இதயம் 21

அத்தியாயம் 21

கதிர் நிலவனை அன்று முழுவதும் எதிர்பாத்திருந்தவள் அவன் வராமல் போனதால் நேத்ரா கோபமாக இருக்கக் கதிரோ அவளுக்காக அலுவலக வாசலில் காத்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவள் கோபமாக எப்படியோ அவளைச் சமாளித்தவன் அவளிடம் ஒரு வீடியோவை காட்ட அவளோ தன்னை மறந்து அதைப் பார்த்தாள்.

அந்த வீடியோவில் பூபாலன் இருக்க அவனது வீட்டில் கதிர் அவனுக்கெதிரில் அமர்ந்திருந்தான்.

“என்ன தம்பி என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?”

“சார் எங்க கம்பெனி சென்னைல இருக்கு. அதோட ஆடிட்டிங் பத்தி பேசணும்” எனப் பணிவோடு சொல்ல

“வாவ்… சென்னையா? சூப்பர் தம்பி”

“சார் உங்ககிட்ட தனியா பேசணும். இது ஆஃபிஸ் சம்பந்தப்பட்டது. உங்க ரூம்ல போய்ப் போசலாமா?”

“ஓகே தம்பி” எனச் சொல்ல அவனின் பின் சென்று கதவை தாழிட்டவனைப் பூபாலன் வியப்பாகப் பார்த்தான்.

“ஏன் தம்பி கதவச் சாத்தறீங்க?”

“யாருக்கும் தெரிய கூடாதுனு தான் சார்” எனப் பணிவோடு சொன்னவன் சட்டையைக் கைகளில் மடக்கி விட்டுக் கொள்ள அவன் புஜம் தெரிந்தது.

அவனுடைய கம்பீரமும், செதுக்கி வைத்த உடற்கட்டையும் பார்க்க ஏனோ பூபாலனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது.

“தம்பி என்ன வேணும்?” எனத் தயங்கிய குரலில் கேட்க அவன் சட்டையைப் பிடித்த கதிர் மாறி மாறி கன்னத்தில் அறைய அவன் சுருண்டு போய் விழுந்தான்.

கீழே விழுந்தவனின் முகத்தில் கதிர் மிதிக்க அவன் மூச்சுக்குத் திணறினான்.

“பொண்ணுங்கன்னா உனக்குக் கேவலமா போச்சா? மகள் வயசு இருக்கற பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்துக்குவியா?” என ரௌத்ரத்துடன் கேட்டபடி அவன் மூக்கில் மீண்டும் குத்து விட்டான்.

கதிருக்கு அவனைக் கொன்றுவிடும் ஆத்திரம் வந்தது.

பூபாலனின் கையைப் பிடித்தவன் அதனை முறுக்க அவனோ வலியில் கத்த…

“கத்தினா உயிர் இருக்காது. அமைதியா இரு” என்று சொல்ல பூபாலன் வலியை சமாளிக்க முடியாமல் திணறினான்.

“மவனே இனி எந்தப் பொண்ணுக்கும் தப்பான மெஸேஜோ, வேற மாதிரி நடந்தேன்னு தெரிஞ்சது. அவ்ளோ தான்”

“உடம்புல உயிர் வேணா இருக்கும். ஆனா எந்தப் பார்ட்டும் வேலை செய்யாது” என்றவன் அவன் காலை தனது கால்களால் அழுத்த அவனோ உயிர் போகும் வலியில் அலறினான்.

“டேய் நான் இங்க இருந்து போற வரையும் மூச்சு விடக் கூடாது. புரியுதா?” என்றவன்

“இனி எந்தப் பொண்ணு மேலயாவது கை வைப்ப?” எனக் கேட்க பூபாலன் பயத்துடன் இல்லை எனத் தலையாட்டினான்.

“வேற ஏதாவது தப்பா தெரிஞ்சது உன்னை பத்தி. இனி சங்க அறுத்துடுவேன்” என மிரட்ட அவன் பதில் சொல்ல முடியாமல் வலியில் துடிக்க அந்த வீடியோ முடிந்தது.

“எப்படி என் சர்ப்ரைஸ்?” என அவன் புருவம் உயர்த்த அவளோ அவனைக் கட்டி கொண்டு அழுதாள்.

“பேபி என்னாச்சு? ஏன் அழற?” என அவன் பதற…

“இந்த விஷயத்த வெளிய சொல்ல முடியாம நான் எப்படி புழுங்கி இருப்பேன்னு தெரியுமா? அவன் என்ன சக மனுசியா கூட நினைக்கலேன்னு” என அவள் கதற

“கூல் பேபி. தேவையில்லாம யோசிக்கக் கூடாது. புரியுதா?” என்றவன்

“நான் எப்படி சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். எவ்ளோ எனர்ஜி யூஸ் பண்ணிருக்கேன். நீ என்னடான்னா எனக்கு ஒரு ட்ரீட் கூடக் குடுக்க மாட்டியா?” என அவன் பாவமாகக் கேட்க

“உனக்கில்லாததா?” என அவள் கேட்க

“உனக்காக நான் ஊரில இருந்து அவ்ளோ டையர்ட்ல வந்து பசியோட வெயிட் பண்ணா நீ என்னடான்னா அழற?”

“இந்த அழுகாச்சி மூஞ்ச பார்க்கவா நான் இவ்ளோ தூரம் வந்தேன்” என அவன் கடுப்பாக

“டேய்… நான் அழுகாச்சி மூஞ்சியா?”

“பின்ன என்னடி? கண்ணு எல்லாம் செவந்து, முடி எல்லாம் கலஞ்சி பார்க்கவே பேய் மாறி இருக்க” என அவன் சீரியஸாகக் கேட்க

“டேய் உனக்கு ஒத பத்தலடா” என்றவள் அடிக்க ஆரம்பிக்க

“பேபிமா ப்ளீஸ் நீ அப்புறம் அடிச்சிக்கோ. இப்போ நான் அகோர பசில இருக்கேன். ஹோட்டல் போகலாமா?” எனக் கேட்க

“அச்சோ சாரிடா. ஃபர்ஸ்ட் ஹோட்டல் போ” என்றவள் அமுதாவிற்குப் போன் செய்து தான் வெளியே சாப்பிட்டு வந்து விடுவதாகக் கூறினாள்.

“ஊருக்கு போனியே. அப்பா, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க?”

“சூப்பர் பேபி”

“நீ ஒரே பையனா?”

“எனக்கொரு தம்பி இருக்கான்டா” என்றவனை வியப்பாகப் பார்த்தாள்.

அவள் முகமாற்றத்தை கவனித்தவன்

“என்ன பேபி?” எனக் கேட்க

“நீ சொல்லவே இல்ல”

“நீ கேட்கவே இல்ல மாடு”

“நீ சொன்னா தான தெரியும் எரும”

“போடா” என்றவள் திரும்பி கொண்டவள் சிறிது நேரம் கழித்து,

“அவன் எப்படிடா? உன்னை மாதிரி தானா?” என்று கேட்க அதில் சிரித்தவன்

“அது ஒரு அறுந்த வாலு” எனச் சொல்ல இருவரும் சிரித்தார்கள்.

பின் இருவரும் ஹோட்டல் செல்ல அவன் நேத்ராவுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டு ஆர்டர் செய்தான்.

சாப்பிடும் போதும் இது சாப்பிடு, அது சாப்பிடு, இது டேஸ்ட் நல்லா இருக்கும் எனச் சொல்ல ஏனோ அவளுக்கு அவளது அம்மா ஞாபகம் வந்தது.

“என்ன பேபி அப்படி பார்க்கற?”

“ஒண்ணும் இல்ல”

“சீக்கிரம் சாப்டு பேபி. அம்மா வெயிட் பண்ணுவாங்க தானே?” எனக் கேட்க

‘ஐயோ இதெப்படி மறந்தேன்?’ என்றவள் சீக்கிரமாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

“பேபி மெல்ல” என்று அவள் இருமும் போது தலையைத் தட்டி தண்ணீர் எடுத்து கொடுக்க அதைக் குடித்தவள் அமைதியாகச் சாப்பிட்டு முடிக்கக் கதிர் நேத்ராவை அவளது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றான்.

அடுத்த ஒரு வாரம் எந்த வித குழப்பமும் இல்லாமல் சென்றது.

கதிர் அவளை எங்கும் தனியே விடுவதில்லை. அதே போல அவளைப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ள அவள் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தாள்.

ஒரு நாள் அவள் மேகலாவுடன் ஷாப்பிங் செல்ல அப்போது அவனும் வந்து இணைந்து கொண்டான்.

கதிரை நீயா என்பது போலப் பார்க்க,

“ஏன்டி ஏதோ பேய பார்த்த மாதிரி ரியாக்சன் விடறே?”

“ஆமா. ஆபிஸ்ல தான் உன் தொல்ல தாங்க முடியலனா இன்னைக்குக் கூடவா?” எனச் சலித்தவள் மேகியை பார்த்து,

“மேகி நீ இவன் வரானு சொல்லவே இல்ல”

“எனக்கு மட்டும் என்னடி தெரியும்? இந்தக் குரங்கு சொல்லிட்டா வருது” என அவள் சொல்ல கதிரோ அவளைக் கொலைவெறியோடு பார்த்தவன்,

“ஏய் என்னடி வாய் நீளுது? கொஞ்சமாவது அண்ணானு மரியாத இருக்கா?”

“உனக்கெதுக்குடா மரியாத?” என மேகி வார…

“நிம்மதியா ஷாப்பிங் வரலாம்னு வந்தா இங்கயும் உங்க தொல்ல தாங்க முடியல. நீங்க சண்டை போட்டு முடிங்க. நான் வரேன்” என அவள் கிளம்ப

“ஏய் நில்லுடி”

“பேபி நில்லுடா” என அவர்கள் கூப்பிட இவர்கள் சண்டை தொடர்ந்தது.

நேத்ரா அவர்கள் இருவரிடமும் சண்டை போட ஏதோ சத்தம் கேட்டு ஏதேச்சையாகத் திரும்பி பார்த்த சந்திரன் அங்கே நேத்ராவுடன் கதிர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

‘இவன் எங்க இங்க? இவன் கூட நேத்ரா இருக்கா? இவ தான் அவனை அனுப்பி விட்டு அடிச்சாளா? என்ன திமிர் இவளுக்கு? இருடி வரேன்’ என்றவன்

“நேத்ரா இங்க உனக்கென்ன வேலை?” என்று இறுகிய குரலில் கேட்க அவனை அங்கு எதிர்பார்க்காத நேத்ரா பேச வாய் வராமல் நின்றாள்.

அவள் அதிர்ந்து நின்றதை கவனித்த கதிர் அவள் கையைப் பிடித்து ஆறுதலாக அழுத்தியவன்,

“நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கூலாகக் கேட்க

“டேய் உனக்கு எவ்ளோ திமிர்டா? வீடு பூந்து அடிச்சதும் இல்லாம இப்போ தெனாவட்டா கேள்வி கேட்கறியா?” எனக் கத்தியவன்,

“நான் அவளோட ஹஸ்பெண்ட் டா. என்ன திமிரு இருந்தா என் முன்னாடியே அவ கைய பிடிப்ப?” என ஆத்திரத்துடன் கேட்க முதலில் அதிர்ச்சியான கதிர் பின் சுதாரித்துக் நேத்ராவின் கையை இறுக்கமாகப் பிடிக்கச் சந்திரனுக்குக் கொலைவெறி அதிகமாகியது.

“ஏய் என்னடி அதுக்குள்ள இன்னொரு ஆள புடிச்சிட்டயா?” எனக் கேட்க நேத்ராவுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

“டேய் கரெக்டா பேசுடா. இல்லேன்னா என்ன நடக்கும்னு தெரியாது” எனக் கதிர் பல்லை கடிக்க அதில் சுதாரித்தவள்,

“நீங்க தான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டிங்கல்ல? இதுக்கு மேல உங்களுக்கும், எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல. மைண்ட் இட்” என அவனை மிரட்டியவள் அவர்களைக் கூட்டி கொண்டு வெளியேறினாள்.

அவன் பேசிய பேச்சிற்கு அவர்கள் இருவரின் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு வெட்கமாக இருந்தது.

“சாரி. ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிடுங்க. நீங்க இன்னைக்கு என்ஜாய் பண்ணலாம்னு வந்திருப்பீங்க. என்னால தடைப்படக் கூடாது. சாரி. நான் கிளம்பறேன்” எனச் சொல்லியவள் அவர்கள் பதில் சொல்லும் முன்னே அங்கிருந்து வெளியேறினாள்.

“என்னடா இப்படி பேசிட்டு போறா?” என மேகலா

“ஃபர்ஸ்ட் வா. அவ எங்க இருக்கான்னு பார்க்கலாம்” எனப் பார்க்க அங்கிருந்து வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தவளின் கண்களில் ஒரு பூங்கா தென்பட அதன் உள்ளே சென்றவள் தன்னை மீறி அழ ஆரம்பித்தாள்.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? அவங்க எவ்ளோ சந்தோஷமாக வந்திருப்பாங்க’ என்று நினைத்தவளுக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது.

நேத்ராவை பின் தொடர்ந்தவர்கள் அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி ஆகக் கதிர் மேகலாவுக்குச் சைகை காட்ட மேகலா அவளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்ப அழுதிட்டு இருக்கடா? எவ்ளோ தைரியமா பேசறேனு சந்தோஷப்பட்டா ஏன்டா இப்படி பேசிட்டு வந்தே? நாங்க உன்னை அப்படி நினைப்போமாடா?” என்று அவளை ஆறுதலாக அணைத்தவள் நேத்ராவை சமாதானப்படுத்த ஆரம்பித்தாள்.

“இல்ல மேகி. கதிர் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? சாரி கதிர்” என அவனிடம் மன்னிப்பு வேண்ட அவனோ

‘நான் உன்னை பத்தி என்னென்னமோ நினைக்கறேன் தான். வாய் தொறந்து சொல்லவா முடியுது’ என்று நினைத்தவன் வெளியே,

“பேபி உனக்குச் சாரிய தவிர வேற ஒண்ணும் தெரியாதா? மேகி இவ அடிக்கடி சாரி கேட்டுட்டே இருக்கா. இன்னைக்கு ஷாப்பிங்ல எடுத்துக் குடுத்துடலாம்” எனச் சொல்ல நேத்ரா இப்போது கதிரை முறைத்தாள்.

“பின்ன என்ன பேபி? அவனை பத்தி உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அப்புறம் ஏன் வீணா கவலைப்படற?” என்றவன்

“சரி. வாங்க. ஐஸ்கிரீம் சாப்பிட்டு இன்னைக்கு ஷாப்பிங் ஸ்டார்ட் பண்ணலாம். நேத்ரா அழுது அழுது டையர்ட் ஆகியிருப்பா” என அவளைச் சீண்ட

“டேய்” என அவள் ஆரம்பிக்க

“ஆமா பேபி. அப்படித்தான? பேபிக்கு ஐஸ்கிரீம் புடிக்கும் தானே?” எனக் கேட்க அவள் மென் சிரிப்புடன் தலையாட்டினாள்.

“அப்போ கம் ஆன்” என்றவன் பாட்டை முணுமுணுத்தபடியே அவர்களைக் கூட்டி சென்றான்.

ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க மூவரும் அதனைச் சுவைத்தார்கள்.

“பேபி”

“என்னடா?”

“ஐஸ்கிரீம் நல்லாருக்கா?”

“சரி. ஏன் இவ்ளோ அவசரமா சாப்பிடறே?” எனக் கேட்க நேத்ரா அவனை முறைத்தாள்.

“ஏன்டா நீ ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தது கேள்வி கேட்க தானா?” என அவள் கடுப்பாக

“பேபி பதில் சொல்லு”

“கரைஞ்சிடும்னு தான் சீக்கிரம் சாப்பிடறேன்” என அவள் சொல்ல

“ஓ… அப்படியா” என்றவன் “லைஃப்பும் இதே மாதிரி தான். இருக்கற வரையும் ஒவ்வொரு நிமிஷமும் என்ஜாய் பண்ணனும். புரியுதா?” எனக் சொல்ல அவளோ,

“இப்படி நீ ஐஸ்கிரீம் வாங்கித் தந்து தத்துவம் சொல்வேனா நான் ஐஸ்கிரீம் சாப்பிடவே வந்திருக்க மாட்டேன் பக்கி” எனக் கலாய்க்க

“ஓ… காட் நீ சீரியஸா பேசறதே அதிசயம். இந்த நோஸ்கட் தேவையாடா உனக்கு?” என அவன் தன்னைத்தானே கலாய்த்துக் கொள்ள

“டேய் எரும உன் ஐஸ்கிரீம ஃப்ரஸ்ட் சாப்பிடு. நீ சொன்ன டத்துவத்துல அது கரைஞ்சு போச்சு” என மேகி கலாய்க்க உடனே அவன் தனது ஐஸ்கிரீமை பார்க்க அது உருகியிருப்பதைக் கண்டு இவன் அவர்களைப் பாவமாகப் பார்க்க அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

என்ன பேபிஸ் சந்திரன் எப்படி அங்க வந்தானு குழப்பமா இருக்கா? சந்திரனுக்குக் கதிர் எப்படி தெரியும்னு யோசிக்கிறீர்களா?

கதிர் பூபாலன அடிச்சிட்டு வெளிய வரப்ப சந்திரன் ஏதேச்சையா அவன் பெரியப்பா வீட்டுக்கு வரான். கதிர் திடீர்னு சந்திரன பார்த்ததுல ஷாக் ஆனாலும் அதைக் காட்டிக்காம வெளிய வந்தர்றான்.

சந்திரன் உள்ள போனதுக்கப்புறமா தான் தெரியுது கதிர் தான் அடிச்சானு. பட் அதுக்குள்ள கதிர் எஸ்கேப்.

இந்தச் சூழல்ல சந்திரனுக்குச் சென்னைல வேலை வர அவன் கிளம்பி வரான். அவன் வந்த வேலை இன்னும் ரெண்டு நாள் இழுத்தடிக்கும்னு தெரிஞ்சதால ஊர் சுத்தலாம்னு வெளிய வரப்ப தான் இவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு சண்டை போட்டுட்டுப் போறான்.

மேகலாவும், கதிரும் சேர்ந்து ஷாப்பிங், சினிமா என நேத்ராவின் மனதை மாற்ற அவள் ஓரளவுக்கு இறுக்கம் தளர்ந்தவாறு இருந்தாள்.

மேகலாவை அவளது வீட்டில் விட்டவன் நேத்ராவை அவளது வீட்டில் விடச் சென்றான்.

நேத்ரா அவள் வீடு வந்தவுடன் காரில் இருந்து இறங்க அவள் கையைப் பற்றியவன், “பேபி தேவையில்லாம யோசிக்காத. அழக்கூடாது. ஓகேவா?” என மென்மையான குரலில் சொல்ல அவள் தலையாட்டினாள்.

ஆனால் அவள் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பே பிரச்சனை ரெடியாக இருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page