19.. ராட்சசனின் காதல் பாவை..
போன பகுதியில் :
“சரி, பயப்படாதே. என் கூட வா. பாஸ் வெளியே போயிட்டாரு. ரொம்ப டிலே ஆனா அவருக்கு ரொம்ப கோபம் வரும். வா.” என்று சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
இனி..
இல்லை இல்லை, இழுத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான். இவர்கள் வெளியே வருவதற்கும், விதுரன் கோபமாக யாரிடமோ போனில் கத்திக்கொண்டிருக்கவும் சரியாக இருந்தது. அதைப் பார்த்தவள் அவனைக் கண்டு பயந்து சுனில் பின்னால் ஒளிந்துகொண்டாள். இதை விதுரனும் பார்த்தான். ஆனால், சுனிலுக்குத்தான் இது என்ன கொடுமை என்பது போல் மனதில் தோன்றியது.
“ஸ்ரீ, என்ன பண்ற?” என்று கேட்டான் சுனில்.
“அண்ணா, எனக்குப் பயமா இருக்கு. ப்ளீஸ், நான் இப்படியே இருந்துக்கறேன்.” என்று சொன்னாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டவனுக்கு,
“என்ன, இதுக்கே பயமா?” என்றுதான் தோன்றியது சுனிலுக்கு.
இருந்தும் அதைத் தனக்குள்ளேயே மறைத்தவன்,
“சரி, பயப்படாதே. நான் தான் கூட இருக்கேன் இல்ல. அமைதியா வா.” என்று சொன்னவன், அவளை காரில் முன்புறமாக அமர்த்துவதற்காக முன்பக்கக் கதவைத் திறந்தான். அதைப் பார்த்த விதுரன்,
“சுனில், நீ மட்டும் டிரைவ் பண்ணு.” என்று சொன்னான்.
அதைக் கேட்டவனுக்கு ஐயோ என்று இருந்தது. வேறு வழியில்லாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் சொன்னதைக் கேட்டு சுனிலைப் பார்த்தவள்,
“அண்ணா, ப்ளீஸ். அவர் கூட என்னால உட்கார முடியாது.” என்று பயந்துகொண்டே சொன்னாள் ஸ்ரீனா.
“வேற வழியில்ல, ஸ்ரீ.” என்று சொன்னான் சுனில்.
இவன் சொன்னதைக் கேட்டுப் பாவமாக அவனைப் பார்த்தாள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் அவளைப் பின்னால் அமரச் சொல்லிவிட்டு, அவன் முன்னால் சென்று அமர்ந்துகொண்டான். அதைப் பார்த்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒருபுறம் விதுரன் இன்னும் போனில் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தான். அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்குப் பயம் அதிகமாக, வேக வேகமாக காரில் ஏறி அமர்ந்துகொண்டாள். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
யாரிடமோ மிகவும் கோபமாகப் பேசி முடித்தவன், வேகமாக வந்து காரில் ஏறி, கார் கதவை அடித்துச் சாத்தினான்.
“அம்மா!” என்று அலறினாள் ஸ்ரீனா.
இவள் சத்தத்தில் திரும்பி அவளை ஒரு பார்வைதான் பார்த்தான்.
பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தவளுக்கு அவனுடைய பார்வையை உணர முடிந்தது. மெல்லத் திரும்பிப் பார்த்தாள். அவனுடைய பார்வை மிகவும் அழுத்தமாகவும் கூர்மையாகவும் அவள் மீது பதிய, அதில் பயந்தவள் அவனை இனி பார்க்கவே கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
என்னதான் அவளுக்குத் தைரியம் வேண்டும் என்று நினைத்தாலும், அது வருவேனா என்பது போல் இருந்தது அவளுக்கு. உள்ளே நடந்தது அனைத்தையும் அவள் யோசிக்க யோசிக்க, அவள் உடல் வேர்த்து, கை கால்கள் நடுங்கத் தொடங்கின.
மீண்டும் அவள் இப்படி இருக்க, விதுரன்,
“காரை ஸ்டார்ட் பண்ணு. ஏன், நான் சொன்னாதான் ஸ்டார்ட் பண்ணுவியா?” என்று சற்று கர்ஜனையாகக் கேட்டான் விதுரன்.
“சாரி பாஸ்.” என்று சொன்னவன், அடுத்த நொடியே காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான்.
மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால், ஸ்ரீனாவுக்குத்தான் அவனோடு அமர்ந்து வருவது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் புறம் திரும்பினாலும் அவனையே பார்க்க நேரிடும் என்பதால், அவளுக்குப் பயம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஏன், கண்களை மூடுவதற்குக்கூட அவளுக்குப் பயமாக இருந்தது.
இவள் பயத்துடனேயே இருக்க, கார் ஒரு உயர்தர ஹோட்டலின் முன்பு நின்றது. ஆனால், இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் ஸ்ரீனா இல்லாததால், அவள் பயந்தபடியே அமர்ந்திருந்தாள்.
அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த விதுரன், மீண்டும் சுனிலைப் பார்த்தவன்,
“நாளைக்கு ஆபீஸ் ஃபுல்லா செக் பண்ணு. சந்தேகப்படுற மாதிரி யார் இருந்தாலும் உடனே அவங்களை வேலையை விட்டு தூக்கிட்டு, அப்புறம் அந்த காண்ட்ராக்ட்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ணிடுங்க.” என்று சொன்னவன், இறங்கி உள்ளே சென்றான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்டவனுக்கு எங்கு சென்று முட்டிக்கொள்வது என்றே தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். ஆபீஸ் முழுவதும் சோதனை போட்டாலே மூன்று நாட்கள் ஆகும். இதில் அந்த கொட்டேஷன் வேறயா என்பது போல் இருந்தது அவன் மனதில்.
வேறு வழியில்லை என்பது நன்கு தெரிந்தவன், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அங்கிருந்து கிளம்பியவன் நேராக ஆபீஸுக்குத்தான் வந்து சேர்ந்தான். ஏனென்றால், நாளை வரை காத்திருக்க முடியாது. இப்பொழுதே தொடங்கினால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தவன், அதற்கான வேலையை இப்பொழுதே தொடங்கலாம் என்று நினைத்து காரிலிருந்து இறங்கினான்.
அப்பொழுதுதான் எதேச்சையாகப் பின் சீட்டைப் பார்த்தான் சுனில். ஸ்ரீனா இன்னும் காரிலேயே அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், அவள் அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்துப் பதறிக்கொண்டு வேகமாகக் கதவைத் திறந்தான். அவள் அமர்ந்திருந்த பக்கக் கதவைத் திறந்தவன்,
“ஸ்ரீ, என்னாச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று பதட்டமாகக் கேட்டான் சுனில்.
ஆனால், அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அதற்குப் பதிலாக முனகல் சத்தம் மட்டுமே வந்தது. அதை உற்றுக் கவனித்தவன், மெல்ல அவள் கையைப் பிடித்தான். அவள் கையைப் பிடித்த நொடி, சட்டென்று தன் கையை உருவிக்கொண்டவன்,
“என்ன இப்படி சுடுது!” என்று சொன்னவன், அவளை மெல்லத் தொட்டு எழுப்பத் தொடங்கினான்.
“ஸ்ரீ, என்னைப் பாரு ஸ்ரீ.” என்று அவளை எழுப்பினான் சுனில்.
ஆனால், அவளோ ஏதோ முனகிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உடலோ நெருப்பாகச் சுட்டுக்கொண்டிருந்தது. அதை நன்கு உணர்ந்தவன், வேறு வழியில்லாமல் ரிசப்ஷனில் இருந்த ஒரு பெண்ணை அழைத்தான். அவளுடைய உதவியுடன் ஸ்ரீனாவைக் கைதாங்கலாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவன், உடனே டாக்டரை அழைத்தான்.
அவரும் வந்து அவளைப் பரிசோதனை செய்தவர்,
“பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல, சுனில். எதையோ பார்த்து ரொம்ப பயந்திருக்காங்க. அதுலதான் ஃபீவர் வந்திருக்கு. இந்த மெடிசன் எல்லாம் சாப்பிடச் சொல்லுங்க. சரியாயிடும். கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று சொல்லிய டாக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதைக் கேட்டவன், அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த பெண்ணிடம்,
“டூட்டி டைம் முடியிற வரைக்கும் இவங்களை கொஞ்சம் பார்த்துக்கோங்க, ஷீலா.” என்று சொன்ன சுனில், அவளுடைய பதிலைக்கூடக் கேட்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
நேராக பி.ஆர். டீம் இருக்கும் அறைக்கு வந்தவன், அந்த டீம் ஹெட்டை அழைத்தான்.
“சொல்லுங்க சார்.” என்றான் அந்த ஹெட்.
“நம்ம ஸ்டாஃபோட டீடெயில்ஸ் எல்லாம் ஒரு வாட்டி செக் பண்ணுங்க. அதுல ஏதாவது சின்னதா சந்தேகப்படுற மாதிரி யார் இருந்தாலும், அவங்களைத் தனியா ஒரு லிஸ்ட் எடுங்க. லிஸ்ட் எடுத்த டீடெயில்ஸை எனக்கு சென்ட் பண்ணுங்க. அப்புறம் நம்ம ஐ.டி. டீம் கிட்ட சொல்லி, அந்த லிஸ்ட்ல இருக்கிறவங்களோட டீடெயில்ஸ் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அதுலயும் சந்தேகம் வர மாதிரி இருக்கிறவங்களை ஒரு லிஸ்ட் எடுங்க. இதெல்லாம் எனக்கு நாளைக்கு ஈவினிங் குள்ள வேணும்.” என்று சொன்னான் சுனில்.
“சார், நீங்க சொல்றது ஓகே. ஆனா, நாளைக்கு ஈவினிங் கேக்குறீங்களே. எனக்கு ஜஸ்ட் ஒரு டூ டேஸ் ஆவது வேணும் சார்.” என்று கேட்டான் அந்த ஹெட்.
“சாரி தீபன். உங்களுக்கு டைம் கொடுக்கிற அளவுக்கு நான் இல்ல. இது நாளைக்கே முடிஞ்சாகணும். இது மட்டும் முடியலன்னா பாஸ் என்ன பண்ணுவாருன்னு எனக்கே தெரியாது. பாஸ் பத்தி உங்களுக்கும் தெரியும்.” என்று சொன்னான் சுனில்.
விதுரனின் பெயரைச் சொன்னதும் ஒரு நிமிடம் ஆடிப்போனவன்,
“ஓகே சார். நீங்க கேட்ட மாதிரி நாளைக்கு ஈவினிங் எல்லோருடைய டீடெயிலும் உங்க கிட்ட இருக்கும்.” என்று சொன்னவன், உடனே தனது டீமுக்கு ஆணையிடத் தொடங்கினான்.
அவனுடைய ஆணையைக் கேட்ட ஒவ்வொருவரும் வேக வேகமாகச் செயல்பட்டனர். அதைப் பார்த்த சுனில்,
“ஓகே தீபன், நீங்க பார்த்துக்கோங்க.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அங்கிருந்து கிளம்பியவன் நேராகக் கண்ட்ரோல் ரூமுக்குத்தான் வந்தான். அங்கு பொருத்தப்பட்டிருந்த அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் காட்சிகளையும் ஒவ்வொன்றாக அமர்ந்து செக் பண்ணத் தொடங்கினான்.
அதில் அனைத்தும் சரியாக இருப்பது போல் தெரிந்தாலும், அவனுக்கு ஏதோ எங்கோ தவறு உள்ளது போல் தோன்றியது. அதனால் மீண்டும் ஒவ்வொன்றாகச் சரிபார்க்கத் தொடங்கினான்.
இங்கு இவன் ஓய்வே இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவன், எதேச்சையாக மணியைப் பார்த்தான். அது 6:30 என்று காட்டியது. உடனே ரிசப்ஷனுக்குக் கால் செய்தவன்,
“ஷீலா, நீங்க கிளம்புங்க.” என்று சொன்னான் சுனில்.
“சார், அவங்க இன்னும் கண் விழிக்கவே இல்ல.” என்று சொன்னாள் ஷீலா.
“நோ ப்ராப்ளம், ஷீலா. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க.” என்று சொன்னவன், ஃபோனை வைத்துவிட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். உடனே சுனில் ஒரு கார்டுக்கு அழைத்து, ஸ்ரீனாவுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு, மீண்டும் தன் வேலையில் மும்முரமாக இறங்கினான்.
ஆனால், விதுரனோ அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். நேராக அவனுக்கென்று இருக்கும் அறைக்கு வந்தான். அந்த அறை இருபதாவது தளத்தில் இருந்தது.
அறைக்குள் நுழைந்தவன், ஒரு கப்போர்டைத் திறந்து அதிலிருந்து மது பாட்டிலை எடுத்தான். பின்னர் அமர்ந்து குடிக்கத் தொடங்கினான். அதை மொத்தமாக வாயில் சரித்தவன், கண் இமைக்கும் நொடியில் அந்தப் பாட்டிலைச் சுவற்றில் தூக்கி எறிந்தான். அது சுவற்றில் பட்டு சில்லு சில்லாக உடைந்தது.
“டேய், என் கிட்டயே வேலை காட்டுறியா? நீ என்ன நினைச்சாலும் என்னை ஜெயிக்க முடியாது.” என்று கோபமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது அவன் அறையின் கதவு தட்டப்பட்டது. அதைக் கேட்டதும் அவனுடைய கோபம் இன்னும் அதிகமானது. தன் பற்களைக் கடித்துக்கொண்டு,
“கம்மிங்!” என்று கர்ஜனையாகச் சொன்னான் விதுரன்.
அவன் அனுமதி கொடுத்ததும் கதவைத் திறந்துகொண்டு ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் ஒரு மது பாட்டிலை எடுத்து தன் வாயில் சரித்தான். ஆனால், அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனிடம் நெருங்கி, தன் விரலால் அவன் நெற்றியிலிருந்து கன்னம், கழுத்து என்று மெல்ல அவனை வருடிக்கொண்டே வந்தாள். பின்னர் மெல்ல அவனிடம் நெருங்கினாள்.
காதல் பாவை தொடரும்…
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…
இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி..
