இதயாம் 30.1

கதிர் நேத்ராவை தனது வீட்டிற்குக் கூட்டி வர அவளோ அவனைப் பற்றிய அதிர்ச்சியில் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவளது செல்லுக்குப் போன் வந்தது.

அதைப் பார்த்தவன் அவளிடம் போனை எடுத்துக் கொடுக்கப் பேசியவளோ எரிமலையானவள் போனை வைத்தும் கூட யோசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், “பேபி” என்று அழைக்க நேத்ரா அவனைத் திரும்பி பார்த்தாள்.

“ஏன்டா இவ்ளோ டென்ஷனா இருக்கற? யார் போன் பண்ணா?”

“அத்தை பண்ணாங்க கதிர். நாளைக்குச் சித்தப்பாவுது புரோபர்ட்டி ரிஜூஸ்டிரேஷன் ஆகுதுனு சொன்னாங்க” எனச் சொல்ல…

“அதுக்கு நீ ஏன்டா டென்ஷன் ஆகற?”

“அது கல்யாணத்தப்ப ப்ளாக் மெயில் பண்ண மாதிரி வாங்கின ப்ரோப்பர்ட்டி. பழைய வீட்ட எங்களுக்குக் குடுத்துட்டு லம்ப்பா அமௌண்ட் வர்றத அவங்க எடுத்துக்கிட்டாங்க”

“என்ன?” என்று கதிர் அதிர்ச்சியாகக் கேட்க

“ஆமாடா. அம்மா கூடக் கேட்கறேனு சொன்னாங்க. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“ஏன் பேபி அப்படி பண்ணாங்க?”

“மேரேஜ்க்கு முன்னாடி சைன் வாங்கிட்டா சொத்தை யாரும் கேட்க முடியாது பாரு. அதான்” என விரக்தியான குரலில் சொல்ல

“வீட்டு அமௌண்ட்டும், கடையும் ஈக்குவல்னு சொல்லி ஏமாத்திட்டாங்க. எனக்கு என்ன தான் மைண்ட்ல அதிகம்னு தோணினாலும் நான் அமைதியாவே இருந்திட்டேன்” என்று பெருமூச்சுடன் சொன்னாள்.

“ரிஜிஸ்டர் பண்றது அத்தைக்குத் தெரியுமா?”

“இல்ல. நம்ம தான் சொல்லணும். அம்மா ஏற்கனவே அப்பப்போ புலம்புவாங்க. இப்போ சொன்னா… என்னை தான் சொல்வாங்க” என அவள் சோர்வுடன் சொல்ல

“இதுக்கு ஏன்டா டல்லாகிற? நான் பார்த்துக்கிறேன்டா” என்றபடி தோளோடு அணைத்தவன் அவளை அமுதாவின் வீட்டிற்குக் கூட்டி சென்றான்.

இவர்களைப் பார்த்ததும் அமுதா அதிர, நேத்ரா விஷயத்தைச் சொன்னதும் அவள் இன்னும் புலம்ப ஆரம்பித்தாள்.

“அவன்லா மனுசனா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கல்யாணத்தப்ப எழுதி வாங்கினான். மாமா கேட்கறப்ப எல்லாம் உங்க இஷ்டம்னு…”

“அதுவும் கதிர் இவ இருக்காளே… இவ அதுக்கும் மேல… கேட்டா பிரச்சனை வருமாம்” என்று நேத்ராவையும் திட்ட அவள் தலை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“அத்தை ரெண்டு பேரும் டென்ஷனாகாதீங்க. நீ ஏன்டி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு இருக்க? அம்மான்னா திட்ட தான் செய்வாங்க” என்றவன் நேத்ராவை கடிய அமைதியாய் இருந்தாள்.

“பேபி நீ நாளைக்கு எங்க ரிஜிஸ்ட்ரேஷன்னு கேட்டியா?”

“கேட்டேன் கதிர். எங்க வில்லேஜ்ல தானே கடை இருக்கு. அங்க பக்கத்தில தான்”

“ஓகே விடு. இதுக்கு மேல இதை போட்டு யோசிக்காத. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் சில போன் கால்களைப் பேசி விட்டு வந்தான்.

“நாளைக்குக் காலைல ஃபிளைட். ரெடியா இரு” என நேத்ராவிடம் சொல்ல அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“ஆமா. அத்தை நீங்களும் ரெடியா இருங்க” எனச் சொல்ல அவள் சரி எனத் தலையசைத்தாள்.

திரும்பவும் கதிரை பற்றிய யோசனை நேத்ராவுக்குத் தலை தூக்கியது. அவளால் படுத்த போதும் கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

அவனைக் கேட்கவும் ஏதோவொன்று தடுக்க என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தாள்.

அவளது அசைவை கவனித்த கதிர் அவளைத் தனது கை வளைவில் கொண்டு வந்தவன் “என்ன பேபி இப்போ யோசிச்சிட்டு இருக்க? தூங்குடா” எனத் தட்டி கொடுக்க அவனையே பார்த்தவள்

“கதிர் நீங்க யாரு?” எனக் கேட்க அவளை ஆதுரமாகப் பார்த்தவன்

“நாளைக்குப் பேசிக்கலாம்டா. இப்போ தூங்கு. அல்ரெடி டயர்ட்ல இருப்ப” என அவளுக்கும் சேர்த்து அவன் பதில் சொல்ல அவனை இறுக அணைத்தபடியே அவள் தூங்க கதிர் அவளது கேள்வியால் தூக்கம் வராமல் தவித்தான்.

*******

அடுத்த நாள் விமானத்தில் கோவை சென்று அங்கிருந்து காரில் பதிவு அலுவலகத்தை அடைந்தார்கள்.

அவர்கள் அங்கே சென்ற சமயம் சாந்தமூர்த்திக் குடும்பம் அங்கே பதிவு செய்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கத் திடீரென்று இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் சாந்தமூர்த்தியை பார்த்த கதிரோ, “ஹாய் அங்கிள்” என்று கேஷூவலாகப் பேச குழம்பிய சாந்தமூர்த்தி எந்த வித பாவனைகளும் காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான்.

கதிரிடம் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தவன் நேத்ராவை பார்த்து…

“இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க அதையே நேத்ராவும் திரும்பக் கேட்டாள்.

“நீங்க இங்க என்ன பண்றீங்க சித்தப்பா?” என்றவள்

“அவரு கேட்டாரு தானே. அவர்ட்ட பேசிட்டு என்கிட்ட பேசுங்க” எனப் பேச

“நேத்ரா சித்தப்பாட்ட இப்படி தான் பேசுவியா?” எனத் தீக்ஷித் ஆரம்பிக்க

“வாடா நல்லவனே!” எனக் கதிர் அவனை வரவேற்றவன்,

“ஏன்டா உங்களுக்கு மட்டும் பணம் இருந்தா போதுமா?” எனக் கேட்க…

“டேய் உனக்கு இங்க என்ன வேலை?”

“அதிருக்கட்டும். ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்களா?”

“இல்ல. அந்த ரிஜிஸ்டரர் லேட் ஆகும்னு சொல்லிட்டான்” எனச் சொல்ல கதிர் சிரிக்க ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த சாந்தமூர்த்தி “ஹலோ வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? கெட் அவுட் ஃபிரம் திஸ் ப்ளேஸ்” எனச் சாந்தமூர்த்திக் கத்த சிரித்துக் கொண்டிருந்த கதிரின் முகம் இறுகியது.

இதற்கிடையில் கதிரை பார்த்த பதிவு அலுவலக ஊழியர் அவனை உபசரிக்கச் சாந்தமூர்த்திக் குடும்பம் அதிர்ச்சி ஆகி அவனைப் பார்த்தது.

அவர்கள் கொண்டு வந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்,

“மிஸ்டர். சாந்தமூர்த்தி இன்னைக்கு உங்க ரிஜிஸ்ட்ரேஷன் நடக்காது. நடக்க விட மாட்டேன்” என இறுகிய குரலில் சொல்ல

“டேய் என்ன திமிர் உனக்கு?”

“ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர். சாந்தமூர்த்தி. எப்படி… நீங்க லேடிஸ் கிட்ட கழுத்தில கத்தி வச்சி வாங்கற மாதிரி வாங்குவீங்க. அதுவும் கல்யாண டைம்ல. உங்களை யாரும் எதுவும் கேட்க கூடாதா?”

“கதிர் நீ ரொம்ப ஓவரா பேசுற?”

“ஆமாடா. நீ தான் ஐடியா குடுத்த போல. அவங்க ப்ராப்பர்ட்டிக்கு ஓகே சொன்னா கல்யாண வேலைய பாருங்க. இல்லேனா வந்திருங்கனு. நீயெல்லாம் மனுசனாடா?” எனத் தீக்ஷித்திடம் உறுமியவன் சாந்தமூர்த்தியை பார்த்து

“இதுல நேத்ராக்கு உரிமை இருக்கு. அவளுக்குத் தான் இது சொந்தம். அவ பேர்ல எழுதி வை. இல்லேனா உனக்கு வக்கீல் நோட்டீஸ் வரும். நீ எங்க போனாலும் உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது. எப்படி வசதி?” எனப் புருவம் உயர்த்தியவன்,

“நீ சென்னைல லான்ட் வாங்கற தானே சாந்தமூர்த்தி? ஆனா அமௌண்ட் ஏறிட்டே போகுமே. இனி நீ எங்க லேண்ட் வாங்கினாலும் இப்படி தான்” என்று தனது கூலிங் கிளாஸை கழட்டியவன்,

“அதனால நீ என்ன பண்ற? அவளோட சொத்தை அவளுக்கே குடுத்தற”

“டேய் நீ யார்டா எனக்கு ஆர்டர் போட? அது எங்கப்பாவுது. எனக்கும் அதில உரிமை இருக்கு”

“அஃப்கோர்ஸ். உரிமை இருக்கு தான். ஆனா நீ நியாயமா நடந்துக்கலையே” என்றவன் பதிவு அலுவலரை கூப்பிட அவர் கையில் தாள்களுடன் வர அதை வாங்கியவன் அவர்கள் முன்னாலேயே அதைக் கிழித்துப் போட்டான்.

“டேய்…”

“கதிர்” என ஆளாளுக்குக் கத்த

“ஷ். சைலண்ட். அவ பேர்ல மாத்து. இல்லேனா இதான் நடக்கும்” எனக் கதிர் சொல்ல வாங்க வந்தவரோ அவர்கள் குடும்பத்தைக் காறி துப்பி விட்டு சென்றனர்.

“எனக்கென்ன உரிமை இருக்குன்னு கேட்ட தானே” என்றவன் நேத்ராவின் அருகில் வந்து அவளைத் தோளோடு அணைத்து, “நேத்ரா கதிர்நிலவன்” எனச் சொல்ல அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

“இனி நீ என்ன பண்ணாலும் எங்கிட்ட எதுவும் நடக்காது. வர்ட்டா?” என்றவன்

“வா பேபி போகலாம். வாங்கத்த” என்று கூட்டி செல்ல அனைவரும் பிரமை பிடித்தது போல் நின்றார்கள்.

ஏனெனில் கதிரை பற்றி அவர்களுக்குத் தெரியும். அவன் யார், அவனுடைய உயரம் என்ன என்பதை அறிந்தவர்கள் அடுத்து என்ன செய்வது எனத் திகைத்து போய் நின்றார்கள்.

நேத்ராவிற்குக் கதிரின் செயலில் தலை கால் புரியவில்லை.

ஹோட்டல் அறையை அடைந்ததும் அவனை இறுக அணைத்துக் கொண்டவள் சந்தோஷத்தில் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

“ஹேய் பேபி என்ன பண்ற?”

“ஐயோ… நிலன் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? சொல்ல வார்த்தையே இல்ல”

“சின்ன வயசில இருந்து எதுக்கெடுத்தாலும் அவங்களுக்குப் பயந்து பயந்து… இந்த ப்ராப்பர்ட்டி விஷயத்துல கூட அப்படி தான்”

“நீ மிரட்டினதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று சந்தோஷக் கூச்சலிட்டவளை அவன் சிரிப்புடன் பார்த்தான்.

“அதென்ன நிலன்னு சொல்ற? நான் அன்னைக்கே கேட்கணும்னு நெனச்சேன்” என அவளைத் தன் கை வளைவில் கொண்டு வந்து கேட்க

“ஆமா. நீ தான் மிஸ்டர். கூல் ஆச்சே. அதுமில்லாம நீ எப்போவுமே எனக்குப் பார்த்து பார்த்து செய்வ. நீ அந்த நிலவை போலத் தூய்மையானவன், மென்மையானவன், குளிரானவன். அதான் நிலன்” என்று சொல்ல அவன் விழி விரித்தான்.

“வாவ்… என் பேபிக்கு எவ்ளோ அறிவு?” என வியந்தவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“சரி பேபி. என்ன வேணும்னு சொல்லு. ஆர்டர் பண்றேன். அத்தை கிட்டயும் கேளுடா” எனச் சொல்ல சரி என்றாள்.

பின் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கால் வந்ததும் அட்டெண்ட் செய்யக் கமலி அழைத்தாள்.

“ம்மா சொல்லுங்கம்மா”

“எங்கேடா இருக்க?”

“பொள்ளாச்சில மா”

“எங்க இருந்தாலும் நைட் இங்க வா. முக்கியமான விஷயம் பேசணும்”

“என்ன விஷயம் மா?”

“நீ வா. அவ்ளோ தான்” என்றவள் கட் செய்யக் கதிர் காரணம் புரியாமல் குழம்பியவன் முகிலுக்குப் போன் செய்ய அவன் சொன்ன செய்தியில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

கதிரை கவனித்த நேத்ரா, “என்னாச்சு டா?” எனக் கேட்க

“ஒண்ணும் இல்ல பேபி. ஆபிஸ்ல ஒரு இஸ்யூ. நீ சாப்பிடுடா. நான் வரேன்” எனச் சொல்ல

“சாப்ட்டுட்டு போடா” என அவள் சொல்ல

“உனக்கு ஒரு முறை சொன்னா புரியாது?” எனக் கதிர் கத்த நேத்ரா அதிர்ந்து போய் அமைதியானாள்.

சிறிது நேரத்தில் போன் பேசிவிட்டு வர அவள் அப்போதும் சாப்பிடாமலே உட்கார்ந்திருந்தாள்.

“ஹேய் பேபி இன்னும் சாப்பிடலயா நீ?” எனக் கேட்க இல்லையென்று தலையாட்டியவள்

“சாரி கதிர். சில சமயம் உன்னை பார்த்தா இந்த ரெண்டு நாள்ல நீ ரொம்பத் தூரமா இருக்கற மாதிரி இருக்கு. நான் இனி உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன். சாப்பிடு” எனக் கலங்கிய குரலில் சொன்னவள் அங்கிருந்து சென்றாள்.

கதிருக்கு முதலில் அவள் சொன்னது ஒன்றும் புரியாமல் இருக்கப் பிறகு யோசித்தவன் அவள் மனம் புரிந்தவனாய் அவளைத் தேடி செல்ல அவளோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

அதைப் பார்த்துத் தன்னை நினைத்தே கடிந்து கொண்டவன், “பேபி” என மென்மையாகக் கூப்பிட அவள் கண்ணீரை உள்ளிழுத்தபடி திரும்பி பார்க்க அவன் பதறி போய் அவளை அணைத்தான்.

“எதுக்குடா இப்போ அழற?”

“உன்னை சில சமயங்களில பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு” எனச் சொல்ல

“என்ன பேபி பண்ணேன்? நம்ம சண்டை கூடப் போடலயே?” என யோசிக்க அவள்

“டேய்…” என்று அவள் கதிரின் நடிப்பில் பல்லை கடித்தாள்.

அதில் சிரித்தவன் “வா. ஃபர்ஸ்ட் சாப்பிடலாம். அத்தையக் கூப்டியா?” எனக் கேட்க அவள் இல்லை என்று தலையாட்டினாள்.

“உன்ன… அத்தை தனியாவா சாப்பிடுவாங்க?”

“அம்மா சாப்பிட்டுட்டாங்க” எனச் சொல்ல

அவளை அழைத்துச் சென்று அவளுக்கு ஊட்டி விட்டபடியே சாப்பிட்டவன்,

“பேபி”

“ம்”

“நான் சண்டை போட்டா, நீயும் சண்டை போடணும். ஓகேவா?” என்க

“என்ன?”

“ஆமா பேபி”

“ஆனா எனக்குச் சண்டை போட பிடிக்காதே” என அவள் பாவமாகச் சொல்ல

“டேய் உன்ன…” என்று சிரித்தவன்

“நான் உன்னை வம்பிழுத்தா நீ சண்டை போடாமையா இருப்ப?” என்றவன் அவள் இதழ்களை நோக்கி குனிய அதில் அவள் பதறி போய் விலக அவளை அசால்ட்டாகத் தடுத்தவன் அவளது இதழ்களில் ஆழ புதைந்தான்.

அவனுக்கு உள்ளுக்குள் இருந்த மனப் புழுக்கத்தில் தன்னை மறந்து அவளிடம் ஒன்றியவன் அவள் துவள அவளைத் தனது மடியில் தாங்கியவன் அவள் முன் நெற்றி குழலை சரி செய்தபடியே,

“பேபி இன்னைக்கு அம்மா வீட்டுக்கு வர சொன்னாங்கடா. நம்ம இப்ப கிளம்பணும்” எனச் சொல்ல அவளோ பதட்டமாய் அவனைப் பார்த்தாள்.

“ஒண்ணும் இல்லடா. அம்மாக்கு அவங்க புது மருமகளை பார்க்கணும்னு ஆசையாம். அதான்” என்று அவள் தலையை வருடியபடியே சமாதானப்படுத்த அதில் சரி என்று தலையாட்டியவள் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார்கள்.

போகும் வழியில் கதிர் ஏதோ சிந்தனையிலேயே இருந்தான். நேத்ரா அவன் தோள்களில் சாய்ந்தபடியே அவன் கைகளைப் பிடித்தபடியே வந்தாள்.

ஒரு வழியாக அவர்கள் வீட்டுக்குள் செல்லும் போது அங்கே பூபாலன் இருப்பதைப் பார்த்துப் பிரமை அடைந்தவள் போல் நிற்க

“ஏன்டா நிக்கற? வா. உள்ள போகலாம்” என அவளைக் கூட்டி செல்ல நேத்ரா அவனுக்குக் கட்டுப்பட்டவள் போல் அவனோடு சென்றாள்.

கதிருடன் சென்றவளோ அவனை விட்டு எங்கேயும் நகரவில்லை. ‘இங்கயும் வாழ்க்கைய கெடுக்க வந்துட்டானா’ என அவள் உள்ளுக்குள் நடுங்கியபடியே கதிரின் கைகளை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.

கதிர் உள்ளே வந்தவுடன் பூபாலனை பார்த்தவன்,

“ம்மா இந்தாள எல்லாம் ஏம்மா வீட்டுக்குள்ள விட்ட?” எனச் சத்தம் போட பூபாலன் அவனை எகத்தாளமாய்ப் பார்த்தான்.

‘என்னையா நீ வீடு தேடி வந்து அடிச்ச? உன்னை சந்தோஷமா இருக்க விட்ருவேனா?’ என மனதுக்குள் நினைத்தபடி நக்கல் சிரிப்புச் சிரித்தான்.

“டேய் ஃபர்ஸ்ட் நான் கேட்கற கேள்விக்குப் பதில் சொல்லு. நேத்ரா யாரு?”

“என்னமா கேள்வி இது? என்னோட ஒய்ஃப்”

“அதுக்கும் முன்னாடி?”

“ம்மா…”

“உண்மைய சொல்லுடா”

“என்னோட லவ்வர்”

“டேய் அவளுக்கு முன்னயே மேரேஜ் நடந்ததா? இல்லையா?” எனக் கதிரை கேட்டவள் நேத்ராவை எரிக்கும் பார்வை பார்க்க, அவளோ பயத்தில் நடுங்கினாள்.

“அந்த ஆள் உங்ககிட்ட என்ன சொன்னான்மா? ஃபர்ஸ்ட் அதைச் சொல்லுங்க. உங்களுக்கு எல்லாம் தெளிவா சொல்றேன்”

“கேக்றான்ல. பதில் சொல்லுங்க மிஸ்டர்” எனக் கெத்தாகச் சொல்ல

“நேத்ராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. அவளால ஒரு குடும்பமே ஜெயில்ல இருக்கு…” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே கதிர் இடையில் தலையிட்டான்.

“எதனால அவங்க ஜெயில்ல இருக்காங்க?”

“அ… அது வந்து”

“சொல்லுடா” எனக் கதிர் இறுகிய குரலில் கேட்க

“சந்திரன் நேத்ராவை கடத்தினான்”

“என்ன?” எனக் கதிரின் பெற்றோர்கள் அதிர்ச்சியாக

“அது மட்டும் தான் பண்ணானா?”

“உங்களையும் கொலை பண்ண டிரை பண்ணான்”

“கதிர் இந்தாளு என்ன சொல்றான்? டேய் எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டுக்கே வந்து அந்தச் சந்திரன் ரொம்ப நல்லவன்னு சொல்வ?” என்று கதிரின் தந்தை விஜயேந்திரன் பூபாலனை அடித்தார்.

“ப்பா… இவன் நேத்ராக்கு எவ்ளோ டார்ச்சர் குடுத்தான் தெரியுமா? மகள் வயசுல இருக்கற பொண்ணுகிட்ட அசிங்கமா பேசி, தப்பா மெஸேஜ் பண்ணி… ச்சே சொல்லவே அசிங்கமா இருக்குப்பா”

“என்னடா சொல்ற?” என்று அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

“ஆமாப்பா. இவன் தப்பா மெஸேஜ் பண்றானு நேத்ரா சந்திரன் கிட்ட சொல்ல அவன் இவன் கிட்ட ஏன் இப்படி பண்றது ஒரு வார்த்தை கூடக் கேட்கல. போதாததுக்கு அவனோட அப்பா, அம்மாக்கு தெரிய கூடாதுனு சொல்லிருக்கான்”

“என்ன கதிர் இப்படி கூட ஃபேமிலில இருப்பாங்களா? அதுவும் இந்தக் காலத்துல” எனக் கமலி நம்ப முடியாமல் கேட்க

“ம்மா நேத்ராவை அந்தக் குடும்பமே அவ்ளோ டார்ச்சர் பண்ணுச்சு. வேலை செய்லங்கிற பேர்ல. ஆனா அவங்களுக்குச் சொத்து மேல தான் கண்”

“அந்த வீட்ல அவளோட மாமனார்ல இருந்து மாமியார், புருஷன் எல்லாரும் அவளை அடிச்சிருக்காங்க”

“நேத்ராவோட பாட்டிமா இறந்ததுக்கப்புறம் இன்னும் அவங்க அட்டூழியம் அதிகமாகிடுச்சு. இவ ரத்தம் வர அளவு அடி வாங்கியும் கூட அமைதியா தான்மா இருந்திருக்கா”

“என்னடா இப்படி சொல்ற?” என விஜயேந்திரன் கேட்க

“ஆமாப்பா. உனக்குக் கேட்க யார் இருக்காங்கன்னு சொல்லி சொல்லியே அடிச்சிருக்காங்க”

“இதெல்லாம் போக அவ அங்க நடக்கறதெல்லாம் யார்ட்டயும் சொல்ல முடியாம டிப்ரஸன்ல சூசைட் டிரை பண்ணிருக்கா. ஆனா அப்போ தைரியம் வரல”

“அப்போ திரும்ப டிரை பண்ணாளாடா? ஏன்டா இப்படி எல்லாம் யோசிச்ச?” என நேத்ராவிடம் கமலி ஆதுரமாகக் கேட்க அவளோ பேச முடியாமல் அழ ஆரம்பிக்கக் கதிர் அவளை மார்பில் சாய்த்தபடி சமாதானப்படுத்தினான்.

“அம்மா அவ அத்தை திரும்பச் சந்திரன் வீட்டுக்குப் போகச் சொல்லி சொன்னாங்கன்னு சூசைட் பண்ண டிரை பண்ணா. நான் கரெக்ட்டான டைம்க்கு போனதால அவளை காப்பாத்த முடிஞ்சது”

“அவ்ளோ ஏன்? ஆன்ட்டியே ஃபர்ஸ்ட் என்ன நம்பல. ஆனா நேத்ரா ரொம்பப் பயப்பட்டதால நான் ஆன்ட்டி கிட்ட நேத்ரா சூசைட் டிரை பண்ணதை பத்தி சொன்னேன். எப்படியாவது அவளை இதுல இருந்து மீட்கணும்னு சொன்னதுக்கப்புறம் தான் ஒத்துக்கிட்டாங்கம்மா”

“திரும்பவும் ஹாஸ்பிடல்லயும் டிரை பண்ணா. நான் அப்போ நிஜமாலுமே செத்துட்டேன்” என அவன் உடைந்த குரலில் சொல்ல நேத்ரா அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

அதைக் கவனித்த கதிர், “ஒண்ணும் இல்லடா. நான் அப்போதைய மைண்ட் செட்ட சொன்னேன்” எனப் பதில் கூற

“அவன் நம்ம மேரேஜ் பண்ணா உன்னை கொலை பண்ண கூடத் தயங்க மாட்டேன்னு சொல்றப்ப எப்படிடா என்னால நிம்மதியா இருக்க முடியும்?”

“உங்கிட்ட ஒன்னும் மனசு விட்டு சொல்ல முடியல. அப்போ இருந்த அழுத்தத்துல அப்படி நடந்துக்கிட்டேன். ப்ளீஸ். சாரிடா” எனக் கண்ணீர் குரலில் சொல்ல

“எனக்கு உன்னை பத்தி தெரியும் பேபி. நம்ம இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்று நேத்ராவை சமாதானப்படுத்தியவன் பூபாலனை பார்த்து “ஃப்ர்ஸ்ட் நீ என்ன சொன்னடா?” எனக் கேட்க

“நேத்ரா கேரக்டர் சரியில்லையாம். உன் பணத்துக்காக உன்னை மேரேஜ் பண்ணிக்கிட்டாளாம் அப்படின்னு சொன்னான்டா” எனக் கமலி சொல்ல இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் எரிமலையாய் பூபாலன் முன் நின்றாள்.

“உன்னை அப்பான்னு நினைச்சு பேசினது தான் நான் பண்ண ஒரே தப்பு” என்று சீற்றத்துடன் கூறியவள் அவனை மாறி மாறி அறைந்தாள்.

“இதுக்கு அப்புறமும் என் கண் முன்னாடி நின்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது. நான் கொலைகாரி ஆகறதுக்குள்ள கிளம்புடா” என நேத்ரா ஆக்ரோஷமாகக் கத்த பூபாலன் அங்கிருந்து கிளம்பினான்.

கிளம்பியவனைச் சொடக்கு போட்டு கூப்பிட்டவள் “என் ஹஸ்பெண்டு கிட்ட எவ்ளோ பணம் இருந்தா உனக்கென்ன? ஆனா நெக்ஸ்ட் டைம் அவரு கண்ணுல பட்றாத. உன்னை எங்க அனுப்பணுமோ அங்க அனுப்பிடுவாரு” எனக் கெத்தாகச் சொல்ல கதிர் அவளை வியப்பாய் பார்த்தான்.

“ம்மா என்ன பொறுத்தவரையும் அவளுக்கு முதல்ல நடந்தது கல்யாணமே இல்ல. அவ குழந்த மாதிரிமா. அன்புக்காக நிறைய ஏங்கி போயிருக்காமா. அதனால தான்மா நான் அந்த மேரேஜ் பத்தி உங்களுக்கு எதுவும் சொல்லல” என்றவன்

“நீங்க பேசிட்டு இருங்க. நான் வந்தறேன்” என்றவன் போனோடு உள்ளே சென்றான்.

“அண்ணி மாப்பிள்ளைகிட்ட நான் உங்கப்பாம்மா கிட்ட ஃபர்ஸ்ட் மேரேஜ் பத்தி சொல்லிருங்கன்னு சொன்னேன். அப்போ நான் பார்த்துக்கறேன்னாரு. அதனால சொல்லி இருப்பாருன்னு நினைச்சேன்”

“இவளும் ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததால டல்லா இருந்ததால என்னால உங்ககிட்ட அதிகமா பேச முடியல. எங்களுக்கு ஏமாத்தணும்னு எந்த முகாந்திரமும் கிடையாது. ப்ளீஸ்… என்ன மன்னிச்சிடுங்க… அண்ணா நீங்களும் தாண்ணா” என அமுதா கண்ணீர் மல்க சொல்ல நேத்ரா அமைதியாய் தலை குனிந்தபடி நின்றாள்.

உள்ளே போன கதிர் வெளியே வந்த போது அமுதா அழுது கொண்டிருப்பது கண்ணில் பட

“அத்தை நீங்க ஏன் ஃபீல் பண்றீங்க? இந்தம்மா அந்த ஆள இருக்கச் சொன்னதுக்குக் கூட ரீஸன் இருக்கும். என்னம்மா கரெக்டா?” எனப் புருவம் உயர்த்திக் கேட்க

“படவா. அதான் கத்தினவன் கூட அமைதியா இருந்தியா?” என்றவர்

“ஆமாடா. அவன் ஃப்ர்ஸ்ட் சொன்னப்போ எங்களுக்கும் ஷாக்கா தான் இருந்தது. ஆனா அவன்கிட்ட ஏதோ தப்பிருக்குனு என் உள்ளுணர்வு சொல்லிச்சு. அதான் நீங்க வரப்ப அவன் இருக்கணும்னு சொன்னேன்” என அவர் கதிருக்கு அம்மா என்று நிரூபித்தார்.

“அதானே… என் செல்ல மம்மி” என்று அவளுக்கு முத்தம் கொடுக்க…

“டேய் நீ போய் உன் பொண்டாட்டிய கொஞ்சுடா. அவளே அழுதிட்டு இருக்கா” எனக் காலை வார அவன் நேத்ராவிடம் செல்ல அவளோ,

“அத்தை மாமா என்ன மன்னிச்சிடுங்க. நா… நான் ஏமாத்தல. மேரேஜ்னே எனக்குத் தெரியாது” என நேத்ரா கதறியபடி அவர்கள் காலில் விழ

“உன்னை யாரும் எதுவும் சொல்லலியேடா” என்று கமலி அவள் கண்ணீரை துடைத்து விட விஜயேந்திரனோ,

“இனி ஒண்ணும் கவலைப்படாதம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று ஆறுதல் அளித்தவர்

“நீங்களும் தான்மா. இனி ரெண்டு பேரும் ஒண்ணும் நினைக்காம நிம்மதியா இருங்க” என்று ஆறுதல் அளிக்க இருவர் கண்களிலும் கண்ணீர் வந்தது.

“பேபி இப்போ எதுக்கு அழற? கூல்” என்றவன் “அத்தை இதுக்கு மேல ஒண்ணும் யோசிக்காதீங்க. ரிலாக்ஸ்டா இருங்க” என்றவன்

“ம்மா நாங்க கிளம்பறோம்மா” எனச் சொல்ல

“ஏன்டா? இங்கேயே இருங்க”

“இல்லமா. போய்ட்டு நாளைக்கு வர்றோம்” என்று கிளம்பியவன் ஏதோ யோசித்து,

“பேபி நீங்க போங்க. நான் வந்தறேன்” எனச் சொல்லிவிட்டுக் கமலியிடம் வந்தான்.

“ம்மா”

“என்னடா?”

“நேத்ராவுக்கு நான் யாருன்னே தெரியாதும்மா”

“டேய்”

“ஆமாம்மா. அவகிட்ட நானும் சொல்லலனா ஃபர்ஸ்ட் டே வீட்ட பார்த்தே மிரண்டுட்டா. அப்றமும் அவ ஏதோ யோசனையிலே இருந்தா. நான் கண்டுக்காத மாதிரி இருந்துட்டேன்”

“இன்னைக்கு அவங்க புரோபர்ட்டி அவங்க சித்தப்பா சொந்த ஊர்ல கிரையம் பண்ண டிரை பண்ணாங்க. அந்த வேலையா போனோம்” என்று விளக்கம் சொல்ல

“அதெல்லாம் சரிடா. ஆனா இதை கூடவா மறைப்பே?”

“இல்லம்மா. அந்த ஆள் வந்து சொன்னான்னு சொன்னீங்க தானே. அதான் உங்களுக்குச் சொன்னேன்” எனச் சொல்ல

“அடடா. பொண்டாட்டிய விட்டு கொடுக்க மாட்டீங்களோ?” என விஜயேந்திரன் கிண்டலடிக்க

“ப்பா அவளுக்கு ஒண்ணும் தெரியாது. அதுதான் சொல்ல வந்தேன்”

“எங்களுக்குப் புரியாதாடா? நீ போ. வெயிட் பண்ணிட்டு இருக்கப் போறாங்க” என்று சொல்ல

“லவ் யூ மா. லவ் யூ டேட்” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

அவங்க வீட்டுக்கு போறதுக்குள்ள இந்தப் பூபாலன் எப்படி அங்க வந்தானு பார்த்தறலாம்.

நேத்து கோயிலுக்குக் கதிரும், நேத்ராவும் போனப்ப யாரோ அவளை உத்து பார்க்கற ஃபீல் வந்தது தானே. இந்தப் பொறுக்கி தான் கதிர் ஏற்கனவே சந்திரன் குடும்பத்த ஜெயில்ல தூக்கி வச்சதுனால அது சம்பந்தமா சென்னை வந்தான்.

வந்த இடத்தில இவங்க ரெண்டு பேரையும் பார்த்து சந்தேகப்பட்டவன் கதிர் வீட்ல நேத்ராவை பத்தி போட்டு குடுத்துட்டான்.

ஆனா அவங்க கதிர் ஃபேமிலி ஆச்சே. அதனால அவன் வந்திடுவான், வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி அங்கேயே இருக்க வச்சிட்டாங்க.

அவனும் வெயிட் பண்ணி நேத்ரா கையாலேயே அடி வாங்கி எல்லார்கிட்டயும் அவமானப்பட்டு வெளிய போயிருக்கான்.

ஓகே. இப்போ கார்ல போறவங்க என்ன பண்றானு பார்க்கலாம்.

கதிர் காரை ஓட்டியவன் நேத்ராவை கவனிக்க அவள் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.

அதைக் கவனித்தவன் அவளது மனதை மாற்ற பாடலை ஒலிபரப்பினான்.

அவன் ப்ளே செய்யவும் சித்ராவின் இனிமையான குரலில் பாடல் ஆரம்பமாகியது.

ஏதேதோ எண்ணம்

வளர்த்தேன்

உன் கையில் என்னை

கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்

உன் ராணி

நானே பண்பாடும் பாடகன்

நீயே

உன் ராகம் நானே

இளையராஜாவின் இசையில் சித்ராவின் குரல் இதமாக மனதை வருட நேத்ராவோ கண் இமைக்காமல் கதிரையே பார்த்தாள்.

“என்ன பேபிமா அப்படி பார்க்கற?”

“ஒண்ணும் இல்ல” என்றவள் கண்களை மட்டும் அவனிடம் இருந்து விலக்கவில்லை.

சில காலமாய் நானும்

சிறை வாழ்கிறேன்

உனை பார்ப்பதால் தானே

உயிர் வாழ்கிறேன்

கிட்டத்தட்ட அவளது மனதை எடுத்துரைப்பது போன்ற வரிகளில் கதிரின் கைகளை இறுக பற்றிக் கொள்ள அவனோ நேத்ராவை தன் அருகில் இழுத்தான்.

குலதெய்வமே எந்தன்

குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னை

கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா தீயை

அணைக்க வா

நீ பார்க்கும் போது

பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர்

காய்கிறேன்

எது வந்த போதும் இந்த

அன்பு போதும்

அடுத்தடுத்த வரிகளில் தன் மனதை பறிகொடுத்தவள் அவளை அறியாமல் அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டவள் அவன் தோள்களில் சாய்ந்தாள்.

அவளைப் பார்த்தவனின் இதழ்கள் புன்னகைக்க மனமோ அவளைச் செல்லமாகத் திட்டியது.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page