Rolex 22

22

அந்தப் பாழடைந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையின் ரகசிய அறையில் நிலவிய மௌனம், கடலில் உருவாகப் போகும் ஒரு பிரம்மாண்டமான சுனாமியின் அமைதியைப் போல இருந்தது. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த இரும்புப் பெட்டியில் இருந்த பணக்கட்டுகளையும், ஜகா ரெட்டியின் கையில் இருந்த அந்த இரும்புச் சுத்தியலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த பைரவனின் மூளை, ஒரு அதிநவீன கணினியை விட வேகமாக கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

விசாகப்பட்டினம் துறைமுகத்தின் வரலாற்றில் எத்தனையோ ரவுடித்தனங்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால், ஜகா ரெட்டி என்ற இந்த மிருகம், வெறும் ரத்த வெறி பிடித்த ஒரு தாதா மட்டுமல்ல, தனக்குக் கீழே இருக்கும் அண்டர்கிரவுண்ட் நெட்வொர்க்  மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் துடிக்கும் பேராசைக்காரன் என்பது பைரவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“ஜகா… நீ சொன்னது சரிதான். துரோகிகளுக்கு இந்த துறைமுகத்துல இடம் இருக்கக்கூடாது,” என்று பைரவன் தன் குரலில் இருந்த நடுக்கத்தையோ, மன உளைச்சலையோ வெளியே காட்டாமல் மிகவும் நிதானமாகப் பேசினான்.

ஆனால் அவனது உள்மனம் அலறியது, ‘அடப்பாவி ஜகா… உனக்கு ACP சர்மாவோட உண்மையான மதிப்பு தெரியல. அவன் சும்மா போலீஸ் இல்லடா, ரோலக்ஸ் உலகத்துக்கே சாவி வச்சிருக்கறவன். அவனோட லிங்க்ல இருந்த அந்தத் தொழிலாளியை இப்படிச் சிதைச்சுக் கொன்னுட்டியே! அவன் மட்டும் எனக்கு உயிரோட கிடைச்சிருந்தா, சர்மாவை நான் தூக்கியிருப்பேனே…’

பைரவன் தன் சிந்தனைகளைத் தற்காலிகமாக மூடிவிட்டு, மேஜை மீது இருந்த துறைமுக வரைபடத்தை முன்னோக்கி இழுத்தான்.

“இப்போ நாம அடுத்த கட்டத்தைப் பத்தி யோசிப்போம் ஜகா. இந்த வாரம் வர்ற அந்த Norway Black market சரக்குக் கப்பல் துறைமுகத்தோட எந்தப் பகுதிக்கு வரப்போகுது? அதோட Containers எங்கே இறக்கப்போறோம்?”

ஜகா ரெட்டி தன் வாயில் இருந்த சிகாரை ஆழமாக இழுத்து புகையை வான் நோக்கி ஊதினான். அந்தப் புகை அவனது குரூரமான முகத்தை இன்னும் பயங்கரமாகக் காட்டியது.

“பைரவா, அந்தச் சரக்குக் கப்பல் சாதாரண Dock பகுதிக்கு வராது. அப்படி வந்தா இந்த ஷர்மா மாதிரி ஆபிசருங்க குடைய ஆரம்பிச்சுடுவாங்க. அதனால, கடலுக்கு நடுவே Offshore Transfer மூலமா சின்னச் சின்னப் படகுகள்ல சரக்குகளை மாத்தி, துறைமுகத்தோட ரகசிய Yard பகுதிக்குக் கொண்டு வரப்போறோம். அங்கிருந்து நேரா நம்ம அண்டர்கிரவுண்ட் நெட்வொர்க் மூலமா நம்ம பாழடைஞ்ச Warehouseக்கு மாற்றப்படும்.”

“அப்போ கஸ்டம்ஸ் செக்கிங்? டாக்குமெண்ட்ஸ்?” பைரவன் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

உரக்கச் சிரித்த ஜகா, “போலி ஆவணங்கள் தயாரிக்கிறதுல நம்ம ஆளுங்க கைதேர்ந்தவங்க பைரவா. அந்தப் பெரிய கன்டெய்னர்கள்ல வர்றது எல்லாமே சட்டவிரோதப் போக்குவரத்து மூலமா வர்ற ஆயுதங்களும், போதைப்பொருட்களும் தான். ஆனா பேப்பர்ல அது எல்லாமே விவசாய இயந்திரங்கள்னு இருக்கும். பதிவு Unregistered Shipment என்பதால், கம்ப்யூட்டர் சிஸ்டத்துல இதோட பதிவே இருக்காது. நாம பண்றது சாதாரண கடத்தல் இல்ல பைரவா… ஒரு பேரரசோட வர்த்தகம்!”

“ஆனா ஜகா, இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை நாம ரன் பண்ணும்போது, மேலிடத்துல இருந்து வர்ற பிரஷரை எப்படி ஹேண்டில் பண்ணப் போறோம்? குறிப்பா அந்த மந்திரி … அவன் சும்மா இருக்க மாட்டானே?” பைரவன் தன் கவலைகளை அடுக்கினான்.

“அந்த மந்திரி பத்தி நீ கவலைப்படாதே பைரவா,” என்று ஜகா மேஜை மீது கையை ஓங்கி அடித்தான்.

“அவனுக்குத் தேவையான லஞ்சப் பணம் இருபது கோடி ரூபாய் இந்த இரும்புப் பெட்டியில இருக்கு. பணத்தைப் பார்த்தா அந்த மந்திரி நம்ம காலுக்கடியில வந்து விழுவான். அதுமட்டுமில்லாம, உள்ளூர் போலீஸ்காரங்களுக்கும், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் கொடுக்க வேண்டிய படியை நான் ஏற்கனவே பிரிச்சு வச்சுட்டேன். பணம் போற இடத்துல சட்டம் தன் கடமையைச் செய்யாது, நம்ம கடமையைத்தான் செய்யும்!”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, ஜகாவின் வலது கரமான ரங்கா அந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தான். அவனது முகம் பயத்தால் வெளுத்திருந்தது.

 

“என்னடா ரங்கா? ஏன் இப்படிப் பதறுற?” ஜகா அதட்டினான்.

“அண்ணே… நாம காலைல அந்தத் தொழிலாளியை முடிச்சுப் போட்டோம்ல… அந்த Dock பகுதிக்கு இப்போ அந்தப் புது ஆபிசர் சந்துரு வந்திருக்கான். அவனோட ஹார்பர் DC கணேஷும் இருக்கான். கணேஷ் தடுத்துப் பார்த்தும் கேட்காம, சந்துரு அந்தச் சடலத்தை ரொம்ப உன்னிப்பா கவனிச்சிருக்கான். அதுமட்டுமில்லாம, அங்க தரையில நாம வச்ச குறியீட்டைப் பார்த்துட்டு, அவன் ஏதோ பெரிய ஃபைலைத் தூக்கப் போறதா தகவல் வந்திருக்கு அண்ணே,” என்று ரங்கா மூச்சிரைக்கக் கூறினான்.

இதைக் கேட்டதும் பைரவனின் கண்கள் சுருங்குவதைக் ஜகா கவனித்தான். “என்ன பைரவா… அந்தச் சந்துருவை நினைச்சுப் பயப்படுறியா?” என்று ஏளனமாக சிரித்துக்கொண்டே தன் கையில் இருந்த இரும்புச் சுத்தியலைத் தூக்கிய ஜகா ..அருகே இருந்த மரப்பெட்டியை முழு பலத்துடன் அடித்தான்.

“படாங்..!” அந்த பெட்டி சிதறி மரத்துண்டுகள் எல்லா திசையிலும் பறந்தது.

 

“அவனை போட்டு தள்ளிடுறேன்!” என்று திடீரென கத்தியவன். “இன்று காலை அந்த dockல அந்த துரோகியை கொலை செய்தது போலவே… சந்துருவையும் போட்டு தள்ளிடுறேன்!” என்றவன் பற்களை கடித்தான்.

அந்த warehouse முழுக்க சில நொடிகள் அமைதி நிலவியது. அடியாட்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஏனெனில்…

ஜகா ஒருவரை கொல்ல முடிவு செய்துவிட்டால், அவர் உயிருடன் விடப்பட்டதே இல்லை.

அந்த நேரம்…

“வேண்டா!” என்று திடீரென குரல் எழுந்தது.

அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பைரவன் வேகமாக முன்னே வந்து ஜகாவின் கையை தடுத்திருந்தவன், “அவனை ஒன்னும் பண்ண வேண்டாம்!” என்றவனின் குரல் வழக்கத்தை விட பதட்டமாக இருந்தது.

மெதுவாக அவனை நோக்கி திரும்பி பார்த்தான் ஜகா, அவன் கண்களில் சந்தேகம்.

“என்ன…? ஏன் தடுக்குற?”” என்று மெதுவாக கேட்டான்.

பைரவனின் முகத்தில் ஒரு நொடி தடுமாற்றம் தோன்ற, மனதுக்குள் வேகமாக யோசித்தான்.

சந்துரு உயிரோட இருக்கணும். இந்த entire Blackmarket network-ன் பின்னால் இருக்கும் சர்மாவை கண்டுபிடிக்க சந்துருவின் intelligence அவனுக்கு தேவை. ஆனால் இதை ஜகாவிடம் சொல்ல முடியாது. பைரவன் உடனே பார்வையை மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அது… அது வந்து… அது ஒன்னும் இல்ல ஜகா… ” என்றவனை  ஜகா இன்னும் சந்தேகமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தான்.

பதற்றத்தை மறைக்க நினைத்த பைரவன் உடனே cigarette ஒன்றை பற்றவைத்து புகையை வெளியே விட்டுக்கொண்டே மெதுவாக ஜகாவை நெருங்கினான்.

“ம்ம் நாம இந்த blackmarket container இறக்குற வேலையில இருக்கும்போது… எதுக்கு unnecessaryஆ ஒரு அதிகாரியை கொலை செய்யணும்?”

அந்த வார்த்தையை கேட்டதும் ஜகா கோபமாக சிரித்தவன், “அவன் அதிகாரியா இருந்தா என்ன? இந்த harbourல நம்ம பெயர் கேட்டாலே போலீஸே நடுங்கணும்!” என்று கர்ஜித்தான்.

அமைதியாக இருந்த பைரவன் “விஷயம் விபரீதமா ஆகக்கூடாது ஜகா… இப்போ ஒரு dock worker deathக்கே மேலிருந்து enquiry வர ஆரம்பிச்சிருக்கு, அப்பறம் நம்ம கடத்தல் வேலை பாதிக்கும்.” என்று மெதுவாக சொன்னான்.

ஜகாவின் முகம் சற்று மாறியது, பைரவன் அதை கவனித்தான். அவன் உடனே இறுதி அம்பை வீசினான். “குறிப்பிட்ட நாளுக்குள்ள அந்த சரக்கு எல்லாம் மினிஸ்டர்கிட்ட சேர்க்கணும்.”

“மினிஸ்டர்” என்ற வார்த்தையை கேட்ட நொடியில் warehouse முழுக்க இருந்த அடியாட்களே அமைதியாகிவிட்டனர்.

ஏனெனில்… இந்த shipment சாதாரணமில்லை. அது அரசியல்வாதிகள், வெளிநாட்டு ஆயுத dealer-கள், harbor அதிகாரிகள் எல்லாரும் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய கடத்தல்.

ஜகா மெதுவாக பற்களை கடித்தான். அவன் கோபமாக நடந்தான். அருகே இருந்த இரும்பு தூணின் மீது மீண்டும் கையை அடித்தான்.

“ச்சே! அந்த சந்துரு உயிரோட இருக்குற வரைக்கும் எனக்கு தூக்கம் வராது!” என்று கர்ஜித்தான்.

மெதுவாக சிரித்த பைரவன், “அவனை இப்போ கொன்னா பிரச்சனை பெருசாகும். ஆனா அவனை use பண்ணிக்கலாம்.” என்றான்

“என்னடா சொல்ற?” என புரியாமல் பார்த்த பைரவனின் கண்களில் ஒரு ஆபத்தான ஒளி தெரிந்தது.

“சந்துரு இப்போ murder case பின்னாடி ஓடட்டும். அவன் investigate பண்ணுறதால நமக்கு தெரியாத சில பேர் வெளியில் வரலாம்.”

“அவன் நமக்காகவே வேலை பண்ணுற மாதிரி ஆகிடும். அந்த வார்த்தையை கேட்ட ஜகா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தான்.

“ஹ்ஹ்ஹா…” அந்த சிரிப்பு மெதுவாக கொடூரமாக மாறியது.

“நீயும் ஒரு நரி தான்டா பைரவா…” என்று அவன் தோளில் கை வைத்தான்.

ஆனால்… அதே நேரத்தில் பைரவனின் மனதுக்குள் ஓடியது வேறொரு சிந்தனை.

“நரி நான் தான் ஜகா… ஆனா வேட்டையாடப் போறது உன்னையே…” என்று மனதுக்குள் சிரித்தவன்,

“ஒருவேலை சந்துருவை பார்த்து பயன்திடியோ ..?” என்றான்  ஜகா  

“பயம் இல்ல ஜகா… எச்சரிக்கை,” என்று பைரவன் நிதானமாகக் கூறினான். “சந்துரு சாதாரண ஆள் இல்ல. அவன் சட்டப்படி போகணும்னு நினைக்கிறவன். அவனுக்குக் கணேஷ் மாதிரி ஆளுங்க சப்போர்ட் பண்ணலைனாலும், அவன் தனியா நின்னாவது உண்மையைத் தோண்டுவான். இப்போ நாம இறக்கப்போற இந்த Unregistered Shipment பத்தி அவனுக்கு ஏதாவது துப்பு கிடைச்சா, ஒட்டுமொத்தப் பிளானும் குளோஸ் ஆயிடும்.”

“அவனை நான் பார்த்துக்கிறேன் பைரவா,” என்று ஜகா கர்ஜித்தான். “இந்த விசாகப்பட்டின ஹார்பர் எல்லையே நம்ம ரவுடித்தனத்துக்கு அடிபணிஞ்சுதான் கிடக்கணும். சந்துரு ரொம்பத் துள்ளுனா, அவனையும் அந்த Warehouse பின்னாடி கொண்டு போய் முடிச்சுடுறேன். இப்போதைக்கு நம்ம கவனம் முழுசும் அந்தப் Black Market Cargo Ship மேலதான் இருக்கணும். அதில் வர்ற கன்டெய்னர்கள் பாதுகாப்பா யார்டுக்கு Yard வந்து சேரணும்.”

பைரவன் தலையசைத்தாலும், அவனது மனதில் சந்துருவின் நினைவு ஒரு புதிய யோசனையை விதைத்தது. ஜகாவுக்குத் தெரியாமல் சந்துருவை எப்படியாவது பயன்படுத்த முடியுமா என்று அவன் சிந்திக்கத் தொடங்கினான். சந்துருவின் புலனாய்வுத் திறன் மூலம் சர்மாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, ஜகாவுக்குத் தெரியாமல் சர்மாவைத் தன் வசப்படுத்தினால், இந்த ஒட்டுமொத்த ரவுடித்தன உலகத்துக்கும் தானே ஒற்றை ராஜாவாக மாறலாம் என்பது பைரவனின் ரகசியக் கணக்கு.

“சரி ஜகா, மந்திரிக்கு அனுப்ப வேண்டிய பணத்தை நான் என் ஆளுங்க மூலமா ரகசியமா அனுப்பி வைக்கிறேன். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டிய பங்கை நீயே கொடுத்துடு. அதே நேரம், அந்த நார்வே கப்பலோட Illegal Transit நடக்கும்போது எந்த ஒரு தடையமும் இருக்கக் கூடாது. Fake Documentation வேலைகளை இன்றே முடிச்சுடு,” என்று பைரவன் கூறிவிட்டு எழுந்தான்.

ஜகா ரெட்டி அவனைக் கட்டிப்பிடித்து, “இனிமேல் இந்த ஹார்பர் நம்மது பைரவா. ரோலக்ஸ் என்ற பெயர் இனி வெறும் காத்துல போன கதை. இனி நாமதான் சரித்திரம்!” என்று உசுப்பேற்றினான்.

பைரவன் அந்தப் பாழடைந்த தொழிற்சாலையை விட்டு வெளியேறித் தனது வெள்ளை நிறக் காரை நோக்கி நடந்தான். 

அவனது மனதில் ஒருபுறம் ஜகாவின் ரத்த வெறியும், மறுபுறம் சர்மாவின் ரகசியமும், எல்லாவற்றிற்கும் மேலாக ரோலக்ஸ் உண்மையிலேயே இறந்துவிட்டானா என்ற நீங்காத சந்தேகமும் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தன. இந்தத் துறைமுகத்தில் இனி ஓடப்போகும் ரத்த ஆறு, யாருடைய சாம்ராஜ்யத்தை அழிக்கப் போகிறது என்பது அவனுக்கே புதிராக இருந்தது.

கடல் காற்று அவனது முகத்தில் பலமாக அடிக்க, காரில் ஏறி அமர்ந்தவன், ஜன்னல் வழியாகத் தூரத்தில் தெரிந்த அந்த பிரம்மாண்டமான கப்பல் கட்டும் Dockyard பார்த்தான், அதே நேரம் அவனின் கண்களில் பட்டது, ரோலக்ஸ் மயூராவின் கழுத்தில் தாலி கட்டிய அந்த அரச மரம் ….…

அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!