13… ராட்சசனின் காதல் பாவை…
போன பகுதியில்:
அங்கு எதிரில் அமர்ந்திருப்பவனைப் பார்த்தவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி! தான் காண்பது கனவா, நிஜமா என்று கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை. தன் கனவில் கூட யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ, அவனே தன் எதிரில் இருப்பான் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
இனி…
அன்று அவனின் ராட்சச குணத்தைப் பார்த்தவள், இனி இவன் கண்ணில் படவே கூடாது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், விதி தன்னை மீண்டும் இவனிடமே கொண்டு வந்து சேர்க்கும் என்று அவள் நினைக்கவில்லை. எப்படியாவது அந்த இடத்தைவிட்டு தப்பித்துச் சென்றுவிட வேண்டும் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. ஆனால், அது இனி நடக்காது என்று அவளுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது?
அதே நேரம், அவளிடம் நெருங்கியவன், நொடிப்பொழுதில் அவளுடைய கழுத்தைப் பிடித்து சுவரோடு சாய்த்து மேலே தூக்கியிருந்தான்.
“நான் அன்னைக்கே சொன்ன ஞாபகம் இருக்கா? இனி என் கண்ணுல நீ படவே கூடாதுன்னு. அப்படி இருக்கும்போது மறுபடியும் என் கண்ணுல…”
என்று வார்த்தைகளை அதோடு நிறுத்தியவன், அவளைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்.
“சாரி சார்! இது உங்க கம்பெனின்னு எனக்குத் தெரியாது. அன்னைக்கு நடந்ததுகூட நான் வேணும்னே பண்ணல, சார். என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன். அப்போதான் உங்களுக்குப் புரியும்.”
என்று அன்று நடந்ததை அவனிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைத்தாள் ஸ்ரீனா.
ஆனால், அவள் பேசப் பேச அவனுடைய பிடி இறுகிக்கொண்டே சென்றது. அதில் பேச முடியாமல் அவள் திணறிக்கொண்டிருக்க, மெல்ல அவளுடைய கழுத்திலிருந்த பிடியைத் தளர்த்தியவன், அவளுடைய இடுப்பில் கைவைத்து தன் பக்கமாக இழுத்து, அணைப்பதுபோல் அவள் இடையைச் சுற்றிக் கரத்தைக் கொடுத்து நிற்க வைத்தான்.
அவனுடைய அந்தத் தொடுகையில் அவளுக்குக் கோபம்தான் எட்டிப் பார்த்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாதவன் அவளைப் பார்த்துப் பேசத் தொடங்கினான் விதுரன்.
“கவலைப்படாதே! உன்னை அவ்வளவு சீக்கிரம் கொன்னுட மாட்டேன்.”
என்று சொன்னான் விதுரன்.
“சார், நான் எதுவும் வேணும்னே பண்ணல. ப்ளீஸ், என்னை விட்டுருங்க. எனக்கு இந்த வேலைகூட வேணாம். இனி இந்த ஊர்லகூட இருக்க மாட்டேன். நான் எங்கேயாவது போயிடுறேன், சார்.”
என்று சொன்னாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டு பலமாகச் சிரித்தவன்,
“என்ன சொன்ன? இந்த வேலை வேணாமா? இந்த ஊரை விட்டுப் போறியா? அது உன்னால முடியாதே!”
என்று சொல்லியவன் இன்னும் சத்தமாகச் சிரித்தான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் பயத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சமயம், அவன் மீது கோபமும் வரத்தான் செய்தது. இருந்தும், இவனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று எண்ணித் தன் கோபத்தை அடக்கிக்கொண்டிருந்தாள்.
ஆனால், இவளுடைய கோபம் அவனிடம் செல்லுபடியாகுமா?
“என்ன அப்படிப் பார்க்கிற? ஒண்ணும் புரியலையா? ஜஸ்ட் வெயிட், பேபி!”
என்று சொன்னவன், அடுத்த நொடியே சுனிலை அழைத்திருந்தான்.
அவன் அழைத்த மறுநொடியே ஒரு ஃபைலுடன் உள்ளே நுழைந்திருந்தான் சுனில். உள்ளே வந்தவன், அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திடுக்கிட்டான். இங்கே என்ன நடக்கிறது என்பது போல் அவர்களைப் பார்த்தவன், அடுத்த நிமிடமே அதைக் கண்டுகொள்ளாதவன்போல் விதுரனின் முன்பு அந்த ஃபைலை நீட்டினான்.
ஒரு கையால் அவளை வளைத்துப் பிடித்திருந்தவன், இன்னொரு கையால் சுனிலிடமிருந்து ஃபைலை வாங்கி அவளிடம் கொடுத்து,
“இதப் படி!”
என்று சொன்னான் விதுரன்.
பின்பு, அவளைத் தன் கை வளைவிலிருந்து விடுவித்து, ஓரடி நகர்ந்து நின்றான்.
அதை வாங்கியவள் முதல் பக்கத்தை மட்டும் படித்தாள். அதில் பி.ஏ. வேலைக்கான அப்ளிகேஷன் ஃபார்ம் இருந்தது. அதைப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் பயமும் கலந்திருந்தது.
“என்ன, ஃபர்ஸ்ட் பேஜ் மட்டும் படிச்சிட்டு, இதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்கிறியா? வெயிட், பேபி! நெக்ஸ்ட், நெக்ஸ்ட்னு பாரு. அப்போதான் உனக்குப் புரியும்.”
என்று வில்லத்தனமாகச் சிரித்துக்கொண்டே சொன்னான் விதுரன்.
அவன் சொன்னதைக் கேட்டவள், தொடர்ந்து படிக்கத் தொடங்கினாள். அவள் படிக்கப் படிக்கப் பயமும் கோபமும் ஆத்திரமும் அதிகரித்தன. கண்களில் கண்ணீரும் பெருகியது. அதில் அவளுடைய கைகள் நடுங்கின.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆனால், அவனோ, இன்னும் படி என்பது போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளோ கோபமாக அவனை முறைத்தபடி நின்றிருந்தாள். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் நின்றுகொண்டிருந்தான் அவன். அதைப் பார்த்தவளுக்கு இன்னும் ஆத்திரம் அதிகரித்தது. அதை அடக்க முடியாமல் அவனிடம் பேசத் தொடங்கினாள்.
“இதோ பாருங்க! இதெல்லாம் இன்டர்வியூக்கு அப்ளை பண்ணும்போது சொன்ன ரூல்ஸ் கிடையாது. என்னை ஏமாத்தி இந்த டாக்குமெண்ட்ல சைன் வாங்கியிருக்கீங்க. என்னால இதுல இருக்கிற எதையும் பண்ண முடியாது!”
என்று சொன்னாள் ஸ்ரீனா.
அதைக் கேட்டு நக்கலாகச் சிரித்தவன்,
“சுனில், மேடம் ரொம்ப சூடா இருக்காங்க. நீயே சொல்லிடு!”
என்று சொன்னான் விதுரன்.
அதைக் கேட்ட சுனில், அந்தப் பெண்ணைப் பாவமாகப் பார்த்தான். பின்பு, அவளிடம் சில விஷயங்களை மட்டும் எடுத்துச் சொன்னான்.
“நீங்க இந்த நிமிஷத்திலிருந்து பாஸோட பர்சனல் செக்ரட்டரி. அதுமட்டுமில்ல, இருபத்தி நாலு ஹவர்ஸும் நீங்க பாஸ் கூடத்தான் இருக்கணும். அவர் எங்க போனாலும், எங்க வந்தாலும் நீங்க அவர்கூடவே டிராவல் பண்ணுற மாதிரி இருக்கும். அதாவது, உங்களுக்கு ஒர்க்கிங் டைம் கிடையாது. ஆல் டைமும் உங்களுக்கு ஒர்க்கிங் டைம்தான். லாஸ்ட் பேஜைப் படிங்க.”
என்று சொன்ன சுனில் அமைதியாகிவிட்டான்.
சுனில் சொன்ன விஷயங்களைத்தான் அவளும் ஏற்கெனவே படித்திருந்தாள். ஆனால், லாஸ்ட் பேஜைப் படிங்க என்று அவன் சொன்னதும், அதில் ஏதோ ஒரு பூகம்பத்தையே வைத்திருப்பது போல் தோன்றியது அவளுக்கு.
கடைசிப் பக்கத்திற்குச் சென்றவள் படிக்கத் தொடங்கினாள்.
“என்னோட பாஸ் எது சொன்னாலும் மறுப்பு சொல்லாமல் அந்த வேலையைச் செஞ்சு முடிப்பேன். அது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி. எந்தப் பிரச்சினை வந்தாலும் இந்த ஜாப்பை விட்டு நான் போக மாட்டேன். அப்படி நான் போகணும்னு நினைச்சா, என்னோட பாஸ் கேட்கும் நஷ்டஈட்டை நான் கொடுக்கணும். அதுமட்டுமல்ல, இந்தப் பத்து வருட காண்ட்ராக்ட் முடியும் நேரத்தில் என்னோட பாஸ் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் அடுத்து நான் நடக்கணும்.”
என்று படித்து முடித்தாள் ஸ்ரீனா.
அதை முழுமையாகப் படித்து முடித்தவளுக்குக் கோபம் இன்னும் அதிகமானது. அவன் எப்படிப்பட்டவன் என்பதை மறந்தவளாக, மீண்டும் அவனுடைய சட்டைக் காலரை எட்டிப் பிடித்தாள்.
“நீயெல்லாம் ஒரு மனுஷனா? இப்படி ஒரு காண்ட்ராக்ட் ரெடி பண்ணியிருக்கியே!”
என்று மிகவும் கோபமாகக் கேட்டாள் ஸ்ரீனா.
ஏற்கெனவே அவள் மீது அதிக கோபத்தில் இருந்தான் விதுரன். இப்போதுதான் அந்தக் கோபத்தை அடக்கிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான். ஆனால், இப்போது அவளுடைய செயலால் அவனுடைய சிறு பொறுமையும் அவனைவிட்டு விலகியிருந்தது.
அவளுடைய கழுத்தைப் பிடித்தவன், நொடிக்கு நொடி தன் பிடியை இறுக்கிக்கொண்டே சென்றான்.
முதலில் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காதவள் பயந்துதான் போனாள். ஆனால், தன் பயத்தைத் தனக்குள்ளேயே புதைத்தவள், அவனிடமிருந்து போராடித் தப்பிக்க முயன்றாள்.
ஆனால், அது அவனிடம் நடக்குமா?
அவன் மனிதனா என்ன? ஒரு ராட்சசன் அல்லவா! அவனுடைய பிடியிலிருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதைச் சில நிமிடங்களுக்குப் பிறகுதான் புரிந்துகொண்டாள்.
மிகவும் சிரமப்பட்டு அவனிடம் பேசத் தொடங்கினாள்.
“ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க! நான் வேணும்னு அப்படிப் பண்ணல. நான் பண்ணதுக்கு சாரிகூட கேட்கிறேன். என்னை விட்டுடுங்க. இனி உங்க கண்ணுல நான் படவே மாட்டேன்.”
என்று சொன்னாள் ஸ்ரீனா.
“உன்னை விடணுமா? நெவர்! இனி என் கிட்ட இருந்து நீ தப்பிக்கவே முடியாது. உன்னால நான் பட்ட அசிங்கத்தை என்னால மறக்க முடியாது!”
என்று சொன்னவன், திரும்பிச் சுனிலை ஒரு பார்வை பார்த்தான்.
அவனுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட சுனில், ஹேக்கிங் மூலம் எடுத்த வீடியோக்களை இயக்கினான்.
அதில் ஓடிய காட்சிகளைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் தன் மீது அவனுக்கு இருக்கும் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது புரிந்தது.
அதுமட்டுமில்லாமல், இவனிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று அவளுடைய மூளையும் மனமும் ஒரே நேரத்தில் அவளுக்கு உணர்த்தின. அதில் அப்படியே நொந்துபோனவள், அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தாள்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
“இந்த செகண்ட்ல இருந்து உன்னோட டியூட்டி ஸ்டார்ட் ஆயிடுச்சு. சுனில், இவளோட ஒர்க் என்னன்னு டீட்டெய்லா சொல்லிக்கொடு!”
என்று சொன்னான் விதுரன்.
அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தவன், அவளைப் பார்த்துப் பேசத் தொடங்கினான்.
“இங்க பாரு, காண்ட்ராக்ட்ல இருக்கிறதை மட்டும் தான் நான் ஃபாலோ பண்ணுவேன்னு நினைக்காதே. ஒர்க்ல ஒரு சின்னத் தப்பு நடந்தால்கூட உனக்குப் பனிஷ்மென்ட் சிவியரா இருக்கும்!”
என்று அவளைப் பார்த்துச் சொன்னான் விதுரன்.
“எஸ், பாஸ்! வாங்க மேடம், போலாம்.”
என்றான் சுனில்.
ஆனால், அவளோ யாருமில்லாத காட்டில் விட்டதுபோல் அப்படியே நின்றிருந்தாள். அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய நிலையைப் பார்த்த சுனிலுக்குத்தான், இனி இந்தப் பெண்ணின் நிலை என்னாகுமோ என்ற கவலை ஏற்பட்டது.
சிறிது நேரம் அப்படியே நின்றவள், இனி இவனிடமிருந்து தன்னால் தப்பிக்கவே முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டாள். ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துவிட்டு அவனிடம் பேசத் தொடங்கினாள்.
“எனக்கு நல்லாப் புரிஞ்சிருச்சு. இனி உங்க கிட்ட இருந்து என்னால தப்பிச்சு எங்கேயும் போக முடியாதுன்னு. ஆனா, எனக்குன்னு கொஞ்ச நேரம் தேவை. நான் நாளைக்கு வந்து என்னோட வேலையில ஜாயின் பண்ணிக்கிறேன்.”
என்றாள் ஸ்ரீனா.
விரக்தியில் அவளுடைய குரலில் ஜீவனே இல்லை. அதைச் சுனில் நன்றாகப் புரிந்துகொண்டான். ஆனால், எதிரில் இருந்த ராட்சசனோ அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
சுனிலை ஒரு பார்வை பார்த்திருந்தான் விதுரன். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவன், ஸ்ரீனாவை வெளியே அழைத்து வந்து, அவளைச் செல்லும்படி சொல்லிவிட்டு, தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.
அன்று இரவு, இனி யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தாளோ, அவனிடமே மீண்டும் பிணைக்கைதியாக மாட்டிக்கொண்டதை எண்ணி மனம் வேதனைப்பட்டது ஸ்ரீனாவுக்கு.
இதையெல்லாம் தன் தோழியிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவித்தவள், கடைசித் தளத்திலிருந்து சேல்ஸ் டிபார்ட்மென்ட் இருந்த தளத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அவளுக்காக அவளுடைய தோழி அங்கே காத்துக்கொண்டிருந்தாள்.
இவள் வந்ததைப் பார்த்த கவி, அவளுடைய முகத்தைக்கூடச் சரியாகப் பார்க்காமல் ஆர்வமாக ஓடிவந்து,
“ஏய், ஸ்ரீ! என்ன ஆச்சு? எல்லாம் ஓகேவா?”
என்று கேட்டாள்.
ஆனால், ஸ்ரீனாவோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
அப்போதுதான் அவளை உற்றுப் பார்த்தாள் கவி. ஸ்ரீனாவின் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது. அந்தக் கண்ணீர் அவளுடைய கன்னங்களில் கோடுகளாக வழிந்தோடியதற்கான அடையாளங்களும் தெரிந்தன.
அதைக் கண்டதும் பதறிப்போன கவி,
“என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்க?”
என்று பயத்துடன் கேட்டாள்.
“முதல்ல வா, போலாம்.”
என்று சொன்னாள் ஸ்ரீனா.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்!
இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி…
