ஜோஸ்வினி பாடத்தை கவனித்தாலும் அவளது ஞாபகங்கள் எங்கோ சென்றது.
அவளை கவனித்து கொண்டிருந்த சூர்யா ‘இவளுக்கு என்ன ஆயிற்று?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
சூர்யா தமிழ்நாட்டில் இருந்து வந்தவன்.
அவனும் ஜோஸ்வினி படித்து கொண்டிருந்த டிபார்ட்மென்டிலேயே சேர்ந்திருந்தான். தமிழ் இருவரையும் இணைந்திருந்தது.
இவளது கேங்கில் நான்கு பேர். ஒரு வட இந்திய பெண், ஃபிரஞ்ச் பெண், சூர்யா, ஜோஸ்வினி.
அபிஷேக்கினால் நொந்து இருந்தவளுக்கு அவளது கேங்கின் நட்பு அவர்களை உயிர்ப்புடன் இருக்க வைத்தது.
அவர்களிடம் முழுவதும் பகிர்ந்து கொள்ளாவிடினும் அவர்களால் தனது கவலைகளை மறந்தாள்.
யுனிவர்சிட்டியில் கிடைத்த தனது நட்புக்களை ஜோஸ்வினி அபிஷேக்கிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களது நட்பில் மீண்டும் அவள் பழைய ஜோஸ்வினியாக மாற ஆரம்பித்தாள். அதை கண்ட அபிஷேக்கும் சந்தோஷப்பட்டான்.
ஜோஸ்வினியை அபிஷேக் யுனிவர்சிட்டியில் விடும் போது சூர்யாவை ஜோஸ்வினி அறிமுகம் செய்து வைத்தாள்.
அப்போதில் இருந்து அவர்களுக்குள் மெல்லிய நட்பு ஆரம்பமாகியது. ஜோஸ்வினி அபிஷேக்கை பற்றி என்ன குறை சொன்னாலும் அவன் அபிஷேக்கிற்கு தான் சப்போர்ட் செய்வான். அப்படி இவன் சப்போர்ட் செய்வது பற்றி அவளுக்கு மனத்தாங்கலும் உண்டு. ஆனால் அதையும் மீறி அவள் மனம் சந்தோஷமடையும்.
சூர்யாவுடனான நட்புக்கு பிறகு அவனிடம் அபிஷேக் ஒரு வேண்டுகோள் வைத்தான்.
அவள் கல்லூரி வரும் சமயங்களில் பத்திரமாக பார்த்து கொள்ளவென. ஆனால் சூர்யாவோ படிப்பு சம்பந்தமாக நூலகத்தில் இருந்த சமயத்தில் அவள் கிளம்பலாம் என கிளம்பி வந்து நடு வழியில் வழி தெரியாமல் திணறியதில் அவனை நன்றாக திட்டி விட்டான்.
“ப்ரோ சாரி ப்ரோ… வேணும்னு பண்ணல”
“நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்? அவள கரெக்டா பாத்துக்க சொல்லி தானே சொன்னேன்”
“நான் அவங்க வெயிட் பண்ணுவாங்கனு நினைச்சேன் ப்ரோ”
“உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க சூர்யா. நானே அவள பிக் அப் பண்ணிக்கறேன்”
“ஏன் ப்ரோ என் ஃபிரண்ட நான் பாத்துக்க மாட்டேனா?” என்று அவன் சொன்னதும் அபிஷேக் புன்னகைத்தான்.
“ஏன் ப்ரோ சிரிக்கறீங்க?”
“நத்திங். எல்லாத்தையும் பேசி பேசியே சரி பண்ணிடறா”
“ஹாஹா… ஆமா ப்ரோ… ஷீ இஸ் லைக் மை லிட்டில் ஸிஸ்டர். இங்க வந்ததுல இருந்து நான் அவள் ரொம்ப மிஸ் பண்றேன். ஜோஸ்வினி கூட ஃபைட் பண்றப்பலா அவ ஞாபகம் தான்” என மென்மையாக புன்னகைத்தான்.
அவனுடன் சேர்ந்து புன்னகைத்த அபிஷேக்கின் முகம் வேதனையில் கசங்கியது.
“நான் நடு ரோட்ல அனாதையா நிக்கறேன். என் அப்பாம்மா இருந்தா இப்டி விட்ருப்பாங்களானு கேக்கறா. நான் என்ன பண்ணுவேன் சன்னி?” என அபிஷேக் தன்னை மீறி புலம்பினான்.
“ப்ரோ” என சூர்யா அபிஷேக்கை யோசனையாக பார்த்தான்.
“சாரி. நான் ஏதோ திங்கிங்ல சொல்லிட்டேன்”
“நீங்க எனக்கு சில்பிங் மாதிரி தான். எங்கிட்ட ஷேர் பண்ண முடிஞ்சா சொல்லுங்க” என சொல்ல அவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.
அபிஷேக் சொல்வதை கேட்டு கொண்டிருந்த சூர்யாவின் முகம் பலவித உணர்ச்சிகளை காட்டியது.
“ப்ரோ யு ஆர் ரியலி கிரேட். உங்க லவ் ஸ்டோரி கேக்கறப்ப எனக்கு கூஸ்பம்ப் ஆகுது ப்ரோ” என்று சிலிர்த்தான்.
“ஏன் சன்னி நீங்க வேற? அவ ஏதோ என்ன வில்லன பாக்கற மாதிரியே பாக்கறா? நான் எப்படி சரி பண்ணனும்னு நினச்சாலும் எங்கேயோ மிஸ்டேக் ஆகிடுது. நான் என்ன பண்ண போறேனே தெரில சன்னி”
“சில் ப்ரோ. அவளுக்கு நான் புரிய வைக்கிறேன் ப்ரோ” என்று சொல்லி சமாதானம் செய்தான்.
அவனுக்கு அபிஷேக்கை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. ஷியாம் விசயத்தில் அவ்வளவு பிரச்னை வந்த போதும் தன்னை எப்படி அவன் சந்தேகிக்கவில்லை என மலைத்து போய் அவனை பார்த்தான்.
அவனது பார்வையை புரிந்து கொண்ட அபிஷேக் அவனை தோளோடு அணைத்தான்.
“என்னையே நான் எப்டி சந்தேகப்பட முடியும் சன்னி? ஐ நோ யுவர் ஃபிரண்ட்ஷிப். பாக்கலாம்” என்று சொன்னவன்
“ஜோக்கு எதும் இத பத்தி தெரிய வேண்டாம் சன்னி” என்றவன்
“நான் கோபப்பட்டதுக்காக ரெஸ்ட்டாரென்ட் வராம இருந்துடாதீங்க. சாரி” என்று சொன்னவனை
“உங்க ப்ரதர் கிட்ட இப்படி தான் சாரி கேப்பீங்களா? டோன்ட் வொர்ரி. இனி நீங்க குழப்பிக்க வேணாம். நானும் உங்க கூட இருக்கேன்னு ஞாபகம் வச்சுக்கோங்க” என்று அவனை அணைத்தபடி விடை கொடுத்தான்.
அபிஷேக் சூர்யாவுக்கு தனது ரெஸ்ட்டாரன்ட்டிலேயே பார்ட் டைம் வேலையும் போட்டு கொடுத்தான். அதனால் அவனை சமாதானம் செய்து விட்டு வேலைக்கு வர சொன்னான்.
இதையெல்லாம் யோசித்து பார்த்தவனுக்கு அடுத்து என்ன ப்ரச்னையோ என்று தோன்ற ஆரம்பித்தது.
அதன்படி வகுப்பு முடிந்தவுடன் பேச முடிவு செய்தவன் அவளை அருகில் உள்ள பார்க்கிற்கு பேச கூப்பிட்டான்.
“ஏன்டா இங்க கூட்டிட்டு வந்த?”
“ஜோ… என்ன யோசிச்சிட்டிருக்க மார்னிங்ல இருந்து?”
“இந்த அபிஷேக்க புரிஞ்சுக்கவே முடில. உன்ன ஹாலோவீன் பார்ட்டிக்கு இன்வைட் பண்ண சொன்னான்” என்றவளை கோபமாக பார்த்தான்.
“ஏன்… நான் மனுசன் தான? என்ன இன்வைட் பண்றதால உனக்கென்ன பிராப்ளம்?”
“அய்யோ… இல்லடா” என்று ஏதோ சொல்ல வந்தவள் உதடு கடித்து அமைதியானாள்.
அவள் அப்படி நின்றதும் அவளை வற்புறுத்தி கேட்பது அநாகரீகம் என நினைத்தவன் அவளுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றினான்.
“ஜோ… நீ தேவையில்லாம குழப்பிக்காத. ஃப்ரீயா விடு. உன் ப்ராப்ளம் சரி ஆகிடும்” என்றவன் சொன்னதும் வார்த்தை வராமல் அமைதியாக நின்றாள்.
“டேக் கேர் ஜோ” என்றவன் அவ்விடத்தை விட்டு வெளியேறி அபிஷேக்கிற்கு போன் செய்தான்.
“சொல்லுங்க சூர்யா”
“ஜோ டல்லா இருக்கா. என்னனு தெரியல. உங்களால வர முடியுமா?”
“நான் இப்போ மீட்டிங்ல இருக்கேன். ப்ளீஸ்… கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியுமா அங்கயே?”
“ஓகே ப்ரோ. வெயிட் பண்றேன். நீங்க வாங்க” என்றவன் அவன் கண்களில் அவள் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.
இவர்கள் இருவரில் சூர்யா அபிஷேக்கிடம் நன்றாக ஒட்டி கொண்டான். அதனால் அவனுக்கு போன் செய்தான்.
ஜோ வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்தவள் விவேக்கிற்கு போன் செய்தாள்.
“ஹே… ஜோ என்ன இப்ப போன் பண்ணிருக்க?”
“உன்கிட்ட பேசணும்டா”
“சொல்லு ஜோ”
“இல்லைடா. எனக்கு இந்த அபிஷேக்க புரிஞ்சுக்க முடில”
“ஏன்டி இப்படி பேசற?”
“அவனுக்கு ஷியாம பிடிக்காது. அப்படி இருக்கறப்ப இவன் சூர்யாவ இன்வைட் பண்ண சொல்றான்”
“ஹே… உன்ன விட அவங்க க்ளோஸ் தானே. உனக்கு புரியாதா?”
“அதெல்லாம் தெரியுதுடா. பட் அவன் சந்தேகப்படவே இல்லையே” என கேட்க பெருமூச்சு விட்டவன்
“ஜோ நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு”
“என்ன?”
“ஷ்யாம் யாரு?”
“அவன் என்னோட லவ்வர்டா”
“அப்போ அபிஷேக்?”
“அவன் என்னோட ஹஸ்பெண்ட்”
“ஜோஸ்வினி நீ புரிஞ்சு தான் பேசறீயா? உனக்கு மேரேஜ் ஆனப்புறமும் நீ ஷ்யாம உன் லவ்வர்னு சொல்ற? அப்பப்போ அபி ப்ரோ கோபப்படறதுல தப்பே இல்ல”
“டேய்… அபிய சொன்னா போதுமே… உடனே சப்போர்ட்டுக்கு வந்துடுவியே?”
“சரி. நான் கேக்கறதுக்கு கிளியரா பதில் சொல்லு”
“ஷ்யாம எப்டி லவ் பண்ண?”
“அவன் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு ஸ்டேஜ்ல பாவப்பட்டு போய் லவ் பண்ணேன்” என்றவளை விசித்திரமாக பார்த்தான்.
அவர்கள் இருவரும் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தார்கள்.
“ஜோ… பாவப்பட்டு வரதுக்கு பேரு லவ் இல்ல… பரிதாபம். அவன் மேல உனக்கு லவ் இல்ல. பரிதாபம் தான் வந்திருக்கு” என்றவனை அதிர்ச்சியில் உறைந்து போய் பார்த்தாள்.
“டேய் என்ன நீ சொல்ற?”
“உண்மைய தான் சொல்றேன். அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணிருக்கா?” என்றவன் கேட்டதும் யோசனையுடன் இல்லையென்று தலையாட்டினாள்.
“அவன எப்பயாவது மிஸ் பண்ற மாதிரி ஃபீல் பண்ணியிருக்கியா?”
“இல்லையே”
“அவன என்னைக்காவது உன் மனசு தேடிருக்கா?”
“இல்ல”
“ஆர் யூ ஸ்யூர்?”
“ஆமாடா”
“அப்போ அதுக்கு பேர் லவ் இல்ல. பரிதாபம்”
“அப்டினா இப்போ கூட தான் அவன தேடிட்டு இருக்கேன்” என்று சொன்னவளை பார்த்து சிரித்தான்.
“ஏன்டா சிரிக்கற?”
“ஆமா. இப்பவும் அவன அதே பரிதாபத்தில தான் தேடற”
“டேய் என்னடா பேசற?”
“இப்பவும் அவன் உன்ன லவ் பண்ணதால தான் அவனுக்கு ஏதோ ஆகிடுச்சோனு குற்ற உணர்ச்சில தான் தேடற” என்று விளக்கினான்.
“வி… விவேக் நீ என்ன சொல்ற?”
“உனக்கு சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன்டா. ரிலாக்ஸா யோசிச்சு பாரு. ஓகேவா?” என்றவன் வாஞ்சையுடன் கூறினான்.
“நான் சொன்ன பாயின்ட்ஸ் ஞாபகம் வெச்சுக்கோ. டேக் கேர்” என்றவன் சொல்லி விட்டு கால் கட் செய்ய அவளோ சிலையாய் அமர்ந்திருந்தாள்.
‘அப்டினா இத்தன நாளா அவன் மேல இருந்தது பரிதாபம் தானா?’
‘விவேக் என்னென்னவோ கேட்டானே. ஆனா நான் ஷ்யாம மிஸ் பண்ண மாதிரி தோணலயே’ என்று யோசித்தவளுக்கு சம்பந்தமே இல்லாமல் அபிஷேக்கின் ஞாபகம் வந்தது.
அவனை பற்றிய நினைவு வந்ததும் தன்னை மறந்து புன்னகைத்தவள் ஒரு நிமிடம் தலையை உலுக்கி விட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள்.
‘ஓ… மை காட்… அபி கூட இருந்தா எனக்கு யாரும் எதுவும் ஞாபகம் இருக்கறது கூட கிடையாது’
‘உண்மையிலேயே அவன் என்ன கட்டாயப்படுத்தினானு அப்பப்போ ஞாபகத்துல வச்சுட்டு தான் அவன் கிட்ட சண்ட போட்டுட்டு இருக்கேன்’ என்று யோசித்தவளின் மனது திடுக்கிட்டது.
‘அப்போ உனக்கு அவன் கம்பல் பண்ணது தான் பிரச்சனையா? உனக்கு மேரேஜ் ஆனது பிரச்சனை இல்லடா?’ என அவளது மனசாட்சி கேட்க அவளது மனமோ ஆம் என்று தலையாட்டியது.
அவளுக்கு கிடைத்த பதிலில் அதிர்ச்சியில் தன்னையறியாமல் அவள் எழும் போது அபிஷேக் அவள் அருகில் நின்றிருந்தான்.
அவளது முகத்தை பார்த்தவன்
“பேபி என்னாச்சுடா? ஏன் உன் ஃபேஸ் டல்லா இருக்கு? ஆர் யூ ஓகே?” என்றவன் அவளது நெற்றியில் கை வைத்து பார்க்க அந்த நிமிடம் அவள் மனது உரைத்த செய்தியில் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வந்தது.
“பேபி ஏன் அழறீங்க? எங்கேயாவது பெயின் இருக்கா? என்னடா திடீர்னு அழுதினா நான் என்ன நினக்கறது?” என பதற அவளோ அவனது அன்பினில் அபிஷேக்கின் தோளில் முகம் சாய்த்தவள் தன்னை மறந்து அழ ஆரம்பித்தாள்.
“என்னாச்சுடா?” என்று கேட்டும் அவளிடம் பதிலின்றி போக அவளோ தோளில் சாய்த்தபடியே காருக்கு அழைத்து செனறவன் அவள் சமாதானம் ஆகும் வரை அவளது முதுகை வருடியபடியே அமைதியாக இருந்தான்.
அவளது சமாதானம் ஆகும் வரையில் அமைதியாக இருந்தவன் அதற்கு பின்பே காரை எடுத்தான்.
ஆனால் அவளது தோள் சாய்ந்தளோ அவனை விட்டு இம்மியும் நகரவில்லை.
அவளை புரியாது பார்த்தவன் எதுவும் அவளை வற்புறுத்தாமல் அவளுக்கு ஆறுதலாக இருக்க முடிவு செய்தான்.
வீட்டிற்கு வந்த பின்னும் அவள் எங்கேயோ வெறித்தபடி அமர்ந்திருக்க அவளை பார்த்தவன்
“பேபி ரிஃபிரஷ் பண்ணிட்டு வாங்க” என்று சொல்ல அவளோ பொம்மையை போல அவன் சொன்னதை செய்தாள்.
அவளுக்கு குடிக்க காஃபியை போட்டு கொடுக்க அவள் வாங்கிய பின்னும் ஏதோ யோசனையிலேயே இருந்தாள்.
“பேபி என்னாச்சுடா? யுனிவர்சிட்டில ஏதாவது சொதப்பிட்டியா? ஏன் இப்டி இருக்கற? நீ இப்டி இருந்ததில்லையே?” என்று அவளை கனிவுடன் கேட்டவனின் பார்வையில் தெரிந்த காதலில் அவள் கட்டுண்டு நின்றாள்.
அவள் மனப் போராட்டத்தை அவனிடம் கூற முடியாமல் தவித்தவள் ஆறுதல் தேடி அவன் மடியிலேயே சரணடைந்தாள்.
அவளது செய்கையில் திகைத்தவன் ஆறுதலாக வருடி கொடுக்க ஜோஸ்வினி அமைதியாக உறங்க முயன்றாள்.
*
ஏறக்குறைய ஒரு வாரம் சென்ற நிலையில் ஹாலோவீனிற்காக ஆயத்தங்கள் களை கட்டியது. மக்கள் அதையொட்டிய கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆவிகள் போல உடைகள், ஆவிகள் போல பொம்மைகள், பல விதமான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
ஹாலோவீன் ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக கொண்டாடப்படும் பண்டிகை. அதற்கென்று வரலாறும் உண்டு.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கெல்ட்டிப் மக்கள் அவங்களோட அறுவடை காலம் முடியறப்ப கொண்டாடற பண்டிகை தான் ஹாலோவீன்.
ஹாலோவீன் அன்னைக்கு நம்ம உலகமும், ஆவிகள் உலகமும் அன்னைக்கு ரொம்ப நெருங்கி வரும். அப்படி நெருங்கி வரப்ப அந்த ஆவிகள பயமுறுத்தறதுக்கு நாமளும் ஆவிகள் மாதிரி இருக்க விழா கொண்டாடணும்னு வந்தது தான் ஹாலோவீன். அது அந்த பகுதி மக்களோட நம்பிக்கை. இந்த கதை நாட்டுக்கு நாடு மாறுபடும்.
இதே மாதிரி மெக்ஸிகோல “டே ஆஃப் தி டெட்”னு ஒரு விழா கொண்டாடுவாங்க. அன்னைக்கு நம்ம குடும்பத்தில யாராவது இறந்து போனாங்கனா அவங்க நம்ம வீட்டுக்கு வருவாங்கனு சொல்வாங்க. அன்னைக்கு இறந்து போனவங்களோட போட்டோ வெச்சு ஃபெஸ்டிவலா கொண்டாடுனாங்க.
இதெல்லாம் தான் சேந்து இன்னைக்கு ஹாலோவீனா கொண்டாடுறோம்.
ஜோஸ்வினி ஹாலோவீன் கொண்டாட்டங்கள் முடிந்த அன்று இரவு வந்த ஒரு போன் காலில் அவள் ஸ்தம்பித்து போய் நின்றாள்.
அத்தியாயம் 25
❤️ Loading reactions...
