அத்தியாயம் 14

 

ஜோஸ்வினியை நினைத்து அபிஷேக் தவிப்புடன் விவேக்கின் போன் காலுக்காக காத்திருந்தான்.

விவேக் கால் செய்தவுடன் உடனே அட்டெண்ட் செய்தான்.

“என்னணா இவ்ளோ சீக்கிரம் எடுத்துட்டிங்க?”

“உன் போன் காலுக்காக தான் வெயிட்டிங் விவேக். ஃபங்ஷன் எப்படி போச்சு?”

“பிரியணும்ங்கறத தவிர ஹேப்பியா தான் போச்சுண்ணா”

“டோன்ட் வொர்ரி விவேக். இது உனக்கு முக்கியமான டர்னிங் பாயிண்ட். உனக்கு எந்த ஹெல்ப்னாலும் நான் பண்றேன்”

“அண்ணா ஜோக்கு கூட இன்னைக்கு நடந்தது டர்னிங் பாயிண்ட் தான்”

“என்ன சொல்ற விவேக்?”

“ஆமாண்ணா. இன்னைக்கு ஷியாம் எவ்ளோ ஃபீல் பண்ணி பேசினான் தெரியுமா?  ஃபிப்டி இயர்ஸ் ஆனாலும் ஜோஸ்வினிக்காக வெயிட் பண்ணிட்டிருப்பானாம். என்ன லவ்ணா?” என்று பிரமிப்புடன் கூற அபிஷேக் பேசிக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியில் எழுந்து விட்டான்.

“என்ன சொல்ற விவேக்?”

“ஆமாண்ணா. ஃபர்ஸ்ட் சண்ட போட்ட மாதிரி தான் இருந்துச்சு. அப்றம் ஜோஸ்வினி ருத்ரன் பேச்ச கேக்காம நீயா உன் லவ் உணர்ந்து வந்தினா நான் ஃபைவ் இயர்ஸ் ஆனாலும் வெயிட் பண்ணிட்டிருப்பேனு சொன்னா ணா. அத கேட்டு அவன் திருந்திட்டான் ணா. பிஃப்டி இயர்ஸ் ஆனாலும் உனக்காக காத்திட்டிருப்பேனு சொன்னான். அத கேட்டு எனக்கே ஷாக் ஆகிடுச்சு”

“அவனுக்கு லட்சியம்லா எதும் இல்லையாம். ஜோஸ்வினிய மீட் பண்ணதுக்கப்புறம் தான் லைஃபோட வேல்யூவே புரிஞ்சுதாம். அவ அவனோட தேவதையாம். என்னென்னமோ சொன்னாணா”

விவேக் சொல்ல சொல்ல இறுகிப் போய் அமர்ந்தவன் அவனிடம் போனை கட் பண்ணுகிறேன் என்று கூட சொல்லவில்லை. அப்படியே வெளி உலகம் உணராதபடி வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.

என்ன தான் ஜோஸ்வினிக்காக அவன் நடித்தாலும் அவனுக்கு உள்ளுக்குள் ஓர் நப்பாசை இருந்தது. தனது காதல் அவளுடன் தன்னை சேர்த்து வைக்கும் என்று நம்பியவன் அவளிடம் உற்சாகமாகவே பழகினான்.

எவ்வளவு சீக்கிரம் அவளை  மீட்டெடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை மீட்டெடுக்க உறுதி பூண்டான்.

அவளுடைய காதலுக்காக எவ்வளவு வலியையும் அவன் தாங்கி கொள்ள தயாராக இருந்தான்.

அவள் ஷியாமுடன் பிரேக் அப் என்று சொன்ன போது அவளது கண்ணீர் முகத்தை பார்த்தவன் அவளை எப்படி பழையபடி ஆக்குவது என்று யோசித்த போது அவள் தன்னுடனே இருந்தால் அவளை மீட்கலாம் என்று சொன்னான். அவளும் அதை சந்தோஷமாகவே ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.

‘ஏன் செர்ரி உனக்கு என்ன பிடிக்கல?’

‘இத்தன நாள்ல நான் உன்ன கொஞ்சம் கூட பாதிக்கலையா?’

‘உனக்கு ஷியாம தான் பிடிக்குமா?’

‘உனக்காக இங்க ஒருத்தன் உயிர கைல பிடிச்சுட்டு காத்திட்டிருக்கேன்டா’

‘எந்த இடத்துலயுமே என் ஞாபகம் உனக்கு வரலையாடி?’

‘உன்ன பாத்ததுல இருந்து உனக்காக தானேடி காத்திட்டிருக்கேன்’

‘நான் என்ன தப்பு பண்ணேன்?’

‘எப்போ பேசினாலும் என் அபி என் அபினு சொல்வியே? நான் உன் அபி இல்லையாடி?’

‘நீ எப்டி என்ன மறக்கலாம்?’

‘ஃபைவ் இயர்ஸ் ஆனா கூட அவனுக்காக வெயிட் பண்ணுவியா?’

‘அப்டினா  நான் உன் கூட இருந்த நாட்கள்…’ 

‘நான் பாசிங் கிளவுடா பேபி?’ என்று யோசித்தவனுக்கு அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதை துடைத்தவன் விரக்தியாக சிரித்தான்.

‘எல்லாத்தையும் சிரிக்க வைக்கிற. என்னைய மட்டும் ஏன்டி அழ வைக்கிற?’ என்று யோசித்தவன் திடீரென மூண்ட கோபத்துடன் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் விசிறி அடித்தான்.

காயப்பட்ட மனம் உள்ளுக்குள் ஏதேதோ பிதற்ற அதை அகற்றும் வழி தெரியாமல் தவித்தவன் ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லாமல் அடிபட்ட பறவையாய் சுருண்டான்.

                                    *******

ஃபங்ஷனில் இருந்து வந்த ஜோஸ்வினி ஷியாமை பற்றிய யோசனையிலேயே இருந்தாள்.

தான் அவனை இன்னும் காதலிக்கிறோம் என்பதே அவளுக்கு அதிர்ச்சியாக இருந்ததென்றால் அவன் திடீரென்று உருகி பேசியது அதை விட அதிர்ச்சியாக இருந்தது.

‘இவ்வளவு நாளா இப்படி சந்தேகப்பட்டவன் ஒரே நிமிஷத்துல மாறிடுவானா என்ன?’

‘ஆனா அவன் சொன்னப்ப ஏன் எனக்கு சந்தோஷமே வரல?’

‘ரேஷ்மி ஏதோ சொல்ல வந்தப்ப அவன் ஏன் ஸ்டாப் பண்ணான்? எரும எரும. எல்லாம் இங்க வந்து யோசி’ என்று தலையிலடித்துக் கொண்டாள்.

‘இன்னமுமே அவன நம்பலாமானு எனக்கு யோசனையா தான் இருக்கு. பேசாம அபிக்கு போன் பண்ணி கேட்டுடுவோம்’ என போன் செய்தவள் அவன் செல் சுவிட்ச் ஆஃப் என்று மெஸேஜ் வரவும் யோசனையானாள்.

ஏனெனில் என்றைக்குமே அவன் செல் சுவிட்ச் ஆஃப் என்று மெஸேஜ் வந்ததில்லை. அடுத்து இவள் பிரச்சனை அறிந்ததில் இருந்து அவன் எந்த நேரமானாலும் பிரச்சனை என்றால் உடனே கூப்பிட சொல்லி இருந்தான்.

அபிஷேக் பற்றி நன்றாக அவளுக்கு தெரியுமாதலால் அவனுக்கு ஏதேனும் உடம்பு சரியில்லையோ என பயந்தவள் ஆதவனுக்கு அவசரமாக போன் செய்தாள்.

“ஏய் என்னடி இந்நேரத்துக்கு போன் பண்ற?”

“கத்தாத எரும. அபிஷேக்கு போன் பண்ணியா?”

“இல்ல ஜோ. இன்னைக்கு வெளிய போற வேல இருந்தது. சோ போய்ட்டு வந்த டயர்ட்ல தூங்கலாம்னு பாத்தா நீ போன் பண்ணி கடுப்பேத்தற?”

“டேய் பக்கி அபிக்கு போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது. என்னனு தெரிலடா”

“என்னடி சொல்ற?. அவன் ஸ்விட்ச் ஆஃப்லா பண்ண மாட்டேனே”

“அதான் எனக்கும் பயமா இருக்குடா”

“விடுடி. நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று கட் செய்தவன் அபிக்கு டிரை செய்தபடியே காரை ஓட்டினான். ஆனால் அவனுக்கு லைனே கிடைக்கவில்லை.

ரெஸ்ட்டாரண்ட்டை அடைந்ததும் அவசரமாக உள்ளே நுழைந்தவன் அவன் ரூமிற்கு சென்று கதவை தட்டலாம் என்று கை வைக்க அது உடனே திறந்து கொண்டது.

அறையில் உள்ளே சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது. அறையினுள் உள்ள பொருட்கள் இங்கொன்றும் அங்கொண்றும் ஆக சிதறி இருந்தது.

அதை பார்த்தவன் பதறி போய் “அபி, அபி” என கத்தியபடி அவனை தேடினான்.

ஆனால் அபியோ இவன் வந்ததை கூட உணராமல் அறையின் மூலையில் தரையில் சுருண்டு படுத்திருந்தான்.

அதை கவனித்தவன் ஓடிப் போய் “அபிஷேக்” என உலுக்க விழித்தவன் அவனையே பார்த்தபடி இருந்தான்.

“டேய் என்னாச்சுடா உனக்கு? ஏன் இப்டி இருக்க? திங்கஸ்லா ஏன் இப்டி சிதறி இருக்கு?” என கேள்வியாய் கேட்க அவனோ அமைதியாய் இருந்தான்.

“உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதாவது பேசுடா” என கேட்டவனை பார்த்ததும் அபியின் கண்கள் சொல்லொனா வேதனையை காட்டியது.

அதை கவனித்தவன் “என்னாச்சுடா?” என்று கேட்டான்.

அபிஷேக் ஏதோ சொல்ல வந்தவன் பின் நிதானித்து

“என்னனு தெரிலடா. திடீர்னு பேரண்ட்ஸ் ஞாபகம் வந்துடுச்சு” என்றவன் 

“நான் உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கட்டுமாடா?” என்று தயங்கிய குரலில் கேட்டான்.

“இதுக்கு ஏன் மச்சி தயங்குற? படுடா” என்றவன் அவனை சிறிது நேரம் தட்டிக் குடுத்தான்.

அபிஷேக் புரண்டு புரண்டு படுப்பதை கவனித்தவன்

“நைட் ஏதாவது சாப்டியாடா?” என்று கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.

“ச்சே… ஏன்டா இப்டி பண்ற?. இரு. நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்”

“நான் சாப்பிடற மைன்ட்ல இல்லடா”

“அபி… என் பொறுமைய சோதிக்காத” என்று கத்தியவன் அவனை பெட்டில் படுக்க வைத்து விட்டு உணவை எடுத்து வர சென்றான்.

அவனது ரெஸ்ட்டாரென்ட்டில் இரவு பதினொன்று மணி வரையும் உணவு உண்டு. அதை தவிர யாரேனும் வந்தாலும் அவர்களுக்கேற்றபடி செய்வார்கள்.

உள்ளே கிச்சனில் சென்று உணவு வாங்கி வந்தவன் அவனுக்கு ஊட்ட வர அபிஷேக் திகைத்து போய் பார்த்தான்.

“என்னடா பாக்கற? சாப்பிடு” என்று ஊட்டினான்.

அதை சாப்பிட்டு முடித்தவன் ஆறுதல் தேடும் குழந்தையை போல மீண்டும் அவன் மடியிலேயே படுக்க ஆதவன் அவன் செய்கையில் குழம்பி நின்றான்.

அவன் ஏற்கனவே கேட்டும் அபிஷேக் வாய் திறக்காததால் மேற்கொண்டு அவனிடம் அதை பற்றி கேட்கவில்லை. ஆனால் அவன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான் என்பது மட்டும் புரிய ஆதவன் அவன் கேசத்தை வருடியதில் அவன் தன் அலைப்புறுதல் மறந்து தன்னையறியாமல் அவன் மடியில் உறங்கினான்.

அவன் உறங்கியதும் அவனை பெருமூச்சுடன் பார்த்தவன் மெல்ல அந்த அறையை சத்தம் வராமல் க்ளீன் செய்தவன் அவன் அருகிலேயே படுத்து உறங்கினான்.

அடுத்த நாள் ஆதவன் கண் விழித்த போது அபிஷேக் அங்கு இல்லை. அவனை அங்கு தேடி பார்த்த ஆதவன் ரிசப்ஷனில் விசாரிக்க அவன் அவசர வேலையாக பாண்டிச்சேரி செல்வதாக அவனிடம் தெரிவிக்க சொன்னதாக அவன் சொன்னான். அதை கேட்ட ஆதவனுக்கு அபிஷேக் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

‘இவன் என்ன தான் நினச்சிட்டு இருக்கான்?’ என்று அவனுக்கு கோபம் சுரீரென்று ஏறியது. அப்போது ஜோஸ்வினி அவனுக்கு அழைத்தாள்.

“ஆது அபி நல்லாருக்கான்ல?”

“என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்டி?”

“டேய் அப்போ நீ பாக்கவே போகலயா?”

“சும்மா கடுப்பேத்தாத. நீ சொன்னவுடனே போனேன். பாத்தா ரூமே அலங்கோலமா கிடந்தது. இவன் ஏதோ மூலைல பிச்சைக்காரன் மாதிரி சுருண்டு படுத்திருந்தான். கேட்டதுக்கு பேரண்ட்ஸ் ஞாபகம்னு சொன்னான். சமாதானப்படுத்தி சாப்பிட வெச்சு தூங்க வெச்சா காலைல அவன காணோம்”

“என்னடா சொல்ற?”

“பாண்டிச்சேரி போயிட்டான். அதும் எங்கிட்ட சொல்ல முடில. ரிஷப்சன்ல சொல்லி சொல்றாங்க. இவன் ஏதோ சரியில்ல. ரொம்ப டிஸ்டர்ப்ல இருக்கான். அது மட்டும் புரிது. உனக்கு ஏதாவது தெரியுமா ஜோ?”

“இல்லடா. இத்தன நாள்ல அவன் அப்டி இருந்ததில்லையே. நீ சொன்னத கேட்டதுல இருந்து எந்த வேலயும் ஓடலடா” என்றவள்

“டேய் நம்ம பாண்டிச்சேரி போகலாமா?. எனக்கு அவன உடனே பாக்கணும்”

“நானும் தான். ரெடியாகு. பிக்கப் பண்ணிக்கறேன்” என்றான்.

இருவரும் அடுத்த அரை மணி நேரத்தில் பாண்டிச்சேரிக்கு கிளம்பினார்கள். இருவரும் அங்கே அவனுடைய ரெஸ்ட்டாரண்ட்டை அடைந்ததும் அபிஷேக்கை பற்றி விசாரிக்க அவன் அங்கு வரவேயில்லை என்ற பதிலில் இருவரும் ஆடிப் போனார்கள்.

                           *******

ஃபங்ஷன் முடிந்ததும் ருத்ரன் ஷியாமிடம் பேசி கொண்டிருந்தான்.

“என்ன மச்சி உன் பேச்சே சரியில்ல?”

“ஏன் நான் நல்லா தானே பேசினேன்?”

“எப்போ இருந்துடா ஒனக்கு அவ தேவதையா தெரிஞ்சா? இதுக்கு முன்னாடி அவ அவமானப்படுத்தினது எல்லாம் மறந்து போச்சா?”

“டேய் நான் எவ்ளோ கஷ்டப்படுத்தியும் உனக்காக வெயிட் பண்றேனு சொல்றா? அவ எவ்ளோ நல்லவ தெரியுமா?”

“ஓ… அப்டியா!  அபிஷேக் கூட சேந்து உன்ன அறைஞ்சாலே அதெல்லாம் மறந்து போச்சா? அப்போ இந்த நல்லவ எங்க போனா?” என்று ருத்ரன் கேட்க ஷியாம் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

“இன்னைக்கு உனக்கு இது கேக்க நல்லாருக்கும். நாளைக்கு நீ அவ அந்த அபிஷேக்கையே கல்யாணம் பண்ணிட்டா என்ன பண்ணுவ?”

“என்ன ருத்ரா நீ இப்டி பேசற?”

“ஃபேக்ட தான் சொல்றேன் மச்சி. இது வரையும் அவ பண்ணதுக்கெல்லாம் நீ பழி வாங்க வேண்டாமாடா?”

“அது தப்புடா”

“ஒண்ணு புரிஞ்சுக்கோ. ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அன்ட் வார். நான் சொன்னத செய்”

“நீ சொன்னது தப்பு. நான் செய்ய மாட்டேன்”

“ஏன் செய்ய மாட்ட? அத பாத்து அவ கதறி அடிச்சிட்டு வரணும். ஏன்டா லவ்வர்னு சொல்ற? இத்தன நாள்ல ஒரு போட்டோ எடுத்தியா? அதுக்கே ஒனக்கு ஃபேர்வெல் பார்ட்டி வரையும் வர வேண்டி இருக்கு”

“டேய் அவ அப்டி தான்டா. அவ என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலனு தான் எனக்கு கோபம். இப்போ கூட பாரு அவ வெயிட் பண்றேனு சொல்றா”

“டேய் மெண்டல் அவள நம்பாத. அவளுக்கு ஏற்கனவே ஆள் ரெடியா இருக்கு. அவ உனக்கு டாட்டா காமிச்சிட்டு போயிட்டே இருப்பா”

“உன் கூட அவுட்டிங்கே வந்ததில்ல சொல்ற. ஆனா அன்னைக்கு தீம் பார்க்ல அவனோட ஊர் சுத்திட்டு தான் இருந்தா. நீ நல்லவன் தான். ஆனா அவளுக்கு தான் உன்ன ஏத்துக்க முடில. அவ ஷியாம் எனக்கு வாழ்க்க குடுனு கதறணும். நீ அப்போ அவள எட்டி உதைக்கணும். உன்னால அவ மனசு நொந்து வெந்து உருக்குலைஞ்சு போகணும்டா” என்று கொஞ்சம் நல்லவனாக மாறியவனை தன் வன்மத்தினை மெதுவாக ஊசி போல ஏற்றி அவனை சம்மதிக்க வைத்து ஒரு வழியாக தான் நினைத்ததை நிறைவேற்றி கொண்டான்.

என்ன அவன் அன்றைய இரவே தான் நினைத்ததை முடிக்க எண்ணினான். ஆனால் ஷியாமை மனமாற்ற அவனுக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது.

இருவரும் செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்ததும் ஹைஃபை அடித்து கொண்டார்கள்.

“இனி நீ நில்லுனா நிப்பா. உக்காருனா உக்காருவா. இந்த சந்தோஷமான விஷயத்த அந்த அபிஷேக்குக்கு ஃபர்ஸ்ட் அனுப்பு” என்றவனிடம் சரி என தலையாட்டியவன்

“நீ என் முன்னாடியே ஜோஸ்வினி கூட சிரிச்சிட்டு போவியா? இனி அவ சிதைஞ்சு சின்னாபின்னாம போயிருவா பாரு. அவளுக்கு வர அசிங்கமான மெஸேஜஸ் பாத்து அவ தற்கொலை பண்ணிக்கணும்” என்று அபிஷேக்கு அனுப்பினான்.

         ********

அன்று அவனுடைய ரெஸ்ட்டாரண்ட்டை விட்டு வந்த அபிஷேக் அதற்கு பிறகு அங்கு போகவில்லை. நிகிலிடம் மட்டும் ஒரு முறை போன் செய்து தான் வரும் வரை ரெஸ்ட்டாரண்ட்டை கவனிக்க சொன்னான்.

உண்மையில் அன்று அவன் ஆதவனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

அதுவும் அவன் என்ன பிரச்சினை என்று கேட்க கேட்க தனக்கு இருக்கும் மன உளைச்சலில் எங்கே அவனிடம் உண்மையை உளறி விடுவானோ என பயந்தவன் அவன் உறங்கிய சிறிது நேரத்திலேயே அங்கிருந்து பாண்டிச்சேரி செல்வதாக ரிசப்ஷனில் சொல்லி சென்றவன் அதையே அவனிடமும் சொல்லும்படி சொன்னான்.

இதற்கு பின் அவனால் ஜோஸ்வினியையும் எதிர் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அதனால் தனிமையை நாடி சென்றான்.

எப்போதாவது ஒரு முறை மட்டுமே அவன் போனை யூஸ் செய்தான். அப்படி அவன் எடுக்கும் போது ஷியாம் அனுப்பிய மெஸேஜ் வர அதை பார்த்ததும் அவனுக்கு தூக்கி வாரி போட்டது. அவனது தேகம் நடுங்கியது. உயிர்க்கூடே காலியானது போல உணர்ந்தவன் உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஆதவனை காண சென்றான்.

அவன் ஆதவனை காண அவனுடைய ஹோட்டலுக்கு செல்லும் போது அங்கே ஜோஸ்வினியும் இருந்தாள். அவளை பார்த்ததும் அவன் சிலை போல நின்றான்.

இந்த ஒரு வாரத்தில் துரும்பாக இளைத்து இருந்தாள். அவள் கண்களில் ஜீவன் இல்லை.

அவனை பார்த்த ஆதவன் வேக வேகமாக வந்தவன் அவனை ஓங்கி அறைந்திருந்தான். அபிஷேக் அவனை திகைப்புடன் பார்த்தபடி நின்றான்.

“எங்கேடா போய் தொலஞ்ச இவ்ளோ நாளா? உனக்காக நான் நடு ராத்தினு கூட பாக்காம வந்தா நீ சொல்லாம கொள்ளாம போவியா? எங்கடா போன?”

“ஆது நான் நீ கேக்கற கேள்விக்கு அப்றம் பதில் சொல்றேன். ஆனா ஜோஸ்வினிக்கு என்னாச்சு? ஏன் அவங்க இப்டி இருக்காங்க?”

“எல்லாம் உன்ன தேடி தேடி தான் இப்டி ஆயிட்டா. நீ  முக்கியமான நேரத்துல தானே எஸ்கேப் ஆகற?”

“இ… இல்லடா” என்று திணறியவனுக்கோ அவளை பார்த்தவுடன் ஓடி போய் அணைத்து கொள்ள வேண்டும் போல தோன்றியது.

அதனை மறைக்க தனது கைகளை இறுக்க மூடி கட்டுப்படுத்தியவன்

“ஆது நான் உன்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும். டைம் வேஸ்ட் பண்ணாம வா” என்று ஜோஸ்வினியை பார்த்தபடியே சொல்ல  அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“ஏன்டா என்ன பாத்து கூட பேசாம போற? நான் உனக்கு அவ்வளவு அநாவசியமா போயிட்டேனா? நான் உன்ன காணோம்னு ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சிட்டிருக்கேன். ஆனா நீ என்ன பாக்காம கூட போற?”

“அதில்லங்க ஜோ. ஒரு அர்ஜென்ட் மேட்டர். நீங்க எங்க இந்த பக்கம்?”

“இப்போ தான் பிரென்ச் க்ளாஸ் முடிஞ்சது. யார் யாரோ அசிங்க அசிங்கமா போன் பண்ணி பேசறாங்க. வீட்ல சொன்னா அம்மா பயப்படுவாங்கனு இவன பாக்க வந்தேன்” என்றதும் அபிஷேக் உடனடியாக அவளது செல்லை பிடுங்கி கொண்டான்.

“அபி ஏன்டா எனக்கு போன் வேணுமே?”

“நாளைக்கு உங்களுக்கு போன் குடுக்கறேன் ஜோ. இப்போ நீங்க ஆட்டோ பிடிச்சு போங்க. ப்ளீஸ்” என்றதும் அவள் சரி என தலையாட்டினாள்.

அதன்படி அவள் கிளம்பும் வரை பொறுமையாக இருந்தவன் பின் ஆதவனிடம் படபடவென பேச ஆரம்பித்தான்.

“ஆது இத பண்ணது எனக்கு யாருன்னு தெரியும்”

“என்னடா சொல்ற?”

“ஷியாம் வேல தான் இது. எனக்கு மெஸேஜ் பண்ணிருக்கான்” என்று காட்ட ஆதவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“டேய் அவன கொல பண்ணனும்டா. என்னடா நினச்சிட்டு இருக்கான்?”

“ஆது நம்ம இங்க லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் ஜோஸ்வினிக்கு தான் டேஞ்சர். இன்னைக்கு அவனுங்கள ஃபினிஷ் பண்றேன். என் ஜோ கிட்ட அவனுங்க விளையாடறாங்களா?” என்று கை முஷ்டி இறுக கண்களில் ரௌத்ரத்துடன் சொன்னவனை பார்க்க ஆதவனுக்கே ஒரு நிமிடம் பயமாக இருந்தது.

இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பினர்.

காரில் போகும் போது 

“இது ஜோஸ்வினிக்கு தெரிஞ்சா அவ துடிச்சு போய்டுவாளேடா”

“இத பத்தி அவளுக்கு தெரிய வேண்டாம். பட் ஒன் திங்க்… நான் இங்கிருந்து நெக்ஸ்ட் டைம் ஃப்ரான்ஸ் போறப்ப அவ ஜோஸ்வினி அபிஷேக்கா தான் என் கூட வருவா. காட் இட்?” என தீவிரமான குரலில் அபிஷேக் சொன்னதும் ஆதவன் அவனை நம்ப இயலாமல் பார்த்தான்.

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page