நேத்ரா கதிரை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க ஒரு வாரமாய் அவளுக்குப் போக்கு காட்டி கொண்டிருந்தவன் அன்று அவள் வீட்டிற்கு வர நேத்ரா அவனோடு சண்டை போட ஆரம்பித்தாள்.
“ஹாய் பேபி…” என்றவன் உள்ளே வர
“யார்டா உன் பேபி?” என நேத்ரா அவனை முறைத்தாள்.
இதற்கிடையில் கதிரின் குரலை கேட்டு வந்த அமுதா “வாங்க தம்பி” என வரவேற்றவள் “இருங்க தம்பி. குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என்றவள்
“ஏய் தம்பிட்ட நல்லபடியா பேசுடி” எனச் சொல்ல நேத்ராவோ அமுதாவை முறைக்கக் கதிர் சிரிப்பை அடக்கியபடி நேத்ராவை பார்த்தான்.
“நீ போம்மா வேலைய பார்த்துட்டு. இவனை…” என்றவள் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா எனத் தேட ஆரம்பித்தாள்.
“பேபி என்ன தேடற?”
“உன்னை அடிக்க ஏதாவது கிடைக்குதான்னு தேடறேன் எரும” என்றவள் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.
“ஹேய் பேபி… என்ன பண்ற?”
“ஏய்… அடிக்காதடி. வலிக்குது” என்றவன் எழுந்து ஓட ஆரம்பிக்க…
“அப்படி தான் அடிப்பேன். இத்தன நாளா இருக்கேனா, செத்தேனான்னு கூடத் தெரியாம ஏன்டா இப்போ மட்டும் வந்த?” எனக் கேட்க கதிர் அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“பேபி ஏன்டா இப்படி பேசற?”
“போடா. நீ என்ன அவாய்ட் பண்ற தானே? எனக்கு யாரும் வேணாம்” என்றவள் அழ…
“பேபி…” என்று அவளை இறுக அணைத்தவன்…
“நான் உன்னை அப்படி நினைப்பேனா?” என்று ஆறுதலாக அவள் தலையை வருடி கொடுத்தான்.
“அப்புறம் ஏன்டா வரல? உன்னை பார்க்கணும்னு நான் ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சேன். தெரியுமா?” என்று அவள் ஏக்கத்துடன் சொல்ல அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன்,
“அதான் நான் வந்துட்டேன் தானே பேபி. இனி நோ அழுகை” என்று அவள் கண்களில் முத்தமிட்டவன்,
“ஓகே. ரெடியாகு. கோவிலுக்குப் போகலாம்”
“ஹே… நிஜமா… சூப்பர். இந்த ஒன் வீக் வெளிய போகாம எப்படியோ இருந்தது. தேங்க்ஸ்டா” என்று துள்ளிக் குதித்தவள் ரெடியாகச் செல்ல முன்னறைக்கு வந்த கதிரிடம், அமுதா காஃபியை கொடுக்க அதைக் குடித்தவாறே அமுதாவிடம் சில விஷயங்களைப் பேசினான்.
சிறிது நேரத்தில் நேத்ரா கிளம்பி வர அமுதாவுடன் மூவரும் கோவிலுக்குச் சென்றார்கள்.
கோவிலில் நேத்ரா மனமுருக வேண்டி கொண்டிருந்தவள் திடீரென்று ஏதோ நெருட கண் திறந்தவள் கதிர் அவள் கழுத்தில் தாலி கட்டி இருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கதிர் பதறிப் போனான்.
“பேபி இங்க பாருடா” என்று அவள் கன்னம் தட்டியவன் அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்க அதில் விழித்தவள் கதிரை வெறுமையாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வையைக் கதிரால் தாங்க முடியவில்லை.
அவள் கண் விழிக்கும் போது அவள் எதிரில் வயதான தம்பதியர் இருக்க யாரென்று புரியாமல் எழுந்து நின்றாள்.
“பேபி ஆர் யூ ஓகே?”
“என்னாச்சுமா? இப்போ பரவால்லயா?” எனக் கேட்க அவளுக்கு இருந்த அதிர்ச்சியில் வாய்ப் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளைக் கவனித்த கதிர் தன் கை வளைவில் கொண்டு வந்தவன் அப்படியே காருக்கு கூட்டி போனான்.
“பேபி ஏன்டா பேச மாட்டேங்கறா? ப்ளீஸ். ஏதாவது பேசு. அட்லீஸ்ட் திட்டு” என அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அமுதா உட்பட அனைவரும் வர அமைதியானவன் அவள் அருகில் உட்கார்ந்து அவளது கைகளை எடுத்து தனது கைகளுக்குள் புதைத்துக் கொண்டான்.
அப்போதும் அவனைப் பார்த்தவள் வேறொன்றும் பேசவில்லை. அந்த வகையில் ஆறுதலாக உணர்ந்தவன் அவளைத் தனது தோள்களில் சாய்த்துக் கொண்டான்.
நேத்ராவோ அவன் என்ன செய்கிறானோ பொம்மை போல அதற்கு இசைந்தாள்.
கார் ஒரு வீட்டின் முன் நிற்க அவளை எழுப்பியவன் கை பிடித்து அழைத்துச் செல்ல அவளோ வீட்டின் பிரமாண்டத்தைப் பார்த்து மலைத்து நின்றாள்.
“நம்ம வீடு தான். வாடா” என்றவன் சொல்ல அதற்கும் அவள் உடல் தூக்கி வாரி போட அவனைப் பார்த்தவளின் கையை இறுக்கமாகப் பிடித்தபடி கூட்டி சென்றான்.
கதிரின் அம்மா ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்க வீட்டின் உள்ளே சென்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“ஏம்பா மருமக எதுவும் பேச மாட்டேங்கறா?”
“அவ ஷை டைப்மா” என்றவன் சமாளிக்க
“இந்தாப்பா பால். நீ குடிச்சிட்டு அவளுக்குக் குடு” எனச் சொல்ல அவளோ எதையும் ஏற்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடி இருந்தாள்.
“இந்தா பேபி” எனச் சொல்ல வேறு வழி இல்லாமல் பாலை குடித்தவளிடம்,
“கதிர் நீ இந்தப் பழத்த சாப்பிட்டுட்டு அவளுக்கும் கொடு” என்று சொல்ல அவளைக் கவனித்தவன்
“ம்மா இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம். அவளை ஃபர்ஸ்ட் ரெஸ்ட் எடுக்க ரூமுக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல அதில் ஏமாற்றமாய் உணர்ந்தவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
தன் மனம் என்ன நினைக்கிறது என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அமுதாவோ நேத்ராவை பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கக் கதிரின் தம்பி முகில் நிலவன் அவளிடம் பேசி இயல்புக்குக் கொண்டு வந்தான்.
நேத்ராவை அறைக்குள் கூட்டி வந்தவன், “பேபி என் மேல கோபமா இருந்தா ஸ்ட்ரைட்டா திட்டு. இல்லேனா அடி. ஆனா நீ அமைதியா இருக்காத. எனக்குப் பயமா இருக்குடா” எனச் சொன்னவன் தவிப்பாக அவளைப் பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போலக் கொட்டியது.
“ஏன்டா இப்படி பண்ணே? நான் உனக்குத் தகுதியானவளா?”
“இதுக்காகவா நான் என் மனசு கூட அவ்வளவு போராடினேன்? எல்லாத்தையும் சுக்கு நூறாக்கிட்டியேடா?”
“ஏன்டா இப்படி பண்ணே? ஏன்டா?” என அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள் அவன் மார்பிலேயே சாய்ந்து கதறி அழ கதிரும் கண்கள் கலங்க அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
அவனையும் மீறி ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே விழ நேத்ரா பதறி போய் அவனைப் பார்த்தாள்.
சட்டென்று சுதாரித்தவன், “ஒண்ணும் இல்ல பேபி” என்று சமாளிக்க நேத்ரா அவனை எதில் இருந்தோ காப்பவள் போல இறுகி கட்டி கொண்டாள்.
இருவரும் எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தார்களோ சிறிது நேரத்தில் சுதாரித்த கதிர்…
“வா பேபி. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா” எனச் சொல்ல அவளோ தயக்கமாக அவனைப் பார்த்தாள்.
“நான் இப்படி வந்து படுத்தா ஆன்ட்டி தப்பா நினைக்க மாட்டாங்க” என அவள் நடுங்கிய குரலில் சொல்ல
“உனக்கு ஒடம்பு சரியில்லேன்னு அவங்களுக்குத் தெரியும் பேபி. வாடா” எனக் கூற அவளோ மிரட்சியாய் அவனைப் பார்த்தாள்.
“நீ… நீ கூடவே இருக்கியா நிலன்? எ… எனக்குப் பயமா இருக்கு” என்றவள் தயங்கியபடி சொல்ல
“அச்சோ… பேபி இதுக்கேன்டா இவ்ளோ தயங்கற? இருன்னா இருந்திட்டு போறேன்” என மென்மையாகச் சொன்னவன் அவளைத் தனது மடியில் படுக்க வைத்தான்.
அவன் மடியில் படுத்தவளுக்கோ நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வந்து அவளைத் தூங்க விடவில்லை.
அவள் புரண்டு புரண்டு படுக்க அவள் அசைவை உணர்ந்தவன்…
“ஏன்டா தூக்கம் வரலியா?” எனக் கேட்க
“நான் உன்னை ரொம்பத் தொல்லை பண்றேனா கதிர்? நா… நான் உனக்கு வேண்டாம் கதிர். நீயாவது சந்தோஷமா இருக்கணும். ப்ளீஸ்… உங்க ஃபேமிலிட்ட ஏதாவது சொல்லி நம்ம பிரிஞ்சிடலாம் கதிர்” என்று வெறுமையான குரலில் சொல்ல கதிரோ ஆயிரம் குத்தீட்டிகள் பாய்ந்தது போல அவளைப் பார்த்தவனுக்கு அந்த வலியே கட்டுக்கடங்காத கோபமாக வெளி வந்தது.
“ஏய்… என்னடி என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா? என்ன கொலைகாரனாக்கிடாத” என உறும நேத்ரா பயந்து போய் அவனை விட்டு விலகக் கதிர் அங்கிருந்தால் எங்கே அவளை அடித்து விடுவோமோ என்ற பயத்தில் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
வெளியே வந்தவனோ கோபத்தில் கூண்டு புலி போல நடந்து கொண்டிருந்தான்.
“டேய் கதிர் என்னாச்சுடா? ஏன் டென்ஷனா இருக்க?” என முகில் கேட்க அவனிடம் ஒன்றும் இல்லை எனச் சமாளித்தான்.
கதிரை நினைத்தபடியே நேத்ரா மெத்தையின் ஒரு ஓரத்தில் கால்களைக் குறுக்கியபடி படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் அலற ஆரம்பித்தாள்.
“வேணாம்… கதிர விட்டுடு… ஒண்ணும் பண்ணிடாத… கதிர் நம்ம பிரிஞ்சிடலாம்” எனத் தூக்கத்தில் அலற கதிர் அந்தச் சத்தம் கேட்டு பதறி போய் வந்தான்.
“பேபி… இங்க பாருடா… என்னாச்சு?” என அவன் கேட்க அவளோ அதிலிருந்து வெளியே வரவே இல்லை.
“நேத்ரா… இங்க பாரு” எனச் சத்தம் போட்டவன் அவளை உலுக்க நேத்ரா திகைத்து போய் அவனைப் பார்த்தாள்.
“க… கதிர்” என்று கூப்பிட்டவள் அவனை முழுதாக ஆராய்ந்து அவனை இறுக கட்டி கொள்ளக் கதிர் உண்மையில் திணறிப் போனான்.
“ப்ளீஸ் கதிர்… எங்கயும் போகாத. பயமா இருக்கு” என அவள் தயக்கத்துடன் கேட்க
“நான் இங்க தான்டா இருக்கேன். இங்க வா” என அவன் மடியில் படுக்க வைத்தவன் “தூங்கு” எனச் சொல்ல
“நீ… நீ விட்டுட்டு போயிட மாட்டியே?” என ஏக்கத்துடன் கேட்க அவளையே பார்த்தவன்
“பேபி நான் யாரு?” எனக் கேட்க அவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“நான் உன் ஹஸ்பெண்ட் தானே?”
அவள் ஆமாம் என்று தலை அசைக்க…
“நீ கொலை பண்ணி இருந்தா கூட உன்னை காப்பாத்தற உரிமை எனக்கு இருக்கு. நான் உன்னை விட்டுட்டுப் போய்டுவேனா பேபி?” என அவன் நிறுத்தி நிதானமாக அழுத்தமாகக் கேட்க… அவள் இல்லையென்று கூற அதில் வாஞ்சையுடன் அவள் தலையைக் கோதியவன் அப்படியே தனது தோள்களில் சாய்த்துக் கொண்டான்.
அவனது பதிலில் அவளது இத்தனை நேர அலைப்புறுதல் காணாமல் போக நேத்ரா அவனது தோள்களில் சாய்ந்தபடியே உறங்கி இருந்தாள்.
அவளைப் படுக்க வைத்த கதிர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
தன்னுடைய முடிவு தவறாகப் போய் விட்டதோ என்ற பயம் அவனுக்கு வந்தது.
முதலில் நேத்ராவின் சம்மதத்திற்காகப் பொறுமையாகக் காத்திருக்க நினைத்தவன் மருத்துவமனையில் நேத்ரா தற்கொலைக்கு முயற்சி செய்யவும் ரொம்பவே பயந்து போனான்.
எங்கே அவள் தனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ என்ற பயத்தில் அதிரடியாக யோசித்தவன் அவளுக்குப் புரிய வைப்பதற்காகவே கண்ணாமூச்சி விளையாடியவன் நேத்ரா தன்னுடனான கல்யாணத்தை ஏற்றுக் கொள்வாள் என நினைத்திருக்க அவளோ அந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தாள்.
ஏதேதோ யோசித்துத் தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
‘உன்னை எப்படி வெளிய கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும் பேபி’ என்று மனதிற்குள் நினைத்தவன் அங்கிருந்து அகன்றான்.
******
கதிர் தனது அறையில் நேத்ராவுக்காகக் காத்துக் கொண்டிருக்க மெல்லிய அலங்காரத்துடன் அவனை நோக்கி வந்தவள் தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“ஹேய் பேபி ஏன் அங்கயே நிக்கற? வா” எனச் சொன்னவன் அவளை அழைத்து வந்து அருகில் அமர வைத்தான்.
“ஏன்டா என்ன யோசிக்கிற?”
“ஒண்ணும் இல்ல. ஏதேதோ ஞாபகம் வந்தது” என அவள் திணறியபடி சொல்ல ஒரு நிமிடம் யோசித்தவன்,
“பேபி நான் உனக்கு நல்லது தானே பண்ணுவேன்?” எனக் கேட்க அவள் ஆமாம் எனத் தலையாட்டினாள்.
“நீ என்ன நம்பற தானே பேபி?”
“உன்னை நம்பலேன்னா நான் யார நம்புவேன்டா?” என அவள் பதறி போய்க் கேட்க அதில் சிரித்தபடியே அவளது நெற்றியில் முட்டியவன் அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி…
“அப்போ நீ எதுக்கும் பயப்படக் கூடாது. ஓகேவா?” எனக் கேட்க அவளோ சந்திரன் எனச் சொல்ல அவளிடம் இருந்து விலகியவன் தனது பீரோவிலிருந்து ஃபைலை எடுத்து நீட்ட குழப்பமாக அதைப் பார்த்தவள்
“என்ன கதிர் இது?”
“பிரிச்சு பாரு பேபி” என்று சொல்ல அதில் விவகாரத்துப் பத்திரம் இருந்தது. அதில் சந்திரன் கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவள் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.
“நி… நிலன் என்ன இது?” என அவள் வார்த்தை வராமல் தவிக்க
“கூல் பேபி. உன்னோட டைவர்ஸ் பேப்பர்டா. சந்திரன் சைன் போட்ருக்கான்”
“அதான் எப்படி?”
“ஏன் பேபி அவன் உன்னை கடத்தினதுக்கப்புறம் கூடச் சும்மா இருப்பேன்னு நீ எப்படி நினைச்ச?” என இறுக்கமான குரலில் கேட்டவன்
“அதுவும் நீ அன்னைக்குத் திரும்பக் கத்தில அறுத்துக்கிட்ட. அதைப் பார்த்து எவ்ளோ நடுங்கினேனு எனக்குத் தான் தெரியும்” என அவன் நடுக்கமான குரலில் சொல்ல
“ப்ளீஸ்… அப்போ எனக்கு என்ன பண்றதுன்னு புரியல. அதான் அப்படி பண்ணேன்” என்றவள் அவனை இறுக அணைக்க அதில் அமைதியானவன்…
“எனக்கு இருந்த ஆத்திரத்துக்கு அவனை அன்னைக்கே கொலை பண்ணிருப்பேன். இந்த அர்ஜூன் வந்து தடுத்துட்டான்” என்றவன்
“பேபி இன்னொன்னு தெரிஞ்சுக்கோ. அவன் குடும்பமே இப்போ ஜெயில்ல தான் இருக்கு” என்று சொல்ல
“நிலன்”
“உன்னை ஒருத்தன் கடத்தினா நான் என்ன நடக்கும்னு காட்டாம இருப்பேனா பேபி?” எனக் கர்ஜிக்க அந்தக் கோபமும் கூடத் தனக்காகத் தான் என்று உணர்ந்தவள் அவன் முகமெங்கும் முத்தமிட அவனோ குளிர் நிலவனான்.
எப்போது அவளது செயல் அவனுடையதாக மாறியதோ… இருவரும் தங்களது அருகாமையில் அந்த நேரத்தை கடந்தனர்.
நேத்ரா சுதாரித்து விலக அவளைத் தனது கை வளைவில் கொண்டு வந்தவன்…
“பேபி இது உன்னோட வீடு மாதிரி தான். ஃப்ரீயா இரு. நாளைக்கு நம்ம ஃபிளாட்க்கு போய்க்கலாம்” என்று சொல்ல
“இது உங்க வீடு தானா?”
“ஆமாண்டா” என்றவன் சொல்ல அதற்கும் மேல் அவனிடம் கேள்வி கேட்க அவள் தயங்கினாள்.
அவனோ ஏதோ யோசனையில் இருந்தவன் “பேபி அம்மாட்ட இது உனக்குச் செகண்ட் மேரேஜ்னு உளறிடாத. உன்னோட ஃபர்ஸ்ட் மேரேஜ் பத்தி முகிலைத் தவிர யாருக்கும் தெரியாது. சோ அம்மாவோ, அப்பாவோ ஏதாவது கேட்டா நார்மலா பதில் சொல்லு” என அசால்ட்டாக அணுகுண்டை போட்டான்.
