21.ராட்சசனின் காதல் பாவை

21.. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில்:

“நீங்க சொல்றது மூளைக்கு புரிஞ்சாலும் மனசுக்கு புரியல. எனக்கு இன்னும் கண்ணை மூடினாலே அங்க நடந்த எல்லாமே தெரியுது. என் காது முழுக்க அந்த ஆளோட அலறல் சத்தம் மட்டும்தான் கேட்குது. எனக்கு இந்த வேலை வேண்டாம்னா நான் போயிடுறேன்” என்று கண்ணீருடன் சொன்னாள் ஸ்ரீ.

இனி..

“நீ சர்வசாதாரணமா வேண்டாம்னு சொல்லிட்ட. நீ கால் வெச்சது சிங்கத்தோட குகையில். சிங்கமே விட்டாதான் நீ வெளியே போக முடியும். நீயா நினைச்சா எதுவுமே முடியாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோ. அதுவும் இல்லாம அவரு உன் மேல செம கோபத்துல இருக்காரு. இப்போ நீ வேலையை விட்டு போகவே முடியாது.

நான் இப்படி பேசுறதைக் கேட்டு உனக்கு என் மேல கூட கோபம் வரலாம். எனக்குத் தெரியும். ஆனா, நான் உண்மையைத்தான் சொல்றேன். உன்கிட்ட நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீ எப்போ என்னை அண்ணான்னு கூப்பிட்டியோ, அப்போ இருந்தே நானும் உன்னை ஒரு தங்கச்சியாதான் பார்க்கிறேன்.

அதனால என் தங்கச்சியா நினைச்சு சொல்றேன். நீ இங்கிருந்து போகணும்னு நினைச்சு எந்தத் தப்பான முடிவும் எடுத்துடாதே. உனக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறாரோ, அதுல கவனமா இரு. அதுல எந்தத் தப்பும் நடக்காம பார்த்துக்கோ. அவரோட கோபம் எப்படி இருந்தாலும் நீ கரெக்டா உன்னோட வேலையைப் பார்த்துட்டு வந்தா, அது தன்னாலவே போயிடும்னு எனக்குத் தோணுது.

ஆனா, இதையும் தாண்டி நான் இங்கிருந்து போய்த்தான் ஆகணும்னு நீ நினைச்சா, நடக்கிற எதுவுமே நல்லதா இருக்காது” என்று சொன்னான் சுனில்.

“இல்லண்ணா, நீங்க என்ன சொன்னாலும் என்னால இனி இந்தக் கம்பெனியில வேலை செய்ய முடியாது. என்னதான் அவரு தப்பு பண்ணியிருக்கட்டுமே, அவரை நம்பி இருக்கிற குடும்பத்தை ஒரு வாட்டியாவது நினைச்சுப் பார்த்திருக்கணும். இவரைப் பார்க்கவே எனக்கு மனுஷனா தெரியல. அந்த நிமிஷம் முழு ராட்சசனா தெரிஞ்சாரு. என்னால இந்த ராட்சசன் கூட வேலை பார்க்க முடியாது. எனக்கு அவரைப் பார்க்கிற ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு அண்ணா” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“நீ சொல்றது எனக்கு நல்லாவே புரியுது ஸ்ரீ. நான் சொல்றதுதான் உனக்குப் புரிய மாட்டேங்குது. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. அதுவும் இல்லாம இப்போ உட்கார்ந்து பேசுறதுக்கு நமக்கு டைம் கிடையாது. நமக்கு டைம் ரொம்பவே கம்மியா இருக்கு.

பாஸ் நம்மகிட்ட வேலை செய்ற எம்ப்ளாயீஸோட டீடைல்ஸை செக் பண்ணச் சொல்லியிருக்காரு. அதுவும் இல்லாம அந்தக் கொட்டேஷனையும் நம்ம ரெடி பண்ணியாகணும். அதுவும் இன்னும் மூணு நாள்ல” என்று சொன்னான் சுனில்.

இவன் என்னதான் சொன்னாலும் அவள் மனம் மட்டும் அதைக் கேட்பதாக இல்லை. இங்கிருந்து சென்றாக வேண்டும் என்று மட்டுமே அவளுடைய மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் வேலை செய்ய முடியாது என்று அவளுடைய மனசாட்சி சொல்லிக்கொண்டே இருக்க, அவளுடைய மூளையோ, நீ எங்கு சென்றாலும் அவன் அடுத்த நிமிடமே உன்னைக் கண்டுபிடித்துவிடுவான். அவனிடமிருந்து உன்னால் தப்பிக்க முடியாது என்று உண்மையை உரைத்தது. ஆனால், அவளோ மூளை சொல்வதை ஒதுக்கிவிட்டு, மனம் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொண்டாள்.

“அண்ணா, இந்த ஒன் வீக் மட்டும்தான் நான் இங்க வேலை பார்ப்பேன். அதுவும் அந்த டெண்டர் கொட்டேஷன் என் டேபிள்ல இருந்து காணாமப் போனதாலதான். அதுக்கப்புறம் நான் இங்க இருக்க மாட்டேன்” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ. புரியாம நீ ஏதாவது செய்யப்போய் பெரிய பிரச்சனையில மாட்டிக்காத” என்று சொன்னான் சுனில்.

ஆனால், அவள் மனதிலோ, இவனிடமிருந்து தப்பித்தாலே போதும். எனக்கு வேறு பிரச்சனையே இல்லை என்று நினைத்துக்கொண்டாள்.

எதையோ சிறிது நேரம் யோசிப்பது போல் யோசித்தவள், சுனிலிடம்,

“சரி அண்ணா” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்ட சுனில், அவள் புரிந்துகொண்டாள் என்று நினைத்தான்.

“சரி, நீ இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். நைட் முழுக்க தூங்கல” என்று சொன்னவன், பக்கத்தில் இருந்த இன்னொரு அறைக்குள் சென்றுவிட்டான்.

ஆனால், இவளுக்கோ இங்கிருந்து எப்படிச் செல்வது என்ற யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான வழிதான் அவளுக்குக் கிடைக்கவில்லை.

இவள் இப்படியே அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க, நேரம் வேகமாக ஓடியது. இப்போது மணி 8:30 ஆகியிருக்க, சுனிலின் போனில் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது.

அதில் கண்விழித்தவன், மெல்ல எழுந்து தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டான். பின்னர், ஸ்ரீ என்ன செய்கிறாள் என்று பார்க்க வந்தான்.

ஆனால், அவளோ அவன் செல்லும்போது எப்படி அமர்ந்திருந்தாளோ, இப்போதும் அதேபோலத்தான் அமர்ந்திருந்தாள்.

அதைப் பார்த்தவன்,

“இந்தப் பொண்ணுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரிஞ்சுக்காமயே இருக்காளே” என்று மனதில் நினைத்தவன்,

“ஸ்ரீ, போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா. நமக்கு ஒர்க் இருக்கு” என்று சொன்னான் சுனில்.

இவ்வளவு நேரம் யோசித்துக்கொண்டிருந்தவள், இவன் குரலில் நினைவுக்கு வந்தாள். அவன் சொன்னதைக் கேட்டு சரி என்பதுபோல் தலை அசைத்தவள், உள்ளே சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.

“இப்போ எனக்கு என்ன ஒர்க் இருக்கு அண்ணா?” என்று கேட்டாள் ஸ்ரீ.

“என் கூட வா. இன்னைக்கு பாஸோட ஷெட்யூல் எல்லாத்தையும் சொல்றேன். அதெல்லாம் நோட் பண்ணிக்கோ. அவரு வந்த உடனே கேட்பாரு. இதெல்லாம் அவருக்கு இன்பார்ம் பண்ணிடு” என்று சொன்னான் சுனில்.

“என்ன சொல்றீங்க? இதெல்லாம் நான் செய்யணுமா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸ்ரீனா.

“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சியாகிற? நீ தானே அவரோட பர்சனல் பி.ஏ.? அப்படி இருக்கும்போது அவரோட ஷெட்யூல் எல்லாம் நீதானே பார்த்துக்கணும்?” என்று கேட்டான் சுனில்.

“ப்ளீஸ்ணா, புரிஞ்சுக்கோங்க. என்னால பார்க்க முடியாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“நான் புரிஞ்சுக்கிறதா இல்ல ஸ்ரீ. பாஸ் வந்தவுடனே உன்னைத்தான் கூப்பிடுவாரு. நீ இதெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருந்தாதான் உன் மேல அவ்வளவா கோபத்தைக் காட்ட மாட்டாரு” என்று சொன்னான் சுனில்.

“இல்லண்ணா, என்னால முடியாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அதைக் கேட்டவன், இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று யோசித்தான்.

“உனக்கு என்னதான் ஸ்ரீ பிரச்சனை? எத்தனை வாட்டிதான் நான் சொல்றது?” என்று கேட்டான் சுனில்.

“நீங்க சொன்னதுக்குத்தான் நான் எல்லாத்துக்குமே சரின்னு சொல்லிட்டேனே. ஆனா, இது மட்டும் என்னால முடியாது” என்று சொன்னாள் ஸ்ரீனா.

“இங்க பாரு ஸ்ரீ, நீ அவருக்குப் பி.ஏ. அதுவும் பர்சனல் பி.ஏ. அவரோட ஷெட்யூல் எல்லாமே நீ தெரிஞ்சு வெச்சுக்கணும். இன்னும் கொஞ்ச நேரத்துல பாஸ் வந்துருவாரு. நீ இப்படியே டிலே பண்ணிட்டு இருந்தா உனக்கும் பிரச்சனை, எனக்கும் பிரச்சனை. சொன்னா புரிஞ்சுக்கோ” என்று சொன்னான் சுனில்.

“அண்ணா, சொன்னா நீங்கதான் புரிஞ்சுக்கணும். அந்த டெண்டர் கூட எப்படி ரெடி பண்ணனும்னு சொல்லுங்க. கஷ்டப்பட்டாவது நான் ரெடி பண்ணித் தரேன். இதை மட்டும் என்னால செய்ய முடியாது” என்று பிடிவாதமாகச் சொன்னாள் ஸ்ரீனா.

இவள் இப்படிச் சொல்வதைக் கேட்டவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இது மட்டும் பாஸுக்குத் தெரிந்தால் அவருடைய கோபம் எல்லையைக் கடக்குமே என்று நினைக்கும்போதே சுனிலின் மனதில் பயம் ஏற்பட்டது.

“நீ முதல்ல வேலைக்கே புதுசு. அப்படி இருக்கும்போது நீ எப்படி டெண்டர் ரெடி பண்ணுவ? சொன்னா கேளு. நான் அதை பார்த்துக்கிறேன். நீ அவரோட ஷெட்யூலைப் பார்த்துட்டு, இன்னைக்கு என்னென்ன மீட்டிங் இருக்குன்னு மட்டும் சொல்லிடு. அதுவே போதும்” என்று சொன்னான் சுனில்.

“இல்லண்ணா, என்னால முடியாது” என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள் ஸ்ரீனா.

இவள் இப்படிப் பிடிவாதமாக இருப்பதைப் பார்த்தவனுக்கு வேறு வழியில்லாமல் போனது. அவளிடம் அனைத்தையும் சொல்லிக்கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தவன்,

“ஓகே ஸ்ரீ, வா. உனக்கு எப்படி டெண்டர் ரெடி பண்ணணும்னு சொல்லிக் கொடுக்கிறேன்” என்று சொன்னான் சுனில்.

அவளை அழைத்துச் சென்று அவளுடைய கேபினில் அமர வைத்தவன், அவள் முன்பு இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது சுனிலின் போன் அடித்தது. அது வேறு யாருமில்லை, தீபக்தான் அழைத்திருந்தான்.

தீபக்கிடமிருந்து அழைப்பு வந்ததைப் பார்த்த சுனில், உடனே அதை அட்டெண்ட் செய்தான்.

“சொல்லுங்க தீபக்” என்றான் சுனில்.

“சுனில் சார், மறுபடியும் ஒரு பெரிய பிரச்சனை” என்று சொன்னான் தீபக்.

“என்ன தீபக் சொல்றீங்க? ஒர்க்கர்ஸோட டீடைல்ஸ்ல ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டான் சுனில்.

“அது இல்ல சார். மறுபடியும் அந்தப் பிரச்சனைதான்” என்று சொன்னான் தீபக்.

“ஐயோ தீபக், தெளிவா சொல்லுங்க. என்ன பிரச்சனை?” என்று கேட்டான் சுனில்.

“சார், டூ டேஸ்க்கு முன்னாடி ஒரு பொண்ணை பாஷா அடிச்சதா சொல்லி ஒரு வீடியோ வைரல் ஆச்சு இல்லையா? மறுபடியும் அந்த வீடியோ சோஷியல் மீடியாவுல வந்துட்டு இருக்கு” என்று சொன்னான் தீபக்.

அதைக் கேட்ட சுனிலுக்கு, இது எப்படி மீண்டும் சாத்தியமானது என்ற கேள்வி எழுந்தது.

“என்ன தீபக் சொல்றீங்க? நாமதான் அந்த அக்கவுண்ட்டை பிளாக் பண்ணிட்டோமே?” என்று கேட்டான் சுனில்.

“ஆமா சார். அந்த அக்கவுண்ட்டை நம்ம பிளாக் பண்ணிட்டோம். ஆனா, இப்போ ரிலீஸ் ஆகியிருக்கிறது வேற அக்கவுண்ட்ல இருந்து” என்று சொன்னான் தீபக்.

இவன் சொன்னதைக் கேட்டவனுக்கு, ஏற்கெனவே தலைக்கு மேல் பிரச்சனை இருக்கிறது. இதில் இது வேறயா என்றிருந்தது.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவன், தீபக்கிடம் கோபமாகப் பேசினான்.

“அந்த ஐடியையும் பிளாக் பண்ண வேண்டியதுதானே! இதையும் வேற நான் உங்களுக்குச் சொல்லணுமா? உங்களுக்கு இது தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டான் சுனில்.

“சார், ஒன் ஹவரா அதைத்தான் சார் பண்ணிட்டு இருக்கோம். இதுவரைக்கும் நாலு ஐடி க்ளோஸ் பண்ணியாச்சு. ஒரு ஐடி க்ளோஸ் ஆக ஆக இன்னொரு ஐடில இருந்து வீடியோ வந்துட்டே இருக்கு” என்று சொன்னான் தீபக்.

அதைக் கேட்டவனுக்கு, இது என்ன புதுப் பிரச்சனை என்றிருந்தது.

அதுவும் இல்லாமல், இந்த விஷயம் விதுரனுக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று அவனால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

காதல் பாவை தொடரும்…

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழி…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!