அடுத்த நாள் காலையில் ஜெனிஃபர் போன் அடிக்கும் சத்தத்தில் எழுந்தாள்.
“ஹலோ” என்றவள் தூக்க கலக்கத்தில் சொல்ல அங்கே அவனோ “பக்கி இப்பதான் எந்திரிக்கறியா? இவ்வளவு நேரம் என்ன பண்ண?” என்ற அந்தப்பக்கம் சாம் பொரிந்தான்.
“எப்ப எழுந்தா உனக்கு என்னடா? எதுக்குடா போன் பண்ண?” என திருப்பி கேட்டாள்.
“நேத்து ஒரு குழந்தை அழுதுதாமே… அதான் என்னனு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்” என்று கேட்டான்.
“அது ஒன்னும் இல்ல சாம். சும்மா கொஞ்சம் மூட் அவுட். அவ்ளோதான்” என்று சமாளித்தாள்.
“நீ ஓகே தானடா? இல்ல கெளதம் கூட ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான்.
ஒரு நிமிடம் அவனது கேள்வியில் திணறியவள் “அப்படி எல்லாம் எதுவும் இல்ல சாம். என்னவோ கொஞ்சம் கஷ்டமா இருந்தது. நத்திங் பிராப்ளம் சாம்” என்று கூறினாள்.
ஆனால் அவனோ அவளது ஒரு நிமிட அமைதியில் அவளை கண்டு கொண்டவன் கௌதமை நினைத்து பல்லை கடித்தான்.
“நீ இப்போ ஊர்ல இருக்க ஜென்னி. எந்த பிரச்சினையும் மைண்ட்ல வைக்காம என்ஜாய் பண்ணிட்டு வா. என்ஜாய் பண்ணிட்டு உன் ஸ்டடி ஹாலிடேஸ் ஞாபகம் இருக்குல்ல. அப்படியே ஒழுங்கா எக்ஸாம் பிரிப்பேர் பண்ணிட்டு வா” என்று கூறியவன் ஏதேதோ பேசி அவளை சிரிக்க வைத்து அவளது மனநிலை மாற்றிய பிறகே ஃபோனை வைத்தான்.
போனை வெயிட்டானுக்கு கெளதமின் ஞாபகம் வந்தது.
‘நான் உன்னை சும்மா விடமாட்டேன் டா. ஊர்ல போய் கூட என் பேபி நிம்மதியா இல்ல’ என்று மனதிற்குள் திட்டியவன் கௌதமின் நம்பருக்கு கால் செய்தான்.
முதல் முறையே கௌதமை பற்றிய அபிப்ராயம் அவனுக்கு சரியாக இல்லாததால் எதற்கும் இருக்கட்டும் என்று ஜெனிஃபரின் பாதுகாப்புக்காக அவனது நம்பரை எடுத்து வைத்திருந்தான்.
அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்த கௌதம் போன் அடிக்கவும் எடுத்து “ஹலோ” என்றான்.
“கௌதம் என்னடா உங்க ரெண்டு பேத்துக்குள்ள சண்ட? எதுக்கு நீ ஜென்னிய அழ வெச்சிட்டே இருக்க?” என்று கேட்டான்.
‘என்னது ஜென்னியா?” என்று யோசித்தவன் போன் நம்பரை செக் செய்ய அதுவோ வெறும் நம்பரை மட்டும் காட்டியது.
“ஹலோ யார் நீங்க? நாங்க சண்ட போடுவோம், சேந்துப்போம். அத கேக்க நீ யாருடா? எங்களுக்கு இடையில நீ எதுக்கு வர?” என்று எரிச்சலாய் கேட்டான்.
“ஆமாடா. நீ அவள ஹெர்ட் பண்ணிட்டே இருப்ப. நான் பாத்துட்டு சும்மா போகணுமோ? அவ இல்லேனா நீ ஜெயில்ல இருந்து வெளிய வந்திருப்பியா?” என்று இறுகிய குரலில் சாம் கேட்டான்.
‘ஜெயிலா? அது எப்படி இவனுக்கு தெரியும்?’ என யோசித்தவன் “டேய் ஜெயிலுக்கு போறன். பப்புக்கு போறேன். உனக்கென்ன வந்தது? ஃபர்ஸ்ட் நீ யாரு? எங்கள வாட்ச் பண்றியா நீ…?” என்று சொல்லி கொண்டு வந்தவன் திடீரென்று ஞாபகம் வந்தவனாக “ஹே… சாம்… நீ என்ன என் செல்லுக்கு கூப்ட்ருக்க? ஜென்னி நல்லாருக்கா தான?” என பதறி போய் கேட்டான்.
சாம் தான் இவனது செய்கையில் திணறி நின்றான். இவனை பாம்பென்றும் நினைக்க முடியவில்லை. பழுதென்றும் நினைக்க முடியவில்லை என்று யோசித்தவனுக்கு நேற்று ஜெசிகாவுடன் போன் பேசியது ஞாபகம் வரவும் அவன் மேல் கொலை வெறி வந்தது.
“டேய் உன் நடிப்பெல்லாம் போதும்… உன்ன லவ் பண்ணி அவள கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விட்ருக்கியா நீ?” என்று கோபமாய் கேட்டான்.
“லிஷன் சாம். எங்க பிரச்னைய நாங்க சால்வ் பண்ணிப்போம். நீ எங்களுக்குள்ள வராத” என்று இறுகிய குரலில் கௌதம் கூறினான்.
“ஆமாடா. நான் கேப்பேன்டா. எப்பயும் என் பேபி ஊருக்கு போனா எவ்ளோ சந்தோஷமா இருப்பா தெரியுமா? ஆனா… இப்போ அப்பா, அம்மா கூட இருக்கறப்ப கூட நிம்மதியா இருக்க விட மாட்டேங்கறியே? நீ என்ன சொன்னாலும் நான் அமைதியா போகணுமா?” என்று கேட்டான்.
“என்ன சொல்ற? ஜென்னி ஊருக்கு போய்ட்டாளா?” என்று அதிர்ச்சியாய் கேட்டான் கௌதம்.
“ஏன் உனக்கு ஒண்ணும் தெரியாது? அவ உன்கிட்ட சொல்லாம போயிருப்பா? இத நான் நம்பணுமா?” என்று கேட்டான்.
“ஆமாடா. எங்கிட்ட சொல்லாம போய்ட்டா. தெரிஞ்சிருந்தா ஊருக்கு போகவே விட்டிருக்க மாட்டேன்” என்று ஆத்திரமான குரலில் கூறினான்.
“ஏய் அத டிசைட் பண்ண நீ யாரு?” என்று இங்கே சாமுக்கு கோபம் எகிறியது.
“நான் ஜென்னியோட லவ்வர். நான் சொன்னா தான் அவ ஊருக்கு போக முடியும்” என்று கௌதம் உச்சகட்ட ஆத்திரத்தில் கூறினான்.
“ஹவ் டேர் யூ? என்கிட்டயே நீ இப்படி பேசுறியா?” என்று இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை வலுத்தது.
“ஏன் நீ என்ன பெரிய பருப்பா? அவ ஊருக்கு போனா தான் அப்படியே அவள அரெஸ்ட் பண்ணி வெச்சிக்கிறேங்களேடா? அவள ஊருக்கு வந்தா என்கிட்ட ஒரு வார்த்த பேச விடறீங்களா? நீங்க ரிலேஸனாடா? சேட்டிஸ்ட் நீங்க” என்று ஆத்திரமாய் கேட்டான்.
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன? நீயே அப்பா, அம்மா இல்லாத ஒரு அநாத. உனக்கு ஃபேமிலி பத்தி என்னடா தெரியும்? அதுல இருக்கற பாண்டிங் பத்தி உனக்கு எப்படி புரியும்? குடும்பத்துல ஒரு கஷ்டம் வந்தா அத எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து ஹெல்ப் பண்ணுவாங்கனு யாரும் இல்லாத உனக்கு எப்படி தெரியும்? ச்சே… உன்ன போய் ஜென்னி எப்டி லவ் பண்ணா? அவளோட பழகியும் கூட உனக்கு உறவுகளோட அரும தெரியல. வைடா போன… உன் கிட்ட பேசறதே வேஸ்ட்” என்றவனின் இறுகிய பேச்சில் சிலையாய் நின்றான் கௌதம்.
“ஹலோ… போன வெக்க சொன்னா என்னடா பண்ற? சத்தத்தையே காணோம்” என்று சாம் எரிச்சலான குரலில் கேட்டான்.
“சாம் திஸ் இஸ் தி லிமிட். எனக்கு அம்மா, அப்பா இல்லைனு குத்திக் காட்றியா நீ?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டான் கௌதம்.
“உனக்கு உண்மைய சொன்னா குத்தி காட்டறது மாதிரி தெரிஞ்சா ஐ டோன்ட் கேர்டா. ரிலேஷன்ஸ் பத்தி உனக்கு தெரியலனு தான் நான் சொல்ல வரேன்” என்று கூறினான் சாம்.
“நீங்க தான? வந்தா ஒரு போன் கூட ஃப்ரியா பேச விடாம பண்ணுவீங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரைவேட் ஸ்பேஸ் இருக்கும்னு கூட தெரியாத சென்டிமென்ட்டல் இடியட்ஸ் நீங்க. நீ என்ன பத்தி சொல்றியா?” என்று ஆக்ரோஷமாக கேட்டான் கௌதம்.
கௌதம் பேசுவதை கேட்டவன் இதற்கு மேல் இவனிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என புரிந்தவன் “இங்க பாரு. நாங்க இப்படி தான். நெக்ஸ்ட் டைம் இதே மாதிரி மைன்ட்செட்டோட பேசினே… இப்படிப்பட்ட ஒருத்தன் எங்க ஜென்னிக்கு தேவையே இல்லனு நானே வீட்ல சொல்லி ஜென்னியோட படிப்ப ஸ்டாப் பண்ணிடுவேன். மைன்ட் இட்” என்று கோபமாக கத்தியபடி போனை வைத்தான் சாம்.
அவனது பேச்சை கேட்டவன் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தான். அவனுக்கு ஆத்திரத்தில் உடல் நடுங்கியது.
‘இவன் எங்க ரெண்டு பேத்தையும் பிரிப்பானாமா? என்ன தெனாவட்டா சொல்றான். ஏய் ஜென்னி… இப்போ நீ எங்கேடி இருக்க?’ என்று ஆத்திரத்துடன் நினைத்தவன் ஜென்னிக்கு கால் செய்ய போன் அடித்து கொண்டே இருந்தது.
அவன் நிறைய முறை அழைப்பு விடுத்தும் அலைபேசி எடுக்காததில் ஆத்திரம் கொண்டவன் அறையில் உள்ள பொருட்களை கீழே போட்டு உடைத்தான்.
இவன் ஆத்திரத்தில் பொருளை உடைக்க அங்கோ அவள் நீண்ட நாள் பார்க்காமல் இருந்த தனது சித்தி குடும்பத்தை பார்த்ததில் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தாள்.
தொடரும்
