இதயம் 26

நேத்ராவிடம் கோபமாகப் பேசிவிட்டு வந்தவனோ தனது அறையில் கூண்டுப்புலி போல் நடந்து கொண்டிருந்தான்.

‘நீ எங்கிட்டயே பொய் பேசறியாடி? நேத்து எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்படி என்ன உயிரோட சாகடிச்சிட்டியேடி?’

‘உனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா இப்படியா பண்ணுவ? ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு பேசிட்டியே’

‘நான் என்னென்னவோ நினைச்சேனேடி. ஏன்டி இப்படி பேசின?’ என்று இதயத்தில் வலியுடன் கண் கலங்க அமர்ந்திருந்தான்.

நேற்று அவள் சந்திரன் குடும்பத்தாரிடம் தன்னைத் திருமணம் செய்வதாகச் சொன்ன கணத்தை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பூரிப்பில் இருந்தான்.

அவனுக்கு நேற்றிலிருந்து கால் தரையைத் தொடவில்லை. உலகத்தை வென்று விட்டவன் போலச் சந்தோஷ களிப்பில் இருந்தான்.

அவனும் அவளை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

அவள் கண்கள் இவனை ஒரு நாளும் தேடாமல் இருந்ததில்லை.

அன்று ஊருக்குப் போன போது கூட இவளை தேடி போன் செய்தவள் ஏன் இப்படிச் செய்தாள் என்று புரியவில்லை.

மனதில் எரிமலையுடனே அனைத்து வேலைகளையும் செய்தவன் தப்பித் தவறி அவள் இருந்த திசைப்பக்கம் செல்லவில்லை.

அவனுக்கு அவள் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதின் வலியை தாங்கி கொள்ள முடியாமல் தவித்தான்.

இங்கே நேத்ராவோ கண்களில் அருவியாய் பொங்க என்ன செய்வது என்று புரியாமல் துடித்தாள்.

‘மூஞ்சிலயே முழிக்கக் கூடாதா? ஏன்டா உனக்கும் என்ன பிடிக்கலையா?’

‘நான் எப்படிடா உனக்குத் துரோகம் செய்வேன்? நான் ஆல்ரெடி மேரீட் டா. உனக்கு நான் வேணாம்’

‘நான் ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சிட்டா இந்த லைஃப் என்னாகிறது? இந்தக் கடவுள் மூணு வருஷம் முன்னாடி உன்னை காமிச்சிருக்கக் கூடாதா?’

‘ஐ லவ் யூவா? அதுக்கான தகுதி எனக்கு இருக்கா?’ என ஏதேதோ யோசித்தவள் சிலை போலவே அமர்ந்திருந்தாள்.

********

நேத்ரா ஏதோ சத்தம் கேட்டுக் கண் திறக்க என்னவென்று புரியாமல் அதிர்ச்சியாய் இருந்தாள்.

அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மணி என்னவென்று பார்க்கலாம் என யோசித்தவள் கைகளைத் தூக்க அவள் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

‘ஐயோ… கை கட்டியிருக்காங்க. என்னாச்சு?’ என்று நினைத்தவளுக்கு அப்போது தான் என்ன நடந்தது என்றே நியாபகம் வந்தது.

கதிரின் கோபத்தில் அவளுக்கு உலகம் இயங்க மறுத்தது. அவன் அதற்குப் பிறகு மறந்தும் அவளைக் கண்டு கொள்ளவில்லையாதலால் அவள் மனதளவில் உடைந்து போனாள்.

சுற்றுப்புறம் எதையும் அவள் கருத்தில் கொள்ளவில்லை.

எப்போதும் கம்பெனி கேப் இல்லையென்றால் கதிருடன் செல்பவளுக்கு இன்று அது எதுவும் மனதில் பதியவில்லை.

எங்கேயோ வெறித்தபடி பார்த்திருந்தவளை யாரோ அட்ரஸ் என விசாரிப்பது போல வந்தவன் அப்படியே அவள் முகத்தில் துணியை வைக்க மயங்கி சரிந்தவளை தூக்கி காரில் போட்டவன் அவளது கை, கால்களைக் கட்டிப் போட்டான்.

இவ்வாறு ஒவ்வொன்றாக அவளுக்கு ஞாபகம் வர அவள் பயந்து போனாள்.

அவள் எந்த இடம், என்ன என்று ஒன்றும் புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அங்கே சந்திரன் வந்தான்.

சந்திரனை பார்த்ததும் உடல் தூக்கி வாரி போட பின்னால் நகர்ந்தாள்.

“என்னடி அன்னைக்கு வீட்ல அந்தப் பேச்சு பேசின? இப்போ என்னடான்னா இப்படி பயப்படற?” என்றவன் அவள் அருகில் வந்து ஓங்கி அறைய அவள் சுருண்டு கீழே விழுந்தாள்.

அவள் தலைமுடியை பற்றியவன் “ஏன்டி கொசு மாதிரி இருந்துட்டு இவ்ளோ திமிரா?” எனச் சந்திரன் அவள் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

ஏற்கனவே கதிரை நினைத்து மனம் உடைந்து போய் இருந்தவள் இப்போது அவன் அடித்ததில் எதிர்க்க கூடத் தோன்றாமல் மயங்கி விழுந்தாள்.

அதைக் கண்களில் ஒரு வித குரூரத்துடன் பார்த்தவன், “டேய் தண்ணி மட்டும் கொடுங்க. வேற எதுவும் குடுக்காதீங்க. நான் அப்பறம் வரேன்” என்றவன் அங்கிருந்து அகன்றான்.

நேத்ரா கதிரை திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னது அவனுக்கு அவ்வளவு அவமானமாக இருந்தது.

அதுவும் கதிர் தனது குடும்பத்தையே அடித்ததால் அவனுக்கு நேத்ராவை கொன்று விடும் வெறி வந்தது.

எல்லாவற்றுக்கும் காரணம் நேத்ரா என்றே நம்பியவன் அவளைப் பழி வாங்கிட துடித்தான்.

சரவணன் மூலமாக அவனுடைய நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்துக் கடத்துவதெற்கென்றே உள்ள ஆட்களைக் கொண்டு அவளைக் கடத்தினார்கள்.

அவளைத் தங்க வைப்பதற்கு இடத்தைத் தேட அந்த ரௌடி பாதி முடிந்த நிலையில் உள்ள கட்டடத்தைக் காட்டியவன் அதில் தற்சமயம் வேலை எதுவும் நடைபெறவில்லை எனச் சொல்ல அவனுக்கு இன்னும் வசதியாகப் போனது.

நேத்ராவின் விஷயத்தில் அவர்கள் ஒவ்வொரு முறையும் அவமானப்பட்டுக் கொண்டிருக்க அவளுக்குச் சரியான பாடம் புகட்ட எண்ணி மொத்த குடும்பமே ஆலோசித்து இதில் இறங்கியது.

அதுவும் பொது இடத்தில் வைத்து கதிர் அடித்தது அவர்களுக்குச் சொல்லொன்னா கோபம் வந்தது.

இவ்வளவு யோசித்தவர்கள் கதிரையும் விட்டு வைக்கவில்லை. அவனையும் அடிக்க ஆட்களை அனுப்பினார்கள்.

******

கதிர் அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவன் எதையும் செய்யத் தோன்றாமல் படுத்திருந்தான்.

‘ஏன்டி இப்படி பேசின?’ என்று அவன் மனம் முழுவதும் கதறிக் கொண்டிருந்தது.

நேத்ராவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் போன் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.

ஃபோன் விடாமல் அடிக்க அமுதாவின் எண்ணை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். ஏனோ அவன் மனம் பதறியது.

கதிர் கைகள் நடுங்க போன் அட்டெண்ட் செய்ய அந்தப் பக்கம் அமுதா கதறி அழுதாள்.

“தம்பி”

“சொல்லுங்க ஆன்ட்டி”

“நேத்ரா வீட்டுக்கு இன்னும் வரலப்பா. ஆஃபிஸ்ல வொர்க் அதிகமா? எனக்குப் பயமா இருக்குப்பா” என அழ கதிர் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

“ஆன்ட்டி என்ன சொல்றீங்க?”

“நேத்ராவை நீதானோப்பா கூட்டிட்டு வருவ? உன்கூடத் தான இருப்பா?”

“ஆ… ஆன்ட்டி” என்று வார்த்தைகள் வராமல் தடுமாறியவன்,

“நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி. நீங்க கவலைப்படாதீங்க” என்று போனை கட் செய்தவனுக்கோ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூடப் புரியாத நிலையில் இருந்தான்.

தன்னை மீறி அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

‘பேபி எங்க போனடா? ஐயோ… உன்னை நான் மிஸ் பண்ணிட்டேனா?’

‘நோ பேபி. என் பேபி என்னை விட்டு எங்கயும் போக மாட்டா. அவ ஆபிஸ்ல தான் இருக்கணும்’ எனத் தன்னைத் தேற்றியவன் அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்ப அவன் கைகளில் கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

அலுவலகத்தில் காரை நிறுத்தியவன் அவளைப் பற்றி விசாரிக்க அவள் இவனுக்கு முன்னமே கிளம்பி விட்டதாகச் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

அடுத்து அவள் வழக்கமாக நிற்கும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தவன் அவளது போட்டோ காட்டி அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க ஒருவர் பஸ் நிறுத்தத்தில் நேத்ரா பஸ்ஸூக்காகக் காத்து கொண்டிருந்ததைக் கூற சரி என்று தலையாட்டியவன் அடுத்து என்ன செய்வது எனத் தடுமாறியவன் கண்களில் சிசிடிவி கண்ணில் பட்டது.

சிறிது யோசித்தவன் அர்ஜூனுக்குப் போன் செய்தான்.

“அஜூ”

“மச்சான் என்னடா இந்நேரத்துக்குக் கூப்டற?”

“மச்சான் நேத்ராவை காணோம்டா. ஆன்ட்டி போன் பண்ணாங்க” என்று கலங்கிய குரலில் சொல்ல

“என்னடா சொல்ற?”

“ஆமாடா. ஆஃபிஸ்லயும் செக் பண்ணேன். அங்கயும் இல்ல. எனக்கு முன்னாடியே கிளம்பிட்டானு சொல்றாங்க. பயமா இருக்குடா” எனச் சொல்ல

“மச்சி இப்போ எங்க இருக்க?”

“ஆஃபிஸ்கிட்டடா”

“ஓகே. அங்கயே வெய்ட் பண்ணு. நான் வரேன்” என்றவன் கட் செய்யக் கதிர் போனை உள்ளே வைக்கும் போது தன்னைச் சுற்றி நான்கைந்து பேர் கையில் உருட்டு கட்டையும் நிற்க அதிர்ந்தவன் பின் சுதாரித்தான்.

முதலில் ஒருவன் அவனை அடிக்க வர அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்த அவன் தடுக்கி போய்க் கீழே விழுந்தான்.

அடுத்து இன்னொருவன் வர அவனைக் கதிர் எட்டி உதைக்க அவன் கீழே விழ அவன் கையில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்தவன் வெறியோடு அனைவரையும் அடிக்க ஆரம்பித்தான்.

இவன் அடிக்கு பயந்து அவர்கள் ஓட அதில் ஒருவன் காலில் கதிர் வீசிய உருட்டுக்கட்டை பட அவன் தடுமாறி விழ அவன் அருகே வந்த கதிர்..

“யார் உன்னை அனுப்பினது?” எனக் கேட்க அவன் தெரியாது எனச் சொல்ல

“உயிர் வேணும்னா சொல்லு” என்று அவன் கழுத்தை அழுத்தியபடி கேட்க அதில் பயந்தவன் சந்திரன் எனத் திக்கி திணறி சொல்ல கதிர் இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

‘ஓ மை காட் என் பேபி…’

“டேய் அந்தச் சந்திரன் எங்க இருக்கான்?” என அவன் கர்ஜிக்க

“செ… சென்னைல” என்று சொல்ல கதிர் இன்னும் அதிர்ந்தான்.

“இப்போ அவன் எங்க இருக்கான்னு நீ காட்டல… உன்னை நான் என்ன பண்ணுவேனு தெரியாது” என அவன் இறுகிய குரலில் கூற அந்தக் குரல் அவனுக்குக் கிலி ஏற்படுத்தியது.

இதற்கிடையில் கதிர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அர்ஜூன் அங்கு வர அவனிடம் இவனைப் பற்றிச் சொன்னவன்…

“டேய் இவனை வெச்சு தான்டா அவனை புடிக்கணும். என் பேபி அந்தக் காட்டுமிராண்டி கிட்ட சிக்கிட்டு என்ன கஷ்டப்படறாளோ தெரியல” எனக் கலங்கியவன்

“அவன் மட்டும் என் கைல சிக்கட்டும். அவனுக்கு இன்னைக்குத் தான் கடைசி நாள்” எனக் கருவியவன் அவனைப் பிடித்திழுத்துக் காரில் உட்கார வைக்க அர்ஜூனும் அவனோடு வந்தான்.

அந்த அடியாள் வழிகாட்ட நேத்ரா இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.

அவர்கள் உள்ளே நுழையும் போது அங்கே கண்ட காட்சியில் கதிர் துடிதுடித்துப் போனான்.

“என்ன சொன்ன? கதிர கல்யாணம் பண்ணிக்கப் போறியா? அவனை கொல்ல ஆள் அனுப்பிருக்கேன். அவன் பொணமா தான் வருவான். நீயும் அவன் கூடவே போ” என்று ஆத்திரத்துடன் கூறியபடி அவள் கழுத்தை நெறிக்க அதில் மூச்சு விடத் தடுமாறியவளின் காதுகளில் “பேபி” என்று கதிரின் குரல் ஒலிக்க அதில் சந்திரனின் பிடி தளர அவள் அப்படியே வேரற்ற மரம் போல் சாய்ந்தாள்.

அவளைக் கைகளில் தாங்கியவன், “பேபி இங்க பாருடா” என்று கதறியவன் அவளைப் படுக்க வைத்து விட்டுச் சந்திரனை பொங்கி எழுந்த ஆவேசத்தில் கண்மண் தெரியாமல் அடித்தான்.

“டேய் அவளை என்ன பண்ணின?” என்றவன் அவன் கையை முறுக்க அவன் ஆவென்று கத்தினான்.

பின் முகத்தில் மாறி மாறி அடிக்க… அவன் கீழே விழ திரும்ப அடிக்கப் போனவனின் கண்களில் இரும்பு கம்பி பட அதை எடுத்தவன் அவனது உடலின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. கதிரின் சீற்றத்திற்கு முன் சந்திரனால் இம்மி அளவு கூட அசைய முடியவில்லை.

உடல் முழுவதும் இரத்தம் வர அவன் மயங்கியது கூடப் புரியாமல் கதிர் அடிக்க அர்ஜூன் பதறி போய்த் தடுத்தான்.

“டேய் செத்துக் கித்துப் போயிட போறான். நீ சிஸ்டர போய்ப் பாரு” எனச் சொல்ல கதிர் நேத்ராவை தனது கைகளில் அள்ளி கொண்டு சென்றான்.

“பேபி பாருடா. கண்ண திறடா. இனி இந்த மாதிரி கோபப்பட மாட்டேன். ப்ளீஸ்… என்ன மன்னிச்சிடுடா” என்று கதற நேத்ராவோ இது எதையும் உணரும் மனநிலையில் இல்லை.

மருத்துவமனையில் நேத்ராவை சேர்த்த கதிர் உலகமே இருண்டது போல உணர்ந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page