அத்தியாயம் 18

 

திருமணம் முடிந்ததும் ஜோஸ்வினியின் பெற்றோர் அவளை அபிஷேக்கின் சென்னை வீட்டில் அழைத்துச் சென்றவர்கள் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு உடனே கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பியதை பார்த்ததும் தன்னையறியாமல் அழுதவள்  காயத்ரியை கட்டி பிடித்து கதறினாள்.

அதை பார்த்து பதறிய அபிஷேக் அவளை சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் ஜோஸ்வினியோ இருந்த கோபத்தில் அவனை உதறி விட்டு சென்றாள்.

இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.

அதனை பார்த்த அபிஷேக்கின் பாட்டி வள்ளியம்மாள் ஜோஸ்வினியை திட்டினார்.

“ஏ… பொண்ணே நில்லு” என்றவரை அமைதியாக பார்த்தாள்.

“என்ன நினச்சிட்டு இருக்க? கொஞ்சமாவது உன் புருஷன்னு நினப்பிருக்கா? இப்படியா எல்லாத்து முன்னாடியும் நடந்துக்கறது?”

“அவன் என் புருஷனும் இல்ல. நான் அவன் பொண்டாட்டியும் இல்ல. இவன நான் ஹஸ்பென்ட்டா ஏத்துக்க முடியாது. கழுத்துல கத்திய வெக்கிற மாதிரி கல்யாணம் பண்ணிருக்கான். நீங்க அவன கேக்காம என்ன திட்டறீங்க?”

“ஜோஸ்வினி உன்ன இப்டி தான் வளத்தேனா? பெரியவங்க கிட்ட மரியாதையா பேசு” என்று திட்டிய ரங்கராஜனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அபிஷேக்கை வெறுமையாக பார்த்தாள்.

அந்த பார்வை அவனை ஏதோ செய்தது. அவள் சொல்வது ஒரு விதத்தில் உண்மையாதலால் அபிஷேக் அமைதியாக இருந்தான்.

“கிரேனி அவங்கள ஏதும் சொல்லாதீங்க. அவங்க கொஞ்சம் மூட் அவுட்டா இருக்காங்க” என்று விட்டு கொடுக்காமல் பேசினான்.

அதற்கும் ஜோஸ்வினி அவரிடம் திட்டு வாங்கினாள்.

“பார்… என் பேரன் இப்போ கூட விட்டு குடுக்காம பேசறான். நீ எவ்ளோ திமிரா பேசற?” என்று வள்ளியம்மாள் அதற்கும் கத்தினார்.

“இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்றீங்க?” என்று எரிச்சலாக கேட்டாள்.

“முதல்ல மன்னிப்பு கேளு”

“கேக்க முடியாது”

“ஜோஸ்வினி”

“ச்சே…” என்றவள் அங்கிருந்து கோபமாக வெளியேறினாள்.

அபிஷேக் இவள் போவதை பார்த்தபடியே அமைதியாக தனது அறைக்கு சென்றான்.

ஆதவனுக்கு அபிஷேக்கை பார்க்க சங்கடமாக இருந்தது. அதனால் அவன் பின்னோடே அபிஷேக்கின் அறைக்கு சென்றான்.

அங்கே அபிஷேக் ஏதோ யோசனையில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான்.

“மச்சி டோன்ட் வொர்ரிடா. அவ தான் புரிஞ்சுக்காம பேசறானா நீயும் ஏன்டா ஃபீல் பண்ற?”

“அவ சொன்ன வேர்ட் உண்மை தான. அவள கிட்டத்தட்ட அப்டி தானே சம்மதிக்க வெச்சேன்”

“அப்போ உண்மைய சொல்லிடலாமா?”

“இல்லடா. அவ என்னோட லவ்வ புரிஞ்சு என்கிட்ட வரணும். இதப்பத்தி அவளுக்கு என்னைக்குமே தெரிய கூடாது”

“மச்சி புரிஞ்சு தான் பேசுறியா? அவ சும்மாவே உன்ன வச்சு செய்வா. இப்போ நீயே போய் தலைய குடுக்கறேனு சொல்ற?”

“ஆமாடா. அவ தெரிஞ்சா துடிச்சு போய்டுவாடா. அதுக்கு பதிலா அவ என்ன எவ்ளோ வேணா கஷ்டப்படுத்தட்டும்டா. ஆனா அவளுக்கு நான் தான். எனக்கு அவ தான். அவ பேபிடா. நான் அவள பாத்துக்கிறேன். நீ ஒண்ணும் தேவையில்லாம யோசிக்காத” என்று கூறியவனை வாயடைத்து போய் பார்த்தான்.

“உன்னோட லவ் சான்சே இல்ல மச்சி. ரியலி ஜோ ரொம்ப லக்கி. உன் லவ்வ பாக்கறப்போ நானும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குடா” என்று பிரமிப்பான குரலில் கூறியவனை பார்த்து அபிஷேக் சிரித்தான்.

“ஏன் மச்சி சிரிக்கிற?”

“நீயும் லவ் பண்ணு. அப்றம் உனக்கே புரியும்” என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“என்னடா பார்வை?”

“ரொம்ப முத்தி போச்சு”

“போடா. போ. அவ ரொம்ப நொந்து போய் இருக்கா. அவள சமாதானப்படுத்து” என்றவனை கட்டியணைத்து முத்தமிட்டான்.

“டேய்… ச்சே… என்னடா பண்ற? உன் ஆள தேடி போனா எனக்கு கிஸ் பண்ற? வெளியே போடா”

“ஏன்டா எவ்ளோ பாசமா கிஸ் பண்ணேன்? இப்படி சொல்ற?”

“டேய் எதுவும் பேசாத.‌ ஃபர்ஸ்ட் அவள போய் பாரு” என்று ஆதவனை ஜோஸ்வினி இருந்த அறைக்கு போக சொன்னான்.

ஆதவன் ஜோஸ்வினி இருந்த அறைக்குள் செல்ல அவளோ சோகமே வடிவாக உட்கார்ந்திருந்தாள்.

“ஜோஸ்வினி”

“ம்ம்”

“என்னடா ஆச்சு? ஏன் இப்படி டல்லா இருக்க?”

“உனக்கு ஏன்னு தெரியாது” என்று கோபமாக கேட்டாள்.

“ஜோ நான் சொல்றத கேளேன்”

“எப்படியும் நீ உன் ஃபிரண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. புதுசா என்ன சொல்ல போற?” என்றவளை பார்த்து பெருமூச்சு விட்டவன்

“இப்போ நான் உன்கிட்ட என் ஃபிரண்ட் பத்தி பேச போறதில்ல. ஆனா நாங்க உனக்கு நல்லது தான் நினப்போம்னு நம்பிக்கை இருக்கா?” என கேட்டான்.

அவள் ஆமென்று தலையாட்டினாள்.

“அப்படினா இதையே மைண்ட்ல வெச்சுட்டு அவன்கிட்ட சண்ட போடாம இரு” என்றவனை முறைத்தவள் அப்படியே யோசனையில் ஆழ்ந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்

“என்னாச்சு ஜோ?”

“அவன் என் ஃபிரண்ட்டா. அவன போய் ஹஸ்பெண்ட்டா? என்னால முடியலடா” என்று கலங்கிய குரலில் சொன்னாள்.

“எனக்கு புரியுது ஜோ. ஆனா இப்போ உன்னோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைமையில இருக்கேன்” என்றவனை யோசனையாக பார்த்தவள் திடீரென

“உனக்கு ஷியாம் பத்தி ஏதாவது தெரியுமா?” என கேட்டாள்.

அவளை முறைத்தவன்

“நீ இப்போ மிஸஸ். அபிஷேக். அது மட்டும் உன் மைன்ட்ல இருந்தா போதும்” என்று இறுகிய குரலில் கூறியவனை விசித்திரமாக பார்த்தாள்.

“ஏன் ஆது இவ்ளோ டென்ஷன் ஆகற? அவன் என் லவ்வர்டா”

“ஜோ உனக்கு மேரேஜ் ஆகிடுச்சு. அத ஞாபகம் வெச்சிட்டு பேசு”

“அவன் எங்கிருக்கானே தெரியல”

“இனி ஒரு வார்த்த பேசின நானே உன்ன அறஞ்சிடுவேன் ஜோஸ்வினி. ஏதோ ஃபீல் பண்ற, போய் சமாதானப்படுத்துனு அபி சொன்னானேனு வந்தா என்ன நீ இப்படி பிஹேவ் பண்ற?” என்று ஆதவன் கர்ஜித்ததும் ஜோஸ்வினிக்கு தூக்கி வாரி போட்டது.

எப்போதும் பாசமாக பேசுபவன், இன்று அவள் இன்னொரு வீட்டுக்கு செல்லும் போது கூட ஆறுதலாக பேசாமல் தன்னையே குற்றவாளியாக பேசவும் அவளால் அதை தாங்க முடியாமல் பொலபொலவென்று கண்ணீர் வந்தது.

அவளது கண்ணீரை பார்த்த பின் தான் திட்டியதை உணர்ந்தவன் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க அவளோ அங்கிருந்த தோட்டத்தில் தஞ்சமடைந்தாள்.

ஜோஸ்வினியின் பெற்றோரிடம் நடந்ததை சொன்ன ஆதவன் அவர்களை கூட்டி கொண்டு கிளம்பினான்.

ரங்கராஜனும், காயத்ரியும் அவளிடம் விடை பெற வர அவர்களை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தாள்.

அவளை கண்கள் கலங்க ஆறுதலாக தலை கோதியவர்

“எத பத்தியும் கவலைப்படாத டா. எல்லாம் நல்லதே நடக்கும்” என்றவர் அவளிடம் இருந்து விடைபெற்றார்.

அவர்கள் சென்றதும் ரொம்பவும் தனிமையாக உணர்ந்தாள். அங்கே யாரோடும் பேச பிடிக்கவுமில்லை.

                   *****

அபிஷேக் என்ன சொன்னானோ அதன் பிறகு யாரும் அவளை எதுவும் வற்புறுத்தவில்லை.

ஆனால் நடக்கும் முதலிரவு சடங்கையும் ஒரேயடியாக தடுத்து நிறுத்த மனம் வரவில்லை. ஏனெனில் தான் ஏதேனும் சொன்னால் தனது குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்து விடுமோ என அமைதி காத்தான்.

 தனது அறையில் எதிர்கால வாழ்க்கையை பற்றிய யோசனையில் வெகு நேரம் இருந்தவன் ஜோஸ்வினியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.

ஆனால் அவளோ வெகு நேரம் ஆகியும் வரவில்லை.

இவர்களது திருமணம் அவசர திருமணம் ஆகையால் ஜோஸ்வினியின் குடும்பம், ஆதவனது குடும்பம், அபிஷேக்கின் குடும்பம், அவனது பாட்டியின் குடும்பம் மட்டுமே பங்கேற்றது.

இதில் பாட்டி அவளை திட்டியதில் தாத்தாவிடம் சொல்லி சமாளித்தவன் அவரை இன்னொரு உறவினரின் வீட்டுக்கு அழைத்து செல்ல வைத்தான்.

அதே போல பெற்றோரிடமும் சொல்ல அவனை புரிந்தவர்கள் ஏதும் கம்பல் செய்யவில்லை. அதனால் அவளை எதுவும் சொல்லவில்லை.

ஆனால் தனது குடும்பத்தினர் சென்ற பின்போ இத்தனை நாளாக அனுபவித்தது ஜோஸ்வினிக்கு பூதாகரமாக தோன்றியது.

அபிஷேக்கின் நட்பு, பின் அவன் திடீரென மாறியது, ஷியாமும், ருத்ரனும் காணாமல் போனது எல்லாம் சேர்ந்து அவள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானாள்.

அவளுடைய துயரங்கள் கண்களில் ஆறாய் ஓட அப்போது ஜோஸ்வினியை வெகு நேரம் காணாமல் தேடியவன் தோட்டத்தில் பார்த்தவன் அவளை நோக்கி பதறி ஓடினான்.

“ஜோஸ்வினி”

“…”

“ஜோ”

“…”

அவனது குரலுக்கு அவளிடம் இருந்து பதில் வராததால் அவளை தோளை பற்றி திருப்பியவன் அவளது கண்ணீரை பார்த்ததும் சிலையாய் நின்றான்.

சில நிமிடங்களில் சுதாரித்தவன் அவளை அணைத்து ஆறுதல் படுத்த அவளை அணைக்க வர அவளோ அவனை தள்ளி விட்டாள்.

“ஏன்டா என்ன மீட் பண்ண?”

“ஏன்டா என் ஃபிரண்டான?”

“ஏன்டா எனக்கு பெஸ்டியா இருந்த?”

“ஏன்டா எனக்கு ஹெல்ப் பண்ணின?”

“எல்லா இடத்திலயும் பிரண்ட்டா இருந்துட்டு இப்போ திடீர்னு ஹஸ்பெண்ட்டா என்னால இமேஜின் பண்ண முடியல. நான் உன்ன ரொம்ப நம்பினேன்டா. ஏன்டா… ஏன்டா? ஏ… ஏன்டா” என்று சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி சரிய ஆரம்பித்திருந்தாள்.

இத்தனை நாளும் யாரிடமும் மனம் விட்டு பேச முடியாதது ஒரு வித மன உளைச்சலுக்கு ஆளாக்கியது எனில் அபிஷேக்கிடம் மனம் திறந்து பேச முடியாதது அவளை இன்னொரு விதமான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தது.

இதை தவிர ஷியாம், ருத்ரனை கண்டுபிடிப்பதிலும் அவளால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாததால் அப்படியே தனது துயரத்தை அமைதி எனும் முகமூடியில் அடைத்து வைத்தவள் இப்போது அது ஒரு கட்டத்தில் அவளை மீறி வெளியே வரவும் தன்னை மீறி கதற ஆரம்பித்தாள்.

இப்போது கல்யாணத்தையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எல்லாம் சேர்ந்ததில் அவள் மயங்கி சரியவும் அபிஷேக் மிகவும் பயந்து விட்டான்.

“செர்ரி… செர்ரி… இங்க பாருடா” என்று அவளின் கன்னத்தை தட்டினான்.

“செர்ரி… முழிச்சிக்கோடா. என்ன பயமுறுத்தாத” என்றவளை உலுக்கியவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அவளை பதறி போய் தனது கைகளில் ஏந்தியவன் தங்களது அறையில் படுக்க வைத்தான்.

பின் அறையில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் மீது தெளிக்க அவள் மெல்ல கண் விழித்தாள்.

முதலில் முழித்தவளுக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று.

பிறகு அறையின் அலங்காரத்தை பார்த்தவள் அப்படியே ஒடுங்கி போய் படுக்கையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

அவள் எழுந்ததை பார்த்ததும்

“செர்ரி ஆர் யூ ஓகே டா?”

“என்ன பண்ணுது?”

“ஷல் வீ கோ டூ டாக்டர்?” என்று கண்களில் கண்ணீர் வழிய கேட்டவனை விசித்திரமாக பார்த்தாள்.

அபிஷேக்கின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் அவளை ஏதோ செய்தது.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page