காதல்- 28

காதல் -28 
 

 

தனதறையில் அமர்ந்து இருந்த கீதாவிற்கோ தலைவலி அதிகமாக எடுக்க ஆரம்பித்தது.

“என்ன ஆச்சு இன்பாவிற்க்கு. ஏன் இப்படி நடந்துக்கிறான். என்னை பத்தி நல்லா தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றான். நான் இப்ப என்ன செய்யணும் இதை அப்பாக்கிட்டயும் சொல்ல முடியாது. அய்யோ தலையே வெடிச்சிடும் போல”.என்று ராஜா அவளிடம் கூறியதை பற்றி நினைத்து பார்த்தாள் கீதா.

கல்லூரியில் சூரியாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்த கீதா. “என் மேல் கோபமா இன்பா” என்று அருகில் அமர்ந்துக்கொண்டு சாலையில் வைத்த கண் எடுக்காமல் வண்டியை மட்டும் ஓட்டுவதில் குறியாய் இருந்தவனை தன் பக்கம் முகம் திருப்பி அவனின் ஒரு கரத்தை அவள் கையோடு கோர்த்து குழந்தையைப் போல் கேட்டவளை பார்க்கும் பொழுது, அவன் மனம் இளகியது என்னமோ உண்மை தான்.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை சாலையோரம் திருப்பிக்கொண்டு “நான் ஏன் உன் மேல கோபப்படணும்”. என்று கேட்டான்.

“சாரிடா அன்னிக்கு இருந்த நிலைமையில், நான் கோபத்தை உன் கிட்ட காட்டி இருக்க கூடாது தான். ப்ளீஸ்டா சாரி, இனி எந்த சூழ்நிலையிலும் உன் கிட்ட கோபப்பட மாட்டேன்” என்று ராஜாவின் கரத்தை தன் நெஞ்சோடு வைத்து மன்னிப்பு கேட்டவளை எப்படி அவனால் மன்னிக்க முடியாமல் இருக்க முடியும்.

அதுவரை கட்டுப்படுத்தி வைத்து இருந்த அவன் மனவுணர்வுகள் அவனையும் மீறி வெளியே வந்தது.  காரை ஓரம் நிறுத்தி விட்டு கீதாவை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து தலையில் முத்தம் வைத்து கண்களை மூடி “சாரிடி” என்று கூறினான். 

ஒரு வாரத்துக்கு பிறகு கிடைத்த அணைப்பிலும் அன்பிலும் இன்பாவின் நெஞ்சில் முகம் புதைத்து கண்ணீர் சிந்தியவளின் முகத்தை உயர்த்தி “ஏன்டி அழுகுற?உன்னை கட்டி பிடிச்சது பிடிக்கலையா” என்று வேண்டுமென்றே கீதாவை சீண்டினான்.

அவளோ நறுக்கென்று இன்பாவின் தொடையில் கிள்ளினாள். 
“உஸ்ஸ்… ஆஆ…ஏன்டி கிள்ளுற வலிக்குதுடி” என்றான் பொய்யான கோபத்தில்.

“வலிக்கட்டும் ஒரு வாரம் என் கிட்ட பேசாமல் இருந்தல. அதுக்கு தண்டனை வேண்டாம்” என்று மறுபடியும் கிள்ள போனவளின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி அவளின் செவ்விதழில் இதழ் பதித்து தன் காதலையும் தன் அன்பையும் மென்மையாக காட்ட தொடங்கினான்.

முதலில் அவனின் அன்பில் கரைந்தவள் பின் மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.

இன்பாவும் அதற்கு மேல் அவளை கட்டாயப்படுத்த விரும்பாமல் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

கீதாவிற்கு அவள் மீதே கோபம் கோபமாக வந்தது. அவளால் தான் இன்பா மறுபடியும் கஷ்டப்படுறான் என்று தோன்றிற்றது அவளுக்கு.

கீதாவின் முகவாட்டத்தை வைத்தே புரிந்துக்கொண்ட ராஜா, ஒரு கையால் கீதாவின் கையை அழுத்தி இதழ் பதித்து அவன் தோளோடு அணைத்து மறு கையால் வண்டியை ஓட்டிக் கொண்டு பேச தொடங்கினான்.

“கீத்து உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்”. என்றவனின் தோளில் சாய்ந்தப்படி நிமிர்ந்து பார்த்து,

“சொல்லுடா என்ன விசயம்”என்று கேட்டாள்.

அதற்குள் அவள் வீடு அருகில் வந்து விட, வண்டியை கீதாவின் வீட்டு பக்கம் ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பார்த்து “நம்ம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா கீத்துமா” என்று கேட்டான்.

அவளோ அவன் விளையாட்டிற்காக கேட்கிறான் என்று நினைத்தவள் இன்பாவை பார்த்து சிரித்தாள்.

“என்னடா, நீ முக்கியமான விசயம்னு சொன்னதும் நானும் நம்பிட்டேன். ஆனால் நீ காமெடி பண்ணிட்டு இருக்க?. உனக்கு விளையாட நேரம் காலமே இல்லையா? போடா” என்று மேலும் சிரிக்க இன்பராஜாவிற்கு கோபம் தலைக்கேறியது.

‘நான் எவ்வளவு சீரியஸா கேட்கிறேன். இவ விளையாடுறேனு சொல்றா’ என்று மனதில் கோபத்தை கட்டுப்படுத்தியவன்.

இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு “நான் விளையாடால. நம்ம உண்மையான காதல் மீது சத்தியாம கேட்கிறேன்” என்று சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவள் முகம் மாறுவதை கவனித்த இன்பா மீண்டும் பேச தொடங்கினான்.

“இங்க பாரு கீத்து, இதுவரை நான் உன் கிட்ட எனக்காக எதுவும் கேட்டது இல்லை. பர்ஸ்ட் டைம் உங்க அப்பாவுக்கு தெரியாம நீ ஒரு முடிவு எடுக்கனும் அதுவும் எனக்காக. நல்லா யோசிச்சு முடிவு பண்ணிட்டு நாளைக்கு பதில் சொன்னா போதும். அதுக்காக நான் உன்னை உன் அப்பாக்கிட்ட இருந்து பிரிக்கிறேனு நினைக்காத. உன்னை விட நான் அவங்க மேல பாசம் அதிகமா வச்சி இருக்கேன். பட், நீ எனக்காக உன்னோட தனிப்பட்ட முடிவோடு யோசனை செய்து முடிவு பண்ணணும்னு நினைக்கிறேன். நான் கேட்குறது தப்பு தான். காதலில் எதுவும் எதிர்ப்பார்க்க கூடாது தான். ஆனால் நல்ல யோசிச்சு பார்த்தா உனக்கே தெரியும். நம்ம விசயத்துல நீயாவே ஒரு முடிவு பண்ணி எனக்காக எதுவும் பண்ணது இல்லை. அதற்காக நான் உன்னை தப்பாவும் நினைச்சது இல்லை. நீ வளர்ந்த விதம் அப்படி, எந்த விசயமா இருந்தாலும் உன் அப்பாக்கிட்ட  சொல்லிடுற இல்லனா சொல்லிட்டு தான் முடிவு எடுக்குற. ஆனா இந்த ஒரு தடவை என் இஷ்டப்படி நடந்துக்கோனு தான் கேட்கிறேன். இனி முடிவு பண்ண வேண்டியது உன் கிட்ட தான் இருக்கு. நாளைக்கு உன் பதில் சொன்னா போதும்.” என்று கூறியவன் கீத்துவின் நெற்றில் இதழ் பதித்து “நல்ல முடிவா எனக்காக எடு” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

ராஜா கூறியதில் உறைந்து போனவள் காரில் இருந்து இறங்கி அவன் முகத்தை கூட பார்க்காமல் வீட்டுக்கு சென்று தன்னறைக்குள் புகுந்து தன்னவன் பேசியதை மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு மண்டையை பிடித்துக் கொண்டாள்.

‘ஏன் இன்பா இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் என்னை தள்ளின. எனக்கு நீங்க இரண்டு பேரும் முக்கியம்டா, நான் பிறந்திலிருந்து எனக்காக பார்த்து ஒரு ஒரு சின்ன விசயத்தை கூட எனக்காக செஞ்ச என் அப்பாகிட்டயே என் வாழ்க்கையில ஒரு முக்கியமான நிகழ்வை மறைக்க சொல்றியேடா. நான் பெரிய மனிஷியா ஆனதுக்கூட முதல் முதலா என் அப்பாகிட்ட தான் சொன்னேன். ஆனா, நீ..நீ..ஏன்டா இப்படி நடந்துக்குற? எங்க அப்பாவுக்கு அப்புறம் எல்லாமே நீ தான்டா’ என்று தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு அழுதவளின் காதில் அன்பரசன் கூப்பிடும் குரல் கேட்காமல் போனது.

ராஜாவை பற்றி நினைத்து  கொண்டு இருந்ததில் தந்தையின்  குரல் கேட்டு நினைவுக்கு வந்தவள் முகத்தை அலம்பிக்கொண்டு வெளியே வர, அங்கு ரம்யாவை இந்த நேரத்தில் அதுவும் புடவையில் பார்த்து சந்தேகத்துடன் அவள் அருகில் சென்றாள்.

“என்னமா இந்த டைம்ல வந்து இருக்க” என அன்பரசன் கேட்டார்.

பதற்றத்துடனும் குற்றவுணர்வுடனும் கையை பிசைந்துக்கொண்டு புடவை முந்தானையில் முகத்தை துடைத்து திக்கி திணறி ரம்யா “கீதாவை பார்க்க வந்து இருக்கேன்ப்பா” என கூறினாள்.

அந்நேரத்தில் ரம்யாவை அங்கு பார்த்த அன்பரசனுக்கு ஏதோ தவறாக தோன்ற. பிறகு தான் தன் மகளை அழைத்தார்.

ரம்யாவை பார்த்த கீதா அதிர்ந்தாலும் “வாடி என்னடி இந்த டைம்ல ஏதாவது பிரச்சனையா” என்று கேட்டாள்.

ரம்யாவோ அன்பரசன் முன்னால் இருப்பதை பார்த்து அமைதியாக இருந்தாள்.

இதை கவனித்த அன்பரசன் “நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று உள்ளே சென்று விட்டார்.

அவர் அந்த பக்கம் போன அடுத்த நொடி கீதாவின் கையை பிடித்துக்கொண்டு அவள் அறைக்கு சென்று கதவை தாழ் போட்டு விட்டு தன் தோழியை கட்டிப்பிடித்து கதறி அழுதவளை பதற்றத்துடன் என்ன என்று கீதா கேட்க, அவள் அழுகை இன்னும் அதிகமாகியது.

“நான் தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன். பாவம் பண்ணிட்டேன் கீதா” என்று கதறி அழுது தரையில் மண்டியிட்டு அமர்ந்து அழுதாள்..

ரம்யா சொல்வது எதுவும் புரியாமல் அவளை சமாதானம் செய்து என்ன நடந்தது என்று தெளிவாக கூறும்படி சொன்னாள்.

ரம்யாவும் அவளுக்கும் சூர்யாவுக்கும் நடந்ததை முகத்தை மூடி அழுது கொண்டு கூற கீதா அதிர்ந்து போனாள்.

தான் காதில் கேட்டது உண்மையா என்று தன் தோழியை பார்க்க, அவள் பயத்தில் நடுங்குவது தெளிவாக புரிந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் ரம்யாவின் கண்ணத்தில் அறைந்தாள் கீதா.

“என்ன காரியம் செஞ்சிட்டு வந்து இருக்கடி? அறிவு இருக்கா உனக்கு? உன் அனுமதி இல்லாமல் இது எதுவும் நடந்து இருக்க வாய்ப்பே இல்லை. உன்னால உன்னையே கட்டுப்படுத்த முடியால ச்சை, நீ எல்லாம் என்ன பொண்ணு” என்று ஆரம்பித்த கீதாவின் காலை பிடித்துக்கொண்டு,

“ப்ளீஸ்டி என்னை தப்பா நினைச்சிடாதா கீதா. என்னால அதை தாங்க முடியாதுடி நீயே என்னை தப்பா நினைச்சிட்டா அப்புறம் என்னால” என்று அவள் கதறி அழுதாள்.

தன் தோழியே தன்னை தவறாக எண்ணியதை தாங்க முடியாமல் துவண்டு போனாள் ரம்யா.

அந்நொடி இன்பராஜா கூறிய வார்த்தைகள் அவள் செவிகளில் கேட்க, ரம்யாவும் இப்படி தன்னையே இழந்துட்டு வந்து நிற்கவும், இதை எதையும் தாங்க முடியாமல் தன் கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க முடியாமல் வார்த்தையை வீசினாள் கீதா.

எப்பொழுதும் ஒருவர் கொட்டிய வார்த்தையை திரும்பவும் எடுக்க முடியாது அல்லவா. இருக்கும் சூழ்நிலையையும் வார்த்தையையும் பார்த்து பேச வேண்டும் என்பதை கீதா மறந்தே போனாள் அந்நொடி.

அவள் பேசிய வார்த்தை எவ்வளவு பெரிய பின் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியது இருக்கும் என்று அறியாமல் வார்த்தையை விட்டாள் கீதா.

“ஏய் ரம்யா முதல இங்க இருந்து போ. உன்னையெல்லாம் என் ப்ரெண்ட்னு சொல்லவே வெட்கமா இருக்குடி ச்சீ.. உன்னை பெத்து வளர்த்தவங்களுக்கு துரோகம் செஞ்சு இருக்க. காதலிச்சா எல்லாத்தையும் மறந்துடுவாங்களா. உன் அப்பா அம்மாவ நினைக்க மாட்டியா?, அப்படி என்னடி உனக்கு சுகம்.. என்று கீதா பேச வருவதற்கு முன் அவள் கரம் உயர்த்தி பேச வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டி கண்களில் நீர் வழிய அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அங்கே இருந்து சென்று விட்டாள் ரம்யா.

ஆனால் இவர்கள் அறியாத ஒன்று இவர்கள் பேசிய தருணம் சூர்யா ரம்யாவிற்க்கு போன் செய்ய அதை கட் செய்வாதை நினைத்த ரம்யா அழுது மங்களான கண்ணோடு தெரியாமல் ஆன் செய்துவிட்டாள்.

அதாவது சரியாக கீதா ரம்யா கண்ணத்தில் அறைந்து பேச தொடங்கவும் சூர்யா போன் செய்யவும் சரியாக இருந்தது.

கீதா பேச, பேச அந்த பக்கம் கேட்டுக் கொண்டு இருந்த சூரியாவிற்கு கோபம் தலைக்கேறியது. நடுவில் ரம்யா அழுகுரல் மட்டும் கேட்கவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான் சூர்யா.

ரம்யா சென்றுதும் தன் கோபத்தை அடக்க முடியாமல் தன் தந்தையிடம் ரம்யா சொன்னதை பற்றி மட்டும் கூறியவள் ராஜா கூறியதை சொல்லாமல் மறைத்தாள்.

அவர் மடியில் தலையை வைத்து அழுத மகளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தனர் பெற்றோர் இருவரும்.

‘அப்பா நான் முதல் தடவையா உங்க கிட்ட இருந்து ஒரு விசயத்தை மறைச்சிட்டேன் அப்பா. இன்பா சொன்னதை எப்படி உங்க கிட்ட சொல்ல முடியும். சொன்னால் தாங்க மாட்டிங்கப்பா. என்ன நடந்தாலும் பரவாயில்லை, நான் இன்பா சொன்னா விசயத்துக்கு சம்மதிக்க மாட்டேன். நான் எப்பவும் உங்க மகளாவே இருந்துக்கிறேன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அப்படியே தன் தந்தையின் மடியில் கண்களை மூடினாள்.

ரம்யாவை பற்றி கீதா சொன்னதை ஜீரணிக்க முடியாத பார்வதி “என்னங்க சொல்றா இவ,எனக்கு பயமா இருக்கு” என்று ஆதங்கத்தில் சத்தமாக பேசினார்.

“உஸ் சத்தம் போடாத பாருமா, குழந்தை தூங்குறா.” என்று அன்பரசன் சைகை காட்டானார்.

ஆனால் அவள் அன்னையின் குரலில் முழித்துக் கொண்ட கீதாவோ கண்களை திறக்காமல் அமைதியாக இவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினாள்.

கீதாவின் தலையை மெதுவாக தலையணையில் வைத்து தன் மனைவியிடம் திரும்பி “இப்ப எதுக்கு பார்வதி கத்துற?”

“கத்தாம என்ன பண்ண சொல்றீங்க. அந்த ரம்யா பொண்ணு எவ்வளவு அமைதியா இருக்கும். வாய் கூட பேசாதுங்க. ஊமகுசும்பு மாதிரி இருந்துட்டு என்ன வேலை பண்ணிட்டு வந்து இருக்கு பார்த்திங்களா? இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பயமா இருக்குங்க” என்று தன் ஆதங்கத்தை பார்வதி சொல்ல,

“இப்ப என்ன உன் மகள் மேலையும் சந்தேகப்படுறியா?” என்று கேட்டார் கோபத்தில்.

“பின்ன சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும். இவளும் அந்த ராஜா தம்பியை தான் காதலிக்குறா. அப்போ, அப்போ நடு ராத்திரில நம்ம பொண்ணு ரூமுக்குள்ள பால்கனி வழியா வந்துட்டு போறான். எப்போ பார்த்தாலும் ராஜாக் கூட தான் வீட்டுக்கும் வரா. ராஜாவும் சூர்யாவும் நண்பர்கள் வேற. கூட பழகுற நட்பை வச்சி தான் இன்னொருத்தன் நல்லவனா கெட்டவனானு சொல்லுவாங்க. இது எதுவும் எனக்கு சரிப்பட்டு வரும்னு எனக்கு தோனலைங்க.” என்று சராசரி அம்மாவாக யோசிக்க தொடங்கினாள்.

மனைவி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாத அன்பரசன் “நிறுத்து பார்வதி! அந்த புள்ளைங்க தப்பு பண்ணா! நம்ம பொண்னையும் தப்ப நினைப்பியா? என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை அதிகமாவே இருக்கு. அவள் என் பேச்ச மீற மாட்டா. எனக்கு என் பொண்ண பத்தி தெரியும்.” என்று மகளுக்கு ஆதரவாக பேசிய கணவனை கோபத்துடன்,

“இங்க பாருங்க என் கிட்ட கோபப்படுறதை விட்டு, இயல்பா  யோசிங்க, நான் ஏன் இப்படி பேசுறேனு. உங்க பொண்ணுக்கு நீங்க கொடுக்குற சுதந்திரம் நாளைக்கு இவளுக்கே வினையா மாறிட கூடாது இல்லையா. 
நாளைக்கு காலையில இவ எழுந்ததும் அந்த ராஜாவுக்கும் இவளுக்கும் இருக்குற உறவை முடிச்சிக்க சொல்லுங்க. 
இல்லையினா, என்னை உயிரோடு பார்க்க முடியாது. என்னால ஊர் பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு நிம்மதியா வாழ முடியாது. நீங்க ஊரு சொல்றத பத்தி கவலை படமால் இருப்பிங்க. என்னாலலாம் உங்களை மாதிரி இருக்க முடியாது. இப்பவே அக்கம் பக்கம் இருக்குறவங்களாம்  என்னன்னவோ பேசிட்டு இருக்காங்க. இது எதுவும் உங்க கிட்ட சொல்லாமல் மறைச்சிட்டேன். காரணம் நானும் உங்களை மாதிரி தான் இருந்தேன். ஆனா இன்னிக்கு அந்த ரம்யா பொண்ணு செஞ்சிட்டு வந்த காரியத்தை நினைக்கும் போது எனக்கு மனசெல்லாம் பதறுது. சுத்தமா நம்பிக்கை இல்லாமல் போச்சு. ஏன்னா இவளும் அந்த ரம்யா கூட நட்பா இருந்தவ தானே” என்று தன் மகள் மீது பார்வதி வைத்த நம்பிக்கை மொத்தமாக காணமால் போனது.

தன் மனைவியை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தார் அன்பரசன். ‘பார்வதி இதுவரை இப்படி நடந்து கொண்டதே இல்லையே. அதுவும் பார்வதி பிடிவாதம் பற்றி என்னை தவிர வேரு யாருக்கு தெரியாது. அவள் ஒரு முடிவு தீர்மானம் செய்துவிட்டால் அதில் இருந்து பின் வாங்க மாட்டாள்’ என்று உணர்ந்தார் அன்பரசன்.

இப்போதைக்கு மனைவியை சமாதானம் செய்வது தான் நல்லது. இல்லை என்றால் இந்த குடும்பமே உடைந்து போய் விடும் என்று நினைத்தார்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் நல்லது என்று நன்கு உணர்ந்து இருந்தார் அன்பரசன்.

கீதா நிம்மதியாக உறங்குகிறாள் என்று நினைத்து தன் மனைவியிடம் “நான் காலையில கீதா கிட்ட பேசுறேன், நீ போய் படுத்து தூங்கு” என்று பார்வதியை சமாதானம் செய்து தூங்க வைத்தார் அன்பரசன்.

அதுவரை உறங்குவதாக நடித்துக்கொண்டு இருந்த கீதாவிற்கு பெற்றோர்கள் பேசியதை எதையும் தாங்க முடியாமல் போனது.

அவள் பெற்றோர் மீது வைத்து இருந்த நம்பிக்கை சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது கீதாவிற்கு.

‘அம்மாவே தன் மீது நம்பிக்கை இல்லாமல் பேசுவதையும் அப்பா தடுக்காமல் என் காதலை மறக்க சொல்வதை அம்மாவிடம் வாக்கு கொடுத்து இருக்கிறார் என்றால், அப்ப அவருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். நான் என் பெற்றோருக்கு துரோகம் செய்ய கூடாதுனு நினைச்சு என்ன நடந்தாலும் பரவாயில்லை இன்பா சொன்னதுக்கு சம்மதம் சொல்ல கூடாதுனு  நினைத்து இருந்தேன். ஆனா இவங்களுக்கு என் மீதே நம்பிக்கை இல்லாமல் போச்சு,  நான் என் காதலை எப்படி மறக்க முடியும் என் வாழ்க்கையே என் இன்பா தான். இனி என் இன்பா மட்டும் தான் என் வாழ்க்கை அவன் கேட்டதும் சரிதானே. இதுவரை என் விசயத்தில் முடிவு செய்தது என் பெற்றோர் தான். ஆனால் இந்த தடவை என் இஷ்டப்படிதான் முடிவு பண்ணுவேன்” என்று அந்நிலையில் தவறாக புரிந்துக் கொண்டு ஒரு முடிவோடு தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டு உறங்கியும் போனாள்.

அவள் எடுக்க போகும் முடிவின் விபரீதம் அறியாமல்.

அங்கே இது எதுவும் தெரியாத இன்பராஜாவோ “என்ன தான் கீத்து கிட்ட நான் அப்படி பேசிட்டு வந்தாலும் என்னால அமைதியா இருக்க முடியவில்லை. நான் சொன்னது சரி தானா? அவ எப்படி இத்தனை வருஷமா பெற்று வளர்த்தவங்களை விட்டு என்னை கல்யாணம் பண்ணிப்பா. 
அவளை பத்தி நல்ல தெரிஞ்சே நானே, சூர்யா குடி போதையில் சொன்னதை பெருசா நினைச்சு  கீத்து கிட்ட பேசி இருக்க கூடாது. இதை பத்தி அங்கிளுக்கு தெரிஞ்சா அவரால தாங்க முடியுமா. ச்சை என்னை காரியம் பண்ணிட்டேன். கீத்து என்ன முடிவு செஞ்சாலும் பரவாயில்லை நான் அவ கிட்ட நாளைக்கு மன்னிப்பு கேட்கணும்” என்று தன் தவறை உணர்ந்தவன் வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லாமல் புலம்பிக்கொண்டே உறங்கிவிட்டான் ராஜா.

பாவம் இவன் நினைத்தது நிறைவேறாது என்று தெரியாமல் நித்திரையில் அழ்ந்தான் இன்பராஜா.

மறுநாள் அதிகாலை ஐந்து மணி “அய்யோ.. கடவுளே இந்த பொண்ணு இப்படி எங்களை ஏமாற்றிட்டு போவான்னு நாங்க நினைக்கவில்லையே” என்று
ஒரு வீட்டின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சென்று பார்த்தனர்.

அங்கே இருந்தவர்கள் வேதனையுடன் “என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணிடுச்சு. இந்த சின்ன வயசுல எதுக்காக இப்படிப்பட்ட முடிவு எடுத்தது இந்த பொண்ணு. ஒரு வேலை காதல் விவகாரமா இருக்குமோ? அப்பா அம்மா சம்மதிக்காம இந்த முடிவுக்கு வந்துட்டாளா?

என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு போக பேச்சு வாக்கில் அந்த தெரு மட்டும் இல்லாமல் அடுத்த தெரு அதுக்கு அடுத்த தெரு என்று அனைவரின் காதிலும் இச்செய்தி காட்டு தீப்போல் பரவியது.

இவர்கள் பேசியதை எதுவும் நம்ப முடியாமல் தன் பெற்றோருடன் தன் தோழியின் வீட்டை நோக்கி சென்றாள் அவள்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் “இந்த பொண்ணும் அந்த பொண்ணும் சின்ன வயசுல இருந்தே நண்பர்களா தானே இருந்தாங்க”.

“இவளை பத்தி எல்லா விசயமும் இந்த பொண்ணுக்கு தெரிஞ்சு தான் இருக்கும். அது எப்படி இந்த பொண்ணுக்கு தெரியாமல் இருந்து இருக்கும்” என்று ஒருவர்க்கு ஒருவர் அவளை பார்த்து பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.

அதற்குள் போலீஸ் வந்து என்ன நடந்தது என்று விசாரணை செய்து கொண்டு இருக்க.. இங்க என்ன நடக்குது  என்று எதுவும் புரியாமல் குழம்பிக்கொண்டு தன் தோழியின் வீட்டை பார்த்த அடுத்த நொடி மயங்கி சரிந்தாள்.

மயங்கியவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை சுயநினைவுக்கு வரவழைத்தனர்.

பெற்றோர் இருவரும் இதற்கு மேல் தன் மகள் இங்கு இருந்தால் இங்கு நடந்த அனைத்தையும் பார்க்க முடியாமல் துவண்டு விடுவாள் என்று எண்ணி அவளை அழைத்துக் கொண்டு செல்ல,

அவளோ தன்னால் வர முடியாது என்று அங்கயே இருந்தாள்.

அதற்குள் விசயம் தெரிந்து சூர்யாவும் வர, அங்கு நடப்பத்தை எதையும் நம்ப முடியாமல் சிலையாக நின்றான்.

இன்பாவிற்கும் விசயம் தெரியப்பட அங்கே வந்தவன் காரை விட்டு வேகமாக இறங்கியவன் அவன் கண்ட காட்சியை பார்த்தவான் “இது உண்மை இல்லை பொய்யா தான் இருக்கும்” என்று வாய் விட்டு கூறினான்.

அந்த பக்கம் வந்த பெரியவர் ஒருவர் “தம்பி நீ பார்க்கிறது பொய் எல்லாம் இல்லைப்பா. உண்மை தான். பாவம் சின்ன பொண்ணு  என்ன கஷ்டமோ இந்த முடிவுக்கு வந்துடுச்சு. எல்லாம் விதி 
இந்த சின்ன வயசுல இப்படி தான் நடக்கணும்னு எழுதி இருக்கு போல”. என்று அவர் போக்கில் புலம்பிக்கொண்டு போக,

அவர் சொன்னதை நம்ப முடியாமல் காலை பின்னோக்கி எடுத்து வைத்து நிற்க, அங்கு சூர்யா சிலையாக எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி நின்று இருந்த நண்பனை பார்த்து ஓடிச் சென்று கட்டிப்பிடித்து கண்ணீரோடு.

“மச்சி இது எதுவும் உண்மை இல்லைடா. நேத்து தானடா அவளோட சிரிச்ச முகத்தை பார்த்தேன். அதற்குள்ள எப்படி, இல்லடா மச்சி இது உண்மை இல்லைடா.” என்று நண்பனை கட்டி பிடித்து அழுதுக் கொண்டு இருந்தவன் கண்கள்.. பக்கவாட்டகா திரும்பியது.

அங்கே சோர்ந்து போய் அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி போனவளை பார்க்கும் போது வேதனை தொண்டையை அடைக்க அதை கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் சென்று அவள் தோள்களை அழுத்தினான்.

இன்பாவை பார்த்த அடுத்த நொடி அவன் இடிப்பை கட்டிபிடித்துக் கொண்டு கதறி கதறி அழுதவளை சமாதானம் செய்ய முடியாமல் போனது அவனுக்கு.

அழுதால் வேதனை குறையும்னு சொல்லுவாங்க அதனால் அவள் 
அழுகட்டும் என்று அமைதியாக அவள் தலையை வருடிவிட்டான்.

தன் தோழியை பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் கண்முன் தோன்றியது அவளுக்கு.

முதல் முதலில் பார்த்த அந்த நாளில் இருந்து நேற்று நடந்த அனைத்தையும் நினைத்தவள் மீண்டும் கதறி அழ தொடங்கினாள்.

“எங்கு போனாலும் 
தூரம் சென்றாலும் 
நம் நட்பு பிரியாதே.. 
காலம் போயினும் 
நாட்கள் ஓடினும் 
நம் நட்பு மாறாதே.. 
முதல் முறை நம் பார்த்த அந்த நாட்கள் 
நினைத்தாலும் வராதா அந்த நேரம் 
கிடைக்காதோ மீண்டும் அந்த காலம் 
பிரிந்து சிலைகையாலோ” என்று பாடலுடன் காட்சிகள் தோன்றி மறைந்தது.

“ஏன்டி இப்படி பண்ண? என்னை விட்டு போக உனக்கு எப்படிடி மனசு வந்தது. ஒழுங்கா எழுந்து வந்துடுடி நடிக்காத” என்று தன் தோழியை பார்த்து அழுதாள்.

அதுவரை சிலையாக நின்று இருந்த சூர்யா அவளை நெருங்கி அவள் கண்ணத்தில் ஓங்ககி அறைந்தான்.

யாரும் அதை எதிர்பார்கவில்லை. “இப்ப எதுக்குடா  இவளை அடிச்ச” என்று இன்பா கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

சூரியாவோ கண்கள் சிவக்க “அவள் இப்படி நம்மள விட்டு போக, இவ தான்டா காரணம்” என்று சொல்லிவிட்டு, திரும்பியவன் உயிர் அற்ற உடலை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு,

“அய்யோ ரம்யா ஏன்டி இந்த முடிவுக்கு வந்த. என்ன விட்டு போக எப்படி உனக்கு மனசு வந்தது. நைட் நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இந்த கீதா சொன்னதையே மனசுக்குள்ள வச்சிகிட்டு இந்த முடிவுக்கு வந்துட்டியேடி. நீ இல்லாமல் என்னால எப்படி வாழ முடியும்” என கதறி அழுதவனை அனைவரும் அதிரிச்சியுடன் பார்க்க சூழ்நிலையை உணர்ந்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி  அனைவருக்கும் இவர்களின் உறவை விளக்கி சொல்லி சூழ்நிலையை சரி செய்து அடுத்து நடக்க வேண்டியதை நடக்க செய்தான் இன்பராஜா.

சூர்யா அடித்ததை விட தன்னால் தான் ரம்யா அவள் உயிரையே விட்டால் என்று கேட்டதிலிருந்து அதையே புலம்பினாள் கீதா.

இதற்கு மேல் அங்கு கீதா இருந்தால் அவள் நிலைமை மோசம் ஆகிவிடும் என உணர்ந்து அவளை அங்கு இருந்து அழைத்து செல்லுமாறு அன்பரசனிடம் சொல்ல, கீதாவோ போகாமல் அடம் பிடித்தாள்.

சூர்யா ஒரு பக்கம் தன்னிலையை மறந்து புலம்பிக் கொண்டு இருக்க, ரம்யாவின் பெற்றோரும் தங்கள் மகள் தங்களை விட்டு போன சோகத்தில் அமர்ந்து இருக்க இன்பா தான் நடக்க வேண்டியதை அனைத்தும் செய்து முடித்தான்.

ரம்யாவின் இறுதி அடக்கத்தை செய்து முடித்து அழுது கொண்டு இருந்தார்கள் அவள் பெற்றோர். சிரித்த முகத்துடன் போட்டோவில் கண்ட ரம்யாவை பார்த்து கதறி அழுதான் சூர்யா.

கீதாவின் மேல் அழிக்க முடியாத கோபம் ஒரு பக்கம். அவன் உயிராக நினைத்த ரம்யாவின் இறப்பு ஒரு பக்கம் என அவனை வாட்டி எடுத்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குடித்து குடித்து தன்னிலையை மறந்து போனான் சூர்யா.

இனி அடுத்த அத்தியாத்தில் காணலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page