“பேபி நிஜமா தான் சொல்றியா?”
“இதிலென்ன உனக்கு சந்தேகம்?”
“ஓகேங்க ஜோ. அப்படினா முக்கியமான வொர்க் இருக்கு. சீக்கிரம் கிளம்பிடலாம்”
“அபி ஃபர்ஸ்ட் நீ ரெஸ்ட் எடு. அப்றம் மத்தவங்கள பாத்துக்கலாம்”
“மேடம் நான் என் இன்லாஸ கவனிக்கணும். அப்றம் அவங்க என்ன நினைப்பாங்க?” என்றவனை முறைத்தாள்.
“அது அப்போ கிளம்பி வரப்ப தோணலையா?” என்று கேட்டவளை பார்த்து ஈஈஈ என்று சிரித்தான்.
“என்ன சிரிப்பு?”
“அப்படி கூட்டிட்டு வந்ததால தான் ஜோ நீங்க இவ்ளோ ரிலாக்ஸாவது பேசறீங்க… இல்லேனா நீங்க என்ன பஸ்பமாக்கிருவீங்க”
“எரும… எரும” என்றவள் படபடவென அடிக்க ஆரம்பித்தாள்.
அவளது அடிகளை சிரிப்புடன் வாங்கி கொண்டவன்
“உங்களுக்காக எந்த எல்லைக்கும் போவேன் ஜோ. ட்ரஸ்ட் மீ” என்று ஆழ்ந்த குரலில் கூறியவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க அந்த பார்வையில் தனக்குள் ஏதோ தடம் புரள்வது போல் உணர்ந்தாள்.
ஸ்விஸ் பயணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் இலகுவாகவே சென்றது.
ஸ்விஸ்ஸில் இருந்து அவளை கூட்டி வந்த பின் எல்லாரும் சேர்ந்து ஃபிரான்ஸை சுற்றினார்கள்.
ஆதவனுக்கு ஜோஸ்வினியின் மாற்றம் ஆச்சரியமாகி இருந்தது.
“மச்சி… என்னடா நடக்குது? டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி போனீங்க. இப்போ கூல்லா வர்றீங்க?” என்று ஆச்சரியப்பட்டான்.
“மச்சி ஷீ இஸ் ஆல்வேஸ் மை செர்ரி” என்று கண்ணடித்தவனை வியப்பாய் பார்த்தான்.
“எப்டிடா சமாதானப்படுத்தின?”
“அந்த சீக்ரெட்லா சொல்ல மாட்டேன்”
“என்ன மச்சி கால்ல விழுந்திட்டியா?”
“மச்சான் கம்பெனி சீக்ரெட்ஸ்லா வெளிய சொல்ல கூடாது” என்றவனை சிரிப்புடன் பார்த்தான்.
ஜோஸ்வினி அவர்களோடு சந்தோஷமாக நாட்களை கழித்தாள்.
அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது.
அதுவரை சந்தோஷமாக இருந்தவள் அவர்கள் கிளம்பும் நாள் அன்று சோர்வாக இருந்தாள்.
அவர்களை வழியனுப்ப செல்லும் போது அவர்களை பிரிய முடியாமல் கதறி அழுத ஆரம்பித்தாள்.
“பேபி என்னடா இதுக்கு போய் யாராவது அழுவாங்களா?”
“அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன் அபி”
“சோ வாட்? உனக்கு பாக்க போகணும்னா நம்ம அங்க போய்க்கலாம். இல்லேனா அவங்கள இங்க வர வெச்சுக்கலாம். சோ சிம்பிள்” என்று சொன்னவனை நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் பார்த்தவள்
“தேங்க்ஸ் அபி… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…” என்று தன்னை மறந்து சந்தோஷமாக அவனை முகமெல்லாம் முத்தமிட்டாள்.
இந்த காட்சியை ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர்.
ஜோஸ்வினியின் பெற்றோருக்கு அவள் கல்யாணத்தன்று அழுதது ஞாபகம் வந்தது.
இப்போது இவர்களை இப்படி சந்தோஷத்துடன் பார்க்கையில் பூரிப்பாக உணர்ந்தனர்.
ஆதவனோ ‘நீ நடத்துடா… நடத்துடா’ என்பதை போல பார்த்தான்.
அபிஷேக் தான் இவர்களின் பார்வையில் கூச்சப்பட்டு நின்றான்.
“ஜோ… எல்லாரும் பாக்குறாங்க”
“சோ வாட்? உன்ன கொஞ்ச நான் அவங்ககிட்ட பர்மிஷன் கேக்கணுமா?” என முறைத்தாள்.
“நான் அப்படி சொல்லலையே. நம்ம கொஞ்சல்ஸ் வீட்ல போய் தனியா வெச்சுக்கலாம்னு தானே சொன்னேன்” என்றவன் முணுமுணுக்க அவள் பேச எதுவும் வார்த்தை வராமல் அமைதியானாள்.
“டேய் உங்க ரொமான்ஸ நிறுத்துங்கடா. பக்கத்துல நான் சின்ன பையன் இருக்கேன்” என ஆதவன் பாவமாய் சொல்ல அனைவரும் சிரித்தார்கள்.
ஜோஸ்வினி கண்களில் கண்ணீருடனும், உதடுகளில் புன்னகையுடனும் விடை கொடுத்தாள்.
அடுத்த நாள் ஜோஸ்வினி டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அபிஷேக் அங்கு வந்தான்.
“ஜோ கிளம்புங்க. போலாம்”
“நான் எங்கயும் வரல”
“என்ன ஆச்சு செர்ரிக்கு? ஏன் மேடம் நேத்துல இருந்து தீவிர யோசனைல இருக்கீங்க?”
“ஒண்ணும் இல்ல”
“ஒருவேள செர்ரி நேத்து ஏர்போர்ட்ல நடந்த ரொமான்ஸையே நினச்சிட்டிருக்கீங்களா?”
“நமக்குள்ள அதுக்கு வாய்ப்பே இல்ல. நான் கிஸ் குடுத்ததுலாம் லவ்னு நினச்சிக்காத. அப்போ நான் ஒரு தாத்தாக்கு கிஸ் குடுத்தா அவங்களையும் லவ் பண்றேனு சொல்வியா?” என்று ஆக்ரோஷமாக கேட்டவள்
“நீ ஒரு ரூட். ஷியாம ஏதோ பண்ணிட்ட. உன்ன நான் என்னைக்கும் நம்ப மாட்டேன்” என்று கத்தினாள்.
அபிஷேக் நேற்றில் இருந்து சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தவன் இன்று அடிபட்ட பறவையாய் துடித்தான்.
ஒரு நிமிடம் கண் மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
“ஜோஸ்வினி உங்களுக்கு யூனிவர்சிட்டில ஜாயின் பண்ணனும்னு ஐடியா இருக்கா இல்லையா?” என்று இறுகிய குரலில் கேட்டான்.
அவன் யூனிவர்சிட்டி என்று சொன்னதும் தான் அவளுக்கு படிப்பை பற்றிய ஞாபகமே வந்தது.
தன்னுடைய சூழ்நிலையை எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அமைதியாக புறப்பட்டாள்.
இந்த முறை கார் பயணம் அமைதியாகவே சென்றது.
அவர்கள் செல்லும் போது அபிஷேக்கிற்கு போன் வர காரை ஓரமாய் நிறுத்தியவன் வெளியே சென்று பேசினான்.
சிறிது நேரம் பேசியவன் காரை எடுக்க வரும் போது அவனது முகம் இறுகி இருந்தது. மொத்த கோபத்தையும் காரின் மீது அவன் காட்ட ஜோஸ்வினி தான் பயந்து போனாள்.
அவளது முகத்தை பார்த்தும் கூட அபிஷேக்கின் கோபம் குறையவில்லை.
யூனிவர்சிட்டி சென்றும் கூட அவன் மிகவும் கோபமாகவே இருந்தான்.
சாரபொன்னே யூனிவர்சிட்டி பழமையும், புதுமையும் கலந்து சிற்பி செதுக்கி வைத்த சிற்பங்கள் போன்று ஒவ்வொன்றும் இருந்தது.
பழமையான சிற்ப வேலைப்பாடுகள் அங்காங்கே இருக்க அதனோடு புதுமையும் கலந்து இருந்தது.
வகுப்பறைகள் சொகுசு அறைகளை போல இருந்தன. ஜோஸ்வினி ஒவ்வொன்றாய் பிரமித்தப்படி பார்த்துக் கொண்டே செல்ல அபிஷேக்கோ அவளை முறைத்து கொண்டே சென்றான்.
கல்லூரியில் எல்லாம் ஃபிரெஞ்சாகவே இருக்க ஜோஸ்வினி புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள்.
அபிஷேக் அவளிடம் ஒவ்வொன்றாக கேட்டு ஃபில் செய்தான்.
அவளது துறை சம்பந்தமான கேள்விக்கு எம்.பி.ஏ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று சொன்னவளை யோசனையாய் நோக்கினான்.
“நீங்க எம்.எஸ் தானே பண்றேனு சொன்னீங்க? இப்போ என்ன திடீர்னு ஹோட்டல் மேனேஜ்மென்ட்?”
“நீ தான் அன்னைக்கு ரெஸ்ட்டாரென்ட்ல என்ன எல்லாம் ஃபேஸ் பண்றேன்னு சொன்னே. அப்போ இருந்து எனக்கு இந்த டிபார்ட்மென்ட் மேல ஒரு க்யூரியாசிட்டி” என்ற அவளது விளக்கத்தில் அவனது கோபம் கரைந்தது.
“அதும் இல்லாம எனக்கு இந்த மாதிரி டஃப் குடுக்கற ஜாப்லா பிடிக்கும்”
“அப்படியா?” என்று அவளை அளவிட்டவன்
“உங்க லைஃப் கூட தான் உங்களுக்கே டஃப் குடுக்குது. பட் பெரிசா ஒண்ணும் கண்டுபிடிக்க மாட்டேங்கறீங்களே?” என்று கேட்டான்.
“அதுக்கு நீ வாய திறக்கணும்”
“ஷியாம் ஷியாம்னு மூச்சுக்கு மூன்னூறு டைம் சொல்றீங்களே? அவங்கள பத்தி உங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட கேட்டு பாக்கறது” என இறுகிய குரலில் சொன்னான்.
ஷியாம் பற்றி சொன்னதும் அபிஷேக்கின் குரல் அப்படியே மாறுவதை யோசனையோடு கவனித்தாள்.
*
ஜோஸ்வினி கல்லூரி சென்று ஒரு வாரம் ஆகியிருந்தது.
அவளது கல்லூரியில் ஓரிரு தமிழ் நண்பர்கள் அவளுக்கு நட்பாகி இருந்தனர்.
எப்போதும் அபிஷேக் தான் அவளை கல்லூரிக்கு கூட்டி வருவதும், வீட்டுக்கு சென்று விடுவதும்.
அன்றொரு நாள் இவள் அபிஷேக்கிற்காக காத்து கொண்டிருக்கையில் அவன் வேலை காரணமாக மறந்து விட்டான்.
ஜோஸ்வினி அவனுக்கு கால் செய்தவள் ஒரு கட்டத்தில் தானாகவே சென்று பார்க்கலாம் என கிளம்பினாள். தைரியமாக பேருந்தில் அமர்ந்தவள் சில நிமிடங்களில் ரொம்பவே பயந்து விட்டாள்.
ஏதோ ஒரு பெயர் தெரியாத இடத்தில் இறங்கி விட்டாள். அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. ஒன்றும் அவளால் சமாளிக்க முடியவில்லை.
அபிஷேக் தனது வேலையை முடித்து வந்தவன் செல்போனை எடுத்து பார்க்க ஜோஸ்வினிடம் இருந்து வந்த ஏகப்பட்ட மிஸ்ட் கால்களை பார்த்து பதறி போய் அவளுக்கு கால் செய்தான்.
“ஜோஸ்வினி” என்றவன் கூப்பிட எதிர் பக்கத்தில் இருந்து அவனுக்கு விசும்பல் சத்தம் தான் கேட்டது.
“ஜோ எங்க இருக்க? சாரிடா. வொர்க்ல மறந்துட்டேன்”
“பேசாத. போடா. நடு ரோட்ல இருக்கேன்” என்றவள் பயத்தில் அழ ஆரம்பித்தாள்.
அவனுக்கோ ‘நடு ரோட்ல இருக்கேன்’ என்ற சொல் ஏதேதோ ஞாபகங்கள் வந்து அவனை அலைக்கழித்தது.
“ஜோ… ரிலாக்ஸ்டா. நான் டென் மினிட்ஸ்ல வரேன். நீ ஃபர்ஸ்ட் லொகேஷன் ஷேர் பண்ணு. ஓகேவா?”
“அழக்கூடாது பேபி. நான் கிளம்பிட்டேன்டா. நான் போன் பேசிட்டே டிரைவ் பண்ணிட்டே வரேன். நீ பேனிக் ஆக வேணாம்” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல் அவன் சொல்ல சரி என்று சொன்னவள் லொகேஷன் ஷேர் செய்தபடி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
அவன் பேசியபடி அவள் இருக்கும் இடம் சென்றடைய அவனை பார்த்ததும் பயத்தில் விழி பிதுங்கி, உடல் நடுங்கி நின்றவள் ஓடி சென்று பயத்தில் அவனை கட்டி பிடித்தாள்.
ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவன் இப்போது அவளை பார்த்ததும் இன்னும் பயந்து போனான்.
“நத்திங்டா. ரிலாக்ஸ். நான் வந்துட்டேன்ல” என்றவன் அவளது தலை கோதி முதுகை தட்டி குடுக்க அப்போதும் அவளது பயம் போகவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் சமாதானம் ஆனதும் அழைத்து சென்றான். ஆனால் அவளோ ஒரு வார்த்தை பேசவில்லை.
அவளை கவனித்து கொண்டு வந்தவன் வீட்டுக்கு போய் சமாதானம் செய்யலாம் என்று நினைத்தான். ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகும் அவள் ஏதும் பேசாததால் துணுக்குற்றான்.
“ஜோ என்ன ஆச்சு? ஏன் அமைதியா இருக்கீங்க?”
“நான் எப்டி போனா உனக்கென்னடா? லாங்குவேஜ் தெரியாத கன்ட்ரில இப்டி அனாத மாதிரி விட்டுட்டியே”
“ஜோ”
“இதே எங்க அம்மா, அப்பாவா இருந்தா இப்டி விடுவாங்களா? ச்சே… உனக்கு என்னைய விட வேல தான் முக்கியம். போடா” என்றவள் கதறி அழுதாள்.
“பேபி அநாதையா? என்னடா… நான் இருக்கறப்ப நீ இப்டி பேசலாமா? இதுக்கு நீ என்னைய கொல கூட பண்ணிருக்கலாம். வார்த்தையால குத்தாக பேபி” என்றவன்
“இதுக்கு மேல இந்த மிஸ்டேக் நடக்காம பாத்துக்கிறேன்” என்றவன் தனது மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.
அவளும் அழுது கொண்டே தூங்க அபிஷேக்கிற்கு அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது.
இவன் எப்படி நன்றாக பார்த்து கொள்ள நினைத்தாலும் ஏதோ ஒன்றில் தவறு நடந்து விடுகிறது. அதனால் அந்த தவறை களைவதற்கான வேலையை யோசிக்க ஆரம்பித்தான்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் அன்று போல் இருவரும் மற்றொருவரின் மனநிலையை புரிந்து கொள்ள இயலவில்லை.
அடுத்த நாள் தனது பெற்றோரிடம் பேசியவன் கல்லூரிக்கு அருகிலேயே அபிஷேக் ஃப்ளாட் ஒன்று எடுத்து தனியாக கூட்டி வந்து விட்டான்.
அதே போல அவளை பிரெஞ்சு வகுப்புக்கும் அனுப்பி வைத்தான். ஜோஸ்வினியும் ஏற்கனவே அனுபவப்பட்டதால் எவ்வளவு வேகமாக கற்க முடியுமோ அவ்வளவு வேகமாக கற்றாள்.
காலையில் அபிஷேக் எல்லா வேலைகளும் செய்ய இவளோ ஆற அமர கல்லூரிக்கு புறப்பட்டாள்.
அபிஷேக்கிற்கு அன்றைக்கு அவள் பேசியது உறுத்தி கொண்டிருக்க அவளை எவ்வளவு நன்றாக பார்த்து கொள்ள முடியுமோ அவளை அவ்வளவு பாதுகாத்தான்.
ஜோஸ்வினி கல்லூரி முடிந்ததும் வீட்டில் போரடிக்க அவள் அலெக்ஸாவோடு ஏதேனும் வம்பு பண்ணி கொண்டிருப்பாள்.
இவள் கேட்கும் கேள்விகளுக்கு… பாவம் அது தான் இவளிடம் சிக்கி திணறியது.
அலெக்ஸா – இது ஒரு எலக்ட்ரானிக் சாதனம். ஸ்பீக்கர் போல இருக்கும். நமது கட்டளைகளுக்கு தகுந்த படி அது நமக்கு உதவி செய்யும். நாம் செட்டிங்கில் சென்று நமக்கு தகுந்தாற் போல செட் செய்தவுடன் அது நமது கட்டளைக்கேற்ப பதில் சொல்லும்.
மணி என்ன என்று கேட்பதிலிருந்து யாருக்கேனும் கால் செய்ய சொல்வது வரை அனைத்தும் செய்ய முடியும்.
இப்போது கல்லூரியை விட்டு வந்தவள் தன்னை ரிஃபிரஷாகி கொண்டு அலெக்ஸாவுக்கு கட்டளையிட்டாள்.
“அலெக்ஸா ப்ளே தமிழ் சாங்”
“மலம பித்தா பித்தாதே
மலம பித்தா பித்தாதே…”
என்று பீஸ்ட் பாடல் ஒலிக்கவும் அவள் அதற்கு தகுந்தாற்போல் ஆட்டம் போட ஆரம்பித்தாள்.
அபிஷேக் வரும் வரை அவள் இவ்வாறு ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்.
அவளை பார்த்தவன்
“என்ன மேடம் குஷியா இருக்கீங்க போல? ஸ்டடிஸ்லா ஓகேவா?”
“அது என்னைக்கு ஓகேவாச்சு. நான் அதுக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்க முடியுமா?” என்றவளை அடிப்பாவி என்பது போல பார்த்தான்.
“சரி. எனக்கு ஒரு டவுட்ட கிளியர் பண்ணு”
“என்ன?”
“என்ன ஏன் செர்ரினு கூப்பிடற?” என்று கேட்டவளை என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்து போய் பார்த்தான்.
