16.. ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில் : இவள் இப்படியே அந்த பைல்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, விதுரனிடம் சைன் வாங்குவதற்காக வந்த சுனில் இவள் நிற்பதைப் பார்த்தான்.
இனி..
“என்ன அப்படி பார்த்துட்டு இருக்க, ஸ்ரீ?” என்று கேட்டான் சுனில்.
அவன் குரலில் நினைவுக்கு வந்தவள்,
“இவ்வளவு பைலையும் இன்னைக்கு ஒரே நாள்ல பார்க்கணுமா?” என்று கேட்டாள் ஸ்ரீனா.
அவனும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைல்கள் அனைத்தையும் பார்த்தவன், நொடியும் யோசிக்காமல்,
“ஆமா” என்று சொன்னான் சுனில்.
அதைக் கேட்டவள் தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.
“உண்மையாதான் சொல்றீங்களா? இதெல்லாம் இன்னைக்கே பார்க்கணுமா? நான் இந்த வேலைக்குப் புதுசு. இதுக்கு முன்னாடி நான் எங்கேயும் ஒர்க் பண்ணது கூட இல்லை” என்று சொன்னாள் ஸ்ரீனா.
இவள் சொல்லியதைச் சரியாகக் காதில் வாங்காதவன்,
“ஏற்கனவே இந்த பைலை நான் செக் பண்ணிட்டேன். இப்ப டெலிவரி பண்றதுதான் வேலை. அந்த டெலிவரியை மட்டும் கரெக்டான டைம்ல பண்ணிட்டா போதும்” என்று சொன்னான் சுனில்.
அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு மனம் நிம்மதியடைந்தது.
“இப்பதான் இந்த பைல் எல்லாம் செக் பண்ணணும்னு சொன்னீங்க” என்று கேள்வியாகக் கேட்டாள் ஸ்ரீனா.
“ஆமா, செக் பண்ணணும். எங்கெங்க என்னென்ன மெட்டீரியல்ஸ் போகணும்னு செக் பண்ணித்தான் நம்ம அனுப்பணும். கவலைப்படாத ஸ்ரீ, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று சொன்னான் சுனில்.
உள்ளே சென்று விதுரனிடம் கையெழுத்து வாங்கி வந்தவன், ஒருவனை அழைத்து அந்த பைலைக் கொடுத்துவிட்டு, ஸ்ரீனாவுடன் அமர்ந்து அவளுக்கு வேலை சொல்லித் தரத் தொடங்கினான்.
விதுரன் முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்ததால் இதைக் கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று மணி நேரமாக சுனில் அவளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான். கற்பூரம் போல் அவன் சொல்லிக் கொடுத்ததைச் சட்டென்று கற்றுக்கொண்டாள். சுனிலுக்கே அவளுடைய திறமையைப் பார்த்துச் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் கற்றுக்கொண்டாளே என்று வியந்தான்.
அவளுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவன், அனைத்து டிபார்ட்மென்ட்களுக்கும் அழைத்துச் சென்று அங்கு என்னென்ன இருக்கிறது என்பதையும் அவளுக்குச் சொன்னான். மொத்தம் 75 தளங்களைக் கொண்ட அந்த பில்டிங்கை இரண்டு மணி நேரத்தில் அவளுக்குச் சுற்றிக் காட்டியவன், எந்தத் தளத்தில் என்னென்ன இருக்கிறது என்பதையும் தெள்ளத் தெளிவாகச் சொல்லி முடித்தான்.
“ஓகே ஸ்ரீ, உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உனக்கு வேற ஏதாவது டவுட்னா என்னைக் கேளு” என்று சொன்ன சுனில் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
கொஞ்ச நேரம்கூட ஓய்வில்லாமல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக அவள் பைல்கள் அனைத்தையும் சரிபார்த்தாள். அடுத்து ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டையும் தெரிந்துகொள்வதற்காக அனைத்து தளங்களுக்கும் சென்று வந்ததால் மிகவும் சோர்வாக இருந்தாள்.
தன் சோர்வைப் போக்க ஒரு காபி குடிக்கலாம் என்று கேன்டீனுக்குச் சென்றாள். அங்கு வந்தவள் ஒரு காபியை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தாள் ஸ்ரீனா.
அவள் அமர்ந்தது அந்தக் கடவுளுக்கே பிடிக்கவில்லையோ என்று தெரியவில்லை. உடனே அவளுடைய போன் ஒலித்தது. வேறு யாரும் அல்ல, சுனில்தான் அழைத்திருந்தான்.
அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள்,
“சொல்லுங்க அண்ணா” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“ஸ்ரீ, நீ எங்க இருக்க? நீ எங்க இருந்தாலும் சீக்கிரம் பாஸோட கேபினுக்கு வா” என்று சொன்னவன் உடனே போனை வைத்துவிட்டான் சுனில்.
தான் ஆர்டர் செய்த காபியைக்கூட குடிக்காமல் வேகவேகமாக அவனுடைய கேபினை நோக்கி வந்தவள், அவனுடைய அனுமதியைக் கேட்காமல் உள்ளே நுழைந்துவிட்டாள்.
உள்ளே நுழைந்தவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்.
பதட்டமாகக் கதவைத் திறந்தவள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி,
“பாஸ்…” என்று மூச்சு வாங்கியபடியே கூப்பிட்டாள்.
ஆனால் அவனோ அவளைக் கோபமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். அவனுடைய பார்வையில் அனல் இருப்பதைத் தெரிந்துகொண்டவளுக்கு, அது எதற்காக என்று ஒன்றும் புரியவில்லை. அவனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.
ஆனால் சுனிலுக்கோ உடல் முழுவதும் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன. மெல்ல சுனில் பக்கம் திரும்பியவளுக்கு அவனுடைய நிலை புரிய, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துகொண்டாள். கேள்வியாக இருவரையும் பார்த்தாள்.
இவள் வந்ததிலிருந்து அமைதியாக இருப்பதைப் பார்த்தவனுக்கு, அர்த்தமே இல்லாமல் கோபம் தலைக்கேறியது. நொடிப்பொழுதில் அவளிடம் நெருங்கியவன், அவளுடைய கழுத்தைப் பிடித்து ஒரு அடி மேலே தூக்கியிருந்தான் விதுரன்.
ஏற்கனவே வேகமாக வந்ததில் அவளுக்கு மூச்சுவிடச் சிரமமாக இருக்க, இப்போது இவன் பிடியில் மாட்டிக்கொண்ட அவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
இதைக் கண்ட சுனில் பதறிப்போனவன், வேகமாக இருவரையும் நெருங்கி,
“பாஸ், டென்ஷன் ஆகாதீங்க பாஸ்” என்று சொன்னான்.
அவன் சொல்லியதைக் கேட்ட விதுரன் திரும்பி ஒரு பார்வைதான் பார்த்தான். அந்தப் பார்வை, நீ ஒரு வார்த்தை பேசினால் உன் உயிர் உன் உடம்பில் இருக்காது என்பது போல் இருந்தது.
அவனுடைய பார்வையில் அப்படியே உறைந்துபோனவன், எதுவும் செய்வதறியாமல் பயந்தபடியே நின்றான்.
ஆனால் விதுரனோ,
“இதச் செய்ய எவ்வளவு பணம் வாங்குன?” என்று அவளுடைய கழுத்தை நெறித்தபடி கேட்டான்.
இவன் எதற்காக இவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று புரியாமல் அவனிடமிருந்து விடுபடப் போராடியவளுக்கு, இவன் கேட்ட கேள்வி இன்னும் குழப்பத்தை உண்டாக்கியது.
“நீங்க என்ன சொல்றீங்க? என்ன பணம் நான் வாங்குனேன்? நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குச் சுத்தமா புரியல” என்று பேச முடியாமல் பேசினாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேற, அவளைச் சட்டென்று அப்படியே கீழே விட்டான்.
அவனிடம் போராடிக் கொண்டிருந்தவளுக்கு இவன் இப்படிச் செய்வான் என்று தெரியாததால் கீழே விழுந்தவள் பயந்துதான் போனாள். ஆனால் அவளால் மூச்சுவிட முடியாமல் போக, மிகவும் சிரமப்பட்டு வேகவேகமாக மூச்சை உள்ளிழுத்தாள்.
“ஒழுங்கு மரியாதையா சொல்லிடு” என்று சொன்னான் விதுரன்.
“நீங்க சொல்றது எனக்குப் புரியவே இல்ல. நான் நேத்துதான் உங்களுக்கு பி.ஏ.வா வேலைக்குச் சேர்ந்தேன். அப்படி இருக்கும்போது என்ன பணம் நான் வாங்கினேன்?” என்று புரியாமல் கேட்டாள் ஸ்ரீ.
அதைக் கேட்டுக் கோபம் கொண்டவன்,
“என் பொறுமையைச் சோதிக்காத. ஒழுங்கா ஒத்துக்கிட்டேன்னா உன்னை இதோட விட்டுடுவேன். இல்லன்னா உன்னை இங்கேயே கொன்னு புதைச்சிடுவேன்” என்று ஒரு அரக்கனைப் போல் அவளைப் பார்த்துக் கர்ஜித்தான் விதுரன்.
“உண்மையா நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல” என்று நடுங்கியபடியே சொன்னாள் ஸ்ரீ.
அவள் மீண்டும் மீண்டும் அதையே சொல்வதைக் கேட்டவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“சுனில்!” என்று கோபமாகக் கத்தினான்.
எதற்காகத் தன் பெயரைச் சொன்னான் என்று புரிந்துகொண்டவன்,
“இன்னும் ஒரு வாரத்துல கவர்மென்ட்ல இருந்து பெரிய ப்ராஜெக்ட் வருது. அந்த ப்ராஜெக்ட்டுக்காக டெண்டர் கொட்டேஷன் ரெடி பண்ணி வச்சிருந்த பைலைக் காணோம்” என்று சொன்னான் சுனில்.
“இல்ல, இப்போ நீங்க சொல்றது எனக்குப் புரியல. பைல் காணாம போனதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்று கேட்டாள் ஸ்ரீ.
“உனக்குச் சம்பந்தம் இருக்கு” என்று சொன்னான் விதுரன்.
“அந்த பைலை எடுத்து நான் என்ன பண்ணப் போறேன்?” என்று கேட்டாள் ஸ்ரீ.
“உன்னால எதுவும் பண்ண முடியாதுதான். ஆனா, நீ யாருக்கு எடுத்துக் கொடுத்தியோ அவங்க எது வேணாலும் பண்ணலாம் இல்லையா?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான் விதுரன்.
“என்ன உளறுறீங்க? நான் யாருக்கு எடுத்துக் கொடுத்தேன்? அந்த பைல் எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“நடிக்காத. உங்களைப் போல மிடில் கிளாஸ் பணத்துக்காக என்ன வேணாலும் செய்வீங்க. ஒழுங்கு மரியாதையா யாருகிட்ட கொடுத்த, எவ்வளவு பணம் வாங்கினன்னு ஒத்துக்கோ” என்று சொன்னான் விதுரன்.
“நான் நடிக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“யாருக்கு? உனக்கா? பணத்துக்காக என்ன வேணாலும் பண்ற மிடில் கிளாஸ்தானே நீ?” என்று சொன்னான் விதுரன்.
“உங்க பணக்கார புத்தியை என் கிட்ட காமிக்காதீங்க” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“என்னடி, விட்டா ஓவரா போற?” என்று கர்ஜித்தான் விதுரன்.
“மிடில் கிளாஸ்னா உங்களுக்கு என்ன அவ்வளவு கேவலமா? நாங்க எப்பவுமே யாரோட காசுக்கும் ஆசைப்பட்டது கிடையாது. நிறைய கஷ்டப்பட்டு இருக்கோம். அப்பகூட கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும்னுதான் நாங்க நினைச்சிருக்கோமே தவிர, இந்த மாதிரி அடுத்தவங்களை ஏமாத்தி சம்பாதிக்கணும்னு எப்பவுமே நினைச்சது கிடையாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.
“மறுபடி மறுபடி நடிக்காத. உன்னைத் தவிர இந்த ஆபீஸ்ல யாரும் இதைச் செஞ்சிருக்க முடியாது” என்று சொன்னான் விதுரன்.
“நீங்க ரொம்ப பேசுறீங்க. அந்த பைல் காணாம போனதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நீங்க பேசுறதைப் பார்த்தா என்னவோ அந்த பைலை நான்தான் பணத்துக்காக எடுத்து கொடுத்த மாதிரி இருக்கு” என்று அவளும் கோபமாகக் கத்தினாள் ஸ்ரீனா.
தன்னிடமே இவள் குரல் உயர்த்துவதைப் பார்த்தவனுக்குக் கோபம் இன்னும் தலைக்கேறியது.
“ஆமா, நீதான் அதைச் செஞ்சிருக்க. உன்னைத் தவிர யாராலும் அந்த பைலை எடுத்துட்டுப் போயிருக்க முடியாது. ஏன்னா, அந்த பைல் உன்னோட டேபிள்ல, காலையில நீ செக் பண்ண வேண்டிய பைல்ஸ்லதான் இருந்தது. நேத்து சுனில்தான் அந்த பைலை உன்னோட டேபிள் மேல வச்சது” என்று சொன்னவன், திரும்பிச் சுனிலை ஒரு பார்வை பார்த்தான்.
அப்போதுதான் சுனிலுக்கே ஏதோ ஒன்று ஞாபகம் வந்தது போல்,
“பாஸ், பாஸ்… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. கோபப்படாதீங்க. நேத்து நான்தான் அந்த பைலை டேபிள் மேல வச்சேன். ஆனா காலையில அந்த பைலை நாங்க செக் பண்ணவே இல்ல” என்று சொன்னான் சுனில்.
இவன் சொன்னதில் புருவம் சுருங்கியவன்,
“வாட்? நாங்களா?” என்று கேட்டான் விதுரன்.
“எஸ் பாஸ். ஸ்ரீனாவுக்கு வேலை புதுசுங்கிறதுனால, எப்படி எல்லாம் பாக்கணும்னு நான்தான் சொல்லிக் கொடுத்தேன். அப்போ பைல்ஸ் செக் பண்ணும்போது அந்த பைல் வரவே இல்ல. எனக்கு அது இப்போதான் ஞாபகம் வந்துச்சு” என்று பயந்தபடியே சொன்னான் சுனில்.
அதைக் கேட்டவனுக்கு இவ்வளவு நேரம் அவள் மீது மட்டும்தான் கோபம் இருந்தது. இப்போது சுனிலின் மீதும் கோபம் வர, சுனிலின் கன்னத்தைப் பார்த்து ஓங்கி ஓர் அறை விட்டான்.
அவ்வளவுதான்! கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சுனில்.
இனி வரும் அத்தியாயத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்…
தொடரும்…
இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி…
