அத்தியாயம் 3

 

அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்த அபிஷேக் அடுத்த நாள் ஆதவனுடன் தனது ரெஸ்ட்டாரன்ட்டிற்குச் சென்றான்.

“அபி ரெஸ்ட்டாரன்ட் இந்தியன்” சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியன் சம்பந்தமான அனைத்து விதமான உணவுகளும் இங்கு தயார் செய்யப்படுகிறது.

அபிஷேக்குடன் ஆதவன் மதிய நேரத்தில் அங்கு செல்ல அவர்கள் சென்ற நேரத்தில் ரெஸ்ட்ராரென்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் உள்ளே செல்லும் போது ஒருவன் கத்திக் கொண்டிருக்க அதிர்ச்சியாகி என்னவென்று கவனித்தனர்.

அங்கே ஒருவன் சர்வரை திட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன ரெஸ்ட்ராடண்டா நடத்தறீங்க? ஒருத்தன் எவ்ளோ பசியோட வந்து ஆர்டர் பண்றான்? எவ்ளோ லேட்டா கொண்டு வந்து சர்வ் பண்றீங்க? அதுக்கும் அமைதியாகி சாப்பிடலாம்னு சாப்பிட்டா இதென்ன பிரியாணில முடி? இப்படி தான் சமைப்பாங்களா? நான் உங்க ஹோட்டல் மேல கேஸ் போடட்டுமா?” எனக் கத்த,

“சார் ப்ளீஸ் சார். வேணும்னே இப்படி பண்ணல” என சர்வர் விளக்கம் கொடுக்க,

“கூப்டு அந்த செஃப்ப. எவ்ளோ அமௌண்ட் பில் வாங்குறீங்க?” எனக் கத்த அபிஷேக் அவரிடம்,

“சார் டென்ஷனாகாதீங்க. என்ன பிராப்ளம் சார்?” என விசாரித்தான்.

“ஹாப்டே ஃபுல்லா நானே மார்க்கெட்டிங்னு சுத்திக் களைச்சுப் போய் வாய்க்கு ருசியாச் சாப்பிடலாம்னு விலையைப் பாக்காம இங்க வந்தா சாப்பாட்டுல முடி இருக்கு சார்‌. ஒவ்வொரு டிஷ்க்கும் இவ்வளவு பணம் வாங்கறாங்க தானே? கரெக்ட்டா சர்வ் பண்ண மாட்டாங்களா?” என அவன் இன்னும் அவர்களிடம் கத்த,

“ஓகே ஓகே கூல் சார். இன்னொரு பிரியாணி நான் உங்களுக்கு ஃப்ரீயா ஆஃபர் பண்றேன். ப்ளீஸ் பீ சீட்டட் சார்” என்று பணிவாகச் சொல்ல,

“நீங்க ஏன் சார் எனக்கு ஆஃபர் பண்றீங்க? அவங்க வந்து பதில் சொல்லட்டும்” என அப்போதும் அவன் கோபமாகக் கத்த,

“கூல் சார். ஹே மேன்… யார் இங்க செஃப்?.அவங்கள வர சொல்லுங்க” என அதிகாரக் குரலில் சொல்ல ஒரு நிமிடம் திணறிய சர்வர் சரி என்று கூறி விட்டு செஃப்பை கூப்பிடச் சென்றான்.

அந்த செஃப் ஓரிரு நிமிடங்களில் அங்கு வர அவனிடம் அபிஷேக்,

“என்ன மேன் க்ளீனா ஃபுட் செய்ய மாட்டீங்களா? கஸ்டமர்க்கு இப்டி தான் சர்வ் பண்ணுவீங்களா?” எனக் கேட்க அந்த செஃபிற்கு அவன் யாரென்று தெரியவில்லை என்றாலும் அவன் தோரணையில் திகைத்தான்.

“சார் ஐ ஆம் சாரி. இனி இந்த மாதிரி நடக்காது” என்றவன் சொல்ல,

அப்படியா என்பது போல பார்த்தவன், 

“இன்னைக்கு இவர் சாப்பிடற லஞ்ச்க்கு யு ஹேவ் டு பே பில்” என இறுகிய குரலில் சொல்ல அவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“ஸார் வெயிட் பண்ணுங்க. டிஷ் வந்துரும்” என ஆதவனுடன் சென்றவன்,

“ஆது நீ ஆஃபிஸ் ரூம்ல வெயிட் பண்ணு. நான் கிச்சனுக்கு போய்ட்டு வந்தறேன்” என்றவன் சொல்ல அவனும் சரி என்று அலுவலக அறைக்குச் சென்றான்.

அபிஷேக் நேரே கிச்சனுக்கு சென்றவன் அனைவரையும் முகம் இறுகப் பார்த்தான்.

“நம்ம ரெஸ்டாரன்ட்டுக்கு க்வாலிட்டி முக்கியம்னு உங்களுக்கு எவ்ளோ டைம் நான் சொல்லிருக்கேன். இப்படி தான் பண்ணுவீங்களா?” என அவன் கர்ஜிக்க அங்கிருந்த அனைவரும் அவனை திடீரென்று பார்த்ததால் திடுக்கிட்டார்கள்.

“செஃப் யார் இவங்க?” என மெல்லிய குரலில் அருண் விசாரிக்க,

“அவரு தான் நம்ம எம்.டி” என்றதில் திகைத்துப் போய் அபிஷேக்கை பார்த்தான்.

அபிஷேக் கத்திக் கொண்டிருந்தவன் இவர்கள் பேச்சுச் சத்தத்தில் அவர்கள் புறம் பார்த்தவன்,

“ஹலோ என்ன அங்க சத்தம்?” என அருணிடம் கத்த,

“சாரி சார்”

“ஃப்ர்ஸ்ட் கரெக்ட்டா வொர்க்கப் பாருங்க. அப்றம் எல்லாம் விசாரிக்கலாம்” என நக்கல் குரலில் சொல்ல,

“சார்…” என அருண் திணறினான்.

“மித்ரன் நீங்க டேபிள் போறதுக்கு முன்னாடி எல்லா டிஷ்ஷீம் செக் பண்ணுங்க அன்ட் சூஸ் செஃப் நீங்க. நியாபகம் இருக்குல்ல.‌ அத மைண்ட்ல வெச்சிட்டு வொர்க் பண்ணுங்க” என்றவன்,

“கமான். ஆல் ஆஃப் யு கோ டு யுவர் வொர்க்” என்றவன்,

“மித்ரன் அந்த டேபிள்க்கு என்ன டிஷ் செஞ்சீங்க?” எனக் கேட்க மித்ரன் அவனை திகைப்பாய் பார்த்தான்.

“கட்டி வங்கயா பிரியாணி” எனச் சொல்ல,

“ஓகே. யூ டு யுவர் வொர்க்” என்றவன் தனது வேலையை ஆரம்பித்தான்.

கட்டி வங்கயா பிரியாணி. இதனை கத்தரிக்காய் பிரியாணி என்றும் சொல்வார்கள்‌. ஆந்திராவில் செய்ய கூடிய ஒரு பிரியாணி.

முதலில் கத்தரிக்காய் ஸ்டப்க்காக செய்ய ஆரம்பித்தான்.

முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி மல்லி விதை,கடலை பருப்பு, சீரகம், எள், நிலக்கடலை, பூண்டு, வரமிளகாய், கிராம்பு, பட்டை, புளி என எல்லாவற்றையும் போட்டு லைட் ப்ரௌன் கலர் வருகிற வரை லைட்டாக வதக்கியவன் அது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அதை பேஸ்ட்டாக அரைத்து சிறிய குண்டுக் கத்திரிக்காயை மேல் காம்பு நீக்காமல் கீழே நான்கு பாகமாகக் கட் செய்து அதற்குள் இந்த ஸ்டப்பை வைத்து பேனில் எண்ணெய் ஊற்றி வேக வைத்து லைட்டாக ஃப்ரை செய்தவன் அப்போது தேவையான அளவு உப்பைப் போட்டான்.

இதனை லோ ஃப்ளேமில் ஏழெட்டு நிமிடங்கள் வதக்கியவுடன் அதனை தனியே எடுத்து வைத்தவன் அடுத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெயை பேனில் விட்டு மூன்று பெரிய வெங்காயத்தை பெரிதாக நறுக்கி மீடியம் ஃப்ளேமில் ப்ரௌனிஷாக வரும் வரை ஃப்ரை செய்தான்.

பின் பூண்டு விழுது, இஞ்சி விழுது, பொதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பிரியாணி இலை, நெய் என எல்லாவற்றையும் பிக்ஸ் செய்து ஸ்டப் செய்த கத்திரிக்காயோடு இதனையும் சேர்த்து லோ ஃப்ளேமில் வதக்கினான்.

அதன் பின் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, கிராம்பு, மிளகு, ஏலக்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் தண்ணீரில் போட்டு அது கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு பாதி வெந்த நிலையில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தான்.

பின் நல்ல தடிமனான பாத்திரத்தில் ஸ்டப் செய்த கத்திரிக்காய், வெங்காயம், கறிவேப்பிலையை ஒரு லேயராகவும், அதன் மேல் பாதி வேக வைத்த அரிசியை ஒரு லேயராகவும், திரும்பவும் அதே போல மீதமுள்ளவற்றுடன் கொத்தமல்லி, பொதினா ஆகியவற்றைப் போட்டு லேயர் லேயராக அடுக்கியவன் அதனை சீட் போட்டு தம் ஸ்டைலில் தயார் செய்தவன் அதை ப்ளேட் செய்த பிறகே அமைதியானான்.

அதுவரை அவனது வேகத்தை பார்த்தவர்கள் திகைத்துப் போய் இருந்தார்கள்.

“கைய்ஸ்… உங்க வொர்க் முடிஞ்சதுக்கப்புறம் மீட்டிங் இருக்கு. ஆல் மஸ்ட் அட்டென்ட்” எனக் கட்டளை குரலில் கூறி விட்டு அவன் அங்கிருந்து அகல எல்லோரும் சிறிது ஆசுவாசமானார்கள்.

திடீரென்று ஹோட்டலுக்கு அபிஷேக் வந்ததை யாருமே எதிர்பார்க்கவில்லை.

அவன் வந்த சமயத்தில் கரெக்டாக கஸ்டமர் பிரச்சனை செய்ய அதை அவன் சமாளித்த விதத்திலும் அவனுடைய ஞாபக சக்தியிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உறைந்து போய் நின்றார்கள். 

இவர்களில் ஒரு சிலர் புதிதாக ஜாயின் செய்தவர்கள். இப்போது அடுத்து என்ன நடக்குமோ எனப் பயத்தில் இருந்தார்கள்.

அபிஷேக் அங்கிருந்து தனது அலுவலக அறைக்குச் சென்றான்.

“சாரிடா. வந்ததும் வராததுமா டென்ஷன் பண்ணி விட்டாங்க” என ஆதவனுக்குச் சமாதானம் சொல்லியபடியே வர,

“ஹே… கூல்டா. அவங்க வேணும்னா பண்ணிருப்பாங்க?”

“இல்ல தான். நம்ம நிகில் எங்க போனான்?”

“அவன் ஏதோ ஆர்டர் சம்பந்தமா வெளிய போறேனு சொன்னான். சரி. அவன் வர்றப்ப வரட்டும்னு விட்டுட்டேன்” என்றவன் சொல்ல,

“ஓகே டா” என்றவன் ரெஸ்ட்ராட்டாரண்டின் அக்கவுண்டை மற்றும் ஸ்டாக்கை செக் செய்தவன் அவ்வப்போது ஆதவனிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டான்.

ஆதவன் மற்றும் நிகிலன் இவர்கள் இருவர் பொறுப்பிலும் அபிஷேக் இந்தியாவிலிருந்த ரெஸ்ட்டாரண்ட்டை விட்டு விட்டான்.

இதில் ஆதவன் அவனது பிஸினஸூம் பார்ப்பதால் அவ்வப்போது இங்கு வருவான்.

நிகிலன் முழு நேரமாக இங்கேயே செயல்படுபவன். ஆதவனின் நண்பன். அபிஷேக், தான் வெளிநாட்டில் இருப்பதால் அவனை பார்ட்னராக சேர்த்துத் தன்னுடைய ரெஸ்ட்டாரண்ட்டில் இணைத்துக் கொண்டான்.

இவர்கள் வேலை செய்து கொண்டிருந்த சிறிது நேரத்தில் நிகிலன் அங்கு வந்தவன் அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

“அபி எப்போ வந்தீங்க டா?” என்றவன்,

“ஆது வரேன்னு சொல்லவே இல்ல” என்று ஆதவனிடமும் கேட்டான்.

“நீ முக்கியமான ஒர்க்கா வெளிய போறேனு சொன்னதால தான் உன்கிட்ட ஒண்ணும் சொல்லல” என்றவன்,

“டேய் இங்க ஃபுட் சர்வீஸிங் ஏதாவது இஸ்யூஸ் வருதா?”

“இல்ல ஆது” என்றவன் சொல்ல,

“ஏன்டா இப்படி கேட்கற?” என கேட்க இப்போது அபிஷேக் நடந்ததை சொல்ல அவன் அதிர்ச்சியாகி அவர்களை பார்த்தான்.

“இத்தன நாள்ல இப்படி இல்லடா. இங்க எல்லாமே சின்ஸியர் வொர்க்கர் தான்டா” எனச் சொல்ல,

“விடு நிகில். ரெஸ்ட்டாரண்ட்னா பிராப்ளம் வர தானே செய்யும். எங்க போன?”

“என்.வி ஃபுட்ஸ் சப்ளை பண்றவங்கள பாத்திட்டு வந்தேன். அவங்க லேட்டஸ்ட்டாக ஃபிஸ்ல இருந்து எல்லாமே சப்ளை பண்றாங்க. நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அதான் போனேன்டா” என்றவன் சொல்ல,

“ஓகே டா. நெக்ஸ்ட் டைம் நம்ம போய் பார்க்கலாம்” என்றவன் அதன் பின் வேலை, குடும்பம் எனப் பலவும் பேச அன்று மாலை அங்கிருந்து கிளம்பினார்கள்.

அன்று முழுவதும் ரெஸ்ட்டாரண்ட்டிலேயே கழிய அங்கிருந்து கிளம்பும் முன் அனைவரையும் கூப்பிட்ட அபிஷேக்

“கைய்ஸ்… இனி இந்த மாதிரி இஸ்யூஸ் வரக் கூடாது அன்ட் கிளவுஸ் எப்பவும் யூஸ் பண்ணுங்க. எல்லாம் கரெக்ட்டா கிளீன் பண்றாங்களானு செக் பண்ணிக்கோங்க மித்ரன்” என்றவன்,

“என்ன கவின் உங்க சாலரில இருந்து இன்னைக்கான அமௌண்ட் ரெடியூஸ் பண்ணிரலாமா?” என  புருவம் உயர்த்திக் கேட்க,

“சா… சார்” என்று கவின் திணறினான்.

“டோன்ட் வொர்ரி. தவறது சகஜம் தான். ஆனா இன்னொரு முறை இந்த தப்ப நான் அனுமதிக்க மாட்டேன். காட் இட்?” என்று சொன்னவன்,

“அப்பறம் கைய்ஸ் என்ன ஹெல்ப்னாலும் சொல்லுங்க. எதுவும் ஹெசிடேட் ஆக வேண்டாம்” என்று சொன்னவன் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

காலையில் இருந்து ரெஸ்ட்டாரண்ட்டிலேயே இருந்ததால் ஆதவன் அவர்களை பீச்சிற்குக் கூட்டிச் சென்றான்.

அவர்களுடன் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த அபிஷேக் திடீரென்று கேட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தவன் அங்கே ஒரு ஜோடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“ஏய் நீ என்ன எப்பயும் எனக்கு ரூல்ஸ் போட்டுட்டு இருக்க. நான் அப்படி தான் பண்ணுவேன்டி” என அவன் கத்த அவளோ,

“ஏதோ நீ மட்டும் ‌ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டு போற. நீயும் தான் விவேக் என்கிட்ட பேசினா அவன் என்ன பேசினானு நோண்டறே. இத்தனைக்கும் அவன் நம்ம ஃபிரண்ட். ஏன் அவன் ஹெல்ப் கேக்கறப்ப செய்யக் கூடாதா?” என்று கத்த, 

“ஆமா. நான் அப்படி தான் சொல்வேன். உன்ன அவனோட ஓட்டறாங்க” என்றவன் சொல்ல அவளோ அவனை தனது கண்களினால் பஸ்பமாக்கினாள்.

“ஷியாம் தி இஸ் தி லிமிட். இனி ஒரு வார்த்த நீ பேசினாலும் என்ன பண்ணுவேனு தெரியாது. குட் பாய்” என்று அவ்விடத்தை விட்டு அவள் அகல அபிஷேக் அவளை சிலை போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மச்சி என்னாச்சு டா?. அங்கயே நின்னுட்ட?” என நிகில் கூப்பிட, 

“நந்திங் டா” என்றவன் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

பீச்சிலிருந்து வெளியேறிய ஜோஸ்வினியோ  ஷியாம் மீது கொலை வெறியில் இருந்தாள்.

காலையில் அவளை தியேட்டரில் பார்த்தவன் பேச வர அவளோ அவனை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

படம் முடிந்ததும் அவன் சமாதானம் செய்யலாம் என்று நினைத்திருக்க அப்போதும் அவள் கோபமாகச் செல்ல,

“ஜோ நில்லு” என அவள் பின்னோடே ஓடினான்.

“என்னடா? என்ன எல்லாம் உனக்கு தெரியுதா?. நேத்து போன் பண்ணா பீல் பண்ணுனு சொல்ற?” என்றவள் கத்த அவனோ அவள் தியேட்டர் ‌வாசலில் கத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து அவளை பீச்சுக்கு கூட்டி வர அவள் அதற்கும் சண்டை போட்டாள்.

“என்னே ஏன்டா இங்க கூட்டிட்டு வந்த?. நான் உன் கூட பேசலேனு சொல்றேன்ல” என கத்த அவனோ அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு

“பேபி கூல்” என்று சொல்ல

“போதும்டா. லவ் அக்சப்ட் பண்ற வரையும் அவ்ளோ கேரிங்கா இருந்த. இப்போ நீ மாறிட்ட”

“இல்ல பேபி. நான் உன்கிட்ட தானேடா அப்படி பேச முடியும்?” என கேட்க

“அதுக்காக எப்பயுமே ஹர்ட் பண்ற மாதிரியே பேசுவியா?” என்று ஆரம்பித்த சண்டை திரும்பவும் ஜோஸ்வினியின் கோபத்தில் முடிய ஷ்யாமும் கோபமாக அங்கிருந்து கிளம்பினான்.

ஜோஸ்வினியோ ஷ்யாமைப் பற்றி யோசிக்க அபிஷேக்கோ ஜோஸ்வினியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page