18.. ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில் : போனை கட் செய்தவனுக்கு அடுத்த நிமிடமே சுனிலிடமிருந்து மெசேஜ் வந்தது. அதைப் பார்த்தவன், நொடியும் தாமதிக்காமல் அவன் எங்கு இருக்கிறான் என்று விசாரித்து அவனை வளைத்துப் பிடித்தனர். அவன் பிடிபட்ட நொடியே சுனிலுக்கு மெசேஜ் வந்துவிட, அதை விதுரனிடம் தெரியப்படுத்தினான். அதைக் கேட்டவன் அவனைத் திரும்பி ஒரு பார்வை மட்டும்தான் பார்த்தான்.
இனி..
“எல்லாம் ரெடியா இருக்கு பாஸ்” என்று சொன்னான் சுனில்.
அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பியிருந்தனர் மூவரும்.
ஸ்ரீனா வரும் வழியெல்லாம் எங்கு செல்கிறோம் என்று சுனிலிடம் ஓராயிரம் முறை கேட்டுப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ எந்தப் பதிலும் சொல்லவில்லை. பின்னால் இருப்பவனை மீறித் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று மனதில் நினைத்தவன், அவளிடம் எதுவும் கேட்காதே என்பது போல் தலையை மட்டும் அசைத்தான். ஆனால் அவளோ அதைக் கவனிக்காமல் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டே வந்தாள்.
ஆனால் சிறிது நேரத்தில் சிட்டியில் இருந்து கார் அவுட்டருக்கு வந்திருக்க, அதைப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, ஒரு காட்டுக்குள் கார் நுழையத் தொடங்கியது.
முதலில் அது காடு என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் போகப் போக மரங்கள் அடர்த்தியாகிக் கொண்டே போக, அது காடு என்று புரிந்தது.
திரும்பிச் சுனிலை கேள்வியாகப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளுடைய பார்வை புரிந்தும் எதுவும் தெரியாதது போல் அமைதியாகக் காரை ஓட்டினான்.
அரை மணி நேரம் கழித்துக் கார் நின்றது. அதுவரை எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவளுக்குக் கார் நின்றதும் தான் நினைவுக்கு வந்தது.
இவள் இறங்கும் முன்பே மின்னலென இறங்கி உள்ளே நுழைந்திருந்தான் விதுரன். அவனுடைய வேகத்தைப் பார்த்தவளுக்குத் திகைப்பாக இருந்தது. அவனுக்குப் பின்னாலேயே சுனிலும் வேகமாகச் சென்றான்.
அதைப் பார்த்தவள், இவளும் வேகவேகமாகச் சுனிலின் பின்னால் செல்ல, அதற்குள் இருவரும் மறைந்திருந்தனர்.
அந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தது. அதில் அவளுக்கு எப்படிச் செல்வது என்று ஒன்றும் புரியவில்லை. அப்படியே திகைத்துப் போய் நின்றாள்.
அப்பொழுது அவள் அருகில் ஒரு குரல் கேட்டது.
“மேடம், என் கூட வாங்க. உங்களை நான் கூட்டிட்டுப் போறேன்” என்று ஒரு கார்டு சொன்னான்.
அவன் என்னவோ மென்மையாகத்தான் சொன்னான். ஆனால் அந்த இடத்திலும், அந்த இருட்டிலும் அவனுடைய குரல் சற்று எதிரொலிக்க, அதில் பயம் கொண்டவள்,
“ம்…” என்று மட்டும் சொல்லி அவன் பின்னால் சென்றாள் ஸ்ரீனா.
மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த விதுரன், வேக எட்டுகளுடன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் அந்த அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த அனைவரும் அவனைக் கண்டதும் சல்யூட் அடித்தனர். அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாதவன், அங்கு கட்டிப் போடப்பட்டிருந்தவனின் முன்பு போய் நின்றான் விதுரன்.
அங்கு கட்டப்பட்டிருந்தவனைப் பார்க்கப் பார்க்க இவனுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கத்தில் நின்றிருந்தவனை ஒரு பார்வைதான் பார்த்தான். இவனுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவன், அடுத்த நொடியே அவனைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினான்.
அந்த நேரம் ஸ்ரீனா உள்ளே நுழையச் சரியாக இருந்தது.
உள்ளே நுழைந்தவள் கண்ட காட்சி, ஒருவன் அடி வாங்கிக் கொண்டிருப்பதைத்தான். அவன் எதற்காக அடி வாங்குகிறான் என்று தெரியாதவளுக்கு விதுரனின் மீதுதான் கோபம் அதிகமானது.
வேகமாக விதுரனிடம் சென்றவள்,
“நீயெல்லாம் ஒரு மனுஷனா? அவரைப் போட்டு இப்படி அடிக்கிறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனே கிடையாது. மிருகம்!” என்று கோபமாகச் சொன்னாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேற, அவளுடைய கன்னத்தில் ஓர் அறை விட்டான். இரண்டு சுற்றுச் சுற்றிக் கீழே விழுந்தவள், அவனை இமைக்காமல் பார்த்தாள்.
ஆனால் அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எதிரில் இருப்பவனைப் பார்த்து,
“இதப் பண்ணச் சொன்னது யாரு?” என்று கேட்டான் விதுரன்.
ஆனால் அவனோ அமைதியாகவே நின்று கொண்டிருந்தான். அதில் பொறுமை இழந்தவன், நொடியும் தாமதிக்காமல் அவனுடைய நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.
சொல் என்பது போல் அவனைப் பார்த்தான். ஆனால் அவனோ எந்தச் சலனமும் இல்லாமல் விதுரனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்தவனுக்குக் கோபம் அதிகமாக, நொடியும் தாமதிக்காமல் துப்பாக்கியை அவனுடைய நெற்றிப்பொட்டிலிருந்து சற்று கீழே இறக்கி, அவனுடைய காலைப் பார்த்துச் சுட்டான்.
அதில் அவன், “அம்மா!” என்று அலற, அதே நொடி அங்கு நின்றிருந்த ஸ்ரீனாவும் அலறினாள்.
“ஐயோ அம்மா!” என்று அலறினாள்.
அவளுடைய சத்தத்தைக் கேட்டவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான் விதுரன். அவனுடைய பார்வையில் அவள் வாயை மூடிக்கொண்டாள்.
ஏற்கனவே அவன் சுட்டதில் அதிர்ந்தவள், அவனுடைய பார்வையில் மொத்தமாக அடங்கிப் போனாள்.
மீண்டும் எதிரில் நிற்பவனையே பார்க்க, அவனும் வலியால் அவஸ்தைப்பட்டானே தவிர, வாய் திறந்து எதுவும் சொல்வது போல் தெரியவில்லை.
அதில் பக்கத்தில் நின்றிருந்த சுனிலை ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய பார்வையைப் புரிந்துகொண்ட சுனில்,
“அதை எடுத்துட்டு வாங்க” என்று சொன்னான்.
அதைக் கேட்ட ஒருவன் உடனே சென்று எதையோ எடுத்துக் கொண்டு வந்தான். இவன் வந்ததும் சுனில் விதுரனை ஒரு பார்வை பார்க்க,
“கெட் ஸ்டார்ட்” என்று சொன்னான் விதுரன்.
அவனுக்காகப் போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான். ஏதோ ஒரு ப்ரோகிராம் பார்ப்பது போல் இருந்தது அவனுடைய செயல்.
இவன் சொல்லி அடுத்த நிமிடமே, எதிரில் நின்றவன் என்னவென்று யோசிக்கும் முன்பே அவன் மீது சில ஒயர்கள் பொருத்தப்பட்டன.
இவ்வளவு நேரம் எது கேட்டாலும் வாய் திறக்காமல் இருந்தவன்,
“இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று சொன்னான்.
அவன் சொல்லியதைக் கேட்டவனுக்குக் கோபம் தலைக்கேற, அவனுக்குப் பக்கத்தில் நின்றவனை ஒரு பார்வைதான் பார்த்தான். அடுத்த நொடியே அவன் ஸ்விட்சை ஆன் செய்ய, அவனுடைய உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அதில் அவன் அலறத் தொடங்கினான்.
“ப்ளீஸ், என்னை விட்டுடு” என்று அவன் கத்திக் கொண்டே இருந்தான்.
விதுரனின் பார்வை அவன் மீது அழுத்தமாகப் பதிந்துகொண்டே இருந்தது. அவனுடைய பார்வையின் அழுத்தம் கூடக்கூட, அவன் உடம்பில் பாயும் மின்சாரமும் கூடிக்கொண்டே இருந்தது.
அவனுடைய பார்வையில் மொத்தமாக அடங்கிப் போனவள், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க அவளுடைய உடல் நடுங்கத் தொடங்கியது.
பயத்தோடு அங்கு அலறிக் கொண்டிருப்பவனைப் பார்த்துப் பயந்தவள், சுனிலின் பின்னால் சென்று நின்று கொண்டாள் ஸ்ரீனா.
அவனுடைய அலறல் இன்னும் அதிகமாகிக் கொண்டே சென்றதே தவிர, குறையவில்லை. அதை ஒரு கட்டத்தில் நிறுத்தச் சொன்ன விதுரன், திரும்பிச் சுனிலை ஒரு பார்வை பார்த்திருந்தான்.
அதில் தன் பின்னால் நின்றிருந்தவளைத் திரும்பிப் பார்த்துப் பயப்படாதே என்பது போல் சைகை காட்டியவன்,
“இப்பவாவது ஒழுங்கா சொல்லு. யாருக்கு நீ வேலை செய்ற?” என்று கேட்டான் சுனில்.
ஆனால் அவனோ ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தவன்,
“என்ன, என்னைக் கஷ்டப்படுத்தினா நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு நினைச்சியா? நான் செத்தாலும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னான்.
அவன் சொல்வதைக் கேட்ட விதுரனுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை என்பது போல்,
“நெக்ஸ்ட்” என்று மட்டும் சொன்னான்.
அவன் சொன்ன அடுத்த நொடியே அவனுடைய கையில் ஏதோ ஒன்றைக் கொடுக்க, அதைக் கையில் வாங்கியவன் அவனிடம் நெருங்கி,
“உன்னை யார் அனுப்புனா, எதுக்கு அனுப்பினாங்கன்னு நான் இன்னும் தெரிஞ்சுக்காம இருப்பேன்னு நினைச்சியா?” என்று சொன்னவன், நொடியும் தாமதிக்காமல் அவனுடைய கையில் இருந்த ஒரு விரலை வெட்டினான்.
அதில் அவன் அலறினான். அவனுடைய விரலை வெட்டியதில் ரத்தத் துளிகள் அந்த இடத்தில் தெறிக்க, அதில் இரண்டு, மூன்று துளிகள் ஸ்ரீனாவின் முகத்திலும் பட, இன்னும் பயம் கொண்டாள் விதுரனைப் பார்த்து.
ஆனால் விதுரனோ அடுத்து இன்னொரு விரலை வெட்ட, அவனோ வலி தாங்க முடியாமல் இன்னும் அலறினான்.
அதில் இன்னும் பயந்தவளுக்கு உடல் மிகவும் நடுங்கியது.
விதுரன் மீண்டும் அவனுடைய மூன்றாவது விரலை வெட்டினான். அதில் வலி தாங்க முடியாமல்,
“போதும்! இதுக்கு மேல எதுவும் பண்ணிடாத. சொல்லிடுறேன், எல்லாத்தையும் சொல்லிடுறேன்” என்று சொன்னான் அவன்.
அதைக் கேட்ட விதுரன்,
“டெல் மீ” என்று சொன்னான்.
இவன் கேட்டதுதான் தாமதம், அவன் அனைத்தையும் சொல்லிவிட்டான்.
அவன் அனைத்தையும் சொல்லி முடித்தவுடன், தனக்குத் தேவையானது கிடைத்துவிட்டதால் நொடியும் யோசிக்காமல் அவனுடைய நெற்றிப்பொட்டில் சுட்டான் விதுரன்.
அதைப் பார்த்தவள், “அம்மா!” என்ற சத்தத்துடன் அப்படியே மயங்கி சரிந்தாள்.
ஆனால் இதை எதையுமே கண்டுகொள்ளாத விதுரன்,
“க்ளியர்” என்று சொன்னான்.
சுனிலை ஒரு பார்வை பார்த்தான். அவனும் அதைப் புரிந்துகொண்டவன்,
“கார்ட்ஸ்! யாராவது கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க” என்று சொன்னான்.
கீழே கிடந்த ஸ்ரீனாவைத் தட்டி எழுப்பினான். ஆனால் அவளோ ஒரு அசைவுகூட இல்லாமல் கிடந்தாள்.
அதைப் பார்த்தவன் தன் தலையில் அடித்துக் கொண்டு, மீண்டும் கார்ட்ஸை வேகமாக வரும்படி அழைத்தான்.
சிறிது நேரத்தில் ஒருவன் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க, அதைக் கொண்டு ஸ்ரீனாவின் முகத்தில் தெளித்தான்.
அவளும் மெல்லக் கண்களைத் திறந்தாள்.
“ஐயோ! கொலை… கொலை!” என்று கத்தினாள் ஸ்ரீனா.
“ஏய் ஸ்ரீ, கத்தாதே” என்று சொன்னான் சுனில்.
ஆனால் அவளோ பயத்தில், “கொலை… கொலை…” என்று கத்திக் கொண்டே இருந்தாள்.
அதைப் பார்த்தவன் சட்டென்று அவளுடைய வாயை மூடி,
“இப்படியே நீ கத்திக்கிட்டே இருந்தா, அடுத்து நீதான். பாத்துக்கோ” என்று சொன்னான் சுனில்.
அதைக் கேட்டவள் தக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.
அவளுடைய உடல் அப்பட்டமாக நடுங்கியது. அதிலேயே சுனிலுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. இவள் மிகவும் பயந்திருக்கிறாள் என்று.
“சரி, பயப்படாதே. என் கூட வா. பாஸ் வெளியே போயிட்டாரு. ரொம்ப டிலே ஆனா அவருக்கு ரொம்பக் கோபம் வரும். வா” என்று சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
காதல் பாவை தொடரும்…
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழி..
