அத்தியாயம் 4

 

அடுத்த நாள் ஷ்யாம் கல்லூரியில் தனது நண்பன் சிவாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

“டேய் இந்த ஜோஸ்வினிக்கு எவ்ளோ திமிரு பாத்தியா?” 

“என்ன பண்ணாடா?”

“என்னய எப்ப பாத்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்காடா”

“என்னனு தெளிவா சொல்லுடா?” 

“அவ தேவையில்லாம எங்கூட சண்ட போடறாடா” என்றவனை சந்தேகமாகப் பார்த்தான் சிவா.

“எதுக்கு சண்ட போட்டா?”

“அவ பிக்சர் போறதுக்கு தியேட்டர்ல புக் பண்ண சொன்னாடா. என்னால பண்ண முடியல”

“அப்டினா கோபம் வராதா எரும?”

“போடா. அதுக்கு சமாதானம் பண்ணலாம்னு போனாலும் இன்னும் சண்ட தான் வந்தது” என ஷ்யாம் நேற்று நடந்ததைச் சொல்ல சிவா கோபமானான்.

“உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா. அவ யாரு கிட்ட டா பேசாம இருக்கா?. அவ நம்ம வாட்ச்மேன்ட்ட கூட தான் பேசறா. அப்போ அந்த ஆளோட சேத்து பேசுவியா?”

“டேய் அந்த விவேக் நம்ம ஃப்ரெண்ட் டா. ஹெல்ப் வேணும்னா மட்டும் அவன் வேணுமா?. உனக்கு  கொஞ்சம் கூட மனசாட்சி வேணாம்?”

“போடா. உன்கிட்ட சொல்றேன் பாரு. நீ அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ” என்று ஷ்யாம் கடுப்பாக சொல்ல ஏதோ யோசித்த சிவா,

“பாத்துடா. விவேக் அவ ஏரியா தான். அவள பத்தி தப்பா சொன்னேனு ஆளுங்கள கூட்டிட்டு வந்துட போறான்” என்று சிரிக்க ஷ்யாமோ,

“டேய்ய்ய்ய்…” என்று பல்லைக் கடித்தான்.

“உனக்கு யாருடா இந்த மாதிரி நியூஸ் சொல்றது?” என விசாரிக்க,

“நம்ம துருவ் தான்டா”

“டேய் உன்னைய எல்லாம். அவனே பொறாமை பிடிச்சவன். அவன் சொல்றத எல்லாம் நம்பாத” என அட்வைஸ் செய்தான்.

“ஃபர்ஸ்ட் அவளப் போய் சமாதானம் பண்ணு” என்றவன் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாமல் விட்டான்.

ஷ்யாமும் சரி என்று தலையாட்டியவன் அவளிடம் பேசுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான்.

ஜோஸ்வினி கல்லுாரி வந்தவள் ஒவ்வொரு வகுப்பாக முடிய மணிமேகலையின் வகுப்பும் வந்தது.

மணிமேகலை நேற்று டெஸ்ட் வைத்திருக்க ஜோஸ்வினியால் பெரும்பாலானோர் கல்லூரியைக் கட் செய்தனர்.

இதனால் மணிமேகலை மிகுந்த கடுப்பில் இருந்தாள்.

அன்றைய வகுப்பிற்கு வந்த மணிமேகலை

“யார் யார் நேத்து க்ளாஸ் அட்டென்ட் பண்ணல? ரைஸ் யுவர் ஹேன்ட்ஸ்” என இறுகிய குரலில் சொல்ல வகுப்பில் பெரும்பாலானோர் கையைத் தூக்க அதில் கடும் கோபத்துடன்,

“ஓகே. நீங்க டுமாரோ க்வஸ்டின் பேப்பர் டென் டைம்ஸ் எழுதிட்டு வாங்க” என அவள் கூலாக சொல்ல இப்போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்.

“மேம் ஒரு கொஸ்டின் டென் பேஜஸ் இருக்கும். எங்களால எழுத முடியாது மேம். பைவ் டேஸாவது டைம் கொடுங்க” என ஜோஸ்வினி கேட்க,

“எதுக்குத் திரும்ப அடுத்த கிளாஸ் கட் அடிக்கறதுக்கா?” என அவர் நக்கலாக கேட்க ஜோஸ்வினி, 

“மேம் நீங்க ஸ்கூல்ல பண்ற மாதிரி பண்றீங்க. இது அநியாயம்” என இவள் பொங்க,

“நீங்க மாஸ் கட் பண்றது மட்டும் நியாயமா?” என அவர் புருவம் உயர்த்த,

“மேம்…” என அவள் திணறினாள்.

“நீங்க கண்டிப்பா சப்மிட் பண்ணி ஆகணும்” என கட்டளை குரலில் சொல்ல நாளைக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று இப்போதே ஜோஸ்வினி சிந்திக்க ஆரம்பித்தாள்.

                    *****

கல்லூரி முடிந்து வெளியே வரும் போது ஷ்யாம் அவளுக்காக காத்திருக்க அவனை பார்த்தவள் பாராதது போல் செல்ல ஷ்யாம் அவன் பின்னாலே வந்தான்.

“ஜோஸ்வினி நில்லு” என அவன் கத்த இவள் அவனை முறைத்தாள்.

“இப்போ என்ன பிரச்சன பண்ணலாம்னு வந்திருக்க?” என அவள் காட்டமாகக் கேட்க,

“நான் சண்ட போட வரல ஜோ”

“நீ நேத்து சொன்னது மட்டும் கரெக்டா?”

“ஜோ ப்ளீஸ். சாரி. நான் இனி அப்படி நடந்துக்க மாட்டேன்”

“இங்க பார்… விவேக் என்னோட பக்கத்து வீடு. சின்ன வயசில இருந்தே எங்க ஃபேமிலிக்குள்ள பழக்கம். அத விட எனக்கு அண்ணன் மாதிரி. இப்படித் தான் கொச்சைப்படுத்துவியா?” என கோபத்தில் ஆரம்பித்து அவள் கண்களில் வலியுடன் கேட்க அவனுக்கு என்னவோ போலானது.

“இல்லடா. சாரி. இனி இந்த தப்பு பண்ண மாட்டேன்” என அவன் மனதார மன்னிப்பு கேட்க அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல அவனோ அடுத்து என்ன செய்ய என்ற யோசனையுடன் நின்றான்.

அவள் வீட்டிற்குச் சென்றவுடன் ஷ்யாம் எவ்வளவோ போன், மெஸேஜ் செய்தும் அவள் ஷ்யாமை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

அவளுக்கு அவனை நினைத்துக் கோபமாக வந்த அதே நேரம் மணிமேகலையையும் மனதில் தாளித்துக் கொண்டிருந்தாள்.

‘மண்டோதரி… உன் மண்டைலயே போடணும். ராட்சசி… எப்டி இவ்ளோ எழுத?’ 

‘இவ சப்ஜெக்டே பாதி தான் புரியுது. இதுல டெஸ்ட்னா… எதுக்கெடுத்தாலும் வெளிய போன்னு சொல்லிட வேண்டியது’ என திட்ட அவள் மனசாட்சியோ,

‘நீ க்ளாஸ ஒழுங்கா கவனிக்கற?. கரெக்டா நோட்ஸ் எழுதற?’ என கேட்க அதைத் தட்டி அடக்கியவள்

‘இந்த ஏஜ்ல என்ஜாய் பண்ணாம எப்போ என்ஜாய் பண்றாதாம்?. இரு மண்டோதரி. உனக்கு நாளைக்கு ஆப்பு வைக்கறேன்’ என்றவள் போனை எடுத்து பார்க்க அதில் ஷ்யாமின் மிஸ்ட் கால் இருந்ததில் கடுப்பானவள் தனது க்ளாஸ் குரூப்புடன் பேசி முடிவுக்கு வந்தவுடன் தனக்குள்ளாக சிரித்துக் கொண்டாள்.

                    *******

ஆதவன் வீட்டில் அபிஷேக் போனை நோண்டிக் கொண்டிருக்க பாலகிருஷ்ணனிடம் இருந்து வீடியோ கால் வந்தது.

அதை அட்டென்ட் செய்தவன்,

“ஹாய் டாட்” என்று சிரிக்க 

“எப்படிடா இருக்க?”

“பைன் டாட்”

“மம்மா எப்டி இருக்காங்க?”

“அவ தான் புலம்பிட்டே இருக்கா. உன்ன இன்டியா அனுப்பிட்டோமேனு” என்றவர் சிரிக்க,

“சீக்கிரம் வந்தறேன் டாட்” என்றவன் சொல்ல,

“நீ உன் வேலைய முடிச்சிட்டே வா. நான் பாத்துக்கிறேன்” என்றவர்

“ஹோட்டல் போனியா?” என்று விசாரிக்க,

“போனேன் டாட். போனப்பவே ஒரு இஷ்யூ” என்றவன் நடந்ததைச் சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்தார்.

“என்ன அபி இப்படி சொல்ற?. நம்ம ஹோட்டல் பேர் கெட்டுடாது” என்று சொல்ல,

“அதனால தான் டாட் அவருக்கு அப்போ லஞ்ச் ஃப்ரீயா காம்ப்ளிமென்ட் பண்ணிட்டேன். அப்டியே இங்கேயும் சரி பண்ணிட்டேன் டாட். சோ நோ ப்ராப்ளம்” என்றவன் சிரிக்க,

“வெல்டன் மை பாய்” என்று பாராட்டியவர்,

“அபி க்ரேன்ட்மா வீட்டுக்கு போய்ட்டு வா” என்றவர் சொல்ல,

“டாட்… இப்போ தான் டாட் வந்திருக்கேன். இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு”

“ஓகேடா. கொஞ்சம் ஃப்ரீ ஆகிட்டு போ. அவங்க உன்ன பாத்தா சந்தோஷப்படுவாங்க” 

“சரி டாட். நான் ஃப்ரீ பண்ணிட்டு அங்க போய் ஸ்டே பண்ணிட்டு வரேன்” என்றவன்,

“டாட்… நான் ஆது வீட்ல தான் இருக்கேன். அவன் என்னய ஹோட்டல்ல ஸ்டே பண்ண விடல” என்று சொல்ல,

“நேத்தே சொன்னியே அபி. இங்கேயே சுத்துவீங்க. கேக்கவா வேணும். என்ஜாய் டா” என்றவன் சொல்ல,

“லவ் யூ டாட். அப்பறம் மம்மாட்ட பேசறேன். டேக் கேர்” என்று சொல்ல அவரும் போன் கட் செய்ய அடுத்து என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போது ஆதவன் அங்கே வந்தான். 

“அபி இந்த வீக்கெண்ட் ஒரு மேரேஜ் இருக்கு. நம்ம ரிலேஷன் மேரேஜ்”

“அப்படினா நீங்க போய்ட்டு வாங்க ஆது. நான் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கறேன்” என்க,

“டேய் எரும, பன்னி, மாடு, பக்கி” என திட்ட அவன் முழித்தான்.

“என்னடா இதெல்லாம்?”

“உன்ன பாராட்டினேன்டா” என்று தலையில் அடித்து கொண்டவன் “முதல்ல சொல்ல வந்தத முழுசா சொல்ல விடேன்”

“அம்மா, அப்பா எல்லாம் நாளைக்கு ஊருக்கு கிளம்பறாங்க டா. நம்ம ஃப்ரைடே போகலாம்” என்று சொல்ல அபிஷேக் தயங்கினான்.

“டேய் உங்க ரிலேஷன் மேரேஜ். நீங்க போய்ட்டு வாங்க”

“இனி நீ பேசின நான் அடிப்பேன்” என்று ஆதவன் கடுப்பானான்.

“டேய் சொன்னா புரிஞ்சுக்கோடா” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருக்கும் போது மஞ்சரி அங்கு வந்தார்.

“டேய் ஆன்ட்டி வராங்க”

“தம்பி நாளைக்கு நாங்க மேரேஜ் போறோம்”

“போயிட்டு வாங்க ஆன்ட்டி”

“நீங்களும் மேரேஜீக்கு வாங்க தம்பி”

“பரவால்ல ஆன்ட்டி. இங்க ரெஸ்ட்ராட்டன்ட்ல வொர்க் இருக்கு. நான் அங்கேயே ஸ்டே பண்ணிக்கறேன்”

“தம்பி நீங்க இங்க தான் தங்கறீங்க” என்றவர் ஆதவனைப் பார்த்து,

“ஆது நீ தம்பிய மேரேஜீக்கு கூட்டிட்டு வந்துரு” என்று சொல்ல வேறு வழியில்லாமல் அபிஷேக் சரி என்று தலையாட்ட அந்த கல்யாணம் அபிஷேக்கின் வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page