இதயம் 19

நேத்ரா அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பி கொண்டிருந்தாள்.

அவள் தலை சீவி கொண்டிருக்கக் கதிரிடம் இருந்து போன் வந்தது.

“ஏய் எரும ரெடியாகிட்டியா?”

“ரெடி ஆகிட்டு இருக்கேன் மாடு”

“ஆஃபிஸ்க்கு சீக்கிரமாவே கிளம்ப மாட்டியாடி?”

“உனக்கென்ன? 8 மணி வரையும் தூங்க வேண்டியது. அப்புறம் குளிக்கறியோ, இல்லயோ கிளம்பிடுவ. நீ வீட்ல வேலையா செய்ற?”

“அடிப்பாவி. அன்னைக்கு வேண்டா வேண்டாம்னு சொல்லியே எல்லாத்தையும் முழுங்கிட்டு இப்போ என்ன வேலை செய்றேனு கேட்கறியே? மனசாட்சியே இல்லையாடி உனக்கு?”

“கதிர்” என்று அவள் தயக்கமாகக் கூப்பிட

“என்னடா?” என்று அவன் கனிவாகக் கேட்க நேத்ராவுக்குத் தான் கஷ்டமாகியது.

“டி போடாத. எனக்குப் பிடிக்கல”

“ஓகே. கூல் பேபி. இனி டி போடல” என்றவன்

“கொஞ்சம் சீக்கிரம் மேக் அப் போடு. நான் பக்கத்தில வந்துட்டேன். முகத்த பார்த்தா மின்னல் அடிக்கணும்”

“அப்படினா இன்னும் 2 கோட் போடணும்” என நக்கலடித்தவள்…

“எரும மாடு. ஃபர்ஸ்ட் நீ எங்க இருக்க?”

“இப்போ தான் வீட்ட லாக் பண்றேன்” எனச் சொல்ல அதில் கடுப்பானாவள்

“ஃபிராடு. கரெக்டாவே சொல்ல மாட்டியா?”

“எப்படியும் நீ ஹெவி மேக் அப் போடுவ. அப்பறம் என்ன?”

“டேய்…” என அவள் பல்லை கடிக்க

“நீ வெளிய வா பக்கி. நான் வந்துட்டேன்”

“சரி” என்றபடி கைப்பையை எடுத்தவள்…

“ம்மா பை” என்று சொல்லியபடி கிளம்பினாள்.

நேத்ரா வெளியே வரவும் கதிர் கார் வரவும் சரியாக இருந்தது. காரில் வந்து அமர்ந்தவளிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

“ஏன் பக்கி நேத்துச் சாட் பண்ணல?”

“நீ தான் பிஸியா இருந்த”

“நான் உன்கிட்ட பிஸியா இருக்கேன்னு சொன்னேனா? உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?”

“என்ன சொன்ன?”

“மெஸேஜ் பண்ணு. நான் பார்த்தேனா ரிப்ளை பண்ணுவேன்னு தான சொன்னேன்” எனக் கேட்க அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“அப்புறம் எதுக்குச் சாக்கு சொல்லிட்டு இருக்க?”

“சாக்கெல்லாம் சொல்லல” எனக் கத்தியவள் திடீரென அமைதியானாள்.

ஒரு நிமிடம் அதிர்ச்சியானவன் அதன் பின் அவளை ஒன்றும் கேட்காமல் பாடலை ரசித்தபடி காரை ஓட்டினான்.

அவளை அவ்வப்போது பார்வையால் வருடியவன்

“என்னாச்சு பேபி?” எனக் கேட்க அவள் திடுக்கிட்டாள்.

“ஒண்ணும் இல்லயே”

“அப்புறம் ஏன் பேபி அமைதியா வர?”

“நந்திங்”

“என்னனு சொல்லுடா” என அவன் கனிவாகக் கேட்க அவளோ

“நான் டி போட கூடாதுனு சொன்னதுல கோபமா உங்களுக்கு?” என்று தயங்கியபடி கேட்க

“நான் எப்போ பேபி உன்கிட்ட கோபம்னு சொன்னேன்? உனக்குப் பிடிக்கலனு சொன்ன. வீணா உன்னை ஹர்ட் பண்றதாலா என்ன வர போகுது? வாழ்க்கையை ரசிப்போம். என்ஜாய் பண்ணுவோம். அவ்ளோ தான்” என அவன் துள்ளல் குரலில் சொல்ல

‘இவன் மட்டும் எப்படி இவ்ளோ உற்சாகமா இருக்கான்?’ என அவன் மேல் இவளுக்குப் பொறாமை வந்தது.

“சரி. லீவ் இட். ஏன் 2 டேஸ்ஸா டல்லா இருக்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“ஒண்ணுமில்லனு சொல்லி சொல்லியே தெளிவா எல்லாம் இருக்குனு சொல்றா” எனச் சத்தமாகச் சலித்தவன்

“உன்கிட்ட நான் என்ன சொன்னேன்?”

“என்ன சொன்ன?” என அவள் கேள்வியாய் பார்க்க

“ஃப்ரீயா என்கிட்ட பேசணும்னு சொல்லி இருக்கேன்ல”

“ஆமா”

“அப்புறம் ஏன் பேபி யோசிக்கிற?”

“நீ எவ்ளோ சந்தோஷமா இருக்கற. வாழ்க்கைய ரசிக்கற. என்ஜாய் பண்ற. ஆனா என் லைஃப பாரு. எப்போ பார்த்தாலும் பிராப்ளம்ஸ்”

“என் பிரண்டுனு என் கஷ்டத்த சொல்லி உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பல” என அவள் விளக்க அவனோ இவளை கடுப்பாகப் பார்த்தான்.

“நீ கொஞ்சம் உளர்றத நிறுத்தறியா?” எனக் கேட்க அவளோ திருதிருவென விழித்தாள்.

‘என்ன தான் சொல்லு. நீ இப்படி முழிக்கறப்ப அப்படியே அந்தக் கண்ணுல விழுந்துடலாம் போல இருக்கு’ எனக் கொஞ்சியவன்

“இப்போ எதுக்குப் பக்கி திருதிருனு முழிக்கற? என்னய நீ ஃபிரண்டா கூட ஏத்துக்கல. அதான் இவ்ளோ தயங்கற”

“அப்படிலா இல்ல” என அவள் அவசரமாகச் சொல்ல அதில் புன்னகைத்தவன்…

“அப்போ உன்னை நான் நம்பவே இல்ல. அப்புறம் எப்படி உன்கிட்ட பிராப்ளம் சொல்றதுன்னு யோசிக்கிறியா?” எனச் சொல்ல அவளோ உறைந்து போய் அவனைப் பார்த்தாள்.

உண்மையில் அவள் அன்று தற்கொலைக்கு முயன்றதில் இருந்து கதிர் அவளிடம் பேசி அவளை வெளி கொணர முயற்சிக்க ஒரு சமயம் பேசினாலும் அடுத்த முறை நத்தையாகச் சுருண்டு கொள்வாள்.

இப்போதும் அவள் அப்படியே பார்க்க அவன் தன்னையே நொந்து கொண்டான்.

“பேபி என்னாச்சு? என்ன சொல்லிட்டேனு இப்படி இருக்கற?” என அவன் பதற

“இல்ல. அ… அது வந்து”

“கூல் பேபி. நம்பறதும், நம்பாததும் உன் இஷ்டம். நீ தேவையில்லாம குழப்பிக்காம இரு”

“நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்றேனோனு தோணுது. ஆனா எல்லாத்துக்கும் நல்லது தானே நினைச்சேன்? எனக்கு ஏன் இப்படி?” என அவள் கண் கலங்க…

“பொண்ணுங்க இப்படி இருக்கறது தான் சேஃ பேபி. நீ என்ன நம்பலேனா கூட நான் சந்தோஷம் தான் படுவேன்” எனச் சொல்ல நேத்ரா அவனை வியப்பாய் பார்த்தாள்.

“ஆமா பேபி. நீங்க ஸ்ட்ராங்க்கா இருக்கணும். அப்போ தான் இந்த உலகத்துல உங்களால சர்வைவ் பண்ண முடியும்” என்றவன்

“ஓகே. அதெல்லாம் விடு. லெட் மீ கம் டு த பாய்ண்ட். என்ன பிராப்ளம்?” எனக் கேட்க இப்போது அவள் தங்கு தடையின்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

“சித்தப்பா போன் பண்ணாங்க”

“யார சொல்ற?”

“இங்க இருக்காங்கனு சொன்னேனே. அவரு தான்”

“என்ன சொன்னாங்க பேபி?”

“சந்திரன் வீட்டில இருந்து போன் பண்ணாங்களாம். அதைப் பத்தி பேசணுமாம்” என அவள் தயங்கியபடி சொல்ல

“கூப்ட்டாங்கனா போய்ட்டு வாங்க பேபி. ஆன்ட்டியும் தான வருவாங்க”

“ஆமா. ஆனா எனக்கு அங்க போகப் பிடிக்கல கதிர். அவங்க அடிக்கறப்ப எல்லாம் அமைதியா இருந்துட்டு இப்போ வந்து அங்க ஸ்டன்ட் காமிக்கணும்னு இங்க ஆக்ட் பண்றாங்க”

“அந்தச் சந்திரனோட பெரியப்பன் அதுக்கு மேல. அந்த ஆளு எனக்கு அப்பா வயசு கதிர். அவன் என்ன டி போட்டு தான் பேசினான். ஆனா அப்பா வயசுல இருக்கிறவங்க மகளை அப்படி தான் பேசுவாங்களா?”

“எனக்கு அப்பா இல்லேங்கற ஏக்கம் சின்ன வயசில இருந்தே இருக்கு. ஆனா அதனால அப்பா மகள் கிட்ட எப்படி பேசுவாங்கனு கூடத் தெரியாத லெவல்க்கு இருக்குமா?”

“இதெல்லாம் யோசிக்கறப்ப நான் இழந்தது ரொம்ப அதிகமோன்னு தோணுது” என நேத்ரா கண்களில் கண்ணீர் வழிய ஏக்க குரலில் சொல்ல கதிரோ வாயடைத்து போய் நின்றான்.

‘ஓ மை காட். இவ என்ன சொல்றா? சின்ன வயசில இருந்தே அப்பா இல்லயா? இவ்ளோ தூரமா நீ ஏங்கியிருக்கப் பேபி? பேபி நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்டா. ஆனா நீ அழறத பார்த்துட்டு கைய கட்டிட்டு இருக்கிறது தான் கொடுமையா இருக்குடா’

அவள் கண்ணீரில் அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல அவன் மனம் துடித்தது. ஆனால் எங்கே அவள் நத்தையாகச் சுருட்டி கொள்வாளோ என்ற பயத்தில் அவன் அமைதியாக அவள் கையை அழுத்தி கொடுத்தான்.

அதில் சுதாரித்த நேத்ரா சட்டென்று தன்னை மீட்டி கொண்டு, “சாரி கதிர். காலையிலேயே உங்களை போரடிச்சிட்டேன். ரொம்பச் சாரி” எனச் சொல்ல

“இப்போ எதுக்குச் சாரி சொல்ற? நீ என்ன மிஸ்டேக் பண்ண? உன் மனசில இருந்தது தானே சொன்ன. இதுல ஃபீல் பண்ணி சாரி கேட்க என்ன இருக்கு?”

“உனக்கு உன் மேலேயே கான்பிடன்ஸ் இல்ல. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகம். அதை மாத்தினா சரியா போயிடும்” என அவன் தீவிரமாய்ச் சொல்ல இவள் அவனை வியப்பாய் பார்த்தாள்.

“என்ன பேபி அப்படி பார்க்கற?”

“எப்படி இவ்ளோ கரெக்டா சொல்ற?”

“அதெல்லாம் அப்படி தான்” என்றவன் திடிரென…

“ப்ப்ப்ப்ப்ப்பா… யார்டா இந்தப் பொண்ணு இவ்ளோ மேக் அப் போட்டு சந்திரமுகி மாதிரி பயமுறுத்துது” என அவன் விஜய் சேதுபதி மாடுலேசனில் சொல்ல…

“டேய் என்னை பார்த்தா பேய் மாதிரியா இருக்கு?” என அவள் அடிக்க ஆரம்பிக்க…

“பின்ன அப்படி ரெண்டு கோட் மேக் அப் போட்டு இப்படி அழுது வெச்சேனா சந்திரமுகி மாதிரி தான் இருக்கும் பேபி” என்று சொல்லி அவன் சிரிக்க அவன் சொல்லியதில் இவளுக்கும் கற்பனை போக அவள் தன்னை மீறி சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் வாய்விட்டு சிரிப்பதை வாஞ்சையுடன் பார்த்தவன்

“இது கரெக்ட். இப்படி சிரிச்சா பார்க்க எவ்ளோ ஆசையா இருக்கு. இதையே மெய்ன்டெய்ன் பண்ணு பேபி” எனச் சொல்ல அவள் அதற்கும் புன்னகைக்க இருவரும் புன்னகைத்தபடியே அலுவலகத்தை அடைந்தார்கள்.

காரில் இருந்து இறங்கியவன் “பேபி ஒண்ணும் யோசிக்கக் கூடாது. நம்மள மீறி எதுவும் நடக்காது. புரியுதோ?” என அவன் ஆறுதலையும் விளையாட்டாகவே சொல்ல அதற்கு அவனை விழி விரிய பார்க்க

“என்ன சைட் அடிச்சது போதும் பேபிமா. போய் வேலைய பாரு” எனச் சீண்ட

“உன்னை” என்று ஆரம்பித்தவள் அலுவலகம் வந்ததைக் கவனித்து அமைதியாக அதில் கிண்டலாகச் சிரித்தவன் பின்,

“டேக் கேர்” என்று சொன்னபடி தனது கேபினில் அமர்ந்தான்.

நேத்ராவை என்ன தான் சிரிக்க வைத்து விட்டாலும் அவளைப் பற்றி அவனுக்கு ஆயிரம் யோசனைகள்.

என்ன தான் வேலை செய்தாலும் அவனது மனம் நேத்ராவையே சுற்றி வந்தது.

அன்று அவளைக் காப்பாற்றிய அந்தத் தினத்தைப் பற்றி யோசித்தான். அன்று தான் கேட்டதும், அதற்கு அவள் சொன்ன பதில்களும் நியாபகம் வந்தது.

“இந்த 2கே யுகத்துல கூடப் பிராண நாதானு யாராவது உயிர விடுவாங்களா பேபி? அவன் அடிச்சானா அவனை திருப்பி அடிக்க வேண்டியது தான? அதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் டேம்ம திறந்து விடுவியா?” என அவன் கேட்க அவனைக் கொலைவெறியோடு பார்த்தவள்

“ஏன் கதிர் இப்படி கேட்கறே? ஒரு மேரேஜ்னா நல்ல விதமா தான எல்லாம் நடக்கும்னு எதிர்பாப்பாங்க. நானும் அப்படித் தான் நினைச்சேன்”

“ஓகே டா. ஆனா நீ அவனை சுத்தமா பிடிக்கலேன்னு சொல்றப்ப ஏன் கஷ்டப்பட்டு வாழ்ந்தனு தான் கேட்கறேன். அதுவும் அடிச்சாங்கனு வேற சொல்ற பேபி?”

“ஆமா. அது நம்ம கட்டமைப்பு அப்படி. அதும் இல்லாம வாழா வெட்டியா பொண்ணு இருந்தா இங்க அம்மாங்களுக்குப் பயம். ஆனா நானும் முடிஞ்ச அளவுக்குப் போராடினேன். பலன் தான் பூச்சியம்” என விரலால் காற்றில் வரைய

“அதுக்காக நீ சூசைட் பண்ண போவியா?” என அவன் ஆத்திரமாகக் கேட்க அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

“ஏன் பேபி சிரிக்கிற?”

“நான் அல்ரெடி சூசைட் பண்ண டிரை பண்ணேன் கதிர். பட் அப்போ இந்த அளவுக்குத் தைரியம் இல்ல. இந்நேரம் அது நடந்திருந்தா என்ன புதைச்ச இடத்துல செடி கூட முளச்சிருக்கும்” என அவள் சொல்ல அவனோ

“பேபி…” என்றவன் பதறி போய் அவளை இறுக அணைத்தான்.

“பேபி இனி உன்கிட்ட இந்த மாதிரி வேர்ட்ஸ் வரக் கூடாது. எனக்குப் பிராமிஸ் பண்ணுடா. ப்ளீஸ்” என அவன் கலங்கிய குரலில் கேட்க

“நீ ரொம்பப் பீல் பண்ணாத. இனி அப்படி யோசிக்க மாட்டேன். ஆனா இந்த உலகத்துல நான் வாழ்ந்து மட்டும் என்ன பிரயோஜனம்? எல்லாத்துக்கும் பாரமா தானே இருக்கேன்?” என அவள் புலம்ப அவனோ அவளை முறைத்தவன்…

“நீ பாரமா இருக்கியா? காத்தடிச்சா கீழ விழற மாதிரி இருந்துகிட்டு பேச்ச பாரு” என அவளைக் கடிந்தவன்

“ஓகே. நம்ம ஒரு டீலிங்குக்கு வருவோமா?”

“என்ன?”

“டெய்லி எனக்குக் குட் மார்னிங், குட் நைட் மெஸேஜ் அனுப்பனும். எந்த விஷயத்தையும் எங்கிட்ட மறைக்கக் கூடாது. அதே போல எது சொல்லவும் தயங்க கூடாது” எனச் சொல்ல அவள் சரி எனத் தலையாட்டினாள்.

“தென் இன்னொரு கண்டிஷன். ஆபீஸ்க்கு நீ என் கூடக் கார்ல வரணும்” எனச் சொல்ல நேத்ரா இப்போது அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“வேணாம் கதிர். அம்மாக்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மாவுமே என்ன மாதிரி நம்பிக்கை இல்லாம இருக்காங்க ஜென்ட்ஸ் மேல” என்று சொல்ல கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினான்.

“ஓகே. உனக்கும் வேணாம். எனக்கும் வேண்டாம். வீக்லி டூ டேஸ் நீ என்கூட வரணும்” எனச் சொல்ல அவள் அவனைத் திகைப்பாய் பார்த்தாள்.

“வேணாம் கதிர். ஆபீஸ்ல ஏதாவது தப்பா நெனைக்கப் போறாங்க” எனச் சொல்ல

“எவன் நெனச்சா உனக்கு என்ன? இங்கே அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை” என்றவன்

“இதை நீ கரெக்ட்டா ஃபாலோ பண்ணலன்னா இன்னைக்குப் பண்ணது நான் உங்க அம்மாட்ட சொல்லிடுவேன்” என அவன் மிரட்ட நேத்ரா பதறிப்போனாள்.

“ஐயோ ப்ளீஸ் கதிர். அம்மாட்ட சொல்லிடாத. நீ என்ன சொல்லுறியோ நான் செய்யுறேன்” எனக் கெஞ்ச அவனுக்கு அவளைப் பார்க்க பாவமாய் இருந்தாலும் தான் சொல்லியதில் உறுதியாய் நின்றான்.

‘சாரி பேபி. உன்னை நான் எப்படி சேஞ்ச் பண்ண போறேன்னு தெரியல. இப்படி ஏதாவது பண்ணா தான் நீ என் வழிக்கு வருவ’ என மனதிற்குள் நினைத்தவன்

“சோ மேடம் ஃபாலோ மை ரூல்ஸ்” என்க அவளோ அவனை முறைத்தபடி அமர்ந்தாள்.

“பேபி கொஞ்சம் ரெஸ்ட் எடுடா. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டுக்குப் போகலாம். ஓகேவா?” என்றவன் அங்கிருந்து வெளியேறி பால்கனியில் போய் நின்றான்.

அவளைச் சமாதானப்படுத்தியவனுக்கோ இவளது நிலையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஏதேதோ யோசித்தவன் சில போன் கால்களைச் செய்தவுடன் தான் அவனது மனம் நிம்மதியடைந்தது.

பின்னர் அவன் அங்கிருந்து நேத்ராவின் அருகில் வர அவள் தீவிர யோசனையில் இருந்தாள்.

அவளைக் கவனித்தபடியே வந்தவன் “கிளம்பலாமா நேத்ரா?” எனக் கேட்க அவள் சரியெனத் தலையாட்டினாள்.

பிறகு நேத்ராவை அவளது வீட்டில் விட்டவன் தனது வீட்டிற்குச் சென்றான்.

கதிர் நேத்ராவை பற்றிய யோசனையில் இருக்க நேத்ராவுக்கோ அன்று நடந்தது ஒவ்வொன்றும் நியாபகம் வர அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பானோ எனப் பயந்தாள்.

அவன் மார்பில் கதறி அழுதது, அவன் கையைப் பிடித்துப் படுத்துத் தூங்கியது என அனைத்தும் நியாபகம் வர அவள் தன்னை நினைத்தே வெட்கியவள் அவனிடமிருந்து விலகி இருக்க முடிவு செய்தவள் அதன் படியே செயலாற்ற நினைக்க அதைக் கதிர் செயல்படுத்த விடவில்லை.

முதல் இரண்டு நாட்கள் அவன் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. தூரமாக இருந்தாலும் அவளைக் கண்காணித்தபடியே இருந்தான்.

ஆனால் மேலும் இரு நாட்களும் இதேபோலச் செல்லவும் அவனுக்குக் குழப்பம் அதிகமாகியது. அவள் தன்னைத் தவிர்க்கிறாளோ என்று ஐயம் கொண்டவன் அவளைக் கண்காணிக்க அது உண்மை என்று நிரூபணமானது.

உடனடியாக நேத்ராவை கூப்பிட்டவன் அவளை முழுமையாக ஆராய்ந்தான்.

அவள் அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தாள்.

அவளையே பார்த்தபடி இருந்தவன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“நேத்ரா நான் சிங்கம், புலி இல்ல. ஏன் என்ன பார்த்து பயந்து ஓடுறீங்க?” என அவன் கேட்க நேத்ரா அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

“அப்படி இல்ல கதிர்”

“அப்புறம் ஏன் பேபி என்ன பார்த்து ஓடுற? நான் உனக்குப் புரபோஸ் பண்ணேனா? இல்ல எங்காவது ரூம் போட்டேனா?” என அவன் கோபமாகக் கேட்க

“கதிர்…” என அவள் கோபமாகக் கத்தினாள்.

“ஏன் கத்தற? ஒருத்தரு கஷ்டத்துல இருந்தா நம்ம அவங்களுக்கு ஆறுதல் சொன்னா சந்தோஷப்படுவாங்கனு தான் கேள்விப்பட்ருக்கேன். நீ என்னடான்னா என்ன பார்த்தாலே பேய பார்த்த மாதிரி ஓடுற?” என இறுகிய குரலில் கேட்க

“இல்ல கதிர். நான் அன்னைக்குக் கைய பிடிச்சிட்டு தூங்கினேன்ல. அழுதேன்ல… நீ என்ன எதுவும் தப்பா நினைச்சுப்பியோன்னு பயமா இருக்கு” எனத் தயக்கமாகச் சொல்ல

“ஃபர்ஸ்ட் உன் பைத்தியக்காரத்தனத்த நிறுத்தறியா? உனக்கு எப்படி இப்படி எல்லாம் தோணுதோ?” என்று கத்தியவன் நேத்ராவின் முகம் போன போக்கை பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“பேபி ப்ளீஸ்டா. இதுல தப்பா நினைக்க எதுவுமே இல்ல. நீ என்கிட்ட எதுனாலும் ஷேர் பண்ணனும். புரியுதா?” என்று சொல்ல அவள் தலையாட்டினாள்.

“எது சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டு. என்ன?” என அவன் சொல்ல அதற்கும் அவள் தலையாட்ட அவனுக்குச் சிரிப்பு வந்ததைக் கட்டுப்படுத்தியவன்

“இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இல்லேனா ஆன்ட்டிகிட்ட சொல்லிடுவேன்” என மிரட்ட

“நான் இந்த மாதிரி பண்ண மாட்டேன். ப்ளீஸ்” என அவள் மன்னிப்பு கேட்க அவளை மன்னித்து விட்டான்.

அதன்படி இந்த ஒரு மாதமாக எந்தப் பிரச்சனையும் இன்றிச் செல்ல இன்று அவள் கூறியதில் அவளுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உறுதியுடன் நிற்க வேண்டுமென முடிவு செய்து கொண்டவன் வேலையில் ஆழ்ந்தான்.

********

அடுத்த வாரத்தில் நேத்ரா அமுதாவுடன் சாந்தமூர்த்தி வீட்டுக்கு சென்றாள்.

நேத்ராவை வரவேற்ற சாந்தமூர்த்தி அமுதாவை கண்டு கொள்ளவில்லை.

“என்ன முடிவு பண்ணி இருக்க நேத்ரா?” எனக் கேட்க

“இப்போதைக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன். வேற எதுவும் யோசிக்கல”

“லைஃப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க?”

“அதைப் பத்தி ஒண்ணும் யோசிக்கல சித்தப்பா”

“எனக்குக் கோவைல இருந்து போன் பண்ணிட்டே இருக்காங்க. நீ அங்க போ நேத்ரா”

“இல்ல சித்தப்பா. அங்க அடிப்பாங்க”

“நான் தான் அப்பவே சொன்னேன்ல. அவங்க அடிக்கறப்ப நீ ஊருக்கே கேட்கற மாதிரி கத்தினா அவங்க பயந்துப்பாங்கன்னு சொன்னேன்ல” எனக் கேட்க…

‘அப்புறம் அதுக்கும் எப்படி கத்தலாம்னு அவங்க அடிக்கறதுக்கா? ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா அதுக்கு வேற ஏதாவது பண்ணிருந்தா நான் என்ன ஆகறது?’ என அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

“நேத்ரா தனியா போய் இருக்கீங்களா?”

சாந்தமூர்த்தியின் கேள்வியில் நேத்ராவின் முகத்தில் சிந்தனை படர்ந்தது. நேத்ராவும், சந்திரனும் இந்தத் தனிக்குடித்தன வாழ்வுக்குச் சம்மதிப்பார்களா? அவர்கள் வாழ்க்கையில் அனைத்தும் சரி ஆகுமா?

விடை அடுத்த அத்தியாயத்தில்…

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page