காதல் – 12

காதல் -12 
 

 

ஒடி வந்தவள் எதிரில் வந்த ராஜாவின் மீது மோதி நின்றாள். இருட்டில் அவனது முகம் தெரியாமல் போக “சார், சார் என்னை காப்பத்துங்க யாரே நான்கு நபர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றாங்க.” மழையில் நனைந்து முகம் எல்லாம் பயத்துடன் அழுகை குரலோடு தன் முன் கை கூப்பி கெஞ்சியவளை பார்த்தவன் மனம் துடித்துடித்து போனது. அருணும் இவளது நிலைமை கண்டு பரிதவித்தான்.

மின்னல் வெளிச்சத்தில் தன்னவனை கண்டவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும். அவனை கண்டதும் மேலும் அழுகை அதிகரிக்க இவளது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கொலைவெறியுடன் பார்த்தான்.

ராஜா அணிந்து இருந்த கோர்ட்டை கழட்டி அவளுக்கு போர்த்திவிட்டு அருண்கிட்ட கார்க்கு அழைத்து செல்லுமாறு கட்டளைவிதித்தான்.

“ஹலோ பாஸ் என்ன நீங்க மட்டும் வந்திங்க பெரிய ஹீரோ மாதிரி அவளை கூட்டிட்டு போறீங்க. இங்க பாருங்க பாஸ் முதல நாங்க தான் அந்த பொண்ணை பார்த்தோம். அதானல அவளை எங்க கூட அனுப்பு. அப்புறம் வேணும்ணா நீங்க இரண்டு பேரும் யூஸ் பண்ணிக்கோங்க” என்று ஒருத்தன் சொல்ல. அடுத்த நொடி அவன் தரையில் கிடந்தான்.

மற்ற மூவரும் ஒரு அடி பின்னால் நகர்ந்தனர். அவர்களையும் ஆத்திரம் தீரும்வரை அடித்து துவைத்தான் ராஜா. அவன் அடித்த அடியில் வலி தாங்க முடியாமல் துவண்டு போனார்கள்.

“அய்யோ சார் எங்களை மன்னிச்சிடுங்க இனிமேல் இந்த பக்கமே வர மாட்டோம் சார்.” அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் ராஜா விட்டபாடு இல்லை இதற்கு இடையில் மழையும் நிற்க.

அருணும் “சார் விட்டுவிடுங்க போலீஸ்ல புடிச்சி கொடுத்திடலாம். அதுவும் இல்லமால் கீதா வேற ரொம்ப பயத்துல இருக்கா. எவ்வளவு சொல்லியும் காருக்குள்ள ஏற மாட்டிக்கிறாங்க.” என அருண் சொல்லியா பிறகே சுயநினைவுக்கு வந்தான் ராஜா. 
 

பின் அவர்களை விட்டு கீதாவை நோக்கி நடக்க அருணும் இவன் பின்னால் வர அவனுங்க தப்பித்தால் போதும் என்று ஓடி விட்டனர்.

அருண் பிடிக்க போக. ராஜாவே தடுத்து “வேண்டாம் விட்டுடு இனி அவனுங்க இந்த பக்கமே வர மாட்டாங்க. ” என்றான்.

அருணும் ” ம்ம்ம்ம் அவனுங்க வாங்குன அடி அப்படி சார்.” என அவர்கள் ஓடிய திசையை பார்த்துவிட்டு கீதாவிடம்  வந்தார்கள்.

கீதாவை பார்த்தவன் இன்னும் அழுதுக்கொண்டே இருப்பதை கண்டு. “சாரி மா உன்னை நான் தனியா அனுப்பி இருக்க கூடாது.” என ராஜா சொன்னா அடுத்த கணம் அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.

அவளின் உடல் நடுக்கமே அவள் எந்த அளவுக்கு பயந்து போய் இருக்கிறாள் என்று அவனுக்கு உணர்த்தியது தன்னவளின் பயத்தை போக்க அவனும் அவளை அணைத்துக்கொண்டு “நான் இருக்கேன்டா. உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன். நீ பயப்புட தேவையில்லை “என்று ராஜா கூற இங்க என்ன நடக்குது என்று புரியாமல் குழம்பிக்கொண்டு இருந்தான் அருண்.

அவனது மனசோ இவர்களை இப்படி பார்க்க முடியாமல் தவித்தது. என்ன தான் அவள் பயத்தில் இப்படி செய்தாலும் தனக்கு சொந்தமானவளை இன்னொருவன் அணைத்துக்கொண்டு நிற்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் “கீதா” என்று குரல் கொடுத்தான் அருண்.

அவனது குரல் கேட்டு தான் இருவரும் தன் நிலையை உணர்ந்தார்கள். இருவருக்கும் பல வருடம் கழித்து கிடைத்த அணைப்பில் தன் நிலையை மறந்து போனார்கள்.

ராஜாவோ அவளை பார்த்துக் கொண்டு மெல்ல விலகி “காருல ஏறு உன்னை வீட்ல டராப் பண்றேன். “என ராஜா சொல்ல அருண் பின் டோரை திறக்க அதற்கு முன்பே ராஜா முன் சீட்டில் அவளை அமர வைத்தான்.

அருணுக்கோ இன்னும் குழப்பமே அதிகரிக்க ஒன்றும் புரியாமல் காரில் ஏறி அமர்ந்தான். எப்பொழுதும் யாரையும் முன் சீட்டில் அமரவிடாமல் தடுத்தவர் இன்று கீதாவை எதற்கு அமர வைக்கனும். மனதில் கோபம் தோன்றினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல். தன்னால் தான் இவளுக்கு இப்படி நடந்தது என மன வருத்தம் கொண்டாலும் கீதா இப்போது பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற உணர்வே அவனுக்கு இப்போதைக்கு ஆறுதல் அளித்தது.

கீதாவை காரில் ஏற்றி ஏ.சியை குறைத்து மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டினான். அவ்வபோது தன்னவளை பார்த்துக்கொண்டே வந்தவன். அவளை எப்போதும் இப்படி உடைந்துப்போய் பார்க்கதாவனது கோபம் அருண் மேல் திரும்பியது.

“அருண் உன்னால் தான் கீதா இன்னிக்கு லேட்டா கிளம்பினாள். அவள் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இருந்த இந்த நிலைமை வந்து இருக்காது.” என்று திட்டிக்கொண்டு இருந்தான்.

கீதாவிடம் திரும்பி “நான் மட்டும் சரியான டைம்ல வராமல் இருந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும். உங்க அப்பா அம்மாக்கு நான் என்ன பதில் சொல்றது. ” என கோபமாக பேச,

அவன் அப்படி சொன்னதும் ராஜாவை பார்த்து கொஞ்சம் நிதனமாகி ஒரு பெருமூச்சை விட்டு “சார் அருண் மேல என்ன தப்பு இருக்கு. வேலை இருந்ததுனல தான் நான் தாமதமாக கிளம்பினேன் “என கூற அவளை முறைத்து விட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் சொலுத்தினான்.

அதன் பிறகு மூவரும் அமைதியாக வர முதலில் கீதாவை இறக்கிவிட்டு அருணையும் டராப் பண்ணிவிட்டு.

அவன் வீட்டுக்கு வந்தவன் இந்துவை பார்த்ததும். ” நீ எதுக்கு இங்க வந்த” என கேட்டான்.

அவனது தாய் வசந்தா நடுவில் புகுந்து ” இவ இனிமேல் இங்க தான்டா இருக்க போறா” .. என்று சொல்ல, அவன் தாயிடம் கோபப்பட்டுவிட்டு தன் ரூமூக்கு வந்தவன். கீதாவின் நினைவில் முழ்கினான். “அவள் சாப்பிடுட்டு இருப்பாளா?. அங்க அப்பாகிட்ட என்ன சொல்லி இருப்பா.? பாவம் ரொம்ப பயந்துடா?. இனிமேல் உனக்கு இப்படி நடக்க விட மாட்டேன் கீத்து “என அவளது நினைப்பில் இருந்தவன் அப்படி தூங்கியும் போனான்.

அங்கு அருண் நினைவிலும் இதே தான் ஓடிக்கொண்டு இருந்தது. “அவர் லைஃப்ல மட்டும் நம்ம தலையிட கூடாது ஆனா ராஜா சார் என் லைஃப்ல மட்டும் தலையிடுவாரு. இனி என் ஏஞ்சல்கிட்ட இப்படியெல்லாம் நடந்துகிட்டாரு நான் மனுஷனா இருக்க மாட்டேன். “என புலம்பிக்கொண்டு இவனும் உறங்கிவிட.

கீதா மட்டும் உறங்காமல் இன்று நடந்ததை யோசித்து பயந்துக்கொண்டு இருந்தாள். இவள் வீட்டுக்கு வந்த சமயம் அனைவரும் உறங்கி இருக்க இவளிடம் இருக்கும் சாவிவை வைத்து திறந்து உள்ளே போனவளை வழி மறைத்து “ஏன் இவ்வளவு நேரம் வீட்டுக்கு வர “என தினேஷ் கேட்க. “வேலை கொஞ்சம் அதிகம் அத்தான்” என்று சொல்லி விட்டு அவள் ரூமுக்குள் தஞ்சம்புகுந்தாள்.

அவள் போவதை பார்த்தவன் “பாவம் கீதா, என்னை பார்த்தாவே இந்த அளவுக்கு பயப்புற அந்த அளவுக்கு நம்ம கொடுமை படுத்தி இருக்கோம். “என அவனது மனம் அவளுக்காக வேதனைப்பட்டது. இப்போது எல்லாம் அவளை கஷ்டபடுத்தாமல் எந்த தொந்தரவும் செய்யாமல் தனக்குனு ஒரு வேளை தேடிக்கொண்டான் தினேஷ்..

அவன் அப்பாக்கே பெரிய ஆச்சிரியம் தான். ஆனால் அவன் அம்மாக்கு தான் வருத்தம். நல்ல ஜம்புனு உட்கார்ந்து சாப்பிட வேண்டியவன் இப்படி வேலைக்கு போறானேன். “என்ன டா திடீருனு வேலைக்கெல்லாம் போறனு” கேட்டதற்கு அவன் கூறிய பதில் அவனது தாய் விஜயாவின் வாயை அடைத்தது. “அம்மா காதல் வந்துட்டா எல்லாம் மாறிடும் “என்று ஒரு தினுசாக சொல்லிய மகனை பெற்றோர் இருவரும் அதிசியமாக பார்த்தார்கள்.

தனதறையில் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவள் விழிகளின் நீரோடு “என் அப்பா அம்மா இறந்தது கூட உனக்கு தெரியகூடாது தான், நான் எதுவும் பேசாமல் இருந்தேன் இன்பா. என்ன நடந்தது உண்மையை சொன்னா உன்னால தாங்கிக்க முடியாதுடா. “என்று தூங்கமால் ராஜாவை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு.

அருணின் மாற்றமும்.. தினேஷின் இந்த புதிய மாற்றமும் அறிய தவறிவிட்டாள் கீதா..

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page