அத்தியாயம் 5

 

அபிஷேக் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்டு விழித்தான்.

என்ன சத்தம் என்று வெளியே வந்து பார்த்தவன் மலைத்து நின்றான். ஏனெனில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு ஆட்கள் இருக்க அதை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான்.

இவன் இங்கே சிலையாக நிற்க வாசலிலோ ஒருத்தி வார்த்தையில் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்.

அவர்களில் ஒருத்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்க இன்னொருத்தி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

“ஏய் குள்ள வாத்து உனக்கு இப்போ தான் வர வழி தெரியுதா?”

“ஹேய்… கல்யாணப் பொண்ணு” என்று அந்த குரல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

“ஏன்டி நான் உனக்காக காலேஜ் கட் அடிச்சிட்டு வந்தா இப்படி தான் பேசுவியா?”

“எப்போடி வந்த?”

“நேத்து”

“பக்கி பொய் பேசாத”

“அடப்போறியா… பேர் தான் 2 நாள் முன்னாடியே வந்தேனு. அங்க, இங்கனு மாத்தி மாத்தி ஊர் சுத்த விட்டுட்டாங்க” என அவள் பாவம் போல சொல்ல

“போதும் மேடம். மூஞ்ச அப்பாவியா வைக்கிறது நிறுத்தறியா?. உன்ன பத்தி எனக்குத் தெரியாது” என இன்னொரு குரல் கத்த

“பேபி ப்ளீஸ்டா…”

“போடி. நான் உன்கிட்ட பேச மாட்டேன்”

“ஏய் சொன்னா கேளேன் மாடு”

“போடி எரும”

“பட்டு இல்ல”

“இல்ல”

“தங்கம் இல்ல”

“இல்ல”

“குலோப் ஜாமூன் இல்ல”

“அடியேய் உன்ன…”

              ******

தனது அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டு வந்தவன் நிற்பதை பார்த்தவர்கள் “தம்பி யார தேடறீங்க?” என விசாரிக்க அவன் திகைத்தான்.

“ஒண்ணும் இல்ல”

“இப்பவே 8 ஆகிடுச்சு தம்பி. சீக்கிரம் ரெடி ஆகிட்டு வாங்க” என சொன்னவுடன் சரி என்று தலையாட்டிய படி அங்கிருந்து உள்ளே செல்லலாம் என நகர யாரோ அவனை வந்து இடித்தது போல் இருந்தது.

அவன் சுதாரித்து திரும்புவதற்குள் அந்த குரல் “சாரி” என்று சொல்ல அவன் அப்படியே நின்றான்.

‘வாவ்… வாட் எ வாய்ஸ்’ என யோசித்தவன் அங்கே தேட யாரும் இருந்ததற்கான அறிகுறியே அந்த இடத்தில் இல்லை.

‘ச்சே… மிஸ் பண்ணிட்டேனே’ என யோசித்தவன்

‘ஆமா. இது வீடா?. ஏதோ அரண்மனை மாதிரி இருக்கு?. 25,30 ரூம்ஸ் இருக்கும் போல. எப்படி மெயின்டெய்ன் பண்றாங்க’ என்று பிரமிப்பாக யோசித்தபடி உள்ளே வந்தான்.

வாசலில் இருந்து சமையல் அறையை நோக்கி வந்தவர்கள் இருவரும் துரத்திக் கொண்டு உள்ளே ஓட அதைக் கண்ட மீனாவின் அம்மா

“ஏய் மீனா என்ன சின்ன பொண்ணு மாதிரி விளையாடிட்டு இருக்க?. ஜோ வந்ததும் வராததுமா உன் சேட்டைய ஆரம்பிச்சிட்டியா?” என தாமரை அதட்டியவுடன் ஜோஸ்வினியுடன் விளையாடிக் கொண்டிருந்த மீனலோக்ஷினியின் முகம் கூம்பி போனது.

அதை கவனித்த ஜோஸ்வினியோ

“அச்சோ என்ன ஆச்சு ஜெல்லி?. இதுக்கெல்லாம் நீ ஃபீல் பண்ணலாமா?” என அவளை ஜோ சமாதானப்படுத்தினாள்.

“இந்த அம்மா மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதுல இருந்தே திட்டிட்டு இருக்காங்க. இத பண்ணாத, அத பண்ணாதனு. கொஞ்சம் கூட நான் வேற வீட்டுக்கு போறேன்னு இவங்களுக்கு வருத்தமே இல்ல” என கலங்கிய குரலில் சொல்ல தாமரைக்கு வருத்தமானது.

“அப்படி இல்லடா. உனக்கு மேரேஜ் ஆகப் போகுதுல்ல. அதான் சொன்னேன்” என தாமரை எடுத்துச் சொல்ல அதற்குள் அங்கு இருந்த ஜோஸ்வினியின் அம்மா அவளை திட்ட ஆரம்பித்தாள்.

“ஜோ வந்தவுடனே ஒன் வேலய ஆரம்பிச்சட்டியா?” என அவர் ஆரம்பிக்க

“கொஞ்சம் சந்தோஷமா இருக்க விடறீங்களாமா?. அவளே ஃபீல் பண்ணிட்டிருக்கா” என பதிலுக்குக் கத்தியவள்

“நீ வா ஜெல்லி. நாம உன் ரூமுக்கு போகலாம்” என மீனாவை கூட்டிச் சென்றவள் பேசிக் கொண்டிருக்கும் போது அவளுடைய செல்லுக்கு போன் வந்தது.

ஜோஸ்வினி மீனாவ அவளோட ரூமுக்கு கூட்டிட்டு போகட்டும். அவ எப்படி இங்க வந்தானு தெரிஞ்சிக்கலாமா பிரண்ட்ஸ்?.

உண்மையில் அன்றைக்கு மணிமேகலை மேம் மீது கடுப்பாக இருந்தவள் தனது கிளாஸ் குரூப் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்து அவர் வகுப்புக்குள் நுழைந்ததும் மணிமேகலைக்கு பெட்டான தனது பிரண்ட்டை சந்தேகம் கேக்க சொன்னாள்.

இவர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டபடி அவர் உள்ளே வர 

“மேம்”

“சொல்லு வர்ஷா”

ஒரு குறிப்பிட்ட டாப்பிக்கை சொல்லி

“மேம் இதில சந்தேகமா இருக்கு” என ஆரம்பிக்க அவரும் என்ன என்று கேட்டு அவளுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அடுத்து இன்னொருவன் ஆரம்பிக்க திரும்ப கொஞ்ச நேரம் போக பின் ஜோஸ்வினி நல்ல பிள்ளையாக தானும் ஒரு சந்தேகத்தை கேட்டு வைத்து இப்படியாக அந்த வகுப்பு சந்தேகம் தீர்க்கும் வகுப்பாக முடிந்தது.

மணிமேகலையோ ஒரு நாளும் இல்லாத திருநாளாக மாணவர்கள் சந்தேகம் கேட்கையில் பூரித்து போய் அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க எல்லோரும் நல்ல பிள்ளை போல் கேட்டுக் கொண்டனர்.

என்ன தான் மாணவர்களிடம் கண்டிப்பு காட்டினாலும் சந்தேகம் என்று வந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுப்பார். அதை பயன்படுத்தி நேரத்தைக் கடத்தி இன்ஃபோசிஷனை பற்றி அவரை நினைக்க வைக்காமல் தாங்கள் நினைத்ததை ஜோஸ்வினி அமைதியான முறையில் நிறைவேற்றிக் கொண்டாள்.

ஏற்கனவே ஜோஸ்வினியின் குடும்பம் கல்யாணத்திற்கு வர பிளான் செய்திருந்ததால் அவர்கள் அடுத்த நாளே ஜோஸ்வினியின் பாட்டி ஊருக்கு திருமணத்திற்கு வந்தனர்.

 அவர்கள் போகும் போது மீனாவின் செல்லுக்கு கால் வந்தது.

அதை பார்த்த மீனாவின் முகம் பிரகாசமாக செல்லை அவளிடமிருந்து பிடுங்கியவள் போனை அட்டென்ட் செய்தாள்.

“மீனு டார்லிங்… நேத்துல இருந்து உன்கிட்ட எத்தன டைம் சாரி கேட்டுட்டேன். ப்ளீஸ் டார்லிங்… ஒரே ஒரு கிஸ் தான கேட்டேன்?. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளோ கோபம்?. உன் மாமூ பாவம்ல?” என அவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“என்னது கிஸ்ஸா?” என்று அவள் அலற

“நீங்க யாருங்க பேசறீங்க?” என்றவன் பயந்தான்.

“ஹலோ மிஸ்டர்… கிஸ் மட்டும் தானா?. இல்ல ஹக்ஸூம் இருக்கா?” என அவள் மிரட்டலான குரலில் கேட்டாள்.

“மேடம் சாரி மேடம். ராங் நம்பர்” என அவன் கட் செய்ய போக

“அதெல்லாம் ரைட் நம்பர் தான். ஃபோன் எடுத்தா யார் பேசறாங்கனு கவனிக்க மாட்டீங்களா?. நீங்க பாட்டுக்கு பேசிட்டே போவீங்களா?”

“மேடம் ப்ளீஸ்… சாரி…” என யுகேந்திரன் கெஞ்சிக் கொண்டிருக்க மீனாவுக்கு சிரிப்பு வந்த அதே நேரம் பாவமாகவும் இருக்க

“ஏய்… விடுடி… பாவம்” என சொன்னவள்

“யுகேன் நான் அப்பறம் பேசறேன்” என அவள் கட் செய்ய போக

“அடியே நான் பேசிட்டு இருக்கேன்ல” என்று பல்லைக் கடித்தவள்

“மாம்ஸ் இன்னைக்கு வரப்ப எனக்கு லேட்டஸ்ட் ஐபோன் வாங்கிட்டு வர்றீங்க” என ஆர்டர் போட

“என்னாது?” என்றவன் வாயை பிளந்தான்.

“ஆமா மாம்ஸ். இல்லேனா நீங்க கிஸ் கேட்ட விஷயம் உலகம் பூரா பரப்பிடுவேன்” என்றவள் சொன்னதும் அவன் அதிர்ச்சியில் உறைந்தான்.

“அம்மா பரதேவதையே… உனக்கே இது நியாயமா?”

“நீங்க மட்டும் மீனுவ சும்மாவா கட்டிட்டு போறீங்க?. எத்தனை கிலோ தங்கம் வாங்கினீங்க?” என அவள் கோபமாக கேட்டாள்.

“சரிம்மா. உனக்கு ஐ போன் தானே வேணும். நான் வாங்கி குடுக்கறேன். டென்ஷன் ஆகாத” என சொல்லியவன் போனை கட் செய்ய இவளோ விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஏய் என்னடி சும்மா மிரட்டினா இப்படி பயப்படுறாங்க” என அவள் சொன்னதில் கடுப்பான மீனா அவளை துரத்த ஆரம்பிக்க திரும்பவும் வீட்டை ஒரு முறை வலம் வந்தனர்.

          *****

அறையினுள் வந்த அபிஷேக் ஆதவனை எழுப்பிக் கொண்டிருந்தான்.

“ஆது எந்திரிடா” என உலுக்க எழுந்து அமர்ந்தவன் அபிஷேக்கை பார்த்து வியப்பானான்.

“டேய் முன்னாடியே எந்திரிச்சிட்டியா?”

“இல்லடா. ஏதோ சத்தமா இருந்ததுனு எந்திரிச்சேன்” என்றவன்

“என்னடா வீட்ல ஏகப்பட்ட மெம்பர்ஸ் இருக்காங்க?” என்று வியப்பான குரலில் கேட்க அதை கேட்ட ஆதுவோ சிரித்தான்.

“மேக்ஸிமம் இங்க 1000 மெம்பர்கள் ஆவது வருவாங்க. இது கம்மிடா” என்றவன்

“சீக்கிரம் ரிஃபிரெஷ் ஆகு. இன்னைக்கு நீ நிறைய இன்ட்ரெஸ்டிங்கா பாப்ப” என்றவன் அவனை பிரெஷ் செய்ய அழைத்துச் சென்றவர் அப்படியே காபியும் குடித்து விட்டு அறைக்குள் நுழைந்தார்கள்.

அபிஷேக் நள்ளிரவில் வந்ததால் அனைத்தையும் சரியாக கவனிக்காதவன் இப்போது ஒவ்வொன்றையும் பார்த்து வியப்படைந்தான்.

இருவரும் ரெடியாகி வெளியே வர வீட்டுக்கு வெளியே பந்தல் போட்டு காலை டிபன் போட்டு கொண்டிருந்தார்கள்.

ஆதவனை பார்த்த அவனது கசின் லோகேஷ்

“ஆது அண்ணா ஏன் இவ்ளோ லேட்?. ஒரு 2 டேஸ் முன்னாடி வரதுக்கென்ன?”

“இல்லைடா. கொஞ்சம் வொர்க் இருந்தது” என்றவன் அபிஷேக்கை காண்பித்து

“இவரு நம்ம பிரண்ட் அபிஷேக்” என்றவன்

“அபி இவன் கசின்டா. லோகேஷ்” என்று அறிமுகப்படுத்த

“ப்ரோ… உட்காருங்க. சாப்பிடலாம்” என்றவன் ஆதவனை பார்த்து

“அண்ணா நீங்களும் தான்” என சொல்ல

“இல்லடா. சாப்பிட லேட் ஆகும். அபி நீ சாப்பிடுடா” என்று சொல்ல அபியும் மறுத்தான்.

“இல்லடா. நானும் பரிமாறேன்” என்றவன் ஒவ்வொன்றாக அவனும் இலையில் வைத்தான்.

இதற்கிடையில் அவளது அக்கா குழந்தையை கையில் எடுத்து வந்த ஜோஸ்வினி

“ஹே… ஆது எப்போடா வந்த?” என்று சந்தோஷமாக கத்தினாள்.

“நேத்து தான். ஆன்ட்டி, அங்கிள் நல்லா இருக்காங்களா?. குட்டிச் சாத்தான காணோம்?” என அவன் வரிசையாக விசாரிக்க ஆரம்பித்தான்.

“டேய் பொறுடா. ஒவ்வொன்னா தான் பதில் சொல்ல முடியும். அம்மா இங்க தான் இருக்காங்க. குட்டி சாத்தான் அப்பா கூட வரா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.

“இது யார் குழந்தை?” என அவன் வினவ

“நம்ம ஹரி குழந்தை” என்றவள்

“குட்டிக்கு பசிக்குதாடா?. இருடா. உனக்கு இட்லி எடுக்க தான் வந்தேன்” என்றவள்

“இட்லி எங்க பக்கி?” என கேட்க அதை தேடி பார்த்தவன்

“இலைல வைக்க எடுத்துப் போயிருக்காங்க” என சொன்னான்.

“சரி. நான் போய் ஊட்றேன்” என்றவள் இட்லியை தேடிச் செல்ல அங்கே அபிஷேக் இட்லி வைத்துக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்தவள்

“ஹலோ மிஸ்டர்” என கூப்பிட அவளை பார்த்தவன் அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.

‘இது அந்த பொண்ணுல்ல’ என அவன் யோசித்துக் கொண்டிருக்க

“என்ன மேன் கூப்டறது காதில விழலையா?. இட்லி வேணும். குழந்த அழறது கூடவா தெரில” என்று திட்ட 

“சாரி” என்றவன் இட்லியை வைக்க அவள் இட்லியை பிசைந்து குழந்தையை கொஞ்சியபடியே அவள் ஊட்டும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

அவனை கவனித்தவள் அவன் அருகில் வந்து குரலை தாழ்த்தியபடி

“என்ன லுக்கு?. வொர்க்குக்கு வந்தா வந்த வேலய மட்டும் பாரு. எதும் தப்பா பாத்தேனு வெச்சுக்க இங்க இருக்கிறவங்க கிட்ட சொன்னேனா உன்ன பேக் பண்ணிட்டு தான் மறுவேல பாப்பாங்க” என்றவள் மிரட்ட முதலில் அவள் அருகில் வருவதை ஆச்சரியமாக பார்த்தவன் அவளது மிரட்டலில் திகைத்து விழித்தவன் பின் அவளது மிரட்டலை நினைத்து சிரித்தான்.

‘இதுவும் கூட நல்லா தான் இருக்கும் போல. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம்’ என்றவன் யோசிக்க ஆரம்பித்தான்.

அவர்கள் பரிமாறிக் கொண்டிருக்கும் போது ஆதவன் செல்லுக்கு போன் வந்தது.

“ஆது”

“சொல்லுங்கம்மா”

“எங்க இருக்கீங்க?”

“பரிமாறிட்டு இருக்கோம் மா”

“அந்த தம்பி எங்க?”

“அவனும் தான்மா”

“அந்த தம்பிய ஏன்டா பரிமாற விட்ட?. சரி. சாப்டீங்களா?”

“ஃபர்ஸ்ட் வாங்க. உன்ன எல்லாரும் கேக்கறாங்க” என்றதும் சரி என்றவன் போனை கட் செய்து விட்டு அபிஷேக்கை தேடி சென்றான்.

“அபி வா… அம்மா கூப்பிட்டாங்க” என்று அவனையும் அழைத்துச் சென்றான்.

அபிஷேக்கை பார்த்த மஞ்சரி

“வாங்க தம்பி” என்று வரவேற்றவர் அவர்களின் சொந்தத்தை அறிமுகப்படுத்தினார்.

ஆதவனின் பூர்வீகம் காரைக்குடி. மஞ்சரிக்கு கூட பிறந்தவர்கள் ஐந்து பேர். அவர்களில் ஜோஸ்வினியும் அப்பாவும் ஒருவர். இப்போது கல்யாணம் நடப்பது மஞ்சரியின் அக்கா பெண் மீனலோக்ஷினிக்கு.

ஆதவன் பெரியம்மாவை பார்த்தவன்

“ஏன் பெரிம்மா உனக்கு எங்கள எல்லாம் கண்ணுக்கே தெரியாதே?” என்று தாமரையை பார்த்தவன்

“சித்தி நீங்க எப்போ வந்தீங்க?. இப்போ தான் நான் ஜோவ பாத்தேன்” என பேச அபிஷேக் இவர்கள் பேசுவதைக் கவனித்து கொண்டிருந்தான்.

“டேய் நீ வராம எங்கள சொல்றியா?. பாரு இவன் நியாயத்த” என காயத்ரியிடம் கேட்டார்.

“எப்படியும் எல்லாம் அசெம்பிள் ஆகிறோம் இல்ல. அப்பறம் ஏன் ஃபீல் பண்றீங்க?” என ஆதவன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த அபிஷேக்

“ஆது நீ பேசிட்டு இருடா. நான் வெளிய இருக்கேன். வரேங்க” என்று பொதுவாக சொல்லியவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தவனின் கண்களில் ஜோ கண்களில் பட அவளை கவனிக்க ஆரம்பித்தான்.

அப்போது அவனை பார்த்த ஜோ அவன் பக்கம் வந்தாள்.

“நீ வொர்க் பண்ண தானே வந்த?. வீட்டுக்குள்ள என்ன பண்ற?” என கேட்க அவள் திடீரென்று கேட்டதில் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறியவன்

“இல்ல. அது… சும்மா தான்” என அவன் திணறிக் கொண்டிருக்க அப்போது ரங்கராஜனும், தேஜஸ்வினியும் உள்ளே வந்தனர்.

அவர்களை பார்த்தவள்

“இங்க பார். என் டாட்டும், ஸிஸ்டரும் வந்திருக்காங்க. போய் காப்பி வாங்கிட்டு வா” என்றவள் கட்டளையிட அவன் மலைத்து போய் அவளை பார்த்தான்.

“என்ன மசமசன்னு நிக்கற?. போ”

‘அடப்பாவி வேலைக்காரன்னு கன்ஃபார்மே பண்ணிட்டாங்களா?’ என்று நினைத்தவன் ஓரிரு நிமிடங்களில் தன்னை மறந்து அவளை கவனித்தான்.

செர்ரி கலர் சுடிதாரில் அளவான மேக்கப்பில் அவள் கண்கள் இரண்டும் பேச அதற்கு தகுந்தாற் போல அவள் உதடுகளும் புன்னகை பூக்க அதை பார்த்துக் கொண்டே நின்றவன் சுதாரித்து தன்னை உலுக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

‘மை செர்ரி’ என்று உள்ளுக்குள் சொல்லியபடியே அங்கிருந்து சென்றவன் அவர்களுக்கான காபியை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ரங்கராஜன் அவனை யார் என்பது போல் பார்த்தார்.

“அப்பா… வேலைக்கு வந்தவங்கப்பா” என சொல்ல இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கு வந்த ஆதவன்

“அங்கிள் எப்போ வந்தீங்க?” என கேட்டவன்

“தேஜீ ஜோ கூடவே வரலாம்ல” என அவளிடம் பேசியவன்

“டேய் நீ இங்க என்ன பண்ற?” என‌ கேட்க

“இவன் உனக்கு ரொம்ப பழக்கமா?. தெரிஞ்சவன் மாதிரி பேசற?” என ஜோஸ்வினி விசாரித்தாள்.

“இவன் என் பிரண்ட் அபிஷேக். பிரான்ஸ்ல இருந்து வந்திருக்கான்” என ஆதவன் இப்போது அறிமுகப்படுத்த ரங்கராஜனும், தேஜஸ்வினியும் அவளை முறைத்தனர்.

அதை பார்த்த தேஜஸ்வினி திருதிருவென விழிக்க அபிஷேக்கோ அவளை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் திணறினான்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page