ராட்ச்சனின் காதல் பாவை

7. ராட்சசனின் காதல் பாவை..

போன பகுதியில்:

“சரி, சரி… என்ன ரொம்பப் பாராட்டாத. வா, கிளம்பலாம்” என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள்.

இனி..

மாலை நேரம்..

விதுரன் அனுப்பிய ஆட்கள் அனைவரும் அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் திரும்பி வந்திருக்க, அதைப் பார்த்த சுனிலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதைப் போய் தன் பாஸிடம் சொன்னால் அவர் என்ன செய்வாரோ என்று பயந்தவனுக்குக் கை, கால் எல்லாம் நடுங்கின. ஆனால், இதை அவரிடம் சொல்லாமலும் இருக்க முடியாது என்று நினைத்தவன், பயத்துடனேயே அவர் முன்பு வந்து நின்றிருந்தான்.

ஆனால், விதுரனோ தன் கண்களை லேப்டாப்பில் பதித்திருந்ததால், இவன் வந்து நிற்பதைக்கூட கவனிக்கவில்லை.

“என்ன, சுனில்… அவளைக் கண்டுபிடிச்சிட்டியா?” என்று கேட்டான் விதுரன்.

அவனுடைய முகம் என்னவோ மென்மையாகத்தான் இருந்தது. ஆனால், அவனுடைய வார்த்தைகளோ அழுத்தத்துடன் வெளியே வர, அதில் உடல் நடுங்கியவன்,

“பாஸ், இன்னும் அந்தப் பொண்ணைக் கண்டுபிடிக்க முடியல, பாஸ்” என்று சொன்னான் சுனில்.

இவன் சொல்லியதுதான் தாமதம். அடுத்த நொடியே, அவனை நோக்கிப் பேப்பர் வெயிட் ஒன்று பறந்து வந்தது. அதில் பயந்தவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். ஆனால், அதுவோ அடுத்த சில நொடிகளில் சுவற்றில் பட்டு, சில்லு சில்லாக உடைந்தது.

அந்தச் சத்தத்தில் மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தவனுக்குத்தான், தனக்கு எதுவும் ஆகவில்லை என்பது புரிந்தது. எதிரில் அமர்ந்திருந்தவனைப் பயத்துடனேயே பார்த்தான்.

ஆனால், விதுரனோ இவனை அனல் பறக்கும் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஏய், ஸ்டுப்பிட்! அவளை நீ எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சே ஆகணும். அப்படி நீ அவளைக் கண்டுபிடிக்கலைன்னா, உன் உடம்புல உன்னோட உயிர் இருக்காது” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

இவன் சிங்கம்போல் கர்ஜித்துவிட்டுச் செல்ல, அதைப் பார்த்த சுனிலுக்குப் பயம் இன்னும் அதிகமானது. அதைவிட அவன் மனதிலோ,

“ஐயோ, கடவுளே! இது என்ன எனக்கு வந்த சோதனை? கிடைக்கலைன்னு சொன்னா விட்டுடுவார்னு பார்த்தா, இப்படி கோபப்படுறாரே! பாவம், அந்தப் பொண்ணோட நிலைமை என்ன ஆகப்போகுதுன்னு எனக்குத் தெரியல. ஆனாலும், எனக்கு என் உயிர் முக்கியம், கடவுளே! அதனால அந்தப் பொண்ணு எனக்கு சீக்கிரமா கிடைக்கிற மாதிரி பண்ணுங்க. அப்படி அந்தப் பொண்ணு கிடைச்சாலும், அவளுக்கும் எதுவும் ஆகாம காப்பாத்துங்க” என்று அந்தக் கடவுளிடம் மனு போட்டவன், மறுபடியும் அவளைத் தேடத் தொடங்கினான்.

அப்பொழுது, காலையில் பாருக்குப் பக்கத்தில் இருக்கும் இடங்களில் சிசிடிவி காட்சிகளைச் செக் செய்து அவளைத் தேடிய குழுவினர், இப்போது சுனிலுக்கு அழைத்தார்கள்.

அவர்களுடைய அழைப்பை உடனே எடுத்தவன்,

“என்ன, ஏதாவது டீடைல்ஸ் கிடைச்சுதா, இல்லையா?” என்று கேட்டான் சுனில்.

“சார், நீங்க சொன்ன மாதிரி அந்த ஏரியாவில் இருக்கிற எல்லா சிசிடிவி காட்சிகளையும் செக் பண்ணோம். அந்தப் பொண்ணு அங்கிருந்து வந்து ஒரு ஆட்டோவில் ஏறினது எல்லாமே ரெக்கார்டு ஆகியிருந்தது. அந்த ஆட்டோ நம்பரை வச்சு நாங்க அந்த ஆட்டோவைக் கண்டுபிடிச்சிட்டோம். ஆனால், அந்தப் பொண்ணைப் பத்தின டீடைல்ஸ் அந்த டிரைவருக்குச் சரியாகத் தெரியல, சார். ஏதோ ஒரு கடை கிட்ட இறக்கிவிட்டதா சொல்றாரு. இப்போ நாங்க அங்கதான் போய் விசாரிக்கப் போறோம். அதான் இந்தத் தகவலை உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணலாம்னு கால் பண்ணேன்” என்று சொன்னான்.

“டேய், அரைகுறைகளா! வேலையை முழுசா முடிச்சிட்டு கால் பண்ணுங்கடா! நீங்க பண்ணதைப் பார்த்தா, வேலை முடிஞ்சிடுச்சுன்னு கொஞ்ச நேரத்துல சந்தோஷப்பட்டுட்டேன். நீங்க என் உசுர எடுக்குறதுக்குன்னே இருக்கீங்கடா! முதல்ல அந்த இடத்துக்குப் போய் விசாரிங்க. முழுசா விசாரிச்சிட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க. உங்களுக்கு நாளைக்குக் காலைக்குள்ள டைம் தரேன். அந்தப் பொண்ணைப் பத்தின அத்தனை டீடைல்ஸும் எனக்கு வந்தாகணும்” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தான் சுனில்.

அவனும் சொன்னபடியே அந்த இடத்துக்குச் சென்று அவளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். ஆனால், அவளைப் பற்றிய எந்தத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

ஓட்டல்..

ஆபீஸிலிருந்து கிளம்பிய விதுரன், நேராகத் தான் எப்பொழுதும் தங்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளப் பாத்ரூமுக்குள் புகுந்தவன், குளித்துவிட்டு வெளியே வந்தான். அங்கே அவனுக்காகவே ஒரு பெண் காத்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், அவளை ஒரு பொருட்டாகக்கூட எண்ணாதவன், நேராகச் சென்று ஒரு கபோர்டைத் திறந்தான். அதில் மது பாட்டில்கள் இருக்க, அவற்றிலிருந்து இரண்டு பாட்டில்களை எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன், மது அருந்தத் தொடங்கினான்.

இரண்டே நிமிடங்களில் முதல் பாட்டில் காலியாக, அடுத்த நிமிடமே இரண்டாவது பாட்டிலையும் கையில் எடுத்திருந்தான்.

ஆனால், அவனுக்குப் போதை என்பதே துளியும் இல்லாமல், மனதில் கோபம் மட்டுமே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

எப்பொழுது அவள் தன் கையில் கிடைப்பாள் என்று அவனுக்குள் இருந்த அரக்கன் அவளைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஆனால், அங்கே அமர்ந்திருந்த பெண்ணோ, இதையெல்லாம் அறியாமல் அவனுடைய அனுமதி இல்லாமலேயே அவனை நெருங்கினாள்.

அதுவரை அமைதியாக இருந்தவன், அவள் தன்னை நெருங்குவதை உணர்ந்ததும் நொடியில் அவளை மஞ்சத்தில் தள்ளினான். அடுத்த நொடியே வெறிகொண்டு அவள் மீது பாய்ந்தான்.

அவனுடைய தாக்குதலில் அவளுக்கு மூச்சே அடைத்துப்போனது. அடுத்த நொடி, அவனுடைய செயல்களால் அவளுடைய நாடி நரம்பெல்லாம் பயத்தில் உறைந்துபோனது.

ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன், அவளுடைய ஆடைகளைக் கிழித்தெறிந்துவிட்டு, அவளுடைய அனுமதியின்றி அவளை வலுக்கட்டாயமாகத் தன் இச்சைக்குப் பயன்படுத்தத் தொடங்கினான்.

யார் மீது இருந்த கோபத்தை அவள் மீது காட்டுகிறான் என்று தெரியாமல், அந்தப் பெண்ணும் செய்வதறியாது அவனிடம் சிக்கித் தவித்தாள்.

அவனுடைய வெறி தீரும் வரை அவளை வதைத்தவன், இறுதியில் அவளிடமிருந்து விலகி, அவள் முகத்தில் பனிக்கட்டிகளை வாரி அடித்தான்.

ஆனால், அவளால் கொஞ்சம்கூட நகர முடியவில்லை. மெல்ல எழுந்தவள், இனியும் இவனிடம் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று நினைத்தாள். அங்கிருந்து சென்றுவிட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்தவள், தன்னுடைய கிழிந்த ஆடைகளைச் சரிசெய்துகொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

ஆனால், அப்போதும் அவனுடைய கோபம் மட்டும் தணியவில்லை. மீண்டும் மதுவை நாடினான் விதுரன்.

இப்படியே அந்த இரவு கழிய, மறுநாள் காலைப் பொழுதும் அழகாக விடிந்தது.

காலை நேரம்..

“ஏய், எருமை! இன்னும் எழுந்திருக்காம என்னடி பண்ணிட்டு இருக்க? இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஆபீஸுக்குப் போகணும்னு ஞாபகம் இருக்கா, இல்லையா? நேத்து என்னவோ அவ்வளவு வக்கனையா பேசின!” என்று தன் தோழியை எழுப்பிக்கொண்டிருந்தாள் ஸ்ரீனா.

“ஸ்ரீமா… கொஞ்ச நேரம் தூங்குறேன்டி” என்று சொன்னாள் கவி.

“ஏய், கவி! ஆல்ரெடி டைம் ஆயிடுச்சு பாரு. எட்டு ஓ கிளாக் ஆகுது. நம்ம நைன் ஓ கிளாக்குக்கு அங்க இருக்கணும். நான் ரெடியாகிட்டேன். நீ ரெடியானா கிளம்பலாம். நாம போகவே டைம் ஆயிடும். சொன்னா கேளு, எழுந்திரு” என்று சொன்னாள் ஸ்ரீனா.

அவள் சொன்னதைக் கேட்டவள், பதறியடித்துக்கொண்டு எழுந்து மணியைப் பார்த்தாள். அதில் மணி ஏழு என்று காட்டியது.

அதைப் பார்த்தவளுக்குத் தன் தோழியின் மீது சிறு கோபம் எழுந்தது. அவளைச் சின்ன முறைப்புடன் ஏறிட்டாள்.

ஆனால், ஸ்ரீனாவோ அவளைப் புன்னகையுடன் பார்த்தவள்,

“என்ன அப்படிப் பார்க்குற? டைம் ஆயிடுச்சுன்னு சொன்னாதான் நீ எழுந்திரிப்ப! நேத்தே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுக்கும்போது என்ன சொன்னாங்க? லேட் ஆகக்கூடாது, பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்னு சொன்னாங்களா, இல்லையா? இப்படியே கும்பகர்ணனுக்குத் தங்கச்சி மாதிரி இருக்க!” என்று கேட்டாள் ஸ்ரீனா.

“கொஞ்ச நேரம் தூங்குறேன், விடுடி! ஏண்டி, இப்படி டார்ச்சர் பண்ற?” என்று சொல்லியவள் மீண்டும் படுத்து உறங்கினாள்.

“மவளே! இப்படிச் சொன்னா நீ கேட்க மாட்ட. இரு, வரேன்!” என்று சொல்லியவள் வெளியே சென்றாள்.

சிறிது நேரத்தில் ஒரு பக்கெட் நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்தவள், மீண்டும் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த கவியின் மீது ஊற்றினாள்.

அதில் பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள்,

“ஏய், ஸ்ரீ! என்ன பண்ற?” என்று கேட்டாள் கவி.

“ஒழுங்கா எழுந்திரு! ஆபீஸுக்குப் போக நேரமாகுது. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே. இன்னைக்கு லேட்டா போனா என்ன அர்த்தம்? ஒழுங்கா எழுந்து கிளம்பு. வெளியே பாரு!” என்று சொல்லியவள், அவளைத் தரதரவென இழுத்துக்கொண்டு போய் பாத்ரூமுக்குள் தள்ளினாள் ஸ்ரீனா.

கவியும் வேறு வழியில்லாமல் கிளம்பத் தொடங்கினாள்.

இருவரும் அடுத்த அரை மணி நேரத்தில் தயாரானவர்கள், அங்கிருந்து ஆபீஸை நோக்கிக் கிளம்பினார்கள்.

மறுபக்கம்..

அந்தப் பெண்ணைப் பற்றி எதுவும் தெரியாததால் சுனில் மிகவும் பதற்றத்துடன் இருந்தான். தலையில் கைவைத்துக்கொண்டு ஆபீஸிலேயே அமர்ந்திருந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

இந்தச் செய்தியைத் தன் பாஸிடம் சொன்னால் தன் உயிரே இருக்காது என்று நினைத்தவனுக்குப் பயம் அதிகமானது.

அப்பொழுது, இவர்களை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. தானே இறங்கித் தேடினால்தான் உண்டு என்று நினைத்தவன், அவளைத் தேடிக் கிளம்பினான்.

ஆபீஸ்..

எப்பொழுதும்போல ஆபீஸ் நேரம் வந்ததும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தார்கள்.

ஸ்ரீனாவும் கவியும் அங்கே வந்தவர்கள், லிப்ட்டில் ஏறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அதே லிப்ட்டிலிருந்து வெளியே வந்த சுனில், இருந்த டென்ஷனில் அங்கே நிற்பவர்கள் யாரையும் கவனிக்காமல் வேகமாகச் செல்லத் தொடங்கினான்.

அங்கே வேலை செய்யும் அனைவரும் அவனுக்கு விஷ் செய்தார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன், தன் பாஸ் வருவதற்குள் இந்த வேலையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அப்பொழுது அவனுக்கு ஒரு போன் வந்தது. அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன்,

“என்ன, ஏதாவது கிடைச்சுதா, இல்லையா?” என்று கேட்டான் சுனில்.

“சார், அந்தப் பொண்ணு இருக்கிற ஏரியாவைக் கண்டுபிடிச்சிட்டோம், சார். ஆனால், யாரைக் கேட்டாலும் அவள் எங்க இருக்கான்னு தெரியல. ஆனா, அவளை இங்கே பார்த்திருக்கோம்னு மட்டும் சொல்றாங்க” என்று சொன்னான் மறுமுனையில் இருந்தவன்.

“டேய், நீங்க என்ன முட்டாள்களா? அங்க இருக்கிற எல்லா வீட்டிலும் விசாரிக்க வேண்டியதுதானே! சரி, நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்கு லொகேஷன் அனுப்பு. நான் அங்க வரேன்” என்று சொன்னான் சுனில்.

“ஓகே, சார். நான் அனுப்புறேன்” என்று சொன்னவன், உடனே தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனை அனுப்பி வைத்தான்.

அதைப் பார்த்த சுனில், வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்..

இப்படிக்கு, உங்கள் அன்புத் தோழி..

மோகனா அருண்

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!