அத்தியாயம் 17

 

எதுவோ துரத்துவது போல அங்கிருந்து வெளியேறியவள் எப்படி தன் வீட்டை அடைந்தாள் என்று புரியவில்லை.

அபிஷேக்கை தான் ஏன் அடிக்காமல் விட்டோம் என்று தவித்தாள்.

அவளுக்கு தன்னை நினைத்தே கழிவிரக்கமாக இருந்தது.

நண்பனாக இருந்தவன் திடீரென்று இப்படி மாறியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

அவள் அபிஷேக்கை நினைத்து ஒவ்வொரு கனமும் டென்ஷனாக இருந்தாள்.

அதே சமயம் ஷியாமை என்ன செய்தானோ என்ற பயமும், வெறுப்பும் அவன் மீது இருந்தது.

அவன் சொன்னது வேறு அவளுக்கு ஞாபகம் வந்து மிரட்சியை ஏற்படுத்தியது. எப்போது என்ன செய்வானோ என அரண்டு போனாள்.

அன்று அவன் நடக்காதது எதையும் நினைத்து பார்த்ததில்லை என்று சொன்னதில் இருந்து அபிஷேக்கின் அழுத்தமான குரல் அவளது காதில் ஒலித்து கொண்டே இருந்தது.

அந்த குரல் ஷியாமுக்கு என்ன ஆனதோ என அவளுக்கு பீதியை உண்டாக்கியது.

அவள் அப்போதிருந்து ஷியாமுக்கு முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அவனிடம் பேச முடியவில்லை.

ரேஷ்மி மூலமாக முயன்று பார்த்தாள். அப்போது தான் ருத்ரனும் காணாமல் போனது தெரிந்தது. அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

என்ன தான் இவன் மனதில் இருக்கிறது என தெரியாமல் குழம்பினாள். அவளுக்கு தெரிந்த மற்ற நண்பர்களிடமும் விசாரித்து பார்த்தாள். ஆனால் பலன் பூஜ்யம்.

இறுதியில் ஏதேதோ யோசித்தவள் வேறு வழியில்லாமல் அபிஷேக்கை சந்தித்தால் ஏதேனும் தெரியலாமென அவனை பார்க்க சென்றாள்.

அவனோ தனது கிச்சனில் அப்போது சமைத்து கொண்டிருந்தான்.

அவள் அபிஷேக்கை பற்றி விசாரிக்க ஒரு மணி நேரம் காத்திருக்க சொல்லியவன் வேலை முடிந்தவுடன் தான் வந்தான்.

அவனோ எதிர்பாராமல் ஜோஸ்வினியை பார்த்த சந்தோஷத்தில் புன்னகையுடனே அவளை வரவேற்றான்.

“வாங்க ஜோஸ்வினி… வாட் எ சர்ப்ரைஸ்?”

அவளோ அதை சற்றும் காதில் வாங்காமல்

“ஷியாம் எங்க?” என கேட்டாள்.

அதை கேட்டவுடன் அவனது சிரிப்பு அப்படியே நின்றது.

“என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்?”

“இல்ல. நீ தான் ஏதோ பண்ணிருக்க”

“நான் என்ன பண்ணேன்?” என அவன் திரும்பி கேட்டான்.

“ஜஸ்ட் ஷட் அப் அபி. ஷியாம் எங்க?” என்றவள் அதட்டினாள்.

“கண்டிப்பா தெரியணுமா?”

“ஆமா”

“உன் ஃபிரண்ட்ஸ் கிட்ட கேட்டு பாரு”

“டோன்ட் ஆக்ட் அபி. ஐ வான்ட் ட்ரூத்”

“யா. அத தான் நானும் சொல்ல வரேன். ஐ வான்ட் ட்ரூத் அபவுட் திஸ் மேரேஜ். சோ இனி நீ ஷியாம மனசால கூட நினைக்க கூடாது”

“வாட்?. ஹவ் டேர் யூ டெல் லைக் திஸ்?” என்று அறைய வந்தவளை கை பிடித்து தடுத்தவன் அவளை அப்படியே இறுக்கி கொண்டான். இதனை எதிர்பாராதவள் அதிர்ந்து போய் நின்றாள்.

“செர்ரி”

“ம்ம்”

“இனி‌ இந்த கண்ணு என்ன‌ மட்டும் தான் பாக்கணும். இந்த உதடு என்ன பத்தி மட்டும் தான் பேசணும். இந்த ஹார்ட் லவ் யூ அபினு தான் துடிக்கணும்” என்று கிசுகிசுவென சொன்னான்.

அவனது அருகாமையில் திகைத்து நின்றவள் அவனது லவ் யூ வில் ஆக்ரோஷமாய் அவனை தள்ளி விட்டாள்.

“அது ஜென்மத்துக்கும் நடக்காது”

“நடக்கும். நடக்க வெப்பேன்”

“லவ் என்ன கடைல வாங்கற திங்க்ஸ்னு நினச்சிட்டியா? நீ நினச்சவுடனே வரதுக்கு. உன் மேல இப்போ எனக்கு வெறுப்பு தான் இருக்கு. சோ நீ என்ன நினைச்சாலும் என்ன மாத்த முடியாது” என்று சொன்னதும் அவன் புன்னகைத்தான்.

“இதில சிரிக்க என்ன இருக்கு?”

“கூல் மை செர்ரி. வெறுப்புக்கும், விருப்பத்துக்கும் நூலிழை அளவு தான் டிஃப்ரன்ட். அத எப்படி லவ்வா மாத்தணும்னு எனக்கு தெரியும்” என்று அமர்த்தலான குரலில் கூறினான்.

“யூ… இடியட்”

“அப்டியா… இடியட் என்ன பண்ணுவானு தெரியுமா?” என்றவன் அருகில் நெருங்கி வந்தான்.

ஏற்கனவே தன்னுடைய சூழ்நிலையை எண்ணி பயந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அபிஷேக் அருகில் வரவும் அந்த சமயத்தில் தான் நிர்க்கதியாக நிற்பது போல ஜோஸ்வினிக்கு தோன்றியது.

தனது அநாதரவான நிலைமை எண்ணியவளுக்கு அவளறியாமல் அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

ஷியாம் அவள் அருகில் வந்தவன் அவளுடைய கண்ணீர் முகத்தை பார்த்து திடுக்கிட்டான். அதை பார்த்தவனின் மனமோ பதறியது. அவளை அணைத்து நான் உனக்கு இருக்கிறேன் என்று சொல்ல மனம் துடித்தது.

ஆனால் தான் நெருங்கியதால் மட்டுமே இவள் கண்ணீர் சிந்துகிறாள் என புரிந்து கொண்டவன்

“ஜோஸ்வினி” என்று ஆழ்ந்த குரலில் கூப்பிட்டான்.

அவள் திடுக்கிட்டு போய் அவனை பார்த்தாள்.

“உன்னோட சம்மதம் இல்லாம நமக்குள்ள எதும் நடக்காது. நீ தாராளமா என்ன நம்பலாம்” என்று கனிவாக சொன்னவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“ட்ரஸ்ட் மீ ஜோஸ்வினி. பட் உன்னையே விட்டு தர அளவுக்கு நான் நல்லவன் கிடையாது. இப்போ நீ போகலாம்” என்றவன் கை காட்ட எதிலிருந்தோ தப்பிப்பது போல அங்கிருந்து ஓடினாள்.

அவள் செல்வதையே சிலை போல பெருமூச்சுடன் பார்த்து கொண்டிருந்தான் அபிஷேக்.

           ‌   *****

வீட்டுக்கு வந்த ஜோஸ்வினிக்கு தான் என்ன முயன்றாலும் கல்யாணத்தை நிறுத்த முடியாது என புரிந்தது.

சமீப காலமாக அபிஷேக்கின் அவதாரம் அவளை பயமுறுத்தியது.

இவன் அவள் நண்பனாக பழகிய அபிஷேக் இல்லை. எப்போதும் இறுக்கமாகவே இருந்தான்.  அவனிடம் மனம் விட்டு கூட பேச முடியவில்லை.

ஏதேதோ யோசித்தவள் கல்யாணத்தன்று மண்டபத்தை விட்டு போய் விடலாமா என தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவள் யோசித்து கொண்டிருக்கும் போது அபிஷேக் அழைத்தான்.

“ஹலோ”

“என்ன பண்றீங்க ஜோஸ்வினி?”

“நான் என்ன பண்ணா உனக்கென்ன?”

“ரொம்ப யோசிக்கறயோ? ஆனா அதுக்கு யோசிக்க ப்ரைன் வேணுமே?”

“டேய்”

“ரொம்ப மூளைய டேமேஜ் பண்ணாத செர்ரி. நீ என்ன நினைச்சாலும் மேரேஜ நிறுத்த முடியாது” என்ற அவனது இறுக்கமான குரலில் ஜோஸ் வினியின் முதுகு தண்டு சில்லிட்டது.

“இ… இல்லையே. நான் அப்படி ஒண்ணும் நினைக்கலையே” என அவள் தயங்கிய குரலில் சொன்னாள்.

“எனிவே… நீ என்ன நினைச்சாலும் ஒண்ணும் நடக்காது”

“நாளைக்கு உன்னோட இன்லாஸ் வருவாங்க. அவங்கள பாக்க ரெடியா இரு”

“எனக்கு யாரையும் பாக்க வேண்டாம்”

“ஷியாம் எங்க இருக்கானு தெரியணும்னா நாளைக்கு என் பேரண்ட்ஸ பாக்க ரெடியா இரு” என்றவன் போனை கட் செய்தான்.

ஜோஸ்வினியிடம் பேசி முடித்ததும் அவளை பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.

நாளைக்கு இவள் தனது பெற்றோரிடம் ஏதாவது வம்பு செய்வாளோ என அவன் பயப்பட்டான்.

அவளை பற்றி யோசித்தவனுக்கு ஷியாம் ஞாபகம் வந்தது. முகம் இறுக போனை எடுத்து சிறிது நேரம் பேசியவன் ரிலாக்ஸாக கண் மூடி அமர்ந்தான்.

அவனுக்கு தனது பெற்றோரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

தான் ஜோஸ்வினியை காதலிப்பதாக சொல்லியவன் அவளை உடனே கல்யாணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறினான். அவளது மேற்படிப்பை காரணம் காட்டி.

அவர்களிடம் அவன் உண்மையான பிரச்சனையை கூறவில்லை. ஜோஸ்வினியை யாரிடமும் விட்டு தர முடியவில்லை‌.

அவன் சொன்னவுடன் உடனே சரி என்று சம்மதித்தவர்கள் ஜோஸ்வினியின் பெற்றோரிடம் வீடியோ காலில் பேசினார்கள்.

அவர்களுக்கும் பிடித்து விட்டது. அபிஷேக் திடீரென்று சொன்னதால் அங்கிருக்கும் வேலைகளை முடித்து விட்டு இரண்டு வாரத்தில் வந்து விடுவதாக சொன்னார்கள்.

எப்படியோ எல்லாரையும் தனக்கு சாதகமாக செய்ய வைத்தாலும் ஜோஸ்வினியை ஒவ்வொரு முறையும் தான் மிரட்டுகிறோம் என்று குற்றவுணர்வு தோன்றி அவனை உறுத்தியது. ஆனால் அவனுக்கு இப்போது எந்த ஆப்ஷனும் இல்லை.

அன்றைக்கு ஜோஸ்வினியின் கண்ணீரை பார்த்து கலங்கி போய் விட்டான்.

அந்த நிமிடத்தில் இருந்து அவளை எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என அவன் உறுதி எடுத்தான். ஆனால் அது ஜோஸ்வினியிடம் நடக்குமா என்று தான் தெரியவில்லை.

                                    *****

அடுத்த நாள் அபிஷேக்கின் பெற்றோர்கள் ஜோஸ்வினியை பார்க்க வந்தனர்.

ஏஞ்சலின் தமிழும், ஃபிரெஞ்சும் கலந்து பேசி கொண்டிருந்தார். அவர் பேசுவது அரைகுறையாக பாலகிருஷ்ணன் நிறைய நாட்கள் கழித்து இந்தியா வந்த பூரிப்பில் ஒவ்வொன்றையும் ரசித்தார்.

ஏஞ்சலின் ஆர்வமாக அவளிடம் பேசினார். ஜோஸ்வினி தான் பாஷை தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள். அதை பார்த்து கொண்டிருந்த அபிஷேக்கிற்கு சிரிப்பு வந்தது. தான் இதற்காகவா பயந்தோம் என்று.

“உன் பேர் என்ன பேபி?”

“ஜோஸ்வினி”

“உன்ன போலவே உன் பேரும் அழகு” என்று நெற்றியில் முத்தமிட்டார்.

“என்ன ஸ்டடி பண்ற?”

“இன்ஜீனியரிங்”

பிறகு அவளை பற்றி நிறைய விசாரித்தார். அபிஷேக் இடையில் புகுந்து விளக்கம் குடுக்க ஜோஸ்வினி பதில் சொன்னாள்.

“உனக்கு அபிய பிடிக்குமா?” என்று பிரஞ்சு மொழியில் அவர் கேட்க அவள் என்னவென்று புரியவில்லை எனினும் அவள் உடனே தலையாட்ட அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அவங்க என்ன சொன்னாங்கனு புரிஞ்சுதா?”

“உன்ன என் ஃபிரண்டானு தானே கேட்டாங்க. நான் ஆமானு சொன்னேன்” என்றவளை விசித்திரமாக பார்த்தவன் அவளை பார்த்து சிரித்தபடியே சென்றான்.

அதை பார்த்த அவளுக்கு சந்தேகம் வந்தது.

‘ஓ… காட்… இவன் பார்வையே சரியில்லயே. ஒவ்வொண்ணா இவன் சொல்லி நமக்கு தெரியணுமானு எரிச்சல் தலையாட்டிட்டேன். இப்போ இவன் ஒரு மார்க்கமாவே இருக்கான்’

‘ஒழுங்கா ஃபிரன்ச் கிளாஸ் போக விட்ருந்தா பரவால்ல. இங்க இவன் பண்றதுல நாம மென்டல் ஆகவே டைம் சரியா இருக்கு’ என்றவள் அப்படியே அமைதியாகி போனாள்.

ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் அவர்கள் விடை பெறும் வரை வாயே திறக்கவில்லை. அபிஷேக் மற்றவர்களிடம் பேசினாலும் ஜோஸ்வினியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து கொண்டிருந்தான்.

அடுத்த இரு வாரங்களில் திருமணத்தை எளிதாக முடித்தனர். அபிஷேக்கிற்கு காரைக்குடி முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் ஜோஸ்வினியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதால் அவன் சிம்பிளாக கோயிலில் திருமணத்தை நடத்த வைத்தான்.

இவ்வாறு அவன் பல தடைகளை தாண்டி கல்யாணம் முடித்திருக்க முதலிரவும் வந்தது.

அவன் ஆவலோடு ஜோஸ்வினியின் வரவுக்காக காத்திருந்தான்.

அவளோ அழகு பதுமையாக வருவாள் என எதிர்பாத்திருந்தான். ஆனால் அவளோ வரவேயில்லை.

அபிஷேக் சென்னையில் வாங்கிய வீட்டில் அவர்கள் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவன் கல்யாணம் நிச்சயமானவுடன் இந்த வீட்டை வாங்கியிருந்தான்.

நேரம் செல்ல செல்ல அபிஷேக்கிற்கு பயமாகி போனது இவள் எங்கே சென்றாள் என. சத்தம் எழுப்பாமல் ஒவ்வொரு அறையாக அவன் சென்று பார்த்தான்.

எல்லா இடங்களை தேடியும் அவள் கிடைக்காது போக ரொம்பவே பயந்து போனவன் தோட்டத்தை நோக்கி சென்றான்.

அங்கே அவளை பார்த்ததும் அவன் வேகமாக ஓடியவன் அவள் இருந்த நிலையை பார்த்து விக்கித்து போய் நின்றான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page