20.ராட்சசனின் காதல் பாவை

20.. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில் :

நெற்றியில் இருந்து அவன் கன்னம், கழுத்து என்று மெல்ல அவனை வருடிக்கொண்டே வந்தவள், மெல்ல அவனிடம் நெருங்கினாள்.

இனி..

“ஸ்டார்ட் வித் மீ.” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள் அந்தப் பெண்.

ஆனால், அவனோ தன் காதில் எதுவும் விழவில்லை என்பது போல் மதுவை மட்டும் அருந்தியபடி இருந்தான். அதைப் பார்த்த அந்தப் பெண், அவனைத் தன் புறமாகத் திருப்பி, அவன் தேகம் எங்கும் இதழ் பதித்தாள். ஆனால், அதற்குமே அவன் அமைதியாகவே இருந்தான்.

மெல்ல மெல்ல அவளுடைய இதழ்கள் அவன் உடலோடு விளையாட, ஆண்மகனின் தேகம் சூடேறத் தொடங்கியது. அவள் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கும் முன்பே, அவளைத் தனக்குக் கீழே கொண்டு வந்தவன், அவள் தொடங்கிய காம விளையாட்டைத் தன் கையில் எடுத்துக்கொண்டான்.

மெல்ல அவளுடைய உடலோடு விளையாடத் தொடங்கினான் விதுரன். அவளுடைய ஆடைகளைக் களைந்தவன், அவளோடு ஒன்றிணைந்து தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினான். அதில் வெற்றியும் கண்டு முடித்தான்.

காமம் என்னும் இன்பக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவனை நித்திரை தேவி தன் வசப்படுத்தியிருந்தாள்.

அதே நேரம் இங்கு…

கண்ட்ரோல் ரூமில் அமர்ந்திருந்த சுனில், அனைத்து தளங்களிலும் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று ஒவ்வொன்றாகப் பார்க்கத் தொடங்கினான். ஒவ்வொரு தளத்திலும் அதன் பாதுகாப்பைக் கவனமாக ஆராய்ந்தவன், அடுத்தடுத்து ஒவ்வொரு தளமாகச் சென்று கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட முப்பது தளங்களுக்கான பாதுகாப்பை அவன் உறுதிப்படுத்தியிருக்க, அவன் கண்கள் நித்திரை தேவியின் மடியைத் தேடியது. ஆனால், அவனோ தனக்குத் தூக்கம் என்பதே ஒன்று கிடையாது என்பது போல் வேலை செய்துகொண்டே இருந்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

“இது எப்படி சாத்தியம்? பாஸோட ரூமுக்குள்ள பாஸையும் நம்மையும் தவிர வேற யாராலும் போக முடியாது. ஸ்ரீக்குக்கூட பாஸ் கேபினோட ஆக்சஸ் கீ இன்னும் சொல்லல. அப்போ எப்படி இவனால மட்டும் உள்ள நுழைய முடிஞ்சுது?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், உடனே 75-ஆவது தளத்தில் இருக்கும் அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களையும் செக் பண்ணத் தொடங்கினான்.

அவன் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வர, கடைசியாக இவர்கள் இருவரும் வெளியே சென்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒருவன் உள்ளே நுழைந்தான். எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் விதுரனின் கேபின் ஆக்சஸ் கீயைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தவன், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைல்களில் தனக்குத் தேவையான பைல் எது என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டே வந்தான்.

அவனுக்குத் தேவையான பைல் கிடைத்தவுடன் அதை எடுத்துக்கொண்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இதைப் பார்த்த சுனிலுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.

(வந்தவன் வேறு யாருமில்லை. விதுரன் ஒருவனைப் போட்டுத் தள்ளினானே, அவன்தான் அது.)

“இது எப்படி முடியும்? இதுக்கு வாய்ப்பே இல்லையே! அதுவும் இல்லாம, பாஸ் இருக்கும்போதுதான் அவருடைய கேபின் ஓப்பன்ல இருக்கும். மீதி நேரம் க்ளோஸ்லதான் இருக்கும். யாரும் உள்ள வரவும் வாய்ப்பில்லை. எனக்கும் பாஸுக்கும் மட்டும்தான் அந்த ரூமோட பாஸ்வேர்டு தெரியும். அப்படி இருக்கும்போது இவன் எப்படி இவ்வளவு அசால்ட்டா பாஸ்வேர்டைப் போட்டான்? இல்ல, வேற எங்கேயோ தப்பு இருக்கு. நம்ம அதை மிஸ் பண்றோம்.” என்று யோசிக்கத் தொடங்கினான் சுனில்.

இவன் இப்படி சில நிமிடங்கள் யோசித்தாலும், டென்ஷனில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதனால், இந்த யோசனையைச் சிறிது நேரம் ஒதுக்கி வைப்போம் என்று நினைத்தவன், பின்பு மற்ற தளங்களில் இருக்கும் பாதுகாப்பைப் பரிசோதித்தான். மீண்டும் அனைத்து தளங்களுக்கும் புது பாஸ்வேர்டு போட்டுவிட்டு மணியைப் பார்த்தான். அதுவோ இரவு 1:30 என்று காட்டிக்கொண்டிருந்தது.

“இந்த நேரத்துல கால் பண்ணலாமா?” என்று யோசித்தவன், பின்பு என்ன நினைத்தானோ என்னவோ, தன் போனை எடுத்தான். யாருக்கோ அவசரமாகக் கால் செய்தவன், எதிர்முனையில் அழைப்பை எடுத்தவுடன் அவர்கள் பேசுவதற்கு முன்பே பேசினான்.

“எல்லா எம்ப்ளாய்க்கும் இந்த வீக்குள்ள புது ஐடி கார்டு ரெடி பண்ணுங்க.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்ட எதிர்ப்புறத்தில் தூக்கத்தில் இருந்தவன்,

“சார், ஏதேனும் ப்ராப்ளமா? இந்த டைம்ல கால் பண்ணிச் சொல்றீங்களே?” என்று கேட்டான்.

அவன் கேள்வி கேட்டதில் கடுப்பான சுனில்,

“சொன்னதை மட்டும் செய்யுங்க. திருப்பித் திருப்பி கொஸ்டின் கேட்டுட்டு இருக்காதீங்க. டுமாரோ மார்னிங் வந்த உடனே வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டான் சுனில்.

சுனில் சொன்னதைக் கேட்டவனுக்கு,

“என்ன இவரு இந்த டைம்ல கால் பண்ணி இப்படி சொல்றாரு? ஏன்னு கேட்டா, சொல்றதை மட்டும் செய்யச் சொல்றாரு. சரி, நமக்கு எதுக்கு வம்பு? அவர் சொல்றதைச் செஞ்சிடுவோம்.” என்று சொல்லியவன், அதன்பிறகு படுத்துவிட்டான்.

போனை வைத்தவன் மீண்டும் தன் கவனத்தை ஓடிக்கொண்டிருக்கும் திரையின் மீது செலுத்தினான். ஒவ்வொரு தளத்திற்கும் புது பாஸ்வேர்டை மாற்றியவன், ஒரு கட்டத்தில் அனைத்தையும் முடித்தான்.

அனைத்தையும் முடித்தவன், கண்களைக் கசக்கியபடி கையில் இருக்கும் வாட்சைப் பார்த்தான். அது மணி 5:30 என்று காட்டியது.

உடனே வேகமாக பி.ஆர். டீம் ஹெட்டுக்குக் கால் செய்தான் சுனில். ஆனால், அவனுடைய போன் அடித்துக்கொண்டே இருந்ததே தவிர, அவன் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்தப் போன் கட் ஆகிவிட, அதில் கடுப்பானவன் மீண்டும் அழைத்தான் சுனில்.

இந்த முறை போன் அட்டன் ஆனது. ஆனால், அவன் பேசும் முன்பே சுனில் பேசத் தொடங்கினான்.

“என்ன தீபன், ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்று கேட்டான் சுனில்.

“எப்பவும் போலதான் சார் போயிட்டு இருக்கு.” என்று தூக்கத்திலிருந்து கொட்டாவி விட்டபடியே சொன்னான் தீபன்.

இவன் சொன்னது ஒன்றும் புரியாத சுனில்,

“வாட் தீபன்? என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

இவன் சத்தமாகக் கேட்க, தூக்கத்தில் இருந்த தீபனுக்கு மொத்தமாகத் தூக்கம் கலைந்துவிட்டது. அப்பொழுதுதான் தூக்கத்தில் என்ன உளறினோம் என்பது புரிய, தன் தலையில் அடித்துக்கொண்டு,

“சாரி சார், கொஞ்சம் அப்படியே அசந்து தூங்கிட்டேன். ப்ராசஸ் போயிட்டே இருக்கு சார். உங்களுக்கு இன்னிக்கு ஈவினிங் கண்டிப்பா எல்லாரோட டீடெயில்ஸையும் செக் பண்ணி ஃபைல் உங்க கிட்ட கொடுத்துடுவேன்.” என்று சொன்னான் தீபன்.

“என்ன தீபன், இப்படி அலட்சியமா ‘கொஞ்சம் தூங்கிட்டேன்’னு சொல்றீங்க? உங்களுக்கு கொடுத்திருக்கிற வேலை ரொம்ப முக்கியமானது. உங்க தூக்கத்தை எல்லாம் ஓரமா வச்சிட்டு ஒர்க் பாருங்க.” என்று சொன்ன சுனில், ஃபோனை கட் செய்தான்.

இவன் போனை வைத்தவுடன் தீபனுக்கு எங்கு சென்று முட்டிக்கொள்வது என்றே தெரியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கினான்.

“என்ன இவரு, கொஞ்ச நேரம் தூங்கினதுக்கு இப்படி கோபப்படுறாரு? தூங்காம எப்படி வேலை பார்க்க முடியும்?” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், மீண்டும் தனது டீமைத் துரிதப்படுத்தினான்.

அவர்களும் இரவில் இருந்து இப்பொழுது வரை கொஞ்ச நேரம்கூடத் தூங்காமல் அயராது உழைத்துக்கொண்டிருந்தார்கள். இருந்தும், சுனில் அவசரப்படுத்தியதால் அவர்களும் தங்களுடைய சோர்வையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு வேலையில் கவனம் செலுத்தினார்கள்.

இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல. மாதத்தில் இரண்டு மூன்று முறை இரவெல்லாம் வேலை பார்க்கும்படி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நிற்கும். அதனால், அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வேலையில் கவனம் செலுத்தினார்கள்.

தீபனிடம் பேசி போனை வைத்த சுனில், நேராக ஸ்ரீனா இருக்கும் அறைக்கு வந்தான். ஸ்ரீனாவும் அப்பொழுதுதான் மெல்லக் கண்விழித்து எழுந்து அமர்ந்தாள்.

சுனில் உள்ளே நுழைவதற்கும், அவள் எழுந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது. அதைப் பார்த்தவன்,

“இப்ப எப்படி இருக்கு, ஸ்ரீ?” என்று கேட்டான் சுனில்.

மெல்லக் கண்களைத் திறந்தவள்,

“ம்…” என்று மட்டும் சொன்னாள் ஸ்ரீ.

அவள் எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்தவன், அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். இன்னும் ஃபீவர் இருக்கிறதா என்று சோதித்தான். ஆனால், அவளுடைய உடல் சூடு மொத்தமாகக் குறைந்திருந்தது.

ஆனாலும், அவள் பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தாள். இவள் அமர்ந்திருக்கும் நிலையிலேயே அவளுடைய பயம் இன்னும் அவளை விட்டு நீங்கவில்லை என்பது சுனிலுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதில் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட சுனில்,

“ஸ்ரீ, இன்னும் நீ நடந்ததை நினைச்சுப் பயந்துகிட்டு இருக்கியா? இது அவ்வளவு பெரிய விஷயம் இல்ல, ஸ்ரீ. இதுக்கும் மேல நிறைய இருக்கு.” என்று சொன்னான் சுனில்.

இவ்வளவு நேரம் பயத்தில் அமைதியாக இருந்தவள், சுனில் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னண்ணா, இவ்வளவு சர்வ சாதாரணமா சொல்றீங்க? நம்ம கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போயிருக்கு. அது உங்களுக்கு பெரிய விஷயமா தெரியலையா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“இங்க பாரு, ஸ்ரீ. இது உனக்குப் புதுசு. அதனால உனக்கு பெரிய விஷயமா தெரியுது. நான் அவர் கிட்ட வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருஷம் ஆகுது. இத்தனை வருஷத்துல நான் எவ்வளவோ பார்த்துட்டேன். அது மட்டும் இல்ல, அவரோட கோபம் எப்படி இருக்கும், அவருக்குக் கோபம் வந்தா எப்படி நடந்துப்பாரு, எல்லாமே எனக்கு ஒரு அளவுக்குத் தெரியும்.

அதனாலதான் நேத்திக்கூட அவர் கிட்ட உன் குரலை உயர்த்திப் பேசாதன்னு சொன்னேன். நம்ம வேலையில எந்த அளவுக்கு நம்ம கரெக்ட்டா இருக்கோமோ, அந்த அளவுக்கு அவரும் நல்லவரா இருப்பாரு. நம்ம வேலையில ஏதாவது தப்பா ஆச்சுன்னா, அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு நமக்கு இல்ல, அந்த ஆண்டவனுக்குக்கூட தெரியாது. அது பாஸுக்கு மட்டும்தான் தெரியும்.” என்று நார்மலான குரலில் சொன்னான் சுனில்.

“நீங்க சொல்றது மூளைக்குப் புரிஞ்சாலும் மனசுக்குப் புரியலண்ணா. எனக்கு இன்னும் கண்ணை மூடினாலே அங்க நடந்த எல்லாமே தெரியுது. என் காது முழுக்க அந்த ஆளோட அலறல் சத்தம் மட்டும்தான் கேட்குது. எனக்கு இந்த வேலை வேண்டாம். நான் போயிடுறேன்.” என்று கண்ணீருடன் சொன்னாள் ஸ்ரீ.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

காதல் பாவை தொடரும்…

இப்படிக்கு உங்கள் அன்புத் தோழி..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!