ஜோஸ்வினியை ஒரு வாரமாக கவனித்து கொண்டிருந்த அபிஷேக் முதலில் விலகி போனாலும் அவள் தவிப்பதை பார்த்ததும் மனம் கேட்காமல் தானே தனது காதலை சொல்ல முடிவெடுத்தான்.
அதனால் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணியவன் காண்டில் லைட் டின்னருக்கு அரேன்ஜ் செய்து அவனது காதலை சொல்ல நினைக்க அது அவன் எதிர்பார்ப்பிற்கு நேர் எதிராக முடிந்தது.
“ஏய் என்ன தான்டி உன் ப்ராப்ளம்? உன்ன நான் ஒவ்வொரு நாளும் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன். என்ன பாத்தா உனக்கு கேனையன் மாதிரி இருக்காடி?”
“நான் தான்டா மெண்டல். உன்ன ஸ்டார்ட்டிங்ல இருந்து நம்பறேன்ல. நம்ப வெச்சு கழுத்தறுத்தியே?”
“ஜோ… எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. உன்ன நான் எப்ப ஹர்ட் பண்ணேன்? ஏன் இப்டி பேசற?”
“மேரேஜ் வேண்டாம்னு எத்தன டைம் சொல்ல வந்திருப்பேன்? என்ன பேச விட்டியா நீ?”
“ஆமா. பேச விடல. அதுக்கென்ன இப்போ?” என தெனாவட்டாக கேட்டான்.
“உன்ன எவ்ளோ நம்பினேன்? ஏன்டா இப்டி பண்ணே? ஷியாம கெலையே பண்ணிட்டியா?” என அவள் கேட்க அதில் ஆத்திரம் தலைக்கேறியவன் அவளது கழுத்தில் கை வைத்தான்.
“என்னடி எப்போ பாத்தாலும் ஷியாம், ஷியாம்னு… நான் தான் உன் ஹஸ்பெண்ட். அந்த நினைப்பு மட்டும் உனக்கு போதும்” என்று கர்ஜித்தான்.
“ஒரு கொலைகாரனெல்லாம் என் ஹஸ்பென்ட்னு சொல்ல முடியாது”
“என்னடி பேசிட்டே போற? நான் கொலைகாரனா உன் போன் நம்பர் யூஸ் பண்ணி நீ தப்பா பேசற மாதிரி செட் பண்றவன்லாம் நல்லவன் ஆகிடுவானா?”
“அபிஷேக்”
“சொல்லுடி. உன் போட்டோ ஃபார்ன் சைட்ல போட்டவன் தான் நல்லவனா? எப்போ பாத்தாலும் ஷியாம், ஷியாம்னு உளற?”
“லவ்னா என்ன தெரியுமா? தன்னோட காதலிக்கு எந்த ஆபத்து வந்தாலும் அவளுக்கு தெரியறதுக்கு முன்னாடி அந்த விஷயத்த சால்வ் பண்றவன் தான்டி உண்மையான லவ்வர்”
“அவன் பண்ணதுக்கு பேர் லவ் இல்ல. அவன் ஒரு சேடிஸ்ட்”
“ச்சே… நான் என் காதல மொத்தமா கொடுத்து உன் எப்டி பாத்துக்கணும்னு நினைச்சேன்? ஏன்டி இப்படி பேச வெக்கற?”
“ஒரு வாரமா உன் கண்ல உள்ள காதல நான் பாத்திட்டு தான்டி இருக்கேன். நீ லவ் சொல்ற கஷ்டத்த கூட தரக் கூடாதுனு புரஃபோஸ் பண்ணா…”
“ஏன்டி என்ன உயிரோட கொல்ற?”
“இந்த லவ் வந்ததுல இருந்து என் நிம்மதி எல்லாம் போச்சு” என விரக்தியாக சொன்னவன் அங்கிருந்து வெளியேற அவளோ தான் கேட்டதை ஜீரணிக்க முடியாமல் சிலையாய் நின்றாள்.
வீட்டை விட்டு வந்த அபிஷேக்கிற்கு மனமெல்லாம் ரணமாக இருந்தது. தான் அப்டி என்ன செய்து விட்டோம் என இவள் தன்னை வெறுக்கிறாள் என்று மனது விரக்தியின் உச்சத்திற்கு சென்றது.
ஜோஸ்வினியை பற்றி நினைக்க நினைக்க அவன் கார் அவன் கைகளில் பறந்தது.
‘நான் என்ன குற்றவாளியா? இவ என்ன அவமானப்படுத்த? இவளுக்காக நான் என் உயிர குடுக்க கூட ரெடியா இருக்கேன். எப்போ பாத்தாலும் ஷியாம், ஷியாம்னா’
‘லவ் ப்ரபோஸ் பண்ணது தப்பா? ஏன்டி என்ன புரிஞ்சுக்க மாட்டேங்கற?’ என்று ஒரு மனசாட்சி கேட்க இன்னொரு மனசாட்சியோ
‘என்னது நீ உயிர குடுக்கறியா? டேய் நீ இப்போ அவ உயிர எடுத்துட்டு வந்திருக்கடா’ என்று மனசாட்சி எடுத்துரைக்க அவனது கைகளில் கார் தடுமாறி நின்றது.
‘எந்த விஷயத்த அவகிட்ட மறைக்கணும்னு நினச்சியோ அதையே சொல்லிட்டு வந்திருக்க’ என சொல்ல
“ஷிட்” என்று தன்னை மறந்து கத்தியவன் அவசரம் அவசரமாக காரை ஓட்டியபடி வீட்டிற்கு சென்றான்.
அவன் திரும்ப வீட்டிற்கு சென்ற போது அவன் போகும் போது எப்படி இருந்தாளோ அதே போல அவள் நின்று கொண்டிருக்க “ஜோஸ்வினி” என்று கத்தினான்.
ஆனால் அவளோ அப்போதும் சிலை போலவே நின்று கொண்டிருக்க அவளை அறைந்தான்.
அவள் தட்டு தடுமாறி விழ அவளை தாங்கி பிடித்தான். ஆனால் அவளோ
“ஏன் அபி… இவ்ளோ தெரிஞ்ச நீ என்னயே கொன்றுக்கலாமே? என்ன பாக்கறவங்க எவ்ளோ கேவலமா என்ன நினைப்பாங்க?” என்று கண்ணீர் குரலில் கேட்டாள்.
“பேபி என்ன பேசற டா? நீ இப்டி துடிப்பானு தான்டா உனக்கு தெரியாம ஹைட் பண்ணேன். எனக்கு நீ தான் முக்கியம்”
“நீ என் மேல உள்ள பரிதாபத்தில தான் என்ன மேரேஜ் பண்ணியா?”
“இல்லடா. உன்ன ஆரம்பத்தில இருந்தே ரொம்ப பிடிக்கும்டா”
“ஆனா இந்த ஷியாம் ஏன் இப்டி பண்ணான்? அவனுக்கு ஏதும் கெடுதல் நினச்சதில்லையே?”
“நீ அவனுக்கு மட்டும் இல்ல பேபி. யாருக்கும் நினைச்சது இல்லடா”
“நம்ம ஃபேமிலில எல்லாத்துக்குமே தெரியுமா? அங்கிள், ஆன்ட்டிக்கு…” என்றவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவள் நடுங்குவதை பார்த்ததும் அவளை இன்னும் இறுக அணைத்தான்.
“இல்லடா. அவங்களுக்கு என்ன விஷயம்னே தெரியாது. நான் லவ் பண்றேனவுடனே ஓகே சொல்லிட்டாங்க. நீ எதை நினச்சும் பேனிக் ஆக வேண்டாம்” என்றவன்
‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்பதை உணர்த்துவது போல நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளை காற்று கூட புகாத வண்ணம் இறுக அணைத்து கொண்டான்.
அவன் தோள் வளைவில் சாய்ந்த ஜோஸ்வினிக்கு கண்ணீர் அருவியாய் கொட்டியது.
அவன் வெகு நேரம் தட்டி கொடுக்க அப்போதும் அவள் கண்ணீர் நின்றபாடில்லை.
அவளை இப்படியே விட்டால் சரி வராது என யோசித்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து விட்டு வெளியே செல்ல அவளோ அபிஷேக்கின் கைகளை இறுக பற்றினாள்.
“அபி… எங்கேயும் போகாத. எனக்கு பயமா இருக்கு”
“இல்லடா. உனக்கு வாட்டர் எடுத்துட்டு வரேன்” என்றவன் பாலை கலக்கி எடுத்து வந்தான்.
“குடி பேபி” என அவளிடம் கொடுத்தான்.
“இல்லடா. வேண்டாம்”
“குடிடா. கொஞ்சம்” என்று அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினான்.
பாலை குடித்தவள் அவனது மடியிலேயே தூங்கி விட உறக்கம் வராமல் வெகு நேரம் அவள் கூந்தலை வருடியபடியே யோசனையில் ஆழ்ந்தான்.
*****
அடுத்த நாள் காலை அவனுக்கு வந்த போனின் சத்தத்தில் அடித்து பிடித்து விழித்தான். எப்போது அவன் உறங்கினானோ தெரியவில்லை.
அருகில் பார்க்க ஜோஸ்வினி இன்னும் எழுந்திருக்கவில்லை.
“ப்ரோ ஜோஸ்வினி இன்னும் காலேஜ் வரல” என சூர்யா போன் செய்தான்.
“போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறா”
“சன்னி ஒரு ஹெல்ப். நீங்க இன்னைக்கு யுனிவர்சிட்டிக்கு லீவ் போட முடியுமா?”
“என்ன ப்ரோ? ஏதும் ப்ராப்ளமா?”
“நீங்க வீட்டுக்கு வாங்க சன்னி. ஐ எக்ஸ்பெயின்”
“ஓகே ப்ரோ. நான் வரேன்” என்று சொல்லி போனை கட் செய்தான்.
அவன் வருவதற்குள் தனக்கு காஃபி போட்டு குடித்தவன் காலையில் ஃபிரேக்பாஸ்டிற்கு செய்ய ஆரம்பித்தான்.
அவன் செய்து கொண்டிருக்கும் போது போன் வர எடுத்து பேச ஆரம்பித்தவன் மீதி வேலையையும் வேகமாக செய்தான்.
அதற்குள் சூர்யாவும் வந்து விட அவனை வரவேற்று சாப்பிட வைத்தான்.
“சன்னி நீங்க ஜோவ பாத்துக்கோங்க. எனக்கு இம்பார்ட்டன்ட் வொர்க் இருக்கு. நான் வர எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியல. அவ கூடவே இருக்கீங்களா?”
“பாத்துக்கிறேன் ப்ரோ. நீங்க போங்க”
“அவள கரெக்டா சாப்பிட வெச்சிடுங்க” என்று கவலையான குரலில் சொன்னான்.
“டோன்ட் வொர்ரி ப்ரோ. நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லவும் சரி என சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான்.
அபிஷேக் சென்ற சிறிது நேரத்தில் ஜோஸ்வினி விழித்தவள் அபிஷேக்கை தேடினாள்.
அவளது சத்தம் கேட்டு அருகில் வந்த சூர்யாவை ஆச்சரியமாக பார்த்தாள்.
“நீ எப்போ வந்த சூர்யா?
அபி இல்லையா?”
“அவருக்கு ஒர்க் இருக்காம். சோ என்ன உன் கூட இருக்க சொன்னாங்க” என்றதும் அவளது முகம் கூம்பி போனது. உடனே கண்களில் கண்ணீர் வருவேன் என்றது.
அதை அவனுக்கு காட்டாமல் அமைதியாக திரும்பவும் படுத்து கொண்டாள்.
திரும்ப சூர்யாவின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
இதனால் பயந்த சூர்யா அபிஷேக்கிற்கு போன் செய்தான்.
“ப்ரோ”
“ஜோ ஏதாவது சாப்ட்டாங்களா?”
“இல்ல ப்ரோ. உங்கள தான் தேடினா. நீங்க இல்லனேவுடனே முகமே சரியில்ல. நான் கேக்கறதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறா”
“சரி. நீங்க பாத்துக்கோங்க. ஐ வில் கம் சூன்” என்றவன் வேலையை முடித்து வர வெகு நேரமாகியது.
அபிஷேக் வீட்டிற்கு புறப்படுகையில் சூர்யா போன் செய்தான்.
“ப்ரோ கொஞ்சம் சீக்கிரம் வாங்க. ஜோ எங்க போனானே தெரில. நான் தேடிட்டு இருக்கேன்”
“என்ன சூர்யா சொல்ற?”
“ஆமா ப்ரோ. ஏதோ கேட்டானு வாங்கிட்டு வர போனா ஆள காணோம். நானும் தேடிட்டே இருக்கேன்” என்று சொல்லவும் பதட்டத்தில் அபிஷேக் கைகளில் கார் பறந்தது.
‘அபி பொறுமைடா. இவ்ளோ ஃபாஸ்டா போனா அவள எப்டி கண்டுபிடிப்ப?’ என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்க காரை கிரிச்சீட்டு நிறுத்தினான்.
ஆனால் அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை.
‘பேபி எங்க போன?’
‘பேபி எங்க இருந்தாலும் என்கிட்ட வந்துடு’ என்று அரற்றியவன் காரை மெதுவாக ஓட்ட அவன் கண்களில் ஜோஸ்வினி தென்பட்டாள்.
அவளை பார்த்ததும் காரை பார்க் செய்தவன் வேகமாக அவளை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
ஆனால் அவளது நோக்கத்தை பார்த்தவனுக்கோ அடுத்த அடி எடுத்து வைப்பது கூட இரும்பு குண்டாக கனத்தது.
அவளுக்கு முன்னால் ஓடியவன் வேகமாக வந்த காரின் முன் விழுபவன் போல செல்ல அதை கவனித்த ஜோஸ்வினியோ பதறி போய் அவனை தடுத்து நிறுத்தினாள்.
“டேய் என்ன… என்னடா பண்ற? நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்?” என்று கதறியவள் அவனை இறுக அணைத்தாள்.
ஆனால் அவனுக்கு தான் கோபம் தீரவில்லை.
“அது உனக்கு இப்போ தான் புரியுதா? நீ எதுக்கு இப்டி நடு ரோட்ல வர? ஏதாவது சேலஞ்சா பண்ணிருக்க?”
“அபி” என்றவள் பேச ஆரம்பிக்க அவளை தடுத்தவன் காருக்கு அழைத்து சென்றான்.
“இப்போ என்ன உன் பிராப்ளம்? எந்த ப்ராப்ளம்னாலும் சூசைட் பண்ண போவியா?”
“அவன் பண்ணது என்னால ஜீரணிக்க முடில”
“நான் இருக்கேன்ல பேபி. நான் பாத்துக்க மாட்டேனா?”
“ஒண்ணு புரிஞ்சிக்கோ. உனக்கு எந்த பிராப்ளம் வந்தாலும் அது என்ன தான்டி தான் உனக்கு வரும். நீ என் உயிர்டி. உனக்கு ஏதாவது ஆக விட்ருவேனு நீ எப்டி நினக்கலாம்?”
“நான் உன் மனச தான் லவ் பண்ணேன். உன் ஒடம்ப இல்ல. நீ எப்டி இருந்தாலும் நீ என் கூட இருக்கணும். அவ்ளோ தான். இதென்ன? இத விட அடுத்த ஸ்டேஜ்ல ப்ராப்ளம் பெருசாகி இருந்தா கூட எனக்கு அதெல்லாம் முக்கியம் இல்ல. எனக்கு நீ தான் முக்கியம்” என்றவனை விழிகள் உறைய பேச்சற்று பார்த்தாள்.
“அப்டியும் நீ சாகணும்னா அந்த சாவு கூட என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் உன்கிட்ட வரணும். ஞாபகம் வச்சுக்கோ” என்று ஆவேசமான குரலில் அபிஷேக் சொல்ல அவனிடம் சரணடைந்தவள்
“சாரி அபி. ஐ லவ் யூ டா. சாரி டா. சாரி டா…” என்றவள் கதற ஆரம்பிக்க அவளை முதுகை வருடி ஆறுதல் படுத்தினான்.
“அன்ட் பேபி இன்னொரு முக்கியமான விஷயம். அந்த பிரச்சனைக்கான ஆணிவேர கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணியாச்சு”
“என்ன சொல்ற?”
“இப்போ நான் அது விஷயமா தான் உன்ன வேற வழியில்லாம விட்டுட்டு போனேன்” என்று பேச ஆரம்பிக்க சூர்யாவிடம் இருந்து போன் வந்தது.
போனை பார்த்ததும்
“ச்சே… உன்ன பாத்துட்டேனு சூர்யாட்ட சொல்லவே இல்ல” என்றபடி போனை எடுத்தவன்
“சூர்யா ஜோ ஸேஃப். நாங்க கொஞ்ச நேரத்துல வந்தறோம்” என்று சொல்லியபடி போனை கட் செய்தான்.
“பேபி உன்னோட செல்ஃபிய அவன் ஃபார்ன் சைட்டுக்கு வித்திருக்கான்”
“அ… அபி”
“பேபி கூல். அவன அரெஸ்ட் பண்ணியாச்சு. நான் இந்த 4 மந்த்ஸ் ஆவே இத பத்தின சர்ச்சிங்ல தான் இருந்தேன். அவன கண்டுபிடிக்கறது தான் ரொம்பவும் சிரமம் ஆயிடுச்சு. எவ்ளோ டெக்னிக்கல் மெம்பர்ஸ் அன்ட் போலீஸ். அவங்க இல்லேனா கண்டுபிடிச்சிருக்க முடியாது”
“அந்த போட்டோ இன்னும் இருக்கா?” என அவள் பயத்துடன் கேட்டாள்.
“ஜோ… நான் அப்பவே அந்த போட்டோ எடுத்துட்டேன். பட் இதனோட ஆர்ஜின் எங்கேனு தேட போனா அங்க எனக்கு கிடைச்ச விஷயங்கள் ரியலி ஷாக்”
“ஏன் அபி? என்னாச்சு?”
“சோசியல் மீடியால ஜஸ்ட் ஃபோட்டோ இருந்தாலே போதும். அது ஃபார்ன் சைட்ல போடறது, பொண்ணுங்க போட்டோவ அப்படியே அவங்க தப்பு தப்பா பேசற மாதிரி டெக்னாலஜி யூஸ் பண்ணி மாத்தறது, ஆன்லைன் ப்ரோஸ்ட்டியூஸன்ல இருந்து எவ்ளோ தெரியுமா பேபி? எனக்கு இத பத்தி தெரிஞ்சதுல்ல இருந்து நிம்மதியா இருக்க முடில”
“டெக்னாலஜினு எவ்ளோ கேவலமா பண்றோம்”
“அபி என்னடா சொல்ற? ஒரு சாதாரண செல்ஃபில இவ்ளோ கேவலப்படுத்தறாங்களா?”
“ஆமா பேபி. அது மட்டும் இல்ல. ஈவன் சின்ன குழந்தைங்க போட்டோ போடறது கூட எவ்ளோ கேவலமா பண்றாங்க தெரியுமா?”
“நம்ம சின்ன குழந்தைங்க போட்டோஸ் நம்ம அவங்க ஸ்மைலிய ரசிப்போம். ஆக்டிவிட்டிஸ ரசிப்போம். ஆனா இந்த கும்பல் ஜென்ட்ஸ பேச வெச்சு அத டெக்னாலஜி மூலமா குழந்தைங்க பேசற மாதிரி வெச்சு எவ்ளோ கேவலமா பண்றாங்க தெரியுமா?”
“அத ஃபெடோஸ்க்கு வித்து அதுலயும் காசு பாக்குறாங்க. அது மட்டும் இல்ல பேபி. ஒரு போட்டோனா ஒரு போட்டோ மட்டும் அவங்க போடறதுல இருக்கறதில்ல. அதுலயே 4,5 போட்டோவ மார்ஃப் பண்ணி போடறாங்க. நம்ம என்ன உலகத்துல இருக்கோம்னே தெரியல”
“இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து இன்னைக்கு சால்வ் ஆனப்புறம் தான் நிம்மதியா இருக்குடா” என்று ஜீரணிக்க முடியாத குரலில் சொன்னான்.
“அபிஷேக் ஃபோட்டோஸ் ஷேர் பண்றேனு என் ஃபிரண்ட்ஸ் இஷ்டத்துக்கு போடுவாங்க. ஆனா இப்போ நீ சொல்றத பாத்தா… ஐயோ… கடவுளே”
“இந்த ஃபெடோஸ் நியூ பார்ன் பேபிஸ் கூட விடறதில்ல பேபி. இந்த இஷ்யூ அப்போ கரெக்டா யூடியூப்ல போச்சு. அவங்க இத பேன் பண்ணாங்க. அந்த ஃப்ராப்ளம் மூலமா தான் இப்போதாவது கண்டுபிடிக்க முடிஞ்சது”
“அபி எனக்கு நீ சொல்றதெல்லாம் பாத்தா ரொம்ப பயமா இருக்குடா”
“பேபி நம்ம எவ்ளோ ப்ரீகாஷனோட இருக்கோமோ அப்போ தான் நம்ம சேஃப்டா. கவலைப்படாத” என்றவன் அவளை வீட்டிற்கு கூட்டி சென்றான்.
வீட்டிற்கு சென்றவுடன் சூர்யாவிற்கு நன்றி சொன்னவன் அவனை சாப்பிட்ட பின்பே வீட்டிற்கு அனுப்பினான்.
அடுத்த இரண்டு நாட்களில் ஜோஸ்வினியை இந்தியா கூட்டி சென்றான்.
அவனோடு விமானத்தில் அமர்ந்தவளுக்கோ பலவித யோசனைகள்.
“செர்ரி என்ன ரெண்டு நாளா திங்க் பண்ணிட்டு இருக்க?”
“அ… அது”
“சொல்லுடா”
“நீ என்ன வெறுத்துட மாட்டியே?” என்று தயங்கியபடி கேட்டாள்.
“ஜோ… வாட் இஸ் திஸ் நான் சென்ஸ்? ஏன் இப்படி உளற?”
“அந்த போட்டோ… அத நினச்சா எனக்கு எங்கயும் ஃபோகஸ் போக மாட்டேங்குது டா”
“அப்படியா… அப்டி ஞாபகம் வந்தா நீ என்ன மட்டும் ஃபோகஸ் பண்ணு… போதும்” என்றவன் அவளை நெருங்க
“போடா. பிளைன்ல வெச்சு என்ன பண்ற?”
“என் ஒய்ஃப் நான் என்ன வேணா பண்ணுவேன்”
“வர வர நீ ரொம்ப பேட் பாயா மாறிட்டு வர”
“ஒய்ஃப் கிட்ட பேட் பாயா தான் நடந்துக்கணும் பேபி” என்று அவளை நெருங்கியவன் அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து அமைதியானான்.
“ஏன் பேபி இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க? அது மறந்துடுடா. ஐ ஆம் வித் யூ” என்றவன் அவளை இறுக அணைக்க அவளுக்கு பொலபொலவென்று கண்ணீர் வந்தது.
“ச்சே… என்ன பேபி சின்ன குழந்தையாட்டம்? நீ என் பேபிமாடா. தேவையில்லாம குழப்பிக்க கூடாது”
“நம்ம இன்டியா இப்போ எதுக்கு போறோம்னு தெரியுமா?”
“அவங்களுக்கு முறையா தண்டனை வாங்கி குடுக்க”
அவனது தோள் வளைவில் சாய்ந்தவள் திடுக்கென்று நிமிர்ந்தாள்.
“ஆமாடா. அவங்க ரெண்டு பேரும் என் கஸ்டடில தான் இருக்காங்க. அவங்கள பனிஷ் பண்ண தான் போறோம். டோன்ட் வொர்ரி” என்று ஆறுதல் சொல்ல அவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்தவள் இப்போது அவன் முகம் முழுவதும் சந்தோஷத்தில் முத்தமிட்டாள்.
அவளது முத்தங்களை சந்தோஷமாக வாங்கி கொண்டவன்
“பேபி ப்ளேன்” என்று அவளை போலவே சொல்லி காட்ட “போடா” என்று சிணுங்கி கொண்டே அவன் தோள் வளைவில் சாய்ந்தாள்.
அடுத்த சில மணி நேரங்களில் விமானம் இந்தியா சென்றடைய அவர்களை வரவேற்க ஆதவன் காத்திருந்தான்.
