அத்தியாயம்- 4
அங்கே வந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் அவர் அவர் இல்லதிற்கு புறப்பட்டு விட,
கரத்திலிருந்த மோதிரத்தை பார்த்துக் கொண்டு நின்று இருந்த சௌந்தர்யாவிற்கு இப்போது தான் பெரும் நிம்மதியாக இருந்தது.
நிச்சியமாக அவளால் ஒருவரிடம் அடங்கி போக முடியாது. அதுவும் மற்றவர்களை அடக்கி ஆளும் அவளை சொல் பேச்சி கேட்க வைத்தாள்? பொறுத்துக் கொண்டு இருந்து விடுவாளா? என்ன?
“அப்பாட்டா இப்போ தான் நிம்மதியா இருக்கு. என்னையே அடிப்பணிய வைக்க நினைக்கிறாங்களா? ஏன் இவர்களை விட்டால் இந்த உலகத்தில் செல்வாக்கான வேறு குடும்பம் இருக்காதா? என்னவோ இவங்க தான் இந்த பூமியில இருக்கிற கடைசி பணக்காரங்க போல பில்டப் பண்றாங்க. இந்த மோதிரம் திரும்ப என் கையில வந்ததுக்கு அப்புறம் எனக்கு நிம்மதியாவே இருக்கு. இல்லனா காலம்பூரா அடிமையால இருந்து இருக்கனும்” என்று புன்னகையோடு தனக்கு தானே பேசிக் கொண்டு இருந்தாள்.
அப்போது தாட்சாயிணி குடும்பம் அவமானப்பட்டு அங்கே இருந்து கிளம்பி சென்றதும்.
கடும் சினத்தோடு வீட்டிற்குள் வந்த தில்லை நாதன் அவர் இடுப்பிலிருந்த வாரை (பெல்ட்) கழட்டி மகளை அடிக்க தொடங்கினார்.
இந்த தாகுத்தலை எதிர்பார்க்காத சௌந்தர்யா வலியில் துடித்து போய் அப்படியே கீழே சுருண்டு போனாள்.
“கொழுப்பெடுத்தவளே இப்படி மானத்தை வாங்கிட்டியே. கொஞ்சம் கூட உனக்கு பொறுமையே இருக்காதா? இப்படி ஒரே நாளுல எங்க மானத்தை மட்டும் இல்லாம சம்மந்தி மானத்தையும் வாங்கிட்டியே” என்று ஆத்திரத்துடன் கேட்டுக் கொண்டே அவளை அடித்தார்.
மகள் அடி வாங்குவதை பார்க்க முடியாமல் தடுக்க சென்ற கௌசல்யாவிற்கும் சேர்த்து நான்கு அடி அடித்தார்.
“அய்யோ நம்ம பொண்ணுங்க. வேணாம் விட்டுருங்க. சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிட்டா” என்று தடுத்து பேசியவரின் கூந்தலை கொத்தாக பிடித்து,
“யாருடி சின்ன பொண்ணு. இவளா? என்ன சொன்ன தெரியாம பண்ணிட்டாளா? இவ பண்ண காரியம் தெரியாம பண்றதா? ம் சொல்லுடி தெரியாம பண்றதா? சபையில் பெரியவங்க கிட்ட எப்படி நடந்துக்கனும் கொஞ்சம் கூட நாகரீகம் தெரில. என்ன லட்சணத்துல பொண்ணை வளர்த்து வச்சி இருக்க. இதுக்கு முதல உன்னை தான்டி அடிக்கனும்” என்று சினத்தோடு பேசியவர் மனைவிற்கும் ஆத்திரம் பொங்க அடிக் கொடுத்தார்.
நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த ரகுபதி, ஆராதனா, இருவரும் தில்லைநாதனை தடுத்து அமைதிப்படுத்த முயன்றனர்.
தில்லை நாதனின் கோபத்தை கண்டு பயந்து போய் அதிர்ச்சியுடன் நின்று இருந்தாள் அபர்ணா.
ஒரு பேச்சிக்கு கூட தில்லை நாதன் அருகில் அவள் செல்லவேயில்லை.
அவளுக்குள் இருக்கும் பயம், அவள் சாப்பிட அமர்ந்ததினால் தான் முதல் பிரச்சனையே ஆரம்பித்தது. அதன் பிறகு நடந்து எல்லாம் அவளால் ஏற்பட்ட பிள்ளையார் சுழியாக இருக்குமோ என்று அஞ்சினாள்.
அடியை வாங்கிய சௌந்தர்யாவிற்கு உடல் எரிச்சலை கொடுக்க. அதன் வலி கோபத்தை கொடுத்தது.
பல்லை கடித்துக் கொண்டு வலியை பொறுத்து எழுந்து நின்றவள் கோபத்துடன் “இப்போ எதுக்கு என்னை அடிச்சிங்க? நீங்க அடிச்சி வளர்க்க நான் ஒன்னும் நீங்க வளர்க்கும் நாய் இல்ல. இப்போ நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேனு இப்படி சைக்கோ மாதிரி நடந்துக்கிறீங்க. எனக்கு அந்த தாட்சாயிணியை பிடிக்கல. அதான் நிச்சியத்தை நிறுத்தினேன். இப்போவே நிறுத்துனேன் சந்தோஷப்படாம, என்னை பேய் போல அடிக்கிறீங்க. இதுவே உங்களுக்கு கல்யாண செலவு எல்லாம் இழுத்து விட்டு, லாஸ்ட்டா தாலி கட்டும் போது நிறுத்தாம இப்போவே நிறுத்தி இருக்கேன். உங்களை கடன்காரனா நிற்க வைக்காம இருக்கேனு என்னை நினைச்சி நீங்க பெருமைப்படனும்” என்று அப்போதும் தன் தற்பெருமையை பற்றி பேசினாள் சௌந்தர்யா.
அவள் பேசியதை கேட்ட தில்லைநாதன் எழுந்து வீட்டின் பின் பக்கம் விருவிருவென நடந்து சென்றார்.
அனைவரும் என்னனென்று புரியாமல் பின்பக்கம் இருக்கும் இடத்தை எட்டி பார்த்தனர்.
கௌசல்யாவோ இது தான் சாக்கு என்று எண்ணி “அடியே கொஞ்சம் நேரம் வாயை பொத்திக்கிட்டு அமைதியா இரு. மனுஷன் இருக்கிற கோபத்தில உன்னை வெட்டிக் கிட்டு போட்டுட போறாரு. அப்படியே நைஸா உன் ரூம்முக்கு போய் அடைஞ்சிக்கோ” என்று மகளுக்கு ஒரு நல்ல தாயாக எண்ணி புத்திமதி கூறினார்.
பின் பக்கம் சென்ற தில்லை நாதன் கௌசல்யா கூறியது போல் அருவாளை ஆக்ரோஷமாக எடுத்துக் கொண்டு சௌந்தர்யாவை நோக்கி சென்றார்.
அதை பார்த்த அனைவருமே உறைந்து போயினர்.
சௌந்தர்யாவோ “ஏய் ஆத்தா எந்த நேரத்துல உன் திருவாயை திறந்த. உன் புருஷன் உண்மையாவே என்னை வெட்டி போட வராரு” என்று தாயிற்கு திட்டியவள் அடுத்த நொடி கௌசல்யா பின்னாலையே ஒளிந்துக் கொண்டாள்.
சௌந்தர்யாவின் செயலை கண்ட கௌசல்யா பயத்துடன் “அடியே என் பின்னாடி எதுக்கு இப்போ வந்து ஒளியுற. உன் கூட சேர்ந்து நானும் சாகனுமா?” என்று மகளை வசைப்பாடியவர் மகளிடமிருந்து சற்று தள்ளி நின்றார்.
அப்போது தந்தையின் கரத்தை பிடித்த ரகுபதி “அப்பா என்ன பண்ண போறீங்க. கோபத்துல நம்ம எடுக்கிற முடிவு எல்லாம் தப்பாக போகுனு நீங்க தானே சொன்னீங்க. இப்போ நீங்களே உங்க பொறுமையை இழந்துட்டு நிக்கிறீங்க” என்று தந்தையை அமைதிப்படுத்த முயன்றான்.
அருகில் பதற்றத்துடன் இருந்த ஆராதனா தில்லைநாதனின் மற்றொரு கரத்தை பிடித்துக் கொண்ட “பெரியப்பா, என்ன இது. நீங்களே இப்படி பொறுமையை இழந்துட்டா எப்படி” என்று கேட்டவள் வலுக்கட்டாயமாக அவரிடமிருந்த அருவாளை பிடிங்கி தூரம் எறிந்தாள்.
இதை பார்த்த அபர்ணாவிற்கு பயத்தில் கண்ணீர் வந்துவிட்டது.
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். அபர்ணாவின் எதிர்வினையை கண்ட தில்லைநாதன் சற்று கோபம் தனிந்து அமைதியாக அவள் அருகில் சென்று “என்னடா பயந்துடியா?” என்று மெல்ல சிறுப்பிள்ளையின் தலையை வருடிக் கொடுத்தார்.
“ஆமா பெரியப்பா” என்று மூக்கை ஊறிஞ்சியைபடி சொன்னாள்.
மென்மையாக அவளிடம் “சாரிடா கண்ணு. நீ உள்ளே ரூமுக்கு போய் போன்ல கேம் விளையாடு. போடா” என்று அபர்ணாவை அங்கே இருந்து அனுப்ப முயன்றார்.
சிறுப்பிள்ளையை வைத்துக் கொண்டு அவர் நடந்துக் கொண்ட விதத்தை எண்ணி தன்னை தானே கடிந்துக் கொண்டார்.
எந்த கட்டத்திலும் அவர் பொறுமையை இழக்காதவர். அவரை இப்படி ஆக்ரோஷமாக மாற்றி இருந்தாள் அவர் பெற்ற மகள் சௌந்தர்யா.
அபர்ணா சுற்றி இருந்த சூழலை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். ஆராதனா கண்சாடையாலே தங்கையை அறைக்குள் செல்லும்படி கட்டளையிட்டாள். அபர்ணாவும் சரி என்பது போல் தலையை அசைத்துவிட்டு சௌந்தர்யாவை கடந்து அவர்கள் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.
பின் கோபமாக தில்லை நாதன் அவர் மனைவியை பார்த்து “பார்த்தியாடி, அமைதியா இருந்த என்னை இந்த அளவிற்கு கோபப்பட வச்சி, மிருகம் மாதிரி நடக்க வச்சிட்டா. இது தான் நீ பொண்ணை வளர்த்த லட்சணமா?” என்று மீண்டும் அவர் வார்த்தையால் மனைவியை காயப்படுத்த,
வாங்கிய அடியால் அதுவரை அமைதியாக நின்று இருந்த சௌந்தர்யா “சும்மா நிறுத்துங்கப்பா. அது என்ன அம்மா வளர்த்த லட்சணம். ஏன் நீங்க என்னை வளர்க்கவேயில்லையா? எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அதான் நிறுத்தினேன். பொண்ணுங்க சுதந்திரமா இருக்கனும். எப்போவும் அவங்களுக்கு பிடிக்காத விசியத்தை செய்ய கூடாது. அவங்க மேல திணிக்க கூடாதுனு சொல்லி கொடுத்ததே நீங்க தானே. அதானே நான் இன்னிக்கு பண்ணேன்” என்று கத்தியவள் கரத்தை ஊதிவிட்டு மேலும் தொடர்ந்தாள்.
“இதுல அந்த அம்மா வேற நிறைய கண்டிஷன் போடுது. நீங்களே சொல்லுங்க எந்த ஊரிலாவது இந்த மாதிரி கண்டிஷன் போட்டு பார்த்து இருக்கீங்களா? சுத்தப் பைத்தியக்கார தனமா இல்ல” என்று சொல்லிக் கொண்டே போக, ஆராதனா அவளை கோபமாக முறைத்தாள்.
முதல் முறை தன் கோபத்தை அடக்க முடியாமல் வாயை திறந்து பேசினாள் பெண்ணவள்.
“சௌந்து உனக்கு பிடிக்கலனா பிடிக்கலனு மட்டும் சொல்லு. இப்படி பெரியவங்களை மரியாதை குறையா பேசாத” என்று கோபமாக பேசியவளை அதிர்வுடன் பார்த்தாள் சௌந்தர்யா.
“என்ன மேடம் வாய் நீளுது. யார் வீட்ல இருந்துட்டு யாரை எடுத்தெறிந்து பேசுற. எனக்கு பிடிக்கலனா நான் அப்படி தான் பேசுவேன். ஏன் உனக்கு நோகுதுனா நீ அந்த வீட்டுக்கு மருமகளா போய் அடிமையா இருக்க வேண்டியது தானே” என்று திமிராக பேசியவள் ஆராதனா அருகில் சென்று,
“இனிமேல் நான் பேசும் போது, ச்சா ச்சா நான் இருக்கும் போது உன் குரல் எனக்கு கேட்கவே கூடாது. இத்தனை நாள் எப்படி ஊமையா இருந்தியோ அப்படியே வாயை பொத்திக்கிட்டு இரு. எனக்கு அட்வைஸ் பண்ற அளவிற்கு உனக்கு தகுதி இல்லை” என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தியவள் அங்கே நின்று இருந்த அனைவரையும் முறைத்து பார்த்து விட்டு தன் அன்னையிடம்,
“ம்மா போய் மருந்து எடுத்து வந்து எனக்கு போட்டு விடு. ரொம்ப வலிக்குது” என்று காட்டமாக சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே சென்றாள்.
சௌந்தர்யா பேசியதை கேட்டுக் கொண்டு நின்று இருந்த தில்லைநாதன் வாயடைத்து போனார்.
முதல் முறை பெற்ற மகளுக்கு அளவிற்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்ததை எண்ணி மிகவும் வருந்தினார்.
அவர் சோர்ந்து அப்படியே அங்கே இருந்த இருக்கையில் சரிந்தவர் கண்ணீர் வடிக்க தொடங்கினார்.
தில்லைநாதனின் அந்த நிலையை கண்ட ஆராதனாவும் ரகுபதியும் பதறி போய் அவரிடம் சென்றனர்.
ரகுபதி தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு “அப்பா அவளுக்காக நீங்க ஏன் அழுறீங்க. இப்படி பட்ட நல்ல குடும்பத்தை இழந்துட்டோம்னு அவ தான் அழனும். ப்ளீஸ்ப்பா இப்படி சோர்ந்து போகாதீங்க” என்று தங்கையின் மீது கோபம் எழுந்தாலும் இப்போது தந்தையை கவனிக்க வேண்டும் என்று பொறுத்துக் கொண்டு இருந்தான்.
கணவன் உடைந்து போய் அமர்ந்ததை பார்த்த கௌசல்யா பதறி அவரிடம் செல்ல எத்தனிக்க. உள்ளறையிலிருந்து மகளின் குரல் கேட்டு அமைதியாக மருந்தை எடுத்துக் கொண்டு சென்றார்.
ஆராதனா அங்கே இருந்த தண்ணீரை அவருக்கு பருக கொடுத்து “பெரியப்பா விடுங்க. சௌந்து இப்படி நடந்துகிறது ஒன்னும் புதுசு இல்லையே. எதை நினைச்சும் நீங்க கவலைப்படாதீங்க. நம்ம வேணும்னா நாளைக்கு தாட்சாயிணி அத்தை” என்று வாய் எடுத்தவள் அத்தை என்ற வார்த்தையை மீண்டும் தொண்டைக்குள்ளையே அடக்கி வைத்து விட்டு “அவங்க வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டு வரலாம்” என்று அவருக்கு சமாதானம் செய்தாள்.
அவருக்கும் அது தான் சரியென பட்டு இருக்கும் போல, விழி நீருடன் ஆராதனாவின் தலையை வருடியவர் “உன்னை போல ஒரு பொண்ணு எனக்கு பிறக்கலையே. அந்த அடங்காபிடாரி தான் வந்து பிறந்து இருக்கு” என்று வருத்ததுடன் கூறினார்.
ஆராதனா ரகுபதியிடம் “அண்ணா நீங்க பெரியப்பாவை உள்ளே அழைச்சிட்டு போய் படுக்க வைங்க. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தாவே பெரியாப்பா நார்மல் ஆகிடுவாரு” என்று சொல்லி ரகுபதியுடன் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.
ரகுபதியும் தந்தையை அழைத்துக் கொண்டு அறைகக்கு செல்ல, ஆராதனா ஒரு பெருமூச்சை ஒன்றை விட்டவள் தங்கை அபர்ணாவை தேடி செல்ல எத்தனித்த நேரம் அங்கே இருக்கையில் ஒரு கைப்பேசி இருப்பதை கண்களை சிறியதாகிக் கொண்டு பார்த்தாள்.
பின் அதை கையில் எடுத்தவள் கைப்பேசியை உயிர்பித்தாள். அதில் கேஷவ், ரதிபாலா, தாட்சாயிணி புன்னகை முகமாக நின்று இருந்தன.
அதை பார்த்தவள் “மறந்து விட்டு போயிட்டாங்க போல” என்று முணுமுணுத்தவள் வருத்ததுடன்,
“மன்னிச்சிடுங்க அத்தை. இந்த புன்னகையை இன்னிக்கு எங்களால நீங்க இழக்க வேண்டியதா போச்சி. நீங்க இழந்த புன்னகை திரும்ப உங்களை வந்து சேரும். சௌந்தர்யாவை விட நல்ல பொண்ணு உங்களுக்கு மருமகளா வருவா” என்று புகைப்படத்தை பார்த்து பேசிக் கொண்டு இருந்தவள்,
நாளை பெரியப்பா போகும் போது அவரிடம் இந்த கைப்பேசியை கொடுத்த அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதை பத்திரப்படுத்தி வைத்தாள்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
