ட பேசுற” என்று ஜெசிகா கூறினாள்.
“நானே நைட் போன் பண்ணலாம்னு இருந்தேன்டி. விடு பார்த்துக்கலாம்” என்று கூறியவன் “மேரியத்த ஃபேமிலி வராங்கலாமா?” என்று விசாரித்தான்.
“ஆமாடா வராங்கன்னு சொல்லி இருக்காங்க. நீயும் வந்து இருக்கலாம்” என்றாள்.
“ஓகே நெக்ஸ்ட் டைம் நான் பாத்துக்குறேன்” என்று போனை கட் செய்தவனுக்கு ஜென்னியை நினைத்ததும் கௌதமின் ஞாபகம் தான் வந்தது.
‘அவன் ஏதாவது பண்ணி இருக்கட்டும். மவனே உனக்கு சங்கு தான்டா’ என்று கருவியவன் வேலையை பார்க்க சென்றான்.
தொடரும்
