காதல் -14
ஆறு வருடத்திற்கு முன் அன்று கீதாவை பார்த்து தன் காதலுக்கு என்ன பதில் என்று தெரிந்துக் கொள்ள வந்த இன்பராஜாவிடம்,
” ஆமா இந்து யாரு? ” என்று கேட்டாள் கீதா.
ராஜா புருவங்கள் சுருக்கி “என் மாமா பொண்ணு தான். ஏன் கேட்கிற கீத்து. “என்றான்.
கீதாவோ யோசனையோடு “அது அவள்” என சொல்ல வாயை திறக்குமுன் இன்பராஜாவே பேச்சை தொடர்ந்தான்.
“இப்ப எதுக்குடி அவள பத்தின பேச்சி. அத விடு காலையில எதுக்கு கீத்து என்னை மீட் பண்றேன் சொல்லிட்டு, ஏன் மீட் பண்ணமா வீட்டுக்கு வந்து இருக்க? அப்புறம் எதுக்குடி என் நேம் கேட்ட.” என்று கேட்டான்.
கீதாவோ “உன் நேம் எனக்கு அப்போ தெரியாதுல அதான் கேட்டேன்.”
“ஓ இப்போ மேடமுக்கு என் நேம் தெரியுமா.? ” என்றான்.
அவளும் சிறு புன்னகையோடு “ம்ம்ம்ம்.. தெரியும், இன்பா ” என்று கூற.
அவனோ “என்ன இன்பாவா” என்று குறும்பாக சொல்ல. ” ம்ம்ம் இதுவும் நல்ல தான் இருக்கு. என்னை யாரும் இதுவரை இப்படி கூப்பிட்டதில்ல.” என பேசியவன் ஏதோ யோசனை வர “அப்போ நான் யாருன்னு உனக்கு தெரியும் அந்த காலேஜில.” என அவன் கோள்வியோடு நோக்க.
அவளோ “ம்ம்ம்ம் நிறுத்து! நிறுத்து! நானே சொல்றேன். “என அவனை பற்றி அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
“உன் பெயர் இன்பாராஜா. அந்த காலேஜ் உங்க தாத்தா கட்டியது. நீ லாஸ்ட் பைனல் இயர் பிலிம் அகாடமி படிக்கிற. அப்புறம் இந்த ஊர்லயோ டாப் டென் பணக்காரங்கள உங்க குடும்பமும் அடங்கும். அதுக்கு அப்புறம் அவள் யோசனை செய்வது போல். ” ஆஆஆ ஞாபகம் வந்துடுச்சி. இவ்வளவு சொத்துக்கும் நீங்க ஓரே வாரிசு”சரியா சொன்னேன்னா என இன்பாவை பார்த்து சீரியஸான முகத்துடன் கீதா கேட்க. இன்பராஜா சிரித்தே விட்டான்.
“ஆமா கீத்து உனக்கு யாரு இவ்வளவு டீடெய்ல் சொன்னது.?”
” ம்ம்ம் வேற யாரு எல்லாம் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களே மகாராசி இந்து அவ தான் சொன்னா.”
அதைக் கேட்டவன் அதிர்ச்சியுடன் “இந்துவா? நீ எப்போ அவள பார்த்த?” என்று கேட்டான்.
அவளோ முகத்தை சுழித்துக்கொண்டு ” ம்கூம் நான் எங்க அவள பார்த்தேன். அவ தான் என்ன வந்து பார்த்தா. ” என மதியம் நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
காலையில் உன்னை பார்த்து என் காதலை சொல்ல வந்தேன். அப்போ நீயோ என் எதிரே வந்து பதில் கேட்டப்ப உன் முகத்தை பார்க்கும் போது சின்ன பசங்க எக்ஸாம் ரிசல்ட்க்கு வைட் பண்ற மாதிரி உன் முகத்தை வச்சிடு கேட்டியா. அதான் உன்னை கொஞ்சம் அலைய விடலாம் நினைச்சி, நீ சொன்ன டைம்ல தான் சொல்லுவேன்னு உன்னை வெறுப்பு ஏற்றிவிட்டு நான் கிளாசுக்கு வந்துட்டேன். மதியம் ஆசை ஆசையா உன்னை தேடிட்டு வந்தப்ப இந்து என்னை வழி மறிச்சிட்டா. ” என மதியம் நடந்த நிகழ்வை தொடர்ந்தாள்.
******************
“ஏய் நீதான் என் அத்தான் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிறவளா? ” என்று கீதாவை கோபமாக பார்த்து கேட்டாள்.
கீதாவோ புரியாமல் மனதிற்குள் ‘போச்சுடா யாரு இவ லூசு மாதிரி என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கா’ என நினைத்தவள் இந்துவிடம் “இங்க பாரு பொண்ணு யார் நீ? உன் அத்தான் யாருன்னு எனக்கு தெரியாது. அப்புறம் எதற்கு அவர் பின்னாடி நான் சுத்த போறேன்” எனக் கேட்டாள்.
இந்துவோ ஆத்திரத்துடன் ” நடிக்காதடி, என் அத்தான் யார் என்று தெரியாமல் தான் அவர் லவ் சொல்லும்போது உன்னோட அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு, அவர்கிட்ட இப்ப லவ்வ சொல்ல போயிட்டு இருக்கியா? ” என்றாள் எரிச்சலுடன்.
கீதா சிறிது நேரம் யோசித்தவள் ” ஓ! இவள் நம்ம ஆளை தான் சொல்ற போல” என்று நினைத்தவள், அவளிடத்தில் ” ஆமாம் இதை கேட்க நீ யாரு?” எனக் கேட்டாள்.
இந்து சினத்துடன் ” நான் யாரா? என் பெயர் இந்து. நீ லவ் சொல்ல போறியே! அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறது நான் தான்” எனக் கூறினாள்.
இதைக் கேட்ட கீதாவின் இதயம் சுக்கு நூறாக உடைந்து போனது போல் உணர்ந்தாள். அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அதை பார்த்த இந்து உள்ளுக்குள் மர்மமாக சிரித்துக்கொண்டு கீதாவை சொடக்கிட்டு அழைத்து ” ஆமா ராஜா அத்தான் பத்தி உனக்கு தெரியுமா? தெரிஞ்சுதான் என் அத்தனை வளைத்து போட பார்த்தியா பிச்சக்கார நாயே” என்றால் வரம்பு மீறிய வார்த்தைகளால்.
இதைக் கேட்ட கீதா கோபத்துடன் ” ஏய் இந்து பார்த்து பேசு. இல்லனா மரியாதை இருக்காது”
இந்துவும் அதே கோபத்துடன் ” யாருக்கும் மரியாதை இருக்காது? நான் யாரு தெரியுமா? இந்த உலகத்திலேயே டாப் டென்ல இருக்கிற ராஜா அத்தான் மனைவியாக போறாவ” என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி பேசினாள்.
அதைக் கேட்ட கீதா ஒன்றும் புரியாமல் முழிக்க. அவளின் குழம்பிய முகத்தை பார்த்த இந்து தொடர்ந்தாள்
” என்ன, நான் சொல்றது புரியலையா? அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நீ எங்க? ஒரு நொடிக்கு பல லட்சம் சம்பாதிக்கும் என் அத்தான் குடும்பம் எங்கே? என் அத்தான் பெயர் கூட உனக்கு தெரியாது, இதுல நீ அவரை லவ் பண்ற? “என நகைத்தவள், ” ஆமா நீ இப்போ படிக்கிறீயே இந்த காலேஜ் யாருது தெரியுமா?” எனக் கேட்டாள்
கீதாவின் முகமும் மேலும் குழப்பத்தில் இறுக. அதை பார்த்து சிரித்துக் கொண்டே “என் அத்தானேட காலேஜ் தான்.” என்று மேலும் இன்பராஜாவை பற்றி சொல்லி முடித்தால் இந்து.
இந்து கூறியது எதுவும் நம்பமுடியாமல், நம்பாமல் இருக்க முடியாமல் தவித்த மனதை கட்டுப்படுத்தி இந்துவை பார்த்து கேள்வி கேட்டால்.” நீ சொல்றதெல்லாம் நான் எப்படி நம்புவது” என்று.
வாய்விட்டு சிரித்த இந்து, அவளை ஸ்டாப் ரூமுக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த, ராஜாவின் தாத்தா புகைப்படத்தைக் காட்டி பிறகு தன் செல்போனில் ஏற்கனவே அவள் தந்தை கொடுத்த புகைப்படத்தை காட்டினாள்
அதைப் பார்த்தவள் அதிர்ந்தால் தன்னிடம் நேற்று காதலை சொன்னவன் இந்த கல்லூரி முதல்வருடன் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்தவள், பிறகு இந்துவும் அவனும் ஜோடியாக இருந்த புகைப்படத்தை பார்த்ததும் உடைந்து விட்டாள்.
இதற்கு மேலும் அங்கு இருந்தால் தான் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியேறி விடுமோ என்று பயந்து அங்கிருந்து வீட்டுக்குச் சென்றாள்.
அவள் பெற்றோரிடமும் எதுவும் பேசாமல் சாப்பாடு கூட அவர்களுக்காக ஏனோ தானோ என்று உண்டுவிட்டு அமைதியாக அறைக்குள் தஞ்சம் புகுந்தவளை பெற்றோர் எதுவும் தொந்தரவு செய்யாமல் அவள் போக்கில் விட்டு விட்டனர்.
பெற்றவர்களுக்கு தெரியாதா! தன் மகள் எப்படி அமைதியாக இருப்பவள் இல்லை என்று. ஏதோ பிரச்சனை இருக்கும் என்று அறிந்தவர்கள் அதை அவளாகவே வந்து தங்களிடம் சொல்வாள் என்று தன் மகள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் பாவம் இந்த நம்பிக்கையை ஒருநாள் சுக்குநூறாக உடைய போவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தன் அறைக்கு வந்தவள் கட்டில் படுத்துக்கொண்டு தன்னவனை நினைத்து அழத் தொடங்கினாள்.
‘”தன் முதல் காதல் தப்பாகி விட்டதே? யார் அவன் இந்த ஒரு மாதம் காலம் தான் அவனை பார்த்தது உண்டு. ஏன் அவனிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேசியது இல்லை. இப்படி இருக்கும் போது அவனுக்காக என் மனம் எதற்கு இப்படி வருத்தம் அடைக்கிறது. அவன் இன்னொருத்திக்கு சொந்தம் ஆக போகிறான் என்றால்! எதற்கு என்னிடம் காதலை சொல்ல வேண்டும்? நான் உண்டு என் படிப்பு உண்டு மட்டும் தான் இருந்தேன். இப்படி என் மனசை சுக்கு நூறாக உடைத்து விட்டானே. இந்த காதல் இவ்வளவு வலியை கொடுக்கும் என தெரிந்து இருந்நதால் காதலித்து இருக்க மாட்டேனே.” என புலம்பி அழுதுக் கொண்டு இருந்தவள், எப்பொழுது உறங்கினால் என்று அவளுக்கே நினைவில்லை.
*********************
இதுவரை நடந்த அனைத்தையும் தன்னிடம் கூறியதை. அமைதியாக கேட்டு கொண்டு இருந்த இன்பா. இப்போது பேச ஆரம்பித்தான்.
” இந்து தான் அப்படி சொன்னனா, நீ உடனே அவளை அழைச்சிட்டு என்கிட்ட வந்து சண்டை போட்டு இருக்கணும்ல்ல ” என்றான் சற்று கோபத்துடன். ” அதுவும் இல்லையா, ஏன் கிட்டயாவது அவள் சொன்னது உண்மையா? இல்லையான்னு? கேட்டிருக்கணும். இது எதுவுமே பண்ணாம உன்னையே ஏன்டி கஷ்டப்படுகிற?” என்று வேதனையுடன் கேட்டான்.
அவளோ அமைதியாக இருப்பதை பார்த்தவன் ” இங்கப்பாரு கீதமா! இந்து சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒன்றை தவிர. நான் அவளை கல்யாணம் செய்யப் போறேன்னு சொன்னது பொய். நான் உன்னை காதலிக்கும் போது இந்துவை எப்படி கல்யாணம் பண்ணிப்பேன். என் மனசு முழுக்க நீ மட்டும்தான் இருக்க புரியுதா? ஏன்டி நான் மட்டும் பேசிகிட்டு இருக்கேன். நீ ஏன் அமைதியா இருக்க ” என்று கேட்டான்.
அவளும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு “அப்போ நீ இந்துவ கல்யாணம் பண்ணிக்க மாட்டே தானே?” எனக் குழந்தை போல் கேட்டாள்.
இன்பவோ அவசரமாக இருபக்கம் தலையாட்டி ” மாட்டேன்டி இது உன் மேல சத்தியம் போதுமா.” என்றான்.
கீதாவுக்கு இப்போது தான் நிம்மதி வந்தது ‘தன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சத்தியம் செய்வான்’ என அவனை காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்தவளின் காதில் யாரோ கூப்பிற சத்தம் கேட்டு திரும்பியவள் கத்த ஆரம்பித்தாள். “பேய்.. பேய்..” என்று தன்னவனின் முதுகு பின்னால் ஒளிந்து அவனின் துணியை பிடித்துக்கொண்டாள்.
இன்பராஜா அவளது இந்த செய்கையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அவள் பேய் சொன்னது வேறயாரையும் இல்ல. இவ்வளவு நேரம் நண்பனுக்காக காத்திருந்து அவன் வராமல் போக. தானே கம்பத்தை பிடித்துக் கொண்டு மெதுவாக மேல ஏறி பால்கனியை பிடித்துக்கொண்டு நின்ற சூரியவை பார்த்து தான் அப்படி பயந்தாள்.
“என்ன டா மச்சான் நீயோ மேல வந்துட்ட?” என்று கேட்ட நன்பனை முறைத்துக்கொண்டு,
” ஏன்டா கேட்க மாட்ட, எவ்வளவு நேரம்டா கீழேயே வைட் பண்றது. எங்க அம்மா வேற போன் பண்ணிட்டே இருக்காங்க. நீ வர மாதிரி தெரில அதான் நானே வந்துட்டேன். சரிடா சிஸ்டர் என்ன சொன்னாங்க? உனக்கு ஒகே சொல்லிட்டாங்களா. ” என்று சூரிய ஆர்வமாக கேட்க.
ராஜா “ம் இப்ப தான்டா பேசவே ஆரம்பித்தோம்.அதுக்குள்ள சிவ பூஜையில கரடி மாதிரி வந்து நிக்கிற.” என்று நண்பனை வாரினான்.
அதைக் கேட்ட சூர்யா அதிர்ச்சியுடன் “என்னது இப்ப தான் பேசிட்டே இருக்கீங்களா? அப்போ இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று சூரியா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.
இன்பராஜா “ஈஈஈஈஈஈஈஈஈஈஈ” என இளித்துக்கொண்டு இருந்தான்.
பின் ” கீதா ஓகே சொல்லிட்டா மச்சி.” என இன்பா சொல்ல அவனை பார்த்து முறைத்தாள். கீதா.
“நான் எப்போ உனக்கு ஓகே சொன்னேன் இன்பா.?” இன்று முழித்துக்கொண்டே கேட்க சூர்யாவோ,
“டேய் என்னடா நடக்குது இங்க?”. என்று தலையை சொறிந்துக் கேட்ட நண்பனை பார்த்து.
“எனக்கும் புரியல மச்சி” என நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக்கொண்டு இருந்தனர்.
கீதா அவர்களை பார்த்து மனதில் சிரித்து வெளியே முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“ஏன் இப்படி முறைக்கிற. அதான் உன் அப்பா அம்மா நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்கள? அப்புறம் என்னம்மா?” என அழும் குரலில் இன்பா கேட்க.
” அவங்க சம்மதம் சொன்னா போதுமா? நான் சொல்லனும். ” என்றால் கீதா.
” ஏன்டி இப்படி எங்களை குழப்பிவிடுற”
” நான் எதுவும் குழப்பி விடல.” இன்று கீதாவும் விடாப்பிடியாக ராஜாவிடம் பேச.
” அம்மாடி தங்கச்சி ஏன்மா எங்களை பாடபடுத்துற. ஏற்கனவே ரொம்ப லேட்டாச்சி. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த விடிஞ்சிடும். அப்புறம் உங்க அப்பா வந்து கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுவாரு. ” என்று சூரியா அவளுடைய அப்பாவை பற்றி பேசியதும் தான் இவர்கள் இருவரும் தன்வீட்டில் அதுவும் தன் அறையில் இருக்கிறார்கள் என்றே அவளுக்கு ஞாபகம் வந்தது.
” அய்யோ போச்சி போச்சி நான் நல்ல மாட்டினேன்.” என அழுவதுப்போல் பாசாங்கு செய்தவளை ஒன்றும் புரியாமல் பார்த்தனர்.
“இப்ப எதுக்குடி அழற” என இன்பா கேட்க. சூரியா நண்பனின் காதில் “ஏன்டா உண்மையா சொல்லு அவ அழுவுறளா? என்று கேட்ட உடனே பார்த்த இன்பாவும் “விடுடா, விடுடா சின்ன பொண்ணு” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்கும் போது அங்கு அழுது கொண்டு இருந்தவள் காணாமல் போனாள்.
அறையை சுற்றி நண்பர்கள் இருவர் கண்களும் சுழற்றி பார்க்கும் போது அறை கதவை திறக்க சென்றவளை ஒரே எட்டில் அவள் முன் போய் நின்றான் ராஜா.
“இப்ப எதுக்கு கதவை திறக்க போற?” என இன்பா கேட்க.
அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பதில் கூறினாள். “இல்ல இன்பா இந்த அன்டைம்ல இரண்டு பாய்ஸ் என் ரூம்ல இருக்கீங்க? இது வெளியே தெரிஞ்சா எனக்கு தான் அசிங்கம். அதான் வந்து என் அப்பாகிட்ட சொல்லிட்டு கிளம்புங்க. ” என்று சொல்லியவளை பார்த்த சூர்யா அதிர்ந்து,
“என்னது அப்பாகிட்ட சொல்லனுமா? டேய் ராஜா இவ நல்ல தெளிவா இருக்காடா. நம்மல உயிரோடு சமாதி செய்ய ஏற்பாடு பண்றாள். இந்த ஆட்டத்துகு நான் வரல மச்சி. நீயே போய் சொல்லிட்டு வா. நான் கிளம்புறேன்.” என்று சூரியா சொல்ல.
இன்பராஜா அவனை “சும்மா இருடா “என்று சொல்லிவிட்டு. இவளிடம் திரும்பி “ஏன்டி இப்படி அடம்பிடிக்கிற. என்ன லவ் பண்றேன் சொல்லுடி. நாங்க கிளம்பிடுவோம் “என அவன் கெஞ்ச ஆரம்பிக்கவும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவள் சிரிப்பதைப் பார்த்த ராஜா “எங்கள பார்த்த உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று கேட்டான்.
அவளும் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு “இல்ல இன்பா ஓகே ஓகே இப்ப என்ன உனக்கு, நான் ஓகே சொல்லனும் அவ்வளவு தானே?”
“ம் ஆமா” என இன்பா சொல்ல.
“அப்ப எனக்கு நீ நேத்து லவ் சொன்னால. அதை நாளைக்கு காலேஜில எல்லார் முன்னாடி, முக்கியமா இந்து முன்னாடி சொல்லனும். அதுவும் சும்மா சொல்ல கூடாது ஏதாவது புதுசா யோசனை பண்ணி சொல்லனும்.” என கீதா கட்டளைவிடும் தோரணையில் சொல்ல.
என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக்கொண்டு இருந்தான். நம்ம ஹீரோ.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
