எப்பொழுதும்போல தனது கைகளை தேய்த்துக் கொண்டு கண்களில் ஒற்றியவாறே எழுந்து தனது காலை வேளையின் வேலைகளை ஆரம்பித்தாள் தேனு. அவளுக்கொன்றும் இன்று மனதில் பாரமில்லை.மாறாக தனது பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமே. தனது தவத்திர்க்கான பலன். இனி அரசு வேலைகளுக்காக விண்ணப்பிக்க ஆரம்பிக்கவேண்டும். மத்திய அரசு வேலை வங்கிப்பணி எல்லாவற்றிர்க்கும் விண்ணப்பிக்க ஆரம்பிக்கணும். மூன்றாண்டுகளில் அவள் எண்ணப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதல் இது. நண்பகல் பதினோருமணியளவில் முடிவுகள் வெளியாகும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது..எப்படியும் இரண்டு தங்க மெடல் இவளுக்கு காத்திருப்பதாக ஏற்கனவே துறை தலைவர் சொல்லி விட்டார். ஆனாலும் ஒரு பரபரப்பு. முடிவுகள் வெளியானதில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி (இரண்டாம் இடம்) இவளுக்கு கிடைத்திருந்தது. தந்தைக்கு அழைத்தாள்.
அப்பாவிடம் அனைத்தையும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டாள். “தேனு நா ஆபீஸ் வேலையா அம்பாசமுத்திரம் வந்திருக்கேன்மா ..நீயே அம்மாக்கு,அத்தான்-அக்கா எல்லோருக்கும் சொல்லிரு.நா திரும்ப ரெண்டு மூணு நாள் ஆயிரும். நீ எப்ப வீட்டுக்கு திரும்பு?”..என்றார்.
“நாளாக்கி சாயங்கால வண்டிக்கு பதிவு பண்ணிட்டேன்பா. எப்போ உங்கள பாக்கபோறேன்னு தோணுது..என்றுவிட்டு தான் வீட்டுக்கு பேசினாள்.
மறுநாள் ஓரளவிர்க்கு தனது மூட்டைகளை கட்டியவளுக்கு ஒன்று புரிந்தது..எல்லாவற்றையும் ஒரே நாளில் அள்ளிச்செல்ல முடியாது என்று.முடிந்தவற்றை அள்ளிக்கொண்டு வீட்டிர்க்கு பறந்தது அந்தப்பறவை.
மும்பை மருத்துவமனை. பெண்மருத்துவருடைய அறை வாயிலில் மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே மருத்துவருடைய அழைப்பிர்க்காய் வெளியே தனித்திருந்தான் ரிஷி.அவனுள்ளே தனது மருத்துவர் குறிப்பிட்ட விஷயங்கள் மூளையில் மின்னிக்கொண்டிருந்தது.
ஒருவித பரபரப்புடன் ரிஷி காணப்பட்டான். உள்ளே நிலா மருத்துவரிடம், “என்னோட கருகலைப்புகள் பத்தி அவருக்கு ஒண்ணும் சொல்ல வேணாம் டாக்டர்..இன்ஃபாக்ட் அவருக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல….முதல் குழந்தை மட்டும்தான் அவரோடது. ஸோ ..பிளீஸ் அவருக்கு சம்மந்தம்மில்லாத விஷயங்கள அவர்கிட்ட டிஸ்கஸ் பண்ண வேணாமே” என்ற நிலவை ஒருவித அருவருப்புடன் பார்க்க ஆரம்பித்தார் அந்த பெண் மருத்துவர்.
“நீங்க உங்க கணவர உள்ளே வரசொல்லுங்க..நீங்க வைட் பண்ணுங்க. உங்க ஹெல்த் கண்டிஷன் கண்டிப்பா அவருக்குத் தெரியணும்..”என்ற அவரது குரலே நிலாவிர்க்கு மருத்துவரது நிலையை கூறியது..ஒரு தோள் குலுக்களுடன் வெளியே சென்ற நிலாவை நினைத்து மருத்துவருக்கு இன்றைய இளம்பெண்கள் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள் என்ற குழப்பமும் ரிஷியிடம் பரிதாபத்துடன் கூடிய கோவமும் வந்தது..பொண்டாட்டி இப்பிடி இருக்காளே .அவன்கிட்ட என்னவோ என்று அவர் மனம் வேறுவிதமாய் யோசனை செய்தது. ஆனால்… முதல் குழந்தை இவனது என்று நிலா சொன்னதில் மருத்துவரது சந்தேகம் தெளிந்தது..கோவம்?
ஒரு மருத்துவராக பல்வேறு விதமான நோயாளிகளை கையாளும்பொழுதும்,மருத்துவர்களும் மனிதர்கள்தானே? உணர்ச்சிகளையும்,ஆதங்கத்தையும் மறைக்க பழகி வைத்திருந்தாலும்,சில சமயங்களின் அவர்களியும் மீறி ஆயாசம் வெளிப்பட்டுவிடுகிறது!
உள்ளே வந்த ரிஷியிடம் மருத்துவர்,
“வாங்க ரிஷி..உங்க மனைவியின் நிலை தெரியுமா?
அவங்களுக்கு நிறைய கருக்கலைப்புகள் நடந்திருக்கு..சிகரெட்,டிரிங்கிங்க்…இதத்தவிர கரு உண்டான நேரத்துல வன்மையா உடலுறவுன்னு நிறைய காரணங்கள்.நீங்க இத ஏன் கவனிக்கல? இப்போ அவங்க கர்ப்பப்பை ரொம்ப வீக் ஆகிடுச்சு..இனி அவங்க இன்னொருமுறை குழந்தைக்கு முயற்சி பண்ணா உயிருக்கு பிரச்சனை ஆகிடும்..இப்போ மெடிசென்ஸ் தரேன்.ட்ரீட்மெண்ட் கன்டினியூ பண்ணனும்..மெடிசென்ஸ் எடுக்கும்பொழுது கண்டிப்பா மத்த விஷயங்கள் கூடாது. அவங்கள வரச்சொல்லுங்க” என்று ஓரளவிர்க்கு அவளது நிலையை தெளிவாகவே ரிஷியிடம் கூறிவிட்டார்..இனி அவன்தான் கவனிக்கவேண்டும் என்றும் முடிவு செய்துக்கொண்டார், ..ஆனால் ..கோடி ஊசிகளை வைத்துக்குத்தினாலும் வாராத அளவிர்க்கான வலியை அனுபவித்தான் ரிஷி..அவளிடம் எதையும் காண்பிக்காமல் அமைதி காத்தான் ரிஷி.இதற்க்குமேல் கொட்டிக்கவிழ்க்க ஏதுமில்லை என அவன் உள்மனம் கொதிக்க ஆரம்பித்திருந்தது.உள்ளே நிலாவை மருத்துவரிடம் அனுப்பிவிட்டு தன்னை சமன் செய்துக்கொள்ள முயற்சிகளை செய்யலானான். விஷயம் நிச்சயம் பெரும் விபரீதமே!தொழில் பிரச்சனைகளை வேறு விதமாக தீர்வு காணலாம்.வாழ்க்கை பிரச்சனைகள்? சென்னையிலேயே இருந்திருக்க வேண்டும் இங்கு வந்ததே பெரும் பிரச்சனை..உள்மனம் வாதங்களை அடுக்கத்தொடங்கியது
அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.அவள் வயிற்றின் குழந்தைகளுக்குத் தான் காரணமில்லை என்று.ஆனால்,தன்னை அதிகம் வீட்டில் அல்ல..நாட்டில் கூட தாங்கவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தது அவன் மனைவிதானே! என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியாமல் இல்லையே…கூடலின் தருணங்கள்,மோகத்தில் மெழுகென கரையும் அவளது மென் தேகம், அவன் மீது… ஹும்ஹும்… அவன் தரும் சுகத்தின் வெளிப்பாடாய் அவளது பிதற்றல்கள். புனே பயணம் அனைத்தும் அவன் கண்முன் படமாய் விரிந்தது. “தான் செய்த தவறு அவளை முழுமையாக காதலித்ததும் நம்பிக்கை கொண்டதும்தான்…நான் காதலை விரும்பினேன்…அவளுக்கு தேவைபட்டது..என் பணமும், தேவைப்படும்பொழுது உடற்பசி தீர்க்கும் உடலும்..ஆகக்கூடி பணம் தரும் இயந்திரமாய்,ஆண் விபச்சாரியாய் என்னை பாவித்திருக்கிறாள்” என்று அவன் மனம் வாதங்களை முன் வைத்தது.இனி அவளைத் தொடுவதில்லை என முடிவு செய்துக்கொண்டான் . நிலாவிர்க்கு இதனால் பாதிப்பு ஏதுமில்லையே.! அவளுக்குத் தேவையான பணம் மட்டும் கொடுப்போம்.நடந்த விஷயங்களை இருபக்கப் பெற்றோரிடமும் கூறிவிடலாம்..தவறுகள் பெரிதாக மாற வாய்ப்புள்ளது..ஒருவேளை உயிர் ஆபத்துக்கள் நேர்ந்தால் நினைக்கும் பொழுதே உடல் குலுங்கியது ரிஷிக்கு…இத்துணை நடந்தும் மறந்தும் வாயை விடாத மனைவிமேல் சந்தேகம் வலுத்தது.அவள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிப்பேசக்கூடும்.. இரண்டு நாட்களில் சென்னை செல்ல ஏற்கனவே முடிவாகி இருந்தது. ரிஷி தனக்கு எதுவும் தெரிந்ததாக நிலாவிடம் காட்டிக்கொள்ளவில்லை. வீடு வந்து சேர்ந்ததும் தனது அறைக்குள் பாந்தமாய் முடங்கினார்கள் இருவரும். மருத்துவர் கூறியது என்னவென்று மறந்தும் வினவவில்லை நிலா..எப்படியும் தனக்குப் பாதகமானவை எனில் தானே வரட்டும் என்று காத்திருந்தாள்.
இரட்டை சடை பின்னி இருபக்கமும் தொங்குமாறு பூச்சூடி கால் கொலுசு இசைக்க குடை சிமிக்கி அசைந்தாட அத்தான் என்று கொஞ்சிக்கொண்டு பின்னாலேயே சுற்றும் பூனைக்குட்டி பதினொரு வயது நிலா..எங்கு சென்று மறைந்தாள்? பலவருடங்களுக்குப் பிறகு வளர்ந்த மங்கை நிலாவை சுற்றியிருப்போர் சொல் கேட்டு மாலை இட்டது பெரும் பிழையானதே! என்று ரிஷியின் மனம் வாய் விட்டு கதறியது. நானும் அவளை பார்த்து பேசி பழகாமல் அத்தை மகள் ரத்தினமென …யோசியாமல் முடிவெடுத்தது தவறுதான். வெளியில் பெண் பார்த்தால் இப்படித்தான் சம்மதம் தெரிவித்திருப்பேனா..என வீட்டு பெரியர்வகளுக்காய் வாதாடியது மனதின் இன்னொரு பகுதி.இரு வேறு வாதாடல்களுக்கு பதில் கூற இயலாமல் தவித்தான் ரிஷி.அயர்ச்சி மிக கண்கள் தாமே மூடிக்கொண்டன. கண்ணீர் தாமே கீழிறங்கி வழியலானது …ஆண்மகன் அழலாமா?
கண்ணீர் ஆண் பெண் பேதமெல்லாம் பார்பதில்லை!அவன் காதல் அவனைத் தோற்கடித்ததோ?
தேனு .மூன்று வருடங்களில் பிரிந்திருந்த நாட்களுக்கும் சேர்த்து வீட்டில் குதியாட்டம்தான்..கொண்டாட்டம்தான்.!! ஏடி, கொஞ்சம் அடக்கி வாசி.தாங்கல என்று அக்கா அங்கலாய்க்க தன் மகளின் உள் ஏக்கம் புரிந்த பெற்றவர்கள் மனமோ அவளுக்காய் இரக்கப் பட்டது.
“அம்மா ..பாதி சாமந்த்தான் எடுக்க முடிஞ்சது ..இந்த மாசம் முடியும் முன்னே மத்தத எடுக்கலான்னா அடுத்தமாச வாடகை கட்டணும் ..நா சென்னை போயிட்டு ரெண்டொரு நாள்ல திரும்பிறேன்.. அத்தான் கிட்ட டிக்கெட் போட சொல்லுறேன் என்றாள்.”வேறு வழி இன்றி பெற்றோரும் அவள் சென்னை சென்று வர ஏற்பாடு செய்தனர்.
தேனு தங்கியிருந்த விடுதித் தோழியிடம் தன் காதலியை தூது விட்டு தேனு சென்னை வரும் விபரங்களைத் தெரிந்துக்கொண்ட கருநாகம் அவளுக்காய் திட்டம் வகுத்தது. அதன் கண்களில் காம அக்னி..உதிர்க்கும் வார்த்தைகளிலோ கடும் விஷம்…
தவறே செய்யாவிட்டாலும் பெண்களை வேட்டையாட முயலும் ஆண்கள் ..தப்பிக்க இயலாமல் சீரழியும் பெண்கள் ஒருபுறம்…
பெண்களை மரியாதைக்குரியவர்களாய் போற்றும் ஆண்கள், அவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் பெண்கள்….மற்றொருபுறம்”தேனு கடிபடாமல் தப்பிக்க இறைவனை வேண்டுகிறேன்!”ரிஷி நிலைதான் மீட்பது கடினம் என்பது புரிகிறதே!
அதிக மதிப்பெண்களுடன் தனது பட்டப்படிப்பை முடித்த மகளை நினைத்து எந்த பெற்றோருக்குத்தான் பெருமை இருக்காது?இதுவரை அதிகம் ஆசைப்படாமல் மனதை ஒர்முகப்படுத்தி தனக்குத் தேவையானதை சரியானபடிக்கு செய்துக்கொள்ளும் தேனுவை நினைத்து தான் கண்ணே பட்டுவிடும் என அவர்கள் நினைக்கும் அளவிர்க்கான அருமை மகளவாள் தேனு.மேலே படிக்கும்படிக்கு வெற்றிவேல் சொன்ன பொழுது,”இல்லப்பா..எப்படியும் இந்தத்துறைல வேலைக்குப்போனா நிறைய சாதிக்கலாம். குடும்பம்னு வந்தாச்சுன்னா வேற பிரச்சனைகள் வரும். வேலைய விட மனசு வராது..மேல படிச்சு என்ன செய்ய..அதுக்கு பதிலா ஏதாச்சும் கவர்ன்மெண்ட் வேலைன்னா வேற எந்த பிரச்சனையாலும் வேலைய விட வேண்டி இருக்காதுன்னு தோணுதுப்பா..நானு மேல படிக்கல.. நீங்க குடுத்த படிப்புக்கு காலம் முச்சூடும் வேலைக்கிப்போய் வர முடிஞ்சாலே சந்தோஷப்படுவேன்,”என தெளிவாகவே முடித்துவிட்டாள்..அதுவும் சரிதான்..அவளுக்கேற்ற வரன்..அவர்கள் இனத்தில் கிடைத்தாலே போதும்..என தேற்றிக்கொண்டார் வெற்றி..இது தான் தேனுவின் குணம்…நடபிற்க்கு மேலே அவள் ஆசைப்படுவதில்லை..கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாய் வாழவே விருப்பம்.ஆனாலும், சென்னை வந்து படிக்கும் அவளாசையால் நிறையத்தான் இழுத்துவைத்துக்கொண்டுள்ளாள் ..
அவள் சென்னை புறப்படும் நாளும் வந்தது. வருடக்கணக்கில் மகளை பிரிந்திருந்த வேலுத்தம்பதிக்கு இருநாட்களுக்கான அவளது பயணம் கண்ணீரை வரவழைத்தது….தன் அம்மாவின் முகத்தையே பார்த்துப்பேசிக்கொண்டு வந்த தேனுவிர்க்கு கால் தடுக்கி விழப்போக,” நீ சென்னை போகவேணாம் புள்ள.அடுத்தவாரம் அப்பாவையோ,மாமாவையோ கூட கூட்டிக்கிட்டு போகலாம்,இப்போ வீடு போகலாம் வா..”என்று அழைக்கும் தாயிடம் சிறு குழந்தையின் தவிப்பைக்கண்ட தேனுவிர்க்கு சிரிப்பாய் இருந்தது..
“இல்லம்மா ..இங்கன பிள்ளையார் கோவில் போயிட்டு,தண்ணி குடிசிச்சிட்டுசித்த ஓக்காந்துட்டு கெளம்பறேன் ஒகேயா..”.என்று செல்லம் கொஞ்சியவாறே கோவிலுக்கு சென்றாள்..’போகாதே என வாய் திறந்து சொல்ல இயலாமல்..பிள்ளையாரும் சோகத்தில்…. அவரும்தான் என்ன செய்வார்…தேனுவின் அம்மா வாயிலிருந்து போகவேண்டாம் என சொல்லி ஆயிற்று… காலை தடுக்கிவிட்டு தடுத்தாயிற்று…இனி செய்வதற்க்கு ஒன்றுமில்லை என தோன்றியவராய்..சென்று வா மகளே..விதி உன்னை வைத்து விளையாடும் விளையாட்டில் வெற்றி பெறு’ என மௌனம் சாதித்தார். நடப்பதை பார்த்து விதியும் தேனுவைப் போலவே சிரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது.
“மகாகாளியின் முழு அருள் பெற்ற சாகுந்த்தலம் இயற்றியமகா கவி காளிதாசர்…அவர் வாழ்வு முடியும் தருவாயில்காளி தேவி மானுட உருவில் தோன்றி தெற்க்குப்பக்கமாய் போக வேண்டாமென தடுத்தாளாம்…ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் காளிதாசர் சென்று கொல்லப்பட்டாராம்.” .படித்த ஞாபகம்..இப்பொழுது தேனுவைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்தக்கதை தோன்றுகிறது..லோக மாதா சொல்லியே எடுபடாத ஒருவிஷயம்…தேனுவின் தாய் சொல்லியா எடுபடும்…போ…கா…தே…….! விதி நிச்சயம் கொடிய..வலிய..கரங்கள் கொண்டதுதான்…நம்புகிறேன்!
தேனு ரயிலில் ஏறினாள்….வண்டி நகரும்பொழுது அவளையும் அறியாமல் கண்கள் தாமாக தன் வேலையை செய்தது.கிளம்பியது தவறோ என ஒரு மயக்கம். இரு நாட்கள் தானே..என மனதின் ஆறுதல் மொழி..உள்ளுணர்வு வெகு தாமதமாய் வேலை செய்ய ஆரம்பித்தது…பிரபாகர் எனும் இரண்டுகால் ஜந்து அதே பெட்டியில் தன் நண்பர்களுடன் இவளுக்காக அமர்ந்திருப்பது தெரிந்திருந்தால்,நிச்சயம் ஒழுங்காய் செல்ல வேண்டிய வாழ்க்கைப்பாதை மாறி இருக்காது. விழுப்புரம் வரை ஒன்றும் பிரச்சனைகள் இல்லை… விழுப்புரத்தில் தேனுவின் தண்ணீர் போட்டில் நீர் தீர்ந்து விட்டது… விழுப்புரம் ஜங்க்ஷனில் பிரபாகரனின் லீலையில் மயக்க மருந்து கலந்த தண்ணீரை விற்பனையாளன் உருவில் வந்த அவனது நண்பனிடம் தேனு வாங்கிவிட்டாள்.
செங்கல்பட்டில்…தேனு பிரபாகர் கும்பலால் அவர்களுடன் இறக்கி அழைத்து செல்லப்பட்டா அதுவும் அரை மயக்க நிலையில். பெண்களுக்கான பாதுகாப்பு கலைகளை கற்றுக் கொடுத்தாலும் இதுபோன்ற சூழ்நிலையிலிருந்து தப்பித்து வருவது எஞ்ஞனம் ? விடை தெரிந்தால் சொல்லுங்கள்.நானும் தெரிந்து கொள்கிறேன்.
