22.ராட்சசனின் காதல் பாவை

22.. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில்:

“அதைக் கேட்டவனுக்கு, இது என்ன புது பிரச்சனை என்று இருந்தது சுனிலுக்கு. அதுவும் இல்லாமல், இது விதுரனுக்குத் தெரிந்தால் என்னவாகும் என்று அவனால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.”

இனி..

“ஓகே தீபக், இதை எப்படியாவது ஹேண்டில் பண்ணுங்க. இந்த வீடியோ வைரலாகக் கூடாது. எந்த ஐடியில் வந்தாலும் அந்த ஐடியை பிளாக் பண்ணுங்க. அந்த ஐடி யாரோடது, அதோட டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணுங்க. அப்புறம் இப்போ போயிட்டிருக்கிற ஒர்க்கையும் சீக்கிரமா முடியுங்க.” என்று சொன்னான் சுனில்.

“சார், காலையிலிருந்து ரெண்டு ஒர்க்கை ஹேண்டில் பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஆனா எனக்கு இந்த வீடியோ ரொம்பப் பெரிய பிரச்சனையைக் கொடுக்கும்னு தோணுது.” என்று சொன்னான் தீபக்.

“எனக்குமே அதே யோசனையாத்தான் இருக்கு. முடிஞ்சு போன வீடியோ மறுபடியும் வருதுன்னா, இது யாரோ வேணும்னே பண்றாங்க. பெரிய பிரச்சனையை கிரியேட் பண்ணனும்னு பார்க்கிறாங்க. இப்போதைக்கு நம்ம இதை வைரல் ஆகாம பார்த்துக்குறதுதான் நல்லது. ஏற்கனவே நம்ம சைடுல நிறைய பிரச்சனை இருக்கு. அதெல்லாம் கிளியர் பண்ணனும். அதுவும் இல்லாம, நெக்ஸ்ட் வீக் அந்த டெண்டர் நமக்கு ரொம்பவே முக்கியமானது. எனக்குத் தெரிஞ்சு, அது நமக்குக் கிடைக்கக்கூடாதுன்னுதான் இதெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறேன். சரி ஓகே தீபக், இதை வெளியே வராத அளவுக்குப் பார்த்துக்கோங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று சொன்னான் சுனில்.

இவனுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன அண்ணாச்சி?” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“மறுபடியும் பாஸ், நீயும் இருக்கிற வீடியோவை யாரோ ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்காங்க.” என்று சொன்னான் சுனில்.

அதைக் கேட்டவளுக்கு மீண்டும் உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. விதுரனின் சுயரூபத்தைப் பார்த்ததிலிருந்து அவன் மீது அதிக பயம் கொண்டிருந்தவளுக்கு, இப்போது மறுபடியும் தன்னால் அவனுக்கு ஒரு பிரச்சனை வருகிறது என்று நினைக்கும்போதே, அவன் என்ன செய்வானோ என்று அவள் மனம் பதறியது. அதில் அவளுடைய கை, கால்கள் நடுங்கின. இவர்கள் நிலை இங்கு இப்படி இருக்க,

ஹோட்டல்..

உறக்கத்திலிருந்து விதுரன் கண் விழிக்க, அவன் பக்கத்தில் இருந்தவளைப் பார்த்ததும் கோபம் அதிகமானது. உடனே அவளை ஒரே தள்ளாக மெத்தையிலிருந்து கீழே தள்ளிவிட்டான். நன்கு உறங்கிக் கொண்டிருந்தவள் கீழே விழுந்ததில் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அவள் உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் வெற்றுமேனியாக இருந்தாள்.

இவன் தள்ளிவிட்டதில் தூக்கத்தில் தானாகவே கீழே விழுந்துவிட்டோமோ என்று நினைத்து மெத்தையைப் பார்க்க, மெத்தையில் அமர்ந்திருந்த விதுரன் அவளை அனல் வீசும் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. தான் இரவே இங்கிருந்து சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியே உறங்கிவிட்டோம் என்று.

“சாரி.” என்று சொன்னவள்,

தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு வேகவேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

அந்தப் பெண் இங்கிருந்து சென்றதும் குளியலறைக்குள் புகுந்தவன், தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர, அவனுடைய அறையின் கதவு தட்டப்பட்டது. அதில் அவனுடைய புருவங்கள் கேள்வியாகச் சுருங்கின. இருந்தும்,

“கம்மிங்.” என்று சொன்னான் விதுரன்.

அதில் வேகவேகமாக ஒரு பாடிகார்டு உள்ளே நுழைந்தவன், அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு தயக்கமாக அவனை அழைத்தான்.

“பாஸ்.” என்றான் அவன்.

ஏற்கனவே அந்தப் பெண் ஏற்றிய கடுப்பில் இருந்தவனுக்கு, இவன் வேறு வந்ததில் இன்னும் கோபம் ஏறியது. அதிலும் பேசாமல் நிற்பது இன்னும் கோபத்தை ஏற்படுத்த,

“வாட் ஹேப்பன்ட்?” என்று கோபமாகக் கேட்டான் விதுரன்.

அவன் குரல் கர்ஜனையாக வர, அதில் பயந்தவன்,

“பாஸ், நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு ரிப்போர்ட்டர்ஸ் தெரிஞ்சுக்கிட்டு உங்களுக்காகக் கீழே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.” என்று பதற்றமாகவும் அதே சமயம் வேகமாகவும் சொல்லி முடித்தான் அந்தக் காவலாளி.

இவன் சொல்லியதைக் கேட்டவன்,

“எதுக்கு?” என்று கேட்டான் விதுரன்.

“அது வந்து பாஸ், மறுபடியும் அந்த வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கு.” என்று சொன்னான் அந்தக் காவலாளி.

இவன் சொல்லியது தான் தாமதம், அதில் கோபம் கொண்டவன்,

“வாட்! இதுக்குப் பாசிபிலிட்டியே இல்லையே!” என்று கோபமாகக் கத்தினான் விதுரன்.

இவனுடைய கோபத்தைப் பார்த்துப் பயந்தவன், நொடியும் அங்கு நிற்காமல் வெளியே சென்றுவிட்டான்.

அறையிலிருந்து வெளியே வந்தவன், இந்தச் செய்தியைச் சுனிலுக்குச் சொல்லலாம் என்று சுனிலுக்கு அழைத்தான். அந்த நேரம்தான் தீபக் பேசிக்கொண்டிருந்தான். இவன் பலமுறை அழைத்தும் சுனிலுக்கு லைன் கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல், அவன் பயந்தபடி அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்தக் காவலாளி.

ஆனால் விதுரனுக்கு ஒருபுறம் இதற்குச் சாத்தியமே இல்லை என்று தோன்றினாலும், இன்னொரு புறம் மொத்தக் கோபமும் ஸ்ரீனாவின் பக்கம் சென்றது. இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று ஆத்திரம் கொண்டவன், நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

ஆனால் அவன் கீழே வரும் முன்பே பத்திரிகையாளர்கள் அங்கு காத்திருக்க, இவன் வெளியே வரும் பொழுது காவலாளிகளை ஒரு பார்வை பார்த்திருந்தான் விதுரன். அந்தப் பார்வையே மொத்தப் பத்திரிகையாளர்களும் அவனிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்ள, அங்கிருந்து கிளம்பினான் விதுரன் ஆபீஸ் நோக்கி.

இவன் இப்படி கோபமாக வந்துகொண்டிருக்க, அதே நேரம் இங்கு ஸ்ரீனா சுனிலிடம் என்ன நடந்தது என்று கேட்க, சுனில் சொன்னதைக் கேட்டுப் பயந்து போனவள், அந்த ராட்சசனிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என்று ஒவ்வொரு நொடியும் அவள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. அதில் மிகவும் பயந்து போனவள், பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தாள்.

இவளுடைய நிலை இப்படி இருக்க, இன்னொரு புறம் சுனிலோ இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான். அவனுக்கும் இதில் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அதனால் நிதானமாக யோசிக்கத் தொடங்கினான்.

சுனில் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே விதுரனின் கார் அந்த ஆபீஸின் கேட்டுக்குள் நுழைந்தது. இதை அறியாத சுனிலோ அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடியே நின்றிருந்தான்.

ஒருபுறம் தீபக் ஐடிகளை பிளாக் செய்யச் செய்ய, அடுத்தடுத்து புதிய ஐடிகளில் இருந்து வீடியோ வந்து கொண்டிருந்தது. இதுவரை ஒரு ஐடியில் வர, இப்பொழுது அதை பிளாக் பண்ணும்போது இரண்டு ஐடிகளாக மாறியது. இரண்டு மூன்றாக மாறியது.

அதில் அந்த வீடியோ மீண்டும் வைரலாகத் தொடங்கியது. இப்பொழுது அனைவரும் பார்க்க ஆரம்பித்தார்கள். அதிலும் ஆபீஸில் உள்ள அனைவரும் பார்த்தார்கள். அதில் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, அந்த நேரம் விதுரன் ஆபீஸுக்குள் நுழைந்தான்.

அனைவரும் அவனை விழி அகலாமல் பார்க்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவனுக்கு அவர்களுடைய பார்வையில் இருக்கும் அர்த்தம் புரிந்தது. எதற்காக இவர்கள் தன்னை இப்படி வியந்து பார்க்கிறார்கள் என்று உணர்ந்தவனுக்கு அதில் இன்னும் கோபம் வந்தது.

நொடியும் நிற்காமல் லிப்டில் ஏறியவன், எழுபத்தைந்தாவது தளத்திற்கு வந்ததும் நேராக அவனுடைய கேபினுக்குள் நுழைந்தான்.

ஒருபுறம் சுனில் யோசனையாக நின்று கொண்டிருக்க, ஸ்ரீனா பயத்தில் வேர்த்து விறுவிறுத்துப் போய் நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்த நொடி, இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் மேலோங்கியது. அவளை நொடியில் நெருங்கியவன், அவள் என்னவென்று யூகிக்கும் முன்பே அவளுடைய கழுத்தைப் பிடித்து சுவற்றோடு சுவராகச் சாய்த்து மேலே தூக்கினான் விதுரன்.

இவனுடைய வருகையைச் சுனிலும் எதிர்பார்க்காததால், அவனுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததை யூகிக்கவே முடியவில்லை. ஏன், என்ன நடக்கிறது என்று புரியவே அவனுக்குச் சில வினாடிகள் பிடித்தன. அதன் பின்புதான் என்ன நடக்கிறது என்று புரிந்து கொண்டவன்,

“பாஸ்! பாஸ்! என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி விதுரனின் அருகில் சென்றான் சுனில்.

இவனுடைய கேள்வியில் திரும்பி இவனை ஒரு முறை முறைத்தான் விதுரன். அதில் அவனுடைய சத்தமும் அடங்கினாலும், ஸ்ரீனாவின் நிலையைப் பார்த்தவனுக்கு மனம் கேட்கவில்லை. விதுரன் அடித்தாலும் பரவாயில்லை என்று நினைத்தவன்,

“பாஸ், நான் சொல்றதைக் கேளுங்க. உங்களோட கோபம் எனக்குப் புரியுது. இப்போ கோபப்பட்டு எதுவும் பண்ண முடியாது பாஸ்.” என்று சொன்னான் சுனில்.

“என்ன சுனில், என் கிட்ட பேசுற அளவுக்கு உனக்குத் தைரியம் வந்துடுச்சா?” என்று கேட்டான் விதுரன்.

இவனுடைய கோபத்தைப் பார்த்துச் சுனிலுக்குப் பயம் வந்தாலும், அதைத் தனக்குள்ளேயே மறைத்தவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

“சாரி பாஸ், நான் உங்களை எதிர்த்துப் பேசல. நம்மளோட சிச்சுவேஷனைத்தான் சொன்னேன்.” என்று சொன்னான் சுனில்.

“சரி ஓகே, நீ சொல்ற மாதிரியே நான் கோபப்படுறது வேஸ்ட்டா கூட இருக்கலாம். ஆனா இன்னைக்கு இருக்கிற எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் யாரு? இவதானே?” என்று சொல்லியவன், அவனுடைய பிடியை இன்னும் இறுக்கினான்.

அதில் ஸ்ரீனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே உடல் சரியில்லாமல் இருக்க, இப்பொழுது இவனிடம் மாட்டிக்கொண்ட தனக்கு இப்பொழுதே பரலோகம் சென்றுவிடுவோமோ என்ற பயமும் வந்துவிட்டது. ஏனென்றால், அவனுடைய பிடியில் நரகமே அவளுடைய கண்களுக்குத் தெரிந்தது.

அவனிடமிருந்து விடுபடப் போராடினாள். ஆனால் அவனுடைய பிடியிலிருந்து ஒரு இன்ச் கூட அவளால் நகர முடியவில்லை. அதில் அவளுடைய முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய, மெல்ல அவளுடைய கண்களும் சொருகத் தொடங்கின.

அவளுடைய நிலையைப் பார்த்த சுனில்,

“பாஸ், நான் உங்களை எதிர்த்துப் பேசுறேன்னு கோபப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தா அந்தப் பொண்ணு செத்தே போயிடும் பாஸ். இந்தப் பொண்ணு உங்க கண்ணுலேயே படாத அளவுக்குக்கூட நான் பார்த்துக்குறேன். ஏன், ஆபீஸ்ல கூட வேண்டாம். வேலையை விட்டுக்கூட அனுப்பிடலாம்.” என்று சொன்னான் சுனில்.

சுனில் சொன்னதைக் கேட்டவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.

“என்ன சுனில், எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆளாயிட்டியா? இவ்வளவு சீக்கிரம் எல்லாம் விட்டுடுவேன்னு நீயும் நினைக்காத, அவளும் நினைக்கக் கூடாது. இந்தப் பிராப்ளம் மட்டும் முடியாம இந்த வீடியோ இன்னும் வைரல் ஆச்சுன்னா, இவளோட நிலைமை எப்படி இருக்கும்னு எனக்கே தெரியாது. இதுக்கப்புறம் இவ வாழ்க்கையில நிம்மதிங்கிறதே இருக்காது.” என்று சொன்னான் விதுரன்.

காதல் பாவை தொடரும்..

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இப்படிக்கு,

உங்கள் அன்புத் தோழி..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!