இதயம் 23

கதிர் நேத்ராவின் வீட்டுக்கு செல்ல அமுதா கதிரை பற்றி விசாரித்தவள்…

“எங்களுக்கு ஜென்ட்ஸ் மேலே நம்பிக்கை இல்ல தம்பி. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன்” எனச் சொல்ல முதலில் அதிர்ச்சியானவன் பின் தனது டிரேட் புன்னகையை உதிர்க்க அமுதா அவனைத் திகைப்பாகப் பார்த்தாள்.

“இதிலென்ன ஆன்ட்டி இருக்கு? ஒரு சில ஜென்ட்ஸ் அப்படி இருக்காங்க தான். நீங்க என்னை நம்பலேன்னா கூட எனக்குச் சந்தோஷம் தான்” எனச் சொல்ல இப்போது அமுதா அதிர்ச்சியானாள்.

“ஆமா ஆன்ட்டி. பொண்ணுங்க எவ்ளோ ஜாக்ரதையா இருக்காங்களோ அவ்ளோ தூரம் அவங்களுக்குப் பாதுகாப்பு” என்றவன்

“ஆனா ஆன்ட்டி என்னை நீங்க நம்பலாம். நான் நீங்க நம்பற மாதிரி நடந்துப்பேன். ஆனா அதுக்காக உங்களை நம்புங்கனு வற்புறுத்த மாட்டேன்” எனக் கதிர் சொல்ல அமுதா என்ன சொல்வதென்று புரியாமல் திணறினாள்.

“ஓகே ஆன்ட்டி. நான் கிளம்பறேன். எதுவும் ஹெல்ப் வேணும்னா என்ன காண்டாக்ட் பண்ணுங்க ஆன்ட்டி”

“இருங்க தம்பி. சாப்டுட்டுப் போகலாம்”

“பரவால்ல ஆன்ட்டி” என்றவன் நேத்ராவிடம் “பாய் நேத்ரா” என்றபடி வெளியேற நேத்ரா ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவளுக்குக் கதிரை கூப்பிட்டு இன்சல்ட் செய்து விட்டோமோ என உறுத்தலாக இருந்தது. அதனால் அவளுக்குப் போன் செய்யவும் தயக்கமாக இருக்க என்ன செய்வதென்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது கதிரிடமிருந்து போன் வந்தது.

“ஹலோ”

“என்ன பக்கி வாய்ஸ் உள்ள போகுது”

“சாரி”

“என்னாச்சு பக்கி? ஏன் சாரி கேட்கற?”

“அது… அம்மா பேசினது”

“பெரியவங்கனா அப்படி தான் பக்கி. நம்ம புரிய வைச்சா போதும்”

“மனசே சரியில்ல. அம்மா உன்கிட்ட இப்படி சொல்வாங்கனு நினைக்கல”

“விடு பேபி. நான் பார்த்துக்கறேன்”

“இல்லடா. கஷ்டமா இருக்கு”

“கூல் பேபி. அவங்க புரிஞ்சிப்பாங்க” என்றவன்

“எப்படியோ என்ன பழி வாங்கிட்ட?” என்க

“நான் என்னடா பண்ணேன்?” என அவள் பதறினாள்.

“பின்ன என்ன பேபி? நான் எவ்வளவு ஆசையா வந்தேன். உங்க வீட்ல நான் வெஜ் சாப்பிடலாம்னு. ஆனா நீ நல்லா பழி வாங்கிட்ட”

“இல்லடா… சாரிடா…” அவள் என்ன சொல்வது என்று புரியாமல் திணற அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

“டேய் ஏன்டா சிரிக்கிற?”

“என்ன சொன்னாலும் நம்பிடுவியா பேபி?”

“டேய்…”

“நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா. நான் இப்போ சாப்பிட போறேன். சிக்கன் பிரியாணி. நீயும் வா”

“ஹேய்… நீயே செஞ்சியா?”

“இல்ல பேபி. ஹோட்டல் தான்”

“ஓ… என்ஜாய்டா”

“சரி. நீ சாப்ட்டு கூப்பிடு. நான் வெச்சிறேன்” எனக் கட் செய்த கதிர் அமுதாவை பற்றிய யோசனையுடன் இருந்தான்.

*********

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த நேத்ராவோ ஏனோ அமைதியுடனே இருந்தாள்.

அவளைக் கவனித்த கதிர் என்னவென்று கேட்க

“இல்ல கதிர். அம்மாவ எப்படி கன்வின்ஸ் பண்றது? லாயர வேற பார்க்கணும்” எனப் புலம்ப

“ஹலோ மேடம். புலம்பறத நிறுத்துங்க. நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிருக்கேன்ல” எனச் சொல்ல சரி எனத் தலையாட்டினாள்.

“ஃபர்ஸ்ட் வொர்க் பாரு பேபி. இன்னும் த்ரீ டேஸ்க்குள்ள டெட்லைன்” எனச் சொல்ல அவள் வேலையில் முழு மூச்சாகக் கவனம் செலுத்தினாள்.

ஆனால் அவளது நேரமோ என்னவோ அவளுக்கு எரர் வந்து கொண்டே இருக்க அதைச் சரி செய்ய முடியாமல் திணறினாள்.

கதிருக்கு போன் செய்ய அவனோ வேலை மிகுதியில் போனை எடுக்காமல் இருந்தான்.

மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருக்க அவர்களிடம் கேட்க சங்கடப்பட்டுத் திரும்பக் கதிருக்கு போன் செய்ய அவனோ எடுக்கவில்லை.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அந்தப் பக்கமாக வந்த கதிர் அவளை முறைத்துக் கொண்டு வந்தான்.

“கதிர்”

“ஏன் நேத்ரா கூப்டுட்டே இருக்க? ஒழுங்கா வேலை பார்க்க விட மாட்டியா?” எனக் கத்த

“இல்ல கதிர்”

“அவனவன் உயிர கொடுத்து வேலை செஞ்சிட்டு இருக்கான். வேலைய பாக்காம எதுக்குப் போன் பண்ணிட்டே இருக்க?”

“ஒழுங்கா வேலை தெரியாதவங்கள எடுத்தா இதான் நிலைமை” என அவன் முகத்தில் அடித்தது போல் சொல்ல அவள் விக்கித்துப் போய் நின்றாள்.

அன்றைக்கு முழுவதும் அவளுக்கு இந்தப் போராட்டத்திலேயே செல்ல அவள் அன்று வீட்டுக்கு புறப்படவே மிகத் தாமதமானது.

அப்போது தனது வேலை முடித்து வெளியே வந்த கதிர் அவளைப் பார்த்து திடுக்கிட்டான்.

“ஹேய் பேபி இவ்ளோ நேரம் இங்க என்ன பண்ற?” எனக் கேட்க அவளோ வேலை சம்பந்தமாகத் திட்ட வருகிறானோ எனப் பயந்தாள்.

“நா… நான் கரெக்ட் டைம்க்குள்ள முடிச்சிடறேன் கதிர்” எனப் பயந்தபடி சொல்லியவள் அங்கிருந்து அகல கதிர் அதற்கான காரணம் புரியாமல் திணறியவன் பின் சுதாரித்து அவளை நோக்கி வேகமாகச் சென்றான்.

“பேபி நில்லுடா”

“என்னாச்சு? ஏன் இப்படி பேசற?” எனக் கதிர் அவளை நிறுத்தி கேட்க நேத்ரா அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

உண்மையில் கதிர் வேலைப்பளுவில் அவளைச் சுத்தமாய் மறந்திருந்தான். அதனால் அவளது செயலுக்கான காரணம் புரியவில்லை.

“ப்ளீஸ் கதிர். நான் கரெக்டா செஞ்சிடறேன். நான் எப்பாடு பட்டாவது வொர்க் செஞ்சி முடிச்சிடறேன்” என அவள் தயக்கமாகச் சொல்ல

“கூல் பேபி. சரி வா. உன்னை டிராப் பண்ணிறேன்”

“பரவால்ல கதிர். நான் போய்க்குவேன்” என்றவளுக்கு நடை தடுமாற

“பேபி” என்று பதறி போய் அவளைப் பிடித்தான்.

“சாப்டியா? இல்லையா பேபி?” என அவன் வினவ அவன் திட்டியதில் இருந்து தன்னைப் பற்றிய கழிவிரக்கத்தில் அவளுக்குச் சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை.

“இல்லை” என்று அவள் பயத்துடன் கூற அவளைக் காருக்கு கூட்டி போனவன் அவளை வேதனையுடன் பார்த்தான்.

“ஏன் பேபி என்கிட்ட பயந்து போய்ப் பேசற? ப்ளீஸ்டா. உயிரே போற மாதிரி இருக்கு” என அவன் வேதனையுடன் சொல்ல அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

“சாரி பேபி. காலைல நம்ம புரோஜெக்ட் மேனேஜர் புடிச்சுச் சத்தம் போட்டுட்டு இருந்தான். அந்த டென்ஷன்ல உன்கிட்ட பேசிட்டேன்டா. சாரி”

“பரவால்ல கதிர். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். எனக்கு யாரும் வேணாம். இதெனக்கு புதுசா என்ன?” என்று கண்களில் வலியுடன் அவள் கூற கதிர் அவளை அள்ளி அணைத்தான்.

“சாரிடா. என்ன மன்னிச்சிடுடா” என அவன் துடித்துப் போய்க் கூற

“உனக்குக் கூட என்ன பிடிக்கல இல்ல? நான் செத்து போயிறேன்டா”

“பேபி… என்னடா இப்படி பேசற?” அவன் பதறி போய் அவளை இறுக அணைக்க

“நீயே இப்படித் திட்டினா நான் யார்ட்ட ஹெல்ப் கேட்க முடியும்? நான் உன்னை தான நம்பறேன். எனக்கு யார்கிட்டையும் ஹெல்ப் கேட்க பிடிக்கல” என அவள் கதறலாகச் சொல்ல கதிரோ விக்கித்துப் போய் அவளைப் பார்த்தான்.

‘என்ன சொல்றா இவ? என்ன நம்பறேனு சொன்னாளா?’ என்று நினைத்தவன்,

“பேபி ப்ளீஸ் உன் நம்பிக்கைய நான் காப்பாத்துவேன். ஃபர்ஸ்ட் அழறத நிறுத்து. நம்ம சாப்பிட போகலாம்” என்றவன் அவளைத் தனது தோள் வளைவில் சாய்த்துக் கொள்ள அவளுக்கும் அப்போது அது தேவையாய் இருக்க வாகாகச் சாய்ந்து கொண்டாள்.

பின் ஹோட்டலுக்கு அவளைக் கூட்டி சென்றவன் உணவு ஆர்டர் செய்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பக்கி என்னையே பார்க்கற?”

“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் பேபி. நீ என்னை நம்பறேனு சொன்னது எனக்கு வானத்துல பறக்கிற மாதிரி இருக்கு” என்று அவன் சந்தோஷ குரலில் கூற

“ஏன் பக்கி என்னை அழவெச்சிட்டு உனக்குச் சந்தோஷமா?” என அவள் கடுப்பாகக் கேட்க

“அழ வெச்சதுனால தான தெரியுது” என அவன் கண்ணடிக்க

“எரும மாடு”

“அதானே உனக்கு இது விட்டா வேறென்ன உனக்குத் தெரியும்?”

“பக்கி, பன்னி, பரதேசி” என அவள் திட்ட உணவு கொண்டு வந்த பேரரோ அவர்களை விசித்திரமாகப் பார்க்க

“ஜி என்ன பாக்குறீங்க? அது ஒரு வித்தியாசமான பீஸ் ஜி. நீங்க போங்க” எனச் சொல்ல அவள் கடுப்பானாள்.

“பேபி சாப்பிடு” எனத் தட்டை அவள் புறம் தள்ள

“போடா. நான் சாப்பிட மாட்டேன்” என அவள் முறுக்கி கொள்ள

“ப்ளீஸ் பேபி சாப்பிடுடா” என்றவன் உணவை அவளுக்கு ஊட்ட வர

“நானே சாப்பிட்டுக்கிறேன்” என்று அவள் எடுத்து சாப்பிட

“இது பேபிக்கு அழகு” என்றவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவர்கள் சாப்பிட்ட பின் இருவரும் அங்கிருந்து கிளம்பும் போது நேத்ரா அவன் கையை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவளை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

அடுத்த மூன்று நாட்கள் எப்போதும் போல் செல்ல… கதிர் நேத்ராவை அழைத்து நாளை லாயரை பார்க்க வேண்டும் என்று சொல்ல

“அம்மாட்ட சொல்லணும் கதிர்”

“ஓகே சொல்லு”

“அம்மா வரணுமே”

“அதெல்லாம் வருவாங்க”

“எப்படி?”

“நீ போய்ச் சொல்லி பாரு”

“சரிடா” என்றவள் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அமுதாவிடம்,

“ம்மா கதிர் நாளைக்கு லாயரை பார்க்க போகலாம்னு சொன்னாங்க” என்க அவளோ

“சரிடி. எத்தனை மணிக்கு தம்பி வர சொன்னாங்க?” எனக் கேட்க

“ம்மா” என்று அவள் அதிர்ச்சியானாள்.

“என்னம்மா அன்னைக்கு அவன்ட்ட அப்படி பேசிட்டு இன்னைக்கு இப்படி சொல்ற?”

“நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும் நேத்ரா” என்றவள்

“தம்பிட்ட எத்தனை மணிக்கு வரணும்னு கேட்டுட்டு சொல்லு. நம்ம போகலாம்” என்றவளை அதிசயமாகப் பார்த்தவள் கதிருக்கு போன் செய்தாள்.

“டேய் என்னடா மாய மந்திரம் பண்ண? அம்மா உடனே நாளைக்குப் போகலாம்னு சொல்லிட்டாங்க”

“அது அப்படி தான். இந்தக் கதிர் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படற?” எனச் சொல்ல அவளோ

“ஃபிராடு” எனச் சொல்லி புன்னகைத்தாள்.

“ஆமான்டி. நான் ஃபிராடு தான். இந்த ஃபிராடு என்னென்ன செய்யப் போறானு பாரு” என ஆழ்ந்த புன்னகையுடன் கூற

“பார்க்கலாம்” என்றவள்

“நாளைக்கு எத்தனை மணிக்கு போறது?”

“பேபி நாளைக்குப் புரோஜக்ட் எக்ஸிக்யூட் பண்ணனும். சோ முடிச்சிட்டு ஈவ்னிங் ஏழு மணிக்குப் போகலாம்”

“ஓகே” என்றவள் “சரிடா பஃபல்லோ. வெச்சிடறேன்” என்று போன் கட் செய்தாள்.

அன்று வேலையை முடிக்க முடியாமல் திணறியவளை அடுத்த நாள் அவ்வப்போது வந்து அவள் என்ன செய்கிறாள் என்பதைக் கண்காணித்து அவளைச் சரியான முறையில் வழி நடத்தி புரோஜெக்டை சரியான நேரத்திற்கு முடிக்க வைத்தான்.

அடுத்த நாள் மாலை அலுவலக வேலை முடித்தவுடன் கதிர், நேத்ரா மற்றும் அமுதா மூவரும் கதிரின் நண்பனான அர்ஜீனை பார்க்க சென்றார்கள்.

அவர்களை வரவேற்று உபசரித்த அர்ஜீன் கதிரிடம் என்னவென்று கேட்க…

“இவங்க டிவேர்ஸ் கேஸ்க்காக உன்னை பார்க்க வந்திருக்காங்க. நேத்ராவோட ஹஸ்பெண்ட் சந்திரன் அவங்களுக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்காங்க” என்று சொல்ல அர்ஜீனோ கதிரை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

நான் அப்புறம் சொல்றேன் எனக் கண்களால் சைகை செய்தவன் அவர்களைக் கவனிக்கும் படி கூறியவன் நேத்ராவிடம்,

“நேத்ரா அவங்க அனுப்பினது கா” எனக் கதிர் சொல்ல அதை வாங்கிப் பார்த்த அர்ஜுனோ அதிர்ச்சி அடைந்தான்.

“என்ன நடந்தது மா? எதனால இவங்க டிவோர்ஸ்க்கு அனுப்பி இருக்காங்கனு சொல்லுங்க” எனச் சொல்ல அமுதாவும், நேத்ராவும் நடந்ததைச் சொல்ல மற்ற இருவரோ அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்தனர்.

“தம்பி எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. நாங்க பொண்ணுங்க மட்டும் எப்படி சமாளிக்கப் போறோம்னு?” என அமுதா அழுது கொண்டே சொல்ல

“ம்மா பயப்படாதீங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்று அமுதாவை இரண்டு பேரும் தைரியப்படுத்தினார்கள்.

நேத்ராவோ நடந்ததை எல்லாம் சொன்னதில் அவள் முகம் கசங்கி போய் இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க கதிரின் மனம் துடித்தது.

நேத்ரா கதிரையே கவனித்துக் கொண்டிருக்க அதைப் பற்றி உணரும் நிலையில் அவள் இல்லை.

சிறிது நேரத்தில் அர்ஜூனிடம் விடை பெற்றவர்கள் நேத்ராவின் வீட்டிற்கு வந்தார்கள்.

“ஆன்ட்டி நீங்க பயப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன். நேத்ரா நீயும் தான். நீ தான் ஆன்ட்டிக்குத் தைரியம் சொல்லணும். புரியுதா?” எனச் சொல்ல அவள் சரி என்று தலையாட்டினாள்.

“சரி ஆன்ட்டி. நான் பார்த்துக்கறேன். பத்திரமா இருங்க. நேத்ரா பாய்” என்று சொல்ல அவளும் கை ஆட்டினாள்.

வக்கீலை பார்த்து வந்த தாக்கத்தில் நடந்ததெல்லாம் நியாபகம் வர புரண்டு படுத்துத் தூக்கம் வராமல் தவித்தவள் யாரோ ஜன்னலுக்கு அருகில் நிற்பது போல் தோன்ற வீல் எனக் கத்தினாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page