அத்தியாயம் 15

ஆதவன் அடுத்த முறை தான் ப்ரான்ஸ் செல்லும்போது ஜோஸ்வினி அபிஷேக்கா தான் அவன் கூட வருவாள்னு சொன்னதும் நம்ப முடியாமல் அபிஷேக்கை பார்த்தான்.

“அபிஷேக்”

“நீ ஜோஸ்வினிய பத்தி கவலப்படாத. உனக்கு ஷியாம் வீடு தெரியுமா?”

“எனக்கு தெரியாதேடா”

“ஷிட். நான் விவேக்க எப்படி மறந்தேன்?” என்று தன்னை கடிந்து கொண்டவன் விவேக்கிற்கு போன் செய்தான்.

“விவேக் ஒரு எமர்ஜென்சி. ஐ வான்ட் யுவர் ஹெல்ப். நான் உங்க ஹவுஸ்கிட்ட வரேன். வெயிட் பண்றீங்களா?”

“ஷ்யூர்ணா. நீங்க வாங்க” என்றதும் கட் செய்தான்.

“அபி நீ இத்தன நாளா எங்கே இருந்த?”

“பாண்டிச்சேரில”

“பொய் சொல்லாதடா. நான் டூ டேஸ் முன்னாடி உன்ன சிக்னல்ல பாத்தேன். உன்ன ஃபாலோ பண்ணி வந்தேன். நீ சென்னையிலேயே இருந்துட்டு ஏன்டா பாண்டிச்சேரி போனேனு பொய் சொன்ன?” என்று கேட்டவனை அபிஷேக் அமைதியாக பார்த்தான்.

“நான் நீ கேக்கற குவஸ்டினுக்கு பதில் சொல்றேன். பட் இந்த இஷ்யூ முதல்ல முடியட்டும். அது வரையும் நீ என்ன எந்த கேள்வியும் கேக்காத” என்றவன் சொல்ல அபிஷேக்கை முறைத்து பார்த்தான் ஆதவன்.

சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது.

அபிஷேக் செல்போன் அடிக்க அதை எடுத்து பேசினான். விவேக் தான் சொன்ன இடத்திற்கு வந்து விட்டதாக சொன்னான்.

அவனை அந்த இடத்தில் பிக் அப் செய்த அபிஷேக்கிடம் என்ன என்று கேட்க இருவரும் நடந்ததை சொன்னார்கள்.

“ண்ணா என்ன சொல்றீங்க? ஷியாமா இப்படி? அன்னைக்கு அப்படி உருகி பேசினான்” என அதிர்ச்சியில் உறைந்தான்.

பின் சிறிது யோசித்தவன்

“இதெல்லாம் அந்த ருத்ரனோட வேலையா இருக்கும். அவனோட சேந்து தான் இவன் இப்படி இருக்கான்”

“அவனுங்க இப்போ எங்க இருப்பாங்க?” என்று சிறிது யோசித்தவன்

“நீ அவங்க வீட்டுக்கு வழிய சொல்லு” என்றவன் நேராக ஷியாம் வீட்டை நோக்கி செலுத்தினான்.

ஷியாம் வீடு பணத்தில் கொழுத்த வீடாக இருந்தது. இவர்களை பார்த்ததும் முதலில் உள்ளே நுழைய வாட்ச்மேன் விடவில்லை. அவர்களை விசாரித்து கொண்டிருந்தான்.

அவனுக்கு விவேக் பதில் சொல்லி கொண்டிருந்தான். ஏற்கனவே கொலை வெறியில் இருந்த அபிஷேக் அவனது வீட்டு ஜன்னலை நோக்கி கல்லை வீசினான்.

அதை பார்த்து கோபமான வாட்ச்மேன் அவனை அடிக்க வந்தான். அவனை ஒரே அடியில் கீழே வீழ்த்தியவன் அவனது வீட்டை நோக்கி சென்றான்.

இவர்கள் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ஷியாமின் அப்பா

“யார் மேன் நீங்க?  வீட்டுக்கு கலாட்டா பண்ண வந்திருக்கீங்களா? போலீஸ கூப்பிடட்டுமா?” என்று மிரட்டினார்.

“கூப்பிடுடா போலீஸ. பிள்ளையாடா வளத்து வச்சிருக்க? சரியான சாடிஸ்ட்” என்று கத்தியவன் அவனை அடிக்க பாய்ந்தான்.

ஆதவன் தான் இவனது செய்கையில் மொத்தமாக அதிர்ந்து நின்று விட்டான்.

அதிர்ந்து கூட பேசாதவன் இன்று யாரை பார்த்தாலும் அடிக்க கூடிய நிலைமையில் இருந்தான்.

இவர்களது சத்தம் கேட்டு வந்த ஷியாமின் அம்மாவும், ஷியாமும் அதிர்ந்து போய் நின்றனர். ஷியாமின் அம்மா பயத்தில் கத்த ஆரம்பித்தார்.

“ஏய்… என்ன பண்றீங்க?. டேய் கைய எடுங்கடா” 

திடீரென்று தன் வீட்டில் இவர்கள் மூவரையும் பார்த்த ஷியாம் அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.

“டேய் என்னடா எனக்கு லிங்க் அனுப்பிட்டு இங்க ஹாயா இருக்கிறயா? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் ஜோவ கேவலப்படுத்தற மாதிரி பண்ணுவ? நீ பண்ணதுக்கு பேரு லவ்வாடா?” என்று கத்தியவன் ஷியாமை சராமரியாக அடிக்க ஆரம்பித்தான்.

அவனோடு கூட சேர்ந்து ஆதவனும் அடிக்க அந்த இடமே கலவரமானது.

அவனை தனது ஆத்திரம் தீரும் வரை அடித்தவன் கையோடு அவனை தரதரவென இழுத்து சென்றான். யாராலும் அவனை தடுக்க முடியவில்லை.

அவனை தனது வண்டியில் ஏற்றியவன் நேராக ருத்ரன் வீட்டை நோக்கி சென்றான்.

“ருத்ரன்” என ஆக்ரோஷமாக கத்தினான்.

“யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்? துருவ்வ ஏன் கேக்கறீங்க?” என்று ஒரு வயதானவர் கேட்டுக் கொண்டிருக்கையில் அங்கே ருத்ரன் வந்து நின்றான்.

“என்ன தாத்தா? யார் வந்திருக்கா?”

“யார்னே தெரில. உன் பேர சொல்லி…” என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ருத்ரனை பார்த்தவன் அவர் கண் முன்னே அடிக்க ஆரம்பித்தான்.

இவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த ருத்ரனின் பெற்றோர்கள் பதறி போய் அவனை தடுத்தனர்.

“டேய் நிறுத்துடா. என் வீட்டுக்கே வந்து என் பையன அடிக்கறயா?”

“உன் பையன் பண்ணி இருக்கற வேலைக்கு சுட்டு கொல்லணும்டா. ஏன்டா உனக்கு அம்மா இல்ல? நீ சிஸ்டர்ஸ் கூட பொறக்கல? பாஸ்டர்ட்”

“ஒரு பொண்ணுக்கு ஆபாசமா மெஸேஜ் வர மாதிரி பண்ணிட்டு இப்போ என்னடா ஒண்ணும் தெரியாத மாதிரி முழிக்கற? நீ டார்ச்சர் பண்ணா அவ ஃபீல் பண்ணிடுவாளாடா? என் ஜோஸ்வினிய எப்டி பாதுகாக்கணும்னு எனக்கு தெரியும்” என்று உறுமியவன் அவனை உயிர் போகும் வரை அடித்தான்.

“இனி யாராவது அவள டார்ச்சர் பண்ண நினச்சீங்கனா நெக்ஸ்ட் ஹெல் தான். சோ பீ கேர்ஃபுல்” என்று மிரட்டியவன் ஷியாமையும் அங்கே விட்டு விட்டு வந்தவன் உடனடியாக தனது ஃபிரான்ஸ் நண்பனுக்கு போன் செய்து நடந்ததை சொல்லி உதவி கேட்டான்.

அவன் சொல்ல சொல்ல இங்கே தனது லேப்பில் இருந்து அனைத்தையும் செய்து முடித்தவன் அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அபிஷேக்கிற்கு வீட்டிற்கு வரும் வரையும் கூட பொறுமை இருக்கவில்லை. ருத்ரன் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றவன் ஒரு ஓரமாக தனது நண்பனுக்கு அழைத்து இந்த பிரச்சினையை முடித்தவன் ஆயாசமாக கண் மூடினான்.

அபிஷேக்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனித்து வந்த ஆதவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

“அபி நீ ஜோவ லவ் பண்றியாடா?” என்று கேட்டதும் அவனை கண் திறந்து பார்த்தவன் ஆம் என தலையாட்டினான்.

“ஏன்டா இத்தன நாள் என்கிட்ட இந்த விஷயத்தை மறச்ச?” என்று கேட்டதும் விரக்தியாக சிரித்தான்.

“நான் உன் வீட்ல தான் ஸ்டே பண்றேன். அவ உனக்கு சிஸ்டர் வேற. உன் சிஸ்டரையே நான் லவ் பண்ணுவேனு எப்டி சொல்வேன்?” என்றவன் எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஏன்டா சிரிக்கற?”

“நான் என் லவ் ரியலைஸ் பண்ணத நினச்சேன்டா. அவ ஒருத்தன லவ் பண்றானு தெரிஞ்சப்ப தான் நான் என் லவ்வ ஃபீல் பண்ணேன். என் லவ்வ அவகிட்டயே சொல்ல முடியாத சிட்சுவேஷன்ல உன்கிட்ட எப்படிடா சொல்லுவேன்?”

“எங்கயோ ஒரு மூலைல நாங்க சேர மாட்டோமானு ஒரு நப்பாசை இருந்தது. பட் ஷியாம் லாஸ்ட் வீக் அத சுக்கு நூறா உடைச்சிட்டான். உங்க யாரையும் ஃபேஸ் பண்ண முடியாம தான் ஓடி ஒளிஞ்சேன். ஆனா அவன்…” என்று கையை மடக்கி கோபத்தை அடக்கியவன்

“என்ன தைரியம் இருந்தா அப்டி பண்ண நினச்சிருப்பான்? இதுக்கு உங்க ஊர்ல லவ்வாடா?” என்று தன்னை மீறி உணர்ச்சி வசப்பட்டவனை ஆதவன் அணைத்து கொண்டான்.

“ஷியாமால ஜோஸ்வினி ஃபீல் பண்ணப்ப என்னால பாக்க முடியலடா. அதான் அவங்க கூடவே டைம் ஸ்பென்ட் பண்ண நினச்சேன். ஆனா அத உங்க வீட்ல இருந்தே பண்றதுக்கு எனக்கு கில்ட்டியா இருந்தது. அட் த சேம் டைம் உங்கிட்ட ஓப்பனா சொல்ல முடில. அதான் ரெஸ்ட்டாரன்ட்டிலயே ஸ்டே பண்றதா சொன்னேன்” என்று தவிப்பான குரலில் சொன்னான்.

“எனக்கு கொஞ்ச நாளா இந்த டவுட் இருந்ததுடா.  நீ சொல்லாம போனப்போ உன் மேல கோபம் வந்தது. பட் ஆம் ரியலி சாரிடா. உன் கூடவே இருந்தும் நான் உன்ன ஒழுங்கா கவனிக்காம விட்டுட்டேன்” என்று ஆதவன் ரொம்பவே வருத்தப்பட்டான்.

“நீ எதுக்குடா ஃபீல் பண்ற? உண்மையிலையே ஜோஸ்வினி ரியலி லக்கி. உன்ன மாதிரி ஒருத்தன் கிடைக்கறதுக்கு” என்று ஆதவன் உணர்ந்து சொன்னான்.

“நானா? ஜோஸ்வினியா? நான் லவ் பண்ணி என்ன பண்றது? அவங்களுக்கு பிடிச்சா தான்டா அத பத்தி யோசிக்க முடியும்” என்று ஏக்கமான குரலில் சொன்னான்.

“நான் தான்டா அன்லக்கி. அவங்கள லவ் பண்றேனும் சொல்ல முடில. இப்போ ஷியாம் பண்ணத கூட என்னால ஓப்பனா சொல்ல முடில. முன்னாடியே அலர்ட் பண்ண டிரை பண்ணேன்டா. பட் பெருசா சேத்து வைக்கறதுக்கு டிராமா போட்ட நானே அவன பத்தி நெகட்டிவா சொன்னா அவங்க என்ன நினைப்பாங்கனு பயம். ச்சே… என்னடா இது லவ்?”

“லவ் வந்தா சந்தோஷமா இருப்பாங்கனு நினச்சேன். ஆனா ஏன்டா இந்த லவ் வந்ததுனு இருக்குடா. என்னால முடியலடா. உண்மையிலேயே அவ ஷியாம மேரேஜ் பண்ணிப்பாளாடா? இத்தன நாளா எப்படியோ… பட் இப்படி இவன் பண்ணது பாத்தும் நான் எப்டிடா சைலண்ட்டா இருப்பேன்?” என்று தன்னை மீறி புலம்பினான்.

“டோன்ட் வொர்ரி அபி. உன்னோட லவ் உண்மைனா ஜோ உன்கிட்ட கண்டிப்பா வருவா. நான் இருக்கேன்டா உனக்கு” என்றவன் அபியை அணைத்து அவனை தேற்றினான்.

“இந்த மேட்டர் ஏதும் ஜோஸ்வினி ஃபேமிலிக்கு தெரிய வேணாம்டா. வீணா அவங்கள டென்ஷன் பண்ண வேணாம்” என்று அபிஷேக் ஜோஸ்வினியை நினைத்து சொல்ல அதுவே அவனுக்கு எதிராக அமைந்தது.

அன்று இரவு அபிஷேக்குடன் நிறைய பேசிய ஆதவன் அவனுடனே படுத்து கொண்டான்.

அடுத்த நாள் வழக்கம் போல அபிஷேக் தனது வேலையை பார்த்து கொண்டிருக்க ஜோஸ்வினி காலையிலேயே வந்தவள் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

அவளை அவ்வளவு காலையில் எதிர்பாராதவன் ஆச்சரியமாக அவளை பார்க்க அவளோ வந்தவுடன் அறைந்ததில் திகைத்து போய் அவனை பார்த்தான்.

“ஏன்டா உனக்கு பேரண்ட்ஸ் ஞாபகம் வந்தா அத கூட எங்ககிட்ட ஷேர் பண்ண மாட்டியா? அப்டி என்னடா உனக்கு அவ்வளவு அழுத்தம்? யார்கிட்டயும் எதும் சொல்லாம?”

“அ… அது அப்படி எதும் இல்லங்க ஜோ”

“நேத்து என்னவோ பெரிய இவனாட்டம் என்கிட்ட பேசாம கூட போனா? என்ன கூட உன்னால அவாய்ட் பண்ண முடியும்னு நேத்து தான் தெரிஞ்சிகிட்டேன்” என அவள் கண்களில் வலியுடன் சொன்னதும் அதில் அவன் துடிதுடித்து போனான்.

அவளை அணைத்து ஆறுதல் சொல்ல உள்ளம் பரபரத்தது. ஆனால்  எதுவுமே செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான்.

“ஜோ ப்ளீஸ் லிஷன்”

“பேசாதடா. உனக்கெல்லாம் நான் யாரோ தானே? நீ இன்னொரு டைம் இப்டி காணாம போ… திரும்ப நீ வரப்ப நான் இருக்க மாட்டேன்” என்று இன்னும் அவள் கோபம் குறையாமல் சொல்ல அவன் பதறி போய் அவளை அணைத்தான்.

“என் செர்ரி நான் இருக்கறப்போ இப்டி போசலாமா?” என்று ஆரம்பித்தவன் பின் சுதாரித்து “என்ன பேசறனு புரிஞ்சுதான் பேசறீங்களா ஜோ?” என்று தவிப்புடன் கேட்டான்.

“என்னோட பெஸ்ட்டி நீ. இவ்ளோ நாளா உன் கூடவே இருக்கேன். உன் பிரச்சனைய நீ சொல்ல மாட்டேங்கற. இனி ஏதாவது மறச்சு பாரு. அப்றம் இருக்கு உனக்கு” என்றவள் திரும்பவும் அறைந்தாள்.

“இப்போ ஏன் அடிச்சிங்க ஜோஸ்வினி?” என அவன் கன்னத்தில் கை வைத்து கொண்டு பாவமாக கேட்க அவளுக்கு சிரிப்பு வந்தது. 

“இன்னொரு டைம் நீ இது மாதிரி பண்ண கூடாதுனு உனக்கு ஞாபகப்படுத்த” என்று கெத்தாக சொன்னாள்.

“ஆனாலும் இது அநியாயங்க ஜோஸ்வினி. ஒரு அப்பாவி பையன போட்டு இப்படி அடிப்பீங்க?”

“நீ அப்பாவியாடா? அடப்பாவிடா நீ. நேத்து என்ன எவ்ளோ கோபமா பாத்த?” என்றதும் ஈஈ என இளித்தான்.

“அய்ய… சகிக்கல. என்கிட்ட பேசாதடா” என்று அவள் இன்னமும் முறுக்கினாள்.

இப்படியே இவர்களது சம்பாஷணை நீண்டு கொண்டே போனது. எப்படி எப்படியோ கெஞ்சி ஜோஸ்வினியை கொஞ்சம் கொஞ்சமாக பேசி சமாதானம் செய்தான்.

இடையில் அபிஷேக் காணாமல் போனதில் ஜோஸ்வினி அவனை ரொம்பவே  தேடினாள். அவனை பற்றி ஆதவன் சொன்னது வேறு அவளை குற்ற உணர்வில் குறுகுறுக்க வைத்தது. அதற்கெல்லாம் ஈடுகட்டுவது போல தன்னுடைய மற்ற நேரங்கள் போக மீதி நேரங்களை போனிலோ, நேரிலோ அவனோடே இருந்தாள்.

இடையில் அவளுக்கு அவ்வப்போது ஷியாம் ஞாபகமும் வரும். அன்றைக்கு அவ்வாறு உருகி பேசியவன் அதன் பிறகு ஏன் கால் செய்யவில்லை என தெரியாது குழம்பினாள்.

அதை அபிஷேக்கிடமும் கூறினாள். அப்போதெல்லாம் அபிஷேக் மழுப்பலாக ஏதோவொன்று கூறி சமாளித்தான்.

ஏறக்குறைய பத்து நாட்கள் சென்ற நிலையில் ஷ்யாம் ஜோஸ்வினிக்கு போன் செய்தான்.

அப்போது அவள் அபிஷேக்கின் ரெஸ்ட்டாரன்ட்டில் தான் இருந்தாள்.

“ஹலோ”

“ஜோஸ்வினி நான் ஷியாம் பேசறேன்”

“எங்க இவ்ளோ நாளா காணாம போன? அன்னைக்கு என்னவோ அவ்ளோ உருகி பேசினே. நான் கூட உன்ன நம்பினேன். அப்றம் எங்கடா எஸ்கேப் ஆன? எல்லாம் பொய் தானே?”

“இல்ல ஜோ. நான் அன்னைக்கு உண்மைய தான் ஜோ சொன்னேன். என்ன நம்பு ஜோ. நான் இப்போ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்கேன்”

“ஹாஸ்பிட்டலயா? ஏன்? என்னாச்சு உனக்கு?” என்று பதறி போய் கேட்டாள்.

“விடு ஜோ. சொன்னா மட்டும் நீ நம்பவா போற?”

“என்னனு சொல்லுடா?”

“அபிஷேக் என்ன அடிச்சுட்டான்”

“என்ன?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

“பாத்தியா?. நான் சொன்னத நீ நம்பல?”

“பொய் சொன்னா எப்டி நம்பறது? அவன் அன்னைக்கு நீ வம்பிழுத்தப்பவே அவ்ளோ அமைதியா இருந்தான். உன்ன அடிச்சானு என்ன நம்ப சொல்றியா?”

“ப்ளீஸ் நம்பு ஜோ. அதெப்படி நீ அவளுக்காக ஃபிப்டி இயர்ஸ் வெயிட் பண்ணலாம்னு சொல்லலாம்? அவ என்னோட லவ்வர். அவள யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன். இதுக்கு மேல இப்டி நடந்தது உன்ன நான் கொல பண்ணிடுவேனு சொன்னான் ஜோ”

“அவன் அடிச்சதுல ரெண்டு ஆப்பரேஷன் பண்ணி இப்போ தான் நான் பேசற வெலலுக்கு வந்திருக்கேன்” என்றவன் சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டதும் தன் காதுகளை நம்ப முடியாமல் போனையே வெறித்து பார்த்தாள்.

அவளை கவனித்த அபிஷேக்

“என்னாச்சுங்க ஜோ?” என்று வினவினான்.

அவன் கேட்டதற்கு பதில் கூற முடியாமல்  அபிஷேக்கையே சிலை போல் பார்த்தபடி வாயடைத்து போய் அமர்ந்திருந்தாள் ஜோஸ்வினி.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page