அத்தியாயம் 8

 

அடுத்த நாள் அபிஷேக் ரெஸ்ட்டாரன்ட்‌ வந்தும் வேலை ஓடாமல் ஜோஸ்வினியைப் பற்றிய யோசனையிலேயே இருந்தான்.

அவளை பற்றிய யோசனையில் அவன் மனம் ஒரு நிலையின்றி தவிக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் நிகிலிடம் சொல்லி விட்டு அவளது கல்லூரியை நோக்கிச் சென்றான்.

அவன் கல்லூரிக்குள் செல்லும் போது அங்கு ஷியாமும், ஜோஸ்வினியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதை கவனித்தவன் அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தில் மறைந்து நின்றபடி அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்.

“ஜோ எங்க உன்ன பாக்க முடில?. ரொம்ப பிஸியா?” என்றவனை அவள் முறைத்தாள்.

“எரும நேத்து நைட் கூட போன் பேசிட்டு என்னடா இப்படி கேக்கற?”

“அதில்ல ஜோ. காலேஜ் முடிச்சிட்டா நம்ம மீட் பண்ண முடியாதே. என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவன்

“ஜோ காலேஜ் முடிச்சவுடனே நம்ம ஃபேமிலி கிட்ட சொல்லி மேரேஜ் பண்ணிக்கலாமா?”

“டேய் விளையாடறியா?. நான் ஹையர் ஸ்டடி பண்ணனும். அப்றம் வொர்க் பண்ணனும். தென் ஒன்லி மேரேஜ்”

“என்ன ஜோ இப்படி சொல்ற?”

“ஆமா. ஃபர்ஸ்ட் வாழ்க்கைல செட்டில் ஆகிட்டு மேரேஜ் பண்ணிக்கலாம்”

“இதிலென்ன ஜோ இருக்கு?. நான் எங்க கம்பெனிக்கு தான் போக போறேன். இதுல செட்டில் ஆக என்ன இருக்கு?”

“ஓ… உனக்கு கம்பெனி பத்தி எல்லாம் தெரியுமா?”

“இனி போனா தான் ஜோ எல்லாம் தெரியும்”

“அப்படினா உங்க கம்பெனிக்கு போய்ட்டு ஒரு புரோஜெக்ட்டாவது சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு வந்து என்ன பொண்ணு கேளு. நானும் என் ஹையர் ஸ்டடிஸ் முடிச்சிட்டு கொஞ்ச நாள் வொர்க் பண்ணிட்டு வந்தறேன். ஓகேவா?” என ஜோஸ்வினி கேட்க அவளை யோசனையுடன் பார்த்தான்.

“என்னடா யோசிக்கிற?”

“இல்ல நீ சொல்றத பாத்தா நம்ம கல்யாணம் டென் இயர்ஸ் கழிச்சு தான் நடக்குமோ?”

“அது உன் கையில தான் இருக்கு”

“ஆனாலும் ஜோ… இது உனக்கே ஓவரா இல்ல?”

“இதுல என்ன இருக்கு?. நம்ம அபிய பாரு… அவன் அப்பாட்ட கத்துகிட்டு எத்ன ரெஸ்ட்டாரண்ட் வச்சிருக்கான்?” என்று கேட்க ஷியாமின் முகம் மாறியது.

“அது யாரு அபி?”

“நம்ம அபிஷேக் தான். அன்னைக்கு மேரேஜ்க்கு கூட வந்தான். நேத்து கூட ரெஸ்ட்டாரன்ட் போனோம்” என அவள் இயல்பாக சொல்ல ஷியாமின் முகம் அனலைக் கக்கியது.

“நான் கூப்ட்டு நீ எங்கயாவது வந்திருக்கியா?. இப்போ என்னனா அவனோட ஹோட்டல் போனேன், மேரேஜ் போனேனு சொல்ற?”

“டேய் அவன் நம்ம ஆதுவோட ஃபிரண்ட்”

“ஆது யாரு?”

“அன்னைக்கு நம்ம சென்டர்ட்ட பேசிட்டு இருந்தப்ப என்ன டிராப் பண்றேன்னு கூட்டிட்டு போனானே… என்னோட கசின்”

“ஆக மொத்தம் உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸே கிடையாதா?. தாத்தானாலும் பேசற, நம்ம ஏஜ்னாலும் பேசற. ருத்ரா  சொன்னது கரெக்டா தான் இருக்கும் போல” என்ற அவனது இறுகிய குரலில் அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“அவன் என்ன சொன்னான்?”

“உனக்கு கேர்ள் பிரண்ட்ஸ விட பாய் பிரண்ட்ஸ் தான் அதிகம்னு சொன்னான்”

“சோ வாட்?”

“உனக்கு திமிரு ரொம்ப ஜாஸ்தியாமே?”

“நீ என்ன நினக்கற?”

“உண்மை தானே”

“ஓஹோ… இன்னும் அவன் வேறென்ன சொன்னான்?”

“நீ அவன் புரபோஸ் பண்ணப்ப ரிஜக்ட் பண்ண தானே?”

“ஆமா. அவன எனக்கு பிடிக்கல”

“அப்போ நீ பண்றதும் எனக்கு பிடிக்கல. பிரேக் அப் பண்ணிக்கலாமா?” என்றவன் கேள்வியில் சிலையாய் நின்றவளை பார்த்த அபிஷேக்கின் மனம் வலித்தது.

“என்ன‌ ஜோ பதிலயே காணோம்?” என்றவன் அழுத்தமாக கேட்க அதில் சுதாரித்தவள்

“நம்ம பிரேக் அப் பண்ற அளவுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டவளை விசித்திரமாக பார்த்தான்.

“நான் சொல்றதயும் கேட்க மாட்ட. என் கூடவும் டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டே. யாரோ அபி கூட ரெஸ்ட்டாரன்ட் போனேனு சொல்றியே. நீ பண்றது எல்லாம் பாக்கறப்ப பிரேக் அப் பண்ணலாம்னு தான் தோணுது” என்ற அவனது விளக்கத்தில் மலைத்து நின்றவள் ஏதோ யோசித்து

“ருத்ரா பத்தி ஏதோ சொன்னியே?. என்ன?”

“அவன் உன்ன பத்தி சொன்னான். நீ சரியான திமிரு பிடிச்சவ. யாரையும் மதிக்க மாட்டனு. உன்ன லவ் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு”

“ஓ… உனக்கு அவன் சொன்னானா ஓகேவா?. சுயமா சிந்திக்க மாட்டியா?”

“கண்ணு முன்னாடியே நடக்கறது பாத்திட்டு இருக்கேன். இதுல சுயமா சிந்திச்சா தான் ஒத்துக்குவியா?” என்ற அவனது அலட்சிய பதிலில் ஒரு கணம் அதிர்ந்தவள்

“குட் பாய்” என்று அவள் பட்டென்று சொல்லி விட்டு செல்ல ஷியாம் திகைத்து போய் நின்றான்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த அபிஷேக்கோ ஜோஸ்வினியின்  செயலில் அசந்து போய் நின்றான்.

ஒரு கணம் தன்னை மறந்து அவளை பின் தொடர நினைத்தவன் பின் நினைவு வந்தவனாய் விவேக்கை அழைத்தான்.

“விவேக் எங்க இருக்கீங்க?”

“காலேஜ்ல ணா”

“கொஞ்சம் சீக்கிரம் ஜோவ போய் பாக்கறீங்களா?. ப்ளீஸ்” என்று கெஞ்சியவன் ஜோஸ்வினிக்கும், ஷியாமுக்கும் நடந்த உரையாடலை சொன்னான்.

“ஓ… காட்… நான் நினச்ச மாதிரியே நடந்திடுச்சேண்ணா”

“விவேக் நீங்க இப்போ ஜோ கூட இருக்கறது தான் முக்கியம். போங்க” என்றவன் அழுத்திச் சொல்ல

“சரிண்ணா” என்று தலையாட்டினான்.

விவேக் ஜோஸ்வினியை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அபிஷேக் அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினான்.

கல்லூரியில் இருந்து திரும்ப ரெஸ்ட்டாரென்ட் வந்தவன் முயன்று தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டு அதில் வெற்றியும் கண்டான்.

ரெஸ்ட்டாரென்ட்டில் இருந்து கிளம்பும் வேலையில் ஜோஸ்வினியின் ஞாபகம் வர விவேக்கிற்கு போன் செய்தான்.

“விவேக் ஜோஸ்வினி எப்படி இருக்கிறா?” என்று கேட்க விவேக் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினான்.

“ண்ணா நான் நீங்க சொன்னதுக்கப்புறம் கொஞ்ச நேரம் அவ கூட இருந்தேண்ணா. அப்றம் புரோஜெக்ட் சென்டர் போகணும்னு அவ டீம்மோட கிளம்பிட்டாண்ணா. அப்றம் நான் பாக்கல”

“அவ ஓகேவா?. எதுவும் ஃபீல் பண்ணிட்டு இருந்தாளா?” என அவன் பதறியபடி விசாரித்தான்.

“கொஞ்சம் டல்லா தாண்ணா இருந்தா. என்கிட்ட ஒண்ணும் காமிச்சுக்கல”

“ஓகே விவேக். நான் பாத்துக்கிறேன்” என்று கட் பண்ணியவன் ஜோஸ்வினிக்கு கால் செய்தான்.

ஜோஸ்வினியோ முதல் இரண்டு முறை முழு ரிங் அடித்தும் எடுக்காததால் அவன் இன்னும் பதட்டமானான்.

 ‘ப்ளீஸ் பிக் அப் ஜோ’ என அவன் மனதினில் நினைத்து கொண்டே திரும்பவும் கால் செய்ய இம்முறை அவனை ஏமாற்றாமல் அபிஷேக்கின் போனை அட்டென்ட் செய்தாள்.

அவள் போனை எடுத்ததும்

“ஜோ எங்கிருக்கீங்க?” என்று கேட்க அவளோ

“உன்ன பத்தி தான் அபி யோசிச்சிட்டு இருந்தேன்” என்று சொல்ல அதில் அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கு தெரியவில்லை.

“ஜோ என்னாச்சு?. வாய்ஸ் டல்லா இருக்கு” என்று ஒன்றும் அறியாதவன் போல வினவ ஒரு நிமிடம் அமைதியானவள்

“எனக்கு உன்ன பாக்கணுமே” என்று சொல்ல

“இதோ இப்போ வரேங்க ஜோ. நீங்க எங்க இருக்கீங்க?”

“நான் நடுரோட்டில இருக்கேன்” என்றவள் சொல்ல 

“ஜோஸ்வினினினி என்ன சொல்றீங்க?” என்று அபிஷேக் குரல் நடுங்க கேட்டான்.

“அபி கூல்டா. பஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேனு சொல்ல வந்தேன்” என்றவள் முயன்று வருவித்த புன்னகைக் குரலில் சொல்ல அதை கண்டு கொண்டவன்

“ஜோ நீங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க. நான் வந்தறேன். எங்க இருக்கீங்க?” என்று விசாரித்தவன் உடனடியாக அங்கு கிளம்பி செல்ல அவளை பார்த்தவன் திகைத்தான்.

அங்கு ஜோஸ்வினி எங்கோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன ப்ராப்ளம்ங்க ஜோ?. ஏன் இப்படி உட்கார்ந்திட்டிருக்கீங்க?. ஃபர்ஸ்ட் வாங்க… கிளம்பலாம்” என்று காரில் அமர வைத்தவன் அவளை பார்வையால் ஆராய்ந்தான்.

“என்ன ஜோ ஒண்ணும் பேச மாட்டேங்கறீங்க?”

“நேத்து விவேக் சொன்னது உண்மை தான்” என்று காலையில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தவள் முடிக்கும் போது தன்னை மீறி அழ ஆரம்பித்தாள்.

“அவன் பிரேக் அப் பண்ணிக்கலாமானு ரொம்ப ஈசியா கேக்கறான் அபிஷேக். நான் என்னடா தப்பு பண்ணேன்?” என அவள் உடைந்த குரலில் கேட்க அதற்கு மேல் அவனை கட்டுப்படுத்த முடியாமல் திணறியவன் அவளை குழந்தை போல வாரி அணைத்தான்.

“செர்ரி ஒண்ணும் இல்லடா. அவன் ஏதோ புரியாம உளறான். அதுக்காக உங்கள நீங்க கஷ்டப்படுத்திக்கணுமா?. நீங்க எவ்வளவு ப்ரேவா சொல்லி இருக்கீங்கனு நினைச்சேன். இப்டி அழலாமா!” என அவன் குழந்தைக்கு சமாதானம் சொல்வது போல் சொன்னான்.

“இல்லடா. இவன் கூட பேசாமயேவா இருக்கேன்?. அவன் சான்ஸ் கிடைக்கறப்ப எல்லாம் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறான். லாஸ்ட்ல என்ன சொல்றான்” என்றவள் திரும்பவும் அழ ஆரம்பிக்க

“ஜோ ஃபர்ஸ்ட் பி காம். ஓகே” என்று அதட்டியவன் தனது ரெஸ்ட்டாரண்ட்டிற்கு அவளை கூட்டி சென்றான்.

அவளை தன்னுடைய அலுவலக அறையில் விட்டு விட்டு கிச்சனை நோக்கி சென்றவன் அவளுக்கு சாப்பிட தேவையானதை எடுத்துக் கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

“ஜோ ஃபர்ஸ்ட் இத சாப்பிடுங்க” என்றவன் சொல்ல அவளோ வேண்டாம் என்று தலையாட்டினாள்.

“நீங்க இப்போ பாக்க எப்படி இருக்கீங்க தெரியுமா?. ஏதோ பத்து நாள் பட்டினி கிடந்தவன் மாதிரி இருக்கீங்க” என்று அதட்டியவன் அவளுக்கு இட்லியை பிட்டு ஊட்ட வர அவளோ இமைக்க மறந்து அவனை பார்த்தாள்.

“என்ன பாக்கறீங்க ஜோ?. சாப்பிடுங்க” என்றவன் ஊட்ட இம்முறை அவள் மறுக்காமல் சாப்பிட்டாள்.

அவளுக்கு பொறுமையாக ஊட்டியவன்

“ஜோ எத நினச்சும் கவலைப்படாதீங்க. இத நான் பாத்துக்கிறேன்” என்று உறுதியான குரலில் கூறினான்.

“நீ என்ன பண்ண போற அபி?”

“ரொம்ப சிம்பிள். அவன் சொன்னத உண்மை ஆக்கினா என்னங்க ஜோ?” என்றவன் கேள்வியில் ஜோ வார்த்தை வராமல் தடுமாறி நின்றாள்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page