அத்தியாயம்- 2
பின் மற்ற சடங்குகள் நல்லப்படியாக முடிய… அடுத்த மாதம் இறுதியில் சுப முகூர்த்ததில் திருமணம் வைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.
மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக வந்த மற்றவர்கள், வீட்டின் பின் புறம் நடக்கும் பந்தியை நோக்கி சென்று விட்டனர்.
தாட்சாயிணியோ “பொண்ணையும் மாப்பிளையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட அனுப்பிவிட்டார்.
தில்லைநாதனோ “ஆராதனாம்மா இங்க வாடா” என்று குரல் கொடுக்க,
அவர் அருகில் நின்ற கௌசல்யாவோ “இப்போ எதுக்கு அவளை கூப்பிறீங்க” என்று மெல்ல கேட்டாள்.
மனைவியை திரும்பி முறைத்து பார்த்தவர், ஆராதனா அவர் அருகில் வருவதை பார்த்து தன் முகத்தை சாதாரணமாக வைத்தார்.
“சொல்லுங்க பெரியப்பா” என்றாள் கனிவுடன்.
தில்லைநாதன் மென்புன்னகையோடு “அக்காவையும் மாமாவையும் சாப்பிட அழைச்சிட்டு போம்மா” என்று சொல்லி விட்டு அபர்ணாவை அருகில் அழைத்தார்.
ஆராதனா “சரி பெரியப்பா” என்று சொன்னவள் திரும்பி,
“வாங்க மாமா, வா சௌந்து” என்று இருவரையும் பந்தி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.
அவர்கள் அந்த பக்கம் போகவும் அபர்ணா அவளின் பெரியப்பா அருகில் சென்று சிறிப்பிள்ளைகளுக்கான துடுக்கு தனமான பேச்சில் “சொல்லுங்க பெரிஸ்” என்றாள்.
அவளின் பெரிஸ் என்ற சொல்லை கேட்ட தில்லைநாதன் நன்றாக சிரித்தவிட்டு “ரதியை பந்திக்கு அழைச்சிட்டு போம்மா” என்றார்.
அபர்ணாவும் சரி என்பது போல் தலையை ஆட்டியவள் எந்த தயக்கமும் இன்றி உரிமையோடு ரதியின் கரத்தை பிடித்து பந்தி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.
ரதியோ அவளை மென்புன்னகையோடு தொடர, அங்கே கேஷவ் அருகில் வெறுமையாக இருந்த இடத்தில் அவன் தங்கையை அமர வைத்து வாழை இலை போட்டாள்.
ஆராதனாவோ சௌந்தர்யாவிற்கும் கேஷவ்விற்கும் பார்த்து பார்த்து பறிமாறிக் கொண்டு இருக்க.
அங்கே கௌசல்யாவுடனும் தில்லைநாதனுடனும் வந்த தாட்சாயிணியை பார்த்ததும் அவர்களை மணமகன் மணமகள் அமர்ந்து இருந்த நேரெதிர் புறத்தில் அமர வைத்து அவர்களுக்கும் பறிமாறினாள்.
தாட்சாயிணி ஆராதனாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு இலையை பார்த்தவர் உள்ளம் நிகழ்ந்தது.
சிறுபெண்ணாக இருந்தாலும் வாழை இலையில் முதலில் இனிப்பு வைப்பது தான் நல்ல வழக்கம் என்று அறிந்து வைத்து இருப்பதை பார்த்து மனநிறைவு அடைந்தார்.
அவருக்கோ ஆராதனாவின் இத்தனை பொறுப்புடன் இருப்பதை பார்த்ததும், சௌந்தர்யாவும் பொறுப்புடனே இருப்பாள் என்று எண்ணினார்.
ஒருவேளை அதெல்லாம் பொய்யாக போகும் என்று அவர் அறிந்துக் கொள்ளும் நிலை வந்தால்? தாட்சாயிணியின் முடிவு என்னவாக இருக்கும்?
பின் அனைவருக்குமே ஆராதனாவே பார்த்து பார்த்து பறிமாற, ரதியை அழைத்து வந்த அபர்ணாவோ பசியால் ரதியின் அருகில் அமர போனாள்.
அதை பார்த்த சௌந்தர்யாவோ கோபமடைந்து சீற்றத்துடன் “ஏய், கொஞ்சம் கூட அறிவு இல்ல. இப்படி தான் நாகரீகம் தெரியாம உட்காருவீயா. பொண்ணு வீட்டு காரங்களும் மாப்பிள்ளை வீட்டு காரங்களும் சாப்பிட்டு இருக்கோம் தெரிதுல. நாங்க சாப்பிட்டு முடிச்சதும் அப்புறம் உட்கார்ந்து கொட்டிக்கிட்டா என்ன” என்று வார்த்தைகளால் பொறிந்து தள்ளினாள்.
சௌந்தர்யாவின் பேச்சை கேட்ட அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள்.
தில்லைநாதனுக்கும் கௌசல்யாவிற்கும் சம்மந்தியம்மா முன்னால் இப்படி நடந்துக் கொள்கிறாளே என்ற அச்சம் எழ,
தாட்சாயிணிக்கோ சௌந்தர்யாவின் இந்த பேச்சி கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மனதில் இருந்த சௌந்தர்யாவின் மாயப் பிம்பத்தில் முதலடி விழுந்தது போன்ற உணர்வு. அதுவும் நிச்சயம் அன்றே.
அவருக்கு மட்டுமில்லை கேஷவ் மற்றும் ரதிபாலாவிற்கும் கோபம் வர, சபை நாகரீகம் கருதி அமைதியாக இருந்தனர்.
ரகுவிற்கோ தங்கையின் பேச்சில் ஓர் நிமிடம் திடுக்கிட்டாலும் அவளின் குணமே அது தானே என்று நினைத்தவன் தன் பெற்றோரை பார்த்தான்.
அவர்களுக்கோ என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டு தர்மசங்கடத்துடன் இருக்க. ரகுபதி தான் ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு,
சாம்பார் வாலியை கையில் எடுத்துக் கொண்டு தங்கை அருகில் சென்றவன் “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க போற வரைக்கும் உன் வாயை பொத்திக்கிட்டு இரு சௌந்து” என்று பல்லைக் கடித்து கொண்டு எச்சரித்தான்.
ரகுபதியை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், அண்ணனின் கோப விழிகளை கண்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
தாட்சாயிணியோ அடுத்து அவளின் பொறுமையை சோதிக்கும் விதமாக சௌந்தர்யாவை நோக்கி “சௌந்தர்யா அபர்ணா கிட்ட மன்னிப்பு கேளு” என்று அதிகாரத் தோரணையில் சொன்னார்.
அதை கேட்டு திடுக்கிட்டு போன சௌந்தர்யா, வெறுப்புடன் தன் பெற்றோர்களை கண்டாள்.
அவர்களோ பார்வையிலே கெஞ்சினர். ‘ப்ளீஸ்டி மானத்தை வாங்கிடாதே. ஒரு மன்னிப்பு தானே, கேட்டு விடு’ என்று அவளை வற்புறுத்துவது போல் இருந்தது அவர்களின் முகபாவனை.
சௌந்தர்யா தன் பெற்றோர்களை மனதில் வசைப்பாடியப்படி வேண்டா வெறுப்பாக, கடுகு கடுடுவென முகத்தை வைத்துக் கொண்டு “சாரி” என்று மட்டும் கூறியவள் அதற்கு மேல் அங்கே அமர்ந்து சாப்பிட பிடிக்காமல் சட்டென்று எழுந்து விட்டாள்.
அவளின் செயலில் அனைவரும் மீண்டும் அதிர்ந்து போயினர்.
பந்தியின் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டு இருந்த ஒரு மூதாட்டியோ “ஏம்மா புருஷன் பக்கத்துல உட்காந்து சாப்பிடும் போது இப்படி பாதிலே எழுந்துக்கலாமா? புருஷன் சாப்பிட்டு அவரு எழும் போது தானே நீயும் எழுந்துக்கனும். இப்படியா பாதில அந்த தம்பியை விட்டு போவ” என்று அவர் பேசிக் கொண்டே போக,
அதற்கு மேல் அவளின் பொறுமை அவளிடத்தில் குடிக் கொண்டு இருக்குமா? எரிச்சலை பொறுக்க முடியாத சௌந்தர்யா “ஏய் கிழவி யாரு யாருக்கு புருஷன்? எங்களுக்கு இப்போ தான் நிச்சியத்தார்த்தமே முடிஞ்சி இருக்கு. என்னவோ கல்யாண முடிஞ்ச மாதிரி அதுகுள்ள புருஷன் சொல்ற” என்று சாப்பிட்ட எச்சில் கையோடு அவரிடம் மல்லுக்கு நின்றவள் பின்,
“புருஷனாவே இருக்கட்டும். இது என்ன சர்வாதிகாரமா இருக்கு. சாப்பிட பிடிக்கலனா சும்மா அங்க உட்கார்ந்துட்டு மத்தவங்க வாயை பார்த்துட்டு இருக்க முடியுமா? என்னால அதுக்கு மேல சாப்பிட முடில எழுந்துட்டேன். கேஷவ்வே எதுவும் சொல்லல உனக்கு என்ன வந்துச்சி கிழவி” என்று அவரிடம் கத்திக் கொண்டு இருந்தாள்.
மகளின் செயலைக் கண்ட
தில்லைநாதன் தன் மனைவியை முறைத்து பார்த்தார்.
கணவனின் முறைப்பில் அர்த்தம் புரிந்துக் கொண்ட கௌசல்யா அவசரம் அவசரமாக எழுந்து மகள் அருகில் சென்று அவள் கரத்தை பிடித்து இழுத்தவர் “சௌந்து என்ன பண்ணிட்டு இருக்கு. அதுவும் சம்பந்தி முன்ன்னாடியும் மாப்பிள்ளை முன்னாடியும். கொஞ்சமாவது அடக்க உடுக்கமா இருடி. வயசானவங்க கிட்ட இப்படி தான் பேசுவீயா. அவங்க கிட்ட மன்னிப்பு கேளு” என்று மகளை திட்டினார்.
மீண்டும் மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்ட சௌந்தர்யா, அவள் அன்னை பிடித்து இருந்த கரத்தை உதறி விட்டு “என்ன மம்மி திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்க சொல்றீங்க. அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன். சாப்பிட முடிலனா, கை கழுவ எழுந்துக்க தானே செய்வாங்க. அது தானே நானும் பண்ணேன்” என்று சற்று குரலை உசத்தியே பேசினாள்.
எதிலும் அதிகாரத்துடன் இருந்தவளுக்கு இன்று அபர்ணாவிடம் மன்னிப்பு கேட்டதே ரொம்ப பெரிய விசியம் தானே.
தாட்சாயிணி குடும்பத்தில் மருமகளாக அடிமை போல் அவளால் ஊமையாக வாழ முடியாது என்று புரிந்துக் கொண்டவள் இந்நேரத்தில் அவள் குரலை உயர்த்தி இருந்தாள்.
சௌந்தர்யாவிற்கு இப்போதாவது தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். அவளால் அமைதியான பெண் போல் ஒரு போதும் மற்றவர்கள் முன் நடிக்க முடியாது.
தாட்சாயிணியின் முக சுழிப்பை கண்ட தில்லை நாதன் மகளை அடிக்க கையையே ஓங்கி விட்டார்.
அவரும் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருப்பார்.
பெற்ற மகள், சம்மந்தி வீட்டாரின் முன்பு அவரின் மானத்தை வாங்கிக் கொண்டு இருப்பதை கண்டு அமைதியாக இருக்க அவர் ஒன்றும் கைப்பிள்ளை இல்லையே.
தந்தை தன்னை அடிக்க வருவதை கண்டு அதிர்ந்தாள் சௌந்தர்யா.
இதுவரை எதற்காகவும் அவளிடம் கோபமாக கூட பேசிடாதவர் இன்று மற்றவர்கள் முன் அடிக்கவே கையை உயர்த்தி உள்ளார். அதை திகைப்புடன் பார்த்தவள் கண்ணீரோடு தந்தையை நோக்கினாள்.
“டாட் என்னை அடிக்க வரீங்களா? அதுவும் வெளியாள் முன்னாடி” தாட்சாயிணியை ஒரு பார்வை பார்த்தபடி விழி ததும்ப கேட்டாள் சௌந்தர்யா.
அவளின் பார்வையும் பேச்சியையும் புரிந்துக் கொண்ட தாட்சாயிணிற்கு சௌந்தர்யாவின் மீது வைத்து இருந்த நல்லவள் குடும்பத்திற்கு ஏற்ற பெண் என்ற மாய பிம்பம் மொத்தமாக தூள் தூளாக சிதறி போனது.
சௌந்தர்யாவின் வார்த்தையை கேட்ட கேஷவ் கோபம் கொண்டான்.
சிறிது நேரத்திற்கு முன் தானே மோதிரம் மாற்றிக் கொண்டு, நிச்சயதார்த்தம் முடிந்து இரு குடும்பமும் ஒரே குடும்பம் என்ற சொல்லுக்கு பிணைந்து போனது.
ஆனால் இப்போது சௌந்தர்யா கூறுபது ஆபத்தமான சொல் அல்லவா. இன்னும் ஒரு மாதத்தில் அவர்களின் வீட்டின் ஒரு உறுப்பினராக மாற போகிறவர் இவ்வார்த்தையை சொல்வதை கேட்டால் யாருக்கு தான் கோபம் வராது.
ரதிபாலாவிற்கோ சௌந்தர்யாவின் செயல் வெறுப்பாக இருந்தது. இருந்தும் பெரியர்கள் இருக்கும் போது அவள் முன் சென்று பேசுவது அதிகபிரசங்கிதனமாக இருக்கும் என்பதால் வெறுப்பு நிறைந்த பார்வையை மட்டும் சௌந்தர்யாவின் மீது செலுத்தினாள்.
ரகுபதி தங்கையின் வார்த்தையில் மொத்தமாக அடிப்பட்டு போனான். அவள் திருமணத்தில் தானே அவனின் காதல் கனவும் இருக்கிறது. அதை இப்போது தங்கையின் மூலம் கானல் கனவாக மாறுவதை எண்ணி மிகவும் வருந்தினான்.
அபர்ணாவோ ‘சரியான பஜாரி போல பேசுறா. எல்லாம் சொகுசா வாழ்ந்த கொழுப்பு தான். மாமா வீட்டுக்காரங்களையே வெளி ஆளு சொல்லிட்டா. இனி என்ன நடக்க போகுதோ. ஒருவேளை இந்த கல்யாணம் நின்னுடுமா? அப்படி நின்னுட்டா மாமா பாவம் தானே” என்று அச்சிறு பருவ பெண் கேஷவிற்காக மிகவும் கவலை கொண்டாள்.
அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தன்னிச்சையாகவே அவள் தலை கேஷவை நோக்கி திரும்பி அவனை பரிதபமாக பார்த்தது.
கௌசல்யாவிற்கு தான் சிறிய பேச்சி வார்த்தை மிகப் பெரிய குண்டாக வெடிப்பது போல் தோன்றியது. எப்படியோ தன் மகளை அவர் வார்த்தைக்கு கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்தவள் கணவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
ஆனால் அங்கே நெறுப்பு குழம்பு போல் கொதித்துக் கொண்டு இருந்த தாட்சாயிணியை அவர் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளவில்லை.
தாட்சாயிணியின் உக்கிரமான பார்வை சௌந்தர்யாவை எரித்துக் கொண்டு இருந்தது.
அதை கவனித்த ஆராதனா நிலைமையை சரிசெய்யும் பொருட்டு முதலில் அந்த பாட்டியிடம் பேசி, மன்னிப்பு கேட்டு அங்கே இருந்து அனுப்பியவள், ரகுபதியிடம் திரும்பி “அண்ணா சௌந்தர்யாவை உள்ளே கூட்டி போங்க” என்று மெல்லமாக கூறினாள்.
ரகுபதியும் ஆமோதிப்பாக தலையசைத்து விட்டு தங்கையின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு போகாத குறையாக அங்கே இருந்து அழைத்து சென்றான்.
அவர்கள் போனதும் ஆராதனா தாட்சாயிணியிடம் மிகவும் பணிவாக “மன்னிச்சிடுங்க அத்தை. அக்கா நடந்துக் கொண்ட விதம் தப்பு தான், என்றாலும் அவள் கூறிய விசியம் சரியாக தானே இருந்தது. சாப்பிடாமல் எவ்வளவு நேரம் இலையை விரித்து வைத்துக் கொண்டும்.. இலையை காய வைத்துக் கொண்டும் இருப்பது. அதை மனதில் வைத்து தான் அக்கா அவ்வாறு சொல்லி இருப்பாள். நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க அத்தை” என்று ஆராதனா அந்த வெளியாள் என்று சௌந்தர்யா குறிப்பிட்டு பேசியதை முற்றிலும் தவிர்த்தப்படி அவள் இலையிலிருந்து எழுந்துக் கொண்ட விசியத்தை மட்டும் நினைவில் கூர்ந்து பேசினாள்.
சில அசௌகரியமான நிலையில் சங்கடமான வார்த்தைகளை மீண்டும் நினைவு கூர்வது முற்றிலும் தவறான விசியம்.
அதை அழகாக தவிர்த்தாள் ஆராதனா.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
உங்கள் கருத்துகளை மறக்காமல் கூறிவிட்டு செல்லுங்கள் நட்பூக்களே.
நன்றி.
