ஏர்போர்ட்டில் மேனேஜர் சந்தீப் ஆதர்ஷிடம், “ஆஷிக் ஏன் இன்னும் ரிப்போர்ட் பண்ணல? யூ கைஸ் நீட் டு போர்ட் தி ஃப்ளைட்.”
“சார் ஈவன் ஐயம் திங்கிங் அபவுட் இட், சார் ஆஷிக் இஸ் தேர்.” என்றவாறு ஆதர்ஷ், ஆஷிக்கின் அருகில் சென்று, “ஏன்டா லேட்?”
“ஒன்னும் இல்லை, கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்…”
“என்னாச்சு? ஆர் யு ஓகே?”
“ஓகேடா, நீ டென்சன் ஆகாத ஐயம் ஃபைன்.”
“யா கம் வீ ஆர் கெட்டிங் லேட்.”
இருவரும் ஃப்ளைட்டை நோக்கி தங்களின் நடையைச் செலுத்தினர். ஃப்ளைட்டில் இருந்த சில பயணிகள் விமானப் பணிப்பெண்களிடம் ஃப்ளைட் டிலே ஆனதால் சற்று சத்தம் போட, தியா அவர்களைச் சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே,
அவள் தன் சக பணிப்பெண்களிடம், “ஐ திங்க் வீ ஹாவ் டு இன்ஃபார்ம் திஸ் டு கேப்டன்.” என்று கூறிய மறுநொடி,
காக்பிட்டில் இருந்து, “குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் ஐஸ் யுவர் கேப்டன் ஆஷிக் அண்ட் கேப்டன் ஆதர்ஷ் கண்ணா, ஸ்பீக்கிங் வெல்கம் ஆல் ஆஃப் யூ ஆன் CJ 311 ட்ராவலிங் டெல்லி டு மும்பை, அப்பாலஜிஸ் ஃபார் டிலே டேக் ஆப், பட் ஐ அஷுயர் யு கைஸ் தி ஃப்ளைட் வில் பீ லேண்ட் இன் மும்பை ஆன் டைம், வீ ஹோப் யூ ஆல் வில் என்ஜாய் த ஜர்ணி வித் அஸ், ஸிட் பாக் அண்ட் ரிலாக்ஸ் பாஸ்டன் யுவர் சீட் பெல்ட் அண்ட் என்ஜாய் தி ஃப்ளைட். கேபின் க்ரூவ் ப்ரீப்பர் ஃபார் டேக் ஆப் கிராஸ் செக் அண்ட் ரிப்போர்ட்.” என்றவன், ஆதர்ஷைப் பார்க்க அவன் லேசாகப் புன்னகைத்தான்.
சில நேரம் கழித்து உள்ளே வந்த தியா, “குட் மார்னிங் கேப்டன் ஆதர்ஷ்!”
“குட் மார்னிங் தியா!”
“வாவ்! கேப்டன் ஆஷிக் யு மேட் இட், யு நாட் ஒன்லி ஹாவ் மேஜிக் இன் யுவர் லுக். யு ஆல்சோ ஹாவ் இன் யுவர் வாய்ஸ்.”
“ஆல் செட்.”
“எஸ்”
“தியா”
“சாண்ட்விச் தானே?”
“இல்லை, தலை சுத்துற மாதிரி இருக்கு. சோ கேன் ஐ கெட் சம் லெமன் வித் சுகர்.”
“ஆஷிக் என்னாச்சு?” என்று ஆதர்ஷ், தியா இருவரும் கவலையாகக் கேட்க,
“கைஸ் ஐயம் ஓகே, ஐ ஜஸ்ட் ஃபீல் லைக் டு ட்ரின்க்.” என்று அவர்களை அவன் சமாதானம் செய்ய,
“ஓகே” என்றவாறு தியா அங்கிருந்து சென்றாள். சில நொடிகள் கழித்து உள்ளே வந்தவள், “ஆஷிக் யுவர் லெமன் ஜூஸ்.”
“தாங்க் யு.”
“கேப்டன் ஆதர்ஷ், ஹியர் இஸ் யுவர் பிளாக் டீ.”
“பிளாக் டீ?”
“யா!”
“நோ தியா, ஐ ப்ரீபர் கிரீன் டீ.”
“சாரி”
“இட்ஸ் ஓகே, கேன் ஐ கெட் கிரீன் டீ. இஃப் யு டோன்’ட் மைண்ட்.”
“ஷுயர் கேப்டன்.”
“தியா, நடாஷா இங்க இல்லையா என்ன? கொஞ்ச நாளா நான் அவளை பார்க்கவே இல்லை?”
“எஸ், ஷீ இஸ் ஆன் லீவ்.”
“ஓகே” என்று அவன் கூறிய மறுநொடி, ஆஷிக்கின் கையில் இருந்த ஜூஸ் கிளாஸ் கீழே விழ, மெல்ல பாதிக் கண்கள் மூடியும் திறந்துமாய் இருக்கும் நிலையில் ஆஷிக் கீழே சரிந்தான்.
பதறிய ஆதர்ஷ் ஃப்ளைட்டில் ஆட்டோ பைலட் மோடை செட் செய்துவிட்டு, ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய ஆதர்ஷ், தியா இருவரும் சேர்ந்து செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாக, ஆஷிக் மயக்க நிலையை அடைந்தான்.
“தியா இன்னைக்கு டூட்டி டாக்டர் யாரு?”
“ஜியா”
“கால் ஹெர் ரைட் நவ்.” என்றவுடன், அவள் அங்கிருந்து ஜியாவை அழைப்பதற்காகச் செல்ல,
“கம் ஆன் தியா, கால் ஹெர் த்ரூ இன்டெர்காம்.”
“எஸ் கேப்டன்” தியா கால் செய்த சில நொடிகளில் காக்பிட்டை அடைந்த ஜியா, பதற்றத்தோடு அவனது அருகில் வந்து அவனது நாடியைப் பிடித்துப் பார்த்து,
“பயப்படுறதுக்கு எதுவும் இல்லை, பல்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு, பீவரும் ஜாஸ்தியா இருக்கு, லெட் மீ ட்ரீட் ஹிம்.”
“எனி எமெர்ஜென்சி லேண்டிங்?”
“நோ ஆதர்ஷ், இஃப் ஐ நீட் ஐ வில் இன்ஃபார்ம் யு.” என்றவள் தியாவைப் பார்க்க, இருவரும் மெல்ல ஆஷிக்கை பிஸ்னஸ் கிளாஸிற்கு கைத்தாங்கலாகக் கொண்டு சென்று பத்திரமாகப் படுக்க வைத்தனர்.
இன்டர்கால் மூலமாக ஆதர்ஷ், ஆஷிக்கின் நிலையைப் பற்றிக் கேட்க தியா, ஜியாவிடம், “கேப்டன் ஆதர்ஷ் வாண்ட் டு ஸ்பீக் டு யு.” என்று மட்டும் கூறிவிட்டு, ஆஷிக்கின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் கண்விழிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
“ஆஷிக் எப்படி இருக்கான்?”
“இன்ஜெக்ஸன் போட்ருக்கேன், ஹீ வில் பீ ஓகே.”
“ஓகே” என்றவன் தன் ஃபோன் காலை துண்டிக்க,
ஆஷிக்கின் அருகில் வந்தவள், தியா அவனது கையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சங்கடமாகப் பார்க்க தியாவோ,
“என்ன? இங்கேயே நின்னுட்டு இருக்க? அதான் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டல, எமெர்ஜென்சினா கூப்பிடுறேன்.” என்று கூற,
ஆஷிக் தன் கண்களைத் திறந்து மெல்ல நிமிர்ந்து உட்கார, ஜியா அவனது முகத்தைத் தன் கையில் ஏந்தி, “ஆஷிக் ஆர் யு ஓகே? ஐ க்நோ யு வில் பீ ஓகே.” என்று தன் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய கூற, சற்று நேரம் அவளையே பார்த்தவன் அவளது கையைத் தட்டிவிட்டுவிட்டு அங்கிருந்து எழும்ப முயற்சி செய்ய,
மேலும் கண்கள் இருண்டு அதே இருக்கையில் அமர்ந்தவனைக் கைத்தாங்கலாக பற்றிய ஜியா, “ஆஷிக் வாட் யு ஆர் டூயிங், யு நீட் ரெஸ்ட்.”
“ஷட் அப், டோன்’ட் டச் மீ காட் இட்!” என்று அவளது கையை உதற, ஜியாவைப் பார்த்து புன்னகைத்தவாறே ஆஷிக்கின் அருகில் வந்து அமர்ந்த தியா, “ஆஷிக் இட்’ஸ் மீ, யு ப்ளீஸ் ரிலாக்ஸ்.”
“அவளை இங்க இருந்து போகச் சொல்லு.” என்று அவன் மீண்டும் கோபமாகக் கூற,
“ப்ளீஸ் டாக்டர் ஜியா இங்க இருந்து போங்க.” என்று தியா விஷயமமாய் புன்னகைக்க,
ஆஷிக், தியாவின் கையைப் பற்றியவாறே எழும்ப முயற்சிக்க, “ஆஷிக் கொஞ்சம் ரெஸ்ட் எடு.”
“நோ தியா ஐயம் ஓகே, லெட் மீ கோ டு காக்பிட்.”
“ஆர் யு ஷுயர்?”
“எஸ் தியா, லீவ் மை ஹாண்ட், ஐ வில் கோ பை மை ஸெல்ப்.” என்றவன் அங்கிருந்து செல்ல,
நிதானத்தை இழந்தவன் தன் கண்கள் சொருக தரையில் நெடுஞ் சாண்கிடையாகக் குப்புற வீழ்ந்தான்.
தியாவின் சத்தம் கேட்டு உள்ளே வந்த ஜியா, ஆஷிக் முதுகில் ரத்தம் வர பேச்சு மூச்சு இல்லாமல் கீழே கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, அவனது முகத்தைத் தன் மடியில் ஏந்தியவாறு கண்கள் ஈரமாக, ஆஷிக்கை எழுப்ப முயற்சி செய்ய,
“ஜியா டூ சம்திங்.”
“தியா ஹீ நீட் டு பீ ஹாஸ்ப்பிட்டலைஸ்ட்.”
“வாட்?”
“இன்ஃபார்ம் கேப்டன் அபௌட் எமெர்ஜென்சி லேண்டிங்.”
“யா ஐ வில், ஆஷிக்கப் பாத்துக்கோ.”
“எஸ்”
ஆதர்ஷிடம் விஷயத்தைக் கூறிய தியா, ஆஷிக்கின் அருகிலே இருக்க ஜியா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தாள்.
காக்பிட்டில் ஆதர்ஷ், ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோலர் (ATC) அதிகாரியிடம், “ATC ஜெய்ப்பூர் கம் இன் திஸ் இஸ் CJ 311, கேன் யு ஹீயர் மீ ஓவர் அண்ட் அவுட்”
“எஸ் CJ 311 ஐ கேன் ஹீயர் யு ஓவர் அண்ட் அவுட்.”
“ATC ஜெய்ப்பூர் மெடிக்கல் எமெர்ஜென்சி ஆன் போர்டு வீ ரெக்யூஸ்ட் பெர்மிஷன் டு லேண்ட் ஓவர் அண்ட் அவுட்.”
“ஓகே வீ வில் கெட் பேக் டு யு ஓவர் அண்ட் அவுட்.”
“ATC ஜெய்ப்பூர் ப்ளீஸ் கம் இன்.” என்று அவன் பேச பேச, மும்பை ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் அதிகாரியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
மீண்டும் முயற்சி செய்தவன், “ATC ஜெய்ப்பூர் ப்ளீஸ் கம் இன், மெடிக்கல் எமெர்ஜென்சி வீ ஆர் ரெடி டு லேண்ட் கேன் யு ஹீயர் மீ ஓவர் அண்ட் அவுட்.”
“எஸ் CJ 311 ட்ராபிக் இஸ் கிளீயர்ட் பெரமிட்டட் டு லேண்டிங்.” என்று அங்கிருந்து பதில் வர, ஃப்ளைட்டை தரையிறக்க தயாரானான்.
மும்பையில் தரையிறக்க வேண்டிய ஃப்ளைட்டை ஜெய்ப்பூரில் தரையிறக்க வேண்டியதாகி போனதால், மக்களுக்கு அறிவிப்பு விடுக்கத் தாயரானான்.
“குட் மார்னிங் லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் திஸ் ஐஸ் யுவர் கேப்டன் ஆதர்ஷ் கண்ணா ஃப்ரம் தி டெக், பிக்காஸ் ஆஃப் மெடிக்கல் எமெர்ஜென்சி இன் தீ ஃப்ளைட் வீ நீட் அ எமெர்ஜென்சி லேண்டிங், ஸோ ஐ ரெக்யூஸ்ட் எவெரி ஒன் டூ கோ ஆப்ரேட் வித் அஸ், ப்ளீஸ் எவெரி ஒன் பாஸ்டன் யுவர் சீட் பெல்ட். கேபின் க்ரூவ் ப்ரீப்பர் ஃபார் லேண்டிங், க்ராஸ் செக் அண்ட் ரிப்போர்ட்.”
ஃப்ளைட் அடுத்தப் பத்து நிமிடத்தில் பத்திரமாகத் தரையிறங்க, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்சில் இருந்த கம்போண்டர்களின் உதவியுடன் ஆஷிக் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அரை மணிநேர இடைவெளிக்கு பிறகு ஃப்ளைட் மீண்டும் புறப்பட்டது.
***
